Monday, June 10, 2024

இதுதான் குர்ஆன். { 4 }

இதுதான் குர்ஆன். { 4 }
வரம்பு மீறியவர்களை எச்சரிக்கும் குர்ஆன்.

வரம்பு மீறியும், அநீதி இழைத்தும் இதைச் செய்பவரை பின்னர் நரகில் கருகச் செய்வோம். இது அல்லாஹ்வுக்கு எளிதானதாகவே உள்ளது.
திருக்குர்ஆன் 4:30

நம்பிக்கை கொண்டோர் விஷயத்தில் உறவையோ, உடன்படிக்கையையோ அவர்கள் பொருட்படுத்த மாட்டார்கள். அவர்களே வரம்பு மீறியவர்கள்.
திருக்குர்ஆன் 9:10

(தூதர்கள்) வெற்றி பெற்றனர். பிடிவாதம் பிடித்த ஒவ்வொரு அடக்குமுறையாளனும் நட்டமடைந்தான்.
அவனுக்கு முன்னே நரகம் உள்ளது. அவனுக்குச் சீழ் நீர் புகட்டப்படும்.
திருக்குர்ஆன் 14:15,16

வரம்பு மீறியோரின் தங்குமிடமாக நரகம் காத்துக் கொண்டிருக்கிறது.
திருக்குர்ஆன் 78:21,22

யார் வரம்பு மீறி, இவ்வுலக வாழ்வைத் தேர்ந்தெடுத்துக் கொண்டானோ அவனுக்கு நரகமே தங்குமிடம்.
திருக்குர்ஆன் 79:37, 38,39
📖📖📖📖📖📖📖📖

துஆக்கள். { 23 }

துஆக்கள். { 23 }
எல்லா நிலையிலும் கூற வேண்டியவை.

بِسْمِ اللهِ
பி(B]ஸ்மில்லாஹ்.

ஆதாரம் :
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(இரவு நேரத்தில்) கதவுகளைத் தாழிட்டுவிடுங்கள். (அப்போது) அல்லாஹ்வின் பெயரைச் சொல்லுங்கள். ஏனெனில், ஷைத்தான் மூடப்பட்ட எந்தக் கதவையும் திறப்பதில்லை. உங்கள் தண்ணீர் பையி(ன் வாயி)னைச் சுருக்கிட்டு மூடிவிடுங்கள். (அப்போதும்) அல்லாஹ்வின் பெயரைச் சொல்லுங்கள். உங்களுடைய பாத்திரங்களை மூடிவையுங்கள். (அப்போதும்) அல்லாஹ்வின் பெயரைச் சொல்லுங்கள். (அவற்றை முழுவதும் மூட இயலாவிட்டாலும்) அவற்றின் மீது எதையாவது குறுக்காக வைத்தேனும் மூடிவிடுங்கள். உங்கள் விளக்குகளை அணைத்துவிடுங்கள்.
என ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.44
ஸஹீஹ் புகாரி : 5623.
🤲🤲🤲🤲🤲🤲🤲🤲

Sunday, June 9, 2024

மனனம் செய்வோம்(26) அல் லைல் - 92.

மனனம் செய்வோம்(26)
அல் லைல் - 92.
(12முதல்21 வசனங்கள்)

اِنَّ عَلَيْنَا لَـلْهُدٰىۖ‏
இன்ன அலைனா லல்ஹு(D)தா.
'Inna ^alaynaa lal-hudaa.

وَاِنَّ لَـنَا لَـلْاٰخِرَةَ وَالْاُوْلٰى‏
வஇன்ன லனா லல்ஆ(KH)கிர(TH)த்த வல்ஊலா.
Wa 'inna lanaa lal-'Aakhirata wal-woolaa.

فَاَنْذَرْتُكُمْ نَارًا تَلَظّٰى‌ۚ‏
ஃபஅன்(D)தர்(TH)து(K)கும் நாரன் (TH)தலள்ளா.
Fa 'andhartukum naaran taladhdhaa.

لَا يَصْلٰٮهَاۤ اِلَّا الْاَشْقَىۙ‏
லா யஸ்லாஹா இல்லல் அஷ்(Q)கா.
Laa yaslaahaa illal-'ashqaa.

