Pages

Contact Us

Sunday, March 26, 2023

பிஸ்மில்லாஹ் என்பதன் சிறப்பு. ( 4 )

பிஸ்மில்லாஹ் என்பதன் சிறப்பு. ( 4 )


بِسْمِ اللَّهِ اَللهُ أَكْبَرُ

பி(B]ஸ்மில்லாஹி அல்லாஹு அக்ப(B]ர்

பொருள் : அல்லாஹ்வின் பெயரால். அல்லாஹ் மிகப் பெரியவன்.

சட்டம் : உண்பதற்கு அனுமதிக்கப்பட்ட பிராணிகளை அறுக்கும் போது, அல்லாஹ்வின் பெயரும் மற்றும் தக்பீரும் கூற வேண்டும்.

ஆதாரம் : அனஸ்(ரலி) கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள் கொம்பு உள்ள இரண்டு கறுப்பு வெள்ளை செம்மறியாட்டுக் கடாக்களைக் குர்பானி கொடுத்தார்கள். அவ்விரண்டையும் தம் கரத்தால் அறுத்தார்கள். (அப்போது) அல்லாஹ்வின் பெயர் ('பிஸ்மில்லாஹ்') கூறினார்கள். தக்பீரும் ('அல்லாஹு அக்பர்') கூறினார்கள். மேலும், தம் காலை அவற்றின் பக்கவாட்டில் வைத்(துக் கொண்டு அறுத்)தார்கள்.
ஸஹீஹ் புகாரி : 5565.

No comments:

Post a Comment