Thursday, November 30, 2023

குர்ஆன் வசனம் 636

﷽ குர்ஆன் வசனம் 636
30-11-2023 வியாழக்கிழமை

وَاَنَّهٗ هُوَ اَمَاتَ وَ اَحۡيَا

அவனே மரணிக்கச் செய்கிறான். உயிர்ப்பிக்கவும் செய்கிறான்.

[அல்குர்ஆன் 53:44]

உபதேசம் : 886

﷽ உபதேசம் : 886
30-11-2023 வியாழக்கிழமை

"தான் உணவளிக்கக் கடமைப் பட்டவர்களுக்கு உணவளிக்காமல் இருப்பதே ஒரு மனிதன் பாவி என்பதற்குப் போதுமானதாகும்!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ர் ( ரலி ) இப்னு ஹிப்பான்-4240

Wednesday, November 29, 2023

உபதேசம் : 885

﷽ உபதேசம் : 885
29-11-2023 புதன்கிழமை

"ஆட்டு மந்தையில் விடப்பட்ட பசியுள்ள இரு ஓநாய்களால் ஏற்படும் பாதிப்பை விட, பொருளாசையும், பதவி ஆசையும் மனிதனுடைய மாா்க்கத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : மாலிக் (ரலி) திர்மிதீ - 2376

குர்ஆன் வசனம் 635

﷽ குர்ஆன் வசனம் 635
29-11-2023 புதன்கிழமை

وَاَنَّهٗ هُوَ اَضۡحَكَ وَاَبۡكٰىۙ

அவனே சிரிக்க வைக்கிறான். அழவும் வைக்கிறான்.

[அல்குர்ஆன் 53:43]

Tuesday, November 28, 2023

உபதேசம் : 884

﷽ உபதேசம் : 884
28-11-2023 செவ்வாய்க்கிழமை

"மெல்லிய உடையணிந்து, அந்நிய ஆண்களை தன் பக்கம் ஈர்க்கக்கூடிய பெண்கள் நரகத்திற்கு உரியவர்கள்!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி) முஸ்லிம் - 5487

குர்ஆன் வசனம் 634

﷽ குர்ஆன் வசனம் 634
28-11-2023 செவ்வாய்க்கிழமை

وَاَنۡ لَّيۡسَ لِلۡاِنۡسَانِ اِلَّا مَا سَعٰىۙ‏

மனிதனுக்கு அவன் முயற்சித்தது தவிர வேறு இல்லை

[அல்குர்ஆன் 53:39]

Monday, November 27, 2023

குர்ஆன் வசனம் 633

﷽ குர்ஆன் வசனம் 633
27-11-2023 திங்கட்கிழமை

وَاَنۡ لَّيۡسَ لِلۡاِنۡسَانِ اِلَّا مَا سَعٰىۙ‏

ஒருவர் மற்றவரின் சுமையைச் சுமக்கமாட்டார்.

[அல்குர்ஆன் 53:39]

உபதேசம் : 883

﷽ உபதேசம் : 883
27-11-2023 திங்கட்கிழமை

"பரட்டைத் தலையுடைய, வீட்டுவாசல்களுக்கு வெளியே தடுத்து நிறுத்தப்படக்கூடிய எத்தனையோ பேர், அல்லாஹ்விடம் தகுதியால் உயர்ந்தவர்களாய் இருப்பாா்கள். அவர்கள் அல்லாஹ்வின் மீது ஆணையிட்டு எதையேனும் கூறுவார்களானால் அதை அல்லாஹ் உண்மையாக்குவான்!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி) முஸ்லிம் - 5483

உபதேசம் : 882

﷽ உபதேசம் : 882
26-11-2023 ஞாயிற்றுக்கிழமை

"குர்ஆனை ஓதுங்கள்! அதை ஓதுவதன் மூலம் சாப்பிடாதீர்கள்!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அப்துர் ரஹ்மான் பின் (ரலி) அஹ்மத்-14986

குர்ஆன் வசனம் 632

﷽ குர்ஆன் வசனம் 632
26-11-2023 ஞாயிற்றுக்கிழமை

فَلَا تُزَكُّوۡۤا اَنۡفُسَكُمۡ‌ ؕ هُوَ اَعۡلَمُ بِمَنِ اتَّقٰى

எனவே உங்களை நீங்களே பரிசுத்தமாகக் கருதிக் கொள்ளாதீர்கள்! (இறை) அச்சமுடையவர் யார் என்பதை அவனே நன்கறிவான்.

