இஸ்லாம். ( 1 )
இஸ்லாம் எளிதான மார்க்கம்.يُرِيدُ اللَّهُ بِكُمُ الْيُسْرَ وَلَا يُرِيدُ بِكُمُ الْعُسْرَ
அல்லாஹ் உங்களுக்கு எளிதானதையே நாடுகிறான். சிரமமானதை உங்களுக்கு நாடமாட்டான்.
திருக்குர்ஆன் 2:185
يُرِيدُ اللَّهُ أَن يُخَفِّفَ عَنكُمْ ۚ وَخُلِقَ الْإِنسَانُ ضَعِيفًا
அல்லாஹ் உங்களுக்கு (சட்டங்களை) எளிதாக்கவே விரும்புகிறான். (ஏனெனில்) மனிதன் பலவீனனாகப் படைக்கப்பட்டுள்ளான்.
திருக்குர்ஆன் 4:28
وَأَمَّا مَنْ آمَنَ وَعَمِلَ صَالِحًا فَلَهُ جَزَاءً الْحُسْنَىٰ ۖ وَسَنَقُولُ لَهُ مِنْ أَمْرِنَا يُسْرًا
நம்பிக்கை கொண்டு நல்லறம் செய்வோருக்கு அழகிய கூலி உண்டு. நமது கட்டளைகளில் எளிதானதை அவருக்குக் கூறுவோம்.
திருக்குர்ஆன் 18:88
فَإِنَّمَا يَسَّرْنَاهُ بِلِسَانِكَ لَعَلَّهُمْ يَتَذَكَّرُونَ
(முஹம்மதே!) அவர்கள் படிப்பினை பெறவே இதை உமது மொழியில் எளிதாக்கியுள்ளோம்.
திருக்குர்ஆன் 44:58
وَنُيَسِّرُكَ لِلْيُسْرَىٰ
(முஹம்மதே!) எளியதை உமக்கு மேலும் எளிதாக்குவோம்.
திருக்குர்ஆன் 87:8
No comments:
Post a Comment