﷽ குர்ஆன் வசனம் 485
03-07-2023 திங்கட்கிழமை
قُلۡ مَنۡ ذَا الَّذِىۡ يَعۡصِمُكُمۡ مِّنَ اللّٰهِ اِنۡ اَرَادَ بِكُمۡ سُوۡٓءًا اَوۡ اَرَادَ بِكُمۡ رَحۡمَةً
"அல்லாஹ் உங்களுக்குத் தீங்கை நாடினால் அவனிடமிருந்து உங்களைக் காப்பவன் யார்?" அல்லது உங்களுக்கு அருளை நாடினால் (அதைத் தடுப்பவன் யார்)
[அல்குர்ஆன் 33:17]
Monday, July 3, 2023
குர்ஆன் வசனம் 485
உபதேசம் : 735
﷽ உபதேசம் : 735
03-07-2023 திங்கட்கிழமை
"யாருடைய குற்றத்தை அல்லாஹ் மறைத்து விட்டானோ அவர் அல்லாஹ்வின் பொறுப்பில் விடப்படுகிறார். அவன் நாடினால் அவரைத் தண்டிப்பான்; நாடினால் அவரை மன்னிப்பான்!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : உபாதா பின் அஸ்ஸாமித் (ரலி) முஸ்லிம் - 3520
உபதேசம் : 734
﷽ உபதேசம் : 734
"வெட்கம் என்பது நன்மையையே தரும்!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : இம்ரான் இப்னு ஹுசைன் (ரலி) புகாரி - 6117
குர்ஆன் வசனம் 484
﷽ குர்ஆன் வசனம் 484
وَاَعَدَّ لِلۡكٰفِرِيۡنَ عَذَابًا اَلِيۡمًا
(தன்னை) மறுப்போருக்கு அவன் துன்புறுத்தும் வேதனையைத் தயாரித்துள்ளான்.
[அல்குர்ஆன் 33:8]
உபதேசம் : 733
﷽ உபதேசம் : 733
தாடை சிதைக்கப்பட்ட நிலையில் கணவில் தான் கண்ட ஒரு மனிதனைப் பற்றி கேட்டதற்கு, "அவா் மிகப்பெரிய பொய்யா் என்றும் அவா் பேசிய பொய் உலகம் முழுவதும் பரவிய காரணத்தால் அவா் மறுமைநாள் வரை அவ்வாறே வேதனை செய்யப்படுவாா்!" என்றும தனக்கு விளக்கமளிக்கப்பட்டதாக நபி (ஸல்) அவா்கள் கூறினாா்கள்
அறிவிப்பவர் : சமுரா இப்னு ஜுன்தூப் (ரலி) புகாரி - 6096
குர்ஆன் வசனம் 483
﷽ குர்ஆன் வசனம் 483
اَلنَّبِىُّ اَوۡلٰى بِالۡمُؤۡمِنِيۡنَ مِنۡ اَنۡفُسِهِمۡ وَاَزۡوَاجُهٗۤ اُمَّهٰتُهُمۡ
நம்பிக்கை கொண்டோருக்கு தங்களை விட இந்த நபி (முஹம்மத்) தான் முன்னுரிமை பெற்றவர்.
[அல்குர்ஆன் 33:6]
குர்ஆன் வசனம் 482
﷽ குர்ஆன் வசனம் 482
وَّاتَّبِعۡ مَا يُوۡحٰٓى اِلَيۡكَ مِنۡ رَّبِّكَ
(முஹம்மதே!) உமது இறைவனிடமிருந்து உமக்கு அறிவிக்கப்படுவதைப் பின்பற்றுவீராக!