[அல்குர்ஆன் 53:32]

Saturday, November 25, 2023

உபதேசம் : 881

﷽ உபதேசம் : 881
25-11-2023 சனிக்கிழமை

"அல்லாஹ்வின் தூதரே! என்னை என் சமுதாயத்திற்கு இமாமாக நியமியுங்கள்!" என்று ஒருவர் கேட்டதற்கு‌, நபி (ஸல்) அவர்கள் "சரி நீ அவர்களின் இமாமாக செயல்படு! பலவீனமானவர்களை சிரமமில்லாமல் வழி நடத்து! (?பாங்கு சொல்வதற்கு கூலி கேட்காத அழைப்பாளரை ஏற்படுத்திக் கொள்!" என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : உஸ்மான் இப்னு அபுஸ் ஆஸ் (ரலி) அஹ்மத் - 15670

குர்ஆன் வசனம் 631

﷽ குர்ஆன் வசனம் 631
25-11-2023 சனிக்கிழமை

اَلَّذِيۡنَ يَجۡتَنِبُوۡنَ كَبٰٓٮِٕرَ الۡاِثۡمِ وَ الۡفَوَاحِشَ اِلَّا اللَّمَمَ‌ؕ اِنَّ رَبَّكَ وَاسِعُ الۡمَغۡفِرَةِ‌ؕ

பெரும்பாவங்களையும், வெட்கக்கேடானவற்றையும் விட்டு யார் விலகிக் கொள்கிறாரோ (அவர் மன்னிப்பு கேட்டால்) உமது இறைவன் தாராளமாக மன்னிப்பவன்.

[அல்குர்ஆன் 53:32]

Friday, November 24, 2023

குர்ஆன் வசனம் 630

﷽ குர்ஆன் வசனம் 630
24-11-2023 வெள்ளிக்கிழமை

لِيَجۡزِىَ الَّذِيۡنَ اَسَآءُوۡا بِمَا عَمِلُوۡا وَيَجۡزِىَ الَّذِيۡنَ اَحۡسَنُوۡا بِالۡحُسۡنٰى‌

தீமை செய்தோரை அவர்கள் செய்து கொண்டிருந்ததன் காரணமாகத் தண்டிப்பான். நன்மை செய்து கொண்டிருப்போருக்கு அழகிய கூலியைக் கொடுப்பான்.

[அல்குர்ஆன் 53:31]

உபதேசம் : 880

﷽ உபதேசம் : 880
24-11-2023 வெள்ளிக்கிழமை

"இறைத்தூதர் அவர்களே! நான் முதலில் இறைவழியில் போர் புரிந்துவிட்டு பிறகு இஸ்லாத்தை ஏற்கட்டுமா?" என்று ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் கேட்டதற்கு "முதலில் நீ இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு பிறகு போரிடு' என்று கூறினார்கள். எனவே, அந்த மனிதர் முதலில் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு பிறகு இறை வழியில்) போரிட்டு அதில் அவர் கொல்லப்பட்டார். இவர் "சிறிதளவே செயல்பட்டு அதிக நற்பலனைப் பெற்றுக்கொண்டார் என்று அவரைப்பற்றி நபி (ஸவ்) அவா்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : பராஉ (ரலி) புகாரி - 2808

Thursday, November 23, 2023

குர்ஆன் வசனம் 629

﷽ குர்ஆன் வசனம் 629
23-11-2023 வியாழக்கிழமை

ذٰلِكَ مَبۡلَـغُهُمۡ مِّنَ الۡعِلۡمِ‌ ؕ اِنَّ رَبَّكَ هُوَ اَعۡلَمُ بِمَنۡ ضَلَّ عَنۡ سَبِيۡلِهٖ ۙ وَهُوَ اَعۡلَمُ بِمَنِ اهۡتَدٰى‏

தனது வழியை விட்டும் தவறியவன் யார்? நேர்வழி பெற்றவன் யார்? என்பதை உமது இறைவன் நன்கறிவான்.

