﷽ குர்ஆன் வசனம் 698
31-01-2024 புதன்கிழமை
فَمَنۡ اَسۡلَمَ فَاُولٰٓٮِٕكَ تَحَرَّوۡا رَشَدًا
இஸ்லாத்தை ஏற்போர் நேர்வழியைத் தேடிக் கொண்டனர்.
[அல்குர்ஆன் 72:14]
Wednesday, January 31, 2024
குர்ஆன் வசனம் 698
உபதேசம் 948
﷽ உபதேசம் 948
31-01-2024 புதன்கிழமை
நபி (ஸல்) அவர்கள் சில நேரங்களில் குர்ஆன் ஓதி, சஜ்தா வசனத்தைக் கடந்து செல்லுகையில் எங்களுடன் சேர்ந்து சஜ்தாச் செய்வார்கள். அப்பொழுது இட நெருக்கடி ஏற்பட்டு எங்களில் ஒருவருக்கு சஜ்தாச் செய்யக் கூட இடம் கிடைக்காது. தொழுகை அல்லாத நேரங்களில் இவ்வாறு நடைபெற்றது.
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி) முஸ்லிம்-1006
Tuesday, January 30, 2024
குர்ஆன் வசனம் 697
﷽ குர்ஆன் வசனம் 697
30-01-2024 செவ்வாய்க்கிழமை
அந்நாளின் வேதனைக்கு ஈடாகத் தனது சந்ததிகளையும், மனைவியையும், சகோதரனையும், தன்னை அரவணைத்த உறவினர்களையும், பூமியில் உள்ள அனைவரையும், பணயம் வைத்து பின்னர் விடுதலையாகலாம் என்று குற்றவாளி விரும்புவான்.
[அல்குர்ஆன் 70:11-14]
உபதேசம் 947
﷽ உபதேசம் 947
30-01-2024 செவ்வாய்க்கிழமை
"படுக்கைக்கு செல்வதற்கு முன் ஆயத்துல் குர்ஸியை ஓதுகின்றவர்கள் விடியும் வரை வானவர்களுடைய பாதுகாப்பில் இருக்கின்றனா்!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி) புகாரி - 2311
Monday, January 29, 2024
உபதேசம் 946
﷽ உபதேசம் 946
29-01-2024 திங்கட்கிழமை
நபி (ஸல்) அவர்கள் எல்லா நிலைகளிலும் அல்லாஹ்வை நினைவு கூர்பவர்களாய் இருந்தார்கள்!
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) முஸ்லிம்-608
குர்ஆன் வசனம் 696
﷽ குர்ஆன் வசனம் 696
29-01-2024 திங்கட்கிழமை
وَلَا يَسۡـَٔـلُ حَمِيۡمٌ حَمِيۡمًا ۖۚ ﴿۱۰﴾
எந்த நண்பனும் நண்பனை விசாரிக்க மாட்டான்.
[அல்குர்ஆன் 70:10]
Sunday, January 28, 2024
உபதேசம் 945
﷽ உபதேசம் 945
28-01-2024 ஞாயிற்றுக்கிழமை
நபி (ஸல்) அவர்கள் பள்ளிவாசலில் இஃதிகாஃபில் இருந்தபொழுது "அறையிலுள்ள தொழுகை விரிப்பை எடு!" என்று என்னிடம் சொன்னார்கள். அதற்கு நான், "எனக்கு மாதவிடாய் ஏற்பட்டுள்ளதே!" என்றேன். அதற்கு அவர்கள், "மாதவிடாய் என்பது உன் கையில் ஒட்டிக்கொண்டிருக்கவில்லை!" என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) முஸ்லிம்-502
குர்ஆன் வசனம் 695
﷽ குர்ஆன் வசனம் 695
28-01-2024 ஞாயிற்றுக்கிழமை
وَمَا هُوَ اِلَّا ذِكۡرٌ لِّلۡعٰلَمِيۡنَ
இது அகிலத்தாருக்கு அறிவுரை தவிர வேறு இல்லை.
