﷽ குர்ஆன் வசனம் 575
30-09-2023 சனிக்கிழமை
وَقِيۡلَ الۡيَوۡمَ نَنۡسٰٮكُمۡ كَمَا نَسِيۡتُمۡ لِقَآءَ يَوۡمِكُمۡ هٰذَا وَمَاۡوٰٮكُمُ النَّارُ وَمَا لَـكُمۡ مِّنۡ نّٰصِرِيۡنَ
"இந்த நாளின் சந்திப்பை நீங்கள் மறந்தது போல் இன்று நாமும் உங்களை மறப்போம். உங்கள் தங்குமிடம் நரகமாகும். உங்களுக்கு உதவுவோர் இல்லை" எனக் கூறப்படும்.
[அல்குர்ஆன் 45:34]
Saturday, September 30, 2023
குர்ஆன் வசனம் 575
உபதேசம் : 825
﷽ உபதேசம் : 825
30-09-2023 சனிக்கிழமை
"ஒருவன் தன் பொறுப்பில் உள்ளவர்களை கவனிக்காமல் விட்டுவிடுவதே அவன் பாவி என்பதற்குப் போதுமான சான்றாகும்” என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.
அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரலி) அபூதாவூத் - 1442
ஆதம் (அலை). ( 6 )
ஆதம் (அலை). ( 6 )
ஆதம் (அலை) பூமியில் படைக்கப்பட்டார்.
وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً
"பூமியில் நான் ஒரு தலைமுறையைப் படைக்கப் போகிறேன்' என்று உமது இறைவன் வானவர்களிடம் கூறிய போது,
திருக்குர்ஆன் 2:30
ஆதம் (அலை) சொர்க்கத்தில் குடியமர்த்தப்பட்டார்.
وَقُلْنَا يَا آدَمُ اسْكُنْ أَنتَ وَزَوْجُكَ الْجَنَّةَ وَكُلَا مِنْهَا رَغَدًا حَيْثُ شِئْتُمَا وَلَا تَقْرَبَا هَٰذِهِ الشَّجَرَةَ فَتَكُونَا مِنَ الظَّالِمِينَ
"ஆதமே! நீயும், உன் மனைவியும் இந்த சொர்க்கத்தில் குடியிருங்கள்! இருவரும் விரும்பியவாறு தாராளமாக இதில் உண்ணுங்கள்! இந்த மரத்தை (மட்டும்) நெருங்காதீர்கள்! (நெருங்கினால்) அநீதி இழைத்தோராவீர்' என்று நாம் கூறினோம்.
திருக்குர்ஆன் 2:35
وَيَا آدَمُ اسْكُنْ أَنتَ وَزَوْجُكَ الْجَنَّةَ فَكُلَا مِنْ حَيْثُ شِئْتُمَا وَلَا تَقْرَبَا هَٰذِهِ الشَّجَرَةَ فَتَكُونَا مِنَ الظَّالِمِينَ
"ஆதமே! நீயும் உமது மனைவியும் இந்தச் சொர்க்கத்தில் தங்குங்கள்! விரும்பியவாறு இருவரும் உண்ணுங்கள்! இந்த மரத்தை நெருங்காதீர்கள்! (நெருங்கினால்) இருவரும் அநீதி இழைத்தவர்களாகி விடுவீர்கள்'' (என்றும் கூறினான்)
திருக்குர்ஆன் 7:19
فَقُلْنَا يَا آدَمُ إِنَّ هَٰذَا عَدُوٌّ لَّكَ وَلِزَوْجِكَ فَلَا يُخْرِجَنَّكُمَا مِنَ الْجَنَّةِ فَتَشْقَىٰ
ஆதமே! இவன் உமக்கும், உமது மனைவிக்கும் எதிரியாவான். இவன் உங்களைச் சொர்க்கத்திலிருந்து வெளியேற்றிட வேண்டாம். அப்போது நீர் துர்பாக்கியசாலியாவீர்! என்று கூறினோம்.
திருக்குர்ஆன் 20:117
ஆதம் (அலை) இறக்கப்பட்டது மக்காவில் தான்.
إِنَّ أَوَّلَ بَيْتٍ وُضِعَ لِلنَّاسِ لَلَّذِي بِبَكَّةَ مُبَارَكًا وَهُدًى لِّلْعَالَمِينَ
அகிலத்தின் நேர்வழிக்குரியதாகவும், பாக்கியம் பொருந்தியதாகவும் மனிதர்களுக்காக அமைக்கப்பட்ட முதல் ஆலயம் பக்கா(எனும் மக்கா)வில் உள்ளதாகும்.
திருக்குர்ஆன் 3:96
ஷைத்தான் இருக்கிறான் என நம்புதல். ( 5 )
ஷைத்தான் இருக்கிறான் என நம்புதல். ( 5 )
உறுதியான நம்பிக்கை கொண்டவர்களை அவனால் வழிகெடுக்க முடியாது.
وَقَالَ الشَّيْطَانُ لَمَّا قُضِيَ الْأَمْرُ إِنَّ اللَّهَ وَعَدَكُمْ وَعْدَ الْحَقِّ وَوَعَدتُّكُمْ فَأَخْلَفْتُكُمْ ۖ وَمَا كَانَ لِيَ عَلَيْكُم مِّن سُلْطَانٍ إِلَّا أَن دَعَوْتُكُمْ فَاسْتَجَبْتُمْ لِي
"அல்லாஹ் உங்களுக்கு உண்மையான வாக்குறுதி அளித்தான். நானும் உங்களுக்கு வாக்குறுதி அளித்து உங்களிடம் வாக்கு மீறிவிட்டேன். உங்களை அழைத்தேன். எனது அழைப்பை ஏற்றீர்கள் என்பதைத் தவிர உங்கள் மீது எனக்கு எந்த அதிகாரமும் இல்லை. என்று தீர்ப்புக் கூறப்பட்டவுடன் ஷைத்தான் கூறுவான்.
திருக்குர்ஆன் 14:22
إِنَّ عِبَادِي لَيْسَ لَكَ عَلَيْهِمْ سُلْطَانٌ إِلَّا مَنِ اتَّبَعَكَ مِنَ الْغَاوِينَ
எனது அடியார்களில் உன்னைப் பின்பற்றிய வழிகேடர்களைத் தவிர மற்றவர்கள் மீது உனக்கு எந்த அதிகாரமும் இல்லை.
திருக்குர்ஆன் 15:42
إِنَّهُ لَيْسَ لَهُ سُلْطَانٌ عَلَى الَّذِينَ آمَنُوا وَعَلَىٰ رَبِّهِمْ يَتَوَكَّلُونَ
நம்பிக்கை கொண்டோர் மீதும், தமது இறைவனையே சார்ந்திருப்போர் மீதும் அவனுக்கு அதிகாரம் இல்லை.
திருக்குர்ஆன் 16:99
إِنَّمَا سُلْطَانُهُ عَلَى الَّذِينَ يَتَوَلَّوْنَهُ وَالَّذِينَ هُم بِهِ مُشْرِكُونَ
தன்னைப் பாதுகாப்பாளனாக ஆக்கிக் கொண்டோர் மீதும், இறைவனுக்கு இணைகற்பிப்போர் மீதுமே அவனுக்கு அதிகாரம் உள்ளது.
திருக்குர்ஆன் 16:100
إِنَّ عِبَادِي لَيْسَ لَكَ عَلَيْهِمْ سُلْطَانٌ ۚ وَكَفَىٰ بِرَبِّكَ وَكِيلًا
"எனது (நல்ல) அடியார்கள் மீது உனக்கு எந்த அதிகாரமும் இல்லை'' (என்றும் இறைவன் கூறினான்.) உமது இறைவன் பொறுப்பேற்கப் போதுமானவன்.
திருக்குர்ஆன் 17:65
குர்ஆன் வசனம் 574
﷽ குர்ஆன் வசனம் 574
29-09-2023 வெள்ளிக்கிழமை
وَبَدَا لَهُمۡ سَيِّاٰتُ مَا عَمِلُوۡا وَحَاقَ بِهِمۡ مَّا كَانُوۡا بِهٖ يَسۡتَهۡزِءُوۡنَ
அவர்கள் செய்த தீமைகள் அவர்களுக்கு வெளிச்சமாகும். அவர்கள் கேலி செய்து கொண்டிருந்தது அவர்களைச் சுற்றி வளைக்கும்.
[அல்குர்ஆன் 45:33]
உபதேசம் : 824
﷽ உபதேசம் : 824
29-09-2023 வெள்ளிக்கிழமை
"பெண் என்பவள் மறைக்கப்பட வேண்டியவள். அவள் வெளியே செல்லும்பொழுது ஷைத்தான் அவளை அலங்கரித்துக் காட்டுகின்றான்!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) திர்மிதீ-1093
ஆதம் (அலை). ( 5 )
ஆதம் (அலை). ( 5 )
இப்லீஸ் பணிய மறுத்தான்.
وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَىٰ وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ
"ஆதமுக்குப் பணியுங்கள்!' என்று நாம் வானவர்களுக்குக் கூறிய போது இப்லீஸைத் தவிர அனைவரும் பணிந்தனர். அவனோ மறுத்துப் பெருமையடித்தான். (நம்மை) மறுப்பவனாக ஆகி விட்டான்.
திருக்குர்ஆன் 2:34
وَلَقَدْ خَلَقْنَاكُمْ ثُمَّ صَوَّرْنَاكُمْ ثُمَّ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ لَمْ يَكُن مِّنَ السَّاجِدِينَ
உங்களைப் படைத்தோம். பின்னர் உங்களை வடிவமைத்தோம். பின்னர் "ஆதமுக்குப் பணியுங்கள்!'' என்று வானவர்களுக்குக் கூறினோம். இப்லீஸைத் தவிர அனைவரும் பணிந்தனர். அவன் பணிந்தவர்களில் ஒருவனாக இல்லை.
திருக்குர்ஆன் 7:11
قَالَ لَمْ أَكُن لِّأَسْجُدَ لِبَشَرٍ خَلَقْتَهُ مِن صَلْصَالٍ مِّنْ حَمَإٍ مَّسْنُونٍ
"கருப்புக் களிமண்ணில் இருந்து மணல் கலந்த களிமண்ணில் இருந்து நீ படைத்த மனிதனுக்கு நான் பணிபவனாக இல்லை'' என்று அவன் கூறினான்.
திருக்குர்ஆன் 15:33
وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ قَالَ أَأَسْجُدُ لِمَنْ خَلَقْتَ طِينًا
"ஆதமுக்குப் பணியுங்கள்!' என்று வானவர்களுக்கு நாம் கூறிய போது இப்லீஸைத் தவிர அனைவரும் பணிந்தனர். "களிமண்ணால் நீ படைத்தவருக்குப் பணிவேனா?'' என்று அவன் கேட்டான்.
திருக்குர்ஆன் 17:61
وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَىٰ
"ஆதமுக்குப் பணியுங்கள்!'' என்று வானவர்களிடம் நாம் கூறிய போது இப்லீஸைத் தவிர அனைவரும் பணிந்தனர். அவன் மறுத்து விட்டான்.
திருக்குர்ஆன் 20:116
Thursday, September 28, 2023
நூல் புஹாரீ ஷரீப் 5989
꧁بسم الله الرحمن الرحيم꧂
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد
355 வது நாள் தொடர் ஹதீஸ்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++
ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவிக்கிறார்கள். உறவு என்பது அர்ஷை பிடித்துக் கொண்டு என்னை இழுத்து வாழ்பவரை அல்லாஹ் இணைத்துக் கொள்வான். என்னை பிரித்து விடுபவரை அல்லாஹ்வும் பிரித்து விடுவான் என்று கூறும் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
(ஆதார நூல் புஹாரீ ஷரீப் 5989)📚📚📚📚📚
உபதேசம் : 823
﷽ உபதேசம் : 823
28-09-2023 வியாழக்கிழமை
"தன் கணவா் உள்ளூரில் இருக்கும் நிலையில் அவரது அனுமதியின்றி கடமையல்லாத நோன்பு நோற்பது ஒரு பெண்ணுக்கு அனுமதிக்கப்பட்டதன்று. அவரது அனுமதியில்லாமல் யாரையும் அவரது இல்லத்திற்குள் அவள் அனுமதிக்கக்கூடாது!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி) புகாரி - 5195
குர்ஆன் வசனம் 573
﷽ குர்ஆன் வசனம் 573
28-09-2023 வியாழக்கிழமை
فَاَمَّا الَّذِيۡنَ اٰمَنُوۡا وَعَمِلُوا الصّٰلِحٰتِ فَيُدۡخِلُهُمۡ رَبُّهُمۡ فِىۡ رَحۡمَتِهٖ ؕ ذٰلِكَ هُوَ الۡفَوۡزُ الۡمُبِيۡنُ
நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்வோரை அவர்களது இறைவன் தனது அருளில் நுழைப்பான். இதுவே தெளிவான வெற்றி.
[அல்குர்ஆன் 45:30]
நூல் : முஸ்லிம்-1903 (2473)
வாழ்வில் வெற்றியடைந்தவர் யார்?
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்
யார் இஸ்லாத்தை ஏற்று போதுமான வாழ்வாதாரம் வழங்கப்பட்டு, அல்லாஹ் வழங்கியதைப் போதுமெனக் கருதினாரோ அவர் (வாழ்க்கையில்) வெற்றி பெற்று விட்டார் என்றார்கள்.
அறிவிப்பவர்:
அபூஹுரைரா ரலி
நூல் : முஸ்லிம்-1903 (2473)
ஷைத்தான் இருக்கிறான் என நம்புதல். ( 4 )
ஷைத்தான் இருக்கிறான் என நம்புதல். ( 4 )
மனிதர்களை வழிகெடுப்பான்
قَالَ فَبِمَا أَغْوَيْتَنِي لَأَقْعُدَنَّ لَهُمْ صِرَاطَكَ الْمُسْتَقِيمَ
"நீ என்னை வழிகெடுத்ததால் அவர்களுக்காக உனது நேரான பாதையில் அமர்ந்து கொள்வேன்'' என்று கூறினான்.
திருக்குர்ஆன் 7:16
ثُمَّ لَآتِيَنَّهُم مِّن بَيْنِ أَيْدِيهِمْ وَمِنْ خَلْفِهِمْ وَعَنْ أَيْمَانِهِمْ وَعَن شَمَائِلِهِمْ ۖ وَلَا تَجِدُ أَكْثَرَهُمْ شَاكِرِينَ
"பின்னர் அவர்களின் முன்னும், பின்னும், வலமும், இடமும் அவர்களிடம் வருவேன். அவர்களில் அதிகமானோரை நன்றி செலுத்துவோராக நீ காண மாட்டாய்'' (என்றும் கூறினான்).
திருக்குர்ஆன் 7:17
قَالَ أَرَأَيْتَكَ هَٰذَا الَّذِي كَرَّمْتَ عَلَيَّ لَئِنْ أَخَّرْتَنِ إِلَىٰ يَوْمِ الْقِيَامَةِ لَأَحْتَنِكَنَّ ذُرِّيَّتَهُ إِلَّا قَلِيلًا
"என்னை விட நீ சிறப்பித்த இவரைப் பற்றிக் கூறுவாயாக! கியாமத் நாள் வரை எனக்கு நீ அவகாசம் அளித்தால் சிலரைத் தவிர இவரது சந்ததிகளை வேரறுப்பேன்'' எனவும் கூறினான்.
திருக்குர்ஆன் 17:62
قَالَ اذْهَبْ فَمَن تَبِعَكَ مِنْهُمْ فَإِنَّ جَهَنَّمَ جَزَاؤُكُمْ جَزَاءً مَّوْفُورًا
"நீ போ! அவர்களில் யாரேனும் உன்னைப் பின்பற்றினால் உங்களுக்கு நரகமே கூலி. (அது) நிறைவான கூலி'' என்று (இறைவன்) கூறினான்.
திருக்குர்ஆன் 17:63
وَاسْتَفْزِزْ مَنِ اسْتَطَعْتَ مِنْهُم بِصَوْتِكَ وَأَجْلِبْ عَلَيْهِم بِخَيْلِكَ وَرَجِلِكَ وَشَارِكْهُمْ فِي الْأَمْوَالِ وَالْأَوْلَادِ وَعِدْهُمْ ۚ وَمَا يَعِدُهُمُ الشَّيْطَانُ إِلَّا غُرُورًا
உனது குரல் மூலம் அவர்களில் உனக்கு முடிந்தோரை வழிகெடுத்துக் கொள்! உனது குதிரைப் படையையும், காலாட்படையையும் அவர்களுக்கு எதிராக ஏவிக் கொள்! பொருட்செல்வத்திலும், மக்கட்செல்வத்திலும் அவர்களுடன் நீ கூட்டாளியாகிக் கொள்! அவர்களுக்கு வாக்குறுதியும் அளித்துக் கொள்! (என்றும் இறைவன் கூறினான்.) ஏமாற்றத்தைத் தவிர வேறெதனையும் ஷைத்தான் அவர்களுக்கு வாக்களிப்பதில்லை.
திருக்குர்ஆன் 17:64
Hadis Book📚 Sahih Bukhari 2697
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நம்முடைய இந்த (மார்க்க) விவகாரத்தில் அதில் இல்லாததைப் புதிதாக எவன் உண்டாக்குகிறானோ அவனுடைய அந்தப் புதுமை நிராகரிக்கப்பட்டதாகும்.
