Monday, June 10, 2024

இதுதான் குர்ஆன். { 4 }

இதுதான் குர்ஆன். { 4 }
வரம்பு மீறியவர்களை எச்சரிக்கும் குர்ஆன்.

வரம்பு மீறியும், அநீதி இழைத்தும் இதைச் செய்பவரை பின்னர் நரகில் கருகச் செய்வோம். இது அல்லாஹ்வுக்கு எளிதானதாகவே உள்ளது.
திருக்குர்ஆன் 4:30

நம்பிக்கை கொண்டோர் விஷயத்தில் உறவையோ, உடன்படிக்கையையோ அவர்கள் பொருட்படுத்த மாட்டார்கள். அவர்களே வரம்பு மீறியவர்கள்.
திருக்குர்ஆன் 9:10

(தூதர்கள்) வெற்றி பெற்றனர். பிடிவாதம் பிடித்த ஒவ்வொரு அடக்குமுறையாளனும் நட்டமடைந்தான்.
அவனுக்கு முன்னே நரகம் உள்ளது. அவனுக்குச் சீழ் நீர் புகட்டப்படும்.
திருக்குர்ஆன் 14:15,16

வரம்பு மீறியோரின் தங்குமிடமாக நரகம் காத்துக் கொண்டிருக்கிறது.
திருக்குர்ஆன் 78:21,22

யார் வரம்பு மீறி, இவ்வுலக வாழ்வைத் தேர்ந்தெடுத்துக் கொண்டானோ அவனுக்கு நரகமே தங்குமிடம்.
திருக்குர்ஆன் 79:37, 38,39
📖📖📖📖📖📖📖📖

துஆக்கள். { 23 }

துஆக்கள். { 23 }
எல்லா நிலையிலும் கூற வேண்டியவை.

بِسْمِ اللهِ
பி(B]ஸ்மில்லாஹ்.

ஆதாரம் :
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(இரவு நேரத்தில்) கதவுகளைத் தாழிட்டுவிடுங்கள். (அப்போது) அல்லாஹ்வின் பெயரைச் சொல்லுங்கள். ஏனெனில், ஷைத்தான் மூடப்பட்ட எந்தக் கதவையும் திறப்பதில்லை. உங்கள் தண்ணீர் பையி(ன் வாயி)னைச் சுருக்கிட்டு மூடிவிடுங்கள். (அப்போதும்) அல்லாஹ்வின் பெயரைச் சொல்லுங்கள். உங்களுடைய பாத்திரங்களை மூடிவையுங்கள். (அப்போதும்) அல்லாஹ்வின் பெயரைச் சொல்லுங்கள். (அவற்றை முழுவதும் மூட இயலாவிட்டாலும்) அவற்றின் மீது எதையாவது குறுக்காக வைத்தேனும் மூடிவிடுங்கள். உங்கள் விளக்குகளை அணைத்துவிடுங்கள்.
என ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.44
ஸஹீஹ் புகாரி : 5623.
🤲🤲🤲🤲🤲🤲🤲🤲

Sunday, June 9, 2024

மனனம் செய்வோம்(26) அல் லைல் - 92.

மனனம் செய்வோம்(26)
அல் லைல் - 92.
(12முதல்21 வசனங்கள்)

اِنَّ عَلَيْنَا لَـلْهُدٰىۖ‏
இன்ன அலைனா லல்ஹு(D)தா.
'Inna ^alaynaa lal-hudaa.

وَاِنَّ لَـنَا لَـلْاٰخِرَةَ وَالْاُوْلٰى‏
வஇன்ன லனா லல்ஆ(KH)கிர(TH)த்த வல்ஊலா.
Wa 'inna lanaa lal-'Aakhirata wal-woolaa.

فَاَنْذَرْتُكُمْ نَارًا تَلَظّٰى‌ۚ‏
ஃபஅன்(D)தர்(TH)து(K)கும் நாரன் (TH)தலள்ளா.
Fa 'andhartukum naaran taladhdhaa.

لَا يَصْلٰٮهَاۤ اِلَّا الْاَشْقَىۙ‏
லா யஸ்லாஹா இல்லல் அஷ்(Q)கா.
Laa yaslaahaa illal-'ashqaa.

الَّذِىْ كَذَّبَ وَتَوَلّٰىؕ‏
அல்ல(D)தீ க(D)த்த(B)ப வ(TH)தவல்லா.
Alladhee kadhdhaba wa tawallaa.

وَسَيُجَنَّبُهَا الْاَتْقَىۙ‏
வஸயுஜன்னபுஹல் அ(TH)த்(Q)கா.
Wa sayujannabuhal-'atqaa.

الَّذِىْ يُؤْتِىْ مَالَهٗ يَتَزَكّٰى‌ۚ‏
அல்ல(D)தீ யுஃதீ மாலஹு ய(TH)த(Z)ஸக்கா.
Alladhee yu'tee maalahu yatazakkaa.