[அல்குர்ஆன் 53:30]

உபதேசம் : 879

﷽ உபதேசம் : 879
23-11-2023 வியாழக்கிழமை

நான் இறைவனிடம் என் தாயாருக்காகப் பாவமன்னிப்புத் தேட அனுமதி கேட்டேன். அவன் அனுமதிக்கவில்லை. அவரது அடக்கத்தலத்தைச் சந்திக்க அனுமதி கேட்டேன். அவன் என்னை அனுமதித்தான்!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி) முஸ்லிம்-1776

Wednesday, November 22, 2023

உபதேசம் : 878

﷽ உபதேசம் : 878
22-11-2023 புதன்கிழமை

"நபிமார்களின் உடல்களை தீண்டக்கூடாது என பூமிக்கு அல்லாஹ் கட்டளையிட்டுள்ளான்!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அவ்ஸ் பின் (ரலி) நஸயீ - 1357

குர்ஆன் வசனம் 628

﷽ குர்ஆன் வசனம் 628
22-11-2023 புதன்கிழமை

فَاَعۡرِضۡ عَنۡ مَّنۡ تَوَلّٰى  ۙ عَنۡ ذِكۡرِنَا وَلَمۡ يُرِدۡ اِلَّا الۡحَيٰوةَ الدُّنۡيَا

இவ்வுலக வாழ்க்கையைத் தவிர (வேறு எதையும்) நாடாமல் நமது அறிவுரையைப் புறக்கணிப்பவரை அலட்சியம் செய்வீராக!

[அல்குர்ஆன் 53:29]

Tuesday, November 21, 2023

குர்ஆன் வசனம் 627

﷽ குர்ஆன் வசனம் 627
21-11-2023 செவ்வாய்க்கிழமை

وَاِنَّ الظَّنَّ لَا يُغۡنِىۡ مِنَ الۡحَـقِّ شَيۡـًٔـاۚ‏

ஊகம் உண்மைக்கு எதிராக ஒரு பயனும் தராது.

[அல்குர்ஆன் 53:28]

உபதேசம் : 877

﷽ உபதேசம் : 877
21-11-2023 செவ்வாய்க்கிழமை

"பெற்றோருடைய அன்பில் இறைவனுடைய அன்பும் பெற்றோருடை வெறுப்பில் இறைவனுடைய வெறுப்பும் இருக்கின்றன!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் (ரலி திர்மிதீ - 1899

Monday, November 20, 2023

குர்ஆன் வசனம் 626

﷽ குர்ஆன் வசனம் 626
20-11-2023 திங்கட்கிழமை

اِنۡ هُوَ اِلَّا وَحۡىٌ يُّوۡحٰىۙ

அ(வர் பேசுவ)து அறிவிக்கப்படும் செய்தியைத் தவிர வேறில்லை.

[அல்குர்ஆன் 53:4]

உபதேசம் : 876

﷽ உபதேசம் : 876
20-11-2023 திங்கட்கிழமை

"திருடர்களில் மிகவும் மோசமான திருடன் தொழுகையில் திருடுபவனே!"என்று நபி (ஸல்) அவர்கள் கூறியபொழுது, 'தொழுகையில் எப்படி ஒருவன் திருடுவான்?‘ என்று தோழா்கள் கேட்டனா். "தனது தொழுகையின் ருகூவுவையும், ஸுஜுதையும் முழுமையாகச் செய்யாதவனே அந்தத் திருடன்!" என்று நபி (ஸல்) அவா்கள் பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர் : அபூ கதாதா (ரலி) அஹ்மத் - 22040

Sunday, November 19, 2023

உபதேசம் : 875

﷽ உபதேசம் : 875
19-11-2023 ஞாயிற்றுக்கிழமை

"முஸ்லிம்களின் விவகாரங்களை ஒருவரிடம் பொறுப்பு ஒப்படைத்திருக்கும் நிலையில் அவர், மக்களின் அவசியத் தேவைகளையும் வறுமையையும் கண்டுகொள்ளாமல் இருந்தால் அவருடைய அவசியத் தேவைகளையும் வறுமையையும் அல்லாஹ் கண்டுகொள்ளமாட்டான்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : முஆவியா (ரலி) அபூதாவூத் - 2559

குர்ஆன் வசனம் 625

﷽ குர்ஆன் வசனம் 625
19-11-2023 ஞாயிற்றுக்கிழமை

وَسَبِّحۡ بِحَمۡدِ رَبِّكَ حِيۡنَ تَقُوۡمُۙ‏

நீர் எழும் நேரத்தில் உமது இறைவனைப் புகழ்ந்து போற்றுவீராக!

