﷽ உபதேசம் : 913
28-12-2023 வியாழக்கிழமை
"ஒர் அண்டைவீட்டுக்காரி மற்ற அண்டை வீட்டுக்காரிக்கு ஆட்டின் கால் குளம்பை (காலுடைய கீழ் பகுதியை) அன்பளிப்பாகக் கொடுத்தாலும் அவள் அதை அலட்சியம் செய்ய வேண்டாம்!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி) புகாரி-2566
Thursday, December 28, 2023
உபதேசம் : 913
குர்ஆன் வசனம் 663
﷽ குர்ஆன் வசனம் 663
28-12-2023 வியாழக்கிழமை
وَاللّٰهُ لَا يَهۡدِى الۡقَوۡمَ الۡفٰسِقِيۡنَ
குற்றம் புரியும் கூட்டத்துக்கு அல்லாஹ் நேர்வழி காட்ட மாட்டான்.
[அல்குர்ஆன் 61:5]
Wednesday, December 27, 2023
உபதேசம் : 912
﷽ உபதேசம் : 912
27-12-2023 புதன்கிழமை
"ஒரு தந்தை தன் மகனுக்குக் கொடுத்த அன்பளிப்பைத் தவிர வேறு எந்த அன்ளிப்பையும் திரும்பப் பெறுவது ஒரு முஸ்லிமுக்கு ஹலால் (அனுமதி) இல்லை!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி) திர்மிதீ-1220
குர்ஆன் வசனம் 662
﷽ குர்ஆன் வசனம் 662
27-12-2023 புதன்கிழமை
اِنَّ اللّٰهَ يُحِبُّ الَّذِيۡنَ يُقَاتِلُوۡنَ فِىۡ سَبِيۡلِهٖ صَفًّا كَاَنَّهُمۡ بُنۡيَانٌ مَّرۡصُوۡصٌ
உறுதியாக இணைக்கப்பட்ட கட்டடம் போன்று அணிவகுத்து தன் பாதையில் போரிடுவோரை அல்லாஹ் விரும்புகிறான்.
[அல்குர்ஆன் 61:4]
Tuesday, December 26, 2023
குர்ஆன் வசனம் 661
﷽ குர்ஆன் வசனம் 661
26-12-2023 செவ்வாய்க்கிழமை
يٰۤاَيُّهَا الَّذِيۡنَ اٰمَنُوۡا لِمَ تَقُوۡلُوۡنَ مَا لَا تَفۡعَلُوۡنَ
كَبُرَ مَقۡتًا عِنۡدَ اللّٰهِ اَنۡ تَقُوۡلُوۡا مَا لَا تَفۡعَلُوۡنَ
நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் செய்யாததை ஏன் சொல்கிறீர்கள்?
நீங்கள் செய்யாததைச் சொல்வது அல்லாஹ்விடம் கடும் கோபத்துக்குரியது.
[அல்குர்ஆன் 61:2,3]
உபதேசம் : 911
﷽ உபதேசம் : 911
26-12-2023 செவ்வாய்க்கிழமை
"நீங்கள் ஒருவருக்கொருவர் அன்பளிப்பு செய்து நேசத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி) அல்அதபுல்முஃப்ரத் - 594
உபதேசம் : 910
﷽ உபதேசம் : 910
24-12-2023 ஞாயிற்றுக்கிழமை
"ஒருவா் ஜனாஸாவைக் காணும்பொழுது அதைப் பின்தொடா்ந்துசெல்ல இயலாத நிலையில் அதை அவா் கடக்கும்வரை அல்லது அது அவரைக் கடக்கும்வரை அல்லது அது பூமியில் வைக்கப்படும் வரை அவா் எழுந்து நிற்கட்டும்!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஆமிர் இப்னு ரபீஆ (ரலி) புகாரி-1308
குர்ஆன் வசனம் 660
﷽ குர்ஆன் வசனம் 660
24-12-2023 ஞாயிற்றுக்கிழமை
اِنَّ اللّٰهَ يُحِبُّ الۡمُقۡسِطِيۡنَ
நீதி செலுத்துவோரை அல்லாஹ் விரும்புகிறான்.
[அல்குர்ஆன் 60:8]
Saturday, December 23, 2023
உபதேசம் : 909
﷽ உபதேசம் : 909
23-12-2023 சனிக்கிழமை
நபி (ஸல்) அவர்களின் மகளை நாங்கள் குளிப்பாட்டிக் கொண்டிருந்தபொழுது, ''மய்யித்தின் வலப்புறத்திலிருந்தும் உளூவின் பகுதிகளிலிருந்தும் ஆரம்பியுங்கள்!" என்று நபிகளாா் எங்களிடம் கூறினார்கள்.
அறிவிப்பவர் : உம்மு அதிய்யா (ரலி) புகாரி - 1256
குர்ஆன் வசனம் 659
﷽ குர்ஆன் வசனம் 659
23-12-2023 சனிக்கிழமை
لَنۡ تَـنۡفَعَكُمۡ اَرۡحَامُكُمۡ وَلَاۤ اَوۡلَادُكُمۡ ۛۚ يَوۡمَ الۡقِيٰمَةِ
கியாமத் நாளில் உங்களின் உறவினரும், உங்கள் சந்ததிகளும் உங்களுக்குப் பயன் தரவே மாட்டார்கள்.
[அல்குர்ஆன் 60:3]
Friday, December 22, 2023
உபதேசம் : 908
﷽ உபதேசம் : 908
22-12-2023 வெள்ளிக்கிழமை
நபி (ஸல்) அவர்கள் தமக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட நறுமணப் பொருளை மறுத்ததில்லை!
அறிவிப்பவர்: அனஸ் (ரலி) புகாரி-5929
குர்ஆன் வசனம் 658
﷽ குர்ஆன் வசனம் 658
22-12-2023 வெள்ளிக்கிழமை
لَا يَسۡتَوِىۡۤ اَصۡحٰبُ النَّارِ وَاَصۡحٰبُ الۡجَـنَّةِؕ اَصۡحٰبُ الۡجَـنَّةِ هُمُ الۡفَآٮِٕزُوۡنَ
நரகவாசிகளும், சொர்க்கவாசிகளும் சமமாக மாட்டார்கள். சொர்க்கவாசிகளே வெற்றி பெற்றோர்.
[அல்குர்ஆன் 59:20]
Thursday, December 21, 2023
உபதேசம் : 907
﷽ உபதேசம் : 907
21-12-2023 வியாழக்கிழமை
"பிலாலே! இஸ்லாத்தில் இணைந்த பிறகு நீர் செய்த சிறந்த அமல் பற்றிக் கூறுங்கள். ஏனெனில் உம்முடைய செருப்போசையை சொர்க்கத்தில் நான் கேட்டேன்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறியபொழுது பிலால் (ரலி) அவா்கள், "இரவிலோ, பகலிலோ நான் உளூச் செய்தால் அந்த உளூவின் மூலம் தொழ வேண்டுமென நாடியதை நான் தொழாமல் இருப்பதில்லை. இதுதான் என்னுடைய செயல்களில் சிறந்து" என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி) புகாரி - 1149
குர்ஆன் வசனம் 657
﷽ குர்ஆன் வசனம் 657
21-12-2023 வியாழக்கிழமை
وَلۡتَـنۡظُرۡ نَـفۡسٌ مَّا قَدَّمَتۡ لِغَدٍ
மறுமைக்காக தாம் செய்த வினையை ஒவ்வொருவரும் கவனிக்கட்டும்.
[அல்குர்ஆன் 59:18]
உபதேசம் : 906
﷽ உபதேசம் : 906
20-12-2023 புதன்கிழமை
"அல்லாஹ்விற்கு மிக விருப்பமான தொழுகை நபி தாவூது (அலை) அவர்களின் தொழுகையாகும். ஏனெனில் அவர்கள் பாதி இரவு வரை உறங்கிய பிறகு இரவில் மூன்றில் ஒரு பகுதி நேரம் தொழுவார்கள். அல்லாஹ்விற்கு மிக விருப்பமான நோன்பு நபி தாவூது(அலை) அவர்களின் நோன்பாகும். ஏனெனில் அவர்கள் ஒரு நாள் விட்டு ஒரு நாள் நோன்பு நோற்பார்கள்!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னுல் ஆஸ் (ரலி) புகாரி-1131
குர்ஆன் வசனம் 656
﷽ குர்ஆன் வசனம் 656
20-12-2023 புதன்கிழமை
وَمَنۡ يُّوۡقَ شُحَّ نَـفۡسِهٖ فَاُولٰٓٮِٕكَ هُمُ الۡمُفۡلِحُوۡنَۚ
தன்னிடமுள்ள கஞ்சத்தனத்திலிருந்து காக்கப்படுவோரே வெற்றி பெற்றோர்.
[அல்குர்ஆன் 59:9]
குர்ஆன் வசனம் 655
﷽ குர்ஆன் வசனம் 655
19-12-2023 செவ்வாய்க்கிழமை
وَاتَّقُوا اللّٰهَ ؕ اِنَّ اللّٰهَ شَدِيۡدُ الۡعِقَابِۘ
அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அல்லாஹ் கடுமையாகத் தண்டிப்பவன்.
[அல்குர்ஆன் 59:7]
உபதேசம் : 905
﷽ உபதேசம் : 905
19-12-2023 செவ்வாய்க்கிழமை
"குழந்தையின் மீது தாய் வைத்திருக்கும் அன்பை விட அல்லாஹ் தன் அடியார்களின் மீது அதிக அன்பு வைத்துள்ளான்!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : உமர் (ரலி) புகாரி-5999
Monday, December 18, 2023
உபதேசம் : 904
﷽ உபதேசம் : 904
18-12-2023 திங்கட்கிழமை
நபி (ஸல்) அவர்கள் கன்னிப் பெண்களையும் மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண்களையும் (பெருநாள் தொழுகையின்) திடலுக்குப் புறப்படச் செய்யும்படி எங்களை ஏவினார்கள். மாதவிடாயுள்ள பெண்கள் தொழுமிடத்தைவிட்டு விலகியிருப்பார்கள்.
அறிவிப்பவர் : உம்மு அதிய்யா (ரலி) புகாரி-981
குர்ஆன் வசனம் 654
﷽ குர்ஆன் வசனம் 654
18-12-2023 திங்கட்கிழமை
وَلِيُخۡزِىَ الۡفٰسِقِيۡنَ
குற்றம் புரிந்தோரை அவன் இழிவுபடுத்துவான்.
[அல்குர்ஆன் 59:5]
உபதேசம் : 903
﷽ உபதேசம் : 903
17-12-2023 ஞாயிற்றுக்கிழமை
"ஜும்ஆ நாளில் ஒரு நேரம் உள்ளது" என்று கூறிய நபி ஸல் அவா்கள் அந்த நேரம் மிகவும் குறைவானதே என்பதைத் தம் கையால் சைகை செய்து காட்டினார்கள். ''அந்த நேரத்தில் ஒரு முஸ்லிம் தொழுது, அல்லாஹ்விடம் எதையேனும் கேட்டால் அதை அவருக்கு அல்லாஹ் கொடுக்காமலிருப்பதில்லை!" என்றும் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி) புகாரி - 935
குர்ஆன் வசனம் 653
﷽ குர்ஆன் வசனம் 653
17-12-2023 ஞாயிற்றுக்கிழமை
اِنَّ الَّذِيۡنَ يُحَآدُّوۡنَ اللّٰهَ وَرَسُوۡلَهٗۤ اُولٰٓٮِٕكَ فِى الۡاَذَلِّيۡنَ
அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும் பகைப்போரே இழிந்தோர்.
[அல்குர்ஆன் 58:20]
Saturday, December 16, 2023
உபதேசம் : 902
﷽ உபதேசம் : 902
16-12-2023 சனிக்கிழமை
"இமாம் 'ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதா' என்று கூறும்பொழுது நீங்கள் 'அல்லாஹும்ம ரப்பனா லகல் ஹம்து' எனக் கூறுங்கள்! யாருடைய இந்தக் கூற்று மலக்குகளின் கூற்றுடன் ஒன்றாக அமைகிறதோ அவருடைய முந்திய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி) புகாரி-796
குர்ஆன் வசனம் 652
﷽ குர்ஆன் வசனம் 652
16-12-2023 சனிக்கிழமை
اَلَاۤ اِنَّ حِزۡبَ الشَّيۡطٰنِ هُمُ الۡخٰسِرُوۡنَ
கவனத்தில் கொள்க! ஷைத்தானின் கூட்டத்தினரே நட்டமடைந்தவர்கள்.
