அல்லாஹும்ம என்பதன் சிறப்பு. ( 61 )
اَللّهُمَّ اغْفِرْ لِيْ وَلَهُ وَأَعْقِبْنِيْ مِنْهُ عُقْبَى حَسَنَةً
அல்லாஹும்மக்பி[F]ர்லீ வலஹு வ அஃகிப்னீ மின்ஹு உக்ப(B]னி ஹஸனதன்.
பொருள் : இறைவா! என்னையும், அவரையும் மன்னிப்பாயாக! அவரை விடச் சிறந்தவரை எனக்கு அளிப்பாயாக!
சட்டம்: கணவனைஇழந்தவர்கள் கேட்க வேண்டிய பிரார்த்தனை.
ஆதாரம் : உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறியதாவது: "நீங்கள் நோயாளியையோ இறந்தவரையோ சந்திக்கச் சென்றால் நல்லதையே சொல்லுங்கள். ஏனெனில், நீங்கள் சொல்வதற்கு வானவர்கள் "ஆமீன்" கூறுகின்றனர்" என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(என் கணவர்) அபூசலமா (ரலி) அவர்கள் இறந்தபோது நான் நபி (ஸல்) அவர்களிடம் சென்று, "அல்லாஹ்வின் தூதரே, அபூசலமா இறந்துவிட்டார்" என்று கூறினேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் "இறைவா, என்னையும் அவரையும் மன்னிப்பாயாக! அவருக்கு மாற்றாக அவரைவிடச் சிறந்த துணையை எனக்கு வழங்குவாயாக" என்று கூறுமாறு என்னிடம் சொன்னார்கள். நான் அவ்வாறே பிரார்த்தித்தேன்.
அவரைவிடச் சிறந்தவரான முஹம்மத் (ஸல்) அவர்களையே அல்லாஹ் எனக்குத் துணையாக வழங்கினான்.
ஸஹீஹ் முஸ்லிம் : 1677.
Pages
▼
Contact Us
▼
No comments:
Post a Comment