என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
رسول اللہ صلی اللہ علیہ وسلم نے فرمایا ”جس نے ہمارے دین میں از خود کوئی ایسی چیز نکالی جو اس میں نہیں تھی تو وہ رد ہے۔ اس کی روایت عبداللہ بن جعفر مخرمی اور عبدالواحد بن ابی عون نے سعد بن ابراہیم سے کی ہے۔
Narrated Aisha: Allah's Apostle said, If somebody innovates something which is not in harmony with the principles of our religion, that thing is rejected.
Hadis Book📚
Sahih Bukhari 2697
Hadis Book📚 Sahih Bukhari 2697
Rasool Allah (sal) ne Farmaya: Jis ne Hamaray deen mein Az khud koi Aisi cheez Nikaali jo is mein Nahin thi to woh radd (Rejected) hai.
Hadis Book📚
Sahih Bukhari 2697
Hadis Book📚 Sahih Bukhari 3445
இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்
'நபி(ஸல்) அவர்கள், 'கிறிஸ்தவர்கள் மர்யமின் மகன் ஈசாவை (அளவுக்கு மீறிப் புகழ்ந்து கடவுள் நிலைக்கு) உயர்த்திவிட்டதைப் போல் நீங்கள் என்னை உயர்த்தி விடாதீர்கள். ஏனெனில், நான் அல்லாஹ்வின் அடியான் தான். (அப்படி ஏதாவது என்னைப் பற்றிச் சொல்வதாயிருந்தால்) 'அல்லாஹ்வின் அடியார்' என்றும் 'இறைத்தூதர் என்றும் சொல்லுங்கள்' என்று கூறினார்கள்' என மிம்பரின் (உரை மேடை) மீதிருந்தபடி உமர்(ரலி) சொல்ல கேட்டிருக்கிறேன்.
میں نے نبی کریم صلی اللہ علیہ وسلم سے سنا، آپ صلی اللہ علیہ وسلم نے فرمایا ”مجھے میرے مرتبے سے زیادہ نہ بڑھاؤ جیسے عیسیٰ ابن مریم علیہما السلام کو نصاریٰ نے ان کے رتبے سے زیادہ بڑھا دیا ہے۔ میں تو صرف اللہ کا بندہ ہوں، اس لیے یہی کہا کرو ( میرے متعلق ) کہ میں اللہ کا بندہ اور اس کا رسول ہوں۔“
Hadis Book📚
Sahih Bukhari 3445
Hadis Book📚 Sahih Bukhari 3445
main ne Nabi Kareem (sal) se suna, Aap (sal) ne farmaya ”mujhe mere martabay se ziyada na badawo jaisay Esa Ibn maryam Alaihis salam ko Nasara ne un ke Rutbey se Ziyada bada diya hai. main to sirf Allah ka bandah hoon, is liye yehi kaha karo (mere mutaliq) ke main Allah ka bandah aur is ka Rasool hoon. “
Hadis Book📚
Sahih Bukhari 3445
Hadis Book📚 Abu Dawood 4031
ஒரு சமூகத்தினருக்கு ஒப்பாக நடப்பவர் அவர்களைச் சேர்ந்தவராவார் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
رسول اللہ صلی اللہ علیہ وسلم نے فرمایا: جس نے کسی قوم کی مشابہت اختیار کی تو وہ انہیں میں سے ہے ۔
Narrated Abdullah ibn Umar(R.a):
The Prophet (Sal) said: He who copies any people is one of them.
Hadis Book📚
Abu Dawood 4031
Wednesday, September 27, 2023
உபதேசம் : 822
﷽ உபதேசம் : 822
27-09-2023 புதன்கிழமை
"ஒவ்வொரு வியாழக்கிழமையும் திங்கட்கிழமையும் அமல்கள் (இறைவனிடம்) எடுத்துக் காட்டப் படுகின்றன. அப்பொழுது கண்ணியமும் மகத்துவம் பொருந்திய அல்லாஹ் தனக்கு இணைவைக்காத ஒவ்வொருவரையும் மன்னிக்கின்றான். ஆனால் தங்களுக்கிடையில் பகைத்துக்கொண்டிருப்போரை மன்னிப்பதில்லை. ‘இவர்கள் இருவரும் இணக்கமாகும் வரை எதிர்பாருங்கள்! இவர்கள் இருவரும் இணக்கமாகும் வரை எதிர்பாருங்கள்!’ என்று சொல்லப்படும்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி) முஸ்லிம்-4653
குர்ஆன் வசனம் 572
﷽ குர்ஆன் வசனம் 572
27-09-2023 புதன்கிழமை
قُلِ اللّٰهُ يُحۡيِيۡكُمۡ ثُمَّ يُمِيۡتُكُمۡ ثُمَّ يَجۡمَعُكُمۡ اِلٰى يَوۡمِ الۡقِيٰمَةِ لَا رَيۡبَ فِيۡهِ وَلٰكِنَّ اَكۡثَرَ النَّاسِ لَا يَعۡلَمُوۡنَ
"அல்லாஹ்வே உங்களை வாழச் செய்கிறான். பின்னர் உங்களை மரணிக்கச் செய்கிறான். பின்னர் சந்தேகம் சிறிதும் இல்லாத கியாமத் நாளில் உங்களை ஒன்று சேர்ப்பான்"
[அல்குர்ஆன் 45:26]
ஆதம் (அலை). ( 4 )
ஆதம் (அலை). ( 4 )
ஷைத்தான் வழிகெடுத்தான்.
فَأَزَلَّهُمَا الشَّيْطَانُ عَنْهَا فَأَخْرَجَهُمَا مِمَّا كَانَا فِيهِ
அவ்விருவரையும் அங்கிருந்து ஷைத்தான் அப்புறப்படுத்தினான். அவர்கள் இருந்த (உயர்ந்த) நிலையிலிருந்து அவர்களை வெளியேற்றினான்.
திருக்குர்ஆன் 2:36
فَوَسْوَسَ لَهُمَا الشَّيْطَانُ لِيُبْدِيَ لَهُمَا مَا وُورِيَ عَنْهُمَا مِن سَوْآتِهِمَا
அவ்விருவருக்கும் மறைக்கப்பட்டிருந்த வெட்கத்தலங்களைப் பற்றிப் புரிய வைப்பதற்காக ஷைத்தான் அவ்விருவருக்கும் தீய எண்ணத்தை ஏற்படுத்தினான்.
திருக்குர்ஆன் 7:20
يَا بَنِي آدَمَ لَا يَفْتِنَنَّكُمُ الشَّيْطَانُ كَمَا أَخْرَجَ أَبَوَيْكُم مِّنَ الْجَنَّةِ
ஆதமுடைய மக்களே! உங்கள் பெற்றோர் இருவரையும் ஷைத்தான் சொர்க்கத்திலிருந்து வெளியேற்றியது போல் உங்களையும் அவன் குழப்பிவிட வேண்டாம்.
திருக்குர்ஆன் 7:27
فَقُلْنَا يَا آدَمُ إِنَّ هَٰذَا عَدُوٌّ لَّكَ وَلِزَوْجِكَ فَلَا يُخْرِجَنَّكُمَا مِنَ الْجَنَّةِ فَتَشْقَىٰ
ஆதமே! இவன் உமக்கும், உமது மனைவிக்கும் எதிரியாவான். இவன் உங்களைச் சொர்க்கத்திலிருந்து வெளியேற்றிட வேண்டாம். அப்போது நீர் துர்பாக்கியசாலியாவீர்! என்று கூறினோம்.
திருக்குர்ஆன் 20:117
فَوَسْوَسَ إِلَيْهِ الشَّيْطَانُ قَالَ يَا آدَمُ هَلْ أَدُلُّكَ عَلَىٰ شَجَرَةِ الْخُلْدِ وَمُلْكٍ لَّا يَبْلَىٰ
அவரிடம் ஷைத்தான் தீய எண்ணத்தை ஏற்படுத்தினான். ஆதமே! நிலையான (வாழ்வளிக்கும்) மரத்தைப் பற்றியும், அழிவில்லா ஆட்சியைப் பற்றியும் நான் உமக்கு அறிவிக்கட்டுமா? (என்றான்.)
திருக்குர்ஆன் 20:120
ஷைத்தான் இருக்கிறான் என நம்புதல். ( 3 )
ஷைத்தான் இருக்கிறான் என நம்புதல். ( 3 )
இப்லீஸ் பணிய மறுத்தான்.
وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَىٰ وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ
"ஆதமுக்குப் பணியுங்கள்!' என்று நாம் வானவர்களுக்குக் கூறிய போது இப்லீஸைத் தவிர அனைவரும் பணிந்தனர். அவனோ மறுத்துப் பெருமையடித்தான். (நம்மை) மறுப்பவனாக ஆகி விட்டான்.
திருக்குர்ஆன் 2:34
وَلَقَدْ خَلَقْنَاكُمْ ثُمَّ صَوَّرْنَاكُمْ ثُمَّ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ لَمْ يَكُن مِّنَ السَّاجِدِينَ
உங்களைப் படைத்தோம். பின்னர் உங்களை வடிவமைத்தோம். பின்னர் "ஆதமுக்குப் பணியுங்கள்!'' என்று வானவர்களுக்குக் கூறினோம். இப்லீஸைத் தவிர அனைவரும் பணிந்தனர். அவன் பணிந்தவர்களில் ஒருவனாக இல்லை.