وَمَا لِاَحَدٍ عِنْدَهٗ مِنْ نِّعْمَةٍ تُجْزٰٓىۙ‏
வமா லிஅஹ(D)தின் இன்(D)தஹு மின் நிஃம(TH)தின் (TH)துஜ்(Z)ஸா.
Wa maa li 'ahadin ^indahu min ni^matin tujzaa.

اِلَّا ابْتِغَآءَ وَجْهِ رَبِّهِ الْاَعْلٰى‌ۚ‏
இல்ல(B)ப்(TH)தி(GH)ஃகாஅ வஜ்ஹி ர(B)ப்பிஹில் அஃலா.
Illabtighaa'a wajhi Rabbihil-'A^laa.

وَلَسَوْفَ يَرْضٰى‏
வலஸவ்ஃப யர்ளா.
Wa la sawfa yardaa.
📚📚📚📚📚📚📚📚

அனஸ் (ரலி), நூல்கள்: புகாரி (6389), முஸ்லிம் (5219)

நபி (ஸல்) அவர்கள், “ரப்பனா ஆத்தினா ஃபித் துன்யா ஹஸனத்தன் வ ஃபில் ஆகிரத்தி ஹஸனத்தன் வக்கினா அதாபந் நார்” என்றே அதிகமாகப் பிரார்த்தித்து வந்தார்கள்.
பொருள்: “எங்கள் இறைவனே! எங்களுக்கு இவ்வுலகிலும் நன்மையை(த் தருவாயாக!), மறுமையிலும் நன்மையைத் தருவாயாக! நரகத்தின் வேதனையிலிருந்து எங்களைப் பாதுகாப்பாயாக!”

அறிவிப்பவர்: அனஸ் (ரலி), நூல்கள்: புகாரி (6389), முஸ்லிம் (5219)

இதுதான் குர்ஆன். { 3 }

இதுதான் குர்ஆன். { 3 }
படைத்தவனை அடையாளம் காட்டும் குர்ஆன்.

கால்நடைகளில் உங்களுக்குப் படிப்பினை உள்ளது. அதன் வயிறுகளில் உள்ள சானத்துக்கும், இரத்தத்திற்கும் இடைப்பட்ட நிலையில் தூய்மையான பாலை உங்களுக்குப் புகட்டுகிறோம். அருந்துவோருக்கு அது இனிமையானது.
திருக்குர்ஆன் 16:66

"இக்குர்ஆன் போன்றதைக் கொண்டு வருவதற்காக மனிதர்களும், ஜின்களும் ஒன்று திரண்டாலும் இது போன்றதைக் கொண்டு வர முடியாது. அவர்களில் ஒருவர் மற்றவருக்கு உதவியாளராக இருந்தாலும் சரியே'' என்று கூறுவீராக!
திருக்குர்ஆன் 17:88

அவனே இரண்டு கடல்களை ஒன்று சேர்த்துள்ளான். இது மதுரமாகவும், தாகம் தீர்ப்பதாகவும் உள்ளது. அது உப்பாகவும், கசப்பாகவும் உள்ளது. அவ்விரண்டுக்குமிடையே ஒரு திரையையும், வலுவான தடுப்பையும் அவன் ஏற்படுத்தியுள்ளான்.
திருக்குர்ஆன் 25:53
📖📖📖📖📖📖📖📖

துஆக்கள். { 22 }

துஆக்கள். { 22 }
தாம்பத்தியத்தில் ஈடுபடும் முன்.

بِسْمِ اللَّهِ اللَّهُمَّ جَنِّبْنَا الشَّيْطَانَ وَجَنِّبِ الشَّيْطَانَ مَا رَزَقْتَنَا
பி(B]ஸ்மில்லாஹி அல்லாஹும்ம ஜன்னிப்(B]னஷ் ஷை(த்)தான வஜன்னிபிஷ் ஷை(த்)தான மாரஸக்(த்)தனா.

ஆதாரம் : உங்களில் ஒருவர் தம் மனைவியுடன் உடலுறவு கொள்ளச் செல்லும்போது 'அல்லாஹ்வின் திரு நாமத்தைக் கொண்டு உடலுறவு கொள்ளப் போகிறேன். இறைவா! எங்களைவிட்டு ஷைத்தானைத் தூரமாக்கு! (இந்த உறவு மூலம்) நீ எங்களுக்கு அளிக்கப் போகும் (குழந்தைப்) பேற்றிலும் ஷைத்தானை அப்புறப்படுத்து' என்று சொல்லிவிட்டு உறவு கொண்டு அதன் மூலம் அவ்விருவருக்கும் குழந்தை வழங்கப்படுமானால் அக்குழந்தைக்கு ஷைத்தான் எந்த தீங்கும் விளைவிப்பதில்லை' என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி : 141.
🤲🤲🤲🤲🤲🤲🤲🤲

மனனம் செய்வோம்(25) அல் லைல் - 92.

மனனம் செய்வோம்(25)
அல் லைல் - 92.
(1 முதல் 11 வசனங்கள்)

بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.
Bismillaahir-Rahmaanir-Raheem.

