Pages

Contact Us

Thursday, April 13, 2023

என்றென்றும் நரகில் கிடப்போர்கள். ( 3 )

என்றென்றும் நரகில் கிடப்போர்கள். ( 3 )

அல்லாஹ்வுக்கும், தூதருக்கும் மாறுசெய்து அவனது வரம்புகள் அனைத்தையும் மீறியவர்கள்.

وَمَن يَعْصِ اللَّهَ وَرَسُولَهُ وَيَتَعَدَّ حُدُودَهُ يُدْخِلْهُ نَارًا خَالِدًا فِيهَا وَلَهُ عَذَابٌ مُّهِينٌ

அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் மாறுசெய்து அவனது வரம்புகளை மீறுபவனை (அல்லாஹ்) நரகில் நுழையச் செய்வான். அதில் அவன் நிரந்தரமாக இருப்பான். அவனுக்கு இழிவு தரும் வேதனை உண்டு.

திருக்குர்ஆன் 4:14

وَمَن يُشَاقِقِ الرَّسُولَ مِن بَعْدِ مَا تَبَيَّنَ لَهُ الْهُدَىٰ وَيَتَّبِعْ غَيْرَ سَبِيلِ الْمُؤْمِنِينَ نُوَلِّهِ مَا تَوَلَّىٰ وَنُصْلِهِ جَهَنَّمَ ۖ وَسَاءَتْ مَصِيرًا

நேர்வழி தனக்குத் தெளிவான பின் இத்தூதருக்கு (முஹம்மதுக்கு) மாறுசெய்து நம்பிக்கை கொண்டோரின் வழியல்லாத (வேறு) வழியைப் பின்பற்றுபவரை, அவர் செல்லும் வழியில் விட்டு விடுவோம். நரகத்திலும் அவரை கருகச் செய்வோம். தங்குமிடங்களில் அது மிகவும் கெட்டது.

திருக்குர்ஆன் 4:115

ذَٰلِكَ بِأَنَّهُمْ شَاقُّوا اللَّهَ وَرَسُولَهُ ۚ وَمَن يُشَاقِقِ اللَّهَ وَرَسُولَهُ فَإِنَّ اللَّهَ شَدِيدُ الْعِقَابِ

அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் அவர்கள் மாறுசெய்தார்கள் என்பதே இதற்குக் காரணம். அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் மாறுசெய்வோரை அல்லாஹ் கடுமையாகத் தண்டிப்பவன்.

திருக்குர்ஆன் 8:13

إِنَّ الَّذِينَ يُحَادُّونَ اللَّهَ وَرَسُولَهُ كُبِتُوا كَمَا كُبِتَ الَّذِينَ مِن قَبْلِهِمْ ۚ وَقَدْ أَنزَلْنَا آيَاتٍ بَيِّنَاتٍ ۚ وَلِلْكَافِرِينَ عَذَابٌ مُّهِينٌ

அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் மாறுசெய்வோர் இவர்களுக்கு முன் சென்றோர் இழிவுபடுத்தப்பட்டது போல் இழிவுபடுத்தப்படுவார்கள். தெளிவான சான்றுகளை அருளியுள்ளோம். (நம்மை) மறுப்போருக்கு இழிவு தரும் வேதனை இருக்கிறது.

திருக்குர்ஆன் 58:5

إِلَّا بَلَاغًا مِّنَ اللَّهِ وَرِسَالَاتِهِ ۚ وَمَن يَعْصِ اللَّهَ وَرَسُولَهُ فَإِنَّ لَهُ نَارَ جَهَنَّمَ خَالِدِينَ فِيهَا أَبَدًا

அல்லாஹ்விடமிருந்தும், அவனது தூதுச் செய்திகளிலிருந்தும் எடுத்துச் சொல்வதைத் தவிர (வேறு இல்லை). அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் மாறுசெய்வோருக்கு நரக நெருப்பு உள்ளது. அதில் என்றென்றும் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள்.

திருக்குர்ஆன் 72:23

No comments:

Post a Comment