Pages

Contact Us

Monday, January 9, 2023

சுப்ஹானல்லாஹ் என்பதன் சிறப்பு. ( 9 )

 சுப்ஹானல்லாஹ் என்பதன் சிறப்பு. ( 9 )


سبحان ربى الْأَعْلَى

சுப்ஹான ரப்பியல் அஃலா.

பொருள் : மிக்க மேலான என் இறைவன் தூயவன் (மூன்று முறை).

சட்டம்: ஸஜ்தாவில் ஓதுவதற்கு நபி (ஸல்) அவர்கள் கற்றுக் கொடுத்தது.

ஆதாரம் : ஹுதைஃபா பின் அல்யமான் (ரலி) அவர்கள் கூறியதாவது. நான் நபி (ஸல்) அவர்களுடன் ஓர் இரவில் (தஹஜ்ஜுத்) தொழுதேன். அதில் அவர்கள். ருகூஉச் செய்தார்கள். அவர்கள் ருகூவில் "சுப்ஹான ரப்பியல் அழீம்" (மகத்துவ மிக்க என் இறைவன் தூயவன்) என்று கூறலானார்கள். அவர்கள் நிலையில் நின்ற அளவுக்கு ருகூஉச் செய்தார்கள். பின்னர் (ருகூவிலிருந்து நிமிரும்போது) "சமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ்" (அல்லாஹ் தன்னைப் புகழ்வோரின் புகழுரையை ஏற்கிறான்) என்று கூறிவிட்டுக் கிட்டத்தட்ட ருகூஉச் செய்த அளவுக்கு நீண்ட நேரம் நிலையில் நின்றிருந்தார்கள். பிறகு சஜ்தாச் செய்தார்கள். அதில் "சுப்ஹான ரப்பியல் அஃலா" (மிக்க மேலான என் இறைவன் தூயவன்) என்று கூறினார்கள். அவர்கள் நிலையில் நின்றிருந்த அளவுக்கு சஜ்தாச் செய்தார்கள்.
ஸஹீஹ் முஸ்லிம் : 1421.

No comments:

Post a Comment