[அல்குர்ஆன் 52:48]

Saturday, November 18, 2023

உபதேசம் : 874

﷽ உபதேசம் : 874
18-11-2023 சனிக்கிழமை

"குடிமக்களில் சிலரை நிர்வகிக்கும் பொறுப்பை அல்லாஹ் ஓர் அடியாருக்கு வழங்கியிருக்க, அவர் அந்த மக்களை ஏமாற்றி மோசடி செய்த நிலையிலேயே மரணித்தால், அவருக்கு அல்லாஹ் சொர்க்கத்தைத் தடை செய்யாமல் இருப்பதில்லை!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : மஃகில் பின் யஸார் (ரலி) முஸ்லிம் : 227

குர்ஆன் வசனம் 624

குர்ஆன் வசனம் 624
18-11-2023 சனிக்கிழமை

وَالَّذِيۡنَ اٰمَنُوۡا وَاتَّبَعَتۡهُمۡ ذُرِّيَّتُهُمۡ بِاِيۡمَانٍ اَلۡحَـقۡنَا بِهِمۡ ذُرِّيَّتَهُمۡ وَمَاۤ اَلَـتۡنٰهُمۡ مِّنۡ عَمَلِهِمۡ مِّنۡ شَىۡءٍ‌ؕ

யார் நம்பிக்கை கொண்டு அவர்களின் சந்ததிகளும் நம்பிக்கை கொள்வதில் அவர்களைப் பின்பற்றினார்களோ அவர்களுடன் அவர்களின் சந்ததிகளைச் சேர்ப்போம். அவர்களின் செயல்களில் எதையும் குறைக்க மாட்டோம்.

[அல்குர்ஆன் 52:21]

உபதேசம் : 873

﷽ உபதேசம் : 873
17-11-2023 வெள்ளிக்கிழமை

"அழகிய முறையில் கடனை திருப்பிச் செலுத்துபவரே உங்களில் சிறந்தவர்!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி) புகாரி - 2390

குர்ஆன் வசனம் 623

﷽ குர்ஆன் வசனம் 623
17-11-2023 வெள்ளிக்கிழமை

فَوَيۡلٌ لِّـلَّذِيۡنَ كَفَرُوۡا مِنۡ يَّوۡمِهِمُ الَّذِىۡ يُوۡعَدُوۡنَ

(ஏக இறைவனை) மறுப்போருக்கு அவர்கள் எச்சரிக்கப்பட்ட நாளில் கேடு உள்ளது.

[அல்குர்ஆன் 51:60]

Thursday, November 16, 2023

குர்ஆன் வசனம் 622

﷽ குர்ஆன் வசனம் 622
16-11-2023 வியாழக்கிழமை

فَاِنَّ لِلَّذِيۡنَ ظَلَمُوۡا ذَنُوۡبًا مِّثۡلَ ذَنُوۡبِ اَصۡحٰبِهِمۡ فَلَا يَسۡتَعۡجِلُوۡنِ

அநீதி இழைத்தோருக்கு அவர்களின் முன் சென்ற சகாக்களின் தண்டனையைப் போல் தண்டனை உள்ளது.

[அல்குர்ஆன் 51:59]

உபதேசம் : 872

﷽ உபதேசம் : 872
16-11-2023 வியாழக்கிழமை

"தமக்குக் கட்டளையிடப்பட்ட தர்மத்திற்காக முழுமையாகவும் மனப்பூர்வமாகவும்ம் செலவிடுகின்ற, நம்பகமான கருவூலக்காப்பாளர் தர்மம் செய்பவர்களில் ஒருவராவார்!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூ மூசா (ரலி) புகாரி-2319

Wednesday, November 15, 2023

குர்ஆன் வசனம் 621

﷽ குர்ஆன் வசனம் 621
15-11-2023 புதன்கிழமை

مَاۤ اُرِيۡدُ مِنۡهُمۡ مِّنۡ رِّزۡقٍ وَّمَاۤ اُرِيۡدُ اَنۡ يُّطۡعِمُوۡنِ

நான் அவர்களிடம் செல்வத்தை நாடவில்லை. அவர்கள் எனக்கு உணவளிப்பதையும் நான் நாடவில்லை.