[அல்குர்ஆன் 58:19]
Friday, December 15, 2023
உபதேசம் : 901
﷽ உபதேசம் : 901
15-12-2023 வெள்ளிக்கிழமை
பனூ ஸலமா கூட்டத்தினர் தங்கள் இல்லங்களை நபி (ஸல்) அவர்களுடைய பள்ளிவாசலுக்கு அருகில் அமைத்துக்கொள்ள விரும்பினர். இதை விரும்பாத நபி (ஸல்) அவர்கள் ''நீங்கள் அதிகமான காலடிகளை எடுத்து வைத்துத் தொழுகைக்கு வருவதன் மூலம் கிடைக்கும் நன்மையைப் பெற வேண்டாமா?'' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : அனஸ் (ரலி) புகாரி - 656
குர்ஆன் வசனம் 651
﷽ குர்ஆன் வசனம் 651
15-12-2023 வெள்ளிக்கிழமை
وَاِذَا قِيۡلَ انْشُزُوۡا فَانْشُزُوۡا يَرۡفَعِ اللّٰهُ الَّذِيۡنَ اٰمَنُوۡا مِنۡكُمۡ ۙ وَالَّذِيۡنَ اُوۡتُوا الۡعِلۡمَ دَرَجٰتٍ
நம்பிக்கை கொண்டோருக்கும், கல்வி வழங்கப்பட்டோருக்கும் அல்லாஹ் பல தகுதிகளை உயர்த்துவான்.
[அல்குர்ஆன் 58:11]
Thursday, December 14, 2023
உபதேசம் : 900
﷽ உபதேசம் : 900
14-12-2023 வியாழக்கிழமை
"ஒருவருக்கு அல்லாஹ் வழங்கிய செல்வத்தை அவர் நல்ல வழியில் செலவு செய்வது, மற்றொருவருக்கு அல்லாஹ் வழங்கிய அறிவைக்கொண்டு தீர்ப்பு வழங்குபவராகவும் கற்றுக் கொடுப்பவராகவும் இருப்பது ஆகிய இரண்டு அம்சங்களைத்தவிர வேறு எதிலும் பேராசை கொள்ளக் கூடாது!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி) புகாரி - 73
குர்ஆன் வசனம் 650
﷽ குர்ஆன் வசனம் 650
14-12-2023 வியாழக்கிழமை
يٰۤاَيُّهَا الَّذِيۡنَ اٰمَنُوۡۤا اِذَا قِيۡلَ لَـكُمۡ تَفَسَّحُوۡا فِى الۡمَجٰلِسِ فَافۡسَحُوۡا يَفۡسَحِ اللّٰهُ لَـكُمۡ
நம்பிக்கை கொண்டோரே! சபைகளில் (பிறருக்கு) இடமளியுங்கள்!" என்று உங்களிடம் கூறப்பட்டால் இடமளியுங்கள்! அல்லாஹ் உங்களுக்கு இடமளிப்பான்.
[அல்குர்ஆன் 58:11]
Wednesday, December 13, 2023
உபதேசம் : 899
﷽ உபதேசம் : 899
13-12-2023 புதன்கிழமை
"நரகம் எனக்குக் காட்டப்பட்டது. அதில் பெண்களே அதிகமாக இருந்தனா். அவர்கள் நிராகரிப்பவர்களாக இருப்பதே இதற்குக் காரணம்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறியபொழுது, "இறைவனை அவர்கள் நிராகரிக்கின்றார்களா?" எனக் கேட்க "கணவனை நிராகரிக்கின்றனா். (அவனது) உதவிகளை நிராகரிக்கின்றனா். அவர்களில் ஒருத்திக்குக் காலம் முழுவதும் நீ நன்மை செய்தாலும் அவளுக்குப் பிடிக்காத ஒன்றை உன்னிடம் கண்டால் 'உன்னிடமிருந்து எந்த ஒரு நன்மையையும் நான் கண்டதில்லை! எனக் கூறிவிடுவாள்' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி) புகாரி-29
குர்ஆன் வசனம் 649
﷽ குர்ஆன் வசனம் 649
وَعَلَى اللّٰهِ فَلۡيَتَوَكَّلِ الۡمُؤۡمِنُوۡنَ
நம்பிக்கை கொண்டோர் அல்லாஹ்வையே சார்ந்திருக்க வேண்டும்.
[அல்குர்ஆன் 58:10]
Tuesday, December 12, 2023
குர்ஆன் வசனம் 648
﷽ குர்ஆன் வசனம் 648
12-12-2023 செவ்வாய்க்கிழமை
يٰۤاَيُّهَا الَّذِيۡنَ اٰمَنُوۡۤا اِذَا تَنَاجَيۡتُمۡ فَلَا تَـتَـنَاجَوۡا بِالۡاِثۡمِ وَالۡعُدۡوَانِ وَمَعۡصِيَتِ الرَّسُوۡلِ وَتَنَاجَوۡا بِالۡبِرِّ وَالتَّقۡوٰىؕ وَاتَّقُوا اللّٰهَ الَّذِىۡۤ اِلَيۡهِ تُحۡشَرُوۡنَ
நன்மையையும், இறையச்சத்தையும் இரகசியமாகப் பேசுங்கள். யாரிடம் ஒன்று திரட்டப்படுவீர்களோ அந்த அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்!
[அல்குர்ஆன் 58:9]
உபதேசம் : 898
﷽ உபதேசம் : 898
12-12-2023 செவ்வாய்க்கிழமை
'செயல்களில் சிறந்தது எது?' என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்டபொழுது, ''அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நம்பிக்கை கொள்வது'' என்று கூறினார்கள். 'பிறகு எது?' என்று கேட்க ''இறைவழியில் போரிடுவது'' என்று கூறினார்கள். 'பிறகு எது?' என்று கேட்க ''அங்கீகரிக்கப்படும் ஹஜ்'' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி) புகாரி-26
குர்ஆன் வசனம் 647
﷽ குர்ஆன் வசனம் 647
11-12-2023 திங்கட்கிழமை
يٰۤاَيُّهَا الَّذِيۡنَ اٰمَنُوۡۤا اِذَا تَنَاجَيۡتُمۡ فَلَا تَـتَـنَاجَوۡا بِالۡاِثۡمِ وَالۡعُدۡوَانِ وَمَعۡصِيَتِ الرَّسُوۡلِ وَتَنَاجَوۡا بِالۡبِرِّ وَالتَّقۡوٰىؕ
நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் இரகசியம் பேசினால் பாவம், வரம்பு மீறுதல், தூதருக்கு மாறுசெய்தல் ஆகியவை குறித்து இரகசியம் பேசாதீர்கள்!
[அல்குர்ஆன் 58:9]
உபதேசம் : 897
﷽ உபதேசம் : 897
11-12-2023 திங்கட்கிழமை
"தொழுகை, மக்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்தல், நற்குணம் ஆகியவற்றை விட சிறந்த ஒன்றை ஆதமுடைய மகன் செய்து விட முடியாது!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி) ஷுஅபுல் ஈமான்-5645
குர்ஆன் வசனம் 646
﷽ குர்ஆன் வசனம் 646
10-12-2023 ஞாயிற்றுக்கிழமை
لَا يَسۡمَعُوۡنَ فِيۡهَا لَغۡوًا وَّلَا تَاۡثِيۡمًا
அங்கே வீணானதையோ, பாவமான சொல்லையோ செவியுற மாட்டார்கள்.
[அல்குர்ஆன் 56:25]
உபதேசம் : 896
﷽ உபதேசம் : 896
10-12-2023 ஞாயிற்றுக்கிழமை
"இடது கையால் வாங்காதீர்கள்! இடது கையால் கொடுக்காதீர்கள்!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) முஸ்லிம்-4109
Saturday, December 9, 2023
உபதேசம் : 895
﷽ உபதேசம் : 895
09-12-2023 சனிக்கிழமை
"கணவனின் அனுமதியின்றி அவனது வீட்டில் ஒரு பெண் எதையும் செலவு செய்யக் கூடாது” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஉமாமா (ரலி) திர்மிதீ - 606
குர்ஆன் வசனம் 645
﷽ குர்ஆன் வசனம் 645
09-12-2023 சனிக்கிழமை
هَلۡ جَزَآءُ الْاِحۡسَانِ اِلَّا الۡاِحۡسَانُۚ
நன்மைக்கு நன்மை தவிர வேறு கூலி உண்டா?
[அல்குர்ஆன் 55:60]
Friday, December 8, 2023
உபதேசம் : 894
﷽ உபதேசம் : 894
08-12-2023 வெள்ளிக்கிழமை
"மறுமையில் நீங்கள் உங்கள் இறைவனைச் சந்திக்கும்பொழுது அவன் உங்கள் செயல்கள் குறித்து விசாரணை செய்வான். அறிந்து கொள்ளுங்கள்! எனக்குப் பிறகு ஒருவர் மற்றவருடைய கழுத்தை வெட்டிக் கொள்ளும் வழி கெட்டவர்களாக மாறி விடாதீர்கள்!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூபக்ரா (ரலி) புகாரி - 4406
குர்ஆன் வசனம் 644
﷽ குர்ஆன் வசனம் 644
08-12-2023 வெள்ளிக்கிழமை
وَلِمَنۡ خَافَ مَقَامَ رَبِّهٖ جَنَّتٰنِۚ
தமது இறைவன் முன் நிற்பதை அஞ்சியவருக்கு இரண்டு சொர்க்கச் சோலைகள் உள்ளன.
[அல்குர்ஆன் 55:46]
Thursday, December 7, 2023
உபதேசம் : 893
﷽ உபதேசம் : 893
07-12-2023 வியாழக்கிழமை
"என்னுடைய சமுதாயத்தில் 3️⃣0️⃣ பொய்யர்கள் தோன்றி, அவர்கள் அனைவரும் தன்னை நபியென்று வாதிடுகின்ற காலம் வராமல் மறுமை நாள் ஏற்படாது!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பாளர் : ஸவ்பான் (ரலி) திர்மிதீ - 3145
குர்ஆன் வசனம் 643
﷽ குர்ஆன் வசனம் 643
07-12-2023 வியாழக்கிழமை
يُعۡرَفُ الۡمُجۡرِمُوۡنَ بِسِيۡمٰهُمۡ فَيُؤۡخَذُ بِالنَّوَاصِىۡ وَ الۡاَقۡدَامِۚ
குற்றவாளிகள் அவர்களின் அடையாளத்தால் அறியப்படுவார்கள். முன் நெற்றிகளும், பாதங்களும் பிடிக்கப்படும்.
[அல்குர்ஆன் 55:41]
Wednesday, December 6, 2023
உபதேசம் : 892
﷽ உபதேசம் : 892
06-12-2023 புதன்கிழமை
"மற்ற நபிமார்களை விட 6 விஷயங்களில் நான் சிறப்பிக்கப்பட்டுள்ளேன்.
1. நான் ஒருங்கிணைந்த பொருள்களைக் குறிக்கும் சொற்கள் வழங்கப்பட்டுள்ளேன்.
2. எதிரிகளின் உள்ளத்தில் என்னைப் பற்றிய பயம் ஊட்டப்பட்டு எனக்கு வெற்றி அளிக்கப்பட்டது.
3. போரில் கிடைக்கும் பொருட்கள் எனக்கு அனுமதிக்கப்பட்டுள்ளன.
4. எனக்கு பூமி முழுவதும் தூய்மையானதாகவும், தொழுமிடமாகவும் ஆக்கப்பட்டுள்ளது.
5. நான் ஒட்டுமொத்த மனித இனத்திற்கும் தூதராக அனுப்பப்பட்டுள்ளேன்.