وَالَّيْلِ اِذَا يَغْشٰىۙ‏
வல்லைலி இ(D)தா யஃஷா.
Wal-layli 'idhaa yaghshaa.

وَالنَّهَارِ اِذَا تَجَلّٰىۙ‏
வன்னஹாரி இ(D)தா (TH)தஜல்லா.
Wan-nahaari 'idhaa tajallaa.

وَمَا خَلَقَ الذَّكَرَ وَالْاُنْثٰٓىۙ‏
வமா (KH)ஹல(Q)க(D)த்த(K)கர வல்உன்ஸா.
Wa maa khalaqadh-dhakara wal-'unsaa.

اِنَّ سَعْيَكُمْ لَشَتّٰىؕ‏
இன்ன ஸஃய(K)கும் லஷ(TH)த்தா.
'Inna sa^yakum la shattaa.

فَاَمَّا مَنْ اَعْطٰى وَاتَّقٰىۙ‏
ஃபஅம்மா மன் அஃ(TH)தா வ(TH)த்த(Q)கா.
Fa 'ammaa man 'a^taa wattaqaa.

وَصَدَّقَ بِالْحُسْنٰىۙ‏
வஸ(D)த்த(K)க (B)பில்ஹுஸ்னா.
Wa saddaqa bil-husnaa.

فَسَنُيَسِّرُهٗ لِلْيُسْرٰىؕ‏
ஃபஸனுயஸ்ஸிருஹுலில் யுஸ்ரா.
Fa sanuyassiruhoo lil-yusraa.

وَاَمَّا مَنْۢ بَخِلَ وَاسْتَغْنٰىۙ‏
வஅம்மா மம்(B)ப(KH)ஹில வஸ்(TH)த(GH)ஃக்னா.
Wa 'ammaa mam bakhila wastaghnaa.

وَكَذَّبَ بِالْحُسْنٰىۙ‏
வ(K)க(D)த்த(B)ப (B)பில்ஹுஸ்னா.
Wa kadhdhaba bil-husnaa.

فَسَنُيَسِّرُهٗ لِلْعُسْرٰىؕ‏
ஃபஸனுயஸ்ஸிருஹுலில் உஸ்ரா.
fa sanuyassiruhoo lil-^usraa.

وَمَا يُغْنِىْ عَنْهُ مَالُهٗۤ اِذَا تَرَدّٰىؕ‏
வமா யு(GH)ஃக்நீ அன்ஹு மாலுஹு இ(D)தா (TH)தர(D)த்தா.
Wa maa yughnee ^anhu maaluhoo idhaa taraddaa.
📚📚📚📚📚📚📚📚

Saturday, June 8, 2024

துஆக்கள். { 21 }

துஆக்கள். { 21 }
உணவளித்தவருக் காக செய்யும் துஆ.

اَللّهُمَّ بَارِكْ لَهُمْ فِيْ مَا رَزَقْتَهُمْ وَاغْفِرْ لَهُمْ وَارْحَمْهُمْ
அல்லாஹும்ம பா(B]ரிக் லஹும் பீ[F]மா ரஸக்தஹும் வஃக்பி[F]ர் லஹும் வர்ஹம்ஹும்.

ஆதாரம் :
அப்துல்லாஹ் பின் புஸ்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு அருகே உணவும் (பேரீச்சம் பழம், பாலாடை, நெய் ஆகியவற்றால் செய்யப்பட்ட "வத்பா" எனும்) ஒரு வகைப் பலகாரமும் வைத்தோம். அதிலிருந்து அவர்கள் உண்டார்கள்.
என் தந்தை, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை "எங்களுக்காகப் பிரார்த்தியுங்கள்" என்று கூறினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "இறைவா! நீ இவர்களுக்கு வழங்கிய உணவில் அருள்வளம் (பரக்கத்) புரிவாயாக! இவர்களை மன்னித்து, இவர்களுக்குக் கருணை புரிவாயாக! எனப் பிரார்த்தித்தார்கள்.
ஸஹீஹ்முஸ்லிம்:4149.
🤲🤲🤲🤲🤲🤲🤲🤲

மனனம் செய்வோம்(24) அல் லுஹா - 93.

மனனம் செய்வோம்(24)
அல் லுஹா - 93.

بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.
Bismillaahir-Rahmaanir-Raheem.

وَالضُّحٰىۙ‏
வள்ளுஹா.
Wad-duhaa.

وَالَّيْلِ اِذَا سَجٰىۙ‏
வல்லைலி இ(D)தா ஸஜா.
Wal-layli idhaa sajaa.

مَا وَدَّعَكَ رَبُّكَ وَمَا قَلٰىؕ‏
மா வ(D)த்தஅ(K)க ர(B)ப்பு(K)க வமா (Q)கலா.
Maa wadda^aka Rabbuka wa maa qalaa.