[அல்குர்ஆன் 68:52]
Saturday, January 27, 2024
உபதேசம் 943
﷽ உபதேசம் 943
26-01-2024 வெள்ளிக்கிழமை "1) மேற்கிலிருந்து சூரியன் உதயமாகுதல். 2) தஜ்ஜால் தோன்றுதல் 3) பூமியிலிருந்து வெளிப்படும் அதிசயப்பிராணி ஆகிய மூன்று அடையாளங்கள் ஏற்படுவதற்கு முன்பு ஈமான் கொள்ளாத அல்லது ஈமான் கொண்டிருந்தும் நன்மை ஏதும் செய்யாத மனிதா் அப்பொழுது ஈமான் கொள்வது பயனளிக்காது" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி) முஸ்லிம்-249
குர்ஆன் வசனம் 694
﷽ குர்ஆன் வசனம் 694
27-01-2024 சனிக்கிழமை اِنَّ لِلۡمُتَّقِيۡنَ عِنۡدَ رَبِّهِمۡ جَنّٰتِ النَّعِيۡمِ (இறைவனை) அஞ்சியோருக்கு அவர்களின் இறைவனிடம் இன்பமான சொர்க்கச் சோலைகள் உண்டு. [அல்குர்ஆன் 68:34]
உபதேசம் 944
﷽ உபதேசம் 944
27-01-2024 சனிக்கிழமை "உங்களில் ஒருவர் இயற்கைக்கடனை நிறைவேற்ற அமர்ந்தால் அவர் கிப்லாவை முன்னோக்கவும் வேண்டாம்! பின்னோக்கவும் வேண்டாம்!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி) முஸ்லிம்-440
குர்ஆன் வசனம் 693
﷽ குர்ஆன் வசனம் 693
26-01-2024 வெள்ளிக்கிழமை
اَمَّنۡ هٰذَا الَّذِىۡ يَرۡزُقُكُمۡ اِنۡ اَمۡسَكَ رِزۡقَهٗ
அவன் தனது உணவை நிறுத்தி விட்டால் உங்களுக்கு உணவளிப்பவன் உண்டா?
[அல்குர்ஆன் 67:21]
Thursday, January 25, 2024
உபதேசம் 942
﷽ உபதேசம் 942
25-01-2024 வியாழக்கிழமை
"அல்லாஹ்வின் மீது சத்தியமாக! இந்த இறுதிச் சமுதாயத்திலுள்ள யூதரோ கிறிஸ்தவரோ யாரேனும் ஒருவர் என் மார்க்கத்தைப் பற்றிப் கேள்விப்பட்ட பிறகு நான் கொண்டுவந்த மார்க்கத்தை நம்பிக்கை கொள்ளாமல் மரணித்தால்ல் அவர் நரகவாசிகளில் ஒருவராகவே இருப்பார்!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி) முஸ்லிம்-240
குர்ஆன் வசனம் 692
﷽ குர்ஆன் வசனம் 692
25-01-2024 வியாழக்கிழமை
اِنَّ الَّذِيۡنَ يَخۡشَوۡنَ رَبَّهُمۡ بِالۡغَيۡبِ لَهُمۡ مَّغۡفِرَةٌ وَّاَجۡرٌ كَبِيۡرٌ
தனிமையில் தமது இறைவனை அஞ்சுவோருக்கு மன்னிப்பும் பெரிய கூலியும் உண்டு.
[அல்குர்ஆன் 67:12]
Wednesday, January 24, 2024
குர்ஆன் வசனம் 691
﷽ குர்ஆன் வசனம் 691
24-01-2024 புதன்கிழமை
اۨلَّذِىۡ خَلَقَ الۡمَوۡتَ وَالۡحَيٰوةَ لِيَبۡلُوَكُمۡ اَيُّكُمۡ اَحۡسَنُ عَمَلًا
உங்களில் அழகிய செயலுக்குரியவர் யார் என்பதைச் சோதிப்பதற்காக மரணத்தையும், வாழ்வையும் அவன் படைத்தான்.
[அல்குர்ஆன் 67:2]
உபதேசம் 941
﷽ உபதேசம் 941
24-01-2024 புதன்கிழமை
நபி (ஸல்) அவர்களிடம் "மனக்குழப்பம்" குறித்து கேட்கப்பட்டதற்கு, "அதுதான் ஒளிவுமறைவற்ற இறைநம்பிக்கை" என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) முஸ்லிம்-211
குர்ஆன் வசனம் 690
﷽ குர்ஆன் வசனம் 690
23-01-2024 செவ்வாய்க்கிழமை
يٰۤاَيُّهَا الَّذِيۡنَ اٰمَنُوۡا تُوۡبُوۡۤا اِلَى اللّٰهِ تَوۡبَةً نَّصُوۡحًا
நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்விடம் கலப்பற்ற முறையில் பாவமன்னிப்புத் தேடுங்கள்! உங்கள் இறைவன் உங்கள் தீமைகளை அழித்திடக்கூடும்.