6. என்னுடன் நபிமார்கள் முற்றுப் பெற்று விட்டார்கள்!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி) முஸ்லிம் - 907
குர்ஆன் வசனம் 642
﷽ குர்ஆன் வசனம் 642
06-12-2023 புதன்கிழமை
يُرۡسَلُ عَلَيۡكُمَا شُوَاظٌ مِّنۡ نَّارٍ ۙ وَّنُحَاسٌ فَلَا تَنۡتَصِرٰنِۚ
(யுகமுடிவு நாளில்) உங்களுக்கு நெருப்பின் ஜுவாலையும், புகையும் அனுப்பப்படும். அப்போது உதவி பெற மாட்டீர்கள்.
[அல்குர்ஆன் 55:35]
உபதேசம் : 891
﷽ உபதேசம் : 891
05-12-2023 செவ்வாய்க்கிழமை
"எனக்கும் எனக்கு முன் சென்ற நபிமார்களுக்கும் உதாரணம் அழகாக அலங்கரித்து ஒரு வீட்டைக் கட்டிமுடித்து ஒரு மூலையில் செங்கல் அளவிற்கு இடத்தை விட்டுவிட்ட ஒரு மனிதனைப் போன்றது. மக்கள் அந்த வீட்டைச் சுற்றிப் பார்த்து ஆச்சரியம் அடைந்து ‘அங்கு செங்கல் பதிக்கப்பட்டிருக்கக்கூடாதா?’ என்று கேட்கலானார்கள். நான் தான் அந்த செங்கல்! நானே நபிமார்களின் முத்திரையானவன்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி) புகாரி - 3535
குர்ஆன் வசனம் 641
﷽ குர்ஆன் வசனம் 641
05-12-2023 செவ்வாய்க்கிழமை
سَنَفۡرُغُ لَـكُمۡ اَيُّهَ الثَّقَلٰنِۚ
மதிப்பு மிக்க (மனித, ஜின் ஆகிய) இரு இனத்தவர்களே! உங்களுக்காக (விசாரிக்க) நேரம் ஒதுக்குவோம்.
[அல்குர்ஆன் 55:31]
Monday, December 4, 2023
குர்ஆன் வசனம் 640
﷽ குர்ஆன் வசனம் 640
04-12-2023 திங்கட்கிழமை
اِنَّ الۡمُجۡرِمِيۡنَ فِىۡ ضَلٰلٍ وَّسُعُرٍۘ
குற்றம் புரிந்தோர் வழிகேட்டிலும், மனக் குழப்பத்திலும் உள்ளனர்.
[அல்குர்ஆன் 54:47]
உபதேசம் : 890
﷽ உபதேசம் : 890
04-12-2023 திங்கட்கிழமை
"மார்க்க அறிவோடு நற்குணத்தையும் பெற்றிருப்வரே உங்களில் சிறந்தவர்!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி) இப்னு ஹிப்பான் - 91
குர்ஆன் வசனம் 639
﷽ குர்ஆன் வசனம் 639
03-12-2023 ஞாயிற்றுக்கிழமை
وَالسَّاعَةُ اَدۡهٰى وَاَمَرُّ
யுகமுடிவு நேரம் மிகவும் அதிர்ச்சியளிப்பது; மிகவும் கசப்பானது.
[அல்குர்ஆன் 54:46]
உபதேசம் : 889
﷽ உபதேசம் : 889
03-12-2023 ஞாயிற்றுக்கிழமை
"ஒருவருக்கு முன்னால் என்னைப் பற்றிக் கூறப்பட்டு அவர் என் மீது ஸலவாத் கூறவில்லையென்றால் அவர்தான் உண்மையான கஞ்சன்!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஹுஸைன் (ரலி) திர்மிதீ-3546
உபதேசம் : 888
﷽ உபதேசம் : 888
02-12-2023 சனிக்கிழமை
"லாயிலாஹா இல்லல்லாஹ்' என்பது யாருடைய இறுதி வார்த்தையாக இருக்கின்றதோ அவர் சுவனத்தில் நுழைவார்!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : முஆத் பின் ஜபல் (ரலி) அபூதாவூத்-3116
குர்ஆன் வசனம் 638
﷽ குர்ஆன் வசனம் 638
02-12-2023 சனிக்கிழமை
سَيَعۡلَمُوۡنَ غَدًا مَّنِ الۡكَذَّابُ الۡاَشِرُ
யார் கர்வம் கொண்ட பெரும் பொய்யர் என்பதை நாளை அறிவார்கள்.
[அல்குர்ஆன் 54:26]
Friday, December 1, 2023
குர்ஆன் வசனம் 637
﷽ குர்ஆன் வசனம் 637
01-12-2023 வெள்ளிக்கிழமை
وَلَقَدۡ يَسَّرۡنَا الۡقُرۡاٰنَ لِلذِّكۡرِ فَهَلۡ مِنۡ مُّدَّكِرٍ
இக்குர்ஆனை விளங்குவதற்கு எளிதாக்கியுள்ளோம். படிப்பினை பெறுவோர் உண்டா?
[அல்குர்ஆன் 54:17]
உபதேசம் : 887
﷽ உபதேசம் : 887
01-12-2023 வெள்ளிக்கிழமை
"இறைநம்பிக்கையாளன் குறைகூறித் திரிபவனாகவும் அருவருப்பாக செயல்படுபவனாகவும் வெட்கமின்றி பேசுபவனாகவும் இருக்க மாட்டான்!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் (ரலி) அல் அதபுல் முஃப்ரத் - 312
Thursday, November 30, 2023
குர்ஆன் வசனம் 636
﷽ குர்ஆன் வசனம் 636
30-11-2023 வியாழக்கிழமை
وَاَنَّهٗ هُوَ اَمَاتَ وَ اَحۡيَا
அவனே மரணிக்கச் செய்கிறான். உயிர்ப்பிக்கவும் செய்கிறான்.
[அல்குர்ஆன் 53:44]
உபதேசம் : 886
﷽ உபதேசம் : 886
30-11-2023 வியாழக்கிழமை
"தான் உணவளிக்கக் கடமைப் பட்டவர்களுக்கு உணவளிக்காமல் இருப்பதே ஒரு மனிதன் பாவி என்பதற்குப் போதுமானதாகும்!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ர் ( ரலி ) இப்னு ஹிப்பான்-4240
Wednesday, November 29, 2023
உபதேசம் : 885
﷽ உபதேசம் : 885
29-11-2023 புதன்கிழமை
"ஆட்டு மந்தையில் விடப்பட்ட பசியுள்ள இரு ஓநாய்களால் ஏற்படும் பாதிப்பை விட, பொருளாசையும், பதவி ஆசையும் மனிதனுடைய மாா்க்கத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : மாலிக் (ரலி) திர்மிதீ - 2376
குர்ஆன் வசனம் 635
﷽ குர்ஆன் வசனம் 635
29-11-2023 புதன்கிழமை
وَاَنَّهٗ هُوَ اَضۡحَكَ وَاَبۡكٰىۙ
அவனே சிரிக்க வைக்கிறான். அழவும் வைக்கிறான்.
[அல்குர்ஆன் 53:43]
Tuesday, November 28, 2023
உபதேசம் : 884
﷽ உபதேசம் : 884
28-11-2023 செவ்வாய்க்கிழமை
"மெல்லிய உடையணிந்து, அந்நிய ஆண்களை தன் பக்கம் ஈர்க்கக்கூடிய பெண்கள் நரகத்திற்கு உரியவர்கள்!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி) முஸ்லிம் - 5487
குர்ஆன் வசனம் 634
﷽ குர்ஆன் வசனம் 634
28-11-2023 செவ்வாய்க்கிழமை
وَاَنۡ لَّيۡسَ لِلۡاِنۡسَانِ اِلَّا مَا سَعٰىۙ
மனிதனுக்கு அவன் முயற்சித்தது தவிர வேறு இல்லை
[அல்குர்ஆன் 53:39]
Monday, November 27, 2023
குர்ஆன் வசனம் 633
﷽ குர்ஆன் வசனம் 633
27-11-2023 திங்கட்கிழமை
وَاَنۡ لَّيۡسَ لِلۡاِنۡسَانِ اِلَّا مَا سَعٰىۙ
ஒருவர் மற்றவரின் சுமையைச் சுமக்கமாட்டார்.
[அல்குர்ஆன் 53:39]
உபதேசம் : 883
﷽ உபதேசம் : 883
27-11-2023 திங்கட்கிழமை
"பரட்டைத் தலையுடைய, வீட்டுவாசல்களுக்கு வெளியே தடுத்து நிறுத்தப்படக்கூடிய எத்தனையோ பேர், அல்லாஹ்விடம் தகுதியால் உயர்ந்தவர்களாய் இருப்பாா்கள். அவர்கள் அல்லாஹ்வின் மீது ஆணையிட்டு எதையேனும் கூறுவார்களானால் அதை அல்லாஹ் உண்மையாக்குவான்!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி) முஸ்லிம் - 5483
உபதேசம் : 882
﷽ உபதேசம் : 882
26-11-2023 ஞாயிற்றுக்கிழமை
"குர்ஆனை ஓதுங்கள்! அதை ஓதுவதன் மூலம் சாப்பிடாதீர்கள்!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அப்துர் ரஹ்மான் பின் (ரலி) அஹ்மத்-14986
குர்ஆன் வசனம் 632
﷽ குர்ஆன் வசனம் 632
26-11-2023 ஞாயிற்றுக்கிழமை
فَلَا تُزَكُّوۡۤا اَنۡفُسَكُمۡ ؕ هُوَ اَعۡلَمُ بِمَنِ اتَّقٰى
எனவே உங்களை நீங்களே பரிசுத்தமாகக் கருதிக் கொள்ளாதீர்கள்! (இறை) அச்சமுடையவர் யார் என்பதை அவனே நன்கறிவான்.
[அல்குர்ஆன் 53:32]
Saturday, November 25, 2023
உபதேசம் : 881
﷽ உபதேசம் : 881
25-11-2023 சனிக்கிழமை
"அல்லாஹ்வின் தூதரே! என்னை என் சமுதாயத்திற்கு இமாமாக நியமியுங்கள்!" என்று ஒருவர் கேட்டதற்கு, நபி (ஸல்) அவர்கள் "சரி நீ அவர்களின் இமாமாக செயல்படு! பலவீனமானவர்களை சிரமமில்லாமல் வழி நடத்து! (?பாங்கு சொல்வதற்கு கூலி கேட்காத அழைப்பாளரை ஏற்படுத்திக் கொள்!" என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : உஸ்மான் இப்னு அபுஸ் ஆஸ் (ரலி) அஹ்மத் - 15670
குர்ஆன் வசனம் 631
﷽ குர்ஆன் வசனம் 631
25-11-2023 சனிக்கிழமை
اَلَّذِيۡنَ يَجۡتَنِبُوۡنَ كَبٰٓٮِٕرَ الۡاِثۡمِ وَ الۡفَوَاحِشَ اِلَّا اللَّمَمَؕ اِنَّ رَبَّكَ وَاسِعُ الۡمَغۡفِرَةِؕ
பெரும்பாவங்களையும், வெட்கக்கேடானவற்றையும் விட்டு யார் விலகிக் கொள்கிறாரோ (அவர் மன்னிப்பு கேட்டால்) உமது இறைவன் தாராளமாக மன்னிப்பவன்.
[அல்குர்ஆன் 53:32]
Friday, November 24, 2023
குர்ஆன் வசனம் 630
﷽ குர்ஆன் வசனம் 630
24-11-2023 வெள்ளிக்கிழமை
لِيَجۡزِىَ الَّذِيۡنَ اَسَآءُوۡا بِمَا عَمِلُوۡا وَيَجۡزِىَ الَّذِيۡنَ اَحۡسَنُوۡا بِالۡحُسۡنٰى
தீமை செய்தோரை அவர்கள் செய்து கொண்டிருந்ததன் காரணமாகத் தண்டிப்பான். நன்மை செய்து கொண்டிருப்போருக்கு அழகிய கூலியைக் கொடுப்பான்.