وَلَـلْاٰخِرَةُ خَيْرٌ لَّكَ مِنَ الْاُوْلٰىؕ‏
வலல் ஆ(KH)கிர(TH)த்து (KH)கைருல் ல(K)க மினல் ஊலா.
Wa lal-'akhiratu khayrul-laka minal-woolaa.

وَلَسَوْفَ يُعْطِيْكَ رَبُّكَ فَتَرْضٰىؕ‏
வல ஸவ்ஃப யுஃ(TH)தீ(K)க ர(B)ப்பு(K)க ஃப(TH)தர்ளா.
Wa la sawfa yu^teeka Rabbuka fa tardaa.

اَلَمْ يَجِدْكَ يَتِيْمًا فَاٰوٰى‏
அலம் யஜி(D)த்(K)க ய(TH)தீமன் ஃபஆவா.
Alam yajidka yateeman fa aawaa.

وَوَجَدَكَ ضَآ لًّا فَهَدٰى‏
வவஜ(D)தக ளாலன் ஃபஹ(D)தா.
Wa wajadaka daallan fa hadaa.

وَوَجَدَكَ عَآٮِٕلًا فَاَغْنٰىؕ‏
வவஜ(D)தக ஆயிலன் ஃபஅ(GH)ஃக்னா.
Wa wajadaka ^aa'ilan fa 'aghnaa.

فَاَمَّا الْيَتِيْمَ فَلَا تَقْهَرْؕ‏
ஃபஅம்மல் ய(TH)தீம ஃபலா த(Q)க்ஹர்.
Fa 'ammal-yateema fa laa taq-har.

وَاَمَّا السَّآٮِٕلَ فَلَا تَنْهَرْؕ‏
வஅம்மஸ் ஸாயில ஃபலா (TH)தன்ஹர்.
Wa 'ammas-saa'ila fa laa tanhar.

وَاَمَّا بِنِعْمَةِ رَبِّكَ فَحَدِّثْ‏
வஅம்மா பிநிஃம(TH)தி ர(B)ப்பி(K)க ஃபஹ(D)த்திஸ்.
Wa 'ammaa bi ni^mati Rabbika fa haddis.
📚📚📚📚📚📚📚📚

இதுதான் குர்ஆன். { 2 }

இதுதான் குர்ஆன். { 2 }
மனித குலத்திற்கு வழிகாட்டி குர்ஆன்.

இந்தக் குர்ஆன் ரமளான் மாதத்தில் அருளப்பட்டது. (இது) மனிதர்களுக்கு நேர்வழி காட்டும். நேர்வழியைத் தெளிவாகக் கூறும். (பொய்யை விட்டு உண்மையை) பிரித்துக் காட்டும்.
திருக்குர்ஆன் 2:185

இது பாக்கியமான வேதம். இதன் வசனங்களை அவர்கள் சிந்திப்பதற்காகவும், அறிவுடையோர் படிப்பினை பெறுவதற்காகவும் உமக்கு அருளினோம்.
திருக்குர்ஆன் 38:29

இது அகிலத்தாருக்கும், உங்களில் யார் நேராக நடக்க விரும்புகிறாரோ அவருக்கும் அறிவுரை தவிர வேறு இல்லை.
திருக்குர்ஆன் 81:27,28
📖📖📖📖📖📖📖📖

துஆக்கள். { 20 }

துஆக்கள். { 20 }
சாப்பிட்ட பின்பும், பருகிய பின்பும்.

اَلْحَمْدُ للهِ كَثِيرًا طَيِّبًا مُبَارَكًا فِيْهِ غَيْرَ مَكْفِيّ وَلاَ مُوَدَّعٍ وَلاَ مُسْتَغْنًى عَنْهُ رَبَّنَا
அல்ஹம்து லில்லாஹி கஸீரன் தய்யிப(B]ன் முபா(B]ர(க்)கன் பீ[F]ஹி ஃகைர மக்பி[F]ய்யின் வலா முவத்தஇன் வலா முஸ்தக்னன் அன்ஹு ரப்ப(B]னா.

ஆதாரம் : அபூஉமாமா (ரலி) கூறினார். நபி (ஸல்) அவர்கள் (சாப்பிட்டு முடித்த பின்) தம் உணவு விரிப்பை எடுக்கும்போது (அதிகமான, தூய்மையான, வளமிக்க எல்லாப் புகழும் (நன்றியும்) அல்லாஹ்வுக்கே உரியது. இறைவா! இப்புகழ் முற்றுப் பெறாதது; கைவிடப்படக் கூடாதது; தவிர்க்க முடியாதது ஆகும்). என்று பிரார்த்திப்பார்கள்.
ஸஹீஹ் புகாரி : 5458.
🤲🤲🤲🤲🤲🤲🤲🤲

Thursday, June 6, 2024

மனனம் செய்வோம்(23) அஷ் ஷரஹ் - 94.

மனனம் செய்வோம்(23)
அஷ் ஷரஹ் - 94.

بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.
Bismillaahir-Rahmaanir-Raheem.

اَلَمْ نَشْرَحْ لَـكَ صَدْرَكَۙ‏
அலம் நஷ்ரஹ் ல(K)க ஸ(D)த்ர(K)க்.
Alam nashrah laka sadrak.

