Pages

Contact Us

Friday, December 30, 2022

கியாமத் நாள் அடையளம். ( 2 )

கியாமத் நாள் அடையளம். ( 2 )
*யஃஜுஜ், மஃஜுஜ் கூட்டத்தினரின் வருகை.*

قَالُوا يَا ذَا الْقَرْنَيْنِ إِنَّ يَأْجُوجَ وَمَأْجُوجَ مُفْسِدُونَ فِي الْأَرْضِ فَهَلْ نَجْعَلُ لَكَ خَرْجًا عَلَىٰ أَن تَجْعَلَ بَيْنَنَا وَبَيْنَهُمْ سَدًّا

"துல்கர்னைனே! யஃஜூஜ், மஃஜூஜ் என்போர் பூமியில் குழப்பம் விளைவிக்கின்றனர். எங்களுக்கும், அவர்களுக்கும் இடையே ஒரு தடுப்பை நீர் ஏற்படுத்திட உமக்கு நாங்கள் வரி தரட்டுமா?'' என்று அவர்கள் (சைகை மூலம்) கேட்டனர்.
திருக்குர்ஆன் 18:94

حَتَّىٰ إِذَا فُتِحَتْ يَأْجُوجُ وَمَأْجُوجُ وَهُم مِّن كُلِّ حَدَبٍ يَنسِلُونَ

முடிவில் யஃஜூஜ் மஃஜூஜ் (கூட்டத்தினர்) திறந்து விடப்பட்டு அவர்கள் ஒவ்வொரு மேட்டிலிருந்தும் விரைவார்கள்.
திருக்குர்ஆன் 21:96

*இறை வசனங்களை நம்பாதோரை இனங்காட்டிப் பேசுகின்ற பிராணி.*

وَإِذَا وَقَعَ الْقَوْلُ عَلَيْهِمْ أَخْرَجْنَا لَهُمْ دَابَّةً مِّنَ الْأَرْضِ تُكَلِّمُهُمْ أَنَّ النَّاسَ كَانُوا بِآيَاتِنَا لَا يُوقِنُونَ

அவர்களுக்கு எதிரான (நமது) கட்டளை நிகழும் போது பூமியிலிருந்து ஓர் உயிரினத்தை வெளிப்படுத்துவோம். நமது வசனங்களை மனிதர்கள் உறுதி கொள்ளாமல் இருந்தது பற்றி அவர்களிடம் அது பேசும்.
திருக்குர்ஆன் 27:82

*மனிதர்களை மூடிக் கொள்ளும் புகை மண்டலம் உருவாகுதல்.*

فَارْتَقِبْ يَوْمَ تَأْتِي السَّمَاءُ بِدُخَانٍ مُّبِينٍ

வானம் தெளிவான புகையைக் கொண்டு வரும் நாளை எதிர்பார்ப்பீராக!
திருக்குர்ஆன் 44:10

*கடல்கள் தீ மூட்டப்படும்.*

وَإِذَا الْبِحَارُ سُجِّرَتْ

கடல்கள் தீ மூட்டப்படும் போது,
திருக்குர்ஆன் 81:6

No comments:

Post a Comment