[அல்குர்ஆன் 51:57]

உபதேசம் : 871

﷽ உபதேசம் : 871
15-11-2023 புதன்கிழமை

"ஆதமுடைய மகனே! நீ பிறருக்குக்கொடு. உனக்கு நான் கொடுப்பேன்" என்று வளமும் உயா்வும் மிக்க அல்லாஹ் கூறுவதாக நபி (ஸல்) அவர்கள் கூறினாா்கள்.

அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி) முஸ்லிம் - 1815

Tuesday, November 14, 2023

உபதேசம் : 870

﷽ உபதேசம் : 870
14-11-2023 செவ்வாய்க்கிழமை

நபி (ஸல்) அவர்களிடம் நன்மை மற்றும் தீமை பற்றிக் கேட்டதற்கு, “நன்மை என்பது நற்பண்பாகும்! எந்தச் செயல் குறித்து உனது உள்ளத்தில் நெருடல் ஏற்படுவதுடன், அதை மக்கள் தெரிந்துகொள்வதை நீ வெறுப்பாயோ அதுவே தீமையாகும்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : நவ்வாஸ் பின் சம்ஆன் (ரலி) முஸ்லிம் - 4992

குர்ஆன் வசனம் 620

﷽ குர்ஆன் வசனம் 620
14-11-2023 செவ்வாய்க்கிழமை

وَمَا خَلَقۡتُ الۡجِنَّ وَالۡاِنۡسَ اِلَّا لِيَعۡبُدُوۡنِ

ஜின்னையும், மனிதனையும் என்னை வணங்குவதற்காகவே தவிர (வேறு எதற்காகவும்) நான் படைக்கவில்லை.

[அல்குர்ஆன் 51:56]

Monday, November 13, 2023

உபதேசம் : 869

﷽ உபதேசம் : 869
13-11-2023 திங்கட்கிழமை

"வெள்ளை ஆடையை அணியுங்கள!. அது மிகத் தூய்மையானதும் அழகு நிறைந்ததுமாகும்!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஸமுரா பின் ஜுன்துப் (ரலி) திர்மிதீ - 2734

குர்ஆன் வசனம் 619

﷽குர்ஆன் வசனம் 619
13-11-2023 திங்கட்கிழமை

وَّذَكِّرۡ فَاِنَّ الذِّكۡرٰى تَنۡفَعُ الۡمُؤۡمِنِيۡنَ

அறிவுரை கூறுவீராக! அந்த அறிவுரை நம்பிக்கை கொண்டோருக்குப் பயன் தரும்.

[அல்குர்ஆன் 51:55]

குர்ஆன் வசனம் 618

﷽ குர்ஆன் வசனம் 618
12-11-2023 ஞாயிற்றுக்கிழமை

اٰخِذِيۡنَ مَاۤ اٰتٰٮهُمۡ رَبُّهُمۡ‌ؕ اِنَّهُمۡ كَانُوۡا قَبۡلَ ذٰلِكَ مُحۡسِنِيۡنَؕ‏

(இறைவனை) அஞ்சியோர் இறைவன் தங்களுக்கு வழங்கியதைப் பெற்றுக் கொண்டு சொர்க்கச் சோலைகளிலும், நீரூற்றுகளிலும் இருப்பார்கள். அவர்கள் இதற்கு முன் நன்மை செய்வோராக இருந்தனர்.

[அல்குர்ஆன் 51:15-16]

உபதேசம் : 868

﷽ உபதேசம் : 868
12-11-2023 ஞாயிற்றுக்கிழமை

"தாம் கேட்பதை மக்கள் விரும்பாத நிலையில்’ அல்லது “தம்மைக் கண்டு மக்கள் வெருண்டோடும் நிலையில்’ யார் மற்றவா்களுடைய உரையாடைலைக் காது தாழ்த்தி ஒட்டுக் கேட்கின்றாரோ அவரது காதில் மறுமை நாளில் ஈயம் உருக்கி ஊற்றப்படும்!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி) புகாரி - 7042

Saturday, November 11, 2023

உபதேசம் : 867

﷽ உபதேசம் : 867
11-11-2023 சனிக்கிழமை

"பெற்றோரை நோவினை செய்பவனும் சூனியத்தை உண்மையென்று நம்புபவனும் நிரந்தரமாக மது அருந்தபவனும் விதியை மறுப்பவனும் சொர்க்கம் செல்ல மாட்டார்கள்!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூ தர்தா (ரலி) அஹ்மத் : 26212

குர்ஆன் வசனம் 617

﷽ குர்ஆன் வசனம் 617
11-11-2023 சனிக்கிழமை

قُتِلَ الۡخَـرّٰصُوۡنَۙ‏

பொய்யர்கள் அழிவார்கள்.

