Wednesday, September 7, 2022

வானவர்களின் பண்புகள். ( 4 )

 வானவர்களின் பண்புகள். ( 4 )

வானவர்கள் சாப்பிட மாட்டார்கள்.


فَلَمَّا رَأَىٰ أَيْدِيَهُمْ لَا تَصِلُ إِلَيْهِ نَكِرَهُمْ وَأَوْجَسَ مِنْهُمْ خِيفَةً ۚ قَالُوا لَا تَخَفْ إِنَّا أُرْسِلْنَا إِلَىٰ قَوْمِ لُوطٍ

அவர்களின் கைகள் (உண்பதற்கு) அதை நோக்கிச் செல்லாததைக் கண்ட போது, அறிமுகமற்றவர்களாக அவர்களைக் கருதினார். அவர்களைப் பற்றி மனதுக்குள் பயந்தார். "பயப்படாதீர்! நாங்கள் லூத் உடைய சமுதாயத்திற்காக அனுப்பப்பட்டுள்ளோம்'' என்று அவர்கள் கூறினர்.

திருக்குர்ஆன் 11:70


هَلْ أَتَاكَ حَدِيثُ ضَيْفِ إِبْرَاهِيمَ الْمُكْرَمِينَ

இப்ராஹீமின் மரியாதைக்குரிய விருந்தினர்கள் பற்றிய செய்தி உமக்குக் கிடைத்ததா?

திருக்குர்ஆன் 51:24


فَقَرَّبَهُ إِلَيْهِمْ قَالَ أَلَا تَأْكُلُونَ

அதை அவர்களின் அருகில் வைத்து "சாப்பிட மாட்டீர்களா? என்றார்.

திருக்குர்ஆன் 51:27

வானவர்கள் 50 ஆயிரம் ஆண்டுக்கு நிகரான ஒருநாள் வேகத்தில் பயணம் செய்வார்கள்.


تَعْرُجُ الْمَلَائِكَةُ وَالرُّوحُ إِلَيْهِ فِي يَوْمٍ كَانَ مِقْدَارُهُ خَمْسِينَ أَلْفَ سَنَةٍ

வானவர்களும், ரூஹும் ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு நிகரான ஒரு நாளில் அவனிடம் ஏறிச் செல்வர்.

திருக்குர்ஆன் 70:4


வானவர்கள் இறைவனின் கட்டளையில்லாமல் பூமிக்கு வரமாட்டார்கள்.

وَمَا نَتَنَزَّلُ إِلَّا بِأَمْرِ رَبِّكَ ۖ لَهُ مَا بَيْنَ أَيْدِينَا وَمَا خَلْفَنَا وَمَا بَيْنَ ذَٰلِكَ ۚ وَمَا كَانَ رَبُّكَ نَسِيًّا

(முஹம்மதே!) உமது இறைவனின் கட்டளையிருந்தால் தவிர இறங்க மாட்டோம். எங்களுக்கு முன்னுள்ளதும், பின்னுள்ளதும், அவற்றுக்கு இடையே உள்ளதும் அவனுக்கே உரியன. உமது இறைவன் மறப்பவனாக இல்லை. (என்பதை இறைவன் கூறச் சொன்னதாக ஜிப்ரீல் கூறினார்.)

திருக்குர்ஆன் 19:64

No comments:

Post a Comment