நற்பண்புகள். ( 49 )
ஆயுதங்களைக் காட்டி மிரட்டாதீர்!
ஒவ்வொரு பாதையிலும் (மக்களை) மிரட்டுவதற்காக அமராதீர்கள்! திருக்குர்ஆன் 7:86
ஹம்மாம் பின் முனப்பிஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
இவை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து அபூஹுரைரா (ரலி) அவர்கள் எமக்கு அறிவித்த ஹதீஸாகும்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நீங்கள் உங்கள் சகோதரரை நோக்கி ஆயுதத்தைக் காட்டி சைகை செய்யவேண்டாம். ஏனெனில், உங்களுக்குத் தெரியாமலேயே ஷைத்தான் உங்கள் கையிலிருந்து அதைப் பறித்து (சகோதரரைத் தாக்கி)விடக்கூடும். அதனால் நீங்கள் நரகப் படுகுழியில் வீழ்ந்து விடுவீர்கள்.
ஸஹீஹ் முஸ்லிம்:5104
🌻🌻🌻🌻🌻🌻🌻🌻
No comments:
Post a Comment