وَوَضَعْنَا عَنْكَ وِزْرَكَۙ‏
வவளஃனா அன்(K)க வி(Z)ஸ்ர(K)க்.
Wa wada^naa ^anka wizrak.

الَّذِىْۤ اَنْقَضَ ظَهْرَكَۙ‏
அல்ல(D)தீ அன்(Q)கள ழஹ்ர(K)க்.
Alladhee anqada dhahrak.

وَرَفَعْنَا لَـكَ ذِكْرَكَؕ‏
வர(f)ஃபஃனா ல(K)க (D)திக்ரக்.
Wa rafa^na laka dhikrak.

فَاِنَّ مَعَ الْعُسْرِ يُسْرًا
ஃபஇன்ன மஅல் உஸ்ரி யுஸ்ரா.
Fa 'inna ma^al-^usri yusraa.

اِنَّ مَعَ الْعُسْرِ يُسْرًا
இன்ன மஅல் உஸ்ரி யுஸ்ரா.
Inna ma^al-^usri yusraa.

فَاِذَا فَرَغْتَ فَانْصَبْۙ‏
ஃபஇ(D)தா ஃபர(gh)ஃக்(TH)த ஃபன்ஸ(B)ப்.
Fa idhaa faraghta fansab.

وَاِلٰى رَبِّكَ فَارْغَبْ‏
வஇலா ரப்பி(K)க ஃபர்(gh)ஃக(B)ப்.
Wa ilaa Rabbika farghab.
📚📚📚📚📚📚📚📚

இதுதான் குர்ஆன். { 1 }

இதுதான் குர்ஆன். { 1 }
இறைவனிடமிருந்து வந்தது குர்ஆன்.

இது அகிலத்தின் இறைவனால் அருளப்பட்டது.
எச்சரிக்கை செய்வோரில் (முஹம்மதே) நீர் ஆவதற்காக, உமது உள்ளத்தில் தெளிவான அரபு மொழியில் நம்பிக்கைக்குரிய ரூஹ் இதை இறக்கினார்.
திருக்குர்ஆன் 26:192 193, 194, 195

(இது) மிகைத்தவனும், ஞானமிக்கோனுமாகிய அல்லாஹ்விடமிருந்து அருளப்பட்ட வேதம்.
திருக்குர்ஆன் 39:1

அளவற்ற அருளாளனான நிகரற்ற அன்புடையோனிடமிருந்து (இது) அருளப்பட்டது.
திருக்குர்ஆன் 41:2
📖📖📖📖📖📖📖📖

துஆக்கள். { 19 }

துஆக்கள். { 19 }
பிஸ்மில்லாஹ் கூற மறந்து விட்டால்.

بِسْمِ اللهِ فِيْ أَوَّلِهِ وَآخِرِهِ
பிஸ்மில்லாஹி ஃபீ அவ்வலிஹி வ ஆகிரிஹி.

ஆதாரம் : நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “உங்களில் ஒருவர் உணவு சாப்பிட (ஆரம்பிக்கும்) போது பிஸ்மில்லாஹ் என்று கூறட்டும். ஆரம்பத்தில் (பிஸ்மில்லாஹ்) கூற மறந்து விட்டால் “பிஸ்மில்லாஹி ஃபீ அவ்வலிஹி வ ஆகிரிஹி” (பொருள்: ஆரம்பத்திற்காகவும் இறுதிக்காவும் அல்லாஹ்வின் பெயரைக் கூறுகிறேன்) என்று கூறட்டும்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி),
நூல்: திர்மிதி 1781
🤲🤲🤲🤲🤲🤲🤲🤲

Wednesday, June 5, 2024

மனனம் செய்வோம்(22) அத் தீன் - 95.

மனனம் செய்வோம்(22)
அத் தீன் - 95.

بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.
Bismillaahir-Rahmaanir-Raheem.

وَالتِّيْنِ وَالزَّيْتُوْنِۙ‏
வ(TH)த்தீனி வ(Z)ஸ்ஸய்(TH)தூன்.
Wat-theeni waz-zaytoon.

وَطُوْرِ سِيْنِيْنَۙ‏
வ(TH)தூரி சீனீன்.
Wa thoori seeneen.

وَهٰذَا الْبَلَدِ الْاَمِيْنِۙ‏
வஹா(D)தல் பல(D)தில் அமீன்.
Wa haadhal-baladil-'ameen.

لَقَدْ خَلَقْنَا الْاِنْسَانَ فِىْۤ اَحْسَنِ تَقْوِيْمٍ‏
ல(K)கத் (KH)ஹல(Q)க்னல் இன்ஸான ஃபீ அஹ்ஸனி (TH)த(Q)க்வீம்.
La qad khalaqnal-'insaana fee 'ahsani taqweem.