[அல்குர்ஆன் 66:8]
உபதேசம் 940
﷽ உபதேசம் 940
23-01-2024 செவ்வாய்க்கிழமை
அல்லாஹ்வின் தூதரே! கடமையான தொழுகையை நிறைவேற்றி, மார்க்கத்தில் விலக்கப்பட்டவற்றை விலக்கப்பட்டவை என்றும் அனுமதிக்கப்பட்டவற்றை அனுமதிக்கப்பட்டவை என்றும் ஏற்று வாழ்ந்தால் நான் சொர்க்கம் செல்வேனா? என்று ஒருவா் நபி (ஸல்) அவா்களிடம் கேட்டதற்கு "ஆம்" என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) முஸ்லிம் - 16
Monday, January 22, 2024
உபதேசம் 939
﷽ உபதேசம் 939
22-01-2024 திங்கட்கிழமை
"அல்லாஹ்வின் அடியார்களே! மருத்துவம் செய்யுங்கள்! எந்த நோயையும் அதற்குரிய மருந்தில்லாமல் அல்லாஹ் இறக்கி அருளவில்லை!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : உஸாமா பின் ஷரீக் (ரலி) திர்மீதி - 1961
குர்ஆன் வசனம் 688
﷽ குர்ஆன் வசனம் 688
22-01-2024 திங்கட்கிழமை
فَاتَّقُوا اللّٰهَ يٰۤاُولِى الۡاَ لۡبَابِ ۛ الَّذِيۡنَ اٰمَنُوۡا
நம்பிக்கை கொண்ட அறிவுடையோரே! அல்லாஹ்வை அஞ்சுங்கள்!
[அல்குர்ஆன் 65:10]
Sunday, January 21, 2024
உபதேசம் 938
﷽ உபதேசம் 938
21-01-2023 ஞாயிற்றுக்கிழமை
"பல் துலக்குவது பற்றி அதிகமாக உங்களை நான் வலியுறுத்தியுள்ளேன்!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
அறிவிப்பவர் : அனஸ் (ரலி) புகாரி - 888
குர்ஆன் வசனம் 689
﷽ குர்ஆன் வசனம் 689
21-01-2023 ஞாயிற்றுக்கிழமை
يٰۤاَيُّهَا الَّذِيۡنَ اٰمَنُوۡا قُوۡۤا اَنۡفُسَكُمۡ وَاَهۡلِيۡكُمۡ نَارًا وَّقُوۡدُهَا النَّاسُ وَالۡحِجَارَةُ
நம்பிக்கை கொண்டோரே! உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் நரகை விட்டுக் காத்துக் கொள்ளுங்கள்! அதன் எரிபொருள் மனிதரும், கற்களுமாகும்.
[அல்குர்ஆன் 66:6]
Saturday, January 20, 2024
உபதேசம் 937
﷽ உபதேசம் 937
20-01-2024 சனிக்கிழமை
நபி (ஸல்) அவர்கள் ஒரு யூதரிடம் தமது கவசத்தை அடைமானம் வைத்து உணவுப் பொருளைக் கடனாக வாங்கினார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) புகாரி-2096
உபதேசம் 936
﷽ உபதேசம் 936
19-01-2024 வெள்ளிக்கிழமை
"உங்களில் ஒவ்வொருவருடனும் அல்லாஹ் (மறுமைநாளில் தனித் தனியாகப்) பேசுவான். அப்பொழுது அல்லாஹ்வுக்கும் உங்களுக்குமிடையே மொழிபெயர்ப்பாளா் இருக்கமாட்டாா். தடுக்கிற திரையும் இருக்காது!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அதீ இப்னு ஹாத்திம் (ரலி) புகாரி-7443
குர்ஆன் வசனம் 686
﷽ குர்ஆன் வசனம் 686
19-01-2024 வெள்ளிக்கிழமை
لَا يُكَلِّفُ اللّٰهُ نَفۡسًا اِلَّا مَاۤ اٰتٰٮهَاؕ
அல்லாஹ் எதைக் கொடுத்துள்ளானோ அதற்கு மேல் எவரையும் சிரமப்படுத்த மாட்டான்.
[அல்குர்ஆன் 65:7]
Thursday, January 18, 2024
உபதேசம் 935
﷽ உபதேசம் 935
18-01-2023 வியாழக்கிழமை
"அல்லாஹ் தனது படைப்புப் பணியை நிறைவு செய்தபிறகு தன்னிடமுள்ள அரியாசனத்தின் மீது "என் கருணை என் கோபத்தை முந்திவிட்டது' என்று எழுதினான்!" என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி) புகாரி-7422
குர்ஆன் வசனம் 685
﷽ குர்ஆன் வசனம் 685
18-01-2023 வியாழக்கிழமை
لِيُنۡفِقۡ ذُوۡ سَعَةٍ مِّنۡ سَعَتِهٖؕ وَمَنۡ قُدِرَ عَلَيۡهِ رِزۡقُهٗ فَلۡيُنۡفِقۡ مِمَّاۤ اٰتٰٮهُ اللّٰهُؕ
வசதியுள்ளவர் தனது வசதிக்கேற்ப செலவிடட்டும். யாருக்குச் செல்வம் அளவாகக் கொடுக்கப்பட்டதோ அவர் தனக்கு அல்லாஹ் வழங்கியதிலிருந்து செலவிடட்டும்.
