. 🔸🔸🔸🔸🔸🔸🔸🔸
🔜 நபிமொழி 🔚
அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள், முஸ்லிம்களில் ஒருவரை உடல்நலம் விசாரிப்பதற்காகச் சென்றார்கள்.
அவர் கோழிக் குஞ்சைப் போன்று நலிந்து பலவீனத்துடன் காணப்பட்டார்.
அவரிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நீ ஏதேனும் பிரார்த்தித்து வந்தாயா? அல்லது இறைவனிடம் ஏதேனும் வேண்டி வந்தாயா?” என்று கேட்டார்கள்.
அதற்கு அந்த மனிதர் “ஆம்; நான், இறைவா! நீ மறுமையில் அளிக்கவிருக்கும் தண்டனையை முன்கூட்டி இவ்வுலகிலேயே எனக்குத் தந்துவிடு என்று பிரார்த்தித்து வந்தேன்” என்று கூறினார்.
அதைக் கேட்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அல்லாஹ் தூயவன்! ‘உன்னால் அதைத் தாங்க முடியாது’ அல்லது ‘உன்னால் அதற்கு இயலாது’ என்று கூறிவிட்டு,
“எங்கள் இறைவனே! எங்களுக்கு இவ்வுலகிலும் நன்மையை(த் தருவாயாக!), மறுமையிலும் நன்மையைத் தருவாயாக! நரகத்தின் வேதனையிலிருந்து எங்களைப் பாதுகாப்பாயாக!” என்று பிரார்த்தித்திருக்கக் கூடாதா?” என்று கேட்டார்கள்.
பிறகு அவருக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தித்தார்கள்; அவருக்கு அல்லாஹ் நிவாரணத்தை வழங்கினான்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல் : அஹ்மத் 11607
Pages
▼
Contact Us
▼
No comments:
Post a Comment