[அல்குர்ஆன் 53:31]
உபதேசம் : 880
﷽ உபதேசம் : 880
24-11-2023 வெள்ளிக்கிழமை
"இறைத்தூதர் அவர்களே! நான் முதலில் இறைவழியில் போர் புரிந்துவிட்டு பிறகு இஸ்லாத்தை ஏற்கட்டுமா?" என்று ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் கேட்டதற்கு "முதலில் நீ இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு பிறகு போரிடு' என்று கூறினார்கள். எனவே, அந்த மனிதர் முதலில் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு பிறகு இறை வழியில்) போரிட்டு அதில் அவர் கொல்லப்பட்டார். இவர் "சிறிதளவே செயல்பட்டு அதிக நற்பலனைப் பெற்றுக்கொண்டார் என்று அவரைப்பற்றி நபி (ஸவ்) அவா்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : பராஉ (ரலி) புகாரி - 2808
Thursday, November 23, 2023
குர்ஆன் வசனம் 629
﷽ குர்ஆன் வசனம் 629
23-11-2023 வியாழக்கிழமை
ذٰلِكَ مَبۡلَـغُهُمۡ مِّنَ الۡعِلۡمِ ؕ اِنَّ رَبَّكَ هُوَ اَعۡلَمُ بِمَنۡ ضَلَّ عَنۡ سَبِيۡلِهٖ ۙ وَهُوَ اَعۡلَمُ بِمَنِ اهۡتَدٰى
தனது வழியை விட்டும் தவறியவன் யார்? நேர்வழி பெற்றவன் யார்? என்பதை உமது இறைவன் நன்கறிவான்.
[அல்குர்ஆன் 53:30]
உபதேசம் : 879
﷽ உபதேசம் : 879
23-11-2023 வியாழக்கிழமை
நான் இறைவனிடம் என் தாயாருக்காகப் பாவமன்னிப்புத் தேட அனுமதி கேட்டேன். அவன் அனுமதிக்கவில்லை. அவரது அடக்கத்தலத்தைச் சந்திக்க அனுமதி கேட்டேன். அவன் என்னை அனுமதித்தான்!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி) முஸ்லிம்-1776
Wednesday, November 22, 2023
உபதேசம் : 878
﷽ உபதேசம் : 878
22-11-2023 புதன்கிழமை
"நபிமார்களின் உடல்களை தீண்டக்கூடாது என பூமிக்கு அல்லாஹ் கட்டளையிட்டுள்ளான்!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அவ்ஸ் பின் (ரலி) நஸயீ - 1357
குர்ஆன் வசனம் 628
﷽ குர்ஆன் வசனம் 628
22-11-2023 புதன்கிழமை
فَاَعۡرِضۡ عَنۡ مَّنۡ تَوَلّٰى ۙ عَنۡ ذِكۡرِنَا وَلَمۡ يُرِدۡ اِلَّا الۡحَيٰوةَ الدُّنۡيَا
இவ்வுலக வாழ்க்கையைத் தவிர (வேறு எதையும்) நாடாமல் நமது அறிவுரையைப் புறக்கணிப்பவரை அலட்சியம் செய்வீராக!
[அல்குர்ஆன் 53:29]
Tuesday, November 21, 2023
குர்ஆன் வசனம் 627
﷽ குர்ஆன் வசனம் 627
21-11-2023 செவ்வாய்க்கிழமை
وَاِنَّ الظَّنَّ لَا يُغۡنِىۡ مِنَ الۡحَـقِّ شَيۡـًٔـاۚ
ஊகம் உண்மைக்கு எதிராக ஒரு பயனும் தராது.
[அல்குர்ஆன் 53:28]
உபதேசம் : 877
﷽ உபதேசம் : 877
21-11-2023 செவ்வாய்க்கிழமை
"பெற்றோருடைய அன்பில் இறைவனுடைய அன்பும் பெற்றோருடை வெறுப்பில் இறைவனுடைய வெறுப்பும் இருக்கின்றன!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் (ரலி திர்மிதீ - 1899
Monday, November 20, 2023
குர்ஆன் வசனம் 626
﷽ குர்ஆன் வசனம் 626
20-11-2023 திங்கட்கிழமை
اِنۡ هُوَ اِلَّا وَحۡىٌ يُّوۡحٰىۙ
அ(வர் பேசுவ)து அறிவிக்கப்படும் செய்தியைத் தவிர வேறில்லை.
[அல்குர்ஆன் 53:4]
உபதேசம் : 876
﷽ உபதேசம் : 876
20-11-2023 திங்கட்கிழமை
"திருடர்களில் மிகவும் மோசமான திருடன் தொழுகையில் திருடுபவனே!"என்று நபி (ஸல்) அவர்கள் கூறியபொழுது, 'தொழுகையில் எப்படி ஒருவன் திருடுவான்?‘ என்று தோழா்கள் கேட்டனா். "தனது தொழுகையின் ருகூவுவையும், ஸுஜுதையும் முழுமையாகச் செய்யாதவனே அந்தத் திருடன்!" என்று நபி (ஸல்) அவா்கள் பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர் : அபூ கதாதா (ரலி) அஹ்மத் - 22040
Sunday, November 19, 2023
உபதேசம் : 875
﷽ உபதேசம் : 875
19-11-2023 ஞாயிற்றுக்கிழமை
"முஸ்லிம்களின் விவகாரங்களை ஒருவரிடம் பொறுப்பு ஒப்படைத்திருக்கும் நிலையில் அவர், மக்களின் அவசியத் தேவைகளையும் வறுமையையும் கண்டுகொள்ளாமல் இருந்தால் அவருடைய அவசியத் தேவைகளையும் வறுமையையும் அல்லாஹ் கண்டுகொள்ளமாட்டான்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : முஆவியா (ரலி) அபூதாவூத் - 2559
குர்ஆன் வசனம் 625
﷽ குர்ஆன் வசனம் 625
19-11-2023 ஞாயிற்றுக்கிழமை
وَسَبِّحۡ بِحَمۡدِ رَبِّكَ حِيۡنَ تَقُوۡمُۙ
நீர் எழும் நேரத்தில் உமது இறைவனைப் புகழ்ந்து போற்றுவீராக!
[அல்குர்ஆன் 52:48]
Saturday, November 18, 2023
உபதேசம் : 874
﷽ உபதேசம் : 874
18-11-2023 சனிக்கிழமை
"குடிமக்களில் சிலரை நிர்வகிக்கும் பொறுப்பை அல்லாஹ் ஓர் அடியாருக்கு வழங்கியிருக்க, அவர் அந்த மக்களை ஏமாற்றி மோசடி செய்த நிலையிலேயே மரணித்தால், அவருக்கு அல்லாஹ் சொர்க்கத்தைத் தடை செய்யாமல் இருப்பதில்லை!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : மஃகில் பின் யஸார் (ரலி) முஸ்லிம் : 227
குர்ஆன் வசனம் 624
﷽ குர்ஆன் வசனம் 624
18-11-2023 சனிக்கிழமை
وَالَّذِيۡنَ اٰمَنُوۡا وَاتَّبَعَتۡهُمۡ ذُرِّيَّتُهُمۡ بِاِيۡمَانٍ اَلۡحَـقۡنَا بِهِمۡ ذُرِّيَّتَهُمۡ وَمَاۤ اَلَـتۡنٰهُمۡ مِّنۡ عَمَلِهِمۡ مِّنۡ شَىۡءٍؕ
யார் நம்பிக்கை கொண்டு அவர்களின் சந்ததிகளும் நம்பிக்கை கொள்வதில் அவர்களைப் பின்பற்றினார்களோ அவர்களுடன் அவர்களின் சந்ததிகளைச் சேர்ப்போம். அவர்களின் செயல்களில் எதையும் குறைக்க மாட்டோம்.
[அல்குர்ஆன் 52:21]
உபதேசம் : 873
﷽ உபதேசம் : 873
17-11-2023 வெள்ளிக்கிழமை
"அழகிய முறையில் கடனை திருப்பிச் செலுத்துபவரே உங்களில் சிறந்தவர்!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி) புகாரி - 2390
குர்ஆன் வசனம் 623
﷽ குர்ஆன் வசனம் 623
17-11-2023 வெள்ளிக்கிழமை
فَوَيۡلٌ لِّـلَّذِيۡنَ كَفَرُوۡا مِنۡ يَّوۡمِهِمُ الَّذِىۡ يُوۡعَدُوۡنَ
(ஏக இறைவனை) மறுப்போருக்கு அவர்கள் எச்சரிக்கப்பட்ட நாளில் கேடு உள்ளது.
[அல்குர்ஆன் 51:60]
Thursday, November 16, 2023
குர்ஆன் வசனம் 622
﷽ குர்ஆன் வசனம் 622
16-11-2023 வியாழக்கிழமை
فَاِنَّ لِلَّذِيۡنَ ظَلَمُوۡا ذَنُوۡبًا مِّثۡلَ ذَنُوۡبِ اَصۡحٰبِهِمۡ فَلَا يَسۡتَعۡجِلُوۡنِ
அநீதி இழைத்தோருக்கு அவர்களின் முன் சென்ற சகாக்களின் தண்டனையைப் போல் தண்டனை உள்ளது.
[அல்குர்ஆன் 51:59]
உபதேசம் : 872
﷽ உபதேசம் : 872
16-11-2023 வியாழக்கிழமை
"தமக்குக் கட்டளையிடப்பட்ட தர்மத்திற்காக முழுமையாகவும் மனப்பூர்வமாகவும்ம் செலவிடுகின்ற, நம்பகமான கருவூலக்காப்பாளர் தர்மம் செய்பவர்களில் ஒருவராவார்!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூ மூசா (ரலி) புகாரி-2319
Wednesday, November 15, 2023
குர்ஆன் வசனம் 621
﷽ குர்ஆன் வசனம் 621
15-11-2023 புதன்கிழமை
مَاۤ اُرِيۡدُ مِنۡهُمۡ مِّنۡ رِّزۡقٍ وَّمَاۤ اُرِيۡدُ اَنۡ يُّطۡعِمُوۡنِ
நான் அவர்களிடம் செல்வத்தை நாடவில்லை. அவர்கள் எனக்கு உணவளிப்பதையும் நான் நாடவில்லை.
[அல்குர்ஆன் 51:57]
உபதேசம் : 871
﷽ உபதேசம் : 871
15-11-2023 புதன்கிழமை
"ஆதமுடைய மகனே! நீ பிறருக்குக்கொடு. உனக்கு நான் கொடுப்பேன்" என்று வளமும் உயா்வும் மிக்க அல்லாஹ் கூறுவதாக நபி (ஸல்) அவர்கள் கூறினாா்கள்.
அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி) முஸ்லிம் - 1815
Tuesday, November 14, 2023
உபதேசம் : 870
﷽ உபதேசம் : 870
14-11-2023 செவ்வாய்க்கிழமை
நபி (ஸல்) அவர்களிடம் நன்மை மற்றும் தீமை பற்றிக் கேட்டதற்கு, “நன்மை என்பது நற்பண்பாகும்! எந்தச் செயல் குறித்து உனது உள்ளத்தில் நெருடல் ஏற்படுவதுடன், அதை மக்கள் தெரிந்துகொள்வதை நீ வெறுப்பாயோ அதுவே தீமையாகும்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : நவ்வாஸ் பின் சம்ஆன் (ரலி) முஸ்லிம் - 4992
குர்ஆன் வசனம் 620
﷽ குர்ஆன் வசனம் 620
14-11-2023 செவ்வாய்க்கிழமை
وَمَا خَلَقۡتُ الۡجِنَّ وَالۡاِنۡسَ اِلَّا لِيَعۡبُدُوۡنِ
ஜின்னையும், மனிதனையும் என்னை வணங்குவதற்காகவே தவிர (வேறு எதற்காகவும்) நான் படைக்கவில்லை.
