Tuesday, January 31, 2023

சொர்க்கச் சோலைகள். ( 9 )

 சொர்க்கச் சோலைகள். ( 9 )

வெயில் தெரியாது.

وَالَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ سَنُدْخِلُهُمْ جَنَّاتٍ تَجْرِي مِن تَحْتِهَا الْأَنْهَارُ خَالِدِينَ فِيهَا أَبَدًا ۖ لَّهُمْ فِيهَا أَزْوَاجٌ مُّطَهَّرَةٌ ۖ وَنُدْخِلُهُمْ ظِلًّا ظَلِيلًا

நம்பிக்கை கொண்டு, நல்லறங்கள் புரிவோரைச் சொர்க்கச் சோலைகளில் நுழையச் செய்வோம். அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் என்றென்றும் நிரந்தரமாக இருப்பார்கள். அதில் அவர்களுக்குத் தூய்மையான துணைகளும்8 உள்ளனர். மிகச்சிறந்த நிழலில் அவர்களை நுழையச் செய்வோம்.
திருக்குர்ஆன் 4:57

مَّثَلُ الْجَنَّةِ الَّتِي وُعِدَ الْمُتَّقُونَ ۖ تَجْرِي مِن تَحْتِهَا الْأَنْهَارُ ۖ أُكُلُهَا دَائِمٌ وَظِلُّهَا ۚ تِلْكَ عُقْبَى الَّذِينَ اتَّقَوا ۖ وَّعُقْبَى الْكَافِرِينَ النَّارُ

(இறைவனை) அஞ்சுவோருக்கு வாக்களிக்கப்பட்ட சொர்க்கத்தின் தன்மை, அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதன் உணவும், நிழலும் நிரந்தரமானதாக இருக்கும். இதுவே (இறைவனை) அஞ்சுவோர்க்கான முடிவாகும். (ஏகஇறைவனை) மறுப்போரின் முடிவு நரகமே.
திருக்குர்ஆன் 13:35

وَأَنَّكَ لَا تَظْمَأُ فِيهَا وَلَا تَضْحَىٰ

இங்கே நீர் தாகத்துடனும் இருக்க மாட்டீர்! உம்மீது வெயிலும் படாது! (என்று கூறினோம்).
திருக்குர்ஆன் 20:119

هُمْ وَأَزْوَاجُهُمْ فِي ظِلَالٍ عَلَى الْأَرَائِكِ مُتَّكِئُونَ

அவர்களும், அவர்களது துணைகளும் கட்டிலில் சாய்ந்து நிழல்களில் இருப்பார்கள்.
திருக்குர்ஆன் 36:56

مُّتَّكِئِينَ فِيهَا عَلَى الْأَرَائِكِ ۖ لَا يَرَوْنَ فِيهَا شَمْسًا وَلَا زَمْهَرِيرًا

அதில் அவர்கள் உயர்ந்த இருக்கைகள் மீது சாய்ந்திருப்பார்கள். அங்கே சூரியனையும், கடும் குளிர்ச்சியையும் காண மாட்டார்கள்.
திருக்குர்ஆன் 76:13

وَدَانِيَةً عَلَيْهِمْ ظِلَالُهَا وَذُلِّلَتْ قُطُوفُهَا تَذْلِيلًا

அதன் நிழல்கள் அவர்களுக்கு நெருக்கமாக இருக்கும். அதன் கனிகள் மிகத் தாழ்வாகத் தொங்கும்.
திருக்குர்ஆன் 76:14

إِنَّ الْمُتَّقِينَ فِي ظِلَالٍ وَعُيُونٍ

(இறைவனை) அஞ்சியோர் நிழல்களிலும், நீரூற்றுகளிலும் இருப்பார்கள்.
திருக்குர்ஆன் 77:41

குர்ஆன் வசனம் 334

 ﷽ குர்ஆன் வசனம் 334

31-01-2023 செவ்வாய்க்கிழமை

وَاٰتِ ذَا الۡقُرۡبٰى حَقَّهٗ وَالۡمِسۡكِيۡنَ وَابۡنَ السَّبِيۡلِ وَلَا تُبَذِّرۡ تَبۡذِيۡرًا

உறவினருக்கும், ஏழைக்கும், நாடோடிக்கும் அவரவரின் உரிமையை வழங்குவீராக! ஒரேயடியாக வீண் விரயம் செய்து விடாதீர்!

[அல்குர்ஆன் 17:26]

உபதேசம் : 584

 ﷽ உபதேசம் : 584

31-01-2023 செவ்வாய்க்கிழமை

عَنِ النَّبِيِّ (ﷺ) قَالَ "" الصَّبْرُ عِنْدَ الصَّدْمَةِ الأُولَى "".
"பொறுமை என்பது துன்பம் ஏற்பட்ட உடன் (கைக் கொள்வதே)" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அனஸ் (ரலி) புகாரி - 1302

Chapter - 15 Surah Al-Hijr

Chapter - 15

Surah Al-Hijr


بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

In the name of Allah the most beneficent, most merciful
----------------------------------------------------------

أعوذ بالله من الشيطان الرجيم
I seek refuge in Allah from the outcast Shaitan


وَإِنَّ رَبَّكَ هُوَ يَحْشُرُهُمْ ۚ إِنَّهُ حَكِيمٌ عَلِيمٌ

And verily, your Lord will gather them together. Truly, He is All-Wise, All-Knowing. (Al-Hijr 15:25)

கியாமத் நாள் அடையளம். ( 4 )

 கியாமத் நாள் அடையளம். ( 4 )

வேறு பூமியாக மாற்றி சொர்க்கம் நரகம்.

يَوْمَ تُبَدَّلُ الْأَرْضُ غَيْرَ الْأَرْضِ وَالسَّمَاوَاتُ ۖ وَبَرَزُوا لِلَّهِ الْوَاحِدِ الْقَهَّارِ

அந்நாளில் பூமி, வேறு பூமியாகவும், வானங்களும் (வேறு வானங்களாகவும்) மாற்றப்படும். ஏகனாகிய அடக்கியாளும் அல்லாஹ்விடம் திரளுவார்கள்.
திருக்குர்ஆன் 14:48

يَوْمَ نَطْوِي السَّمَاءَ كَطَيِّ السِّجِلِّ لِلْكُتُبِ ۚ كَمَا بَدَأْنَا أَوَّلَ خَلْقٍ نُّعِيدُهُ ۚ وَعْدًا عَلَيْنَا ۚ إِنَّا كُنَّا فَاعِلِينَ

எழுதப்பட்ட ஏடுகளைச் சுருட்டுவது போல் வானத்தை நாம் சுருட்டும் நாளில் முதல் படைப்பை நாம் துவக்கியது போல் அதை மீண்டும் நிறுவுவோம். இது நமது வாக்குறுதி. நாம் (எதையும்) செய்வோராவோம்.
திருக்குர்ஆன் 21:104

وَمَا قَدَرُوا اللَّهَ حَقَّ قَدْرِهِ وَالْأَرْضُ جَمِيعًا قَبْضَتُهُ يَوْمَ الْقِيَامَةِ وَالسَّمَاوَاتُ مَطْوِيَّاتٌ بِيَمِينِهِ ۚ سُبْحَانَهُ وَتَعَالَىٰ عَمَّا يُشْرِكُونَ

அல்லாஹ்வை அவனது கண்ணியத்துக்கு ஏற்ப அவர்கள் கண்ணியப்படுத்தவில்லை. கியாமத் நாளில் பூமி முழுவதும் அவனது ஒரு கைப்பிடிக்குள் அடங்கும். வானங்கள் அவனது வலது கையில் சுருட்டப்பட்டிருக்கும். அவன் தூயவன். அவர்கள் இணை கற்பிப்பதை விட்டும் அவன் உயர்ந்தவன்.
திருக்குர்ஆன் 39:67

வானம் வேறு வானமாக.

يَوْمَ تُبَدَّلُ الْأَرْضُ غَيْرَ الْأَرْضِ وَالسَّمَاوَاتُ ۖ وَبَرَزُوا لِلَّهِ الْوَاحِدِ الْقَهَّارِ

அந்நாளில் பூமி, வேறு பூமியாகவும், வானங்களும் (வேறு வானங்களாகவும்) மாற்றப்படும். ஏகனாகிய அடக்கியாளும் அல்லாஹ்விடம் திரளுவார்கள்.
திருக்குர்ஆன் 14:48

கடல்கள் பொங்கி தடுப்புகள் அகற்றப்படும்.

وَإِذَا الْبِحَارُ فُجِّرَتْ

கடல்கள் கொதிக்க வைக்கப்படும் போது,
திருக்குர்ஆன் 82:3

Monday, January 30, 2023

சொர்க்கச் சோலைகள். ( 8 )

 சொர்க்கச் சோலைகள். ( 8 )

உயர்தரமான விரிப்புகள் உள்ளன.

مُتَّكِئِينَ عَلَىٰ فُرُشٍ بَطَائِنُهَا مِنْ إِسْتَبْرَقٍ ۚ وَجَنَى الْجَنَّتَيْنِ دَانٍ

அவர்கள் விரிப்புகளில் சாய்ந்திருப்பார்கள். அதன் உட்புறம் இஸ்தப்ரக் எனும் பட்டுவகையைச் சேர்ந்தது. அவ்விரு சொர்க்கச் சோலைகளின் கனிகள் தாழ்ந்திருக்கும்.
திருக்குர்ஆன் 55:54

مُتَّكِئِينَ عَلَىٰ رَفْرَفٍ خُضْرٍ وَعَبْقَرِيٍّ حِسَانٍ

பச்சை நிறத்து இரத்தினக் கம்பளத்தின் மீதும், அழகிய சாய்மானத்தின் மீதும் சாய்ந்து கொண்டிருப்பார்கள்.
திருக்குர்ஆன் 55:76

وَفُرُشٍ مَّرْفُوعَةٍ

உயரமான விரிப்புகளின் மீதும் இருப்பார்கள்.
திருக்குர்ஆன் 56:34

وَزَرَابِيُّ مَبْثُوثَةٌ

விரிக்கப்பட்ட கம்பளங்களும் உண்டு.
திருக்குர்ஆன் 88:16

அங்கிருந்து வேறிடம் செல்ல விரும்ப மாட்டார்கள்.

خَالِدِينَ فِيهَا لَا يَبْغُونَ عَنْهَا حِوَلًا

அதிலே நிரந்தரமாக இருப்பார்கள். அங்கிருந்து இடம் பெயர்வதை விரும்ப மாட்டார்கள்.
திருக்குர்ஆன் 18:108

Chapter - 15 Surah Al-Hijr

Chapter - 15

Surah Al-Hijr


بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

In the name of Allah the most beneficent, most merciful
----------------------------------------------------------

أعوذ بالله من الشيطان الرجيم
I seek refuge in Allah from the outcast Shaitan


وَلَقَدْ عَلِمْنَا الْمُسْتَقْدِمِينَ مِنْكُمْ وَلَقَدْ عَلِمْنَا الْمُسْتَأْخِرِينَ

And indeed, We know the first generations of you who had passed away, and indeed, We know the present generations of you (mankind), and also those who will come afterwards. (Al-Hijr 15:24)

Walaqad AAalimna almustaqdimeena minkum walaqad AAalimna almusta/khireena

Wa-inna lanahnu nuhyee wanumeetu wanahnu alwarithoona

குர்ஆன் வசனம் 333

 ﷽ குர்ஆன் வசனம் 333

30-01-2023 திங்கட்கிழமை
رَّبُّكُمۡ اَعۡلَمُ بِمَا فِىۡ نُفُوۡسِكُمۡ‌
உங்கள் உள்ளங்களில் உள்ளதை உங்கள் இறைவன் நன்கறிபவன்.

[அல்குர்ஆன் 17:25]

உபதேசம் : 583

 ﷽ உபதேசம் : 583

30-01-2023 திங்கட்கிழமை

"கன்னி கழிந்த பெண்ணாே, கன்னிப் பெண்ணாே இருவரிடமும் (ஏதேனும் ஒரு முறையில்) சம்மதம் பெறாமல் மணமுடித்துக் கொடுக்கவேண்டாம்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறியபொழுது 'இறைத்தூதர் அவர்களே! கன்னிப்பொண்ணின் சம்மதம் பெறுவது எப்படி?' என்று மக்கள் கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ''அவளுடைய மெளனமே (அவளுடைய சம்மதம்" என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி) புகாரி - 5136

சொர்க்கச் சோலைகள். ( 7 )

 சொர்க்கச் சோலைகள். ( 7 )

சொகுசுக் கட்டில்களில் இருப்பார்கள்.

وَنَزَعْنَا مَا فِي صُدُورِهِم مِّنْ غِلٍّ إِخْوَانًا عَلَىٰ سُرُرٍ مُّتَقَابِلِينَ

அவர்களின் உள்ளங்களில் இருந்த குரோதங்களை நீக்குவோம். கட்டில்களில் நேருக்கு நேர் நோக்கி சகோதரர்களாக இருப்பார்கள்.
திருக்குர்ஆன் 15:47

هُمْ وَأَزْوَاجُهُمْ فِي ظِلَالٍ عَلَى الْأَرَائِكِ مُتَّكِئُونَ

அவர்களும், அவர்களது துணைகளும் கட்டிலில் சாய்ந்து நிழல்களில் இருப்பார்கள்.
திருக்குர்ஆன் 36:56

عَلَىٰ سُرُرٍ مُّتَقَابِلِينَ

கட்டில்களில் ஒருவரையொருவர் எதிர் நோக்குவார்கள்.
திருக்குர்ஆன் 37:44

مُتَّكِئِينَ عَلَىٰ رَفْرَفٍ خُضْرٍ وَعَبْقَرِيٍّ حِسَانٍ

பச்சை நிறத்து இரத்தினக் கம்பளத்தின் மீதும், அழகிய சாய்மானத்தின் மீதும் சாய்ந்து கொண்டிருப்பார்கள்.
திருக்குர்ஆன் 55:76

مُّتَّكِئِينَ فِيهَا عَلَى الْأَرَائِكِ ۖ لَا يَرَوْنَ فِيهَا شَمْسًا وَلَا زَمْهَرِيرًا

அதில் அவர்கள் உயர்ந்த இருக்கைகள் மீது சாய்ந்திருப்பார்கள். அங்கே சூரியனையும், கடும் குளிர்ச்சியையும் காண மாட்டார்கள்.
திருக்குர்ஆன் 76:13

عَلَى الْأَرَائِكِ يَنظُرُونَ

உயர்ந்த இருக்கைகள் மீது (சாய்ந்து) பார்த்துக் கொண்டிருப்பார்கள்.
திருக்குர்ஆன் 83:23

عَلَى الْأَرَائِكِ يَنظُرُونَ

உயர்ந்த கட்டில்கள் மீது (சாய்ந்து) பார்த்துக் கொண்டிருப்பார்கள்.
திருக்குர்ஆன் 83:35

குழந்தைகளிடம் கூட பொய் கூறி ஏமாற்க்கூடாது

 குழந்தைகளிடம் கூட பொய் கூறி ஏமாற்க்கூடாது


நபி (ஸல்) அவர்கள் எங்கள் வீட்டில் இருக்கும்போது என் தாய் என்னை, வா நான் உனக்கு (ஒன்றைத்) தருகிறேன் என்று அழைத்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், நீ (உன் மகனுக்கு எதையாவது) கொடுக்க எண்ணியுள்ளாயா? என்று கேட்டார்கள். நான் அவனுக்கு ஒரு பேரித்தம் பழத்தைக் கொடுக்க எண்ணியுள்ளேன் என்று கூறினார். நீ அவனுக்கு எதையும் கொடுக்கவில்லையானால் உன் மீது பொய் சொன்ன குற்றம் எழுதப்படும் என்றார்கள்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் ஆமிர் (ரலி)
நூல் : அபூதாவூத்: 4339

கியாமத் நாள் அடையாளம். ( 3 )

 கியாமத் நாள் அடையாளம். ( 3 )

பூமி வெட்ட வெளியாகி விடும்.

وَيَوْمَ نُسَيِّرُ الْجِبَالَ وَتَرَى الْأَرْضَ بَارِزَةً وَحَشَرْنَاهُمْ فَلَمْ نُغَادِرْ مِنْهُمْ أَحَدًا

நாம் மலைகளை இடம் பெயரச் செய்யும் நாளில் பூமியை வெட்ட வெளியாகக் காண்பீர்! அவர்களை ஒன்று திரட்டுவோம். அவர்களில் ஒருவரையும் விட்டு வைக்க மாட்டோம்.
திருக்குர்ஆன் 18:47

إِذَا رُجَّتِ الْأَرْضُ رَجًّا وَبُسَّتِ الْجِبَالُ بَسًّا فَكَانَتْ هَبَاءً مُّنبَثًّا

பூமி ஒரேயடியாக அசைக்கப்படும் போது, மலைகள் தூள் தூளாக்கப்படும் போது, அவை பரப்பப்பட்ட புழுதியாக ஆகும்.
திருக்குர்ஆன் 56:4, 5, 6

فَإِذَا نُفِخَ فِي الصُّورِ نَفْخَةٌ وَاحِدَةٌ وَحُمِلَتِ الْأَرْضُ وَالْجِبَالُ فَدُكَّتَا دَكَّةً وَاحِدَةً فَيَوْمَئِذٍ وَقَعَتِ الْوَاقِعَةُ

ஒரே ஒரு தடவை ஸூர் ஊதப்பட்டு, பூமியும், மலைகளும் தூக்கப்பட்டு ஒரேயடியாக தூள் தூளாக்கப்படும் போது, அந்நாளில் தான் அந்த நிகழ்ச்சி நடந்தேறும்.
திருக்குர்ஆன் 69:13, 14, 15

يَوْمَ تَرْجُفُ الْأَرْضُ وَالْجِبَالُ وَكَانَتِ الْجِبَالُ كَثِيبًا مَّهِيلًا

பூமியும், மலைகளும் அந்நாளில் ஆட்டம் காணும். மலைகள் மண் குவியலாகி விடும்.
திருக்குர்ஆன் 73:14

كَلَّا إِذَا دُكَّتِ الْأَرْضُ دَكًّا دَكًّا

அவ்வாறில்லை! பூமி தூள்தூளாக நொறுக்கப்படும் போது,
திருக்குர்ஆன் 89:21

إِذَا زُلْزِلَتِ الْأَرْضُ زِلْزَالَهَا

பூமி பேரதிர்ச்சியாகக் குலுக்கப்படும் போது,
திருக்குர்ஆன் 99:1

وَأَخْرَجَتِ الْأَرْضُ أَثْقَالَهَا

தனது சுமைகளை பூமி வெளிப்படுத்தும் போது,
திருக்குர்ஆன் 99:2

Sunday, January 29, 2023

குர்ஆன் வசனம் 332

 ﷽ குர்ஆன் வசனம் 332

29-01-2023 ஞாயிற்றுக்கிழமை

اِمَّا يَـبۡلُغَنَّ عِنۡدَكَ الۡكِبَرَ اَحَدُهُمَاۤ اَوۡ كِلٰهُمَا فَلَا تَقُلْ لَّهُمَاۤ اُفٍّ وَّلَا تَنۡهَرۡهُمَا وَقُلْ لَّهُمَا قَوۡلًا كَرِيۡمًا

உம்முடன் இருக்கும் (தாய் தந்தை ஆகிய) அவ்விருவருமோ, இருவரில் ஒருவரோ முதுமையை அடைந்து விட்டால் அவ்விருவரை நோக்கி 'சீ' எனக் கூறாதீர்! அவ்விருவரையும் விரட்டாதீர்! மரியாதையான சொல்லையே அவ்விருவரிடமும் கூறுவீராக!

[அல்குர்ஆன் 17:23]

உபதேசம் : 582

 ﷽ உபதேசம் : 582

29-01-2023 ஞாயிற்றுக்கிழமை

"மலையிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டவர் நரகில் நிரந்தரமாகக் குதித்துக் கொண்டேயிருப்பார்! விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டவர் நரகில் நிரந்தரமாக விஷத்தைக் குடித்துக் கொண்டேயிருப்பார்! ஒரு கூா்மையான ஆயுதத்தால் தற்கொலை செய்து கொண்டவா் நரகில் கூராயுதத்தால் தம் வயிற்றில் நிரந்தரமாகக் குத்திக் கொண்டேயிருப்பார்!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி) புகாரி - 5778

சுப்ஹானல்லாஹ் என்பதன் சிறப்பு. ( 23 )

 சுப்ஹானல்லாஹ் என்பதன் சிறப்பு. ( 23 )


سبحان الله

சுப்ஹானல்லாஹ்.

பொருள் : அல்லாஹ் தூயவன்.

சட்டம் : தொழுகையில் இமாம் தவறிழைத்தால், சுப்ஹானல்லாஹ் என்று கூற வேண்டும்.