[அல்குர்ஆன் 51:10]

உபதேசம் : 866

﷽ உபதேசம் : 866
10-11-2023 வெள்ளிக்கிழமை

"ஆதமுடைய மகன் (மனிதன்) காலையில் எழுந்தவுடன் மற்ற உறுப்புகள் அனைத்தும் நாவைக் கண்டு பயப்படுகின்றன. அவை நாவை நோக்கி "நாவே! எங்கள் விஷயத்தில் அல்லாஹ்வை பயந்து கொள்! நாங்கள் உன்னைச் சாாந்துள்ளோம். நீ நேராக இருந்தால் நாங்களும் நேராக இருப்போம்.நீ கோணலாகி விட்டால் நாங்களும் கோணலாகி விடுவோம்!' எனக் கூறுகின்றன" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூ ஸயீத் அல்குத்ரீ (ரலி) திர்மிதீ - 2407

குர்ஆன் வசனம் 616

﷽ குர்ஆன் வசனம் 616
10-11-2023 வெள்ளிக்கிழமை

نَحۡنُ اَعۡلَمُ بِمَا يَقُوۡلُوۡنَ‌ وَمَاۤ اَنۡتَ عَلَيۡهِمۡ بِجَـبَّارٍ‌ فَذَكِّرۡ بِالۡقُرۡاٰنِ مَنۡ يَّخَافُ وَعِيۡدِ

நீர் அவர்கள் மீது அடக்குமுறை செய்பவர் அல்லர். எனது எச்சரிக்கையை அஞ்சுபவருக்கு குர்ஆன் மூலம் அறிவுரை கூறுவீராக!

[அல்குர்ஆன் 50:45]

Thursday, November 9, 2023

குர்ஆன் வசனம் 615

﷽ குர்ஆன் வசனம் 615
09-11-2023 வியாழக்கிழமை

وَلَقَدۡ خَلَقۡنَا السَّمٰوٰتِ وَالۡاَرۡضَ وَمَا بَيۡنَهُمَا فِىۡ سِتَّةِ اَيَّامٍ‌ۖ وَّمَا مَسَّنَا مِنۡ لُّغُوۡبٍ

வானங்களையும், பூமியையும், அவற்றுக்கு இடைப்பட்டதையும் ஆறு நாட்களில் படைத்தோம். நமக்கு எந்தக் களைப்பும் ஏற்படவில்லை.

[அல்குர்ஆன் 50:38]

உபதேசம் : 865

﷽ உபதேசம் : 865
09-11-2023 வியாழக்கிழமை

"உங்களில் ஒருவர் நீண்ட நாட்கள் கழித்து ஊர் திரும்பினால் இரவு நேரத்தில் திடீரெனத் தம் வீட்டாரிடம் செல்ல வேண்டாம்!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஜாபிர் இப்னு அப்தில்லாஹ் (ரலி) புகாரி - 5244

குர்ஆன் வசனம் 614

﷽ குர்ஆன் வசனம் 614
08-11-2023 புதன்கிழமை

اِنَّ فِىۡ ذٰلِكَ لَذِكۡرٰى لِمَنۡ كَانَ لَهٗ قَلۡبٌ اَوۡ اَلۡقَى السَّمۡعَ وَهُوَ شَهِيۡدٌ

யாருக்கு உள்ளம் உள்ளதோ, அல்லது கவனமாகச் செவியுறுகிறாரோ அவருக்கு இதில் படிப்பினை உள்ளது.