[அல்குர்ஆன் 65:7]
Wednesday, January 17, 2024
உபதேசம் 934
﷽ உபதேசம் 934
17-01-2024 புதன்கிழமை
"கனவில் என்னை யார் காண்கிறாரோ அவர் விழிப்பிலும் என்னைக் காண்பார் அல்லது விழிப்பில் என்னைக் கண்டவரைப் போன்றவராவார். (ஏனெனில்,) ஷைத்தான் என் உருவத்தில் காட்சியளிக்கமாட்டான்!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி) முஸ்லிம்-4560
குர்ஆன் வசனம் 684
﷽ குர்ஆன் வசனம் 684
17-01-2024 புதன்கிழமை
وَمَنۡ يَّـتَّـقِ اللّٰهَ يُكَفِّرۡ عَنۡهُ سَيِّاٰتِهٖ وَيُعۡظِمۡ لَهٗۤ اَجۡرًا
அல்லாஹ்வை அஞ்சுபவரின் தீமைகளை அவரை விட்டும் அல்லாஹ் நீக்குவான். அவருக்கு மகத்தான கூலியை வழங்குவான்.
[அல்குர்ஆன் 65:5]
Tuesday, January 16, 2024
உபதேசம் : 933
﷽ உபதேசம் : 933
16-01-2023 செவ்வாய்க்கிழமை
ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து வியாபாரங்களில் தான் ஏமாற்றப்படுவதாகக் கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், 'நீ வியாபாரத்தின்பொழுது உன்னை ஏமாற்றுபவா்களிடம் வியாபாரத்தில் 'ஏமாற்றுதல் கூடாது' என்று கூறிவிடு' எனக் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) புகாரி - 6964
குர்ஆன் வசனம் 683
﷽ குர்ஆன் வசனம் 683
16-01-2023 செவ்வாய்க்கிழமை
وَمَنۡ يَّـتَّـقِ اللّٰهَ يَجۡعَلْ لَّهٗ مَخۡرَجًا
وَّيَرۡزُقۡهُ مِنۡ حَيۡثُ لَا يَحۡتَسِبُ ؕ وَمَنۡ يَّتَوَكَّلۡ عَلَى اللّٰهِ فَهُوَ حَسۡبُهٗ
அல்லாஹ்வை அஞ்சுவோருக்கு அவன் ஒரு போக்கிடத்தை ஏற்படுத்துவான்.
அவர் எண்ணிப் பார்த்திராத வகையில் அவருக்கு உணவளிப்பான். அல்லாஹ்வையே சார்ந்திருப்போருக்கு அவன் போதுமானவன்.
[அல்குர்ஆன் 65:2,3]
உபதேசம் 932
﷽ உபதேசம் 932
15-01-2024 திங்கட்கிழமை
நபி (ஸல்) அவர்களிடம் வந்த ஒரு மனிதா் "மறுமை நாள் எப்பொழுது வரும்?" என்று கேட்க "அதற்காக நீ என்ன தயார் செய்து வைத்திருக்கிறாய்?" என்று நபி ஸல் அவா்கள் அந்த மனிதாிடம் கேட்டார்கள். அதற்கு அவா் "அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நேசிக்கிறேன் என்பதைத் தவிர வேறு எதுவும் இல்லை" என்று பதிலளித்தார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் "நீ நேசித்தவர்களுடன் தான் மறுமையில் இருப்பாய்" என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள் சொன்னதைக் கேட்டு நாங்கள் மகிழ்ச்சியடைந்ததைப் போன்ற வேறு எதற்காகவும் மகிழ்ச்சியடைந்ததில்லை!
அறிவிப்பவர் : அனஸ் (ரலி) புகாரி-3288
குர்ஆன் வசனம் 682
﷽ குர்ஆன் வசனம் 682
15-01-2024 திங்கட்கிழமை
وَمَنۡ يَّتَعَدَّ حُدُوۡدَ اللّٰهِ فَقَدۡ ظَلَمَ نَفۡسَهٗ
அல்லாஹ்வின் வரம்புகளை மீறுபவர் தமக்கே தீங்கிழைத்துக் கொண்டார்.