ஆதாரம் : (தொழுகையில் இமாம் தவறிழைத்தால்) சுப்ஹானல்லாஹ் என்று கூறுவது ஆண்களுக்கு உரியதாகும். கைதட்டுதல் பெண்களுக்குரியதாகும்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி-1203 , திர்மிதீ-369 (337)

கியாமத் நாள் அடையளம். ( 2 )

 கியாமத் நாள் அடையளம். ( 2 )

யஃஜுஜ், மஃஜுஜ் கூட்டத்தினரின் வருகை.

قَالُوا يَا ذَا الْقَرْنَيْنِ إِنَّ يَأْجُوجَ وَمَأْجُوجَ مُفْسِدُونَ فِي الْأَرْضِ فَهَلْ نَجْعَلُ لَكَ خَرْجًا عَلَىٰ أَن تَجْعَلَ بَيْنَنَا وَبَيْنَهُمْ سَدًّا

"துல்கர்னைனே! யஃஜூஜ், மஃஜூஜ் என்போர் பூமியில் குழப்பம் விளைவிக்கின்றனர். எங்களுக்கும், அவர்களுக்கும் இடையே ஒரு தடுப்பை நீர் ஏற்படுத்திட உமக்கு நாங்கள் வரி தரட்டுமா?'' என்று அவர்கள் (சைகை மூலம்) கேட்டனர்.
திருக்குர்ஆன் 18:94

حَتَّىٰ إِذَا فُتِحَتْ يَأْجُوجُ وَمَأْجُوجُ وَهُم مِّن كُلِّ حَدَبٍ يَنسِلُونَ

முடிவில் யஃஜூஜ் மஃஜூஜ் (கூட்டத்தினர்) திறந்து விடப்பட்டு அவர்கள் ஒவ்வொரு மேட்டிலிருந்தும் விரைவார்கள்.
திருக்குர்ஆன் 21:96

இறை வசனங்களை நம்பாதோரை இனங்காட்டிப் பேசுகின்ற பிராணி.

وَإِذَا وَقَعَ الْقَوْلُ عَلَيْهِمْ أَخْرَجْنَا لَهُمْ دَابَّةً مِّنَ الْأَرْضِ تُكَلِّمُهُمْ أَنَّ النَّاسَ كَانُوا بِآيَاتِنَا لَا يُوقِنُونَ

அவர்களுக்கு எதிரான (நமது) கட்டளை நிகழும் போது பூமியிலிருந்து ஓர் உயிரினத்தை வெளிப்படுத்துவோம். நமது வசனங்களை மனிதர்கள் உறுதி கொள்ளாமல் இருந்தது பற்றி அவர்களிடம் அது பேசும்.
திருக்குர்ஆன் 27:82

மனிதர்களை மூடிக் கொள்ளும் புகை மண்டலம் உருவாகுதல்.

فَارْتَقِبْ يَوْمَ تَأْتِي السَّمَاءُ بِدُخَانٍ مُّبِينٍ

வானம் தெளிவான புகையைக் கொண்டு வரும் நாளை எதிர்பார்ப்பீராக!
திருக்குர்ஆன் 44:10

கடல்கள் தீ மூட்டப்படும்.

وَإِذَا الْبِحَارُ سُجِّرَتْ

கடல்கள் தீ மூட்டப்படும் போது,
திருக்குர்ஆன் 81:6

Saturday, January 28, 2023

Chapter - 15 Surah Al-Hijr

Chapter - 15

Surah Al-Hijr


بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

In the name of Allah the most beneficent, most merciful
----------------------------------------------------------

أعوذ بالله من الشيطان الرجيم
I seek refuge in Allah from the outcast Shaitan


وَأَرْسَلْنَا الرِّيَاحَ لَوَاقِحَ فَأَنْزَلْنَا مِنَ السَّمَاءِ مَاءً فَأَسْقَيْنَاكُمُوهُ وَمَا أَنْتُمْ لَهُ بِخَازِنِينَ

And We send the winds fertilizing (to fill heavily the clouds with water), then caused the water (rain) to descend from the sky, and We gave it to you to drink, and it is not you who are the owners of its stores [i.e. to give water to whom you like or to withhold it from whom you like]. (Al-Hijr 15:22)

Waarsalna alrriyaha lawaqiha faanzalna mina alssama-i maan faasqaynakumoohu wama antum lahu bikhazineena

உபதேசம் : 581

 ﷽ உபதேசம் : 581

28-01-2023 சனிக்கிழமை

قَالَتْ كُلَّ اللَّيْلِ أَوْتَرَ رَسُولُ اللَّهِ (ﷺ) وَانْتَهَى وِتْرُهُ إِلَى السَّحَرِ.

நபி (ஸல்) அவா்கள் இரவின் எல்லா நேரங்களிலும் வித்ரு தொழுக்கூடியவா்களாக இருந்தார்கள். (சில சமயம்) அவர்களின் வித்ரு ஸஹர் (ஸுபுஹ்) வரை நீண்டு விடும்!

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) புகாரி - 996

குர்ஆன் வசனம் 331

 ﷽ குர்ஆன் வசனம் 331

28-01-2023 சனிக்கிழமை

وَلَـلۡاٰخِرَةُ اَكۡبَرُ دَرَجٰتٍ وَّاَكۡبَرُ تَفۡضِيۡلًا‏
மறுமை வாழ்வு மிகப் பெரிய தகுதிகளும், மிகப் பெரிய சிறப்புக்களும் கொண்டது.

[அல்குர்ஆன் 17:21]

சுப்ஹானல்லாஹ் என்பதன் சிறப்பு. ( 22 )

 சுப்ஹானல்லாஹ் என்பதன் சிறப்பு. ( 22 )


سبحان الله

சுப்ஹானல்லாஹ்.

பொருள் : அல்லாஹ் தூயவன்.

சட்டம்: மேட்டிலிருந்து இறங்கும்போது சுப்ஹானல்லாஹ் என்று கூற வேண்டும்.

ஆதாரம் : நாங்கள் நபி (ஸல்) காலத்தில் (மேட்டில்) ஏறும்போது 'அல்லாஹு அக்பர் - அல்லாஹ் மிகப் பெரியவன்' என்று தக்பீர் கூறி வந்தோம்; (பள்ளத்தாக்குகளில்) இறங்கும்போது 'சுப்ஹானல்லாஹ் - அல்லாஹ் குறைகளிலிருந்தும் பலவீனங்களிலிருந்தும் தூய்மையானவன்' என்று தஸ்பீஹ் செய்து வந்தோம்.
அறிவிப்பாளர்: ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி).
ஸஹீஹ் புகாரி : 2993.

கியாமத் நாள் அடையாளம். ( 1 )

 கியாமத் நாள் அடையாளம். ( 1 )

வானம் சுருட்டப்பட்டு விடும்.

يَوْمَ نَطْوِي السَّمَاءَ كَطَيِّ السِّجِلِّ لِلْكُتُبِ ۚ كَمَا بَدَأْنَا أَوَّلَ خَلْقٍ نُّعِيدُهُ ۚ وَعْدًا عَلَيْنَا ۚ إِنَّا كُنَّا فَاعِلِينَ

எழுதப்பட்ட ஏடுகளைச் சுருட்டுவது போல் வானத்தை நாம் சுருட்டும் நாளில் முதல் படைப்பை நாம் துவக்கியது போல் அதை மீண்டும் நிறுவுவோம். இது நமது வாக்குறுதி. நாம் (எதையும்) செய்வோராவோம்.
திருக்குர்ஆன் 21:104

وَيَوْمَ تَشَقَّقُ السَّمَاءُ بِالْغَمَامِ وَنُزِّلَ الْمَلَائِكَةُ تَنزِيلًا

(அது) மேகத்தால் வானம் பிளக்கப்பட்டு, வானவர்கள் உறுதியாக இறக்கி வைக்கப்படும் நாள்!
திருக்குர்ஆன் 25:25

فَارْتَقِبْ يَوْمَ تَأْتِي السَّمَاءُ بِدُخَانٍ مُّبِينٍ

வானம் தெளிவான புகையைக் கொண்டு வரும் நாளை எதிர்பார்ப்பீராக!
திருக்குர்ஆன் 44:10

يَوْمَ تَمُورُ السَّمَاءُ مَوْرًا

அந்நாளில் வானம் சுற்றிச் சுழலும்.
திருக்குர்ஆன் 52:9

فَإِذَا انشَقَّتِ السَّمَاءُ فَكَانَتْ وَرْدَةً كَالدِّهَانِ

வானம் பிளக்கும்போது எண்ணெய்யைப் போல் சிவந்ததாக ஆகும்.
திருக்குர்ஆன் 55:37

وَانشَقَّتِ السَّمَاءُ فَهِيَ يَوْمَئِذٍ وَاهِيَةٌ

வானம் பிளந்து விடும். அன்று அது உறுதியற்றதாக இருக்கும்.
திருக்குர்ஆன் 69:16

يَوْمَ تَكُونُ السَّمَاءُ كَالْمُهْلِ

அந்நாளில் வானம் உருக்கிய செம்பு போல் ஆகும்.
திருக்குர்ஆன் 70:8

السَّمَاءُ مُنفَطِرٌ بِهِ ۚ كَانَ وَعْدُهُ مَفْعُولًا

அதில் வானம் வெடித்து விடும். அவனது வாக்குறுதி செய்து முடிக்கப்படும்.
திருக்குர்ஆன் 73:18

وَفُتِحَتِ السَّمَاءُ فَكَانَتْ أَبْوَابًا

வானம் திறக்கப்பட்டு பல வாசல்களாக ஆகும்.
திருக்குர்ஆன் 78:19

ஜும்ஆ - ஹதீஸ்

🕋🕋🕋🕋🕋🕋

ஜும்ஆ - ஹதீஸ்


நபி (ஸல்) அவர்களின் பள்ளிவாசலில் நடத்தப் பட்ட ஜும்ஆவுக்கு அடுத்து

பஹ்ரைனில் உள்ள ஜுவாஸா எனும் கிராமத்தில்

அப்துல் கைஸ் பள்ளியில்தான் முதன்முதலாக ஜும்ஆ நடந்தது.


அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)

நூல் : புகாரி 892 

அல் குர் ஆன் 2️⃣7️⃣ : 1️⃣9️⃣

 بسْــــــــمِ ﷲِالرَّحْمَنِ الرَّحِيـــــْــمِ


🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻

து ஆ

‏رَبِّ اَوْزِعْنِىْۤ اَنْ اَشْكُرَ نِعْمَتَكَ الَّتِىْۤ اَنْعَمْتَ عَلَىَّ وَعَلٰى وَالِدَىَّ وَاَنْ اَعْمَلَ صَالِحًـا تَرْضٰٮهُ وَاَدْخِلْنِىْ بِرَحْمَتِكَ فِىْ عِبَادِكَ الصّٰلِحِيْنَ‏⭘


‏‏‏“ என் இறைவனே! என்மீதும், என் பெற்றோர்மீதும் நீ புரிந்த அருட்கொடைக்கு நான் நன்றி செலுத்துவதற்கும், நீ பொருந்திக் கொள்ளும் நற்செயலைச் செய்வதற்கும் எனக்கு வழிகாட்டுவாயாக! உன் கருணையால் என்னை உனது நல்லடியார்களுடன் சேர்த்து வைப்பாயாக!”


அல் குர் ஆன் 2️⃣7️⃣ : 1️⃣9️⃣

💚💚💚💚

சொர்க்கச் சோலைகள். ( 5 )

 சொர்க்கச் சோலைகள். ( 5 )

நீரூற்றுக்களும் உள்ளன.

إِنَّ الْمُتَّقِينَ فِي جَنَّاتٍ وَعُيُونٍ

(இறைவனை) அஞ்சுவோர் சொர்க்கச் சோலைகளிலும், நீரூற்றுகளிலும் இருப்பார்கள்.
திருக்குர்ஆன் 15:45

إِنَّ الْمُتَّقِينَ فِي مَقَامٍ أَمِينٍ فِي جَنَّاتٍ وَعُيُونٍ

(இறைவனை) அஞ்சியோர் பாதுகாப்பான இடத்திலும், சொர்க்கச் சோலைகளிலும், நீர் ஊற்றுகளிலும் இருப்பார்கள்.
திருக்குர்ஆன் 44:51,52

فِيهِمَا عَيْنَانِ تَجْرِيَانِ

அவ்விரண்டிலும் இரண்டு ஊற்றுகள் பீறிட்டு ஓடும்.
திருக்குர்ஆன் 55:50

فِيهِمَا عَيْنَانِ نَضَّاخَتَانِ

அவ்விரண்டிலும் பொங்கி வழியும் இரண்டு ஊற்றுகள் உள்ளன.
திருக்குர்ஆன் 55:66

عَيْنًا يَشْرَبُ بِهَا عِبَادُ اللَّهِ يُفَجِّرُونَهَا تَفْجِيرًا

ஓர் ஊற்று! அதில் அல்லாஹ்வின் அடியார்கள் பருகுவார்கள். அவர்கள் (தாம்) இருக்குமிடத்திலிருந்தே அதைப் பெற்றுக் கொள்வார்கள்.
திருக்குர்ஆன் 76:6

عَيْنًا فِيهَا تُسَمَّىٰ سَلْسَبِيلًا

அங்குள்ள ஸல்ஸபீல் எனப்படும் நீரூற்றிலிருந்து புகட்டப்படுவார்கள்.
திருக்குர்ஆன் 76:18

إِنَّ الْمُتَّقِينَ فِي ظِلَالٍ وَعُيُونٍ

(இறைவனை) அஞ்சியோர் நிழல்களிலும், நீரூற்றுகளிலும் இருப்பார்கள்.
திருக்குர்ஆன் 77:41

عَيْنًا يَشْرَبُ بِهَا الْمُقَرَّبُونَ

அது நெருக்கமானோர் அருந்துகிற நீரூற்று!
திருக்குர்ஆன் 83:28

فِيهَا عَيْنٌ جَارِيَةٌ

அங்கே ஓடும் ஊற்றுகள் உண்டு.
திருக்குர்ஆன் 88:12

Chapter - 15 Surah Al-Hijr

Chapter - 15

Surah Al-Hijr


بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

In the name of Allah the most beneficent, most merciful
----------------------------------------------------------

أعوذ بالله من الشيطان الرجيم
I seek refuge in Allah from the outcast Shaitan


وَإِنْ مِنْ شَيْءٍ إِلَّا عِنْدَنَا خَزَائِنُهُ وَمَا نُنَزِّلُهُ إِلَّا بِقَدَرٍ مَعْلُومٍ

And there is not a thing, but with Us are the stores thereof. And We send it not down except in a known measure. (Al-Hijr 15:21)

Wa-in min shay-in illa AAindana khaza-inuhu wama nunazziluhu illa biqadarin maAAloomin

உபதேசம் : 580

 ﷽ உபதேசம் : 580

27-01-2023 வெள்ளிக்கிழமை

வாற்கோதுமை ரொட்டி, பழைய கொழுப்பு ஆகியவற்றை வைத்து விருந்துக்கு அழைத்தாலும் நபி (ஸல்) அவர்கள் அதை ஏற்றுக் கொள்வார்கள்!

அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரலி) திர்மிதீ - 1136

குர்ஆன் வசனம் 330

 ﷽ குர்ஆன் வசனம் 330

27-01-2023 வெள்ளிக்கிழமை
وَمَا كُنَّا مُعَذِّبِيۡنَ حَتّٰى نَبۡعَثَ رَسُوۡلًا

ஒரு தூதரை அனுப்பாதவரை நாம் (எவரையும்) தண்டிப்பதில்லை.

[அல்குர்ஆன் 17:15]

Thursday, January 26, 2023

சுப்ஹானல்லாஹ் என்பதன் சிறப்பு. ( 21 )

 சுப்ஹானல்லாஹ் என்பதன் சிறப்பு. ( 21 )


سبحان الله. الحمد لله. لا إله إلا الله.
الله اكبر.

சுப்ஹானல்லாஹ், அல்ஹம்து லில்லாஹ், லாயிலாஹ இல்லல்லாஹ், அல்லாஹு அக்பர்.

பொருள் : அல்லாஹ் தூயவன், அல்லாஹ்வுக்கே எல்லாப்புகழும், வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் இல்லை,
அல்லாஹ் மிகப்பெரியவன்.

சிறப்பு : அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமான (துதிச்) சொற்கள்.

ஆதாரம் : அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமான (துதிச்) சொற்கள் நான்கு ஆகும். 1. சுப்ஹானல்லாஹ் (அல்லாஹ் தூயவன்) 2. அல்ஹம்து லில்லாஹ் (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) 3. லா இலாஹ இல்லல்லாஹ் (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை) 4. அல்லாஹு அக்பர் (அல்லாஹ் மிகவும் பெரியவன்).
இவற்றில் எதை நீர் முதலில் கூறினாலும் உம்மீது குற்றமில்லை” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: சமுரா பின் ஜுன்தப் (ரலி),
நூல்: முஸ்லிம் 4330

அந்நாள் கடுமையானது. ( 12 )

 அந்நாள் கடுமையானது. ( 12 )

பார்வைகள் நிலைகுத்தி நிற்கும் நாள்.

وَلَا تَحْسَبَنَّ اللَّهَ غَافِلًا عَمَّا يَعْمَلُ الظَّالِمُونَ ۚ إِنَّمَا يُؤَخِّرُهُمْ لِيَوْمٍ تَشْخَصُ فِيهِ الْأَبْصَارُ

அநீதி இழைத்தோர் செய்து கொண்டிருப்பவற்றை அல்லாஹ் கவனிக்காதவன் என்று எண்ணிவிடாதீர்! பார்வைகள் நிலைகுத்தி நிற்கும் ஒரு நாளுக்காகவே அவர்களை அல்லாஹ் தாமதப்படுத்தியிருக்கிறான்.
திருக்குர்ஆன் 14:42

مُهْطِعِينَ مُقْنِعِي رُءُوسِهِمْ لَا يَرْتَدُّ إِلَيْهِمْ طَرْفُهُمْ ۖ وَأَفْئِدَتُهُمْ هَوَاءٌ

(அந்நாளில்) தமது தலைகளை உயர்த்தியோராக தறிகெட்டு ஓடுவார்கள். (நிலைகுத்திய) அவர்களின் பார்வை பழைய நிலைக்குத் திரும்பாது. அவர்களின் உள்ளங்களும் செயலற்று விடும்.
திருக்குர்ஆன் 14:43

فِي بُيُوتٍ أَذِنَ اللَّهُ أَن تُرْفَعَ وَيُذْكَرَ فِيهَا اسْمُهُ يُسَبِّحُ لَهُ فِيهَا بِالْغُدُوِّ وَالْآصَالِ رِجَالٌ لَّا تُلْهِيهِمْ تِجَارَةٌ وَلَا بَيْعٌ عَن ذِكْرِ اللَّهِ وَإِقَامِ الصَّلَاةِ وَإِيتَاءِ الزَّكَاةِ ۙ يَخَافُونَ يَوْمًا تَتَقَلَّبُ فِيهِ الْقُلُوبُ وَالْأَبْصَارُ

(இறை) இல்லங்கள் உயர்த்தப்படவும், அதில் தனது பெயர் நினைக்கப்படவும் அல்லாஹ் கட்டளையிட்டுள்ளான். அதில் காலையிலும், மாலையிலும் அவனைச் சில ஆண்கள் துதிக்கின்றனர். வணிகமோ, வர்த்தகமோ அவர்களை அல்லாஹ்வின் நினைவை விட்டும், தொழுகையை நிலைநாட்டுவதை விட்டும், ஸகாத் கொடுப்பதை விட்டும் திசை திருப்பாது. பார்வைகளும், உள்ளங்களும் தடுமாறும் நாளை அவர்கள் அஞ்சுவார்கள்.
திருக்குர்ஆன் 24:37

فَإِذَا بَرِقَ الْبَصَرُ وَخَسَفَ الْقَمَرُ وَجُمِعَ الشَّمْسُ وَالْقَمَرُ يَقُولُ الْإِنسَانُ يَوْمَئِذٍ أَيْنَ الْمَفَرُّ

பார்வை நிலை குத்தும் போது, சந்திரனுக்குக் கிரகணம் ஏற்படும் போது, சூரியனும், சந்திரனும் ஒன்று சேர்க்கப்படும் போது, வெருண்டோடும் இடம் எங்கே என்று அந்நாளில் மனிதன் கேட்பான்.
திருக்குர்ஆன் 75:7,8,9,10

மனிதர்கள் ஈசல்கள் போல் வீசப்படும் நாள்.

يَوْمَ يَكُونُ النَّاسُ كَالْفَرَاشِ الْمَبْثُوثِ

அந்நாளில் மனிதர்கள் சிதறடிக்கப்பட்ட ஈசல்களைப் போல் ஆவார்கள்.
திருக்குர்ஆன் 101:4

குர்ஆன் வசனம் 329

 ﷽ குர்ஆன் வசனம் 329

26-01-2023 வியாழக்கிழமை

وَيَدۡعُ الۡاِنۡسَانُ بِالشَّرِّ دُعَآءَهٗ بِالۡخَيۡرِ‌ ؕ وَكَانَ الۡاِنۡسَانُ عَجُوۡلًا‏

நன்மைக்காகப் பிரார்த்திப்பது போலவே தீமைக்காகவும் மனிதன் பிரார்த்தனை செய்கிறான். மனிதன் அவசரக்காரனாக இருக்கிறான்.

