Thursday, January 5, 2023

சுப்ஹானல்லாஹ் என்பதன் சிறப்பு. ( 5 )

 சுப்ஹானல்லாஹ் என்பதன் சிறப்பு. ( 5 )


سُبْحَانَ اللَّهِ وَبِحَمْدِهِ، سُبْحَانَ اللَّهِ الْعَظِيمِ

சுப்ஹானல்லாஹி வ பிஹம்திஹி, சுப்ஹானல்லாஹில் அழீம்.

பொருள் : அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்து துதிசெய்கிறேன். கண்ணியமிக்க அல்லாஹ்வைத் துதிக்கிறேன்.

சிறப்பு : நன்மை தீமை நிறுக்கப்படும் மீஜான் என்னும் தராசில் கனமானவை. அளவற்ற அருளாளனுக்குப் பிரியமானவை.

ஆதாரம் : இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். இரண்டு வாக்கியங்கள் நாவுக்கு எளிதானவை ஆகும்; (நன்மை, தீமை நிறுக்கப்படும்) தராசில் கனமானவை ஆகும்; அளவற்ற அருளாளனின் பிரியத்திற்குரியவை ஆகும். (அவை:) சுப்ஹானல்லாஹி வ பிஹம்திஹி; சுப்ஹானல்லாஹில் அழீம்.
(பொருள்: அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்து துதிசெய்கிறேன்; கண்ணியமிக்க அல்லாஹ்வைத் துதிக்கிறேன்.)
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி : 6682.

No comments:

Post a Comment