Pages

Contact Us

Sunday, April 9, 2023

ரமலான் சிந்தனை 1️⃣6️⃣

 . 🕌🕌🕌🕌🕌🕌🕌

ரமலான் சிந்தனை 1️⃣6️⃣

பதுர் போர் 1️⃣


“ரமாளான் மாதம் பிறை 17 ல் இஸ்லாத்தில் நடந்த முதல் போர் மற்றும் மிக

முக்கியமான போர் ” பதுர் போர் ” ஆகும்!

முஸ்லீம்களும்
முஸ்லிம்களின் எதிரிகளும் கி.பி623 ம் ஆண்டு ஹிஜ்ரி 2 ம் வருடம் யுத்த களத்திற்குச் சென்று யுத்த ஆயத்தங்கள் செய்து கொண்டனர்.

இவ்யுத்தத்தில் கலந்துக் கொண்ட முஸ்லிம்கள் எண்ணிக்கை 313 பேர் என்றும் எதிரிகளின் தொகை ஏறக்குறைய 1000 பேர்

நபித் தோழர்களிடம் போதிய யுத்த சாதனங்கள் இருக்கவில்லை.

70 ஒட்டகங்களும், 60 கேடயங்களும்,

சுபைர் இப்னுல் அவ்வாம்(ரலி), மிக்தாத் இப்னு அஸ்வர் ஆகிய இருவரிடம் மட்டும் இரு குதிரைகள் இருந்தன!

எஞ்சிய அனைவரும் காலாட்படையினர் ஆவர். அவர்கள் அனைவரும் தேவையான (போர்த்)தளவாடங்கள்கூட அவர்களிடம் இருக்கவில்லை.

அன்று எதிரிகள் 900 லிருந்து 1000 பேர்வரை இருந்தனர். எஃகு வாட்கள், தலைக் கவசங்கள்,நிறைவான தளவாடங்கள், கண்கவர் குதிரைகள், மற்றும் அபரிதமான நகைநட்டுகள் ஆகியவற்றுடன் அவர்கள் வந்திருந்தனர்.

அப்போது அல்லாஹ் தன் தூதரை கண்ணியப்படுத்தினான்.
(தொடரும்)

No comments:

Post a Comment