திருக்குர்ஆன் 7:11
فَسَجَدَ الْمَلَائِكَةُ كُلُّهُمْ أَجْمَعُونَ إِلَّا إِبْلِيسَ أَبَىٰ أَن يَكُونَ مَعَ السَّاجِدِينَ
இப்லீஸைத் தவிர வானவர்கள் அனைவரும் ஒட்டு மொத்தமாகப் பணிந்தனர். அவன் பணிந்தவனாக இருக்க மறுத்து விட்டான்.
திருக்குர்ஆன் 15:30,31
وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَىٰ
"ஆதமுக்குப் பணியுங்கள்!'' என்று வானவர்களிடம் நாம் கூறிய போது இப்லீஸைத் தவிர அனைவரும் பணிந்தனர். அவன் மறுத்து விட்டான்.
திருக்குர்ஆன் 20:116
فَسَجَدَ الْمَلَائِكَةُ كُلُّهُمْ أَجْمَعُونَ إِلَّا إِبْلِيسَ اسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ
உமது இறைவன் வானவர்களிடம் கூறிய போது இப்லீஸைத் தவிர வானவர் அனைவரும் பணிந்தனர். அவன் அகந்தை கொண்டான். (ஏகஇறைவனை) மறுப்போரில் ஆனான்.
திருக்குர்ஆன் 38:73,74
நூல் : அபூதாவூத் 4061
. 🪸🪸🪸🪸🪸🪸🪸
🔜 நபிமொழி 🔚
"யார் அல்லாஹ்விற்காக நேசிக்கிறாரோ
அல்லாஹ் விற்காக வெறுக்கிறாரோ
அல்லாஹ் விற்காக கொடுக்கிறாரோ
அல்லாஹ் விற்காக கொடுக்காமல் இருக்கிறாரோ
அவர் தனது ஈமானை முழுமையாக்கிக் கொண்டார்!"
என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூ உமாமா (ரலி)
நூல் : அபூதாவூத் 4061
நூல் : அஹ்மத் 11607
. 🔸🔸🔸🔸🔸🔸🔸🔸
🔜 நபிமொழி 🔚
அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள், முஸ்லிம்களில் ஒருவரை உடல்நலம் விசாரிப்பதற்காகச் சென்றார்கள்.
அவர் கோழிக் குஞ்சைப் போன்று நலிந்து பலவீனத்துடன் காணப்பட்டார்.
அவரிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நீ ஏதேனும் பிரார்த்தித்து வந்தாயா? அல்லது இறைவனிடம் ஏதேனும் வேண்டி வந்தாயா?” என்று கேட்டார்கள்.
அதற்கு அந்த மனிதர் “ஆம்; நான், இறைவா! நீ மறுமையில் அளிக்கவிருக்கும் தண்டனையை முன்கூட்டி இவ்வுலகிலேயே எனக்குத் தந்துவிடு என்று பிரார்த்தித்து வந்தேன்” என்று கூறினார்.
அதைக் கேட்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அல்லாஹ் தூயவன்! ‘உன்னால் அதைத் தாங்க முடியாது’ அல்லது ‘உன்னால் அதற்கு இயலாது’ என்று கூறிவிட்டு,
“எங்கள் இறைவனே! எங்களுக்கு இவ்வுலகிலும் நன்மையை(த் தருவாயாக!), மறுமையிலும் நன்மையைத் தருவாயாக! நரகத்தின் வேதனையிலிருந்து எங்களைப் பாதுகாப்பாயாக!” என்று பிரார்த்தித்திருக்கக் கூடாதா?” என்று கேட்டார்கள்.
பிறகு அவருக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தித்தார்கள்; அவருக்கு அல்லாஹ் நிவாரணத்தை வழங்கினான்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல் : அஹ்மத் 11607
Tuesday, September 26, 2023
உபதேசம் : 821
﷽ உபதேசம் : 821
26-09-2023 செவ்வாய்க்கிழமை
"கிறிஸ்தவர்கள் மர்யமின் மகன் ஈசாவை வரம்பு மீறிப் புகழ்ந்து கடவுள் நிலைக்கு உயர்த்தியதைப்போன்று நீங்கள் என்னை உயர்த்தி விடாதீர்கள்! ஏனெனில், நான் அல்லாஹ்வின் அடிமை. அப்படி ஏதாவது என்னைப் பற்றிச் சொல்வதாக இருந்தால் அல்லாஹ்வின் அடியார் என்றும் அவனுடையதூதர் என்றும் சொல்லுங்கள்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி) புகாரி-3445
குர்ஆன் வசனம் 571
﷽ குர்ஆன் வசனம் 571
26-09-2023 செவ்வாய்க்கிழமை
وَاللّٰهُ وَلِىُّ الۡمُتَّقِيۡنَ
(தன்னை) அஞ்சியோருக்கு அல்லாஹ் பொறுப்பாளன்.
[அல்குர்ஆன் 45:19]
ஷைத்தான் இருக்கிறான் என நம்புதல். ( 2 )
ஷைத்தான் இருக்கிறான் என நம்புதல். ( 2 )
ஷைத்தானுக்கு இறைவனால் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
قَالَ أَنظِرْنِي إِلَىٰ يَوْمِ يُبْعَثُونَ
"அவர்கள் உயிர்ப்பிக்கப்படும் நாள் வரை எனக்கு அவகாசம் அளிப்பாயாக!'' என்று அவன் கேட்டான்.
திருக்குர்ஆன் 7:14
قَالَ إِنَّكَ مِنَ الْمُنظَرِينَ
"நீ அவகாசம் அளிக்கப்பட்டவனாவாய்'' என்று (இறைவன்) கூறினான்.
திருக்குர்ஆன் 7:15
قَالَ رَبِّ فَأَنظِرْنِي إِلَىٰ يَوْمِ يُبْعَثُونَ
"இறைவா! அவர்கள் உயிர்ப்பிக்கப்படும் நாள் வரை எனக்கு அவகாசம் தருவாயாக!'' என்று அவன் கேட்டான்.
திருக்குர்ஆன் 15:36
قَالَ فَإِنَّكَ مِنَ الْمُنظَرِينَ إِلَىٰ يَوْمِ الْوَقْتِ الْمَعْلُومِ
"குறிப்பிட்ட நேரத்திற்கான நாள் வரை நீ அவகாசம் அளிக்கப்பட்டவன்'' என்று (இறைவன்) கூறினான்.
திருக்குர்ஆன் 15:37,38
قَالَ أَرَأَيْتَكَ هَٰذَا الَّذِي كَرَّمْتَ عَلَيَّ لَئِنْ أَخَّرْتَنِ إِلَىٰ يَوْمِ الْقِيَامَةِ لَأَحْتَنِكَنَّ ذُرِّيَّتَهُ إِلَّا قَلِيلًا
"என்னை விட நீ சிறப்பித்த இவரைப் பற்றிக் கூறுவாயாக! கியாமத் நாள் வரை எனக்கு நீ அவகாசம் அளித்தால் சிலரைத் தவிர இவரது சந்ததிகளை வேரறுப்பேன்'' எனவும் கூறினான்.
திருக்குர்ஆன் 17:62
குர்ஆன் வசனம் 570
﷽ குர்ஆன் வசனம் 570
25-09-2023 திங்கட்கிழமை
وَسَخَّرَ لَـكُمۡ مَّا فِى السَّمٰوٰتِ وَمَا فِى الۡاَرۡضِ جَمِيۡعًا مِّنۡهُ ؕ اِنَّ فِىۡ ذٰلِكَ لَاٰيٰتٍ لِّقَوۡمٍ يَّتَفَكَّرُوۡنَ
வானங்களில் உள்ளவை, பூமியில் உள்ளவை அனைத்தையும் அவன் உங்களுக்குப் பயன்படச் செய்தான். சிந்திக்கும் சமுதாயத்திற்கு இதில் பல சான்றுகள் உள்ளன.
[அல்குர்ஆன் 45:13]
உபதேசம் : 820
﷽ உபதேசம் : 820
25-09-2023 திங்கட்கிழமை
" என்னுடைய சமுதாயத்தில் 30 பொய்யர்கள் தோன்றுவார்கள்! ஒவ்வொருவரும் தான் நபி என்று வாதிடுவார்கள்! நான்தான் நபிமார்களில் முத்திரையானவன். எனக்குப் பிறகு எந்த நபியும் கிடையாது!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் ஸவ்பான் (ரலி) திர்மிதீ-2145
நூல் :இஜாபதுஸ் ஸாயில் 271
நபி (ஸல் ) அவர்களின் பிறந்த நாளைக் கொண்டாடியது யார்?