ثُمَّ رَدَدْنٰهُ اَسْفَلَ سَافِلِيْنَۙ‏
சும்ம ர(D)த(D)த்னாஹு அஸ்ஃபல ஸாஃபிலீன்.
Summa radadnaahu 'asfala saafileen.

اِلَّا الَّذِيْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ
இல்லல்ல(D)தீன ஆமனூ வஅமிலுஸ் ஸாலிஹா(D)த்தி.
Illal-ladheena aamanoo wa ^amilus-salihaati.

فَلَهُمْ اَجْرٌ غَيْرُ مَمْنُوْنٍؕ‏
ஃபலஹும் அஜ்ருன் ஃகைரு மம்நூன்.
fa lahum ajrun ghayru mamnoon.

فَمَا يُكَذِّبُكَ بَعْدُ بِالدِّيْنِ‏
ஃபமாயு(K)க(D)த்திபு(K)க பஃது பி(D)த்தீன்.
Fa maa yukadhdhibuka ba^du bid-Deen.

اَلَيْسَ اللّٰهُ بِاَحْكَمِ الْحٰكِمِيْنَ‏
அலய்ஸல்லாஹு பிஅஹ்கமில் ஹாகிமீன்.
Alaysal-laahu bi 'ahkamil-haakimeen.
📚📚📚📚📚📚📚📚

துஆக்கள். { 18 }

துஆக்கள். { 18 }
சாப்பிடும் போதும், பருகும் போதும்.

بِسْمِ اللهِ
பி(B]ஸ்மில்லாஹ்.

ஆதாரம் : நபி (ஸல்) அவர்களின் வளர்ப்பு மகனாகிய) உமர் இப்னு அபீ ஸலமா(ரலி) கூறினார்கள்.
நான் இறைத்தூதர்
(ஸல்) அவர்களின் மடியில் வளர்ந்துவந்த சிறுவனாக இருந்தேன். (ஒரு முறை) என் கை உணவுத்தட்டில் (இங்கும் அங்குமாக) அலைந்து கொண்டிருந்தது. அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என்னிடம், 'சிறுவனே! அல்லாஹ்வின் பெயரைச் சொல். உன் வலக் கரத்தால் சாப்பிடு. உன(து கை)க்கு அருகிலிருக்கும் பகுதியிலிருக்கும் எடுத்துச் சாப்பிடு!' என்று கூறினார்கள். அதன் பிறகு இதுவே நான் உண்ணும் முறையாக அமைந்தது.
ஸஹீஹ் புகாரி : 5376.
🤲🤲🤲🤲🤲🤲🤲🤲

நூல் : திர்மிதி

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். யாரிடம் இரண்டுகுணங்கள் இருக்குமோ அவர்களை அல்லாஹ் நன்றி உள்ளவராகவும் பொறுமையாளராகவும் பதிவு செய்வான்.

1. தீனுடைய விஷயத்தில் தன்னைவிட மேலானவரை பார்த்து அவனை பின்பற்றினான்.

2. உலக விஷயத்தில் தன்னைவிடவும் கீழ் நிலையில் உள்ளவரை கண்டு அவனைவிடவும் தன்னை சிறப்பாக்கிய அல்லாஹ்வை புகழ்ந்தான்.

நூல் : திர்மிதி

மனனம் செய்வோம்(21) அல் அலக் - 96.

மனனம் செய்வோம்(21)
அல் அலக் - 96.
(10முதல்19வசனங்கள்)

عَبْدًا اِذَا صَلّٰىؕ‏
அப்(D)தன் இ(D)தா ஸல்லா.
^Abdan 'idhaa sallaa.

اَرَءَيْتَ اِنْ كَانَ عَلَى الْهُدٰٓىۙ‏
அரஅய்(TH)த இன்கான அலல் ஹு(D)தா.
'Ara'ayta in kaana ^alal-hudaa.

اَوْ اَمَرَ بِالتَّقْوٰىۙ‏
அவ்அமர பி(TH)த்த(Q)க்வா.
'Aw 'amara bit-taqwaa.

اَرَءَيْتَ اِنْ كَذَّبَ وَتَوَلّٰىؕ‏
அரஅய்(TH)த இன்(K)க(D)த்த(B)ப வ(TH)தவல்லா.
'Ara'ayta 'in kadhdhaba wa tawallaa.

اَلَمْ يَعْلَمْ بِاَنَّ اللّٰهَ يَرٰىؕ‏
அலம் யஃலம் (B)பிஅன்னல்லாஹ யரா.
'Alam ya^lam bi 'annal-laaha yaraa.

كَلَّا لَٮِٕنْ لَّمْ يَنْتَهِ لَنَسْفَعًۢا بِالنَّاصِيَةِۙ‏
கல்லா லஇல்லம் யன்(TH)தஹி லநஸ்ஃபஅம் (B)பின்னாஸியாஹ்.
Kalla la 'illam yantahi la nasfa^am bin-naasiyah.

