Tuesday, May 30, 2023

அல்லாஹும்ம என்பதன் சிறப்பு. ( 43 )

 அல்லாஹும்ம என்பதன் சிறப்பு. ( 43 )


اَللّهُمَّ خَلَقْتَ نَفْسِيْ وَأَنْتَ تَوَفَّاهَا لَكَ مَمَاتُهَا وَمَحْيَاهَا إِنْ أَحْيَيْتَهَا فَاحْفَظْهَا وَإِنْ أَمَتَّهَا فَاغْفِرْ لَهَا اَللّهُمَّ إِنِّيْ أَسْأَلُكَ الْعَافِيَةَ

அல்லஹும்ம! கலக்த்த நஃப்சீ, வ அன்த்த தவஃப்பாஹா, லக்க மமாத்துஹா வ மஹ்யாஹா, இன் அஹ்யய்த்தஹா ஃபஹ்ஃபழ்ஹா, வ இன் அமத்தஹா ஃபக்ஃபிர் லஹா, அல்லஹும்ம! இன்னீ அஸ்அலுக்கல் ஆஃபியா.

பொருள் : இறைவா! நீயே என் உயிரைப் படைத்தாய். நீயே அதனைக் கைப்பற்றிக்கொள்கிறாய். அதன் இறப்பும் வாழ்வும் உனக்கே உரியன. அதை நீ உயிரோடு விட்டுவைத்தால் அதை நீ காப்பாற்றுவாயாக! அதை நீ இறக்கச் செய்து விட்டால் அதற்கு மன்னிப்பு வழங்குவாயாக! இறைவா! உன்னிடமே நான் ஆரோக்கியத்தை வேண்டுகிறேன்.

சட்டம் : வலது புறமாகச் சாய்ந்து படுத்த பின், இந்த துஆவை ஓத வேண்டும்.

ஆதாரம் : நபி (ஸல்) அவர்கள் ஒருவர் உறங்கச் செல்லும்போது "அல்லஹும்ம! கலக்த்த நஃப்சீ, வ அன்த்த தவஃப்பாஹா, லக்க மமாத்துஹா வ மஹ்யாஹா, இன் அஹ்யய்த்தஹா ஃபஹ்ஃபழ்ஹா, வ இன் அமத்தஹா ஃபக்ஃபிர் லஹா, அல்லஹும்ம! இன்னீ அஸ்அலுக்கல் ஆஃபியா" என்று கூறும்படி உத்தரவிட்டார்கள்.
அப்போது அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடம் ஒரு மனிதர், "இதைத் தாங்கள் தங்கள் தந்தை உமர் (ரலி) அவர்களிடமிருந்து செவியுற்றீர்களா?" என்று கேட்டார்கள். அதற்கு அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள், "உமர் (ரலி) அவர்களைவிடச் சிறந்தவரான அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து செவியுற்றேன்" என்று சொன்னார்கள்.
ஸஹீஹ் முஸ்லிம் : 5253.

No comments:

Post a Comment