Wednesday, February 8, 2023

சொர்க்கச் சோலைகள். ( 16 )

 சொர்க்கச் சோலைகள். ( 16 )

கறுத்தவர்களும் அங்கே வெண்மையாகத் திகழ்வார்கள்.

يَوْمَ تَبْيَضُّ وُجُوهٌ وَتَسْوَدُّ وُجُوهٌ ۚ فَأَمَّا الَّذِينَ اسْوَدَّتْ وُجُوهُهُمْ أَكَفَرْتُم بَعْدَ إِيمَانِكُمْ فَذُوقُوا الْعَذَابَ بِمَا كُنتُمْ تَكْفُرُونَ

அந்நாளில் சில முகங்கள் வெண்மையாகத் திகழும். வேறு சில முகங்கள் கருத்திருக்கும். "நம்பிக்கை கொண்ட பின் (ஏகஇறைவனை) மறுத்து விட்டீர்களா? நீங்கள் மறுத்துக் கொண்டிருந்ததால் இவ்வேதனையை அனுபவியுங்கள்!' என்று முகங்கள் கறுத்தவர்களிடம் (கூறப்படும்)
திருக்குர்ஆன் 3:106

وَأَمَّا الَّذِينَ ابْيَضَّتْ وُجُوهُهُمْ فَفِي رَحْمَةِ اللَّهِ هُمْ فِيهَا خَالِدُونَ

வெண்மையான முகமுடையோர் அல்லாஹ்வின் அருளில் இருப்பார்கள். அதில் நிரந்தரமாக இருப்பார்கள்.
திருக்குர்ஆன் 3:107

لِّلَّذِينَ أَحْسَنُوا الْحُسْنَىٰ وَزِيَادَةٌ ۖ وَلَا يَرْهَقُ وُجُوهَهُمْ قَتَرٌ وَلَا ذِلَّةٌ ۚ أُولَٰئِكَ أَصْحَابُ الْجَنَّةِ ۖ هُمْ فِيهَا خَالِدُونَ

நன்மை செய்தோருக்கு நன்மையும், (அதை விட) அதிகமாகவும் உண்டு. அவர்களின் முகங்களில் இருளோ, இழிவோ ஏற்படாது. அவர்களே சொர்க்கவாசிகள். அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள்.
திருக்குர்ஆன் 10:26

கள்ளம் கபடம் யாருக்கும் இருக்காது.

وَنَزَعْنَا مَا فِي صُدُورِهِم مِّنْ غِلٍّ تَجْرِي مِن تَحْتِهِمُ الْأَنْهَارُ ۖ وَقَالُوا الْحَمْدُ لِلَّهِ الَّذِي هَدَانَا لِهَٰذَا وَمَا كُنَّا لِنَهْتَدِيَ لَوْلَا أَنْ هَدَانَا اللَّهُ ۖ لَقَدْ جَاءَتْ رُسُلُ رَبِّنَا بِالْحَقِّ ۖ وَنُودُوا أَن تِلْكُمُ الْجَنَّةُ أُورِثْتُمُوهَا بِمَا كُنتُمْ تَعْمَلُونَ

அவர்களின் உள்ளங்களில் இருந்த குரோதத்தை எடுத்து விடுவோம். அவர்களுக்குக் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். "நமக்கு இத்தகைய வழிகாட்டிய அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். அல்லாஹ் எங்களுக்கு நேர்வழி காட்டியிருக்காவிட்டால் நேர்வழி பெற்றிருக்க மாட்டோம். நமது இறைவனின் தூதர்கள் உண்மையையே கொண்டு வந்தனர்'' என அவர்கள் கூறுவார்கள். "உங்கள் செயல்களின் காரணமாக உங்களுக்கு உரிமையாக்கப்பட்டுள்ள சொர்க்கம் இதுவே'' என்று அவர்களுக்குக் கூறப்படும்.
திருக்குர்ஆன் 7:43

وَنَزَعْنَا مَا فِي صُدُورِهِم مِّنْ غِلٍّ إِخْوَانًا عَلَىٰ سُرُرٍ مُّتَقَابِلِينَ

அவர்களின் உள்ளங்களில் இருந்த குரோதங்களை நீக்குவோம். கட்டில்களில் நேருக்கு நேர் நோக்கி சகோதரர்களாக இருப்பார்கள்.
திருக்குர்ஆன் 15:47

No comments:

Post a Comment