நபி (ஸல் ) அவர்கள் : இல்லை
👉அபூ பக்கர் அஸ் ஸித்தீக் (ரழி )
அவர்கள் : இல்லை
👉 உமர் பின் கத்தாப் (ரழி ) அவர்கள் :
இல்லை
👉உஸ்மான் பின் அப்ஃபான் (ரழி )
அவர்கள் : இல்லை
👉அலி பின் அபீ தாலிப் (ரழி ) அவர்கள் :
இல்லை
👉ஏனைய நபித்தோழர்கள் : இல்லை
💚 இமாம் அபூ ஹனீபா (ரஹ்மத்துல்லாஹி) அவர்கள் ஹிஜ்ரி 150 : இல்லை
💚இமாம் மாலிக் (ரஹ்மத்துல்லாஹி ) அவர்கள் ஹிஜ்ரி 170 : இல்லை
💚இமாம் ஷாபிஈ (ரஹ்மத்துல்லாஹி ) அவர்கள் ஹிஜ்ரி 204 : இல்லை
💚இமாம் அஹ்மத் (ரஹ்மத்துல்லாஹி ) அவர்கள் ஹிஜ்ரி 241: இல்லை
❤️இமாம் புஹாரி (ரஹ்மத்துல்லாஹி ) அவர்கள் ஹிஜ்ரி 256 : இல்லை
❤️இமாம் முஸ்லிம் (ரஹ்மத்துல்லாஹி ) அவர்கள் ஹிஜ்ரி 261: இல்லை
❤️இமாம் அபூ தாவூத் (ரஹ்மத்துல்லாஹி) அவர்கள் ஹிஜ்ரி 275: இல்லை
❤️இமாம் திர்மிதி (ரஹ்மத்துல்லாஹி ) அவர்கள் ஹிஜ்ரி 279 : இல்லை
❤️இமாம் நஸாஈ (ரஹ்மத்துல்லாஹி ) அவர்கள் ஹிஜ்ரி 303:இல்லை
🤔உபைதிய்யா ஷீஆ ஆட்சியில் (நான்காம் நூற்றாண்டில் ): #ஆம்
பிறப்பைக் கொண்டாடுவது மொராக்கோவில் உள்ள உபைதிகளால் கொண்டுவரப்பட்டது, அதன் பூர்வீகம் யூதர்கள், பின்னர் அவர்கள் தாங்கள் அஹ்லு பைத்தின் சந்ததியினர் என்றும், அவர்கள் இஸ்மாயில் பின் ஜஃபருடன் தொடர்புடையவர்கள் என்றும் கூறினர், பின்னர் முட்டாள்கள் அவர்களைப் பின்தொடர்ந்தனர்.
(நூல் :இஜாபதுஸ் ஸாயில் 271)
அல்லாமா முக்பில் அல்வாதி ரஹ்மத்துல்லாஹி அவர்கள்.
Sunday, September 24, 2023
ஷைத்தான் இருக்கிறான் என நம்புதல். ( 1 )
ஷைத்தான் இருக்கிறான் என நம்புதல். ( 1 )
இப்லீஸ் நெருப்பால் படைக்கப்பட்டவன்.
قَالَ مَا مَنَعَكَ أَلَّا تَسْجُدَ إِذْ أَمَرْتُكَ ۖ قَالَ أَنَا خَيْرٌ مِّنْهُ خَلَقْتَنِي مِن نَّارٍ وَخَلَقْتَهُ مِن طِينٍ
"நான் உனக்குக் கட்டளையிட்ட போது பணிவதை விட்டும் உன்னைத் தடுத்தது எது?'' என்று (இறைவன்) கேட்டான். "நான் அவரை விடச் சிறந்தவன். என்னை நீ நெருப்பால் படைத்தாய்! அவரைக் களிமண்ணால் படைத்தாய்!'' என்று கூறினான்.
திருக்குர்ஆன் 7:12
وَالْجَانَّ خَلَقْنَاهُ مِن قَبْلُ مِن نَّارِ السَّمُومِ
கடுமையான வெப்பமுடைய நெருப்பால் இதற்கு முன் ஜின்னைப் படைத்தோம்.
திருக்குர்ஆன் 15:27
وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ قَالَ أَأَسْجُدُ لِمَنْ خَلَقْتَ طِينًا
"ஆதமுக்குப் பணியுங்கள்!' என்று வானவர்களுக்கு நாம் கூறிய போது இப்லீஸைத் தவிர அனைவரும் பணிந்தனர். "களிமண்ணால் நீ படைத்தவருக்குப் பணிவேனா?'' என்று அவன் கேட்டான்.
திருக்குர்ஆன் 17:61
قَالَ أَنَا خَيْرٌ مِّنْهُ ۖ خَلَقْتَنِي مِن نَّارٍ وَخَلَقْتَهُ مِن طِينٍ
"நான் அவரை விடச் சிறந்தவன். என்னை நெருப்பால் நீ படைத்தாய். அவரைக் களிமண்ணால் படைத்தாய்'' என்று அவன் கூறினான்.
திருக்குர்ஆன் 38:76
وَخَلَقَ الْجَانَّ مِن مَّارِجٍ مِّن نَّارٍ
தீப்பிழம்பிலிருந்து ஜின்னைப் படைத்தான்.
திருக்குர்ஆன் 55:15
ஆதம் (அலை). ( 3 )
ஆதம் (அலை). ( 3 )
வானவர்கள் பணிந்தனர்.
وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَىٰ وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ
"ஆதமுக்குப் பணியுங்கள்!' என்று நாம் வானவர்களுக்குக் கூறிய போது இப்லீஸைத் தவிர அனைவரும் பணிந்தனர். அவனோ மறுத்துப் பெருமையடித்தான். (நம்மை) மறுப்பவனாக ஆகி விட்டான்.
திருக்குர்ஆன் 2:34
وَلَقَدْ خَلَقْنَاكُمْ ثُمَّ صَوَّرْنَاكُمْ ثُمَّ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ لَمْ يَكُن مِّنَ السَّاجِدِينَ
உங்களைப் படைத்தோம். பின்னர் உங்களை வடிவமைத்தோம். பின்னர் "ஆதமுக்குப் பணியுங்கள்!'' என்று வானவர்களுக்குக் கூறினோம். இப்லீஸைத் தவிர அனைவரும் பணிந்தனர். அவன் பணிந்தவர்களில் ஒருவனாக இல்லை.
திருக்குர்ஆன் 7:11
فَإِذَا سَوَّيْتُهُ وَنَفَخْتُ فِيهِ مِن رُّوحِي فَقَعُوا لَهُ سَاجِدِينَ
"அவரை நான் சீர்படுத்தி எனது உயிரை அவருக்குள் நான் ஊதும் போது, அவருக்குப் பணிந்து விழுங்கள்!'' (என்று கூறினான்)
திருக்குர்ஆன் 15:29
إِلَّا إِبْلِيسَ أَبَىٰ أَن يَكُونَ مَعَ السَّاجِدِينَ
இப்லீஸைத் தவிர வானவர்கள் அனைவரும் ஒட்டு மொத்தமாகப் பணிந்தனர். அவன் பணிந்தவனாக இருக்க மறுத்து விட்டான்.
திருக்குர்ஆன் 15:31
وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَىٰ
"ஆதமுக்குப் பணியுங்கள்!'' என்று வானவர்களிடம் நாம் கூறிய போது இப்லீஸைத் தவிர அனைவரும் பணிந்தனர். அவன் மறுத்து விட்டான்.
திருக்குர்ஆன் 20:116
உபதேசம் : 819
﷽ உபதேசம் : 819
24-09-2023 ஞாயிற்றுக்கிழமை
"யார் அல்லாஹ் அல்லாதவர்களுக்காக அறுத்து பலயிடுகிறாரோ அவரை அல்லாஹ் சபிக்கின்றான்!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்..
அறிவிப்பவர் : அலீ (ரலி) முஸ்லிம்-4001
குர்ஆன் வசனம் 569
﷽ குர்ஆன் வசனம் 569
24-09-2023 ஞாயிற்றுக்கிழமை
اَللّٰهُ الَّذِىۡ سَخَّرَ لَـكُمُ الۡبَحۡرَ لِتَجۡرِىَ الۡفُلۡكُ فِيۡهِ بِاَمۡرِهٖ وَلِتَبۡتَغُوۡا مِنۡ فَضۡلِهٖ وَلَعَلَّكُمۡ تَشۡكُرُوۡنَۚ
நீங்கள் அவனது அருளைத் தேடவும், நன்றி செலுத்திடவும் கடலை அல்லாஹ்வே உங்களுக்குப் பயன்படச் செய்தான்.
[அல்குர்ஆன் 45:12]
Saturday, September 23, 2023
குர்ஆன் வசனம் 568
﷽ குர்ஆன் வசனம் 568
23-09-2023 சனிக்கிழமை
وَيۡلٌ لِّـكُلِّ اَفَّاكٍ اَثِيۡمٍۙ
இட்டுக்கட்டும் ஒவ்வொரு பாவிக்கும் கேடு தான்.