[அல்குர்ஆன் 33:2]
உபதேசம் : 732
﷽ உபதேசம் : 732
"புதையலுக்கான ஸகாத் ஐந்தில் ஒரு பங்கு கொடுக்கப்படவேண்டும்!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி) புகாரி - 2356
குர்ஆன் வசனம் 481
﷽ குர்ஆன் வசனம் 481
وَاَمَّا الَّذِيۡنَ فَسَقُوۡا فَمَاۡوٰٮهُمُ النَّارُؕ كُلَّمَاۤ اَرَادُوۡۤا اَنۡ يَّخۡرُجُوۡا مِنۡهَاۤ اُعِيۡدُوۡا فِيۡهَا وَ قِيۡلَ لَهُمۡ ذُوۡقُوۡا عَذَابَ النَّارِ الَّذِىۡ كُنۡتُمۡ بِهٖ تُكَذِّبُوۡنَ
குற்றம் புரிந்தோரின் தங்குமிடம் நரகம். அங்கிருந்து அவர்கள் வெளியேற நினைக்கும் போதெல்லாம் மீண்டும் அதில் போடப்படுவார்கள். "நீங்கள் பொய்யெனக் கருதிக் கொண்டிருந்த நரகத்தின் வேதனையைச் சுவையுங்கள்!" என்று அவர்களுக்குக் கூறப்படும்.
[அல்குர்ஆன் 32:20]
உபதேசம் : 731
﷽ உபதேசம் : 731
"ஒரு முஸ்லிமுடைய உடலைக் குளிப்பாட்டுபவர் அவரிடம் உள்ள குறைகளை மறைத்தால் அவரை அல்லாஹ் 40 தடவை மன்னிக்கின்றான்!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : ராஃபிவு (ரலி)
பைஹகீ -பாகம்:3 பக்கம்:395
உபதேசம் : 730
﷽ உபதேசம் : 730
"ஆட்சிப் பொறுப்பை (நீங்களாக)க் கேட்காதீர்கள்! ஏனெனில், நீங்கள் கேட்டு அது உங்களுக்கு அளிக்கப்பட்டால் அதோடு நீங்கள் (தனியாக) விடப்படுவீர்கள்! கேட்காமல் உங்களுக்கு அது கிடைத்தால் அது தொடர்பாக உங்களுக்கு (அல்லாஹ்வின்) உதவி கிடைக்கும்!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அப்துர் ரஹ்மான் இப்னு சமுரா (ரலி) புகாரி - 7146
குர்ஆன் வசனம் 480
﷽ குர்ஆன் வசனம் 480
قُلۡ يَتَوَفّٰٮكُمۡ مَّلَكُ الۡمَوۡتِ الَّذِىۡ وُكِّلَ بِكُمۡ ثُمَّ اِلٰى رَبِّكُمۡ تُرۡجَعُوۡنَ
"உங்களுக்கென நியமிக்கப்பட்ட மரணத்திற்குரிய வானவர் உங்களைக் கைப்பற்றுவார். பின்னர் உங்கள் இறைவனிடம் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்" என்று கூறுவீராக!
[அல்குர்ஆன் 32:11]
ஹஜ். ( 2 )
ஹஜ். ( 2 )
இஹ்ராமில் வேட்டையாடக் கூடாது.
غَيْرَ مُحِلِّي الصَّيْدِ وَأَنتُمْ حُرُمٌ
இஹ்ராமின் போது வேட்டையாடுவதை அனுமதிக்கப்பட்டது என நீங்கள் கருதக் கூடாது.
திருக்குர்ஆன் 5:1
وَإِذَا حَلَلْتُمْ فَاصْطَادُوا
இஹ்ராமிலிருந்து விடுபட்டதும் வேட்டையாடுங்கள்!
திருக்குர்ஆன் 5:2
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَيَبْلُوَنَّكُمُ اللَّهُ بِشَيْءٍ مِّنَ الصَّيْدِ تَنَالُهُ أَيْدِيكُمْ وَرِمَاحُكُمْ لِيَعْلَمَ اللَّهُ مَن يَخَافُهُ بِالْغَيْبِ ۚ فَمَنِ اعْتَدَىٰ بَعْدَ ذَٰلِكَ فَلَهُ عَذَابٌ أَلِيمٌ
நம்பிக்கை கொண்டோரே! "தனிமையில் (தன்னை) அஞ்சுபவர் யார்?' என்பதை அல்லாஹ் அடையாளம் காட்ட (நீங்கள் இஹ்ராமுடன் இருக்கும் போது) உங்கள் கைகளுக்கும் உங்கள் ஈட்டிகளுக்கும் எட்டும் வகையில் சில வேட்டைப் பிராணிகளைக் காட்டி உங்களை அல்லாஹ் சோதித்துப் பார்ப்பான். இதன் பின்னர் வரம்பு மீறுபவருக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு.
