Monday, May 29, 2023

அல்லாஹும்ம என்பதன் சிறப்பு. ( 38 )

 அல்லாஹும்ம என்பதன் சிறப்பு. ( 38 )


اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْعَجْزِ وَالْكَسَلِ وَالْجُبْنِ وَالْهَرَمِ، وَأَعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ الْمَحْيَا وَالْمَمَاتِ، وَأَعُوذُ بِكَ مِنْ عَذَابِ الْقَبْرِ

அல்லாஹும்ம இன்னீ அவூது பி[B](க்)க மினல் அஜ்ஸி வல் கஸலி வல் ஜுபு[B]னி வல்ஹரமி வஅவூது பி[B](க்)க மின் பி[F]த்ன(த்)தில் மஹ்யா வல் மமாதி வஅவூது பி[B](க்)க மின் அதாபி[B]ல் கப்[B]ரி.

பொருள் : நான் இயலாமையிலி ருந்தும், சோம்பலிலிருந்தும், கோழைத்தனத்திலிருந்தும், மூப்பிலிருந்தும் பாதுகாப்புக் கோருகிறேன். மேலும், வாழ்வின் சோதனையிலிருந்தும் இறப்பின் சோதனையிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன். மேலும், புதைகுழியின் வேதனை யிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன்.

சட்டம் : நபி (ஸல்) அவர்கள் இந்த ஏழு விஷயங்களையும்
குறிப்பிட்டு, பிரார்த்திக்கும் வழக்கமுடையோராக இருந்தார்கள்.

ஆதாரம் : அனஸ் இப்னு மாலிக்(ரலி) கூறினார். நபி(ஸல்) அவர்கள், 'இறைவா! நான் இயலாமையிலிருந்தும், சோம்பலிலிருந்தும், கோழைத்தனத்திலிருந்தும், மூப்பிலிருந்தும் பாதுகாப்புக் கோருகிறேன். மேலும், வாழ்வின் சோதனையிலிருந்தும் இறப்பின் சோதனையிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன். மேலும், புதைகுழியின் வேதனை யிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன்' என்று பிரார்த்திப்பது வழக்கம்.
ஸஹீஹ் புகாரி : 2823.

No comments:

Post a Comment