[அல்குர்ஆன் 45:7]
உபதேசம் : 818
﷽ உபதேசம் : 818
23-09-2023 சனிக்கிழமை
நபி (ஸல்) அவர்கள், "பால் தரும் ஆட்டை அறுக்கவேண்டாம்!" என்று எச்சரிக்கை செய்தார்கள்.
அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி) முஸ்லிம்-4143
குர்ஆன் வசனம் 567
﷽ குர்ஆன் வசனம் 567
22-09-2023 வெள்ளிக்கிழமை
اِنَّ الۡمُتَّقِيۡنَ فِىۡ مَقَامٍ اَمِيۡنٍۙ فِىۡ جَنّٰتٍ وَّعُيُوۡنٍ
(இறைவனை) அஞ்சியோர் பாதுகாப்பான இடத்திலும், சொர்க்கச் சோலைகளிலும், நீர் ஊற்றுகளிலும் இருப்பார்கள்.
[அல்குர்ஆன் 44:51-52]
உபதேசம் : 817
﷽ உபதேசம் : 817
22-09-2023 வெள்ளிக்கிழமை
மாதத்தின் வெள்ளை நாட்கள் என்றழைக்கப்படும் பிறை 13,14 மற்றும் 15 ஆகிய மூன்று நாட்கள் நோன்பு நோற்குமாறு நபி (ஸல்) அவர்கள் எங்களுக்குக் கட்டளையிட்டார்கள்.
அறிவிப்பவர் : அபூதர் (ரலி) நஸயீ - 692
Thursday, September 21, 2023
மூடநம்பிக்கை. ( 5 )
மூடநம்பிக்கை. ( 5 )
குறி, ஜோதிடம், சூதாட்டம்.
يَسْأَلُونَكَ عَنِ الْخَمْرِ وَالْمَيْسِرِ ۖ قُلْ فِيهِمَا إِثْمٌ كَبِيرٌ وَمَنَافِعُ لِلنَّاسِ وَإِثْمُهُمَا أَكْبَرُ مِن نَّفْعِهِمَا
மது மற்றும் சூதாட்டம் பற்றி உம்மிடம் கேட்கின்றனர். "அவ்விரண்டிலும் பெரும் கேடும், மக்களுக்குச் சில பயன்களும் உள்ளன. அவ்விரண்டின் பயனை விட கேடு இவ்வுலகிலும், மறுமையிலும் மிகப் பெரியது'' எனக் கூறுவீராக!
திருக்குர்ஆன் 2:219
وَمَا ذُبِحَ عَلَى النُّصُبِ وَأَن تَسْتَقْسِمُوا بِالْأَزْلَامِ ۚ ذَٰلِكُمْ فِسْقٌ
பலி பீடங்களில் அறுக்கப்பட்டவையும், அம்புகள் மூலம் குறி கேட்பதும் (உங்களுக்குத் தடை செய்யப்பட்டுள்ளன.) இவை குற்றமாகும்.
திருக்குர்ஆன் 5:3
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِنَّمَا الْخَمْرُ وَالْمَيْسِرُ وَالْأَنصَابُ وَالْأَزْلَامُ رِجْسٌ مِّنْ عَمَلِ الشَّيْطَانِ فَاجْتَنِبُوهُ لَعَلَّكُمْ تُفْلِحُونَ
நம்பிக்கை கொண்டோரே! மது சூதாட்டம், பலிபீடங்கள், (குறி கேட்பதற்கான) அம்புகள் ஆகியவை அருவருப்பானதும், ஷைத்தானின் நடவடிக்கையுமாகும். எனவே இதிலிருந்து விலகிக் கொள்ளுங்கள்! வெற்றி பெறுவீர்கள்!
திருக்குர்ஆன் 5:90
إِنَّمَا يُرِيدُ الشَّيْطَانُ أَن يُوقِعَ بَيْنَكُمُ الْعَدَاوَةَ وَالْبَغْضَاءَ فِي الْخَمْرِ وَالْمَيْسِرِ وَيَصُدَّكُمْ عَن ذِكْرِ اللَّهِ وَعَنِ الصَّلَاةِ ۖ فَهَلْ أَنتُم مُّنتَهُونَ
மது, மற்றும் சூதாட்டம் மூலம் உங்களுக்கிடையே பகைமையையும், வெறுப்பையும் ஏற்படுத்தவும், அல்லாஹ்வின் நினைவை விட்டும், தொழுகையை விட்டும் உங்களைத் தடுக்கவுமே ஷைத்தான் விரும்புகிறான். எனவே விலகிக் கொள்ள மாட்டீர்களா?
திருக்குர்ஆன் 5:91
وَلِلَّهِ غَيْبُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ ۚ وَمَا أَمْرُ السَّاعَةِ إِلَّا كَلَمْحِ الْبَصَرِ أَوْ هُوَ أَقْرَبُ ۚ إِنَّ اللَّهَ عَلَىٰ كُلِّ شَيْءٍ قَدِيرٌ
வானங்களிலும், பூமியிலும் மறைவானவை அல்லாஹ்வுக்கே உரியன. யுகமுடிவு நேரம் எனும் நிகழ்ச்சி கண்மூடித் திறப்பது போல் அல்லது அதை விடக் குறைவான நேரத்தில் நடந்து விடும். அல்லாஹ் ஒவ்வொரு பொருளின் மீதும் ஆற்றலுடையவன்.
திருக்குர்ஆன் 16:77
குர்ஆன் வசனம் 566
﷽ குர்ஆன் வசனம் 566
21-09-2023 வியாழக்கிழமை
اِنَّ يَوۡمَ الۡفَصۡلِ مِيۡقَاتُهُمۡ اَجۡمَعِيۡنَۙ
தீர்ப்பு நாள் தான் அவர்கள் அனைவருக்கும் (எச்சரிக்கப்பட்ட) நேரம்.
[அல்குர்ஆன் 44:40]
உபதேசம் : 816
﷽ உபதேசம் : 816
21-09-2023 வியாழக்கிழமை
நபி (ஸல்) அவர்களின் காலத்தில் ஒரு சந்தர்ப்பத்தில் சொல்லப்படும் மூன்று தலாக்குகளும் ஒரு தலாக்காகவே கருதப்பட்டது.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி) முஸ்லிம்-2932
Wednesday, September 20, 2023
குர்ஆன் வசனம் 565
﷽ குர்ஆன் வசனம் 565
20-09-2023 புதன்கிழமை
وَمَا خَلَقۡنَا السَّمٰوٰتِ وَالۡاَرۡضَ وَمَا بَيۡنَهُمَا لٰعِبِيۡنَ
வானங்களையும், பூமியையும், அவற்றுக்கு இடைப்பட்டவற்றையும் விளையாட்டுக்காக நாம் படைக்கவில்லை.
[அல்குர்ஆன் 44:38]
உபதேசம் : 815
﷽ உபதேசம் : 815
20-09-2023 புதன்கிழமை
"குர்பானி இறைச்சியிலிருந்து உண்ணுங்கள்! சேமித்துக் கொள்ளுங்கள்! தர்மம் செய்யுங்கள்!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் வாகித் (ரலி) முஸ்லிம் - 3986
Tuesday, September 19, 2023
உபதேசம் : 814
﷽ உபதேசம் : 814
19-09-2023 செவ்வாய்க்கிழமை
(குா்பானி) பலியிடும் பிராணியின் சேணத்தையும் தோலையும் தர்மம் செய்து விடவேண்டுமென நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள்.
அறிவிப்பவர் : அலீ (ரலி) புகாரி - 1707
குர்ஆன் வசனம் 564
﷽ குர்ஆன் வசனம் 564
19-09-2023 செவ்வாய்க்கிழமை
وَّاَنۡ لَّا تَعۡلُوۡا عَلَى اللّٰهِۚ اِنِّىۡۤ اٰتِيۡكُمۡ بِسُلۡطٰنٍ مُّبِيۡنٍۚ
அல்லாஹ்வுக்கு எதிராக ஆணவம் கொள்ளாதீர்கள்! நான் உங்களிடம் தெளிவான சான்றைக் கொண்டு வருபவன்.
[அல்குர்ஆன் 44:19]
Monday, September 18, 2023
உபதேசம் : 813
﷽ உபதேசம் : 813
18-09-2023 திங்கட்கிழமை
"தன் சகோதரனின் கண்ணியம் குலைக்கப்படுவதைக்கண்டு அதை யார் தடுக்கின்றாரோ அவர் முகத்தை அல்லாஹ் மறுமையில் நரகத்தை விட்டு திருப்பி விடுவான்!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூ தர்தா (ரலி) திர்மிதீ - 1931
குர்ஆன் வசனம் 563
﷽ குர்ஆன் வசனம் 563
18-09-2023 திங்கட்கிழமை
اِنَّ الۡمُجۡرِمِيۡنَ فِىۡ عَذَابِ جَهَنَّمَ خٰلِدُوۡنَ
குற்றவாளிகள் நரக வேதனையில் நிரந்தரமாக இருப்பார்கள்.