திருக்குர்ஆன் 5:94
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَقْتُلُوا الصَّيْدَ وَأَنتُمْ حُرُمٌ
நம்பிக்கை கொண்டோரே! இஹ்ராமுடன் இருக்கும் போது வேட்டைப் பிராணிகளைக் கொல்லாதீர்கள்!
திருக்குர்ஆன் 5:95
இஹ்ராமின்போது கடலில் வேட்டையாடலாம்.
أُحِلَّ لَكُمْ صَيْدُ الْبَحْرِ وَطَعَامُهُ مَتَاعًا لَّكُمْ وَلِلسَّيَّارَةِ ۖ وَحُرِّمَ عَلَيْكُمْ صَيْدُ الْبَرِّ مَا دُمْتُمْ حُرُمًا ۗ وَاتَّقُوا اللَّهَ الَّذِي إِلَيْهِ تُحْشَرُونَ
உங்களுக்கும், ஏனைய பயணிகளுக்கும் பயன்படும் பொருட்டு கடலில் வேட்டையாடுவதும், அதன் உணவும் உங்களுக்கு அனுமதிக்கப் பட்டுள்ளது. இஹ்ராமுடன் இருக்கும் போது நீங்கள் தரையில் வேட்டையாடுதல் தடுக்கப் பட்டுள்ளது. அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அவனிடமே ஒன்று சேர்க்கப்படுவீர்கள்.
திருக்குர்ஆன் 5:96
குர்ஆன் வசனம் 479
﷽ குர்ஆன் வசனம் 479
اِنَّ اللّٰهَ عِنۡدَهٗ عِلۡمُ السَّاعَةِ ۚ وَيُنَزِّلُ الۡغَيۡثَ ۚ وَيَعۡلَمُ مَا فِى الۡاَرۡحَامِ ؕ وَمَا تَدۡرِىۡ نَفۡسٌ مَّاذَا تَكۡسِبُ غَدًا ؕ وَّمَا تَدۡرِىۡ نَـفۡسٌۢ بِاَىِّ اَرۡضٍ تَمُوۡتُ
யுகமுடிவு நேரம் பற்றிய அறிவு அல்லாஹ்விடமே உள்ளது. அவன் மழையை இறக்குகிறான். கருவறைகளில் உள்ளதை அவன் அறிகிறான். தான், நாளை சம்பாதிக்கவுள்ளதை எவரும் அறிய மாட்டார். தாம், எங்கே மரணிப்போம் என்பதையும் எந்த உயிரினமும் அறியாது.
