﷽ உபதேசம் : 763
31-07-2023 திங்கட்கிழமை
ஒரு நாள் நபி (ஸல்) அவர்கள் எங்களிடம் "இன்று உங்களில் நோன்பு நோற்றிருப்பவர் யார்?" என்று கேட்க அபூபக்ர் (ரலி) அவர்கள் "நான்" என்றார்கள். "இன்றைய தினம் உங்களில் ஜனாஸாவைப் பின்தொடர்ந்து சென்றவர் யார்?, ஓர் ஏழைக்கு உணவளித்தவர் யார்?, ஒரு நோயாளியை நலம் விசாரித்தவர் யார்?" என்று தொடா்ந்து கேட்கப்பட்ட எல்லா கேள்விகளுக்கும் அபூபக்ர் (ரலி) அவர்கள் "நான்" என்றார்கள். அப்பொழுது நபி (ஸல்) அவர்கள், "எந்த மனிதர் நன்மைகளான இவை அனைத்தையும் மொத்தமாகச் செய்தாரோ அவர் சொர்க்கத்தில் நுழையாமல் இருப்பதில்லை!" என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி) முஸ்லிம் - 1865
No comments:
Post a Comment