الَّذِىْ كَذَّبَ وَتَوَلّٰىؕ‏
அல்ல(D)தீ க(D)த்த(B)ப வ(TH)தவல்லா.
Alladhee kadhdhaba wa tawallaa.

وَسَيُجَنَّبُهَا الْاَتْقَىۙ‏
வஸயுஜன்னபுஹல் அ(TH)த்(Q)கா.
Wa sayujannabuhal-'atqaa.

الَّذِىْ يُؤْتِىْ مَالَهٗ يَتَزَكّٰى‌ۚ‏
அல்ல(D)தீ யுஃதீ மாலஹு ய(TH)த(Z)ஸக்கா.
Alladhee yu'tee maalahu yatazakkaa.

وَمَا لِاَحَدٍ عِنْدَهٗ مِنْ نِّعْمَةٍ تُجْزٰٓىۙ‏
வமா லிஅஹ(D)தின் இன்(D)தஹு மின் நிஃம(TH)தின் (TH)துஜ்(Z)ஸா.
Wa maa li 'ahadin ^indahu min ni^matin tujzaa.

اِلَّا ابْتِغَآءَ وَجْهِ رَبِّهِ الْاَعْلٰى‌ۚ‏
இல்ல(B)ப்(TH)தி(GH)ஃகாஅ வஜ்ஹி ர(B)ப்பிஹில் அஃலா.
Illabtighaa'a wajhi Rabbihil-'A^laa.

وَلَسَوْفَ يَرْضٰى‏
வலஸவ்ஃப யர்ளா.
Wa la sawfa yardaa.
📚📚📚📚📚📚📚📚

அனஸ் (ரலி), நூல்கள்: புகாரி (6389), முஸ்லிம் (5219)

நபி (ஸல்) அவர்கள், “ரப்பனா ஆத்தினா ஃபித் துன்யா ஹஸனத்தன் வ ஃபில் ஆகிரத்தி ஹஸனத்தன் வக்கினா அதாபந் நார்” என்றே அதிகமாகப் பிரார்த்தித்து வந்தார்கள்.
பொருள்: “எங்கள் இறைவனே! எங்களுக்கு இவ்வுலகிலும் நன்மையை(த் தருவாயாக!), மறுமையிலும் நன்மையைத் தருவாயாக! நரகத்தின் வேதனையிலிருந்து எங்களைப் பாதுகாப்பாயாக!”

அறிவிப்பவர்: அனஸ் (ரலி), நூல்கள்: புகாரி (6389), முஸ்லிம் (5219)

இதுதான் குர்ஆன். { 3 }

இதுதான் குர்ஆன். { 3 }
படைத்தவனை அடையாளம் காட்டும் குர்ஆன்.

கால்நடைகளில் உங்களுக்குப் படிப்பினை உள்ளது. அதன் வயிறுகளில் உள்ள சானத்துக்கும், இரத்தத்திற்கும் இடைப்பட்ட நிலையில் தூய்மையான பாலை உங்களுக்குப் புகட்டுகிறோம். அருந்துவோருக்கு அது இனிமையானது.
திருக்குர்ஆன் 16:66

"இக்குர்ஆன் போன்றதைக் கொண்டு வருவதற்காக மனிதர்களும், ஜின்களும் ஒன்று திரண்டாலும் இது போன்றதைக் கொண்டு வர முடியாது. அவர்களில் ஒருவர் மற்றவருக்கு உதவியாளராக இருந்தாலும் சரியே'' என்று கூறுவீராக!
திருக்குர்ஆன் 17:88

அவனே இரண்டு கடல்களை ஒன்று சேர்த்துள்ளான். இது மதுரமாகவும், தாகம் தீர்ப்பதாகவும் உள்ளது. அது உப்பாகவும், கசப்பாகவும் உள்ளது. அவ்விரண்டுக்குமிடையே ஒரு திரையையும், வலுவான தடுப்பையும் அவன் ஏற்படுத்தியுள்ளான்.
திருக்குர்ஆன் 25:53
📖📖📖📖📖📖📖📖

துஆக்கள். { 22 }

துஆக்கள். { 22 }
தாம்பத்தியத்தில் ஈடுபடும் முன்.

