Saturday, January 14, 2023

சுப்ஹானல்லாஹ் என்பதன் சிறப்பு. ( 12 )

 சுப்ஹானல்லாஹ் என்பதன் சிறப்பு. ( 12 )


سبحان الله

சுப்ஹானல்லாஹ்.

பொருள் : அல்லாஹ் தூயவன்.

சட்டம் : இறைதண்டனையின் கடுமை கண்டோர், சுப்ஹானல்லாஹ் என்று கூறிவிட்டு பிரார்த்தனை செய்ய வேண்டும்.

ஆதாரம் : (ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முஸ்லிலிம்களில் ஒருவரை உடல்நலம் விசாரிப்பதற்காகச் சென்றார்கள். அவர் கோழிக் குஞ்சைப் போன்று நலிந்து பலவீனத்துடன் காணப்பட்டார். அவரிடம்
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நீ ஏதேனும் பிரார்த்தித்து வந்தாயா? அல்லது இறைவனிடம் ஏதேனும் வேண்டிவந்தாயா?” என்று கேட்டார்கள். அதற்கு அந்த மனிதர் “ஆம்; நான், இறைவா! நீ மறுமையில் அளிக்கவிருக்கும் தண்டனையை முன்கூட்டி இவ்வுலகிலேயே எனக்குத் தந்துவிடு என்று பிரார்த்தித்துவந்தேன்” என்று கூறினார்.
அதைக்கேட்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (வியப்புடன்)
“அல்லாஹ் தூயவன் (சுப்ஹானல்லாஹ்!) “உன்னால் அதைத் தாங்க முடியாது’. அல்லது “உன்னால் அதற்கு இயலாது’ என்று கூறிவிட்டு, நீ “இறைவா! இம்மையிலும் எமக்கு நன்மையை வழங்குவாயாக! மறுமையிலும் எமக்கு நன்மையை வழங்குவாயாக! நரக வேதனையிலிலிருந்து எம்மைக் காப்பாயாக!” என்று பிரார்த்தித்திருக்கக் கூடாதா? என்று கேட்டார்கள். பிறகு அவருக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தித்தார்கள்; அவருக்கு
அல்லாஹ் நிவாரணத்தை வழங்கினான்.
அறிவிப்பவர் : அனஸ் (ரலி),
நூல் : முஸ்லிம் 5216

No comments:

Post a Comment