[அல்குர்ஆன் 17:11]

உபதேசம் : 579

 ﷽ உபதேசம் : 579

26-01-2023 வியாழக்கிழமை

كَانَ رَسُولُ اللَّهِ (ﷺ) يَقْبَلُ الْهَدِيَّةَ وَيُثِيبُ عَلَيْهَا

நபி (ஸல்) அவர்கள் அன்பளிப்பை ஏற்று அதற்கு (பதிலாக எதையாவது கொடுத்து) ஈடு செய்து வந்தார்கள்!

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) புகாரி - 2585

சொர்க்கச் சோலைகள். ( 4 )

 சொர்க்கச் சோலைகள். ( 4 )

அழகான குடியிருப்புகளும் உண்டு.

الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ طُوبَىٰ لَهُمْ وَحُسْنُ مَآبٍ

நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்தோருக்கு நல்வாழ்வும், அழகிய தங்குமிடமும் உண்டு.
திருக்குர்ஆன் 13:29

أُولَٰئِكَ يُجْزَوْنَ الْغُرْفَةَ بِمَا صَبَرُوا وَيُلَقَّوْنَ فِيهَا تَحِيَّةً وَسَلَامًا

அவர்கள் சகித்துக் கொண்ட காரணத்தால் அவர்களுக்கு மாளிகை வழங்கப்படும். ஸலாமுடன் வாழ்த்துக் கூறி அவர்கள் வரவேற்கப்படுவார்கள்.
திருக்குர்ஆன் 25:75

وَالَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ لَنُبَوِّئَنَّهُم مِّنَ الْجَنَّةِ غُرَفًا تَجْرِي مِن تَحْتِهَا الْأَنْهَارُ خَالِدِينَ فِيهَا ۚ نِعْمَ أَجْرُ الْعَامِلِينَ

நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்வோரை சொர்க்கத்தில் உள்ள மாளிகையில் குடியமர்த்துவோம். அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் நிரந்தரமாக இருப்பார்கள். உழைத்தோரின் கூலி அழகானது.
திருக்குர்ஆன் 29:58

لَٰكِنِ الَّذِينَ اتَّقَوْا رَبَّهُمْ لَهُمْ غُرَفٌ مِّن فَوْقِهَا غُرَفٌ مَّبْنِيَّةٌ تَجْرِي مِن تَحْتِهَا الْأَنْهَارُ ۖ وَعْدَ اللَّهِ ۖ لَا يُخْلِفُ اللَّهُ الْمِيعَادَ

மாறாக, தமது இறைவனை அஞ்சியோருக்கு மாளிகைகளுக்கு மேல் எழுப்பப்பட்ட மாளிகைகள் உள்ளன. அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். இது அல்லாஹ்வின் வாக்குறுதி. அல்லாஹ் வாக்குறுதியை மீற மாட்டான்.
திருக்குர்ஆன் 39:20

يَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَيُدْخِلْكُمْ جَنَّاتٍ تَجْرِي مِن تَحْتِهَا الْأَنْهَارُ وَمَسَاكِنَ طَيِّبَةً فِي جَنَّاتِ عَدْنٍ ۚ ذَٰلِكَ الْفَوْزُ الْعَظِيمُ

உங்களுக்காக உங்கள் பாவங்களை அவன் மன்னிப்பான். உங்களை சொர்க்கச் சோலைகளில் நுழையச் செய்வான். அதன் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். நிலையான சொர்க்கச் சோலைகளில் தூய குடியிருப்புகளும் உள்ளன. இதுவே மகத்தான வெற்றி.
திருக்குர்ஆன் 61:12

Chapter - 15 Surah Al-Hijr

Chapter - 15

Surah Al-Hijr


بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

In the name of Allah the most beneficent, most merciful
----------------------------------------------------------

أعوذ بالله من الشيطان الرجيم
I seek refuge in Allah from the outcast Shaitan


وَجَعَلْنَا لَكُمْ فِيهَا مَعَايِشَ وَمَنْ لَسْتُمْ لَهُ بِرَازِقِينَ

And We have provided therein means of living, for you and for those whom you provide not [moving (living) creatures, cattle, beasts, and other animals]. (Al-Hijr 15:20)

WajaAAalna lakum feeha maAAayisha waman lastum lahu biraziqeena

அந்நாள் கடுமையானது. ( 11 )

 அந்நாள் கடுமையானது. ( 11 )

உற்றார் உறவினரை விட்டு ஓடும் நாள்.

وَكُلُّهُمْ آتِيهِ يَوْمَ الْقِيَامَةِ فَرْدًا

அவர்கள் அனைவரும் கியாமத் நாளில் அவனிடம் தன்னந்தனியாகவே வருவார்கள்.
திருக்குர்ஆன் 19:95

فَإِذَا نُفِخَ فِي الصُّورِ فَلَا أَنسَابَ بَيْنَهُمْ يَوْمَئِذٍ وَلَا يَتَسَاءَلُونَ

ஸூர் ஊதப்படும் போது அவர்களிடையே அந்நாளில் எந்த உறவுகளும் இருக்காது. ஒருவரையொருவர் விசாரித்துக் கொள்ளவும் மாட்டார்கள்.
திருக்குர்ஆன் 23:101

فَعَمِيَتْ عَلَيْهِمُ الْأَنبَاءُ يَوْمَئِذٍ فَهُمْ لَا يَتَسَاءَلُونَ

செய்திகள் அந்நாளில் அவர்களுக்கு மறந்து விடும். எனவே அவர்கள் ஒருவரையொருவர் விசாரித்துக் கொள்ள மாட்டார்கள்.
திருக்குர்ஆன் 28:66

يَا أَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمْ وَاخْشَوْا يَوْمًا لَّا يَجْزِي وَالِدٌ عَن وَلَدِهِ وَلَا مَوْلُودٌ هُوَ جَازٍ عَن وَالِدِهِ شَيْئًا ۚ إِنَّ وَعْدَ اللَّهِ حَقٌّ ۖ فَلَا تَغُرَّنَّكُمُ الْحَيَاةُ الدُّنْيَا وَلَا يَغُرَّنَّكُم بِاللَّهِ الْغَرُورُ

மனிதர்களே! உங்கள் இறைவனை அஞ்சுங்கள்! தந்தை மகனைக் காக்க முடியாத, மகன் தந்தையைச் சிறிதும் காப்பாற்ற இயலாத நாளை அஞ்சுங்கள்! அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானது. இவ்வுலக வாழ்க்கை உங்களை ஏமாற்றி விட வேண்டாம்! ஏமாற்றுபவனும் அல்லாஹ்வைப் பற்றி உங்களை ஏமாற்றி விட வேண்டாம்.
திருக்குர்ஆன் 31:33

لَن تَنفَعَكُمْ أَرْحَامُكُمْ وَلَا أَوْلَادُكُمْ ۚ يَوْمَ الْقِيَامَةِ يَفْصِلُ بَيْنَكُمْ ۚ وَاللَّهُ بِمَا تَعْمَلُونَ بَصِيرٌ

கியாமத் நாளில் உங்களின் உறவினரும், உங்கள் சந்ததிகளும் உங்களுக்குப் பயன் தரவே மாட்டார்கள். உங்களுக்கிடையே அவன் தீர்ப்பளிப்பான். நீங்கள் செய்வதை அல்லாஹ் பார்ப்பவன்.
திருக்குர்ஆன் 60:3

فَإِذَا جَاءَتِ الصَّاخَّةُ يَوْمَ يَفِرُّ الْمَرْءُ مِنْ أَخِيهِ وَأُمِّهِ وَأَبِيهِ وَصَاحِبَتِهِ وَبَنِيهِ

அந்தச் சப்தம் ஏற்படும் அந்த நாளில் மனிதன் தனது சகோதரனையும், தாயையும், தந்தையையும், மனைவியையும், பிள்ளைகளையும் விட்டு ஓடுவான்.
திருக்குர்ஆன் 80:33, 34, 35, 36

يَوْمَ لَا تَمْلِكُ نَفْسٌ لِّنَفْسٍ شَيْئًا ۖ وَالْأَمْرُ يَوْمَئِذٍ لِّلَّهِ

அந்நாளில் எவரும் எவருக்கும் சிறிதளவும் நன்மை செய்ய முடியாது. அந்நாளில் அதிகாரம் அல்லாஹ்வுக்கே.
திருக்குர்ஆன் 82:19

Wednesday, January 25, 2023

குர்ஆன் வசனம் 328

 ﷽ குர்ஆன் வசனம் 328

25-01-2023 புதன்கிழமை

وَّاَنَّ الَّذِيۡنَ لَا يُؤۡمِنُوۡنَ بِالۡاٰخِرَةِ اَعۡتَدۡنَا لَهُمۡ عَذَابًا اَلِيۡمًا

மறுமையை நம்பாமல் இருப்போருக்குத் துன்புறுத்தும் வேதனையைத் தயாரித்துள்ளோம்.

[அல்குர்ஆன் 17:10]

உபதேசம் : 578

 ﷽ உபதேசம் : 578

25-01-2023 புதன்கிழமை

நபித் தோழா்களுக்கு நபி (ஸல்) அவர்களை விட அன்பிற்குரியவர்கள் எவரும் இல்லை! எனினும் நபி (ஸல்) அவர்கள் வருவதைக் கண்டால் தோழா்கள் எழுந்து நிற்க மாட்டார்கள்! இப்படிச் செய்வது நபி (ஸல்) அவர்கள் வெறுப்பிற்குறிய செயல் என்பதை தோழர்கள் அறிந்து வைத்திருந்ததே இதற்குக் காரணம்.

அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரலி) திர்மிதீ - 2678

சொர்க்கச் சோலைகள். ( 3 )

 சொர்க்கச் சோலைகள். ( 3 )

சொர்க்கச் சோலைகளின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும்.

لَٰكِنِ الَّذِينَ اتَّقَوْا رَبَّهُمْ لَهُمْ جَنَّاتٌ تَجْرِي مِن تَحْتِهَا الْأَنْهَارُ خَالِدِينَ فِيهَا نُزُلًا مِّنْ عِندِ اللَّهِ ۗ وَمَا عِندَ اللَّهِ خَيْرٌ لِّلْأَبْرَارِ

எனினும் தமது இறைவனை அஞ்சியோருக்கு சொர்க்கச் சோலைகள் உள்ளன. அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் நிரந்தரமாக இருப்பார்கள். (இது) அல்லாஹ்வின் விருந்து. அல்லாஹ்விடம் இருப்பவை நல்லோருக்குச் சிறந்தது.
திருக்குர்ஆன் 3:198

تِلْكَ حُدُودُ اللَّهِ ۚ وَمَن يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ يُدْخِلْهُ جَنَّاتٍ تَجْرِي مِن تَحْتِهَا الْأَنْهَارُ خَالِدِينَ فِيهَا ۚ وَذَٰلِكَ الْفَوْزُ الْعَظِيمُ

இவை அல்லாஹ்வின் வரம்புகள். அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுவோரை சொர்க்கச் சோலைகளில் அவன் நுழையச் செய்வான். அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் நிரந்தரமாக இருப்பார்கள். இதுவே மகத்தான வெற்றி.
திருக்குர்ஆன் 4:13

فَأَثَابَهُمُ اللَّهُ بِمَا قَالُوا جَنَّاتٍ تَجْرِي مِن تَحْتِهَا الْأَنْهَارُ خَالِدِينَ فِيهَا ۚ وَذَٰلِكَ جَزَاءُ الْمُحْسِنِينَ

அவர்கள் (இவ்வாறு) கூறியதால் அவர்களுக்கு சொர்க்கச் சோலைகளை அல்லாஹ் பரிசாக வழங்கினான். அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் நிரந்தரமாக இருப்பார்கள். இதுவே நன்மை செய்வோருக்குரிய கூலி.
திருக்குர்ஆன் 5:85

أَعَدَّ اللَّهُ لَهُمْ جَنَّاتٍ تَجْرِي مِن تَحْتِهَا الْأَنْهَارُ خَالِدِينَ فِيهَا ۚ ذَٰلِكَ الْفَوْزُ الْعَظِيمُ

அவர்களுக்காகச் சொர்க்கச் சோலைகளை அல்லாஹ் தயாரித்துள்ளான். அதன் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் நிரந்தரமாக இருப்பார்கள். இதுவே மகத்தான வெற்றி.
திருக்குர்ஆன் 9:89


إِنَّ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ يَهْدِيهِمْ رَبُّهُم بِإِيمَانِهِمْ ۖ تَجْرِي مِن تَحْتِهِمُ الْأَنْهَارُ فِي جَنَّاتِ النَّعِيمِ

நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்தவர்கள் நம்பிக்கை கொண்டதன் காரணமாக அவர்களின் இறைவன் இன்பம் நிறைந்த சொர்க்கச் சோலைகளில் அவர்களைச் சேர்ப்பான். அவர்களுக்குக் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும்.
திருக்குர்ஆன் 10:9

جَنَّاتُ عَدْنٍ تَجْرِي مِن تَحْتِهَا الْأَنْهَارُ خَالِدِينَ فِيهَا ۚ وَذَٰلِكَ جَزَاءُ مَن تَزَكَّىٰ

நிலையான சொர்க்கச் சோலைகள் உள்ளன. அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் நிரந்தரமாக இருப்பார்கள். இதுவே பரிசுத்தமாக வாழ்ந்தோரின் கூலி.
திருக்குர்ஆன் 20:76

إِنَّ اللَّهَ يُدْخِلُ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ جَنَّاتٍ تَجْرِي مِن تَحْتِهَا الْأَنْهَارُ يُحَلَّوْنَ فِيهَا مِنْ أَسَاوِرَ مِن ذَهَبٍ وَلُؤْلُؤًا ۖ وَلِبَاسُهُمْ فِيهَا حَرِيرٌ

நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்தோரை அல்லாஹ் சொர்க்கச் சோலைகளில் நுழையச் செய்வான். அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். தங்கக் காப்புகளும், முத்தும் அவர்களுக்கு அணிவிக்கப்படும். அங்கே அவர்களின் ஆடை பட்டாகும்.
திருக்குர்ஆன் 22:23

Chapter - 15 Surah Al-Hijr

‏‏‏‏Chapter - 15

Surah Al-Hijr


بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

In the name of Allah the most beneficent, most merciful
----------------------------------------------------------

أعوذ بالله من الشيطان الرجيم
I seek refuge in Allah from the outcast Shaitan


وَالْأَرْضَ مَدَدْنَاهَا وَأَلْقَيْنَا فِيهَا رَوَاسِيَ وَأَنْبَتْنَا فِيهَا مِنْ كُلِّ شَيْءٍ مَوْزُونٍ

And the earth We spread out, and placed therein firm mountains, and caused to grow therein all kinds of things in due proportion.
(Al-Hijr 15:19)

---------------------------------------------------------------

அந்நாள் கடுமையானது. ( 10 )

 அந்நாள் கடுமையானது. ( 10 )

இதயங்கள் தொண்டைகளை அடைத்துக் கொள்ளும் நாள்.

وَأَنذِرْهُمْ يَوْمَ الْآزِفَةِ إِذِ الْقُلُوبُ لَدَى الْحَنَاجِرِ كَاظِمِينَ ۚ مَا لِلظَّالِمِينَ مِنْ حَمِيمٍ وَلَا شَفِيعٍ يُطَاعُ

சீக்கிரம் வரவிருக்கும் நாளைப் பற்றி அவர்களுக்கு எச்சரிப்பீராக! அப்போது இதயங்கள் தொண்டைக் குழிகளுக்கு வந்து அதை மென்று விழுங்குவோராக அவர்கள் இருப்பார்கள். அநீதி இழைத்தோருக்கு எந்த நண்பனும், அங்கீகரிக்கப்படும் பரிந்துரையாளனும் இல்லை.
திருக்குர்ஆன் 40:18

போதையுடையோராக மாற்றி விடும் நாள்.

يَوْمَ تَرَوْنَهَا تَذْهَلُ كُلُّ مُرْضِعَةٍ عَمَّا أَرْضَعَتْ وَتَضَعُ كُلُّ ذَاتِ حَمْلٍ حَمْلَهَا وَتَرَى النَّاسَ سُكَارَىٰ وَمَا هُم بِسُكَارَىٰ وَلَٰكِنَّ عَذَابَ اللَّهِ شَدِيدٌ

நீங்கள் அதைக் காணும் நாளில் பாலூட்டும் ஒவ்வொருத்தியும், தான் பாலூட்டியதை (குழந்தையை) மறந்து விடுவாள். ஒவ்வொரு கர்ப்பிணியும், தன் கருவில் சுமந்ததை ஈன்று விடுவாள். போதை வயப்பட்டோராக மனிதர்களைக் காண்பீர்! அவர்கள் போதை வயப்பட்டோர் அல்லர். மாறாக அல்லாஹ்வின் வேதனை கடுமையானது.
திருக்குர்ஆன் 22:2

சிறுவர்களின் தலை முடி கூட நரைக்கும் நாள்.

فَكَيْفَ تَتَّقُونَ إِن كَفَرْتُمْ يَوْمًا يَجْعَلُ الْوِلْدَانَ شِيبًا

(ஏகஇறைவனை) நீங்கள் மறுத்தால் குழந்தைகளை நரைத்தோராக மாற்றும் நாளில் எவ்வாறு தப்பிப்பீர்கள்?
திருக்குர்ஆன் 73:17

காலோடு கால் பின்னிக் கொள்ளும் நாள்.

وَالْتَفَّتِ السَّاقُ بِالسَّاقِ إِلَىٰ رَبِّكَ يَوْمَئِذٍ الْمَسَاقُ

காலோடு கால் பின்னிக் கொள்ளும்.
அந்நாளில் இழுத்துச் செல்லப்படுவது உமது இறைவனிடமே.
திருக்குர்ஆன் 75:29,30

மலக்குகள் அணிவகுத்து நிற்கும் நாள்.

يَوْمَ يَقُومُ الرُّوحُ وَالْمَلَائِكَةُ صَفًّا ۖ لَّا يَتَكَلَّمُونَ إِلَّا مَنْ أَذِنَ لَهُ الرَّحْمَٰنُ وَقَالَ صَوَابًا

ரூஹும், வானவர்களும் அணி வகுத்து நிற்கும் நாளில் அளவற்ற அருளாளன் அனுமதியளித்து, நேர்மையைக் கூறுபவரைத் தவிர யாரும் பேச மாட்டார்கள்.
திருக்குர்ஆன் 78:38

Tuesday, January 24, 2023

உபதேசம் : 577

 ﷽ உபதேசம் : 577

24-01-2023 செவ்வாய்க்கிழமை

நபி (ஸல்) அவர்கள் திரைக்குள் இருக்கும் கன்னிப் பெண்ணை விடவும் அதிக வெட்கமுடையவர்களாக இருந்தார்கள்

அறிவிப்பவர் : அபூஸயீத் அல்குத்ரீ (ரலி) புகாரி - 3562

குர்ஆன் வசனம் 327

 ﷽ குர்ஆன் வசனம் 327

24-01-2023 செவ்வாய்க்கிழமை
وَجَعَلۡنَا جَهَنَّمَ لِلۡكٰفِرِيۡنَ حَصِيۡرًا‏

(நம்மை) மறுப்போருக்கு நரகத்தைச் சிறைச்சாலையாக ஆக்கியுள்ளோம்.

[அல்குர்ஆன் 17:8]

சொர்க்கச் சோலைகள். ( 2 )

 சொர்க்கச் சோலைகள். ( 2 )

வீண் பேச்சுக்கள் இல்லை.

لَّا يَسْمَعُونَ فِيهَا لَغْوًا إِلَّا سَلَامًا ۖ وَلَهُمْ رِزْقُهُمْ فِيهَا بُكْرَةً وَعَشِيًّا

அங்கே ஸலாம் என்பதைத் தவிர எந்த வீணானதையும் அவர்கள் செவியுற மாட்டார்கள். அங்கே காலையிலும், மாலையிலும் அவர்களுக்குரிய உணவுகள் உள்ளன.
திருக்குர்ஆன் 19:62

لَا يَسْمَعُونَ فِيهَا لَغْوًا وَلَا تَأْثِيمًا

அங்கே வீணானதையோ, பாவமான சொல்லையோ செவியுற மாட்டார்கள்.
திருக்குர்ஆன் 56:25

لَّا يَسْمَعُونَ فِيهَا لَغْوًا وَلَا كِذَّابًا

அங்கே வீணானதையோ, பொய்யையோ செவியுற மாட்டார்கள்.
திருக்குர்ஆன் 78:35

لَّا تَسْمَعُ فِيهَا لَاغِيَةً

அங்கே அவை வீணானதைச் செவியுறாது.
திருக்குர்ஆன் 88:11

கடும் குளிரும் இராது.

