நற்பண்புகள். ( 16 )
குர்ஆனில் அதிகம் கவனம் செலுத்துவீர்!
சூரியன் சாய்ந்ததிலிருந்து இரவில் இருள்கள் சூழும் வரையில் தொழுகையையும் பஜ்ரு (தொழுகையில்) குர்ஆனையும் நிலைநாட்டுவீராக! பஜ்ரு (தொழுகையில்) குர்ஆன் சாட்சி கூறப்படுவதாக இருக்கிறது.
திருக்குர்ஆன் 17:78
ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் உஹதுப் போரில் கொல்லப்பட்டவர்களை இரண்டிரண்டு பேராக ஒரே ஆடையில் கஃபனிட்டுவிட்டு, 'இவர்களில் குர்ஆனை அதிகம் அறிந்தவர் யார்?' எனக் கேட்டார்கள். இருவரில் ஒருவர் சுட்டிக்காட்டப்பட்டதும் அந்த ஒருவரின் உடலைக் கப்ரின் உட்குழியில் முதலில் வைத்துவிட்டு. 'இவர்களுக்கு மறுமை நாளில் நானே சாட்சியாக்குவேன்' எனக் கூறினார்கள். பின்பு இரத்தத்துடனேயே அடக்குமாறு கட்டளையிட்டார்கள். இவர்கள் குளிப்பாட்டப்படவில்லை; இவர்களுக்கு நபி(ஸல்) அவர்கள் தொழுகை நடத்தவுமில்லை.
ஸஹீஹ் புகாரி : 1347.
🌻🌻🌻🌻🌻🌻🌻🌻
Pages
▼
Contact Us
▼
No comments:
Post a Comment