Pages

Contact Us

Friday, September 16, 2022

பெயர் குறிப்பிடப்பட்ட வானவர்கள். ( 1 )

 பெயர் குறிப்பிடப்பட்ட வானவர்கள். ( 1 ) 

ரூஹுல் குதூஸ் (தூய உயிர்) என்பது ஜிப்ரீலின் பெயர்.


وَآتَيْنَا عِيسَى ابْنَ مَرْيَمَ الْبَيِّنَاتِ وَأَيَّدْنَاهُ بِرُوحِ الْقُدُسِ 

மர்யமுடைய மகன் ஈஸாவுக்குத் தெளிவான சான்றுகளை வழங்கினோம். ரூஹுல் குதுஸ் மூலம் அவரைப் பலப்படுத்தினோம். 

திருக்குர்ஆன் 2:87


يَا عِيسَى ابْنَ مَرْيَمَ اذْكُرْ نِعْمَتِي عَلَيْكَ وَعَلَىٰ وَالِدَتِكَ إِذْ أَيَّدتُّكَ بِرُوحِ الْقُدُسِ 

"மர்யமின் மகன் ஈஸாவே! உமக்கும், உமது தாயாருக்கும் நான் வழங்கிய அருட்கொடையையும், ரூஹுல் குதுஸ் மூலம் உம்மை வலுப்படுத்தியதையும் 

எண்ணிப் பார்ப்பீராக! 

திருக்குர்ஆன் 5:110


قُلْ نَزَّلَهُ رُوحُ الْقُدُسِ مِن رَّبِّكَ بِالْحَقِّ لِيُثَبِّتَ الَّذِينَ آمَنُوا وَهُدًى وَبُشْرَىٰ لِلْمُسْلِمِينَ

நம்பிக்கையாளர்களைப் பலப்படுத்திடவும், முஸ்லிம்களுக்கு நேர்வழியாகவும், நற்செய்தியாகவும் இதை உமது இறைவனிடமிருந்து 'ரூஹுல் குதுஸ்' உண்மையுடன் இறக்கினார்' என்பதை (முஹம்மதே!) கூறுவீராக!

திருக்குர்ஆன் 16:102


ரூஹுல் அமீன் (நம்பிக்கைக்குரிய உயிர்) என்பது ஜிப்ரீலின் பெயர்


نَزَلَ بِهِ الرُّوحُ الْأَمِينُ عَلَىٰ قَلْبِكَ لِتَكُونَ مِنَ الْمُنذِرِينَ بِلِسَانٍ عَرَبِيٍّ مُّبِينٍ

எச்சரிக்கை செய்வோரில் (முஹம்மதே) நீர் ஆவதற்காக, உமது உள்ளத்தில் தெளிவான அரபு மொழியில் நம்பிக்கைக்குரிய ரூஹ் இதை இறக்கினார்.

திருக்குர்ஆன் 26:193,194,195


ஆண்டுதோறும் ஜிப்ரீலின் வருகை


تَنَزَّلُ الْمَلَائِكَةُ وَالرُّوحُ فِيهَا بِإِذْنِ رَبِّهِم مِّن كُلِّ أَمْرٍ

வானவர்களும், ரூஹும் அதில் தமது இறைவனின் கட்டளைப்படி ஒவ்வொரு காரியத்துடனும் இறங்குகின்றனர்.

திருக்குர்ஆன் 97:4

No comments:

Post a Comment