[அல்குர்ஆன் 65:1]
Sunday, January 14, 2024
உபதேசம் 931
﷽ உபதேசம் 931
14-01-2024 ஞாயிற்றுக்கிழமை
"இறைத்தூதர்களில் சிலர் சிலரைவிட உயர்ந்தவர்கள் என்று சொல்லாதீர்கள்!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூ ஸயீத் அல்குத்ரீ (ரலி) புகாரி - 6916
குர்ஆன் வசனம் 681
﷽ குர்ஆன் வசனம் 681
14-01-2024 ஞாயிற்றுக்கிழமை
اِنۡ تُقۡرِضُوا اللّٰهَ قَرۡضًا حَسَنًا يُّضٰعِفۡهُ لَـكُمۡ وَيَغۡفِرۡ لَـكُمۡؕ
நீங்கள் அல்லாஹ்வுக்கு அழகிய கடனைக் கொடுத்தால் அதை அவன் உங்களுக்குப் பன்மடங்காகத் தருவான். உங்களை மன்னிப்பான்.
[அல்குர்ஆன் 64:17]
Saturday, January 13, 2024
உபதேசம் 930
﷽ உபதேசம் 930
13-01-2023 சனிக்கிழமை
"உலகில் அநியாயமாக ஒரு கொலை நடைபெற்றால் அந்த பாவத்தில் ஆதி மனிதர் ஆதம் (அலை) அவர்களின் முதல் மகனுக்கும் ஒரு பங்கு உண்டு!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி) புகாரி - 6867
குர்ஆன் வசனம் 680
﷽ குர்ஆன் வசனம் 680
13-01-2023 சனிக்கிழமை
وَمَنۡ يُّوۡقَ شُحَّ نَفۡسِهٖ فَاُولٰٓٮِٕكَ هُمُ الۡمُفۡلِحُوۡنَ
தனது உள்ளத்தின் கஞ்சத்தனத்திலிருந்து காக்கப்படுவோரே வெற்றி பெற்றோர்.
[அல்குர்ஆன் 64:16]
உபதேசம் 929
﷽ உபதேசம் 929
12-01-2024 வெள்ளிக்கிழமை
"ஒா் அடியான் ஆரோக்கியமானவனாகவும் உள்ளூரிலிருக்கும் நிலையிலும் செய்யும் நற்செயல்களுக்குக் கிடைப்பது போன்ற அதே நற்பலன் அவன் நோயாளியாகிவிடும்பொழுதும் அல்லது பயணத்தில் இருக்கும்பொழுதும் அவன் பாவம் எதுவும் செய்யாமலிருக்கும் வரை அவனுக்கு எழுதப்படும்!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூ மூஸா (ரலி) புகாரி - 2996
குர்ஆன் வசனம் 679
﷽ குர்ஆன் வசனம் 679
12-01-2024 வெள்ளிக்கிழமை
فَاتَّقُوا اللّٰهَ مَا اسۡتَطَعۡتُمۡ وَاسۡمَعُوۡا وَاَطِيۡعُوۡا وَاَنۡفِقُوۡا خَيۡرًا لِّاَنۡفُسِكُمۡؕ
உங்களால் இயன்ற வரை அல்லாஹ்வை அஞ்சுங்கள்! செவிமடுங்கள்! கட்டுப்படுங்கள்! (நல்வழியில்) செலவிடுங்கள்! அது உங்களுக்குச் சிறந்தது.
[அல்குர்ஆன் 64:16]
Thursday, January 11, 2024
உபதேசம் : 928
குர்ஆன் வசனம் 678
﷽ குர்ஆன் வசனம் 678
11-01-2024 வியாழக்கிழமை
اِنَّمَاۤ اَمۡوَالُـكُمۡ وَاَوۡلَادُكُمۡ فِتۡنَةٌ ؕ وَاللّٰهُ عِنۡدَهٗۤ اَجۡرٌ عَظِيۡمٌ
உங்கள் பொருட்செல்வமும், மக்கட்செல்வமும், சோதனையே. அல்லாஹ்விடமே மகத்தான கூலி இருக்கிறது.