مُّتَّكِئِينَ فِيهَا عَلَى الْأَرَائِكِ ۖ لَا يَرَوْنَ فِيهَا شَمْسًا وَلَا زَمْهَرِيرًا

அதில் அவர்கள் உயர்ந்த இருக்கைகள் மீது சாய்ந்திருப்பார்கள். அங்கே சூரியனையும், கடும் குளிர்ச்சியையும் காண மாட்டார்கள்.
திருக்குர்ஆன் 76:13

அல்குர்ஆன் : 57:20

 اِعْلَمُوْۤا اَنَّمَا الْحَيٰوةُ الدُّنْيَا لَعِبٌ وَّلَهْوٌ وَّزِيْنَةٌ وَّتَفَاخُرٌۢ بَيْنَكُمْ وَتَكَاثُرٌ فِى الْاَمْوَالِ وَالْاَوْلَادِ‌ؕ كَمَثَلِ غَيْثٍ اَعْجَبَ الْكُفَّارَ نَبَاتُهٗ ثُمَّ يَهِيْجُ فَتَرٰٮهُ مُصْفَرًّا ثُمَّ يَكُوْنُ حُطٰمًا‌ؕ وَفِى الْاٰخِرَةِ عَذَابٌ شَدِيْدٌ ۙ وَّمَغْفِرَةٌ مِّنَ اللّٰهِ وَرِضْوَانٌ‌ؕ وَمَا الْحَيٰوةُ الدُّنْيَاۤ اِلَّا مَتَاعُ الْغُرُوْرِ‏

அறிந்து கொள்ளுங்கள்: “நிச்சயமாக இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வேடிக்கையும், அலங்காரமுமேயாகும்; மேலும் (அது) உங்களிடையே பெருமையடித்துக் கொள்வதும்; பொருள்களையும், சந்ததிகளையும் பெருக்குவதுமேயாகும்; (இது) மழையின் உதாரணத்துக்கு ஒப்பாகும்; (அதாவது:) அது முளைப்பிக்கும் பயிர் விவசாயிகளை ஆனந்தப் படுத்துகிறது; ஆனால், சீக்கிரமே அது உலர்ந்து மஞ்சள் நிறம் ஆவதை நீர் காண்கின்றீர்; பின்னர் அது கூளமாகி விடுகிறது; (உலக வாழ்வும் இத்தகையதே; எனவே உலக வாழ்வில் மயங்கியோருக்கு) மறுமையில் கடுமையான வேதனையுண்டு; (முஃமின்களுக்கு) அல்லாஹ்வின் மன்னிப்பும், அவன் பொருத்தமும் உண்டு - ஆகவே, இவ்வுலக வாழ்க்கை ஏமாற்றும் சொற்ப சுகமே தவிர (வேறு) இல்லை.
(அல்குர்ஆன் : 57:20)

சுப்ஹானல்லாஹ் என்பதன் சிறப்பு. ( 20 )

 சுப்ஹானல்லாஹ் என்பதன் சிறப்பு. ( 20 )


سبحان الله وبحمده استغفرلله واتب إليه

சுப்ஹானல் லாஹி வபி ஹம்திஹி,அஸ்தஃக்ஃபிருல்லாஹ வ அதூபு இலைஹி.

பொருள் : அல்லாஹ் மிகத் தூயவன் எனப் புகழ்ந்தவனாய் அவனைத் துதிக்கிறேன். அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரி மீளுகிறேன்.

சட்டம் : அல்லாஹ்வின் உதவியும், வெற்றியும் வரும் போது இந்த துஆவை அதிகமாக ஓத வேண்டும்.

ஆதாரம் : ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தமது தொழுகையில்) மிகுதியாக சுப்ஹானல் லாஹி வபி ஹம்திஹி,அஸ்தஃக்ஃபிருல்லாஹ வ அதூபு இலைஹி (அல்லாஹ் மிகத் தூயவன் எனப் புகழ்ந்தவனாய் அவனைத் துதிக்கிறேன். அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரி மீளுகிறேன்) என்று கூறிவந்தார்கள். நான், அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் சுப்ஹானல்லாஹி வபி ஹம்திஹி, அஸ்தஃக்ஃபிருல்லாஹ வ அதூபு இலைஹி என்று மிகுதியாகக் கூறிவருவதை நான் காண்கிறேன் (இதற்கு என்ன காரணம்?) என்று கேட்டேன். அதற்கு அவர்கள் பின்வருமாறு பதிலளித்தார்கள்:
என் சமுதாயத்தார் தொடர்பாக நான் ஓர் அடையாளத்தைக் காண்பேன் என்றும், அதைக் காணும்போது இந்தத் தஸ்பீஹை நான் அதிகமாக ஓத வேண்டும் என்றும் என் இறைவன் எனக்கு அறிவித்திருந்தான். அந்த அடையாளத்தை நான் கண்டுவிட்டேன். (அதுதான் இந்த அத்தியாயமாகும்): அல்லாஹ்வின் உதவியும் வெற்றியும் வந்து, மேலும்,அல்லாஹ்வின் மார்க்கத்தில் மக்கள் கூட்டங்கூட்டமாக நுழைவதை நீங்கள் காணும்போது உங்கள் இறைவனைப் புகழ்ந்து துதிப்பீராக; மேலும், அவனிடமே பாவமன்னிப்புக் கோருவீராக! நிச்சயமாக அவன் பாவமன்னிப்புக் கோரலை ஏற்பவனாக இருக்கிறான் (110:1-3). இதில் வெற்றி என்பது மக்கா வெற்றியைக் குறிக்கும்.
ஸஹீஹ் முஸ்லிம் : 837.

அந்நாள் கடுமையானது. ( 9 )

 அந்நாள் கடுமையானது. ( 9 )

சில முகங்கள் வெண்மையாகும் நாள். சில முகங்கள் கறுப்பாகும் நாள்.

يَوْمَ تَبْيَضُّ وُجُوهٌ وَتَسْوَدُّ وُجُوهٌ ۚ فَأَمَّا الَّذِينَ اسْوَدَّتْ وُجُوهُهُمْ أَكَفَرْتُم بَعْدَ إِيمَانِكُمْ فَذُوقُوا الْعَذَابَ بِمَا كُنتُمْ تَكْفُرُونَ

அந்நாளில் சில முகங்கள் வெண்மையாகத் திகழும். வேறு சில முகங்கள் கருத்திருக்கும். "நம்பிக்கை கொண்ட பின் (ஏகஇறைவனை) மறுத்து விட்டீர்களா? நீங்கள் மறுத்துக் கொண்டிருந்ததால் இவ்வேதனையை அனுபவியுங்கள்!' என்று முகங்கள் கறுத்தவர்களிடம் (கூறப்படும்)
திருக்குர்ஆன் 3:106

وَأَمَّا الَّذِينَ ابْيَضَّتْ وُجُوهُهُمْ فَفِي رَحْمَةِ اللَّهِ هُمْ فِيهَا خَالِدُونَ

வெண்மையான முகமுடையோர் அல்லாஹ்வின் அருளில் இருப்பார்கள். அதில் நிரந்தரமாக இருப்பார்கள்.
திருக்குர்ஆன் 3:107

لِّلَّذِينَ أَحْسَنُوا الْحُسْنَىٰ وَزِيَادَةٌ ۖ وَلَا يَرْهَقُ وُجُوهَهُمْ قَتَرٌ وَلَا ذِلَّةٌ ۚ أُولَٰئِكَ أَصْحَابُ الْجَنَّةِ ۖ هُمْ فِيهَا خَالِدُونَ

நன்மை செய்தோருக்கு நன்மையும், (அதை விட) அதிகமாகவும் உண்டு. அவர்களின் முகங்களில் இருளோ, இழிவோ ஏற்படாது. அவர்களே சொர்க்கவாசிகள். அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள்.
திருக்குர்ஆன் 10:26

وَيَوْمَ الْقِيَامَةِ تَرَى الَّذِينَ كَذَبُوا عَلَى اللَّهِ وُجُوهُهُم مُّسْوَدَّةٌ ۚ أَلَيْسَ فِي جَهَنَّمَ مَثْوًى لِّلْمُتَكَبِّرِينَ

அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டியோரின் முகங்களைக் கருப்பாக கியாமத் நாளில் காண்பீர்! ஆணவம் கொண்டோருக்கு நரகத்தில் தங்குமிடம் இல்லையா?
திருக்குர்ஆன் 39:60

وُجُوهٌ يَوْمَئِذٍ نَّاضِرَةٌ

அந்நாளில் சில முகங்கள் மலர்ந்து இருக்கும்.
திருக்குர்ஆன் 75:22

فَوَقَاهُمُ اللَّهُ شَرَّ ذَٰلِكَ الْيَوْمِ وَلَقَّاهُمْ نَضْرَةً وَسُرُورًا

எனவே அந்த நாளின் தீங்கிலிருந்து அவர்களை அல்லாஹ் காப்பாற்றினான். அவர்களுக்கு முக மலர்ச்சியையும், மகிழ்ச்சியையும் வழங்கினான்.
திருக்குர்ஆன் 76:11

وُجُوهٌ يَوْمَئِذٍ مُّسْفِرَةٌ

அந்நாளில் சில முகங்கள் ஒளி வீசும்.
திருக்குர்ஆன் 80:38

Monday, January 23, 2023

குர்ஆன் வசனம் 326

 ﷽ குர்ஆன் வசனம் 326

23-01-2023 திங்கட்கிழமை
اِنۡ اَحۡسَنۡتُمۡ اَحۡسَنۡتُمۡ لِاَنۡفُسِكُمۡ‌ وَاِنۡ اَسَاۡتُمۡ فَلَهَا

நீங்கள் நன்மை செய்தால் உங்களுக்கே நன்மை செய்கிறீர்கள். நீங்கள் தீமை செய்தால் அதுவும் உங்களுக்கே.

[அல்குர்ஆன் 17:7]

உபதேசம் : 576

 ﷽ உபதேசம் : 576

23-01-2023 திங்கட்கிழமை

நபி (ஸல்) அவர்கள் திங்கள் மற்றும் வியாழன் ஆகிய நாட்களைத் தேர்வு செய்து நோன்பு நோற்பவர்களாக இருந்தார்கள்!

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) திர்மிதீ - 676

சொர்க்கச் சோலைகள். ( 1 )

 சொர்க்கச் சோலைகள். ( 1 )

நினைத்தவை யாவும் கிடைக்கும்.

جَنَّاتُ عَدْنٍ يَدْخُلُونَهَا تَجْرِي مِن تَحْتِهَا الْأَنْهَارُ ۖ لَهُمْ فِيهَا مَا يَشَاءُونَ ۚ كَذَٰلِكَ يَجْزِي اللَّهُ الْمُتَّقِينَ

நிலையான சொர்க்கச் சோலைகளில் அவர்கள் நுழைவார்கள். அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அவர்கள் விரும்பியவை அங்கே அவர்களுக்கு உண்டு. இவ்வாறே (தன்னை) அஞ்சுவோருக்கு அல்லாஹ் கூலி வழங்குவான்.
திருக்குர்ஆன் 16:31

لَّهُمْ فِيهَا مَا يَشَاءُونَ خَالِدِينَ ۚ كَانَ عَلَىٰ رَبِّكَ وَعْدًا مَّسْئُولًا

அவர்கள் நினைத்தவை அவர்களுக்கு அங்கே உண்டு. நிரந்தரமாக இருப்பார்கள். இது உமது இறைவனால் நிறைவேற்றப்படும் வாக்குறுதியாக ஆகி விட்டது.
திருக்குர்ஆன் 25:16

لَهُمْ فِيهَا فَاكِهَةٌ وَلَهُم مَّا يَدَّعُونَ

அங்கே அவர்களுக்குக் கனிகள் உள்ளன. அவர்கள் கேட்டவை அவர்களுக்குக் கிடைக்கும்.
திருக்குர்ஆன் 36:57

نَحْنُ أَوْلِيَاؤُكُمْ فِي الْحَيَاةِ الدُّنْيَا وَفِي الْآخِرَةِ ۖ وَلَكُمْ فِيهَا مَا تَشْتَهِي أَنفُسُكُمْ وَلَكُمْ فِيهَا مَا تَدَّعُونَ
نُزُلًا مِّنْ غَفُورٍ رَّحِيمٍ

இவ்வுலக வாழ்க்கையிலும், மறுமையிலும் நாங்கள் உங்கள் உதவியாளர்கள். நிகரற்ற அன்புடைய மன்னிப்பவனின் விருந்தாக நீங்கள் ஆசைப்படுபவை அங்கே உங்களுக்குக் கிடைக்கும். நீங்கள் கேட்பதும் அங்கே உங்களுக்கு உண்டு என்றும் கூறுவர்.
திருக்குர்ஆன் 41:31,32

تَرَى الظَّالِمِينَ مُشْفِقِينَ مِمَّا كَسَبُوا وَهُوَ وَاقِعٌ بِهِمْ ۗ وَالَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ فِي رَوْضَاتِ الْجَنَّاتِ ۖ لَهُم مَّا يَشَاءُونَ عِندَ رَبِّهِمْ ۚ ذَٰلِكَ هُوَ الْفَضْلُ الْكَبِيرُ

அநீதி இழைத்தோர் தாங்கள் செய்தது பற்றி அஞ்சியோராக இருப்பதை நீர் காண்பீர்! அது அவர்களை வீழ்த்திவிடும். நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்தோர் சொர்க்கச் சோலைகளில் இருப்பார்கள். அவர்கள் நாடியவை அவர்களது இறைவனிடம் அவர்களுக்காக உண்டு. இதுவே பேரருள்.
திருக்குர்ஆன் 42:22

يُطَافُ عَلَيْهِم بِصِحَافٍ مِّن ذَهَبٍ وَأَكْوَابٍ ۖ وَفِيهَا مَا تَشْتَهِيهِ الْأَنفُسُ وَتَلَذُّ الْأَعْيُنُ ۖ وَأَنتُمْ فِيهَا خَالِدُونَ

தங்கத் தட்டுகளும், கிண்ணங்களும் அவர்களிடம் கொண்டு வரப்படும். அதில் உள்ளங்கள் விரும்புபவையும், கண்கள் இன்புறுபவையும் இருக்கும். அதில் நீங்கள் நிரந்தரமாக இருப்பீர்கள்.
திருக்குர்ஆன் 43:71

لَهُم مَّا يَشَاءُونَ فِيهَا وَلَدَيْنَا مَزِيدٌ

அதில் அவர்கள் விரும்புவது அவர்களுக்கு உண்டு. அதிகமானதும் நம்மிடம் உண்டு.
திருக்குர்ஆன் 50:35

Chapter - 15 Surah Al-Hijr

Chapter - 15

Surah Al-Hijr


بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

In the name of Allah the most beneficent, most merciful
----------------------------------------------------------

أعوذ بالله من الشيطان الرجيم
I seek refuge in Allah from the outcast Shaitan


وَلَقَدْ جَعَلْنَا فِي السَّمَاءِ بُرُوجًا وَزَيَّنَّاهَا لِلنَّاظِرِينَ

And indeed, We have put the big stars in the heaven and We beautified it for the beholders. (Al-Hijr 15:16)

Walaqad jaAAalna fee alssama-i buroojan wazayyannaha lilnnathireena

சுப்ஹானல்லாஹ் என்பதன் சிறப்பு. ( 19 )

 சுப்ஹானல்லாஹ் என்பதன் சிறப்பு. ( 19 )


سبحان الله الحمدلله الله أكبر 

لا إِلَهَ إِلاَّ اللَّهُ، وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ، وَهْوَ عَلَى كُلِّ شَىْءٍ قَدِيرٌ.


சுப்ஹானல்லாஹ், 33 முறை அல்ஹம்துலில்லாஹ், 33 முறை

அல்லாஹு அக்பர். 33 முறை 

லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீ(க்)க லஹு லஹுல் முல்(க்)கு வலஹுல் ஹம்து வஹுவ அலா குல்லி ஷையின் கதீர். (1 முறை)


பொருள் : அல்லாஹ் தூயவன். அல்லாஹ்வுக்கே எல்லாப்புகழும். அல்லாஹ் மிகப் பெரியவன். வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர எவருமில்லை. அவன் தனித்தவன். அவனுக்கு இணையில்லை. ஆட்சியதிகாரம் அவனுக்குரியதே! புகழும் அவனுக்குரியதே! அவன் அனைத்துப் பொருட்கள் மீதும் ஆற்றலுடையவன்.


சிறப்பு : பாவங்கள் யாவும் மன்னிக்கப்படுகின்றன. கடலின் நுரையளவு இருந்தாலும் சரியே!


ஆதாரம் : அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யார் ஒவ்வொரு தொழுகைக்குப் பின்பும் முப்பத்து மூன்று முறை சுப்ஹானல்லாஹ் என்றும், முப்பத்து மூன்று முறை அல்ஹம்து லில்லாஹ் என்றும், முப்பத்து மூன்று முறை அல்லாஹு அக்பர் என்றும் ஆக மொத்தம் தொன்னூற்று ஒன்பது முறை கூறி, இறுதியில் நூறாவது முறையாக "லா இலாஹ இல்லல்லாஹு, வஹ்தஹு, லா ஷரீக்க லஹு, லஹுல் முல்க்கு, வ லஹுல் ஹம்து. வஹுவ அலா குல்லி ஷையின் கதீர்" (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை. அவன் தனித்தவன். அவனுக்கு இணையானவன் எவனுமில்லை. ஆட்சியதிகாரம் அவனுக்கே உரியது. எல்லாப் புகழும் அவனுக்கே உரியது. அவன் அனைத்தின் மீதும் ஆற்றலுள்ளவன்) என்று நிறைவு செய்கிறாரோ அவருடைய (சிறு) பாவங்கள் யாவும் மன்னிக்கப்படுகின்றன. அவை கடலின் நுரையளவு இருந்தாலும் சரியே!

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

ஸஹீஹ் முஸ்லிம் : 1048

அந்நாள் கடுமையானது. ( 8 )

 அந்நாள் கடுமையானது. ( 8 )

ஷைத்தான்களும் எழுப்பப்படும் நாள்.

فَوَرَبِّكَ لَنَحْشُرَنَّهُمْ وَالشَّيَاطِينَ ثُمَّ لَنُحْضِرَنَّهُمْ حَوْلَ جَهَنَّمَ جِثِيًّا

உமது இறைவன் மீது சத்தியமாக! அவர்களையும், ஷைத்தான்களையும் ஒன்று திரட்டுவோம். பின்னர் அவர்களை நரகைச் சுற்றி மண்டியிட்டோராக நிறுத்துவோம்.
திருக்குர்ஆன் 19:68

தீயோர் நீலநிறக் கண்களுடையவர்களாக எழுப்பப்படும் நாள்.

يَوْمَ يُنفَخُ فِي الصُّورِ ۚ وَنَحْشُرُ الْمُجْرِمِينَ يَوْمَئِذٍ زُرْقًا

ஸூர் ஊதப்படும் நாளில் குற்றவாளிகளை நீல நிறக் கண்களுடையோராக எழுப்புவோம்.
திருக்குர்ஆன் 20:102

கர்ப்பிணிப் பெண்ணைப் பிரசவிக்கச் செய்யும் நாள்.

يَوْمَ تَرَوْنَهَا تَذْهَلُ كُلُّ مُرْضِعَةٍ عَمَّا أَرْضَعَتْ وَتَضَعُ كُلُّ ذَاتِ حَمْلٍ حَمْلَهَا وَتَرَى النَّاسَ سُكَارَىٰ وَمَا هُم بِسُكَارَىٰ وَلَٰكِنَّ عَذَابَ اللَّهِ شَدِيدٌ

நீங்கள் அதைக் காணும் நாளில் பாலூட்டும் ஒவ்வொருத்தியும், தான் பாலூட்டியதை (குழந்தையை) மறந்து விடுவாள். ஒவ்வொரு கர்ப்பிணியும், தன் கருவில் சுமந்ததை ஈன்று விடுவாள். போதை வயப்பட்டோராக மனிதர்களைக் காண்பீர்! அவர்கள் போதை வயப்பட்டோர் அல்லர். மாறாக அல்லாஹ்வின் வேதனை கடுமையானது.
திருக்குர்ஆன் 22:2

மனிதன் தனக்கு எதிராகச் சாட்சி சொல்லும் நாள்.

يَوْمَ تَشْهَدُ عَلَيْهِمْ أَلْسِنَتُهُمْ وَأَيْدِيهِمْ وَأَرْجُلُهُم بِمَا كَانُوا يَعْمَلُونَ

அந்நாளில் அவர்களின் நாவுகளும், கைகளும், கால்களும் அவர்களுக்கு எதிராக அவர்கள் செய்தவை குறித்து சாட்சியமளிக்கும்.
திருக்குர்ஆன் 24:24

மரண சாசனம் செய்யக் கூட அவகாசம் இருக்காது.

