Pages

Contact Us

Saturday, February 4, 2023

அல்ஹம்துலில்லாஹ் என்பதன் சிறப்பு. ( 1 )

 அல்ஹம்துலில்லாஹ் என்பதன் சிறப்பு. ( 1 )


اَلْحَمْدُ للهِ الَّذِيْ أَحْيَانَا بَعْدَ مَا أَمَاتَنَا وَإِلَيْهِ النُّشُوْرُ

அல்ஹம்து லில்லாஹில்லதீ அஹ்யானா ப(B]ஃத மா அமா(த்)தனா வ இலைஹின் னுஷுர்.

பொருள் : எங்களை மரணிக்கச் செய்த பின் உயிர்ப்பித்த அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். மேலும் அவனிடமே (நமது) திரும்பிச் செல்லுதல் உள்ளது.

சட்டம் : இதை தூங்கி எழுந்தவுடன் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுவார்கள்.

ஆதாரம் : அபூதர் அல்கிஃபாரீ(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் படுக்கைக்குச் செல்லும்போது 'அல்லாஹும்ம பிஸ்மிக்க அமூத்து வ அஹ்யா' (இறைவா! உன் பெயர் கூறியே இறக்கிறேன். உயிர் வாழவும் செய்கிறேன்)' என்று கூறுவார்கள். (உறக்கத் திலிருந்து விழிக்கும்போது, 'அல்ஹம்து லில்லாஹில் லதீ அஹ்யானா பஅத மா அமாத்தனா வ இலைஹிந் நூஷூர் (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே. அவன் எங்களை இறக்கச் செய்து பின்னர் எங்களுக்கு உயிரூட்டினான். மேலும், (மண்ணறையிலிருந்து வெளியேறி) அவனிடமே செல்ல வேண்டியுள்ளது.) என்று கூறுவார்கள்.
ஸஹீஹ் புகாரி : 6325.

No comments:

Post a Comment