[அல்குர்ஆன் 50:37]

உபதேசம் : 864

﷽ உபதேசம் : 864
08-11-2023 புதன்கிழமை

"வயதான பெற்றோரை அடைந்திருந்தும் யார் சொர்க்கம் செல்லவில்லையோ அவருடைய மூக்கு மண்ணைக் கவ்வட்டும்!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி) முஸ்லிம் - 4627

Tuesday, November 7, 2023

உபதேசம் : 863

﷽ உபதேசம் : 863
07-11-2023 செவ்வாய்க்கிழமை

"தனது உள்ளத்தை எதிர்த்துப் போரிடுபவனே போராளியாவான்!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஃபுழாலத் பின் உபைத் (ரலி) திர்மிதீ - 1546

குர்ஆன் வசனம் 613

﷽ குர்ஆன் வசனம் 613
07-11-2023 செவ்வாய்க்கிழமை

وَاُزۡلِفَتِ الۡجَـنَّةُ لِلۡمُتَّقِيۡنَ غَيۡرَ بَعِيۡدٍ

(இறைவனை) அஞ்சியோருக்கு சொர்க்கம் தொலைவின்றி நெருக்கத்தில் கொண்டு வரப்படும்.

[அல்குர்ஆன் 50:31]

Monday, November 6, 2023

குர்ஆன் வசனம் 612

﷽ குர்ஆன் வசனம் 612
06-11-2023 திங்கட்கிழமை

اِذۡ يَتَلَقَّى الۡمُتَلَقِّيٰنِ عَنِ الۡيَمِيۡنِ وَعَنِ الشِّمَالِ قَعِيۡدٌ
مَا يَلۡفِظُ مِنۡ قَوۡلٍ اِلَّا لَدَيۡهِ رَقِيۡبٌ عَتِيۡدٌ

வலப்புறமும், இடப்புறமும் எடுத்தெழுதும் இருவர் அமர்ந்து எடுத்தெழுதும்போது, அவன் எந்தச் சொல்லைப் பேசினாலும் அவனிடம் கண்காணிக்கும் எழுத்தாளர் இல்லாமல் இருப்பதில்லை.

[அல்குர்ஆன் 50:17-18]

உபதேசம் : 862

﷽ உபதேசம் : 862
06-11-2023 திங்கட்கிழமை

"உங்களுடைய கைகளாலும் நாவுகளாலும் பொருட்களாலும் ஜிஹாத் செய்யுங்கள்!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அனஸ் (ரலி) நஸயீ - 3141

குர்ஆன் வசனம் 611

﷽ குர்ஆன் வசனம் 611
05-11-2023 ஞாயிற்றுக்கிழமை

وَلَقَدۡ خَلَقۡنَا الۡاِنۡسَانَ وَنَعۡلَمُ مَا تُوَسۡوِسُ بِهٖ نَفۡسُهٗ ۖۚ وَنَحۡنُ اَقۡرَبُ اِلَيۡهِ مِنۡ حَبۡلِ الۡوَرِيۡدِ

மனிதனைப் படைத்தோம். அவனது மனம் எதை எண்ணுகிறது என்பதையும் அறிவோம். நாம் அவனுக்குப் பிடரி நரம்பை விட மிகவும் நெருக்கமாக இருக்கிறோம்.

[அல்குர்ஆன் 50:16]

உபதேசம் : 861

 ﷽ உபதேசம் : 861

05-11-2023 ஞாயிற்றுக்கிழமை

"அநியாயக்கார அரசனிடம் நீதியைச் சொல்வதே சிறந்த ஜிஹாத்!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூ ஸயீத் அல்குத்ரீ (ரலி) அபூதாவூத் - 3781

Saturday, November 4, 2023

குர்ஆன் வசனம் 609

﷽ குர்ஆன் வசனம் 609
03-11-2023 வெள்ளிக்கிழமை


قُلۡ اَ تُعَلِّمُوۡنَ اللّٰهَ بِدِيۡـنِكُمۡ ؕ وَاللّٰهُ يَعۡلَمُ مَا فِى السَّمٰوٰتِ وَمَا فِى الۡاَرۡضِ‌ؕ

உங்கள் மார்க்கத்தை அல்லாஹ்வுக்குக் கற்றுக் கொடுக்கிறீர்களா? வானங்களிலும், பூமியிலும் உள்ளதை அல்லாஹ் அறிவான்.

