Wednesday, February 8, 2023

அல்ஹம்துலில்லாஹ் என்பதன் சிறப்பு. ( 5 )

 அல்ஹம்துலில்லாஹ் என்பதன் சிறப்பு. ( 5 )


اَلْحَمْدُ للهِ. يَرْحَمُكَ اللهُ. يَهْدِيْكُمُ اللهُ وَيُصْلِحُ بَالَكُمْ

அல்ஹம்து லில்லாஹ்,
யர்ஹமு(க்)கல்லாஹ்,
யஹ்தீ(க்)குமுல்லாஹு வயுஸ்லிஹு பா(B]ல(க்)கும்.

பொருள் : எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே, அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக! அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்.

சட்டம் : தும்மல் வந்தால் தும்மிய பின், இந்த துஆவை ஓத வேண்டும்.

ஆதாரம் : இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' நீங்கள் தும்மினல், அல்ஹம்துலில்லாஹ்'
(எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (இதைக் கேட்கும்) 'உங்கள் சகோதரர்' அல்லது 'நண்பர்' யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக 'யர்ஹமுக்கல்லாஹ்' என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) 'யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்' (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி : 6224.

No comments:

Post a Comment