فَلَا يَسْتَطِيعُونَ تَوْصِيَةً وَلَا إِلَىٰ أَهْلِهِمْ يَرْجِعُونَ

அப்போது மரண சாசனம் கூற அவர்களுக்கு இயலாது. தமது குடும்பத்தாரிடம் திரும்பிச் செல்லவும் மாட்டார்கள்.
திருக்குர்ஆன் 36:50

Sunday, January 22, 2023

உபதேசம் : 575

 ﷽ உபதேசம் : 575

22-01-2023 ஞாயிற்றுக்கிழமை

நாங்கள் நபி (ஸல்) அவர்களிடம் எங்களுடைய பசியைப் பற்றி முறையிட்டபொழுது எங்கள் வயிறுகளில் ஒவ்வொரு கல்லைக் கட்டியிருந்ததையும் காண்பித்தோம். அப்பொழுது நபி (ஸல்) அவர்கள் (தங்கள் வயிற்றில்) இரண்டு கற்களைக் கட்டியிருந்ததைக் காட்டினார்கள்!.

அறிவிப்பவர் : அபூதல்ஹா (ரலி) திர்மிதீ - 2293

குர்ஆன் வசனம் 325

 ﷽ குர்ஆன் வசனம் 325

22-01-2023 ஞாயிற்றுக்கிழமை

اِنَّ اللّٰهَ مَعَ الَّذِيۡنَ اتَّقَوْا وَّالَّذِيۡنَ هُمۡ مُّحۡسِنُوۡنَ
(தன்னை) அஞ்சி நல்லறங்கள் செய்வோருடனே அல்லாஹ் இருக்கிறான்.

[அல்குர்ஆன் 16:128]

பரிந்துரை. ( 4 )

 பரிந்துரை. ( 4 )

மறுமையில் மதிப்பீடு செய்தல்.

وَالْوَزْنُ يَوْمَئِذٍ الْحَقُّ ۚ فَمَن ثَقُلَتْ مَوَازِينُهُ فَأُولَٰئِكَ هُمُ الْمُفْلِحُونَ

அந்நாளில் மதிப்பீடு செய்தல் உண்மை. (நன்மையின்) எடைகள் கனமாக இருப்போரே வெற்றி பெற்றோர்.
திருக்குர்ஆன் 7:8

أُولَٰئِكَ الَّذِينَ كَفَرُوا بِآيَاتِ رَبِّهِمْ وَلِقَائِهِ فَحَبِطَتْ أَعْمَالُهُمْ فَلَا نُقِيمُ لَهُمْ يَوْمَ الْقِيَامَةِ وَزْنًا

அவர்களே தமது இறைவனின் சான்றுகளையும், அவனது சந்திப்பையும் மறுத்தவர்கள். அவர்களின் நல்லறங்கள் அழிந்து விட்டன. எனவே கியாமத் நாளில் அவர்(களின் செயல்)களுக்கு எந்த எடையையும் ஏற்படுத்த மாட்டோம்.
திருக்குர்ஆன் 18:105

وَنَضَعُ الْمَوَازِينَ الْقِسْطَ لِيَوْمِ الْقِيَامَةِ فَلَا تُظْلَمُ نَفْسٌ شَيْئًا ۖ وَإِن كَانَ مِثْقَالَ حَبَّةٍ مِّنْ خَرْدَلٍ أَتَيْنَا بِهَا ۗ وَكَفَىٰ بِنَا حَاسِبِينَ

கியாமத் நாளுக்காக நீதியான தராசுகளை நிறுவுவோம். எவருக்கும் சிறிதளவும் அநீதி இழைக்கப்படாது. ஒரு கடுகு விதை அளவே இருந்த போதும் அதையும் கொண்டு வருவோம். கணக்கெடுக்க நாமே போதும்.
திருக்குர்ஆன் 21:47

فَمَن ثَقُلَتْ مَوَازِينُهُ فَأُولَٰئِكَ هُمُ الْمُفْلِحُونَ

எவரது எடைகள் கனமாகி விட்டனவோ அவர்களே வெற்றி பெற்றோர்.
திருக்குர்ஆன் 23:102

وَمَنْ خَفَّتْ مَوَازِينُهُ فَأُولَٰئِكَ الَّذِينَ خَسِرُوا أَنفُسَهُمْ فِي جَهَنَّمَ خَالِدُونَ

எவரது எடைகள் இலேசாகி விட்டனவோ அவர்கள் தமக்குத் தாமே நட்டத்தை ஏற்படுத்தினர். நரகத்தில் நிரந்தரமாக இருப்பார்கள்.
திருக்குர்ஆன் 23:103

فَأَمَّا مَن ثَقُلَتْ مَوَازِينُهُ فَهُوَ فِي عِيشَةٍ رَّاضِيَةٍ

யாருடைய எடைகள் கனமாக இருக்கின்றனவோ அவர் திருப்தியான வாழ்க்கையில் இருப்பார்.
திருக்குர்ஆன் 101:6,7

وَأَمَّا مَنْ خَفَّتْ مَوَازِينُهُ فَأُمُّهُ هَاوِيَةٌ

யாருடைய எடைகள் இலேசாக உள்ளனவோ அவர் தங்குமிடம் ஹாவியாவாகும்.
திருக்குர்ஆன் 101:8,9

Chapter - 15 Surah Al-Hijr

Chapter - 15

Surah Al-Hijr


*بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ*

*In the name of Allah the most beneficent, most merciful*
----------------------------------------------------------

أعوذ بالله من الشيطان الرجيم
*I seek refuge in Allah from the outcast Shaitan*


وَلَوْ فَتَحْنَا عَلَيْهِمْ بَابًا مِنَ السَّمَاءِ فَظَلُّوا فِيهِ يَعْرُجُونَ

*_And even if We opened to them a gate from the heaven and they were to continue ascending thereto,_* (Al-Hijr 15:14)

لَقَالُوا إِنَّمَا سُكِّرَتْ أَبْصَارُنَا بَلْ نَحْنُ قَوْمٌ مَسْحُورُونَ

*_They would surely say: \Our eyes have been (as if) dazzled. Nay, we are a people bewitched.\"_* (Al-Hijr 15:15)"

உபதேசம் : 574

 ﷽ உபதேசம் : 574

21-01-2023 சனிக்கிழமை

நபி (ஸல்) அவர்கள் இடைவெளி இல்லாமல் தொடா்ந்து பேசக்கூடியவர்களாக இருந்ததில்லை! மாறாக அவர்களுடன் அமர்ந்திருப்பவர் மனனம் செய்யும் வகையில் இடைவெளி விட்டு தெளிவாக பேசுவார்கள்!

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) திர்மிதீ - 3572

குர்ஆன் வசனம் 324

 ﷽ குர்ஆன் வசனம் 324

21-01-2023 சனிக்கிழமை

وَاِنۡ عَاقَبۡتُمۡ فَعَاقِبُوۡا بِمِثۡلِ مَا عُوۡقِبۡتُمۡ بِهٖ‌ۚ وَلَٮِٕنۡ صَبَرۡتُمۡ لَهُوَ خَيۡرٌ لِّلصّٰبِرِيۡنَ

நீங்கள் தண்டிப்பதாக இருந்தால் நீங்கள் துன்புறுத்தப்பட்ட அளவுக்குத் தண்டியுங்கள்! நீங்கள் பொறுமையைக் கடைப்பிடித்தால் பொறுமையாளர்களுக்கு அதுவே சிறந்தது.

[அல்குர்ஆன் 16:126]

சுப்ஹானல்லாஹ் என்பதன் சிறப்பு. ( 18 )

 சுப்ஹானல்லாஹ் என்பதன் சிறப்பு. ( 18 )


سبحان الله

சுப்ஹானல்லாஹ்.

பொருள் : அல்லாஹ் தூயவன்.

சட்டம் : தவறை யார் சுட்டிக் காட்டினாலும் திருத்திக் கொள்ள வேண்டும்.

ஆதாரம் : ஒரு பாதிரியார் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்தார். ‘முஹம்மதே! நீங்கள் (கடவுளுக்கு) இணை கற்பிக்காமல் இருந்தால் நீங்கள் தான் சிறந்த சமுதாயம்’ என்று அவர் கூறினார். இதைக் கேட்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், ‘ என்பது இதன் பொருள். ஆச்சரியத்தை வெளிப்படுத்தும் போது இவ் வாறு கூறுவது வழக்கம்) என்று ஆச்சரியத்துடன் கூறி விட்டு ‘அது என்ன?’ என்று வினவினார்கள். அதற்கு அந்தப் பாதிரியார் ‘நீங்கள் சத்தியம் செய்யும் போது கஃபாவின் மீது ஆணையாக எனக் கூறுகிறீர் களே அது தான்’ என்று அவர் விளக்கினார். சற்று நேரம் மவுனமாக இருந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ‘இனி மேல் சத்தியம் செய்வதாக இருந்தால் கஃபாவின் எஜமான் மீது ஆணையாக’ எனக் கூறுங்கள் என்று (முஸ்லிம்களுக்குக்) கூறினார்கள். பின்னர் அந்தப் பாதிரியார் ‘முஹம்மதே, நீங்கள் அல்லாஹ்வுக்கு நிகரானவர்களைக் கற்பனை செய்யாமல் இருந்தால் நீங்கள் தான் சிறந்த சமுதாயம்’ என்று கூறினார். ‘சுப்ஹானல்லாஹ்’ என்று ஆச்சரியத்தை வெளிப்படுத்திய நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ‘அது என்ன?’ என்ற கேட்டார்கள். ‘இது அல்லாஹ் நினைத்ததும் நீங்கள் நினைத்ததுமாகும் என்று கூறுகிறீர்களே அது தான்’ என்று அவர் விடையளித்தார். சற்று நேரம் மவுனமாக இருந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ‘இவர் விமர்சித்து விட்டார். எனவே, இனி மேல் யாரேனும் ‘அல்லாஹ் நினைத்த படி’ என்று கூறினால் சற்று இடைவெளி விட்டு ‘பின்னர் நீங்கள் நினைத்தீர்கள்’ என்று கூறுங்கள் என்று (முஸ்லிம்களுக்குக்) கூறினார்கள்.
நூல் : அஹ்மத் 25845

அந்நாள் கடுமையானது. ( 7 )

 அந்நாள் கடுமையானது. ( 7 )

எவரும் எவருக்கும் பயனளிக்க முடியாத நாள்.

وَاتَّقُوا يَوْمًا لَّا تَجْزِي نَفْسٌ عَن نَّفْسٍ شَيْئًا وَلَا يُقْبَلُ مِنْهَا شَفَاعَةٌ وَلَا يُؤْخَذُ مِنْهَا عَدْلٌ وَلَا هُمْ يُنصَرُونَ

ஒருவர் இன்னொருவருக்கு எந்தப் பயனும் அளிக்க முடியாத நாளை அஞ்சுங்கள்! (அந்நாளில்) எவரிடமிருந்தும் எந்தப் பரிந்துரையும் ஏற்கப்படாது. எவரிடமிருந்தும் எந்த ஈடும் பெற்றுக் கொள்ளப்படாது. அவர்கள் உதவி செய்யப்படவும் மாட்டார்கள்.
திருக்குர்ஆன் 2:48

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا أَنفِقُوا مِمَّا رَزَقْنَاكُم مِّن قَبْلِ أَن يَأْتِيَ يَوْمٌ لَّا بَيْعٌ فِيهِ وَلَا خُلَّةٌ وَلَا شَفَاعَةٌ ۗ وَالْكَافِرُونَ هُمُ الظَّالِمُونَ

நம்பிக்கை கொண்டோரே! பேரமோ, நட்போ, பரிந்துரையோ இல்லாத நாள் வருவதற்கு முன் நாம் உங்களுக்கு வழங்கியவற்றிலிருந்து (நல்வழியில்) செலவிடுங்கள்! (ஏகஇறைவனை) மறுப்பவர்கள் அநீதி இழைத்தவர்கள்.
திருக்குர்ஆன் 2:254

قُل لِّعِبَادِيَ الَّذِينَ آمَنُوا يُقِيمُوا الصَّلَاةَ وَيُنفِقُوا مِمَّا رَزَقْنَاهُمْ سِرًّا وَعَلَانِيَةً مِّن قَبْلِ أَن يَأْتِيَ يَوْمٌ لَّا بَيْعٌ فِيهِ وَلَا خِلَالٌ

எவ்வித பேரமோ, நட்போ இல்லாத நாள் வருவதற்கு முன் தொழுகையை நிலைநாட்டுமாறும், நாம் அவர்களுக்கு வழங்கியதிலிருந்து இரகசியமாகவும், வெளிப்படையாகவும் (நல்வழியில்) செலவிடுமாறும் நம்பிக்கை கொண்ட எனது அடியார்களுக்குக் கூறுவீராக!
திருக்குர்ஆன் 14:31

يَوْمَ لَا يَنفَعُ مَالٌ وَلَا بَنُونَ إِلَّا مَنْ أَتَى اللَّهَ بِقَلْبٍ سَلِيمٍ

அல்லாஹ்விடம் தூய உள்ளத்துடன் வருவதைத் தவிர, செல்வமோ, மக்களோ அந்நாளில் பயன் தராது.
திருக்குர்ஆன் 26:89

لَن تَنفَعَكُمْ أَرْحَامُكُمْ وَلَا أَوْلَادُكُمْ ۚ يَوْمَ الْقِيَامَةِ يَفْصِلُ بَيْنَكُمْ ۚ وَاللَّهُ بِمَا تَعْمَلُونَ بَصِيرٌ

கியாமத் நாளில் உங்களின் உறவினரும், உங்கள் சந்ததிகளும் உங்களுக்குப் பயன் தரவே மாட்டார்கள். உங்களுக்கிடையே அவன் தீர்ப்பளிப்பான். நீங்கள் செய்வதை அல்லாஹ் பார்ப்பவன்.
திருக்குர்ஆன் 60:3

وَلَا يَسْأَلُ حَمِيمٌ حَمِيمًا

எந்த நண்பனும் நண்பனை விசாரிக்க மாட்டான்.
திருக்குர்ஆன் 70:10

فَإِذَا جَاءَتِ الصَّاخَّةُ يَوْمَ يَفِرُّ الْمَرْءُ مِنْ أَخِيهِ وَأُمِّهِ وَأَبِيهِ وَصَاحِبَتِهِ وَبَنِيهِ

அந்தச் சப்தம் ஏற்படும் அந்த நாளில் மனிதன் தனது சகோதரனையும், தாயையும், தந்தையையும், மனைவியையும், பிள்ளைகளையும் விட்டு ஓடுவான்.
திருக்குர்ஆன் 80:33, 34, 35, 36

பரிந்துரை. ( 3 )

 பரிந்துரை. ( 3 )

அனுமதி பெற்று பரிந்துரை செய்யலாம் எனக் கூறும் வசனங்கள்.

إِنَّ رَبَّكُمُ اللَّهُ الَّذِي خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ فِي سِتَّةِ أَيَّامٍ ثُمَّ اسْتَوَىٰ عَلَى الْعَرْشِ ۖ يُدَبِّرُ الْأَمْرَ ۖ مَا مِن شَفِيعٍ إِلَّا مِن بَعْدِ إِذْنِهِ ۚ ذَٰلِكُمُ اللَّهُ رَبُّكُمْ فَاعْبُدُوهُ ۚ أَفَلَا تَذَكَّرُونَ

உங்கள் இறைவன் அல்லாஹ்வே. அவனே வானங்களையும் பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான். பின்னர் அர்ஷின் மீது அமர்ந்தான். காரியங்களை நிர்வகிக்கிறான். அவனது அனுமதியின்றி எந்தப் பரிந்துரைப்பவனும் இல்லை. அவனே அல்லாஹ். உங்கள் இறைவன். அவனை வணங்குங்கள்! படிப்பினை பெற மாட்டீர்களா?
திருக்குர்ஆன் 10:3

لَّا يَمْلِكُونَ الشَّفَاعَةَ إِلَّا مَنِ اتَّخَذَ عِندَ الرَّحْمَٰنِ عَهْدًا

அளவற்ற அருளாளனிடம் உறுதிமொழி பெற்றவர் தவிர பரிந்துரைக்க எவரும் அதிகாரம் பெற மாட்டார்கள்.
திருக்குர்ஆன் 19:87

يَوْمَئِذٍ لَّا تَنفَعُ الشَّفَاعَةُ إِلَّا مَنْ أَذِنَ لَهُ الرَّحْمَٰنُ وَرَضِيَ لَهُ قَوْلًا

அந்நாளில் அளவற்ற அருளாளன் யாருக்கு அனுமதியளித்து அவரது சொல்லையும் பொருந்திக் கொண்டானோ அவரைத் தவிர எவரது பரிந்துரையும் பயனளிக்காது.
திருக்குர்ஆன் 20:109

يَعْلَمُ مَا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ وَلَا يَشْفَعُونَ إِلَّا لِمَنِ ارْتَضَىٰ وَهُم مِّنْ خَشْيَتِهِ مُشْفِقُونَ

அவர்களுக்கு முன்னும், பின்னும் உள்ளதை அவன் அறிவான். அவன் பொருந்திக் கொண்டோருக்காகவே தவிர (மற்றவருக்கு) அவர்கள் பரிந்துரை செய்ய மாட்டார்கள். அவர்கள் அவனது அச்சத்தால் நடுங்குவார்கள்.
திருக்குர்ஆன் 21:28

وَكَم مِّن مَّلَكٍ فِي السَّمَاوَاتِ لَا تُغْنِي شَفَاعَتُهُمْ شَيْئًا إِلَّا مِن بَعْدِ أَن يَأْذَنَ اللَّهُ لِمَن يَشَاءُ وَيَرْضَىٰ

வானங்களில் எத்தனையோ வானவர்கள் உள்ளனர். தான் நாடியோருக்கு அல்லாஹ் அனுமதியளித்து பொருந்திக் கொண்டவருக்காக தவிர (மற்றவர்களுக்காக) அவர்களின் பரிந்துரை சிறிதும் பயன் தராது.
திருக்குர்ஆன் 53:26

🍀வெள்ளிக்கிழமை நினைவூட்டல்

 🍀வெள்ளிக்கிழமை நினைவூட்டல்


இன்று வெள்ளிக்கிழமை எனவே நபிகளார் மீது அதிகம் ஸலவாத் சொல்லுங்கள்.

اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ، كَمَا صَلَّيْتَ عَلَى إِبْرَاهِيمَ وَعَلَى آلِ إِبْرَاهِيمَ، إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ، اللَّهُمَّ بَارِكْ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ، كَمَا بَارَكْتَ عَلَى إِبْرَاهِيمَ وَعَلَى آلِ إِبْرَاهِيمَ، إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ ".

அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் வ அலா ஆலி முஹம்மதின் கமா ஸல்லய்த அலா இப்றாஹீம வ அலா ஆலி இப்றாஹீம இன்னக ஹமீதும் மஜீத்.

அல்லாஹும்ம பாரிக் அலா முஹம்மதின் வ அலா ஆலி முஹம்மதின் கமா பாரக்த அலா இப்றாஹீம வ அலா ஆலி இப்றாஹீம இன்னக ஹமீதும் மஜீத்.

(பொருள்: இறைவா! இப்ராஹீம் (அலை) அவர்களுடைய குடும்பத்தாருக்கு நீ கருணை புரிந்ததைப் போன்று முஹம்மத் (ஸல்) அவர்களுக்கும், அவர்களுடைய குடும்பத்தாருக்கும் நீ கருணை புரிவாயாக. நிச்சயமாக நீ புகழுக்குரியவனும் பெருமைக்குரியவனுமாவாய். இறைவா! இப்ராஹீம் (அலை) அவர்களுடைய குடும்பத்தாருக்கு நீ சுபிட்சம் வழங்கியதைப் போன்று முஹம்மத் (ஸல்) அவர்களுக்கும், அவர்களுடைய குடும்பத்தாருக்கும் நீ சுபிட்சம் வழங்குவாயாக. நிச்சயமாக நீ புகழுக்குரியவனும் பெருமைக்குரியவனுமாவாய்).

அறிவிப்பவர் : கஅப் பின் உஜ்ரா (ரலி), நூல் : புகாரி 4797

💐பலன்கள்

யார் என் மீது ஒரு முறை ஸலவாத் சொல்கிறாரோ அவர் மீது அல்லாஹ் பத்து முறை அருள் புரிகிறான். அவருடைய பத்து தவறுகளை அழிக்கின்றான். பத்து உயர்வுகள் அவருக்கு அளிக்கப்படுகின்றன என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அனஸ் (ரலி)

நூல் : நஸாயீ

Chapter - 15 Surah Al-Hijr

 ‏Chapter - 15

Surah Al-Hijr


بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

In the name of Allah the most beneficent, most merciful
----------------------------------------------------------

أعوذ بالله من الشيطان الرجيم
I seek refuge in Allah from the outcast Shaitan


لَا يُؤْمِنُونَ بِهِ ۖ وَقَدْ خَلَتْ سُنَّةُ الْأَوَّلِينَ

They would not believe in it (the Qur'an), and already the example of (Allah's punishment of) the ancients (who disbelieved) has gone forth. (Al-Hijr 15:13)

La yu/minoona bihi waqad khalat sunnatu al-awwaleena

குர்ஆன் வசனம் 323

 ﷽ குர்ஆன் வசனம் 323

20-01-2023 வெள்ளிக்கிழமை

اُدۡعُ اِلٰى سَبِيۡلِ رَبِّكَ بِالۡحِكۡمَةِ وَالۡمَوۡعِظَةِ الۡحَسَنَةِ‌ وَجَادِلۡهُمۡ بِالَّتِىۡ هِىَ اَحۡسَنُ‌

விவேகத்துடனும், அழகிய அறிவுரையுடனும் உமது இறைவனின் பாதையை நோக்கி அழைப்பீராக! அவர்களிடம் அழகிய முறையில் விவாதம் செய்வீராக!

