Pages

Contact Us

Tuesday, February 7, 2023

இறைவனுக்கு எளிதானது. ( 2 )

 இறைவனுக்கு எளிதானது. ( 2 )

வானங்கள் பூமியை விட மனிதனைப் படைத்தல் எளிதானது.

أَوَلَمْ يَرَوْا أَنَّ اللَّهَ الَّذِي خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ قَادِرٌ عَلَىٰ أَن يَخْلُقَ مِثْلَهُمْ وَجَعَلَ لَهُمْ أَجَلًا لَّا رَيْبَ فِيهِ فَأَبَى الظَّالِمُونَ إِلَّا كُفُورًا

வானங்களையும், பூமியையும் படைத்தவன் இவர்களைப் போன்ற (அற்பமான)வர்களைப் படைக்க ஆற்றலுடையவன் என்பதை அவர்கள் அறியவில்லையா? சந்தேகமில்லாத ஒரு காலக் கெடுவையும் அவர்களுக்காக அவன் ஏற்படுத்தியுள்ளான். அநீதி இழைத்தோர் (இறை) மறுப்பைத் தவிர வேறு எதையும் ஏற்பதில்லை.
திருக்குர்ஆன் 17:99

أَوَلَيْسَ الَّذِي خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ بِقَادِرٍ عَلَىٰ أَن يَخْلُقَ مِثْلَهُم ۚ بَلَىٰ وَهُوَ الْخَلَّاقُ الْعَلِيمُ

வானங்களையும், பூமியையும் படைத்தவன் இவர்களைப் போன்றவர்களைப் படைக்க சக்தி பெற்றவன் இல்லையா? ஆம்! அவன் மிகப் பெரிய படைப்பாளன்; அறிந்தவன்.
திருக்குர்ஆன் 36:81

لَخَلْقُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ أَكْبَرُ مِنْ خَلْقِ النَّاسِ وَلَٰكِنَّ أَكْثَرَ النَّاسِ لَا يَعْلَمُونَ

வானங்களையும், பூமியையும் படைப்பது மனிதர்களைப் படைப்பதை விடப் பெரியது. எனினும் மனிதர்களில் அதிகமானோர் அறிய மாட்டார்கள்.
திருக்குர்ஆன் 40:57

أَأَنتُمْ أَشَدُّ خَلْقًا أَمِ السَّمَاءُ ۚ بَنَاهَا

படைக்கப்படுவதில் நீங்கள் கடினமானவர்களா? அல்லது வானமா? அதை அவன் நிறுவினான்.
திருக்குர்ஆன் 79:27

மெதுமெதுவாக அடியெடுத்து வைத்துச் செல்வார்கள். இறைவனுக்கு அடங்கி ஒடுங்கிச் செல்வார்கள்.

يَوْمَئِذٍ يَتَّبِعُونَ الدَّاعِيَ لَا عِوَجَ لَهُ ۖ وَخَشَعَتِ الْأَصْوَاتُ لِلرَّحْمَٰنِ فَلَا تَسْمَعُ إِلَّا هَمْسًا

எவ்வித மறுப்புமின்றி அந்நாளில் அழைப்பாளரைப் பின்தொடர்வார்கள். அளவற்ற அருளாளனிடம் ஓசைகள் யாவும் ஒடுங்கி விடும். காலடிச் சப்தம் தவிர வேறெதனையும் நீர் செவியுற மாட்டீர்!
திருக்குர்ஆன் 20:108

No comments:

Post a Comment