கேள்வி- 11. யாசகம் கேட்பதை விட எது சிறந்தது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் ?
A- மரணிப்பது
B- வியாபாரம் செய்வது
C- விறகு விற்று வாழ்வது
D- துஆ செய்வது
பதில் - C- விறகு விற்று வாழ்வது
حَدَّثَنَا مُوسَى، حَدَّثَنَا وُهَيْبٌ، حَدَّثَنَا هِشَامٌ، عَنْ أَبِيهِ، عَنِ الزُّبَيْرِ بْنِ الْعَوَّامِ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" لأَنْ يَأْخُذَ أَحَدُكُمْ حَبْلَهُ فَيَأْتِيَ بِحُزْمَةِ الْحَطَبِ عَلَى ظَهْرِهِ فَيَبِيعَهَا فَيَكُفَّ اللَّهُ بِهَا وَجْهَهُ، خَيْرٌ لَهُ مِنْ أَنْ يَسْأَلَ النَّاسَ أَعْطَوْهُ أَوْ مَنَعُوهُ "".
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் ஒரு கயிற்றை எடுத்துக்கொண்டு தமது முதுகில் விறகுக் கட்டைச் சுமந்து விற்(றுப் பிழைப்)பதானது, மக்களிடம் யாசகம் கேட்பதைவிடச் சிறந்ததாகும். இதன் மூலம், அவருக்கு இழிவு ஏற்படாமல் அல்லாஹ் தடுத்து விடுவான். மக்கள் அவருக்குக் கொடுக்க வும் செய்யலாம்; அல்லது மறுக்கவும் செய்யலாம்.
இதை ஸுபைர் பின் அல்அவ்வாம் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
( ஸஹீஹ் புகாரி : 1471 )
Narrated by Az-Zubair bin Al-`Awwam ( Rali ) :
The Prophet ( Sal ) said, "It is better for anyone of you to take a rope (and cut) and bring a bundle of wood (from the forest) over his back and sell it and Allah will save his face (from the Hell-Fire) because of that, rather than to ask the people who may give him or not."
( Sahih buhary : 1471 )
No comments:
Post a Comment