﷽ உபதேசம் : 928
11-01-2024 வியாழக்கிழமை
நபி (ஸல்) அவர்கள் ஜும்ஆ உரை நிகழ்த்திக் கொண்டிருந்தபொழுது ஒருவர் வெயிலில் நின்று கொண்டிருப்பதைக்கண்டு அவரைப்பற்றி மக்களிடம் கேட்டார்கள். "இவர் பெயர் அபூ இஸ்ராயீல். இவர் நின்று கொண்டே இருப்பேன் என்றும் நிழலில் ஒதுங்கமாட்டேன் என்றும் யாரிடமும் பேசமாட்டேன் என்றும் நோன்பு நோற்பேன் என்றும் நேர்ச்சை செய்துள்ளாா்" என்று மக்கள் கூறினா். உடனே நபி (ஸல்) அவர்கள், "அவருக்கு உத்தரவிடுங்கள்: அவர் பேசட்டும். நிழல் பெறட்டும். உட்காரட்டும் நோன்பை மட்டும் நிறைவு செய்யட்டும்' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி) புகாரி - 6704
No comments:
Post a Comment