[அல்குர்ஆன் 51:56]
Monday, November 13, 2023
உபதேசம் : 869
﷽ உபதேசம் : 869
13-11-2023 திங்கட்கிழமை
"வெள்ளை ஆடையை அணியுங்கள!. அது மிகத் தூய்மையானதும் அழகு நிறைந்ததுமாகும்!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஸமுரா பின் ஜுன்துப் (ரலி) திர்மிதீ - 2734
குர்ஆன் வசனம் 619
﷽குர்ஆன் வசனம் 619
13-11-2023 திங்கட்கிழமை
وَّذَكِّرۡ فَاِنَّ الذِّكۡرٰى تَنۡفَعُ الۡمُؤۡمِنِيۡنَ
அறிவுரை கூறுவீராக! அந்த அறிவுரை நம்பிக்கை கொண்டோருக்குப் பயன் தரும்.
[அல்குர்ஆன் 51:55]
குர்ஆன் வசனம் 618
﷽ குர்ஆன் வசனம் 618
12-11-2023 ஞாயிற்றுக்கிழமை
اٰخِذِيۡنَ مَاۤ اٰتٰٮهُمۡ رَبُّهُمۡؕ اِنَّهُمۡ كَانُوۡا قَبۡلَ ذٰلِكَ مُحۡسِنِيۡنَؕ
(இறைவனை) அஞ்சியோர் இறைவன் தங்களுக்கு வழங்கியதைப் பெற்றுக் கொண்டு சொர்க்கச் சோலைகளிலும், நீரூற்றுகளிலும் இருப்பார்கள். அவர்கள் இதற்கு முன் நன்மை செய்வோராக இருந்தனர்.
[அல்குர்ஆன் 51:15-16]
உபதேசம் : 868
﷽ உபதேசம் : 868
12-11-2023 ஞாயிற்றுக்கிழமை
"தாம் கேட்பதை மக்கள் விரும்பாத நிலையில்’ அல்லது “தம்மைக் கண்டு மக்கள் வெருண்டோடும் நிலையில்’ யார் மற்றவா்களுடைய உரையாடைலைக் காது தாழ்த்தி ஒட்டுக் கேட்கின்றாரோ அவரது காதில் மறுமை நாளில் ஈயம் உருக்கி ஊற்றப்படும்!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி) புகாரி - 7042
Saturday, November 11, 2023
உபதேசம் : 867
﷽ உபதேசம் : 867
11-11-2023 சனிக்கிழமை
"பெற்றோரை நோவினை செய்பவனும் சூனியத்தை உண்மையென்று நம்புபவனும் நிரந்தரமாக மது அருந்தபவனும் விதியை மறுப்பவனும் சொர்க்கம் செல்ல மாட்டார்கள்!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூ தர்தா (ரலி) அஹ்மத் : 26212
குர்ஆன் வசனம் 617
﷽ குர்ஆன் வசனம் 617
11-11-2023 சனிக்கிழமை
قُتِلَ الۡخَـرّٰصُوۡنَۙ
பொய்யர்கள் அழிவார்கள்.
[அல்குர்ஆன் 51:10]
உபதேசம் : 866
﷽ உபதேசம் : 866
10-11-2023 வெள்ளிக்கிழமை
"ஆதமுடைய மகன் (மனிதன்) காலையில் எழுந்தவுடன் மற்ற உறுப்புகள் அனைத்தும் நாவைக் கண்டு பயப்படுகின்றன. அவை நாவை நோக்கி "நாவே! எங்கள் விஷயத்தில் அல்லாஹ்வை பயந்து கொள்! நாங்கள் உன்னைச் சாாந்துள்ளோம். நீ நேராக இருந்தால் நாங்களும் நேராக இருப்போம்.நீ கோணலாகி விட்டால் நாங்களும் கோணலாகி விடுவோம்!' எனக் கூறுகின்றன" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூ ஸயீத் அல்குத்ரீ (ரலி) திர்மிதீ - 2407
குர்ஆன் வசனம் 616
﷽ குர்ஆன் வசனம் 616
10-11-2023 வெள்ளிக்கிழமை
نَحۡنُ اَعۡلَمُ بِمَا يَقُوۡلُوۡنَ وَمَاۤ اَنۡتَ عَلَيۡهِمۡ بِجَـبَّارٍ فَذَكِّرۡ بِالۡقُرۡاٰنِ مَنۡ يَّخَافُ وَعِيۡدِ
நீர் அவர்கள் மீது அடக்குமுறை செய்பவர் அல்லர். எனது எச்சரிக்கையை அஞ்சுபவருக்கு குர்ஆன் மூலம் அறிவுரை கூறுவீராக!
[அல்குர்ஆன் 50:45]
Thursday, November 9, 2023
குர்ஆன் வசனம் 615
﷽ குர்ஆன் வசனம் 615
09-11-2023 வியாழக்கிழமை
وَلَقَدۡ خَلَقۡنَا السَّمٰوٰتِ وَالۡاَرۡضَ وَمَا بَيۡنَهُمَا فِىۡ سِتَّةِ اَيَّامٍۖ وَّمَا مَسَّنَا مِنۡ لُّغُوۡبٍ
வானங்களையும், பூமியையும், அவற்றுக்கு இடைப்பட்டதையும் ஆறு நாட்களில் படைத்தோம். நமக்கு எந்தக் களைப்பும் ஏற்படவில்லை.
[அல்குர்ஆன் 50:38]
உபதேசம் : 865
﷽ உபதேசம் : 865
09-11-2023 வியாழக்கிழமை
"உங்களில் ஒருவர் நீண்ட நாட்கள் கழித்து ஊர் திரும்பினால் இரவு நேரத்தில் திடீரெனத் தம் வீட்டாரிடம் செல்ல வேண்டாம்!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஜாபிர் இப்னு அப்தில்லாஹ் (ரலி) புகாரி - 5244
குர்ஆன் வசனம் 614
﷽ குர்ஆன் வசனம் 614
08-11-2023 புதன்கிழமை
اِنَّ فِىۡ ذٰلِكَ لَذِكۡرٰى لِمَنۡ كَانَ لَهٗ قَلۡبٌ اَوۡ اَلۡقَى السَّمۡعَ وَهُوَ شَهِيۡدٌ
யாருக்கு உள்ளம் உள்ளதோ, அல்லது கவனமாகச் செவியுறுகிறாரோ அவருக்கு இதில் படிப்பினை உள்ளது.
[அல்குர்ஆன் 50:37]
உபதேசம் : 864
﷽ உபதேசம் : 864
08-11-2023 புதன்கிழமை
"வயதான பெற்றோரை அடைந்திருந்தும் யார் சொர்க்கம் செல்லவில்லையோ அவருடைய மூக்கு மண்ணைக் கவ்வட்டும்!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி) முஸ்லிம் - 4627
Tuesday, November 7, 2023
உபதேசம் : 863
﷽ உபதேசம் : 863
07-11-2023 செவ்வாய்க்கிழமை
"தனது உள்ளத்தை எதிர்த்துப் போரிடுபவனே போராளியாவான்!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஃபுழாலத் பின் உபைத் (ரலி) திர்மிதீ - 1546
குர்ஆன் வசனம் 613
﷽ குர்ஆன் வசனம் 613
07-11-2023 செவ்வாய்க்கிழமை
وَاُزۡلِفَتِ الۡجَـنَّةُ لِلۡمُتَّقِيۡنَ غَيۡرَ بَعِيۡدٍ
(இறைவனை) அஞ்சியோருக்கு சொர்க்கம் தொலைவின்றி நெருக்கத்தில் கொண்டு வரப்படும்.
[அல்குர்ஆன் 50:31]
Monday, November 6, 2023
குர்ஆன் வசனம் 612
﷽ குர்ஆன் வசனம் 612
06-11-2023 திங்கட்கிழமை
اِذۡ يَتَلَقَّى الۡمُتَلَقِّيٰنِ عَنِ الۡيَمِيۡنِ وَعَنِ الشِّمَالِ قَعِيۡدٌ
مَا يَلۡفِظُ مِنۡ قَوۡلٍ اِلَّا لَدَيۡهِ رَقِيۡبٌ عَتِيۡدٌ
வலப்புறமும், இடப்புறமும் எடுத்தெழுதும் இருவர் அமர்ந்து எடுத்தெழுதும்போது, அவன் எந்தச் சொல்லைப் பேசினாலும் அவனிடம் கண்காணிக்கும் எழுத்தாளர் இல்லாமல் இருப்பதில்லை.
[அல்குர்ஆன் 50:17-18]
உபதேசம் : 862
﷽ உபதேசம் : 862
06-11-2023 திங்கட்கிழமை
"உங்களுடைய கைகளாலும் நாவுகளாலும் பொருட்களாலும் ஜிஹாத் செய்யுங்கள்!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அனஸ் (ரலி) நஸயீ - 3141
குர்ஆன் வசனம் 611
﷽ குர்ஆன் வசனம் 611
05-11-2023 ஞாயிற்றுக்கிழமை
وَلَقَدۡ خَلَقۡنَا الۡاِنۡسَانَ وَنَعۡلَمُ مَا تُوَسۡوِسُ بِهٖ نَفۡسُهٗ ۖۚ وَنَحۡنُ اَقۡرَبُ اِلَيۡهِ مِنۡ حَبۡلِ الۡوَرِيۡدِ
மனிதனைப் படைத்தோம். அவனது மனம் எதை எண்ணுகிறது என்பதையும் அறிவோம். நாம் அவனுக்குப் பிடரி நரம்பை விட மிகவும் நெருக்கமாக இருக்கிறோம்.
[அல்குர்ஆன் 50:16]
உபதேசம் : 861
﷽ உபதேசம் : 861
05-11-2023 ஞாயிற்றுக்கிழமை"அநியாயக்கார அரசனிடம் நீதியைச் சொல்வதே சிறந்த ஜிஹாத்!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூ ஸயீத் அல்குத்ரீ (ரலி) அபூதாவூத் - 3781
Saturday, November 4, 2023
குர்ஆன் வசனம் 609
﷽ குர்ஆன் வசனம் 609
03-11-2023 வெள்ளிக்கிழமை
قُلۡ اَ تُعَلِّمُوۡنَ اللّٰهَ بِدِيۡـنِكُمۡ ؕ وَاللّٰهُ يَعۡلَمُ مَا فِى السَّمٰوٰتِ وَمَا فِى الۡاَرۡضِؕ
உங்கள் மார்க்கத்தை அல்லாஹ்வுக்குக் கற்றுக் கொடுக்கிறீர்களா? வானங்களிலும், பூமியிலும் உள்ளதை அல்லாஹ் அறிவான்.
[அல்குர்ஆன் 49:16]
உபதேசம் : 859
﷽ உபதேசம் : 859
03-11-2023 வெள்ளிக்கிழமை
"ஓர் ஆண் மற்றோர் ஆணின் மறைவிடத்தைப் பார்க்க வேண்டாம்! ஒரு பெண் மற்றோர் பெண்ணின் மறைவிடத்தைப் பார்க்க வேண்டாம்! ஒரே ஆடைக்குள் இரு ஆண்கள் சேர்ந்து அல்லது இரு பெண்கள் சேர்ந்து படுக்க வேண்டாம்!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூசயீத் அல்குத்ரீ (ரலி) முஸ்லிம் - 565
குர்ஆன் வசனம் 610
﷽ குர்ஆன் வசனம் 610
04-11-2023 சனிக்கிழமை
அல்லாஹ்வே நம்பிக்கை கொள்ள உங்களுக்கு வழிகாட்டி உங்களுக்கு உபகாரம் புரிந்துள்ளான்
[அல்குர்ஆன் 49:17]
உபதேசம் : 860
Thursday, November 2, 2023
குர்ஆன் வசனம் 608
﷽ குர்ஆன் வசனம் 608
02-11-2023 வியாழக்கிழமை
اِنَّمَا الۡمُؤۡمِنُوۡنَ الَّذِيۡنَ اٰمَنُوۡا بِاللّٰهِ وَرَسُوۡلِهٖ ثُمَّ لَمۡ يَرۡتَابُوۡا وَجَاهَدُوۡا بِاَمۡوَالِهِمۡ وَاَنۡفُسِهِمۡ فِىۡ سَبِيۡلِ اللّٰهِ ؕ اُولٰٓٮِٕكَ هُمُ الصّٰدِقُوۡنَ
அல்லாஹ்வையும், அவனது தூதரையும் நம்பி பின்னர் சந்தேகம் கொள்ளாது, தமது பொருட்களாலும், உயிர்களாலும் அல்லாஹ்வின் பாதையில் தியாகம் செய்வோரே நம்பிக்கை கொண்டவர்கள். அவர்களே உண்மையாளர்கள்.