نَاصِيَةٍ كَاذِبَةٍ خَاطِئَةٍ‌
நாஸிய(TH)த்தின் கா(D)திப(TH)த்தின் (KH)ஹாதியாஹ்.
Naasiyatin kaadhibatin khaati'ah

فَلْيَدْعُ نَادِيَهٗ
ஃபல்ய(D)த்வு நா(D)தியாஹ்.
Falyad^u naadiyah.

ۙ‏سَنَدْعُ الزَّبَانِيَةَ
ஸனத்உ(Z)ஸ் (Z)ஸ(B)பானியாஹ்.
Sa nad^uz-zabaaniyah.

كَلَّا ؕ لَا تُطِعْهُ وَاسْجُدْ وَاقْتَرِبْ۩‏
கல்லா லா(TH)து(TH)திஃஹு வஸ்ஜு(D)த் வ(Q)க்(TH)தரிப்.
Kallaa laa tuti^hu wasjud waqtarib.
📚📚📚📚📚📚📚📚

Tuesday, June 4, 2024

துஆக்கள். { 17 }

துஆக்கள். { 17 }
பள்ளிவாசலிலிருந்து வெளியேறும்போது.

اَللّهُمَّ إِنِّيْ أَسْأَلُكَ مِنْ فَضْلِكَ
அல்லாஹும்ம இன்னீ அஸ்அலு(க்)க மின் ப[F]ழ்ளி(க்)க.

ஆதாரம் : அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
உங்களில் ஒருவர் பள்ளிவாசலிலிருந்து வெளியேறும்போது
"அல்லாஹும்ம இன்னீ அஸ்அலுக மின் ஃபள்லிக" (இறைவா! உன்னிடம் நான் உன் அருட்(செல்வங்)களிலிருந்து வேண்டுகிறேன்) என்று கூறட்டும்.
இதை அபூஹுமைத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
ஸஹீஹ் முஸ்லிம்:1286
🤲🤲🤲🤲🤲🤲🤲🤲

மனனம் செய்வோம்(20) அல் அலக் - 96.

மனனம் செய்வோம்(20)
அல் அலக் - 96.
(1 முதல் 9 வசனங்கள்)

بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.
Bismillaahir-Rahmaanir-Raheem.

اِقْرَاْ بِاسْمِ رَبِّكَ الَّذِىْ خَلَقَ‌ۚ‏
இ(Q)க்ரஃ பிஸ்மி ர(B)ப்பி(K)கல்ல(D)தீ (KH)ஹல(Q)க்.
'Iqra' bismi Rabbikalladhi khalaq.

خَلَقَ الْاِنْسَانَ مِنْ عَلَقٍ‌ۚ‏
(KH)ஹல(Q)கல் இன்ஸான மின் அல(Q)க்.
Khalaqal-'insaana min ^alaq.

اِقْرَاْ وَرَبُّكَ الْاَكْرَمُۙ‏
இ(Q)க்ரஃ வர(B)ப்பு(K)கள் அ(K)க்ரம்.
'Iqra' wa Rabbukal-'akram.

الَّذِىْ عَلَّمَ بِالْقَلَمِۙ‏
அல்ல(D)தீ அல்லம (B)பில்(Q)கலம்.
'Alladhee ^allama bil-qalam.

عَلَّمَ الْاِنْسَانَ مَا لَمْ يَعْلَمْؕ‏
அல்லமல் இன்ஸான மாலம் யஃலம்.
^Allamal-'insaana maa lam ya^lam.

كَلَّاۤ اِنَّ الْاِنْسَانَ لَيَطْغٰٓىۙ‏
கல்லா இன்னல் இன்ஸான லய(TH)த்(gh)ஃகா.
Kallaa 'innal-'insaana la yatghaa.

اَنْ رَّاٰهُ اسْتَغْنٰىؕ‏
அர்ரஆஹுஸ் (TH)த(gh)ஃக்னா.
'Ar-ra'aahu-staghnaa.

اِنَّ اِلٰى رَبِّكَ الرُّجْعٰىؕ‏
இன்ன இலா ர(B)ப்பி(K)கர் ருஜ்ஆ.
'Inna 'ilaa Rabbikar-ruj^aa.

اَرَءَيْتَ الَّذِىْ يَنْهٰىؕ‏
அரஅய்(TH)தல்ல(D)தீ யன்ஹா.
'Ara'aytal-ladhi yanhaa.
📚📚📚📚📚📚📚📚

Monday, June 3, 2024

துஆக்கள். { 15 }

துஆக்கள். { 15 }
சபையை முடிக்கும் போது.

سُبْحَانَكَ اللّهُمَّ وَبِحَمْدِكَ أَشْهَدُ أَنْ لاَ إِلهَ إِلاَّ أَنْتَ أَسْتَغْفِرُكَ وَأَتُوْبُ إِلَيْكَ
ஸுப்ஹான(க்)கல்லாஹும்ம வபி(B] ஹம்தி(க்)க அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லா அன்(த்)த அஸ்தக்பி[F]ரு(க்)க வஅதூபு(B] இலை(க்)க.

