இறுதி நாளை நம்புதல். ( 4 )
அழிப்பதற்காக ஸூர் ஊதப்படுதல்.وَهُوَ الَّذِي خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ بِالْحَقِّ ۖ وَيَوْمَ يَقُولُ كُن فَيَكُونُ ۚ قَوْلُهُ الْحَقُّ ۚ وَلَهُ الْمُلْكُ يَوْمَ يُنفَخُ فِي الصُّورِ ۚ عَالِمُ الْغَيْبِ وَالشَّهَادَةِ ۚ وَهُوَ الْحَكِيمُ الْخَبِيرُ
அவனே வானங்களையும், பூமியையும் தக்க காரணத்துடன் படைத்தான். "ஆகு' என்று அவன் கூறும் நாளில் ஆகி விடும். அவனது சொல் உண்மையானது. ஸூர் ஊதப்படும் நாளில் ஆட்சி அவனுக்கே உரியது. மறைவானதையும், வெளிப்படையானதையும் அவன் அறிபவன்; அவன் ஞானமிக்கவன்; நன்கறிந்தவன்.
திருக்குர்ஆன் 6:73
وَيَوْمَ يُنفَخُ فِي الصُّورِ فَفَزِعَ مَن فِي السَّمَاوَاتِ وَمَن فِي الْأَرْضِ إِلَّا مَن شَاءَ اللَّهُ ۚ وَكُلٌّ أَتَوْهُ دَاخِرِينَ
ஸூர் ஊதப்படும் நாளில் வானங்களில் உள்ளவர்களிலும், பூமியில் உள்ளவர்களிலும் அல்லாஹ் நாடியோரைத் தவிர அனைவரும் நடுங்குவார்கள். அனைவரும் அடங்கி அவனிடம் வருவார்கள்.
திருக்குர்ஆன் 27:87
مَا يَنظُرُونَ إِلَّا صَيْحَةً وَاحِدَةً تَأْخُذُهُمْ وَهُمْ يَخِصِّمُونَ
ஒரே ஒரு பெரும் சப்தத்தைத் தவிர அவர்கள் எதிர்பார்க்கவில்லை. அவர்கள் விவாதித்துக் கொண்டிருக்கும் போது அவர்களை அது பிடித்துக் கொள்ளும்.
திருக்குர்ஆன் 36:49
وَنُفِخَ فِي الصُّورِ فَصَعِقَ مَن فِي السَّمَاوَاتِ وَمَن فِي الْأَرْضِ إِلَّا مَن شَاءَ اللَّهُ ۖ ثُمَّ نُفِخَ فِيهِ أُخْرَىٰ فَإِذَا هُمْ قِيَامٌ يَنظُرُونَ
ஸூர் ஊதப்படும். அல்லாஹ் நாடியோரைத் தவிர வானங்களிலும்,பூமியிலும் இருப்போர் அப்போது மூர்ச்சையாவார்கள். பின்னர் மீண்டும் ஒரு முறை அது ஊதப்படும். உடனே அவர்கள் எழுந்து பார்ப்பார்கள்.
திருக்குர்ஆன் 39:68
فَإِذَا نُفِخَ فِي الصُّورِ نَفْخَةٌ وَاحِدَةٌ وَحُمِلَتِ الْأَرْضُ وَالْجِبَالُ فَدُكَّتَا دَكَّةً وَاحِدَةً فَيَوْمَئِذٍ وَقَعَتِ الْوَاقِعَةُ
ஒரே ஒரு தடவை ஸூர் ஊதப்பட்டு, பூமியும், மலைகளும் தூக்கப்பட்டு ஒரேயடியாக தூள் தூளாக்கப்படும் போது, அந்நாளில் தான் அந்த நிகழ்ச்சி நடந்தேறும்.
திருக்குர்ஆன் 69:15
No comments:
Post a Comment