[அல்குர்ஆன் 49:15]
உபதேசம் : 858
﷽ உபதேசம் : 858
02-11-2023 வியாழக்கிழமை
கிராமவாசி ஒருவர் வந்து உளூ செய்யும் முறையைப் பற்றி கேட்டதற்கு, நபி (ஸல்) அவர்கள், "மூன்று, மூன்று தடவைதான்! இது தான் உளூ. யார் இதை விட அதிகப்படுத்துகிறாரோ அவர் மாறு செய்துவிட்டார், வரம்பு மீறிவிட்டார். அநீதி இழைத்து விட்டார்!" என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் :அம்ர் இப்னு ஷுஐப் (ரலி) இப்னுமாஜா - 440
Wednesday, November 1, 2023
உபதேசம் : 857
﷽ உபதேசம் : 857
01-11-2023 புதன்கிழமை
நபி (ஸல்) அவர்கள் குளிப்பு கடமையாக இருக்கும் நிலையில் உறங்க விரும்பினால் தொழுகைக்காக உளூ செய்வதைப் போன்று உளு செய்து கொள்வார்கள்!
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) முஸ்லிம் - 512
குர்ஆன் வசனம் 607
﷽ குர்ஆன் வசனம் 607
01-11-2023 புதன்கிழமை
وَاِنۡ تُطِيۡعُوا اللّٰهَ وَرَسُوۡلَهٗ لَا يَلِتۡكُمۡ مِّنۡ اَعۡمَالِكُمۡ شَيۡـًٔــا
அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் நீங்கள் கட்டுப்பட்டால் உங்கள் செயல்களில் எதையும் அவன் குறைத்திட மாட்டான்.
[அல்குர்ஆன் 49:14]
Tuesday, October 31, 2023
உபதேசம் : 856
﷽ உபதேசம் : 856
31-10-2023 செவ்வாய்க்கிழமை
"மக்களில் சிறந்தவர் யார்?' என்று நபி (ஸல்) அவா்களிடம் கேட்கப்பட்டதற்கு, "உண்மை பேசுபவரும் தூய உள்ளம் கொண்டவரும் ஆவார்!" என்று பதிலளித்தார்கள். அதற்கு மக்கள், "உண்மை பேசுபவரை அறிவோம்! ஆனால் தூய உள்ளம் கொண்டவர் யார்?" என்று கேட்க்க நபி (ஸல்) அவர்கள் "அவரது உள்ளத்தில் பாவமோ, அநியாயமோ, குரோதமோ, பொறாமையோ இருக்காது!" என்று கூறினாா்கள்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) இப்னுமாஜா - 4206
குர்ஆன் வசனம் 606
﷽ குர்ஆன் வசனம் 606
31-10-2023 செவ்வாய்க்கிழமை
اِنَّ اَكۡرَمَكُمۡ عِنۡدَ اللّٰهِ اَ تۡقٰٮكُمۡ
உங்களில் (இறைவனை) அதிகம் அஞ்சுவோரே அல்லாஹ்விடம் அதிகம் சிறந்தவர்.
[அல்குர்ஆன் 49:13]
Monday, October 30, 2023
உபதேசம் : 855
﷽ உபதேசம் : 855
30-10-2023 திங்கட்கிழமை
"இல்லறத்தில் ஈடுபடாமலும் பாவமான செயல்களைச் செய்யாமலும் ஒருவர் அல்லாஹ்வுக்காகவே ஹஜ் செய்தால் அவர் அவருடைய தாய் அவரைப் பெற்றெடுத்த நாளில் இருந்ததைப் போன்று (பாவமறியாப் பாலகராகத்) திரும்புவார்!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பேன் அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி) புகாரி - 1521
குர்ஆன் வசனம் 605
﷽ குர்ஆன் வசனம் 605
30-10-2023 திங்கட்கிழமை
يٰۤاَيُّهَا النَّاسُ اِنَّا خَلَقۡنٰكُمۡ مِّنۡ ذَكَرٍ وَّاُنۡثٰى وَجَعَلۡنٰكُمۡ شُعُوۡبًا وَّقَبَآٮِٕلَ لِتَعَارَفُوۡا
மனிதர்களே! உங்களை ஓர் ஆண் ஒரு பெண்ணிலிருந்தே நாம் படைத்தோம். நீங்கள் ஒருவரையொருவர் அறிந்து கொள்வதற்காக உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம்.
[அல்குர்ஆன் 49:13]
Sunday, October 29, 2023
குர்ஆன் வசனம் 604
﷽ குர்ஆன் வசனம் 604
29-10-2023 ஞாயிற்றுக்கிழமை
துருவித் துருவி ஆராயாதீர்கள்! உங்களில் ஒருவர் மற்றவரைப் புறம் பேசாதீர்கள்! உங்களில் எவரேனும் இறந்த தமது சகோதரனின் மாமிசத்தைச் சாப்பிட விரும்புவாரா? அதை வெறுப்பீர்கள். அல்லாஹ்வை அஞ்சுங்கள்!
[அல்குர்ஆன் 49:12]
உபதேசம் : 854
﷽ உபதேசம் : 854
29-10-2023 ஞாயிற்றுக்கிழமை
"சாலையில் ஒரு மனிதா் நடந்து சென்றுகொண்டிருந்தபொழுது பாதையில் இருந்த முட்கிளை ஒன்றைக் கண்டு அதை எடுத்து எறிந்தார். இந்த நற்செயலை அல்லாஹ் ஏற்று அவருடைய பாவங்களை மன்னித்தான்!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி) புகாரி - 2472
Saturday, October 28, 2023
குர்ஆன் வசனம் 603
﷽ குர்ஆன் வசனம் 603
28-10-2023 சனிக்கிழமை
يٰۤـاَيُّهَا الَّذِيۡنَ اٰمَنُوا اجۡتَنِبُوۡا كَثِيۡرًا مِّنَ الظَّنِّ
நம்பிக்கை கொண்டோரே! ஊகங்களில் அதிகமானதை விட்டு விலகிக் கொள்ளுங்கள்! சில ஊகங்கள் பாவமாகும்.
[அல்குர்ஆன் 49:12]
உபதேசம் : 853
﷽ உபதேசம் : 853
28-10-2023 சனிக்கிழமை
பெண்களிலேயே மிகச் சிறந்தவர்கள் அன்சாரிப் பெண்களாவர். ஏனென்றால் மார்க்கத்தை விளங்கிக் கொள்வதில் வெட்கம் அவர்களுக்குத் தடையாக இருந்ததில்லை!
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) முஸ்லிம் - 552
நூல்: புகாரி-2446
🇵🇸🇵🇸🇵🇸🇵🇸🇵🇸🇵🇸🇵🇸🇵🇸🇵🇸
பாலஸ்தீனம் பாதிக்கப்பட்ட மக்களுக்காக ஜும்மா தினத்தில் அதிகம் அதிகமாக இறைவனிடம் துவா செய்வோம்
🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
முஃமின்கள் ஒருவருக்கொருவர் (துணை நிற்கும் விஷயத்தில்) ஒரு கட்டடத்தைப் போன்றவர்கள் ஆவர்.
அதன் ஒரு பகுதி மற்றொரு பகுதிக்கு வலுவூட்டுகின்றது.
(இப்படிக் கூறும்போது)
நபி (ஸல்) அவர்கள் தமது கைவிரல்களை ஒன்றோடொன்று கோர்த்துக் காண்பித்தார்கள்.
அறிவிப்பவர்: அபூ மூஸா (ரலி)
நூல்: புகாரி-2446
நூல் : புகாரி 876
🕋🕋🕋🕋🕋🕋
🔜நபிமொழி - ஜும்ஆ🔚
'இறுதிச் சமுதாயமான நாம் தான் மறுமையில் முந்தியவர்கள் ஆவோம்.
ஆயினும் சமுதாயங்கள் அனைத்திற்கும் நமக்கு முன்பே வேதம் வங்கப்பட்டு விட்டன.
நாம் அவர்களுக்குப் பிறகு வேதம் வழங்கப் பட்டோம்.
இது (வெள்ளிக்கிழமை, அவர்கள்) கருத்து வேறுபாடு கொண்ட நாளாகும்.
ஆகவே நாளை (சனிக்கிழமை) யூதர்களுக்குரியதும்
அடுத்த நாள் (ஞாயிற்றுக்கிழமை) கிறித்தவர்களுக்கு உரியதும் ஆகும்'
என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)
நூல் : புகாரி 876
உபதேசம் : 852
﷽ உபதேசம் : 852
27-10-2023 வெள்ளிக்கிழமை
'ஒருவர் வீட்டிற்குள் நுழையும்பொழுது அல்லாஹ்வை நினைவு கூறாவிட்டால் ஷைத்தான் தன் கூட்டத்தாரிடம “இன்று இரவு உங்களுக்குத் தங்குமிடம் கிடைத்துவிட்டது” என்று சொல்கிறான். அவர் உண்ணும்பொழுது அல்லாஹ்வின் பெயரைக் கூறாவிட்டால் ஷைத்தான் “இன்று இரவு நீங்கள் தங்கும் இடத்தையும் உணவையும் பெற்றுக்கொண்டீர்கள்” என்று சொல்கிறான்!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) முஸ்லிம் - 4106
குர்ஆன் வசனம் 602
﷽ குர்ஆன் வசனம் 602
27-10-2023 வெள்ளிக்கிழமை
وَلَا تَلۡمِزُوۡۤا اَنۡفُسَكُمۡ وَلَا تَنَابَزُوۡا بِالۡاَلۡقَابِؕ بِئۡسَ الِاسۡمُ الۡفُسُوۡقُ بَعۡدَ الۡاِيۡمَانِ ۚ وَمَنۡ لَّمۡ يَتُبۡ فَاُولٰٓٮِٕكَ هُمُ الظّٰلِمُوۡنَ
உங்களுக்குள் நீங்கள் குறை கூற வேண்டாம். பட்டப் பெயர்களால் குத்திக் காட்ட வேண்டாம். நம்பிக்கை கொண்ட பின் பாவமான பெயர் (சூட்டுவது) கெட்டது. திருந்திக் கொள்ளாதவர்கள் அநீதி இழைத்தவர்கள்.
[அல்குர்ஆன் 49:11]
வெள்ளிக்கிழமை நினைவூட்டல்
வெள்ளிக்கிழமை நினைவூட்டல்
இன்று வெள்ளிக்கிழமை எனவே நபிகளார் மீது அதிகம் ஸலவாத் சொல்லுங்கள்.
اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ، كَمَا صَلَّيْتَ عَلَى إِبْرَاهِيمَ وَعَلَى آلِ إِبْرَاهِيمَ، إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ، اللَّهُمَّ بَارِكْ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ، كَمَا بَارَكْتَ عَلَى إِبْرَاهِيمَ وَعَلَى آلِ إِبْرَاهِيمَ، إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ ".
அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் வ அலா ஆலி முஹம்மதின் கமா ஸல்லய்த அலா இப்றாஹீம வ அலா ஆலி இப்றாஹீம இன்னக ஹமீதும் மஜீத்.
அல்லாஹும்ம பாரிக் அலா முஹம்மதின் வ அலா ஆலி முஹம்மதின் கமா பாரக்த அலா இப்றாஹீம வ அலா ஆலி இப்றாஹீம இன்னக ஹமீதும் மஜீத்.
(பொருள்: இறைவா! இப்ராஹீம் (அலை) அவர்களுக்கும் அவருடைய குடும்பத்தாருக்கும் நீ கருணை புரிந்ததைப் போன்று முஹம்மத் (ஸல்) அவர்களுக்கும், அவர்களுடைய குடும்பத்தாருக்கும் நீ கருணை புரிவாயாக. நிச்சயமாக நீ புகழுக்குரியவனும் பெருமைக்குரியவனுமாவாய். இறைவா! இப்ராஹீம் (அலை) அவர்களுக்கும் அவர்களுடைய குடும்பத்தாருக்கும் நீ அருள் வளத்தைப் பொழிந்ததைப் போன்று முஹம்மத் (ஸல்) அவர்களுக்கும், அவர்களுடைய குடும்பத்தாருக்கும் நீ அருள் வளத்தைப் பொழிந்திடுவாயாக. நிச்சயமாக நீ புகழுக்குரியவனும் பெருமைக்குரியவனுமாவாய்).
