சுப்ஹானல்லாஹ் என்பதன் சிறப்பு. ( 13 )
سُبْحَانَ اللَّهِ وَبِحَمْدِهِ
சுப்ஹானல்லாஹி வ பிஹம்திஹி (காலையிலும், மாலையிலும் 100 முறை)
பொருள் : அல்லாஹ் தூயவன் என்று போற்றித் துதிக்கிறேன்.
சிறப்பு : இவர் கொண்டுச் சென்ற நல்லறத்தைவிடச் சிறந்ததை வேறெவரும் மறுமைநாளில் கொண்டுச் செல்லமாட்டார்கள்.
ஆதாரம் : அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யார் காலையிலும் மாலையிலும் நூறு முறை "சுப்ஹானல்லாஹி வ பிஹம்திஹி" (அல்லாஹ் தூயவன் எனப் போற்றிப் புகழ்கிறேன்) என்று சொல்கிறாரோ அவர் கொண்டுவந்த (நல்லறத்)தைவிடச் சிறந்ததை வேறெவரும் மறுமைநாளில் கொண்டு வருவதில்லை; அவர் சொன்ன அளவுக்குச் சொன்னவரையும் அல்லது அதைவிடக் கூடுதலாகச் சொன்னவரையும் தவிர.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
ஸஹீஹ் முஸ்லிம் : 5222.
No comments:
Post a Comment