[அல்குர்ஆன் 49:16]

உபதேசம் : 859

﷽ உபதேசம் : 859
03-11-2023 வெள்ளிக்கிழமை

"ஓர் ஆண் மற்றோர் ஆணின் மறைவிடத்தைப் பார்க்க வேண்டாம்! ஒரு பெண் மற்றோர் பெண்ணின் மறைவிடத்தைப் பார்க்க வேண்டாம்! ஒரே ஆடைக்குள் இரு ஆண்கள் சேர்ந்து அல்லது இரு பெண்கள் சேர்ந்து படுக்க வேண்டாம்!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூசயீத் அல்குத்ரீ (ரலி) முஸ்லிம் - 565

குர்ஆன் வசனம் 610

﷽ குர்ஆன் வசனம் 610
04-11-2023 சனிக்கிழமை

அல்லாஹ்வே நம்பிக்கை கொள்ள உங்களுக்கு வழிகாட்டி உங்களுக்கு உபகாரம் புரிந்துள்ளான்

[அல்குர்ஆன் 49:17]

உபதேசம் : 860

﷽ உபதேசம் : 860
04-11-2023 சனிக்கிழமை
"ஒரு பெண் மற்றொரு பெண்ணை உடலில் ஆடை எதுவும் இல்லாத நிலையில் கட்டித் தழுவவேண்டாம். பின்னர் அவளைப் பற்றி இவள் தன் கணவனிடம் அவளை அவன் நேரில் பார்ப்பதைப் போன்று வர்ணணை செய்ய வேண்டாம்!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி) புகாரி - 5240

Thursday, November 2, 2023

குர்ஆன் வசனம் 608

﷽ குர்ஆன் வசனம் 608
02-11-2023 வியாழக்கிழமை

اِنَّمَا الۡمُؤۡمِنُوۡنَ الَّذِيۡنَ اٰمَنُوۡا بِاللّٰهِ وَرَسُوۡلِهٖ ثُمَّ لَمۡ يَرۡتَابُوۡا وَجَاهَدُوۡا بِاَمۡوَالِهِمۡ وَاَنۡفُسِهِمۡ فِىۡ سَبِيۡلِ اللّٰهِ‌ ؕ اُولٰٓٮِٕكَ هُمُ الصّٰدِقُوۡنَ‏

அல்லாஹ்வையும், அவனது தூதரையும் நம்பி பின்னர் சந்தேகம் கொள்ளாது, தமது பொருட்களாலும், உயிர்களாலும் அல்லாஹ்வின் பாதையில் தியாகம் செய்வோரே நம்பிக்கை கொண்டவர்கள். அவர்களே உண்மையாளர்கள்.

[அல்குர்ஆன் 49:15]

உபதேசம் : 858

﷽ உபதேசம் : 858
02-11-2023 வியாழக்கிழமை

கிராமவாசி ஒருவர் வந்து உளூ செய்யும் முறையைப் பற்றி கேட்டதற்கு, நபி (ஸல்) அவர்கள், "மூன்று, மூன்று தடவைதான்! இது தான் உளூ. யார் இதை விட அதிகப்படுத்துகிறாரோ அவர் மாறு செய்துவிட்டார், வரம்பு மீறிவிட்டார். அநீதி இழைத்து விட்டார்!" என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் :அம்ர் இப்னு ஷுஐப் (ரலி) இப்னுமாஜா - 440

Wednesday, November 1, 2023

உபதேசம் : 857

﷽ உபதேசம் : 857
01-11-2023 புதன்கிழமை

நபி (ஸல்) அவர்கள் குளிப்பு கடமையாக இருக்கும் நிலையில் உறங்க விரும்பினால் தொழுகைக்காக உளூ செய்வதைப் போன்று உளு செய்து கொள்வார்கள்!

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) முஸ்லிம் - 512

குர்ஆன் வசனம் 607

﷽ குர்ஆன் வசனம் 607
01-11-2023 புதன்கிழமை

وَاِنۡ تُطِيۡعُوا اللّٰهَ وَرَسُوۡلَهٗ لَا يَلِتۡكُمۡ مِّنۡ اَعۡمَالِكُمۡ شَيۡـًٔــا‌

அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் நீங்கள் கட்டுப்பட்டால் உங்கள் செயல்களில் எதையும் அவன் குறைத்திட மாட்டான்.

[அல்குர்ஆன் 49:14]