*அறிவிப்பவர் : கஅப் பின் உஜ்ரா (ரலி), *
நூல் : புகாரி 4797
பலன்கள்
யார் என் மீது ஒரு முறை ஸலவாத் சொல்கிறாரோ அவர் மீது அல்லாஹ் பத்து முறை அருள் புரிகிறான். அவருடைய பத்து தவறுகளை அழிக்கின்றான். பத்து உயர்வுகள் அவருக்கு அளிக்கப்படுகின்றன என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அனஸ் (ரலி)
நூல் : நஸாயீ
உபதேசம் : 851
﷽ உபதேசம் : 851
26-10-2023 வியாழக்கிழமை
"ஓர் ஆட்டுக் காலின் கீழ்ப்பகுதியை சமைத்து விருந்து)க்கு அழைக்கப்பட்டாலும் நிச்சயம் நான் அந்த அழைப்பை) ஏற்றுக்கொள்வேன். ஆட்டுக்காலின் கீழ்ப்பகுதி எனக்கு அன்பளிப்பாகத் தரப்பட்டாலும் நிச்சயம் நான் அதைப் பெற்றுக்கொள்வேன்!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி) புகாரி - 5178
குர்ஆன் வசனம் 601
﷽ குர்ஆன் வசனம் 601
26-10-2023 வியாழக்கிழமை
நம்பிக்கை கொண்டோரே! ஒரு சமுதாயம் இன்னொரு சமுதாயத்தைக் கேலி செய்ய வேண்டாம். இவர்களை விட அவர்கள் சிறந்தோராக இருக்கக் கூடும்.
[அல்குர்ஆன் 49:11]
Wednesday, October 25, 2023
உபதேசம் : 850
﷽ உபதேசம் : 850
25-10-2023 புதன்கிழமை
"உனக்கு ஏதேனும் துன்பம் ஏற்படும்பொழுது “நான் இப்படிச் செய்திருந்தால் அப்படி ஆகியிருக்குமே! அப்படிச் செய்திருந்தால் இப்படி ஆகியிருக்குமே!” என்று அங்கலாய்த்துக் கூறாதே. அவ்வாறு கூறுவது ஷைத்தானின் வழியாகும் மாறாக, “அல்லாஹ்வின் விதிப்படி நடந்தது. அவன் நாடியதைச் செய்தான்” என்று சொல்." என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி) முஸ்லிம் - 5178
குர்ஆன் வசனம் 600
﷽ குர்ஆன் வசனம் 600
25-10-2023 புதன்கிழமை
اِخۡوَةٌ فَاَصۡلِحُوۡا بَيۡنَ اَخَوَيۡكُمۡ ۚ وَاتَّقُوا اللّٰهَ لَعَلَّكُمۡ تُرۡحَمُوۡن
உங்கள் சகோதரர்களுக்கிடையே இணக்கத்தை ஏற்படுத்துங்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள். அருள் செய்யப்படுவீர்கள்.
[அல்குர்ஆன் 49:10]
Tuesday, October 24, 2023
குர்ஆன் வசனம் 599
﷽ குர்ஆன் வசனம் 599
24-10-2023 செவ்வாய்க்கிழமை
اِنَّ اللّٰهَ يُحِبُّ الۡمُقۡسِطِيۡنَ
நீதி செலுத்துங்கள்! நீதி செலுத்துவோரை அல்லாஹ் விரும்புகிறான்.
[அல்குர்ஆன் 49:9]
உபதேசம் : 849
﷽ உபதேசம் : 849
24-10-2023 செவ்வாய்க்கிழமை
'ஆதமுடைய மகன் ஸஜ்தா வசனத்தை ஓதி சஜ்தா செய்தால் ஷைத்தான் அழுதவாறே “அந்தோ எனக்கு வந்த நாசமே! ஆதமுடைய மகன் ஸஜ்தா செய்யும்படி கட்டளையிடப்பட்டான். அவன் ஸஜ்தா செய்துவிட்டான். அவனுக்குச் சொர்க்கம் கிடைக்கப்போகிறது. ஆனால் ஆதமுக்கு ஸஜ்தா செய்யும்படி எனக்குக் கட்டளையிடப்பட்டது. நானோ மறுத்து விட்டேன். எனவே, எனக்கு நரகம்தான்” என்று கூறியபடி விலகிச்செல்கிறான்!' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி) முஸ்லிம் - 133
Monday, October 23, 2023
உபதேசம் : 848
﷽ உபதேசம் : 848
23-10-2023 திங்கட்கிழமை
"எவரிடமிருந்து நல்லதை மக்கள் எதிர்பார்ப்பாா்களோ இன்னும் தீமை குறித்து அஞ்சமாட்டா்களோ அவரே உங்களில் சிறந்தவர். மேலும் எவரிடமிருந்து நன்மையை எதிர்பார்க்காமல் தீமைக்கள் குறித்து பயப்படுவா்களோ அவரே உங்களில் கெட்டவர்" என்று நபி (ஸல்) அவா்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி) திர்மிதீ- 2189
குர்ஆன் வசனம் 598
﷽ குர்ஆன் வசனம் 598
23-10-2023 திங்கட்கிழமை
يٰۤاَيُّهَا الَّذِيۡنَ اٰمَنُوۡۤا اِنۡ جَآءَكُمۡ فَاسِقٌ ۢ بِنَبَاٍ فَتَبَيَّنُوۡۤا اَنۡ تُصِيۡبُوۡا قَوۡمًا ۢ بِجَهَالَةٍ فَتُصۡبِحُوۡا عَلٰى مَا فَعَلۡتُمۡ نٰدِمِيۡنَ
நம்பிக்கை கொண்டோரே! குற்றம் புரிபவன் உங்களிடம் ஒரு செய்தியைக் கொண்டு வந்தால் ஒரு சமுதாயத்திற்கு அறியாமையால் நீங்கள் தீங்கிழைக்காதிருப்பதற்காக அதைத் தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள்! (இல்லையேல்) நீங்கள் செய்ததற்காகக் கவலைப்படுவீர்கள்.
[அல்குர்ஆன் 49:6]
Sunday, October 22, 2023
உபதேசம் : 847
﷽ உபதேசம் : 847
22-10-2023 ஞாயிற்றுக்கிழமை
"ஒவ்வோர் அடியாரும் எந்த மனோநிலையில் மரணிக்கின்றாரோ அதே நிலையிலேயே எழுப்பப்படுவார்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி) முஸ்லிம்-5518
குர்ஆன் வசனம் 597
﷽ குர்ஆன் வசனம் 597
22-10-2023 ஞாயிற்றுக்கிழமை
"அல்லாஹ் உங்களுக்குத் தீமையை நாடினால் அல்லது நன்மையை நாடினால் அல்லாஹ்விடமிருந்து (தடுக்க) சிறிதளவேனும் சக்தி பெற்றவன் யார்?" என்று கேட்பீராக!
[அல்குர்ஆன் 48:11]
Saturday, October 21, 2023
உபதேசம் : 846
﷽ உபதேசம் : 846
21-10-2023 சனிக்கிழமை
"உங்களில் எவரையேனும் ஒரு பணிக்கு அதிகாரியாக நாம் நியமித்திருக்க அவர் ஓர் ஊசியையோ அல்லது அதை விடச் சிறியதையோ நம்மிடம் (கணக்குக் காட்டாமல்) மறைத்துவிட்டால் அது மோசடியாகவே அமையும். அவர் மறுமை நாளில் அந்தப் பொருளுடன் வருவார்!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அதீ பின் அமீரா (ரலி) முஸ்லிம்-3743
குர்ஆன் வசனம் 596
﷽ குர்ஆன் வசனம் 596
21-10-2023 சனிக்கிழமை
وَمَنۡ اَوۡفٰى بِمَا عٰهَدَ عَلَيۡهُ اللّٰهَ فَسَيُؤۡتِيۡهِ اَجۡرًا عَظِيۡمًا
யார் அல்லாஹ்விடம் எடுத்த உறுதிமொழியை நிறைவேற்றுகிறாரோ அவருக்கு மகத்தான கூலியை அவன் வழங்குவான்.
[அல்குர்ஆன் 48:10]
உபதேசம் : 845
﷽ உபதேசம் : 845
20-10-2023 வெள்ளிக்கிழமை
"தங்கம், வெள்ளி ஆகியவற்றைச் சேமித்து வைத்துக் கொண்டு அவற்றிற்குரிய ஸகாத்தை நிறைவேற்றாதவருக்கு, மறுமை நாளில் நரக நெருப்பில் அவற்றைப் பழுக்கக் காய்ச்சி, அவருடைய விலாப் புறத்திலும் நெற்றியிலும் முதுகிலும் சூடு போடப்படும். அவை குளிர்ந்து விடும்போதெல்லாம் மீண்டும் அவ்வாறே (பழுக்கக் காய்ச்சப்பட்டதாக மாறிவிடும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி) முஸ்லிம் - 1803
குர்ஆன் வசனம் 595
﷽ குர்ஆன் வசனம் 595
20-10-2023 வெள்ளிக்கிழமை
وَاِنۡ تَتَوَلَّوۡا يَسۡتَـبۡدِلۡ قَوۡمًا غَيۡرَكُمۡ ۙ ثُمَّ لَا يَكُوۡنُوۡۤا اَمۡثَالَـكُم
நீங்கள் புறக்கணித்தால் உங்களையன்றி வேறு ஒரு சமுதாயத்தை உங்களுக்குப் பகரமாக அவன் ஆக்குவான். பின்னர் அவர்கள் உங்களைப் போன்று இருக்க மாட்டார்கள்.
[அல்குர்ஆன் 47:38]
நூல் : புகாரி 4797
வெள்ளிக்கிழமை நினைவூட்டல்
இன்று வெள்ளிக்கிழமை எனவே நபிகளார் மீது அதிகம் ஸலவாத் சொல்லுங்கள்.
اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ، كَمَا صَلَّيْتَ عَلَى إِبْرَاهِيمَ وَعَلَى آلِ إِبْرَاهِيمَ، إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ، اللَّهُمَّ بَارِكْ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ، كَمَا بَارَكْتَ عَلَى إِبْرَاهِيمَ وَعَلَى آلِ إِبْرَاهِيمَ، إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ ".
அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் வ அலா ஆலி முஹம்மதின் கமா ஸல்லய்த அலா இப்றாஹீம வ அலா ஆலி இப்றாஹீம இன்னக ஹமீதும் மஜீத்.
அல்லாஹும்ம பாரிக் அலா முஹம்மதின் வ அலா ஆலி முஹம்மதின் கமா பாரக்த அலா இப்றாஹீம வ அலா ஆலி இப்றாஹீம இன்னக ஹமீதும் மஜீத்.
(பொருள்: இறைவா! இப்ராஹீம் (அலை) அவர்களுக்கும் அவருடைய குடும்பத்தாருக்கும் நீ கருணை புரிந்ததைப் போன்று முஹம்மத் (ஸல்) அவர்களுக்கும், அவர்களுடைய குடும்பத்தாருக்கும் நீ கருணை புரிவாயாக. நிச்சயமாக நீ புகழுக்குரியவனும் பெருமைக்குரியவனுமாவாய். இறைவா! இப்ராஹீம் (அலை) அவர்களுக்கும் அவர்களுடைய குடும்பத்தாருக்கும் நீ அருள் வளத்தைப் பொழிந்ததைப் போன்று முஹம்மத் (ஸல்) அவர்களுக்கும், அவர்களுடைய குடும்பத்தாருக்கும் நீ அருள் வளத்தைப் பொழிந்திடுவாயாக. நிச்சயமாக நீ புகழுக்குரியவனும் பெருமைக்குரியவனுமாவாய்).