[அல்குர்ஆன் 43:74]
Sunday, September 17, 2023
உபதேசம் : 812
﷽ உபதேசம் : 812
17-09-2023 ஞாயிற்றுக்கிழமை
நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் ஒரு பிரயாணத்தில் இருந்த நிலையில் ஹஜ்ஜுப் பெருநாள் வந்தது. அப்பொழுது ஒரு மாட்டில் 7 நபா்களும் ஒரு ஒட்டகத்தில் 10 நபா்களும் கூட்டு சேர்ந்து குா்பானி கொடுத்தோம்.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி) திர்மிதீ:1421
குர்ஆன் வசனம் 562
﷽ குர்ஆன் வசனம் 562
17-09-2023 ஞாயிற்றுக்கிழமை
فَاسۡتَمۡسِكۡ بِالَّذِىۡۤ اُوۡحِىَ اِلَيۡكَ ۚ اِنَّكَ عَلٰى صِرَاطٍ مُّسۡتَقِيۡمٍ
உமக்கு அறிவிக்கப்படுவதைப் பற்றிக் கொள்வீராக! நீர் நேரான பாதையில் இருக்கிறீர்.
[அல்குர்ஆன் 43:43]
ஆதம் (அலை). ( 2 )
ஆதம் (அலை). ( 2 )
அவரிலிருந்து அவரது பெண்துணையை இறைவன் படைத்தான்.
يَا أَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُم مِّن نَّفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا
மனிதர்களே! உங்களை ஒரே ஒருவரிலிருந்து படைத்த உங்கள் இறைவனை அஞ்சுங்கள்! அவரிலிருந்து அவரது துணையைப் படைத்தான்.
திருக்குர்ஆன் 4:1
هُوَ الَّذِي خَلَقَكُم مِّن نَّفْسٍ وَاحِدَةٍ وَجَعَلَ مِنْهَا زَوْجَهَا لِيَسْكُنَ إِلَيْهَا
"அவனே உங்களை ஒரே ஒருவரிலிருந்து படைத்தான். அவரிலிருந்து அவரது துணைவியை அவளிடம் அவர் மனஅமைதி பெறுவதற்காகப் படைத்தான்.
திருக்குர்ஆன் 7:189
خَلَقَكُم مِّن نَّفْسٍ وَاحِدَةٍ ثُمَّ جَعَلَ مِنْهَا زَوْجَهَا
உங்களை ஒரே ஒருவரிலிருந்து அவன் படைத்தான். பின்னர் அவரிலிருந்து அவரதுஜோடியைப் படைத்தான்.
திருக்குர்ஆன் 39:6
ஆதம் (அலை) ஜோடி.
وَقُلْنَا يَا آدَمُ اسْكُنْ أَنتَ وَزَوْجُكَ الْجَنَّةَ وَكُلَا مِنْهَا رَغَدًا حَيْثُ شِئْتُمَا وَلَا تَقْرَبَا هَٰذِهِ الشَّجَرَةَ فَتَكُونَا مِنَ الظَّالِمِينَ
"ஆதமே! நீயும், உன் மனைவியும் இந்த சொர்க்கத்தில் குடியிருங்கள்! இருவரும் விரும்பியவாறு தாராளமாக இதில் உண்ணுங்கள்! இந்த மரத்தை (மட்டும்) நெருங்காதீர்கள்! (நெருங்கினால்) அநீதி இழைத்தோராவீர்' என்று நாம் கூறினோம்.
திருக்குர்ஆன் 2:35
وَيَا آدَمُ اسْكُنْ أَنتَ وَزَوْجُكَ الْجَنَّةَ فَكُلَا مِنْ حَيْثُ شِئْتُمَا وَلَا تَقْرَبَا هَٰذِهِ الشَّجَرَةَ فَتَكُونَا مِنَ الظَّالِمِينَ
"ஆதமே! நீயும் உமது மனைவியும் இந்தச் சொர்க்கத்தில் தங்குங்கள்! விரும்பியவாறு இருவரும் உண்ணுங்கள்! இந்த மரத்தை நெருங்காதீர்கள்! (நெருங்கினால்) இருவரும் அநீதி இழைத்தவர்களாகி விடுவீர்கள்'' (என்றும் கூறினான்)
திருக்குர்ஆன் 7:19
Saturday, September 16, 2023
குர்ஆன் வசனம் 561
﷽ குர்ஆன் வசனம் 561
16-09-2023 சனிக்கிழமை
وَمَنۡ يَّعۡشُ عَنۡ ذِكۡرِ الرَّحۡمٰنِ نُقَيِّضۡ لَهٗ شَيۡطٰنًا فَهُوَ لَهٗ قَرِيۡنٌ
எவர் அளவற்ற அருளாளனின் அறிவுரையைப் புறக்கணிக்கிறாரோ அவருக்கு ஒரு ஷைத்தானைச் சாட்டுவோம். அவன் அவருக்குத் தோழனாவான்.
[அல்குர்ஆன் 43:36]
உபதேசம் : 811
﷽ உபதேசம் : 811
16-09-2023 சனிக்கிழமை
"கணவனுக்கு எதிரான கருத்துக்களை மனைவியிடம் கூறி பிரச்சனையை ஏற்படுத்துபவன் நம்மைச் சார்ந்தவன் அல்லன்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி) அபூதாவூத் - 1860
அல் குர்ஆன் : 1️⃣0️⃣ : 8️⃣5️⃣,8️⃣6️⃣
🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻
து ஆ
رَبَّنَا لَا تَجْعَلْنَا فِتْنَةً لِّـلْقَوْمِ الظّٰلِمِيْنَۙ⭘ وَنَجِّنَا بِرَحْمَتِكَ مِنَ الْقَوْمِ الْكٰفِرِيْنَ⭘
“நாங்கள் அல்லாஹ்வின்மீதே நம்பிக்கை வைத்துள்ளோம். எங்கள் இறைவனே! அநியாயக்காரக் கூட்டத்தின் மூலம் சோதிக்கப்படுவோராக எங்களை ஆக்கி விடாதே! இறைமறுப்பாளர்களின் கூட்டத்தாரிடமிருந்து உன் அருளால் எங்களைக் காப்பாற்றுவாயாக”
அல் குர்ஆன் : 1️⃣0️⃣ : 8️⃣5️⃣,8️⃣6️⃣
💚💚💚💚
ஆதம் (அலை). ( 1 )
ஆதம் (அலை). ( 1 )
ஆதம் (அலை) மண்ணால் படைக்கப்பட்டார்.
إِنَّ مَثَلَ عِيسَىٰ عِندَ اللَّهِ كَمَثَلِ آدَمَ ۖ خَلَقَهُ مِن تُرَابٍ ثُمَّ قَالَ لَهُ كُن فَيَكُونُ
அல்லாஹ்விடம் ஈஸாவுக்கு உதாரணம் ஆதம் ஆவார். அவரை மண்ணால் படைத்து "ஆகு' என்று அவரிடம் கூறினான். உடனே அவர் ஆகி விட்டார்.
திருக்குர்ஆன் 3:59
وَلَقَدْ خَلَقْنَا الْإِنسَانَ مِن صَلْصَالٍ مِّنْ حَمَإٍ مَّسْنُونٍ
கருப்புக் களிமண்ணில் இருந்து மணல் கலந்த களிமண்ணில் இருந்து மனிதனைப் படைத்தோம்.
திருக்குர்ஆன் 15:26
وَلَقَدْ خَلَقْنَا الْإِنسَانَ مِن سُلَالَةٍ مِّن طِينٍ
களிமண்ணின் சத்திலிருந்து மனிதனைப் படைத்தோம்.
திருக்குர்ஆன் 23:12
الَّذِي أَحْسَنَ كُلَّ شَيْءٍ خَلَقَهُ ۖ وَبَدَأَ خَلْقَ الْإِنسَانِ مِن طِينٍ
அவன் ஒவ்வொரு பொருளின் படைப்பையும் அழகுபடுத்தினான். மனிதனின் படைப்பைக் களிமண்ணிலிருந்து துவக்கினான்.
திருக்குர்ஆன் 32:7
فَاسْتَفْتِهِمْ أَهُمْ أَشَدُّ خَلْقًا أَم مَّنْ خَلَقْنَا ۚ إِنَّا خَلَقْنَاهُم مِّن طِينٍ لَّازِبٍ
இவர்கள் வலிமையான படைப்பா? அல்லது நாம் படைத்த(மற்ற)வைகளா? என்பதை இவர்களிடம் கேட்பீராக! இவர்களைப் பிசுபிசுப்பான களிமண்ணால் நாம் படைத்தோம்.
