Pages

Contact Us

Saturday, June 8, 2024

துஆக்கள். { 21 }

துஆக்கள். { 21 }
உணவளித்தவருக் காக செய்யும் துஆ.

اَللّهُمَّ بَارِكْ لَهُمْ فِيْ مَا رَزَقْتَهُمْ وَاغْفِرْ لَهُمْ وَارْحَمْهُمْ
அல்லாஹும்ம பா(B]ரிக் லஹும் பீ[F]மா ரஸக்தஹும் வஃக்பி[F]ர் லஹும் வர்ஹம்ஹும்.

ஆதாரம் :
அப்துல்லாஹ் பின் புஸ்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு அருகே உணவும் (பேரீச்சம் பழம், பாலாடை, நெய் ஆகியவற்றால் செய்யப்பட்ட "வத்பா" எனும்) ஒரு வகைப் பலகாரமும் வைத்தோம். அதிலிருந்து அவர்கள் உண்டார்கள்.
என் தந்தை, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை "எங்களுக்காகப் பிரார்த்தியுங்கள்" என்று கூறினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "இறைவா! நீ இவர்களுக்கு வழங்கிய உணவில் அருள்வளம் (பரக்கத்) புரிவாயாக! இவர்களை மன்னித்து, இவர்களுக்குக் கருணை புரிவாயாக! எனப் பிரார்த்தித்தார்கள்.
ஸஹீஹ்முஸ்லிம்:4149.
🤲🤲🤲🤲🤲🤲🤲🤲

No comments:

Post a Comment