[அல்குர்ஆன் 64:15]
Wednesday, January 10, 2024
உபதேசம் : 927
﷽ உபதேசம் : 927
10-01-2024 புதன்கிழமை
"ஒா் அடியான் அவன் பூமியில் நடமாடிக் கொண்டிருக்கும் காலமெல்லாம் அவன்மீது எந்தப்பாவங்களும் இல்லாமல் ஆகின்றவரை அவனை விட்டும் சோதனைகள் நீங்காமலேயே இருக்கும்”என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஸஃது (ரலி) திர்மிதீ-2322
குர்ஆன் வசனம் 677
﷽ குர்ஆன் வசனம் 677
10-01-2024 புதன்கிழமை
يٰۤاَيُّهَا الَّذِيۡنَ اٰمَنُوۡۤا اِنَّ مِنۡ اَزۡوَاجِكُمۡ وَاَوۡلَادِكُمۡ عَدُوًّا لَّكُمۡ فَاحۡذَرُوۡهُمۡ
நம்பிக்கை கொண்டோரே! உங்கள் மனைவியரிலும், உங்கள் மக்களிலும் உங்களுக்கு எதிரிகள் உள்ளனர். அவர்களிடம் கவனமாக இருந்து கொள்ளுங்கள்!
[அல்குர்ஆன் 64:14]
Tuesday, January 9, 2024
உபதேசம். 926
﷽ உபதேசம். 926
09-01-2023 செவ்வாய்க்கிழமை
"ஒவ்வொரு பித்அத்தும் வழிகேடாகும்! ஒவ்வொரு வழிகேடும் நரகத்திற்கு அழைத்தச் செல்லும்!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி) நஸயீ-1560
குர்ஆன் வசனம் 676
﷽ குர்ஆன் வசனம் 676
09-01-2023 செவ்வாய்க்கிழமை
مَاۤ اَصَابَ مِنۡ مُّصِيۡبَةٍ اِلَّا بِاِذۡنِ اللّٰهِؕ وَمَنۡ يُّؤۡمِنۡۢ بِاللّٰهِ يَهۡدِ قَلۡبَهٗؕ
எந்தத் துன்பம் ஏற்பட்டாலும் அல்லாஹ்வின் விருப்பத்தைக் கொண்டே தவிர இல்லை. அல்லாஹ்வை நம்பும் உள்ளத்திற்கு அவன் வழிகாட்டுவான்.
[அல்குர்ஆன் 64:11]
Monday, January 8, 2024
குர்ஆன் வசனம் 675
﷽ குர்ஆன் வசனம் 675
08-01-2023 திங்கட்கிழமை
وَاللّٰهُ عَلِيۡمٌۢ بِذَاتِ الصُّدُوۡرِ
உள்ளங்களில் உள்ளதை அல்லாஹ் அறிந்தவன்.
[அல்குர்ஆன் 64:4]
உபதேசம் 925
﷽ உபதேசம் 925
08-01-2023 திங்கட்கிழமை
"உங்களில் ஒருவா் செல்வத்திலும் தோற்றத்திலும் தம்மை விட மேலான ஒருவரைக் கண்டால் அவற்றில் தம்மைவிடக் கீழனாவர்களை அவா் நினைத்துப் பார்க்கட்டும்!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி) புகாரி-6490
Sunday, January 7, 2024
உபதேசம் : 924
﷽ உபதேசம் : 924
07-01-2024 ஞாயிற்றுக்கிழமை
நபி (ஸல்) அவர்கள் மனிதா்களிலேயே மிக அழகிய பண்புகளைக் கொண்டவர்களாய்த் திகழ்ந்தார்கள்.
அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரலி) முஸ்லிம்-4627
குர்ஆன் வசனம் 674
﷽ குர்ஆன் வசனம் 674
07-01-2024 ஞாயிற்றுக்கிழமை
خَلَقَ السَّمٰوٰتِ وَالۡاَرۡضَ
வானங்களையும், பூமியையும் தக்க காரணத்துடன் அவன் படைத்தான்.
[அல்குர்ஆன் 64:3]
Saturday, January 6, 2024
உபதேசம் : 923
﷽ உபதேசம் : 923
06-01-2024 சனிக்கிழமை
"இறந்த பூமியை உயிர்பிப்பவருக்கு நன்மையுண்டு. மேலும் உணவைத் தேடக்கூடிய மனிதா்கள், கால்நடைகள் மற்றும் பறவைகள் அதிலிருந்து உணவு உட்கொண்டால் அவருக்கு அது தர்மமாகிவிடும்!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி) இப்னு ஹிப்பான்-5204
குர்ஆன் வசனம் 673
﷽ குர்ஆன் வசனம் 673
06-01-2024 சனிக்கிழமை
وَلَنۡ يُّؤَخِّرَ اللّٰهُ نَفۡسًا اِذَا جَآءَ اَجَلُهَاؕ
எந்த உயிருக்கும் அதற்குரிய தவணை வந்து விட்டால் அல்லாஹ் அவகாசம் அளிக்க மாட்டான்.
