Pages

Contact Us

Thursday, August 18, 2022

அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள் கூறினார்கள்

 🌾🌾🌾🌾🌾🌾🌾



அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள் கூறினார்கள்:


மறுமை நாளில் ஒரு மனிதர் கொண்டு வரப்பட்டு நரகத்தில் வீசப்படுவார். அப்போது அவரது வயிற்றிலுள்ள குடல்கள் முழுவதும் வெளியே வந்துவிடும்.


அவர் குடலை இழுத்துக்கொண்டு கழுதை செக்கு இயந்திரத்தைச் சுற்றிவருவதைப் போன்று சுற்றிவருவார்.


அப்போது நரகவாசிகள் அவரைச் சுற்றி ஒன்றுகூடி, "இன்ன மனிதரே! உமக்கேன் இந்த நிலை?
நீர் (உலக வாழ்வின்போது) நற்செயல் புரியுமாறு (மக்களுக்குக்) கட்டளையிட்டு, தீமை புரியவேண்டாம் என (எங்களை)த் தடுத்துக் கொண்டிருக்(கும்
நற்பணி செய்திகொண்டிருக்)க வில்லையா?" என்று கேட்பார்கள்.


அதற்கு அந்த மனிதர், "ஆம்; நற்செயல் புரியும்படி
(மக்களுக்கு) நான் கட்டளையிட்டேன்; ஆனால், அந்த நற்செயலை
நான் செய்யவில்லை.


தீமை புரியவேண்டாம் என மக்ககளை நான் தடுத்தேன்; ஆனால், அந்தத் தீமையை நானே செய்துவந்தேன்" என்று கூறுவார்.


நூல்கள் - புகாரி : 3267
முஸ்லிம் : 5713


☝🏿

No comments:

Post a Comment