சுப்ஹானல்லாஹ் என்பதன் சிறப்பு. ( 18 )
سبحان الله
சுப்ஹானல்லாஹ்.
பொருள் : அல்லாஹ் தூயவன்.
சட்டம் : தவறை யார் சுட்டிக் காட்டினாலும் திருத்திக் கொள்ள வேண்டும்.
ஆதாரம் : ஒரு பாதிரியார் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்தார். ‘முஹம்மதே! நீங்கள் (கடவுளுக்கு) இணை கற்பிக்காமல் இருந்தால் நீங்கள் தான் சிறந்த சமுதாயம்’ என்று அவர் கூறினார். இதைக் கேட்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், ‘ என்பது இதன் பொருள். ஆச்சரியத்தை வெளிப்படுத்தும் போது இவ் வாறு கூறுவது வழக்கம்) என்று ஆச்சரியத்துடன் கூறி விட்டு ‘அது என்ன?’ என்று வினவினார்கள். அதற்கு அந்தப் பாதிரியார் ‘நீங்கள் சத்தியம் செய்யும் போது கஃபாவின் மீது ஆணையாக எனக் கூறுகிறீர் களே அது தான்’ என்று அவர் விளக்கினார். சற்று நேரம் மவுனமாக இருந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ‘இனி மேல் சத்தியம் செய்வதாக இருந்தால் கஃபாவின் எஜமான் மீது ஆணையாக’ எனக் கூறுங்கள் என்று (முஸ்லிம்களுக்குக்) கூறினார்கள். பின்னர் அந்தப் பாதிரியார் ‘முஹம்மதே, நீங்கள் அல்லாஹ்வுக்கு நிகரானவர்களைக் கற்பனை செய்யாமல் இருந்தால் நீங்கள் தான் சிறந்த சமுதாயம்’ என்று கூறினார். ‘சுப்ஹானல்லாஹ்’ என்று ஆச்சரியத்தை வெளிப்படுத்திய நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ‘அது என்ன?’ என்ற கேட்டார்கள். ‘இது அல்லாஹ் நினைத்ததும் நீங்கள் நினைத்ததுமாகும் என்று கூறுகிறீர்களே அது தான்’ என்று அவர் விடையளித்தார். சற்று நேரம் மவுனமாக இருந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ‘இவர் விமர்சித்து விட்டார். எனவே, இனி மேல் யாரேனும் ‘அல்லாஹ் நினைத்த படி’ என்று கூறினால் சற்று இடைவெளி விட்டு ‘பின்னர் நீங்கள் நினைத்தீர்கள்’ என்று கூறுங்கள் என்று (முஸ்லிம்களுக்குக்) கூறினார்கள்.
நூல் : அஹ்மத் 25845
No comments:
Post a Comment