[அல்குர்ஆன் 16:125]

உபதேசம் : 573

 ﷽ உபதேசம் : 573

20-01-2023 வெள்ளிக்கிழமை

நபி (ஸல்) அவர்கள் தம் ஆடைகளை தாமே சுத்தம் செய்வார்கள். பால் கறப்பார்கள். தன் வேலைகளைத் தானே செய்து கொள்வார்கள்.

அறிவிப்பவர் : அம்ரா (ரலி) அஹ்மத் - 24996

அந்நாள் கடுமையானது. ( 6 )

 அந்நாள் கடுமையானது. ( 6 )

இறைவனின் அனுமதியின்றி பேச முடியாத நாள்.

يَوْمَ يَأْتِ لَا تَكَلَّمُ نَفْسٌ إِلَّا بِإِذْنِهِ ۚ فَمِنْهُمْ شَقِيٌّ وَسَعِيدٌ

அது ஏற்படும் நாளில் எவரும் அவனது அனுமதியின்றி பேச முடியாது. அவர்களில் கெட்டவர்களும் உள்ளனர். நல்லவர்களும் உள்ளனர்.
திருக்குர்ஆன் 11:105

يَوْمَ يَقُومُ الرُّوحُ وَالْمَلَائِكَةُ صَفًّا ۖ لَّا يَتَكَلَّمُونَ إِلَّا مَنْ أَذِنَ لَهُ الرَّحْمَٰنُ وَقَالَ صَوَابًا

ரூஹும், வானவர்களும் அணி வகுத்து நிற்கும் நாளில் அளவற்ற அருளாளன் அனுமதியளித்து, நேர்மையைக் கூறுபவரைத் தவிர யாரும் பேச மாட்டார்கள்.
திருக்குர்ஆன் 78:38

வானமும், பூமியும் மாற்றப்படும் நாள்.

يَوْمَ تُبَدَّلُ الْأَرْضُ غَيْرَ الْأَرْضِ وَالسَّمَاوَاتُ ۖ وَبَرَزُوا لِلَّهِ الْوَاحِدِ الْقَهَّارِ

அந்நாளில் பூமி, வேறு பூமியாகவும், வானங்களும் (வேறு வானங்களாகவும்) மாற்றப்படும். ஏகனாகிய அடக்கியாளும் அல்லாஹ்விடம் திரளுவார்கள்.
திருக்குர்ஆன் 14:48

ஒருவரோடொருவர் முட்டி மோதிக் கொள்ளும் நாள்.

وَتَرَكْنَا بَعْضَهُمْ يَوْمَئِذٍ يَمُوجُ فِي بَعْضٍ ۖ وَنُفِخَ فِي الصُّورِ فَجَمَعْنَاهُمْ جَمْعًا

அவர்களை ஒருவரோடு ஒருவராக மோத விடுவோம். ஸூர் ஊதப்படும். அவர்கள் அனைவரையும் ஒன்று திரட்டுவோம்.
திருக்குர்ஆன் 18:99

கைசேதப்படும் நாள்.

وَأَنذِرْهُمْ يَوْمَ الْحَسْرَةِ إِذْ قُضِيَ الْأَمْرُ وَهُمْ فِي غَفْلَةٍ وَهُمْ لَا يُؤْمِنُونَ

அவர்கள் எண்ணிப் பார்க்காமலும், நம்பிக்கை கொள்ளாமலும் இருக்கும் போது காரியம் முடிக்கப்பட்டு, நட்டம் ஏற்படுத்தும் நாளைப் பற்றி எச்சரிப்பீராக!
திருக்குர்ஆன் 19:39

Thursday, January 19, 2023

உபதேசம் : 572

 ﷽ உபதேசம் : 572

19-01-2023 வியாழக்கிழமை

நபி (ஸல்) அவர்களை விட அதிகம் புன்னகை புரியக்கூடிய எவரையும் நான் பார்த்ததில்லை!

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அல்ஹாரிஸ் (ரலி) திர்மிதீ - 3574

குர்ஆன் வசனம் 322

 ﷽ குர்ஆன் வசனம் 322

19-01-2023 வியாழக்கிழமை

وَلَا تَقُوۡلُوۡا لِمَا تَصِفُ اَلۡسِنَـتُكُمُ الۡكَذِبَ هٰذَا حَلٰلٌ وَّهٰذَا حَرَامٌ لِّـتَفۡتَرُوۡا عَلَى اللّٰهِ الۡكَذِبَ‌ ؕ اِنَّ الَّذِيۡنَ يَفۡتَرُوۡنَ عَلَى اللّٰهِ الۡكَذِبَ لَا يُفۡلِحُوۡنَؕ‏

"இது அனுமதிக்கப்பட்டது; இது தடுக்கப்பட்டது" என்று உங்கள் நாவுகள் வர்ணிக்கும் பொய்யை அல்லாஹ்வின் மீது இட்டுக்கட்டிக் கூறாதீர்கள்! அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டியோர் வெற்றி பெற மாட்டார்கள்.

[அல்குர்ஆன் 16:116]

பரிந்துரை. ( 2 )

 பரிந்துரை. ( 2 )

மறுமையில் வக்கீல் இல்லை.

يَوْمَ يَأْتِ لَا تَكَلَّمُ نَفْسٌ إِلَّا بِإِذْنِهِ ۚ فَمِنْهُمْ شَقِيٌّ وَسَعِيدٌ

அது ஏற்படும் நாளில் எவரும் அவனது அனுமதியின்றி பேச முடியாது. அவர்களில் கெட்டவர்களும் உள்ளனர். நல்லவர்களும் உள்ளனர்.
திருக்குர்ஆன் 11:105

يَوْمَ تَأْتِي كُلُّ نَفْسٍ تُجَادِلُ عَن نَّفْسِهَا وَتُوَفَّىٰ كُلُّ نَفْسٍ مَّا عَمِلَتْ وَهُمْ لَا يُظْلَمُونَ

ஒவ்வொருவரும் தன்னைப் பற்றி வாதிட வரும் நாளில் ஒவ்வொருவருக்கும் அவர் செய்தது முழுமையாக வழங்கப்படும். அவர்கள் அநீதி இழைக்கப்பட மாட்டார்கள்.
திருக்குர்ஆன் 16:111

قَالَ اخْسَئُوا فِيهَا وَلَا تُكَلِّمُونِ

"இங்கேயே சிறுமையடையுங்கள்! என்னிடம் பேசாதீர்கள்!'' என்று அவன் கூறுவான்.
திருக்குர்ஆன் 23:108

الْيَوْمَ نَخْتِمُ عَلَىٰ أَفْوَاهِهِمْ وَتُكَلِّمُنَا أَيْدِيهِمْ وَتَشْهَدُ أَرْجُلُهُم بِمَا كَانُوا يَكْسِبُونَ

இன்று அவர்களின் வாய்களுக்கு முத்திரையிடுவோம். அவர்கள் செய்து கொண்டிருந்தது பற்றி அவர்களின் கைகள் நம்மிடம் பேசும்; கால்கள் சாட்சி கூறும்.
திருக்குர்ஆன் 36:65

يَوْمَ يَقُومُ الرُّوحُ وَالْمَلَائِكَةُ صَفًّا ۖ لَّا يَتَكَلَّمُونَ إِلَّا مَنْ أَذِنَ لَهُ الرَّحْمَٰنُ وَقَالَ صَوَابًا

ரூஹும், வானவர்களும் அணி வகுத்து நிற்கும் நாளில் அளவற்ற அருளாளன் அனுமதியளித்து, நேர்மையைக் கூறுபவரைத் தவிர யாரும் பேச மாட்டார்கள்.
திருக்குர்ஆன் 78:38

Chapter - 15 Surah Al-Hijr

Chapter - 15

Surah Al-Hijr


بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

In the name of Allah the most beneficent, most merciful
----------------------------------------------------------

أعوذ بالله من الشيطان الرجيم
I seek refuge in Allah from the outcast Shaitan


وَمَا يَأْتِيهِمْ مِنْ رَسُولٍ إِلَّا كَانُوا بِهِ يَسْتَهْزِئُونَ

And never came a Messenger to them but they did mock him. (Al-Hijr 15:11)

Wama ya/teehim min rasoolin illa kanoo bihi yastahzi-oona

அந்நாள் கடுமையானது. ( 5 )

 அந்நாள் கடுமையானது. ( 5 )

தனது செயல்களின் விளைவைக் காணும் நாள்.

يَوْمَ تَجِدُ كُلُّ نَفْسٍ مَّا عَمِلَتْ مِنْ خَيْرٍ مُّحْضَرًا وَمَا عَمِلَتْ مِن سُوءٍ تَوَدُّ لَوْ أَنَّ بَيْنَهَا وَبَيْنَهُ أَمَدًا بَعِيدًا ۗ وَيُحَذِّرُكُمُ اللَّهُ نَفْسَهُ ۗ وَاللَّهُ رَءُوفٌ بِالْعِبَادِ

ஒவ்வொருவரும், தாம் செய்த நன்மையையும், தீமையையும் கண் முன்னே பெற்றுக் கொள்ளும் நாளில் "தமக்கும் தமது (தீய) செயல்களுக்குமிடையே மிகப் பெரிய இடைவெளி இருக்க வேண்டும்'' என ஆசைப்படுவர். அல்லாஹ் தன்னைப் பற்றி உங்களுக்கு எச்சரிக்கிறான். அடியார்கள் மீது அல்லாஹ் இரக்கமுள்ளவன்.
திருக்குர்ஆன் 3:30

وَمَا يَفْعَلُوا مِنْ خَيْرٍ فَلَن يُكْفَرُوهُ ۗ وَاللَّهُ عَلِيمٌ بِالْمُتَّقِينَ

அவர்கள் எந்த நன்மையைச் செய்தாலும் அது மறுக்கப்படாது. (தன்னை) அஞ்சுவோரை அல்லாஹ் அறிந்தவன்.
திருக்குர்ஆன் 3:115

وَمَا كَانَ لِنَبِيٍّ أَن يَغُلَّ ۚ وَمَن يَغْلُلْ يَأْتِ بِمَا غَلَّ يَوْمَ الْقِيَامَةِ ۚ ثُمَّ تُوَفَّىٰ كُلُّ نَفْسٍ مَّا كَسَبَتْ وَهُمْ لَا يُظْلَمُونَ

மோசடி செய்வது எந்த நபிக்கும் தகாது. மோசடி செய்தவர் மோசடி செய்த பொருளை கியாமத் நாளில் கொண்டு வருவார். பின்னர் ஒவ்வொருவருக்கும் அவர் செய்தது முழுமையாக வழங்கப்படும். அவர்கள் அநீதி இழைக்கப்பட மாட்டார்கள்.
திருக்குர்ஆன் 3:161

إِنَّ اللَّهَ لَا يَظْلِمُ مِثْقَالَ ذَرَّةٍ ۖ وَإِن تَكُ حَسَنَةً يُضَاعِفْهَا وَيُؤْتِ مِن لَّدُنْهُ أَجْرًا عَظِيمًا

அல்லாஹ் அணுவளவும் அநீதி இழைக்க மாட்டான். அது நன்மையாக இருந்தால் அதைப் பன்மடங்காகப் பெருக்குவான். தனது மகத்தான கூலியை வழங்குவான்.
திருக்குர்ஆன் 4:40

الْيَوْمَ تُجْزَىٰ كُلُّ نَفْسٍ بِمَا كَسَبَتْ ۚ لَا ظُلْمَ الْيَوْمَ ۚ إِنَّ اللَّهَ سَرِيعُ الْحِسَابِ

இன்று ஒவ்வொருவரும் செய்ததற்கு கூலி கொடுக்கப்படும். இன்று எந்த அநியாயமும் இல்லை. அல்லாஹ் விரைந்து கணக்கெடுப்பவன்.
திருக்குர்ஆன் 40:17

Wednesday, January 18, 2023

உபதேசம் : 571

 ﷽ உபதேசம் : 571

18-01-2023 புதன்கிழமை

நபி (ஸல்) அவர்கள் பருகும்பொழுது மூன்று முறை மூச்சு விட்டு பருகி வந்தார்கள்! மேலும் "இதுவே நன்கு தாகத்தை தனிக்கக்கூடியதும் உடல்நலப் பாதுகாப்பிற்கு ஏற்றதும் நன்கு செரிக்கச் செய்யக் கூடியதும் ஆகும்!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரலி) முஸ்லிம் - 4126

குர்ஆன் வசனம் 321

 ﷽ குர்ஆன் வசனம் 321

18-01-2023 புதன்கிழமை

وَّاشۡكُرُوۡا نِعۡمَتَ اللّٰهِ اِنۡ كُنۡـتُمۡ اِيَّاهُ تَعۡبُدُوۡنَ

நீங்கள் அவனையே வணங்குவோராக இருந்தால் அல்லாஹ்வின் அருட்கொடைக்கு நன்றி செலுத்துங்கள்!

[அல்குர்ஆன் 16:114]

பரிந்துரை. ( 1 )

 பரிந்துரை. ( 1 )

பரிந்துரையே இல்லை என்ற கருத்தைத் தரும் வசனங்கள்.

وَاتَّقُوا يَوْمًا لَّا تَجْزِي نَفْسٌ عَن نَّفْسٍ شَيْئًا وَلَا يُقْبَلُ مِنْهَا شَفَاعَةٌ وَلَا يُؤْخَذُ مِنْهَا عَدْلٌ وَلَا هُمْ يُنصَرُونَ

ஒருவர் இன்னொருவருக்கு எந்தப் பயனும் அளிக்க முடியாத நாளை அஞ்சுங்கள்! (அந்நாளில்) எவரிடமிருந்தும் எந்தப் பரிந்துரையும் ஏற்கப்படாது. எவரிடமிருந்தும் எந்த ஈடும் பெற்றுக் கொள்ளப்படாது. அவர்கள் உதவி செய்யப்படவும் மாட்டார்கள்.
திருக்குர்ஆன் 2:48

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا أَنفِقُوا مِمَّا رَزَقْنَاكُم مِّن قَبْلِ أَن يَأْتِيَ يَوْمٌ لَّا بَيْعٌ فِيهِ وَلَا خُلَّةٌ وَلَا شَفَاعَةٌ ۗ وَالْكَافِرُونَ هُمُ الظَّالِمُونَ

நம்பிக்கை கொண்டோரே! பேரமோ, நட்போ, பரிந்துரையோ இல்லாத நாள் வருவதற்கு முன் நாம் உங்களுக்கு வழங்கியவற்றிலிருந்து (நல்வழியில்) செலவிடுங்கள்! (ஏகஇறைவனை) மறுப்பவர்கள் அநீதி இழைத்தவர்கள்.
திருக்குர்ஆன் 2:254

وَأَنذِرْ بِهِ الَّذِينَ يَخَافُونَ أَن يُحْشَرُوا إِلَىٰ رَبِّهِمْ ۙ لَيْسَ لَهُم مِّن دُونِهِ وَلِيٌّ وَلَا شَفِيعٌ لَّعَلَّهُمْ يَتَّقُونَ

"தமது இறைவனிடம், தாம் ஒன்று சேர்க்கப்படுவதை அஞ்சுவோருக்கு அவனன்றி பொறுப்பாளனோ, பரிந்துரைப்பவனோ இல்லை'' என்று இதன் மூலம் எச்சரிப்பீராக! இதனால் அவர்கள் (இறைவனை) அஞ்சுவர்.
திருக்குர்ஆன் 6:51

وَلَمْ يَكُن لَّهُم مِّن شُرَكَائِهِمْ شُفَعَاءُ وَكَانُوا بِشُرَكَائِهِمْ كَافِرِينَ

அவர்களின் தெய்வங்களில் அவர்களுக்காகப் பரிந்து பேசுவோர் இருக்க மாட்டார்கள். அவர்கள் தம் தெய்வங்களையும் மறுப்பார்கள்.
திருக்குர்ஆன் 30:13

اللَّهُ الَّذِي خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَمَا بَيْنَهُمَا فِي سِتَّةِ أَيَّامٍ ثُمَّ اسْتَوَىٰ عَلَى الْعَرْشِ ۖ مَا لَكُم مِّن دُونِهِ مِن وَلِيٍّ وَلَا شَفِيعٍ ۚ أَفَلَا تَتَذَكَّرُونَ

வானங்களையும், பூமியையும், அவற்றுக்கு இடைப்பட்டவற்றையும் அல்லாஹ்வே ஆறு நாட்களில் படைத்தான். பின்னர் அர்ஷின் மீது அமர்ந்தான். உங்களுக்கு அவனன்றி பொறுப்பாளரோ, பரிந்துரைப்பவரோ இல்லை. நீங்கள் சிந்திக்க மாட்டீர்களா?
திருக்குர்ஆன் 32:4

قُل لِّلَّهِ الشَّفَاعَةُ جَمِيعًا ۖ لَّهُ مُلْكُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ ۖ ثُمَّ إِلَيْهِ تُرْجَعُونَ

"பரிந்துரைகள் அனைத்தும் அல்லாஹ்வுக்கே'' என்று கூறுவீராக! வானங்கள் மற்றும் பூமியின் அதிகாரம் அவனுக்கே உரியது! பின்னர் அவனிடமே நீங்கள் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்!
திருக்குர்ஆன் 39:44

وَأَنذِرْهُمْ يَوْمَ الْآزِفَةِ إِذِ الْقُلُوبُ لَدَى الْحَنَاجِرِ كَاظِمِينَ ۚ مَا لِلظَّالِمِينَ مِنْ حَمِيمٍ وَلَا شَفِيعٍ يُطَاعُ

சீக்கிரம் வரவிருக்கும் நாளைப் பற்றி அவர்களுக்கு எச்சரிப்பீராக! அப்போது இதயங்கள் தொண்டைக் குழிகளுக்கு வந்து அதை மென்று விழுங்குவோராக அவர்கள் இருப்பார்கள். அநீதி இழைத்தோருக்கு எந்த நண்பனும், அங்கீகரிக்கப்படும் பரிந்துரையாளனும் இல்லை.
திருக்குர்ஆன் 40:18

Chapter - 15 Surah Al-Hijr

 ‏Chapter - 15

Surah Al-Hijr


بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

In the name of Allah the most beneficent, most merciful
----------------------------------------------------------

أعوذ بالله من الشيطان الرجيم
I seek refuge in Allah from the outcast Shaitan


وَلَقَدْ أَرْسَلْنَا مِنْ قَبْلِكَ فِي شِيَعِ الْأَوَّلِينَ

Indeed, We sent Messengers before you (O Muhammad SAW) amongst the sects (communities) of old. (Al-Hijr 15:10)

Walaqad arsalna min qablika fee shiyaAAi al-awwaleena

சுப்ஹானல்லாஹ் என்பதன் சிறப்பு. ( 17 )

 சுப்ஹானல்லாஹ் என்பதன் சிறப்பு. ( 17 )


سُبْحَانَ اللَّهِ وَبِحَمْدِهِ

சுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி.

பொருள் : அல்லாஹ் தூயவன் என்று போற்றித் துதிக்கிறேன்.

சிறப்பு : அல்லாஹ் தன் வானவர்களுக்காக அல்லது தன் அடியார்களுக்காக இந்த துஆவை தேர்ந்தெடுத்துள்ளான்.

ஆதாரம் : அபூதர் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் "(இறைவனைத் துதிக்கும்) சொற்களில் மிகவும் சிறந்தது எது?" என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், "அல்லாஹ், "தன் வானவர்களுக்காக" அல்லது "தன் அடியார்களுக்காக"சுப்ஹானல்லாஹி வபி ஹம்திஹி"அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்து அவன் தூயவன் எனத் துதிக்கிறேன். என்பதையே தேர்ந்தெடுத்துள்ளான்" என்று பதிலளித்தார்கள்.
ஸஹீஹ் முஸ்லிம் : 5277.

அந்நாள் கடுமையானது. ( 4 )

 அந்நாள் கடுமையானது. ( 4 )

மிருகங்களும் எழுப்பப்படும் நாள்.