[அல்குர்ஆன் 63:11]
உபதேசம் : 922
﷽ உபதேசம் : 922
05-01-2024 வெள்ளிக்கிழமை
நபி (ஸல்) அவர்கள் தம் பெரிய தந்தை அபூதாலிபுடைய மரண வேளையில் "லா இலாஹ இல்லல்லாஹ் என்று சொல்லுங்கள்; இதை வைத்து உங்களுக்காக நான் மறுமைநாளில் அல்லாஹ்விடம் பரிந்துரை செய்வேன்" என்று கூறியபொழுது அவர் அதை மறுத்துவிட்டார். அப்பொழுது "(நபியே!) நீங்கள் விரும்பியவரை(யெல்லாம்) நேர்வழியில் செலுத்திவிட முடியாது" எனும் (28:56 ஆவது) வசனத்தை அல்லாஹ் அருளினான்.
அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி) முஸ்லிம்-47
குர்ஆன் வசனம் 672
﷽ குர்ஆன் வசனம் 672
05-01-2024 வெள்ளிக்கிழமை
وَاَنۡفِقُوۡا مِنۡ مَّا رَزَقۡنٰكُمۡ مِّنۡ قَبۡلِ اَنۡ يَّاۡتِىَ اَحَدَكُمُ الۡمَوۡتُ
உங்களுக்கு மரணம் வருவதற்கு முன் நாம் உங்களுக்கு வழங்கியவற்றிலிருந்து (நல்வழியில்) செலவிடுங்கள்!
[அல்குர்ஆன் 63:10]
Thursday, January 4, 2024
உபதேசம் : 921
﷽ உபதேசம் : 921
04-01-2023 வியாழக்கிழமை
"ஒருவரையொருவர் திட்டிக்கொள்கின்ற இருவரில் முதலில் திட்டத் துவங்கியவரையே குற்றம் சாரும்! அநீதிக்குள்ளானவர் வரம்பு மீறாதவரை!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி) முஸ்லிம்-5046
குர்ஆன் வசனம் 671
﷽ குர்ஆன் வசனம் 671
04-01-2023 வியாழக்கிழமை
يٰۤاَيُّهَا الَّذِيۡنَ اٰمَنُوۡا لَا تُلۡهِكُمۡ اَمۡوَالُكُمۡ وَلَاۤ اَوۡلَادُكُمۡ عَنۡ ذِكۡرِ اللّٰهِۚ
நம்பிக்கை கொண்டோரே! உங்களின் பொருட்செல்வமும், மக்கட்செல்வமும் அல்லாஹ்வின் நினைவை விட்டு உங்களைத் திசைதிருப்பி விட வேண்டாம்.
[அல்குர்ஆன் 63:9]
Wednesday, January 3, 2024
உபதேசம் : 920
﷽ உபதேசம் : 920
03-01-2024 புதன்கிழமை
"நிச்சயமாக அல்லாஹ் தன் அடியார்களில் இரக்கமுடையவர்க்கே இரக்கம் காட்டுகிறான்!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : உஸாமா இப்னு ஸைத் (ரலி) புகாரி - 1284
குர்ஆன் வசனம் 670
﷽குர்ஆன் வசனம் 670
03-01-2024 புதன்கிழமை
قُلۡ مَا عِنۡدَ اللّٰهِ خَيۡرٌ مِّنَ اللَّهۡوِ وَمِنَ التِّجَارَةِ ؕ وَاللّٰهُ خَيۡرُ الرّٰزِقِيۡنَ
அல்லாஹ்விடம் இருப்பது
வீணானதையும், வியாபாரத்தையும் விட சிறந்தது. அல்லாஹ் உணவளிப்போரில் சிறந்தவன்
[அல்குர்ஆன் 62:11]
Tuesday, January 2, 2024
உபதேசம் : 919
﷽ உபதேசம் : 919
02-12-2023 செவ்வாய்க்கிழமை
நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் இருந்த காலத்தில் எங்களுக்கு மாதவிடாய் ஏற்பட்டு தூய்மையாகும்பொழுது விடுபட்ட நோன்புகளை களாச் செய்யுமாறு கட்டளையிடுவார்கள். ஆனால் விடுபட்ட தொழுகைகளை களாச் செய்யுமாறு கட்டளையிட மாட்டார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) முஸ்லிம்-508
குர்ஆன் வசனம் 669
﷽ குர்ஆன் வசனம் 669
02-12-2023 செவ்வாய்க்கிழமை
فَاِذَا قُضِيَتِ الصَّلٰوةُ فَانْتَشِرُوۡا فِى الۡاَرۡضِ وَابۡتَغُوۡا مِنۡ فَضۡلِ اللّٰهِ وَاذۡكُرُوا اللّٰهَ كَثِيۡرًا لَّعَلَّكُمۡ تُفۡلِحُوۡنَ
தொழுகை முடிக்கப்பட்டதும் பூமியில் அலைந்து அல்லாஹ்வின் அருளைத் தேடுங்கள்! அல்லாஹ்வை அதிகம் நினையுங்கள்! நீங்கள் வெற்றி பெறுவீர்கள்.