ஆதாரம் : ஒரு சபையை முடிக்கும் போது இந்த துஆவைக் கூறினால் (இறைவா! நீ தூயவன். உன்னைப் புகழ்கிறேன். வணக்கத்திற்குரியவன் உன்னைத் தவிர யாருமில்லை. உன்னிடமே பாவ மன்னிப்புத் தேடுகிறேன். உன்னிடமே மீள்கிறேன்).
அந்தச் சபையில் நடந்த தவறுகள் மன்னிக்கப்படாமல் இருப்பதில்லை என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.
ஆதாரம்: திர்மிதீ 3355
🤲🤲🤲🤲🤲🤲🤲🤲

அல்குர்ஆன் 23:109

“எங்கள் இறைவா! நாங்கள் உன் மீது ஈமான் கொள்கிறோம்; நீ எங்கள் குற்றங்களை மன்னித்து, எங்கள் மீது கிருபை செய்வாயாக! கிருபையாளர்களிலெல்லாம் நீ மிகவும் மேலானவன்”.
அல்குர்ஆன் 23:109

மனனம் செய்வோம்(19) அல் கத்ர் - 97.

மனனம் செய்வோம்(19)
அல் கத்ர் - 97.

بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.
Bismillaahir-Rahmaanir-Raheem.

اِنَّاۤ اَنْزَلْنٰهُ فِىْ لَيْلَةِ الْقَدْرِ 
இன்னா அன்(Z)ஸல்னாஹு ஃபீ லைல(TH)தில் (Q)க(D)த்ர்.
Innaa anzalnaahu fee laylatil-Qadr.

وَمَاۤ اَدْرٰٮكَ مَا لَيْلَةُ الْقَدْرِؕ‏
வமா அ(D)த்ரா(K)க மா லைல(TH)துல் (Q)க(D)த்ர்.
Wa maa adraaka maa laylatul-Qadr.

لَيْلَةُ الْقَدْرِخَيْرٌ مِّنْ اَلْفِ شَهْرٍؕ‏
லைல(TH)துல் (Q)க(D)த்ரி (KH)கைரும் மின் அல்ஃபி ஷஹ்ர்.
Laylatul-Qadri khayrum min alfi shahr.

تَنَزَّلُ الْمَلٰٓٮِٕكَةُ وَالرُّوْحُ فِيْهَا بِاِذْنِ رَبِّهِمْ‌ۚ مِّنْ كُلِّ اَمْرٍ 
தன(Z)ஸ்ஸலுல் மலாஇ(K)க(TH)து வர்ரூஹு ஃபீஹா (B)பிஇ(D)த்னி ரப்பிஹீம் மின் (K)குல்லி அம்ர்.
Tanazzalul-malaa'ikatu war-Roohu feeha bi'idhni Rabbihim min kulli amr.

سَلٰمٌ هِىَ حَتّٰى مَطْلَعِ الْفَجْرِ‏
ஸலாமுன் ஹிய ஹ(TH)த்தா ம(TH)த்லஇல் ஃபஜ்ர்.
Salaamun hiya hattaa matla^il-fajr.
📚📚📚📚📚📚📚📚

திருக்குர்ஆன் 49:13

முக அழகையோ, ஆடை அலங்காரங்களையோ இறைவன் பார்க்க விருப்பம் கொள்வதில்லை. உள்ளத்தில் எழும் நல்லெண்ணங்கள், இறைவனின் பொருத்தத்தைக் கருதி செய்கின்ற இறையச்ச உணர்வு இவற்றையே காண்கிறான். இதை, அடிப்படையாகக் கொண்டு நன்மைகளை ஏட்டில் பதிவு செய்கிறான்’, என்கின்றன நபி மொழிகள் .

“இறைவன் உங்கள் தோற்றத்தையோ, உங்களையோ பார்ப்பதில்லை. மாறாக உங்கள் உள்ளத்தை (இறையச்சத்தை) பார்க்கிறான்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்:அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம்)

“அல்லாஹ்விடத்தில் உங்களில் கண்ணியமிக்கவர்
உங்களில் மிகுந்த இறையச்சமுடையவர்களாகும்”. (திருக்குர்ஆன் 49:13)

துஆக்கள். { 16 }

துஆக்கள். { 16 }
பள்ளிவாசலுக்குள் நுழையும் போது.

اَللّهُمَّ افْتَحْ لِيْ أَبْوَابَ رَحْمَتِكَ
அல்லாஹும்மப்[F]தஹ் லீ அப்(B]வாப(B] ரஹ்ம(த்)தி(க்)க.

ஆதாரம் : அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
உங்களில் ஒருவர் பள்ளிவாசலுக்குள் நுழையும் போது "அல்லாஹும்ம ஃப்தஹ்லீ அப்வாப ரஹ்மதிக" (இறைவா! உன் கருணையின் வாசல்களை எனக்குத் திறந்திடுவாயாக!)
என்று கூறட்டும்.
இதை அபூஹுமைத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
ஸஹீஹ் முஸ்லிம்:1286
🤲🤲🤲🤲🤲🤲🤲🤲