وَمَا مِن دَابَّةٍ فِي الْأَرْضِ وَلَا طَائِرٍ يَطِيرُ بِجَنَاحَيْهِ إِلَّا أُمَمٌ أَمْثَالُكُم ۚ مَّا فَرَّطْنَا فِي الْكِتَابِ مِن شَيْءٍ ۚ ثُمَّ إِلَىٰ رَبِّهِمْ يُحْشَرُونَ

பூமியில் வாழும் எந்த உயிரினமானாலும், தமது இறக்கைகளால் பறந்து செல்லும் எந்தப் பறவையானாலும் அவை உங்களைப் போன்ற சமுதாயங்களே. அந்தப் புத்தகத்தில் எந்த ஒன்றையும் நாம் விட்டுவிடவில்லை. பின்னர் அவர்கள் தம் இறைவனிடம் ஒன்று திரட்டப்படுவார்கள்.
திருக்குர்ஆன் 6:38

وَإِذَا الْوُحُوشُ حُشِرَتْ

விலங்குகள் ஒன்று திரட்டப்படும் போது,
திருக்குர்ஆன் 81:5

ஜின்களும் எழுப்பப்படும் நாள்.

وَيَوْمَ يَحْشُرُهُمْ جَمِيعًا يَا مَعْشَرَ الْجِنِّ قَدِ اسْتَكْثَرْتُم مِّنَ الْإِنسِ ۖ وَقَالَ أَوْلِيَاؤُهُم مِّنَ الْإِنسِ رَبَّنَا اسْتَمْتَعَ بَعْضُنَا بِبَعْضٍ وَبَلَغْنَا أَجَلَنَا الَّذِي أَجَّلْتَ لَنَا ۚ قَالَ النَّارُ مَثْوَاكُمْ خَالِدِينَ فِيهَا إِلَّا مَا شَاءَ اللَّهُ ۗ إِنَّ رَبَّكَ حَكِيمٌ عَلِيمٌ

அவர்கள் அனைவரையும் அவன் ஒன்று சேர்க்கும் நாளில் "ஜின்களின் கூட்டத்தினரே! அதிகமான மனிதர்களை வழிகெடுத்து விட்டீர்கள்'' (என்று கூறுவான்). அதற்கு மனிதர்களில் உள்ள அவர்களின் நண்பர்கள் "எங்கள் இறைவா! எங்களில் ஒருவர் மற்றவர் மூலம் பயனடைந்தனர். நீ எங்களுக்கு விதித்த கெடுவையும் அடைந்து விட்டோம்'' என்று கூறுவார்கள். "நரகமே உங்கள் தங்குமிடம். அதில் நிரந்தரமாக இருப்பீர்கள். அல்லாஹ் நாடுவதைத் தவிர'' (என்று கூறுவான்.) உமது இறைவன் ஞானமிக்கவன்; அறிந்தவன்.
திருக்குர்ஆன் 6:128

يَا مَعْشَرَ الْجِنِّ وَالْإِنسِ أَلَمْ يَأْتِكُمْ رُسُلٌ مِّنكُمْ يَقُصُّونَ عَلَيْكُمْ آيَاتِي وَيُنذِرُونَكُمْ لِقَاءَ يَوْمِكُمْ هَٰذَا ۚ قَالُوا شَهِدْنَا عَلَىٰ أَنفُسِنَا ۖ وَغَرَّتْهُمُ الْحَيَاةُ الدُّنْيَا وَشَهِدُوا عَلَىٰ أَنفُسِهِمْ أَنَّهُمْ كَانُوا كَافِرِينَ

ஜின், மனித சமுதாயமே! "உங்களுக்கு என் வசனங்களை எடுத்துக் கூறி இந்த நாளை நீங்கள் சந்திக்க விருப்பதை உங்களுக்கு எச்சரிக்கை செய்யும் தூதர்கள் உங்களில் இருந்து உங்களிடம் வரவில்லையா?'' (என்று இறைவன் கேட்பான்). "எங்களுக்கு எதிராக நாங்களே சாட்சி கூறுகிறோம்'' என்று அவர்கள் கூறுவார்கள். இவ்வுலக வாழ்வு அவர்களை மயக்கி விட்டது. "(ஏகஇறைவனை) மறுத்தோராக இருந்தோம்'' எனத் தங்களுக்கு எதிராக அவர்கள் சாட்சியமளிப்பார்கள்.
திருக்குர்ஆன் 6:130

பாலூட்டும் தாயை மறக்கடிக்கும் நாள்.

يَوْمَ تَرَوْنَهَا تَذْهَلُ كُلُّ مُرْضِعَةٍ عَمَّا أَرْضَعَتْ وَتَضَعُ كُلُّ ذَاتِ حَمْلٍ حَمْلَهَا وَتَرَى النَّاسَ سُكَارَىٰ وَمَا هُم بِسُكَارَىٰ وَلَٰكِنَّ عَذَابَ اللَّهِ شَدِيدٌ

நீங்கள் அதைக் காணும் நாளில் பாலூட்டும் ஒவ்வொருத்தியும், தான் பாலூட்டியதை (குழந்தையை) மறந்து விடுவாள். ஒவ்வொரு கர்ப்பிணியும், தன் கருவில் சுமந்ததை ஈன்று விடுவாள். போதை வயப்பட்டோராக மனிதர்களைக் காண்பீர்! அவர்கள் போதை வயப்பட்டோர் அல்லர். மாறாக அல்லாஹ்வின் வேதனை கடுமையானது.
திருக்குர்ஆன் 22:2

Tuesday, January 17, 2023

குர்ஆன் வசனம் 320

 ﷽ குர்ஆன் வசனம் 320

17-01-2023 செவ்வாய்க்கிழமை
وَاَنَّ اللّٰهَ لَا يَهۡدِى الۡقَوۡمَ الۡكٰفِرِيۡنَ‏

(தன்னை) மறுக்கும் கூட்டத்துக்கு அல்லாஹ் நேர்வழி காட்ட மாட்டான்.

[அல்குர்ஆன் 16:107]

உபதேசம் : 570

 ﷽ உபதேசம் : 570

17-01-2023 செவ்வாய்க்கிழமை

مَا شَبِعَ آلُ مُحَمَّدٍ (ﷺ) ، مِنْ خُبْزِ شَعِيرٍ يَوْمَيْنِ مُتَتَابِعَيْنِ، حَتَّى قُبِضَ رَسُولُ اللهِ (ﷺ)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறக்கும்வரை அவர்களின் குடும்பத்தார் (தாேல் நீக்கப்படாத) கோதுமை உணவையும் தொடர்ந்து இரண்டு நாட்கள் வயிறு நிரம்ப உண்டதில்லை!

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) முஸ்லிம் - 5684

இறைவனுக்கு எளிதானது. ( 11 )

 இறைவனுக்கு எளிதானது. ( 11 )

ஒருவர் சுமையை மற்றவர் சுமக்க மாட்டார்.

تِلْكَ أُمَّةٌ قَدْ خَلَتْ ۖ لَهَا مَا كَسَبَتْ وَلَكُم مَّا كَسَبْتُمْ ۖ وَلَا تُسْأَلُونَ عَمَّا كَانُوا يَعْمَلُونَ

அவர்கள் சென்று விட்ட சமுதாயம். அவர்கள் செய்தது அவர்களுக்கு. நீங்கள் செய்தது உங்களுக்கு. அவர்கள் செய்ததைப் பற்றி நீங்கள் விசாரிக்கப்பட மாட்டீர்கள்.
திருக்குர்ஆன் 2:141

فَلْيَضْحَكُوا قَلِيلًا وَلْيَبْكُوا كَثِيرًا جَزَاءً بِمَا كَانُوا يَكْسِبُونَ

அவர்கள் செய்து கொண்டிருந்ததன் காரணமாக அவர்கள் குறைவாகவே சிரிக்கட்டும்! அதிகமாக அழட்டும்!
திருக்குர்ஆன் 9:82

مَّنِ اهْتَدَىٰ فَإِنَّمَا يَهْتَدِي لِنَفْسِهِ ۖ وَمَن ضَلَّ فَإِنَّمَا يَضِلُّ عَلَيْهَا ۚ وَلَا تَزِرُ وَازِرَةٌ وِزْرَ أُخْرَىٰ ۗ وَمَا كُنَّا مُعَذِّبِينَ حَتَّىٰ نَبْعَثَ رَسُولًا

நேர்வழி பெற்றவர் தனக்காகவே நேர்வழி பெறுகிறார். வழி தவறுபவர் தனக்கெதிராகவே வழி தவறுகிறார். ஒருவன் இன்னொருவனின் சுமையைச் சுமக்க மாட்டான். ஒரு தூதரை அனுப்பாதவரை நாம் (எவரையும்) தண்டிப்பதில்லை.
திருக்குர்ஆன் 17:15

الْيَوْمَ تُجْزَىٰ كُلُّ نَفْسٍ بِمَا كَسَبَتْ ۚ لَا ظُلْمَ الْيَوْمَ ۚ إِنَّ اللَّهَ سَرِيعُ الْحِسَابِ

இன்று ஒவ்வொருவரும் செய்ததற்கு கூலி கொடுக்கப்படும். இன்று எந்த அநியாயமும் இல்லை. அல்லாஹ் விரைந்து கணக்கெடுப்பவன்.
திருக்குர்ஆன் 40:17

وَخَلَقَ اللَّهُ السَّمَاوَاتِ وَالْأَرْضَ بِالْحَقِّ وَلِتُجْزَىٰ كُلُّ نَفْسٍ بِمَا كَسَبَتْ وَهُمْ لَا يُظْلَمُونَ

வானங்களையும், பூமியையும் தக்க காரணத்துடனே அல்லாஹ் படைத்தான். ஒவ்வொருவரும், தாம் செய்ததற்குக் கூலி கொடுக்கப்படுவார்கள். அவர்கள் அநீதி இழைக்கப்பட மாட்டார்கள்.
திருக்குர்ஆன் 45:22

أَمْ لَمْ يُنَبَّأْ بِمَا فِي صُحُفِ مُوسَىٰ وَإِبْرَاهِيمَ الَّذِي وَفَّىٰ أَلَّا تَزِرُ وَازِرَةٌ وِزْرَ أُخْرَىٰ وَأَن لَّيْسَ لِلْإِنسَانِ إِلَّا مَا سَعَىٰ

மூஸா, முழுமையாக நிறைவேற்றிய இப்ராஹீம் ஆகியோரின் ஏடுகளில் "ஒருவர் மற்றவரின் சுமையைச் சுமக்கமாட்டார்; மனிதனுக்கு அவன் முயற்சித்தது தவிர வேறு இல்லை'' என்று இருப்பது அவனுக்கு அறிவிக்கப்படவில்லையா?
திருக்குர்ஆன் 53:36, 37, 38, 39

كُلُّ نَفْسٍ بِمَا كَسَبَتْ رَهِينَةٌ

ஒவ்வொருவனும், தான் செய்ததற்குப் பிணையாக்கப்பட்டுள்ளான்.
திருக்குர்ஆன் 74:38

Chapter - 15 Surah Al-Hijr

 ‏Chapter - 15

Surah Al-Hijr


بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

In the name of Allah the most beneficent, most merciful
----------------------------------------------------------

أعوذ بالله من الشيطان الرجيم
I seek refuge in Allah from the outcast Shaitan


إِنَّا نَحْنُ نَزَّلْنَا الذِّكْرَ وَإِنَّا لَهُ لَحَافِظُونَ

Verily We: It is We Who have sent down the Dhikr (i.e. the Qur'an) and surely, We will guard it (from corruption). (Al-Hijr 15:9)

Inna nahnu nazzalna alththikra wa-inna lahu lahafithoona

சுப்ஹானல்லாஹ் என்பதன் சிறப்பு. ( 16 )

 சுப்ஹானல்லாஹ் என்பதன் சிறப்பு. ( 16 )


அல்லாஹு அக்பர் கபீரா, வல்ஹம்து லில்லாஹி கஸீரா, வ சுப்ஹானல்லாஹி புக்ரத்தவ் வ அஸீலா.

பொருள் : அல்லாஹ் மிகப் பெரியவன் என்று பெருமைப்படுத்துகிறேன். எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே உரியது என்று அதிகமாகப் போற்றுகிறேன். அல்லாஹ் பரிசுத்தமானவன் என்று காலையிலும் மாலையிலும் அவனைத் துதிக்கிறேன்.

சிறப்பு : இதற்காக வானத்தின் வாசல்கள் திறக்கப்படுகின்றன.

ஆதாரம் : இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் தொழுதுகொண்டிருந்தோம். அப்போது மக்களில் ஒருவர் "அல்லாஹு அக்பர் கபீரா, வல்ஹம்து லில்லாஹி கஸீரா, வ சுப்ஹானல்லாஹி புக்ரத்தவ் வ அஸீலா" (அல்லாஹ் மிகப் பெரியவன் என்று பெருமைப்படுத்துகிறேன். எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே உரியது என்று அதிகமாகப் போற்றுகிறேன். அல்லாஹ் பரிசுத்தமானவன் என்று காலையிலும் மாலையிலும் அவனைத் துதிக்கிறேன்) என்று கூறினார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "இன்ன இன்ன வார்த்தைகளை மொழிந்தவர் யார்?" என்று கேட்டார்கள். அப்போது மக்களில் ஒருவர், "நான்தான் அல்லாஹ்வின் தூதரே!" என்று கூறினார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நான் இதைக் கேட்டு வியப்புற்றேன். இதற்காக வானத்தின் வாசல்கள் திறக்கப்பட்டன" என்று கூறினார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறக் கேட்டதிலிருந்து நான் அதைக் கூறாமல் இருந்ததில்லை.
ஸஹீஹ் முஸ்லிம் : 1052

அந்நாள் கடுமையானது. ( 3 )

 அந்நாள் கடுமையானது. ( 3 )

தலைவர்கள் தொண்டர்களைக் கைவிடும் நாள்.

إِذْ تَبَرَّأَ الَّذِينَ اتُّبِعُوا مِنَ الَّذِينَ اتَّبَعُوا وَرَأَوُا الْعَذَابَ وَتَقَطَّعَتْ بِهِمُ الْأَسْبَابُ

பின்பற்றப்பட்டோர், வேதனையைக் காணும் போது (தம்மைப்) பின்பற்றியோரிடமிருந்து விலகிக் கொள்வர். அவர்களிடையே (இருந்த) உறவுகள் முறிந்து விடும்.
திருக்குர்ஆன் 2:166

وَقَالَ الَّذِينَ اتَّبَعُوا لَوْ أَنَّ لَنَا كَرَّةً فَنَتَبَرَّأَ مِنْهُمْ كَمَا تَبَرَّءُوا مِنَّا ۗ كَذَٰلِكَ يُرِيهِمُ اللَّهُ أَعْمَالَهُمْ حَسَرَاتٍ عَلَيْهِمْ ۖ وَمَا هُم بِخَارِجِينَ مِنَ النَّارِ

"(உலகுக்கு) திரும்பிச் செல்லும் வாய்ப்பு எங்களுக்கு இருக்குமானால் அவர்கள் எங்களிடமிருந்து விலகிக் கொண்டதைப் போல் அவர்களிடமிருந்து நாங்களும் விலகிக் கொள்வோம்' என்று பின்பற்றியோர் கூறுவார்கள். இப்படித்தான் அல்லாஹ் அவர்களது செயல்களை அவர்களுக்கே கவலையளிப்பதாகக் காட்டுகிறான். அவர்கள் நரகிலிருந்து வெளியேறுவோர் அல்லர்.
திருக்குர்ஆன் 2:167

وَيَوْمَ نَحْشُرُهُمْ جَمِيعًا ثُمَّ نَقُولُ لِلَّذِينَ أَشْرَكُوا مَكَانَكُمْ أَنتُمْ وَشُرَكَاؤُكُمْ ۚ فَزَيَّلْنَا بَيْنَهُمْ ۖ وَقَالَ شُرَكَاؤُهُم مَّا كُنتُمْ إِيَّانَا تَعْبُدُونَ

அவர்கள் அனைவரையும் நாம் ஒன்று திரட்டும் நாளில் இணை கற்பித்தவர்களை நோக்கி "நீங்களும், உங்கள் தெய்வங்களும் உங்கள் இடத்திலேயே நில்லுங்கள்!'' என்று கூறுவோம். அப்போது அவர்களிடையே பிளவை ஏற்படுத்துவோம். "நீங்கள் எங்களை வணங்கவே இல்லை'' என்று அவர்களின் தெய்வங்கள் கூறுவார்கள்.
திருக்குர்ஆன் 10:28

وَبَرَزُوا لِلَّهِ جَمِيعًا فَقَالَ الضُّعَفَاءُ لِلَّذِينَ اسْتَكْبَرُوا إِنَّا كُنَّا لَكُمْ تَبَعًا فَهَلْ أَنتُم مُّغْنُونَ عَنَّا مِنْ عَذَابِ اللَّهِ مِن شَيْءٍ ۚ قَالُوا لَوْ هَدَانَا اللَّهُ لَهَدَيْنَاكُمْ ۖ سَوَاءٌ عَلَيْنَا أَجَزِعْنَا أَمْ صَبَرْنَا مَا لَنَا مِن مَّحِيصٍ

அனைவரும் அல்லாஹ்வின் முன்னே நிற்பார்கள். "உங்களையே நாங்கள் பின்பற்றினோம். எனவே அல்லாஹ்வின் வேதனையிலிருந்து சிறிதளவேனும் எங்களைக் காப்பாற்றுவீர்களா?'' என்று கர்வம் கொண்டிருந்தோரிடம் பலவீனர்கள் கேட்பார்கள். அதற்கவர்கள் "அல்லாஹ் எங்களுக்கு வழிகாட்டியிருந்தால் உங்களுக்கு வழிகாட்டியிருப்போம். நாம் இங்கு துடிப்பதும், சகிப்பதும் நம்மைப் பொறுத்த வரை சமமானதே. நமக்கு எந்தப் போக்கிடமும் இல்லை'' என்று கூறுவார்கள்.
திருக்குர்ஆன் 14:21

وَقَالَ الَّذِينَ كَفَرُوا لَن نُّؤْمِنَ بِهَٰذَا الْقُرْآنِ وَلَا بِالَّذِي بَيْنَ يَدَيْهِ ۗ وَلَوْ تَرَىٰ إِذِ الظَّالِمُونَ مَوْقُوفُونَ عِندَ رَبِّهِمْ يَرْجِعُ بَعْضُهُمْ إِلَىٰ بَعْضٍ الْقَوْلَ يَقُولُ الَّذِينَ اسْتُضْعِفُوا لِلَّذِينَ اسْتَكْبَرُوا لَوْلَا أَنتُمْ لَكُنَّا مُؤْمِنِينَ

"இந்தக் குர்ஆனையும், இதற்கு முன் சென்றதையும் நம்பவே மாட்டோம்'' என்று (ஏகஇறைவனை) மறுப்போர் கூறுகின்றனர். அநீதி இழைத்தோர் தமது இறைவனிடம் நிறுத்தப்பட்டிருக்கும் போது நீர் பார்ப்பீராயின் அவர்களில் ஒருவர் மற்றவர் மீது குற்றம் சுமத்துவார்கள். "நீங்கள் இல்லாதிருந்தால் நாங்களும் நம்பிக்கை கொண்டிருப்போம்'' என்று பலவீனமாக இருந்தோர் பெருமையடித்துக் கொண்டிருந்தோரிடம் கூறுவார்கள்.
திருக்குர்ஆன் 34:31

Monday, January 16, 2023

குர்ஆன் வசனம் 319

 ﷽ குர்ஆன் வசனம் 319

16-01-2023 திங்கட்கிழமை

اِنَّمَا يَفۡتَرِى الۡـكَذِبَ الَّذِيۡنَ لَا يُؤۡمِنُوۡنَ بِاٰيٰتِ اللّٰهِ‌ۚ وَاُولٰۤٮِٕكَ هُمُ الۡكٰذِبُوۡنَ

அல்லாஹ்வின் வசனங்களை நம்பாதோரே பொய்யை இட்டுக்கட்டுவார்கள். அவர்களே பொய்யர்கள்.

[அல்குர்ஆன் 16:105]

உபதேசம் : 569

 ﷽ உபதேசம் : 569

16-01-2023 திங்கட்கிழமை

"குழம்புகளில் அருமையானது காடி (வினிகா்) ஆகும்!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) முஸ்லிம் : 4169

Chapter - 15 Surah Al-Hijr

 ‏Chapter - 15

Surah Al-Hijr


بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

In the name of Allah the most beneficent, most merciful
----------------------------------------------------------

أعوذ بالله من الشيطان الرجيم
I seek refuge in Allah from the outcast Shaitan


مَا نُنَزِّلُ الْمَلَائِكَةَ إِلَّا بِالْحَقِّ وَمَا كَانُوا إِذًا مُنْظَرِينَ

We send not the angels down except with the truth (i.e. for torment, etc.), and in that case, they (the disbelievers) would have no respite! (Al-Hijr 15:8)

Ma nunazzilu almala-ikata illa bialhaqqi wama kanoo ithan munthareena

சுப்ஹானல்லாஹ் என்பதன் சிறப்பு. ( 15 )

 சுப்ஹானல்லாஹ் என்பதன் சிறப்பு. ( 15 )


سبحان الله. والحمد لله. ولا إله إلا الله.
والله اكبر.