[அல்குர்ஆன் 62:10]
உபதேசம் : 917
﷽ உபதேசம் : 917
01-01-2024 திங்கள்கிழமை
நபி (ஸல்) அவர்கள் தொடா் நோன்பு நோற்கத் தடை விதித்தபொழுது "நீங்கள் மட்டும் நோற்கிறீர்களே?" என்று அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், "என் இறைவன் எனக்கு உண்ணவும், பருகவும் வழங்குகின்றான்!" என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி) புகாரி - 1962
குர்ஆன் வசனம் 668
﷽ குர்ஆன் வசனம் 668
01-01-2024 திங்கள்கிழமை
يٰۤاَيُّهَا الَّذِيۡنَ اٰمَنُوۡۤا اِذَا نُوۡدِىَ لِلصَّلٰوةِ مِنۡ يَّوۡمِ الۡجُمُعَةِ فَاسۡعَوۡا اِلٰى ذِكۡرِ اللّٰهِ وَذَرُوا الۡبَيۡعَ ؕ ذٰ لِكُمۡ خَيۡرٌ لَّـكُمۡ اِنۡ كُنۡتُمۡ تَعۡلَمُوۡنَ
நம்பிக்கை கொண்டோரே! வெள்ளிக்கிழமையில் தொழுகைக்காக அழைக்கப்பட்டால் அல்லாஹ்வை நினைப்பதற்கு விரையுங்கள்! வியாபாரத்தை விட்டு விடுங்கள்! நீங்கள் அறிந்தால் இதுவே உங்களுக்கு நல்லது.
[அல்குர்ஆன் 62:9]
இஸ்லாமிய பார்வையில் புத்தாண்டு
. 🪙🪙🪙🪙🪙🪙🪙
🔹இஸ்லாமிய பார்வையில் புத்தாண்டு🔸
🔜 நபிமொழி 🔚
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(மாற்று) சமூகத்தினருக்கு ஒப்ப நடப்பவர் நம்மைச் சார்ந்தவர் இல்லை.
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)
நூல் : அபூதாவுத் 3512
===============
“உங்களுக்கு முன்னிருந்த(யூதர்கள் மற்றும் கிறிஸ்த)வர்கள் வழிமுறைகளை,
நீங்கள் அங்குலம் அங்குலமாக, முழம் முழமாகப் பின்பற்றுவீர்கள்.
எந்த அளவிற்கென்றால் அவர்கள் ஓர் உடும்பின் பொந்துக்குள் புகுந்திருந்தால் கூட,
நீங்கள் அதிலும் புகுவீர்கள்”
என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூசயீத் அல்குத்ரீ (ரலி)
நூல் : புகாரி 3456
உபதேசம் : 916
﷽ உபதேசம் : 916
31-12-2023 ஞாயிற்றுக்கிழமை
"பொறுமை என்பது, துன்பம் ஏற்பட்டவுடன் கைக் கொள்வதே" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அனஸ் இப்னு மாலிக் (ரலி) புகாரி - 1283
குர்ஆன் வசனம் 667
﷽ குர்ஆன் வசனம் 667
31-12-2023 ஞாயிற்றுக்கிழமை
قُلۡ اِنَّ الۡمَوۡتَ الَّذِىۡ تَفِرُّوۡنَ مِنۡهُ فَاِنَّهٗ مُلٰقِيۡكُمۡ
"நீங்கள் எதை விட்டும் வெருண்டு ஓடுகிறீர்களோ அந்த மரணம் உங்களைச் சந்திக்கவுள்ளது.
[அல்குர்ஆன் 62:8]
-
Chapter - 14 Surah Ibrahim بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ In the name of Allah the most beneficent, most mer...
-
Chapter - 14 Surah Ibrahim بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ In the name of Allah the most beneficent, most merciful يُثَبِّت...
-
Chapter - 14 Surah Ibrahim بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ In the name of Allah the most beneficent, most merciful قُ...