[அல்குர்ஆன் 31:34]
உபதேசம் : 729
﷽ உபதேசம் : 729
நோன்பு களாவாக உள்ள நிலையில் ஒருவர் இறந்துவிட்டால் அவர் சார்பாக அந்த நோன்புகளை அவருடைய பொறுப்பாளர் (வாரிசு) நோற்பார் என்று நபி ஸல் அவா்கள் கூறினாா்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) புகாரி - 1952
அல்லாஹும்ம என்பதன் சிறப்பு. ( 65 )
அல்லாஹும்ம என்பதன் சிறப்பு. ( 65 )
رَبّ اغْفِرْ لِيْ خَطِيْئَتِيْ وَجَهْلِيْ وَإِسْرَافِيْ فِيْ أَمْرِيْ كُلِّهِ وَمَا أَنْتَ أَعْلَمُ بِهِ مِنِّيْ اَللّهُمَّ اغْفِرْ لِيْ خَطَايَايَ وَعَمْدِيْ وَجَهْلِيْ وَهَزْلِيْ وَكُلُّ ذَلِكَ عِنْدِيْ اَللّهُمَّ اغْفِرْ لِيْ مَا قَدَّمْتُ وَمَا أَخَّرْتُ وَمَا أَسْرَرْتُ وَمَا أَعْلَنْتُ أَنْتَ الْمُقَدِّمُ وَأَنْتَ الْمُؤَخِّرُ وَأَنْتَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيْرٌ
ரப்பிஃக்ஃபிர் லீ கத்தீஅத்தீ, வ ஜஹ்லீ, வ இஸ்ராஃபி ஃபீ அம்ரீ குல்லிஹி, வமா அன்த்த அஉலமு பிஹி மின்னீ, அல்லாஹும்மஃக்ஃபிர்லீ கத்தாயாய, வ அம்தீ, வ ஜஹ்லீ, வ ஜத்தீ வ குல்லு தாலிக்க இந்தீ. அல்லாஹும்ம ஃக்ஃபிர் லீ மா கத்தகித்து, வ மா அஉலன்த்து, அன்த்தல் முகத்திமு, வ அன்த்தல் முஅக்கிரு, வ அன்த்த அலா குல்லி ஷையின் கதீர்.
பொருள் : என் இறைவா! என் தவறையும், என் அறியாமையையும், எனது காரியங்கள் அனைத்தையும், நான் வரம்பு மீறியதையும், என்னிடமிருந்து ஏற்பட்டதாக நீ அறிந்த அனைத்தையும் மன்னிப்பாயாக. இறைவா! எனது தவறுகளையும், வேண்டுமென்று செய்ததையும், அறியாமையால் செய்ததையும், விளையாட்டாக செய்ததையும் மன்னிப்பாயாக. இறைவா! நான் முந்திச் செய்ததையும், பிந்திச் செய்வதையும், இரகசியமாகச் செய்ததையும், வெளிப்படையாகச் செய்ததையும் மன்னிப்பாயாக. நீயே முற்படுத்துபவன். நீயே பிற்படுத்துப வன். நீயே அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றல் உள்ளவன்.
சட்டம் : மன்னிப்பு கோருவதற்கு தலையாய துஆ.
ஆதாரம் : அபூ மூஸா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் பின்வருமாறு பிரார்த்திப்பது வழக்கம்: ரப்பிஃக்ஃபிர் லீ கத்தீஅத்தீ, வ ஜஹ்லீ, வ இஸ்ராஃபி ஃபீ அம்ரீ குல்லிஹி, வமா அன்த்த அஉலமு பிஹி மின்னீ, அல்லாஹும்மஃக்ஃபிர்லீ கத்தாயாய, வ அம்தீ, வ ஜஹ்லீ, வ ஜத்தீ வ குல்லு தாலிக்க இந்தீ. அல்லாஹும்ம ஃக்ஃபிர் லீ மா கத்தகித்து, வ மா அஉலன்த்து, அன்த்தல் முகத்திமு, வ அன்த்தல் முஅக்கிரு, வ அன்த்த அலா குல்லி ஷையின் கதீர்.
ஸஹீஹ் புகாரி : 6398.
ஹஜ். ( 1 )
ஹஜ். ( 1 )
ஹஜ் கட்டாயக் கடமை.
فِيهِ آيَاتٌ بَيِّنَاتٌ مَّقَامُ إِبْرَاهِيمَ ۖ وَمَن دَخَلَهُ كَانَ آمِنًا ۗ وَلِلَّهِ عَلَى النَّاسِ حِجُّ الْبَيْتِ مَنِ اسْتَطَاعَ إِلَيْهِ سَبِيلًا ۚ وَمَن كَفَرَ فَإِنَّ اللَّهَ غَنِيٌّ عَنِ الْعَالَمِينَ
அதில் தெளிவான சான்றுகளும் மகாமே இப்ராஹீமும் உள்ளன. அதில் நுழைந்தவர் அபயம் பெற்றவராவார். அந்த ஆலயத்தில் அல்லாஹ்வுக்காக ஹஜ் செய்வது, சென்றுவர சக்தி பெற்ற மனிதர்களுக்குக் கடமை. யாரேனும் (ஏகஇறைவனை) மறுத்தால் அகிலத்தாரை விட்டும் அல்லாஹ் தேவைகளற்றவன்.
