Tuesday, February 7, 2023

அல்ஹம்துலில்லாஹ் என்பதன் சிறப்பு. ( 3 )

 அல்ஹம்துலில்லாஹ் என்பதன் சிறப்பு. ( 3 )


سُبْحَانَ اللَّهِ والْحَمْدُ لِلَّهِ

சுப்ஹானல்லாஹி, வல்ஹம்து லில்லாஹி.

பொருள் : அல்லாஹ் தூயவன், எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே உரியது.

சிறப்பு : வானங்கள் மற்றும் பூமிக்கிடையேயுள்ள இடத்தை நிரப்பிவிடக்கூடிய அளவிற்கு அபரிமிதமான நன்மைகளைக் கொண்டதாகும்.

ஆதாரம் : அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தூய்மை இறைநம்பிக்கையில் பாதியாகும். அல்ஹம்துலில்லாஹ் (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே!) என்(று இறைவனைத் துதிப்)பது, (நன்மை மற்றும் தீமைகளை நிறுக்கக்கூடிய) தராசை நிரப்பக்கூடியதாகும். சுப்ஹானல்லாஹி, வல்ஹம்து லில்லாஹி (அல்லாஹ் தூயவன்; எல்லாப் புகழும் அவனுக்கே உரியது) என்(று அவனைத் துதிப்)பது வானங்கள் மற்றும் பூமிக்கிடையேயுள்ள இடத்தை நிரப்பிவிடக்கூடிய (அளவிற்கு அபரிமிதமான நன்மைகளைக் கொண்ட)தாகும். தொழுகை (வழிகாட்டும்)ஒளியாகும். தானதர்மம் சான்றாகும். பொறுமை ஒரு வெளிச்சமாகும். குர்ஆன் ஒன்று உனக்கு ஆதரவான சான்றாகும்; அல்லது எதிரான சான்றாகும். மக்கள் அனைவரும் காலையில் புறப்பட்டுச் சென்று தம்மை விற்பனை செய்கின்றனர். சிலர் தம்மை (இறைவனிடம் விற்று நரகத்திலிருந்து தம்மை) விடுவித்துக் கொள்கின்றனர். வேறு சிலர் (ஷைத்தானிடம் விற்று) தம்மை அழித்துக்கொள்கின்றனர்.
இதை அபூமாலிக் அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
ஸஹீஹ் முஸ்லிம் : 381.

No comments:

Post a Comment