Pages

Contact Us

Tuesday, January 3, 2023

சுப்ஹானல்லாஹ் என்பதன் சிறப்பு. ( 3 )

 சுப்ஹானல்லாஹ் என்பதன் சிறப்பு. ( 3 )


سُبْحَانَ اللَّهِ

சுப்ஹானல்லாஹ். (100 முறை)

பொருள் : அல்லாஹ் தூயவன்.

சிறப்பு : ஆயிரம் நன்மைகள் எழுதப்படுகின்றன. அல்லது ஆயிரம் தவறுகள் அவரைவிட்டுத் துடைக்கப்படுகின்றன.

ஆதாரம்: சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது.
நாங்கள் (ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அருகில் இருந்தோம். அப்போது அவர்கள், "உங்களில் ஒருவரால் ஒவ்வொரு நாளும் ஆயிரம் நன்மைகளைச் சம்பாதிக்க முடியாதா?" என்று கேட்டார்கள். அப்போது அங்கு அமர்ந்திருந்தவர்களில் ஒருவர், "எங்களில் ஒருவர் (ஒவ்வொரு நாளும்) ஆயிரம் நன்மைகளை எவ்வாறு சம்பாதிக்க முடியும்?" என்று கேட்டார்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அவர் (ஒவ்வொரு நாளும்) நூறு முறை ("சுப்ஹானல்லாஹ்" என்று கூறித்) துதிக்க, அவருக்கு ஆயிரம் நன்மைகள் எழுதப்படுகின்றன. அல்லது அவர் செய்த ஆயிரம் தவறுகள் அவரைவிட்டுத் துடைக்கப்படுகின்றன" என்று சொன்னார்கள்.
நூல்: - முஸ்லிம் 5230

No comments:

Post a Comment