*அறிவிப்பவர் : கஅப் பின் உஜ்ரா (ரலி), *
நூல் : புகாரி 4797
பலன்கள்
யார் என் மீது ஒரு முறை ஸலவாத் சொல்கிறாரோ அவர் மீது அல்லாஹ் பத்து முறை அருள் புரிகிறான். அவருடைய பத்து தவறுகளை அழிக்கின்றான். பத்து உயர்வுகள் அவருக்கு அளிக்கப்படுகின்றன என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அனஸ் (ரலி)
நூல் : நஸாயீ
Thursday, October 19, 2023
உபதேசம் : 844
﷽ உபதேசம் : 844
19-10-2023 வியாழக்கிழமை
"ஜும்ஆ நாள் வந்துவிட்டால் பள்ளியின் ஒவ்வொரு வாசலிலும் மலக்குகள் நின்றுகொண்டு முதலில் வருபவரை – அடுத்து வருபவரைப் பதிவு செய்கின்றனர். இமாம் (மிம்பரில்) உட்கார்ந்ததும் தங்கள் ஏடுகளைச் சுருட்டிக் கொண்டு உரையைக் கேட்க வந்து விடுகின்றனர்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி) முஸ்லிம் - 1416
குர்ஆன் வசனம் 594
﷽ குர்ஆன் வசனம் 594
19-10-2023 வியாழக்கிழமை
யாரேனும் கஞ்சத்தனம் செய்தால் அவர் தமக்கே கஞ்சத்தனம் செய்கிறார். அல்லாஹ் தேவைகளற்றவன். நீங்களே தேவைகளுடையோர்.
[அல்குர்ஆன் 47:38]
நூல் : முஸ்லிம்-5376
மிக மோசமான இரண்டு செயல்கள்
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் மறுமை நாளில் வானங்களைச் சுருட்டுவான். பிறகு அவற்றைத் தனது வலக் கரத்தில் எடுத்துக் கொள்வான். பிறகு “நானே அரசன். அடக்குமுறையாளர்கள் எங்கே? ஆணவம் கொண்டவர்கள் எங்கே?” என்று கேட்பான். பிறகு பூமிகளைத் தனது இடக் கரத்தில் சுருட்டிக் கொள்வான். பிறகு “நானே அரசன். அடக்குமுறையாளர்கள் எங்கே? ஆணவம் கொண்டவர்கள் எங்கே?” என்று கேட்பான்.
அறிவிப்பவர்:
இப்னு உமர் (ரலி)
, நூல் : முஸ்லிம்-5376
நூல் : புகாரி-1442
ஒவ்வொரு நாளும் இரண்டு மலக்குகள் இறங்குகின்றனர். அவ்விருவரில் ஒருவர், “அல்லாஹ்வே! தர்மம் செய்பவருக்குப் பிரதிபலனை அளித்திடுவாயாக!” என்று கூறுவார். இன்னொருவர், “அல்லாஹ்வே! (தர்மம் செய்யாமல்) தடுத்து வைத்துக் கொள்பவர்களுக்கு அழிவை ஏற்படுத்துவாயாக!” என்று கூறுவார் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறி : அபூஹுரைரா (ரலி)
நூல் : புகாரி-1442
Wednesday, October 18, 2023
குர்ஆன் வசனம் 593
﷽ குர்ஆன் வசனம் 593
18-10-2023 புதன்கிழமை
اِنَّ الَّذِيۡنَ كَفَرُوۡا وَصَدُّوۡا عَنۡ سَبِيۡلِ اللّٰهِ ثُمَّ مَاتُوۡا وَهُمۡ كُفَّارٌ فَلَنۡ يَّغۡفِرَ اللّٰهُ لَهُمۡ
மறுப்போராகவே மரணித்து விட்டவர்களை அல்லாஹ் மன்னிக்கவே மாட்டான்.
[அல்குர்ஆன் 47:34]
உபதேசம் : 843
﷽ உபதேசம் : 843
18-10-2023 புதன்கிழமை
"குளித்து, ஆரம்ப நேரத்திலேயே புறப்பட்டு வந்து, இமாமுக்கு நெருக்கமாக இருந்து உரையை செவியுற்று, ஜும்ஆவை வீணாக்காமல் இருப்பவருக்கு அவர் எடுத்து வைக்கும் ஒவ்வொரு காலடிக்கும் ஓர் ஆண்டு நோன்பு நோற்று, ஓர் ஆண்டு நின்று வணங்கிய கூலி உண்டு” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அவ்ஸ் (ரலி) நஸயீ - 1381
Tuesday, October 17, 2023
உபதேசம் : 842
﷽ உபதேசம் : 842
17-10-2023 செவ்வாய்க்கிழமை
மக்களுக்குத் தொழுகை நடத்த ஒரு மனிதரை ஏற்பாடு செய்துவிட்டு, பின்னர் ஜுமுஆத் தொழுகையில் கலந்துகொள்ளாமல் (வீட்டில்) இருப்பவர்களை (நோக்கிச்சென்று அவர்களை) வீட்டோடு சேர்த்து எரித்துவிடவேண்டும் என எண்ணியதுண்டு!" என்று நபி (ஸல்) அவா்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) முஸ்லிம் - 1156
குர்ஆன் வசனம் 592
﷽ குர்ஆன் வசனம் 592
17-10-2023 செவ்வாய்க்கிழமை
يٰۤاَيُّهَا الَّذِيۡنَ اٰمَنُوۡۤا اَطِيۡعُوا اللّٰهَ وَاَطِيۡعُوا الرَّسُوۡلَ وَلَا تُبۡطِلُوۡۤا اَعۡمَالَـكُمۡ
நம்பிக்கை கொண்டோரே ! அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுங்கள் ! இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள் ! உங்கள் செயல்களைப் பாழாக்கி விடாதீர்கள் !
[அல்குர்ஆன் 47:33]
குர்ஆன் வசனம் 591
﷽ குர்ஆன் வசனம் 591
16-10-2023 திங்கட்கிழமை
وَلَـنَبۡلُوَنَّكُمۡ حَتّٰى نَعۡلَمَ الۡمُجٰهِدِيۡنَ مِنۡكُمۡ وَالصّٰبِرِيۡنَ ۙ وَنَبۡلُوَا۟ اَخۡبَارَكُمۡ
உங்களில் தியாகம் செய்தோரையும், பொறுமையாளரையும் அடையாளம் காட்டிட உங்களைச் சோதிப்போம். உங்கள் செய்திகளையும் சோதிப்போம்.
[அல்குர்ஆன் 47:31]
உபதேசம் : 841
﷽ உபதேசம் : 841
16-10-2023 திங்கட்கிழமை
"ஒரு பெண், தன் கணவனின் வீட்டிற்கும் அவனது குழந்தைக்கும் பொறுப்பாளியாவாள். அவர்களை பராமரித்த விதம் குறித்து அவள் விசாரிக்கப்படுவாள்!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) புகாரி - 2554
குர்ஆன் வசனம் 590
﷽ குர்ஆன் வசனம் 590
15-10-2023 ஞாயிற்றுக்கிழமை
اَفَلَا يَتَدَبَّرُوۡنَ الۡقُرۡاٰنَ اَمۡ عَلٰى قُلُوۡبٍ اَ قۡفَالُهَا
அவர்கள் இக்குர்ஆனைச் சிந்திக்க வேண்டாமா? அல்லது அவர்களின் உள்ளங்கள் மீது அதற்கான பூட்டுக்கள் உள்ளனவா?
[அல்குர்ஆன் 47:24]
உபதேசம் : 840
﷽ உபதேசம் : 840
15-10-2023 ஞாயிற்றுக்கிழமை
'என்னுடைய தந்தை எனது விருப்பமின்றி எனக்கு திருமணம் செய்து வைத்துவிட்டாா்!' என்று ஒரு கண்ணிப்பெண் கூறியதற்கு நபி (ஸல்) அவர்கள், "அத்திருமணத்தை முறித்து விடலாம் அல்லது தொடரலாம்!" என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி) அபூதாவூத் - 2091
Saturday, October 14, 2023
ஜின்கள் இருக்கிறார்கள் என நம்புதல். ( 4 )
ஜின்கள் இருக்கிறார்கள் என நம்புதல். ( 4 )
மனிதர்களைப் போலவே ஜின்களுக்கும் கட்டளைகள் உள்ளன.
قُل لَّئِنِ اجْتَمَعَتِ الْإِنسُ وَالْجِنُّ عَلَىٰ أَن يَأْتُوا بِمِثْلِ هَٰذَا الْقُرْآنِ لَا يَأْتُونَ بِمِثْلِهِ وَلَوْ كَانَ بَعْضُهُمْ لِبَعْضٍ ظَهِيرًا
"இக்குர்ஆன் போன்றதைக் கொண்டு வருவதற்காக மனிதர்களும், ஜின்களும் ஒன்று திரண்டாலும் இது போன்றதைக் கொண்டு வர முடியாது. அவர்களில் ஒருவர் மற்றவருக்கு உதவியாளராக இருந்தாலும் சரியே'' என்று கூறுவீராக!
திருக்குர்ஆன் 17:88
وَقَيَّضْنَا لَهُمْ قُرَنَاءَ فَزَيَّنُوا لَهُم مَّا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ وَحَقَّ عَلَيْهِمُ الْقَوْلُ فِي أُمَمٍ قَدْ خَلَتْ مِن قَبْلِهِم مِّنَ الْجِنِّ وَالْإِنسِ ۖ إِنَّهُمْ كَانُوا خَاسِرِينَ
இவர்களுக்குத் தோழர்களை நியமித்துள்ளோம். இவர்களுக்கு முன்னேயும், பின்னேயும் உள்ளதை அவர்கள் அழகாக்கிக் காட்டுகின்றனர். எனவே இவர்களுக்கு முன் சென்று விட்ட ஜின்களிலும், மனிதர்களிலும் உள்ள (தீய) கூட்டங்களுடன் சேர்த்து இவர்களுக்கு எதிராகவும் கட்டளை உறுதியாகிவிட்டது. இவர்கள் நட்டமடைந்தோராகி விட்டனர்.
திருக்குர்ஆன் 41:25
أُولَٰئِكَ الَّذِينَ حَقَّ عَلَيْهِمُ الْقَوْلُ فِي أُمَمٍ قَدْ خَلَتْ مِن قَبْلِهِم مِّنَ الْجِنِّ وَالْإِنسِ ۖ إِنَّهُمْ كَانُوا خَاسِرِينَ
அவர்களுக்கு முன் சென்ற ஜின்களுடனும், மனிதர்களுடனும் சேர்த்து இவர்களுக்கு எதிராகவும் இறைவனின் கட்டளை உறுதியாகி விட்டது. இவர்கள் நட்டமடைந்தனர்.
திருக்குர்ஆன் 46:18
وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونِ
ஜின்னையும், மனிதனையும் என்னை வணங்குவதற்காகவே தவிர (வேறு எதற்காகவும்) நான் படைக்கவில்லை.
திருக்குர்ஆன் 51:56
يَا مَعْشَرَ الْجِنِّ وَالْإِنسِ إِنِ اسْتَطَعْتُمْ أَن تَنفُذُوا مِنْ أَقْطَارِ السَّمَاوَاتِ وَالْأَرْضِ فَانفُذُوا ۚ لَا تَنفُذُونَ إِلَّا بِسُلْطَانٍ
மனித ஜின் கூட்டமே! வானங்கள் மற்றும் பூமியின் விளிம்புகளைக் கடந்து செல்ல நீங்கள் சக்தி பெற்றால் கடந்து செல்லுங்கள்! ஆற்றல் மூலம் தவிர நீங்கள் கடந்து செல்ல மாட்டீர்கள்.
திருக்குர்ஆன் 55:33
-
Chapter - 14 Surah Ibrahim بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ In the name of Allah the most beneficent, most mer...
-
Chapter - 14 Surah Ibrahim بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ In the name of Allah the most beneficent, most merciful يُثَبِّت...
-
Chapter - 14 Surah Ibrahim بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ In the name of Allah the most beneficent, most merciful قُ...