சொர்க்கச் சோலைகள். ( 7 )
சொகுசுக் கட்டில்களில் இருப்பார்கள்.وَنَزَعْنَا مَا فِي صُدُورِهِم مِّنْ غِلٍّ إِخْوَانًا عَلَىٰ سُرُرٍ مُّتَقَابِلِينَ
அவர்களின் உள்ளங்களில் இருந்த குரோதங்களை நீக்குவோம். கட்டில்களில் நேருக்கு நேர் நோக்கி சகோதரர்களாக இருப்பார்கள்.
திருக்குர்ஆன் 15:47
هُمْ وَأَزْوَاجُهُمْ فِي ظِلَالٍ عَلَى الْأَرَائِكِ مُتَّكِئُونَ
அவர்களும், அவர்களது துணைகளும் கட்டிலில் சாய்ந்து நிழல்களில் இருப்பார்கள்.
திருக்குர்ஆன் 36:56
عَلَىٰ سُرُرٍ مُّتَقَابِلِينَ
கட்டில்களில் ஒருவரையொருவர் எதிர் நோக்குவார்கள்.
திருக்குர்ஆன் 37:44
مُتَّكِئِينَ عَلَىٰ رَفْرَفٍ خُضْرٍ وَعَبْقَرِيٍّ حِسَانٍ
பச்சை நிறத்து இரத்தினக் கம்பளத்தின் மீதும், அழகிய சாய்மானத்தின் மீதும் சாய்ந்து கொண்டிருப்பார்கள்.
திருக்குர்ஆன் 55:76
مُّتَّكِئِينَ فِيهَا عَلَى الْأَرَائِكِ ۖ لَا يَرَوْنَ فِيهَا شَمْسًا وَلَا زَمْهَرِيرًا
அதில் அவர்கள் உயர்ந்த இருக்கைகள் மீது சாய்ந்திருப்பார்கள். அங்கே சூரியனையும், கடும் குளிர்ச்சியையும் காண மாட்டார்கள்.
திருக்குர்ஆன் 76:13
عَلَى الْأَرَائِكِ يَنظُرُونَ
உயர்ந்த இருக்கைகள் மீது (சாய்ந்து) பார்த்துக் கொண்டிருப்பார்கள்.
திருக்குர்ஆன் 83:23
عَلَى الْأَرَائِكِ يَنظُرُونَ
உயர்ந்த கட்டில்கள் மீது (சாய்ந்து) பார்த்துக் கொண்டிருப்பார்கள்.
திருக்குர்ஆன் 83:35
No comments:
Post a Comment