சுப்ஹானல்லாஹி, வல்ஹம்து லில்லாஹி வ லாயிலாஹ இல்லல்லாஹு, வல்லாஹு அக்பர்"

பொருள் : அல்லாஹ் தூயவன், அல்லாஹ்வுக்கே எல்லாப்புகழும், வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் இல்லை,
அல்லாஹ் மிகப்பெரியவன்.

சிறப்பு : சூரியன் எதன் மீது உதிக்கிறதோ அந்த உலகத்தை விடச் சிறந்து.

ஆதாரம் : அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"சுப்ஹானல்லாஹி, வல்ஹம்து லில்லாஹி வ லாயிலாஹ இல்லல்லாஹு, வல்லாஹு அக்பர்" (அல்லாஹ் தூயவன்;அனைத்துப் புகழும் அல்லாஹ்வுக்கே உரியன. அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை; அல்லாஹ் மிகவும் பெரியவன்) என்று நான் கூறுவதானது, சூரியன் எதன் மீது உதிக்கிறதோ அ(ந்த உலகத்)தைவிட எனக்கு மிகவும் பிரியமானதாகும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
ஸஹீஹ் முஸ்லிம் : 5225.

அந்நாள் கடுமையானது. ( 2 )

 அந்நாள் கடுமையானது. ( 2 )

பிள்ளைகளும், செல்வமும் உதவ முடியாத நாள்.

إِنَّ الَّذِينَ كَفَرُوا لَن تُغْنِيَ عَنْهُمْ أَمْوَالُهُمْ وَلَا أَوْلَادُهُم مِّنَ اللَّهِ شَيْئًا ۖ وَأُولَٰئِكَ أَصْحَابُ النَّارِ ۚ هُمْ فِيهَا خَالِدُونَ

(ஏகஇறைவனை) மறுப்போருக்கு அவர்களின் மக்கட்செல்வமும், பொருட்செல்வமும் அல்லாஹ்விடமிருந்து அவர்களைச் சிறிதும் காப்பாற்றாது. அவர்கள் நரகவாசிகள். அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள்.
திருக்குர்ஆன் 3:116

எதையும் மறைக்க முடியாத நாள்.

يَوْمَئِذٍ يَوَدُّ الَّذِينَ كَفَرُوا وَعَصَوُا الرَّسُولَ لَوْ تُسَوَّىٰ بِهِمُ الْأَرْضُ وَلَا يَكْتُمُونَ اللَّهَ حَدِيثًا

(ஏகஇறைவனை) மறுத்து, இத்தூதருக்கு மாறுசெய்தோர் "தம்மை பூமி விழுங்கி விடாதா?' என்று அந்நாளில் விரும்புவார்கள். அல்லாஹ்விடம் அவர்கள் எந்தச் செய்தியையும் மறைக்க முடியாது.
திருக்குர்ஆன் 4:42

يَوْمَ تُبْلَى السَّرَائِرُ

அந்நாளில் இரகசியங்கள் வெளிப்படுத்தப்படும்.
திருக்குர்ஆன் 86:9

உண்மை பயனளிக்கும் நாள்.

قَالَ اللَّهُ هَٰذَا يَوْمُ يَنفَعُ الصَّادِقِينَ صِدْقُهُمْ ۚ لَهُمْ جَنَّاتٌ تَجْرِي مِن تَحْتِهَا الْأَنْهَارُ خَالِدِينَ فِيهَا أَبَدًا ۚ رَّضِيَ اللَّهُ عَنْهُمْ وَرَضُوا عَنْهُ ۚ ذَٰلِكَ الْفَوْزُ الْعَظِيمُ

"இது உண்மை பேசுவோருக்கு அவர்களது உண்மை பயன் தரும் நாள். அவர்களுக்குச் சொர்க்கச் சோலைகள் உள்ளன. அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் அவர்கள் என்றென்றும் நிரந்தரமாக இருப்பார்கள். அவர்களை அல்லாஹ் பொருந்திக் கொண்டான். அவர்களும் அல்லாஹ்வைப் பொருந்திக் கொண்டனர். இதுவே மகத்தான வெற்றியாகும்'' என்று அல்லாஹ் கூறுவான்.
திருக்குர்ஆன் 5:119

பாலூட்டுபவள் தனது குழந்தையை மறக்கும் நாள்.

يَوْمَ تَرَوْنَهَا تَذْهَلُ كُلُّ مُرْضِعَةٍ عَمَّا أَرْضَعَتْ وَتَضَعُ كُلُّ ذَاتِ حَمْلٍ حَمْلَهَا وَتَرَى النَّاسَ سُكَارَىٰ وَمَا هُم بِسُكَارَىٰ وَلَٰكِنَّ عَذَابَ اللَّهِ شَدِيدٌ

நீங்கள் அதைக் காணும் நாளில் பாலூட்டும் ஒவ்வொருத்தியும், தான் பாலூட்டியதை (குழந்தையை) மறந்து விடுவாள். ஒவ்வொரு கர்ப்பிணியும், தன் கருவில் சுமந்ததை ஈன்று விடுவாள். போதை வயப்பட்டோராக மனிதர்களைக் காண்பீர்! அவர்கள் போதை வயப்பட்டோர் அல்லர். மாறாக அல்லாஹ்வின் வேதனை கடுமையானது.
திருக்குர்ஆன் 22:2

Sunday, January 15, 2023

குர்ஆன் வசனம் 318

 ﷽ குர்ஆன் வசனம் 318

15-01-2023 ஞாயிற்றுக்கிழமை

اِنَّ الَّذِيۡنَ لَا يُؤۡمِنُوۡنَ بِاٰيٰتِ اللّٰهِۙ لَا يَهۡدِيۡهِمُ اللّٰهُ وَلَهُمۡ عَذَابٌ اَلِيۡمٌ

அல்லாஹ்வின் வசனங்களை நம்பாதோருக்கு அல்லாஹ் வழிகாட்ட மாட்டான். துன்புறுத்தும் வேதனை அவர்களுக்கு உண்டு.

[அல்குர்ஆன் 16:104]

உபதேசம் : 568

 ﷽ உபதேசம் : 568

15-01-2023 ஞாயிற்றுக்கிழமை

"ஒரு ஆணும் அந்நியப் பெண்ணும் தனித்திருக்க வேண்டாம்: ஏனெனில் மூன்றாமவனாக ஷைத்தான் இருப்பான்!" என்று நபி (ஸல்) அவா்கள் கூறினாா்கள்.

அறிவிப்பவா் : ஆமிா் பின் ரபிஆ (ரலி) அஹ்மத் :15140 , 109 முஸ்லிம் 2611

இறைவனுக்கு எளிதானது. ( 10 )

 இறைவனுக்கு எளிதானது. ( 10 )

செயல்களின் ஏடுகள்.

وَكُلَّ إِنسَانٍ أَلْزَمْنَاهُ طَائِرَهُ فِي عُنُقِهِ ۖ وَنُخْرِجُ لَهُ يَوْمَ الْقِيَامَةِ كِتَابًا يَلْقَاهُ مَنشُورًا

ஒவ்வொரு மனிதனுக்கும் அவனது கழுத்தில் அவனது குறிப்பேட்டை மாட்டியுள்ளோம். கியாமத் நாளில் அவனுக்காக ஒரு புத்தகத்தை வெளிப்படுத்துவோம். அதை விரிக்கப்பட்டதாக அவன் காண்பான்.
திருக்குர்ஆன் 17:13

وَوُضِعَ الْكِتَابُ فَتَرَى الْمُجْرِمِينَ مُشْفِقِينَ مِمَّا فِيهِ وَيَقُولُونَ يَا وَيْلَتَنَا مَالِ هَٰذَا الْكِتَابِ لَا يُغَادِرُ صَغِيرَةً وَلَا كَبِيرَةً إِلَّا أَحْصَاهَا ۚ وَوَجَدُوا مَا عَمِلُوا حَاضِرًا ۗ وَلَا يَظْلِمُ رَبُّكَ أَحَدًا

அந்தப் புத்தகம் வைக்கப்படும். அதில் உள்ளவற்றின் காரணமாக குற்றவாளிகள் அச்சமடைந்திருக்கக் காண்பீர்! "இந்த ஏட்டுக்கு என்ன வந்தது? சிறியதையோ, பெரியதையோ ஒன்று விடாமல் பதிவு செய்துள்ளதே!'' எனக் கூறுவார்கள். தாங்கள் செய்தவற்றைக் கண் முன்னே காண்பார்கள். உமது இறைவன் எவருக்கும் அநீதி இழைக்க மாட்டான்.
திருக்குர்ஆன் 18:49

وَلَا نُكَلِّفُ نَفْسًا إِلَّا وُسْعَهَا ۖ وَلَدَيْنَا كِتَابٌ يَنطِقُ بِالْحَقِّ ۚ وَهُمْ لَا يُظْلَمُونَ

எவரையும் அவரது சக்திக்கு மேல் சிரமப்படுத்த மாட்டோம். நம்மிடம் உண்மையைப் பேசும் ஏடு உள்ளது. அவர்கள் அநீதி இழைக்கப்பட மாட்டார்கள்.
திருக்குர்ஆன் 23:62

هَٰذَا كِتَابُنَا يَنطِقُ عَلَيْكُم بِالْحَقِّ ۚ إِنَّا كُنَّا نَسْتَنسِخُ مَا كُنتُمْ تَعْمَلُونَ

இதுவே நமது புத்தகம். உங்களுக்கு எதிராக இது உண்மையைப் பேசுகிறது. நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றை நாம் பதிவு செய்வோராக இருந்தோம் என்று கூறப்படும்.
திருக்குர்ஆன் 45:29

وَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِشِمَالِهِ فَيَقُولُ يَا لَيْتَنِي لَمْ أُوتَ كِتَابِيَهْ وَلَمْ أَدْرِ مَا حِسَابِيَهْ يَا لَيْتَهَا كَانَتِ الْقَاضِيَةَ مَا أَغْنَىٰ عَنِّي مَالِيَهْ ۜ هَلَكَ عَنِّي سُلْطَانِيَهْ

புத்தகம் தனது இடது கையில் கொடுக்கப்பட்டவன் "எனது புத்தகம் கொடுக்கப்படாமல் இருக்கக் கூடாதா? எனது விசாரணை என்னவாகும் என்பது தெரியவில்லையே! (இறப்புடன்) கதை முடிந்திருக்கக் கூடாதா? எனது செல்வம் என்னைக் காப்பாற்றவில்லையே! எனது அதிகாரம் என்னை விட்டும் அழிந்து விட்டதே'' எனக் கூறுவான்.
திருக்குர்ஆன் 69:25, 26, 27, 28, 29

فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَسَوْفَ يُحَاسَبُ حِسَابًا يَسِيرًا

யாருக்கு வலது கையில் பதிவுப் புத்தகம் கொடுக்கப்படுகிறதோ அவர் எளிதான முறையில் விசாரிக்கப்படுவார்.
திருக்குர்ஆன் 84:7,8

وَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ وَرَاءَ ظَهْرِهِ فَسَوْفَ يَدْعُو ثُبُورًا

முதுகுக்குப் பின்புறமாக எவனுக்கு அவனது பதிவுப் புத்தகம் கொடுக்கப்படுகிறதோ அவன் அழிவை அழைப்பான்.
திருக்குர்ஆன் 84:10,11

இறைவனுக்கு எளிதானது. ( 9 )

 இறைவனுக்கு எளிதானது. ( 9 )

நன்மைக்குப் பத்து, தீமைக்கு ஒன்று.

إِنَّ اللَّهَ لَا يَظْلِمُ مِثْقَالَ ذَرَّةٍ ۖ وَإِن تَكُ حَسَنَةً يُضَاعِفْهَا وَيُؤْتِ مِن لَّدُنْهُ أَجْرًا عَظِيمًا

அல்லாஹ் அணுவளவும் அநீதி இழைக்க மாட்டான். அது நன்மையாக இருந்தால் அதைப் பன்மடங்காகப் பெருக்குவான். தனது மகத்தான கூலியை வழங்குவான்.
திருக்குர்ஆன் 4:40

مَن جَاءَ بِالْحَسَنَةِ فَلَهُ عَشْرُ أَمْثَالِهَا ۖ وَمَن جَاءَ بِالسَّيِّئَةِ فَلَا يُجْزَىٰ إِلَّا مِثْلَهَا وَهُمْ لَا يُظْلَمُونَ

நன்மை செய்தவருக்கு அது போன்ற பத்து மடங்கு உண்டு. தீமை செய்தவர், தீமை அளவே தண்டிக்கப்படுவார். அவர்கள் அநீதி இழைக்கப்பட மாட்டார்கள்.
திருக்குர்ஆன் 6:160

وَالَّذِينَ كَذَّبُوا بِآيَاتِنَا وَلِقَاءِ الْآخِرَةِ حَبِطَتْ أَعْمَالُهُمْ ۚ هَلْ يُجْزَوْنَ إِلَّا مَا كَانُوا يَعْمَلُونَ

நமது வசனங்களையும், மறுமையின் சந்திப்பையும் பொய்யெனக் கருதியோரின் செயல்கள் அழிந்து விடும். அவர்கள் செய்ததைத் தவிர வேறு எதற்கும் கூலி கொடுக்கப்படுவார்களா?
திருக்குர்ஆன் 7:147

وَوُضِعَ الْكِتَابُ فَتَرَى الْمُجْرِمِينَ مُشْفِقِينَ مِمَّا فِيهِ وَيَقُولُونَ يَا وَيْلَتَنَا مَالِ هَٰذَا الْكِتَابِ لَا يُغَادِرُ صَغِيرَةً وَلَا كَبِيرَةً إِلَّا أَحْصَاهَا ۚ وَوَجَدُوا مَا عَمِلُوا حَاضِرًا ۗ وَلَا يَظْلِمُ رَبُّكَ أَحَدًا

அந்தப் புத்தகம் வைக்கப்படும். அதில் உள்ளவற்றின் காரணமாக குற்றவாளிகள் அச்சமடைந்திருக்கக் காண்பீர்! "இந்த ஏட்டுக்கு என்ன வந்தது? சிறியதையோ, பெரியதையோ ஒன்று விடாமல் பதிவு செய்துள்ளதே!'' எனக் கூறுவார்கள். தாங்கள் செய்தவற்றைக் கண் முன்னே காண்பார்கள். உமது இறைவன் எவருக்கும் அநீதி இழைக்க மாட்டான்.
திருக்குர்ஆன் 18:49

وَنَضَعُ الْمَوَازِينَ الْقِسْطَ لِيَوْمِ الْقِيَامَةِ فَلَا تُظْلَمُ نَفْسٌ شَيْئًا ۖ وَإِن كَانَ مِثْقَالَ حَبَّةٍ مِّنْ خَرْدَلٍ أَتَيْنَا بِهَا ۗ وَكَفَىٰ بِنَا حَاسِبِينَ

கியாமத் நாளுக்காக நீதியான தராசுகளை நிறுவுவோம். எவருக்கும் சிறிதளவும் அநீதி இழைக்கப்படாது. ஒரு கடுகு விதை அளவே இருந்த போதும் அதையும் கொண்டு வருவோம். கணக்கெடுக்க நாமே போதும்.
திருக்குர்ஆன் 21:47

Chapter - 15 Surah Al-hijr

Chapter - 15

Surah Al-Hijr


بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

In the name of Allah the most beneficent, most merciful
----------------------------------------------------------

أعوذ بالله من الشيطان الرجيم
I seek refuge in Allah from the outcast Shaitan


لَوْ مَا تَأْتِينَا بِالْمَلَائِكَةِ إِنْ كُنْتَ مِنَ الصَّادِقِينَ

\Why do you not bring angels to us if you are of the truthful ones?\" (Al-Hijr 15:7)"

Law ma ta/teena bialmala-ikati in kunta mina alssadiqeena

சுப்ஹானல்லாஹ் என்பதன் சிறப்பு. ( 14 )

 சுப்ஹானல்லாஹ் என்பதன் சிறப்பு. ( 14 )


سبحان الله

சுப்ஹானல்லாஹ்.

பொருள் : அல்லாஹ் தூயவன்.

சட்டம் : ஒரு முஸ்லிம் பெருந்துடக்கு ஏற்பட்ட காரணத்தால் அசுத்தமாவதில்லை.

ஆதாரம் : அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் :
பெருந்துடக்கு ஏற்பட்டவனாய் (குளிப்பு கடமையான நிலையில்) நான் மதீனாவின் ஒரு சாலையில் நான் நின்று கொண்டிருந்தேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் என்னைச் சந்தித்தார்கள். உடனே நான் அவர்களிடமிருந்து (நழுவிச்) சென்று மறைந்து கொண்டேன். உடனே நான் (வீட்டிற்குச்) சென்று குளித்துவிட்டு வந்தேன். (இவ்வளவு நேரம்) எங்கிருந்தாய், அபூஹுரைரா? என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். நான் பெருந்துடக்குடைவனாய் இருந்தேன். சுத்தமில்லாமல் தங்கள் அருகே அமர்வதை நான் வெறுத்தேன் என்று சொன்னேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், சுப்ஹானல்லாஹ் (அல்லாஹ் தூயவன்) ஒரு முஸ்லிம் (பெருந்துடக்கு ஏற்பட்டதால்) அசுத்தமாகி விட மாட்டார் என்று கூறினார்கள்.
ஸஹீஹ் புகாரி : 283

அந்நாள் கடுமையானது. ( 1 )

அந்நாள் கடுமையானது. ( 1 )
அனைவரும் இறைவனின் முன்னே நிறுத்தப்படும் நாள்.

وَلِكُلٍّ وِجْهَةٌ هُوَ مُوَلِّيهَا ۖ فَاسْتَبِقُوا الْخَيْرَاتِ ۚ أَيْنَ مَا تَكُونُوا يَأْتِ بِكُمُ اللَّهُ جَمِيعًا ۚ إِنَّ اللَّهَ عَلَىٰ كُلِّ شَيْءٍ قَدِيرٌ

ஒவ்வொருவருக்கும் முன்னோக்கும் இலக்கு உள்ளது. அவர் அதை நோக்குகிறார். எனவே நன்மைகளுக்கு முந்திக் கொள்ளுங்கள்! நீங்கள் எங்கே இருந்தாலும் உங்கள் அனைவரையும் அல்லாஹ் கொண்டு வருவான். அனைத்துப் பொருட்களின் மீதும் அல்லாஹ் ஆற்றலுடையவன்.
திருக்குர்ஆன் 2:148

وَاتَّقُوا يَوْمًا تُرْجَعُونَ فِيهِ إِلَى اللَّهِ ۖ ثُمَّ تُوَفَّىٰ كُلُّ نَفْسٍ مَّا كَسَبَتْ وَهُمْ لَا يُظْلَمُونَ

அல்லாஹ்விடம் நீங்கள் திரும்பக் கொண்டு வரப்படும் நாளை அஞ்சுங்கள்! பின்னர் ஒவ்வொருவருக்கும், அவர்கள் உழைத்தது முழுமையாக வழங்கப்படும். அவர்கள் அநீதி இழைக்கப்பட மாட்டார்கள்.
திருக்குர்ஆன் 2:281

رَبَّنَا إِنَّكَ جَامِعُ النَّاسِ لِيَوْمٍ لَّا رَيْبَ فِيهِ ۚ إِنَّ اللَّهَ لَا يُخْلِفُ الْمِيعَادَ

எங்கள் இறைவா! எந்தச் சந்தேகமும் இல்லாத நாளில் எங்களை நீ ஒன்று திரட்டுபவன். (எனக் கூறுவார்கள்.) அல்லாஹ் வாக்கு மீற மாட்டான்.
திருக்குர்ஆன் 3:9

فَكَيْفَ إِذَا جَمَعْنَاهُمْ لِيَوْمٍ لَّا رَيْبَ فِيهِ وَوُفِّيَتْ كُلُّ نَفْسٍ مَّا كَسَبَتْ وَهُمْ لَا يُظْلَمُونَ

எவ்விதச் சந்தேகமும் இல்லாத நாளில் அவர்களை நாம் ஒன்று திரட்டும் போது எவ்வாறு இருக்கும்? ஒவ்வொருவருக்கும், அவர் உழைத்தது முழுமையாக வழங்கப்படும். அவர்கள் அநீதி இழைக்கப்பட மாட்டார்கள்.
திருக்குர்ஆன் 3:25

اللَّهُ لَا إِلَٰهَ إِلَّا هُوَ ۚ لَيَجْمَعَنَّكُمْ إِلَىٰ يَوْمِ الْقِيَامَةِ لَا رَيْبَ فِيهِ ۗ وَمَنْ أَصْدَقُ مِنَ اللَّهِ حَدِيثًا

அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை. எந்தச் சந்தேகமுமில்லாத கியாமத் நாளில் உங்களை அவன் ஒன்று திரட்டுவான். அல்லாஹ்வை விட அதிக உண்மை பேசுபவன் யார்?
திருக்குர்ஆன் 4:87