بِسْمِ اللَّهِ اللَّهُمَّ جَنِّبْنَا الشَّيْطَانَ وَجَنِّبِ الشَّيْطَانَ مَا رَزَقْتَنَا
பி(B]ஸ்மில்லாஹி அல்லாஹும்ம ஜன்னிப்(B]னஷ் ஷை(த்)தான வஜன்னிபிஷ் ஷை(த்)தான மாரஸக்(த்)தனா.

ஆதாரம் : உங்களில் ஒருவர் தம் மனைவியுடன் உடலுறவு கொள்ளச் செல்லும்போது 'அல்லாஹ்வின் திரு நாமத்தைக் கொண்டு உடலுறவு கொள்ளப் போகிறேன். இறைவா! எங்களைவிட்டு ஷைத்தானைத் தூரமாக்கு! (இந்த உறவு மூலம்) நீ எங்களுக்கு அளிக்கப் போகும் (குழந்தைப்) பேற்றிலும் ஷைத்தானை அப்புறப்படுத்து' என்று சொல்லிவிட்டு உறவு கொண்டு அதன் மூலம் அவ்விருவருக்கும் குழந்தை வழங்கப்படுமானால் அக்குழந்தைக்கு ஷைத்தான் எந்த தீங்கும் விளைவிப்பதில்லை' என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி : 141.
🤲🤲🤲🤲🤲🤲🤲🤲

மனனம் செய்வோம்(25) அல் லைல் - 92.

மனனம் செய்வோம்(25)
அல் லைல் - 92.
(1 முதல் 11 வசனங்கள்)

بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.
Bismillaahir-Rahmaanir-Raheem.

وَالَّيْلِ اِذَا يَغْشٰىۙ‏
வல்லைலி இ(D)தா யஃஷா.
Wal-layli 'idhaa yaghshaa.

وَالنَّهَارِ اِذَا تَجَلّٰىۙ‏
வன்னஹாரி இ(D)தா (TH)தஜல்லா.
Wan-nahaari 'idhaa tajallaa.

وَمَا خَلَقَ الذَّكَرَ وَالْاُنْثٰٓىۙ‏
வமா (KH)ஹல(Q)க(D)த்த(K)கர வல்உன்ஸா.
Wa maa khalaqadh-dhakara wal-'unsaa.

اِنَّ سَعْيَكُمْ لَشَتّٰىؕ‏
இன்ன ஸஃய(K)கும் லஷ(TH)த்தா.
'Inna sa^yakum la shattaa.

فَاَمَّا مَنْ اَعْطٰى وَاتَّقٰىۙ‏
ஃபஅம்மா மன் அஃ(TH)தா வ(TH)த்த(Q)கா.
Fa 'ammaa man 'a^taa wattaqaa.

وَصَدَّقَ بِالْحُسْنٰىۙ‏
வஸ(D)த்த(K)க (B)பில்ஹுஸ்னா.
Wa saddaqa bil-husnaa.

فَسَنُيَسِّرُهٗ لِلْيُسْرٰىؕ‏
ஃபஸனுயஸ்ஸிருஹுலில் யுஸ்ரா.
Fa sanuyassiruhoo lil-yusraa.

وَاَمَّا مَنْۢ بَخِلَ وَاسْتَغْنٰىۙ‏
வஅம்மா மம்(B)ப(KH)ஹில வஸ்(TH)த(GH)ஃக்னா.
Wa 'ammaa mam bakhila wastaghnaa.

وَكَذَّبَ بِالْحُسْنٰىۙ‏
வ(K)க(D)த்த(B)ப (B)பில்ஹுஸ்னா.
Wa kadhdhaba bil-husnaa.

فَسَنُيَسِّرُهٗ لِلْعُسْرٰىؕ‏
ஃபஸனுயஸ்ஸிருஹுலில் உஸ்ரா.
fa sanuyassiruhoo lil-^usraa.

وَمَا يُغْنِىْ عَنْهُ مَالُهٗۤ اِذَا تَرَدّٰىؕ‏
வமா யு(GH)ஃக்நீ அன்ஹு மாலுஹு இ(D)தா (TH)தர(D)த்தா.
Wa maa yughnee ^anhu maaluhoo idhaa taraddaa.
📚📚📚📚📚📚📚📚