Monday, August 7, 2023

ஹஜ். ( 4 )

ஹஜ். ( 4 )
அரஃபாத் பெருவெளியில் தங்குதல்.

فَإِذَا أَفَضْتُم مِّنْ عَرَفَاتٍ فَاذْكُرُوا اللَّهَ عِندَ الْمَشْعَرِ الْحَرَامِ

அரஃபாத் பெருவெளியிலிருந்து நீங்கள் திரும்பும் போது மஷ்அருல் ஹராமில் அல்லாஹ்வை நினையுங்கள்!
திருக்குர்ஆன் 2:198

மஷ்அருல் ஹராமில் இறைவனை நினைவு கூர்வது.

فَإِذَا أَفَضْتُم مِّنْ عَرَفَاتٍ فَاذْكُرُوا اللَّهَ عِندَ الْمَشْعَرِ الْحَرَامِ

அரஃபாத் பெருவெளியிலிருந்து நீங்கள் திரும்பும் போது மஷ்அருல் ஹராமில் அல்லாஹ்வை நினையுங்கள்!
திருக்குர்ஆன் 2:198

ஹஜ்ஜுக்குச் செல்வோர் வியாபாரம் செய்து சம்பாதிக்கலாம்.

لَيْسَ عَلَيْكُمْ جُنَاحٌ أَن تَبْتَغُوا فَضْلًا مِّن رَّبِّكُمْ

(ஹஜ்ஜின் போது வியாபாரத்தின் மூலம்) உங்கள் இறைவனின் அருளைத் தேடுவது உங்களுக்குக் குற்றமில்லை.
திருக்குர்ஆன் 2:198

தமத்துவ் முறையில் ஹஜ்.

فَإِذَا أَمِنتُمْ فَمَن تَمَتَّعَ بِالْعُمْرَةِ إِلَى الْحَجِّ فَمَا اسْتَيْسَرَ مِنَ الْهَدْيِ

உங்களில் அச்சமற்ற நிலையை அடைந்து ஹஜ்ஜையும், உம்ராவையும் தமத்துவ் முறையில் செய்பவர், இயன்ற பலிப்பிராணியை (பலியிட வேண்டும்).
திருக்குர்ஆன் 2:196

ஹஜ்ஜின்போது ஏற்படும் குற்றங்களுக்கு பரிகாரமாக நோன்பு நோற்றல்.

فَمَن لَّمْ يَجِدْ فَصِيَامُ ثَلَاثَةِ أَيَّامٍ فِي الْحَجِّ وَسَبْعَةٍ إِذَا رَجَعْتُمْ ۗ تِلْكَ عَشَرَةٌ كَامِلَةٌ

அது கிடைக்காதவர் ஹஜ்ஜின் போது மூன்று நோன்புகளும் (ஊர்) திரும்பிய பின் ஏழு நோன்புகளும் நோற்க வேண்டும். இதனால் பத்து முழுமை பெறும்.
திருக்குர்ஆன் 2:196

No comments:

Post a Comment