திருக்குர்ஆன் 3:97
ஹஜ்ஜின்போது பேண வேண்டியவை.
الْحَجُّ أَشْهُرٌ مَّعْلُومَاتٌ ۚ فَمَن فَرَضَ فِيهِنَّ الْحَجَّ فَلَا رَفَثَ وَلَا فُسُوقَ وَلَا جِدَالَ فِي الْحَجِّ ۗ
ஹஜ்(ஜுக்குரிய காலம்) தெரிந்த மாதங்களாகும். அம்மாதங்களில் ஹஜ்ஜை (தன்மீது) விதியாக்கிக் கொண்டவர் ஹஜ்ஜின் போது உடலுறவு கொள்வதோ, குற்றம் செய்வதோ, விதண்டாவாதம் புரிவதோ கூடாது.
திருக்குர்ஆன் 2:197
ஹஜ்ஜுக்காக பொருளைத் தேடிக் கொள்வது.
وَمَا تَفْعَلُوا مِنْ خَيْرٍ يَعْلَمْهُ اللَّهُ ۗ وَتَزَوَّدُوا فَإِنَّ خَيْرَ الزَّادِ التَّقْوَىٰ ۚ وَاتَّقُونِ يَا أُولِي الْأَلْبَابِ
நீங்கள் எந்த நன்மையைச் செய்தாலும் அதை அல்லாஹ் அறிகிறான். (ஹஜ்ஜுக்குத்) தேவையானவற்றைத் திரட்டிக் கொள்ளுங்கள்! திரட்டிக் கொள்ள வேண்டியவற்றில் (இறை) அச்சமே மிகச் சிறந்தது. அறிவுடையோரே! என்னை அஞ்சுங்கள்!
திருக்குர்ஆன் 2:197
ஹஜ்ஜுக்குச் செல்லத் தடை இருந்தால்.
وَأَتِمُّوا الْحَجَّ وَالْعُمْرَةَ لِلَّهِ ۚ فَإِنْ أُحْصِرْتُمْ فَمَا اسْتَيْسَرَ مِنَ الْهَدْيِ
அல்லாஹ்வுக்காக ஹஜ்ஜையும், உம்ராவையும் முழுமைப்படுத்துங்கள்! நீங்கள் தடுக்கப்பட்டால் இயன்ற பலிப்பிராணியை (அறுங்கள்.)
திருக்குர்ஆன் 2:196
நடந்தும், வாகனத்திலும் ஹஜ்ஜுக்குச் செல்லலாம்.
وَأَذِّن فِي النَّاسِ بِالْحَجِّ يَأْتُوكَ رِجَالًا وَعَلَىٰ كُلِّ ضَامِرٍ يَأْتِينَ مِن كُلِّ فَجٍّ عَمِيقٍ
"மக்களுக்கு ஹஜ்ஜைப் பற்றி அறிவிப்பீராக! அவர்கள் உம்மிடம் நடந்தும், ஒவ்வொரு மெலிந்த ஒட்டகத்தின் மீதும் வருவார்கள். அவை அவர்களைத் தொலைவிலுள்ள ஒவ்வொரு பாதையிலிருந்தும் கொண்டு வந்து சேர்க்கும்'' (என்றும் கூறினோம்.)
திருக்குர்ஆன் 22:27
-
Chapter - 14 Surah Ibrahim بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ In the name of Allah the most beneficent, most mer...
-
Chapter - 14 Surah Ibrahim بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ In the name of Allah the most beneficent, most merciful يُثَبِّت...
-
Chapter - 14 Surah Ibrahim بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ In the name of Allah the most beneficent, most merciful قُ...