திருக்குர்ஆன் 37:11
إِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي خَالِقٌ بَشَرًا مِّن طِينٍ
"களிமண்ணால் மனிதனைப் படைக்கப் போகிறேன். என்று உமது இறைவன் வானவர்களிடம் கூறிய போது,
திருக்குர்ஆன் 38:71
خَلَقَ الْإِنسَانَ مِن صَلْصَالٍ كَالْفَخَّارِ
மண்பாண்டம் போல் சுட்ட களிமண்ணால் மனிதனைப் படைத்தான்.
திருக்குர்ஆன் 55:14
உபதேசம் : 810
﷽ உபதேசம் : 810
15-09-2023 வெள்ளிக்கிழமை
"மீசையைக் கத்தரிப்பது இயற்கை மரபில் அடங்கும்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி) புகாரி - 5888
குர்ஆன் வசனம் 560
﷽ குர்ஆன் வசனம் 560
15-09-2023 வெள்ளிக்கிழமை
نَحۡنُ قَسَمۡنَا بَيۡنَهُمۡ مَّعِيۡشَتَهُمۡ فِى الۡحَيٰوةِ الدُّنۡيَا وَرَفَعۡنَا بَعۡضَهُمۡ فَوۡقَ بَعۡضٍ دَرَجٰتٍ لِّيَـتَّخِذَ بَعۡضُهُمۡ بَعۡضًا سُخۡرِيًّا ؕ وَرَحۡمَتُ رَبِّكَ خَيۡرٌ مِّمَّا يَجۡمَعُوۡنَ
வாழ்க்கை வசதிகளை நாமே பங்கிடுகிறோம். அவர்களில் ஒருவர் மற்றவரைப் பணியாளராக ஆக்குவதற்காகச் சிலரை விட சிலரின் தகுதிகளை உயர்த்தினோம். அவர்கள் திரட்டுவதை விட உமது இறைவனின் அருள் சிறந்தது.
[அல்குர்ஆன் 43:32]
மூடநம்பிக்கை. ( 4 )
மூடநம்பிக்கை. ( 4 )
மூட நம்பிக்கை ஷைத்தான் வேலை.
لَّعَنَهُ اللَّهُ ۘ وَقَالَ لَأَتَّخِذَنَّ مِنْ عِبَادِكَ نَصِيبًا مَّفْرُوضًا وَلَأُضِلَّنَّهُمْ وَلَأُمَنِّيَنَّهُمْ وَلَآمُرَنَّهُمْ فَلَيُبَتِّكُنَّ آذَانَ الْأَنْعَامِ وَلَآمُرَنَّهُمْ فَلَيُغَيِّرُنَّ خَلْقَ اللَّه
அல்லாஹ் அவனை (ஷைத்தானை) சபித்து விட்டான். "உன் அடியார்களில் குறிப்பிட்ட தொகையினரை வென்றெடுப்பேன்; அவர்களை வழிகெடுப்பேன்; அவர்களுக்கு(த் தவறான) ஆசை வார்த்தை கூறுவேன்; அவர்களுக்குக் கட்டளையிடுவேன்; அவர்கள் கால்நடைகளின் காதுகளை அறுப்பார்கள். (மீண்டும்) அவர்களுக்குக் கட்டளையிடுவேன்; அல்லாஹ் வடிவமைத்ததை அவர்கள் மாற்றுவார்கள்.
திருக்குர்ஆன் 4:118,119
وَمِنَ الْأَنْعَامِ حَمُولَةً وَفَرْشًا ۚ كُلُوا مِمَّا رَزَقَكُمُ اللَّهُ وَلَا تَتَّبِعُوا خُطُوَاتِ الشَّيْطَانِ ۚ إِنَّهُ لَكُمْ عَدُوٌّ مُّبِينٌ
கால்நடைகளில் சுமப்பவற்றையும், சுமக்காதவற்றையும் (அவன் படைத்தான்). அல்லாஹ் உங்களுக்கு வழங்கியதிலிருந்து உண்ணுங்கள்! ஷைத்தானின் அடிச்சுவடுகளைப் பின்பற்றாதீர்கள்! அவன் உங்களுக்குப் பகிரங்க எதிரியாவான்.
திருக்குர்ஆன் 6:142
وَاسْتَفْزِزْ مَنِ اسْتَطَعْتَ مِنْهُم بِصَوْتِكَ وَأَجْلِبْ عَلَيْهِم بِخَيْلِكَ وَرَجِلِكَ وَشَارِكْهُمْ فِي الْأَمْوَالِ وَالْأَوْلَادِ وَعِدْهُمْ ۚ وَمَا يَعِدُهُمُ الشَّيْطَانُ إِلَّا غُرُورًا
உனது குரல் மூலம் அவர்களில் உனக்கு முடிந்தோரை வழிகெடுத்துக் கொள்! உனது குதிரைப் படையையும், காலாட்படையையும் அவர்களுக்கு எதிராக ஏவிக் கொள்! பொருட்செல்வத்திலும், மக்கட்செல்வத்திலும் அவர்களுடன் நீ கூட்டாளியாகிக் கொள்! அவர்களுக்கு வாக்குறுதியும் அளித்துக் கொள்! (என்றும் இறைவன் கூறினான்.) ஏமாற்றத்தைத் தவிர வேறெதனையும் ஷைத்தான் அவர்களுக்கு வாக்களிப்பதில்லை.
திருக்குர்ஆன் 17:64
கோலத்தை மாற்றுவது ஷைத்தான் வேலை.
وَلَأُمَنِّيَنَّهُمْ وَلَآمُرَنَّهُمْ فَلَيُبَتِّكُنَّ آذَانَ الْأَنْعَامِ وَلَآمُرَنَّهُمْ فَلَيُغَيِّرُنَّ خَلْقَ اللَّهِ
அவர்களுக்கு(த் தவறான) ஆசை வார்த்தை கூறுவேன்;
அவர்களுக்குக் கட்டளையிடுவேன்; அவர்கள் கால்நடைகளின் காதுகளை அறுப்பார்கள். (மீண்டும்) அவர்களுக்குக் கட்டளையிடுவேன்; அல்லாஹ் வடிவமைத்ததை அவர்கள் மாற்றுவார்கள்.
திருக்குர்ஆன் 4:119
திருவுளச்சீட்டு.
وَمَا ذُبِحَ عَلَى النُّصُبِ وَأَن تَسْتَقْسِمُوا بِالْأَزْلَامِ ۚ ذَٰلِكُمْ فِسْقٌ
பலி பீடங்களில்
அறுக்கப்பட்டவையும், அம்புகள் மூலம் குறி கேட்பதும் (உங்களுக்குத் தடை செய்யப்பட்டுள்ளன.) இவை குற்றமாகும்.
திருக்குர்ஆன் 5:3
Thursday, September 14, 2023
உபதேசம் : 809
﷽ உபதேசம் : 809
14-09-2023 வியாழக்கிழமை
"மற்றவர்களுடைய பொருள்களை) அபகரிப்பவன் என்னைச் சார்ந்தவன் அல்லன்!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) திர்மிதீ-1042
குர்ஆன் வசனம் 559
﷽ குர்ஆன் வசனம் 559
14-09-2023 வியாழக்கிழமை
اِنَّ الۡاِنۡسَانَ لَـكَفُوۡرٌ مُّبِيۡنٌ
மனிதன் தெளிவான நன்றி கெட்டவன்.
[அல்குர்ஆன் 43:15]
Wednesday, September 13, 2023
குர்ஆன் வசனம் 558
﷽ குர்ஆன் வசனம் 558
13-09-2023 புதன்கிழமை
وَمَنۡ يُّضۡلِلِ اللّٰهُ فَمَا لَهٗ مِنۡ سَبِيۡلٍؕ
அல்லாஹ் யாரை வழிகேட்டில் விட்டு விட்டானோ அவனுக்கு எந்த வழியும் இல்லை.
[அல்குர்ஆன் 42:46]
உபதேசம் : 808
﷽ உபதேசம் : 808
13-09-2023 புதன்கிழமை
"எனக்காக ஒருவருக்கொருவர் நேசித்துக் கொள்பவர்களுக்கும் எனக்காக அமர்பவர்களுக்கும் எனக்காக போட்டி போட்டுக் கொண்டு செலவு செய்பவர்களுக்கும் எனது பிரியம் உறுதியாகிவிட்டது!" என்று அல்லாஹ் கூறுவதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : முஆத் (ரலி) அஹ்மத்-1114
Tuesday, September 12, 2023
குர்ஆன் வசனம் 557
﷽ குர்ஆன் வசனம் 557
12-09-2023 செவ்வாய்க்கிழமை
وَلَمَنۡ صَبَرَ وَغَفَرَ اِنَّ ذٰلِكَ لَمِنۡ عَزۡمِ الۡاُمُوۡرِ
யார் பொறுமையை மேற்கொண்டு மன்னிக்கிறாரோ அது உறுதிமிக்க காரியங்களில் ஒன்றாகும்.
[அல்குர்ஆன் 42:43]
உபதேசம் : 807
﷽ உபதேசம் : 807
12-09-2023 செவ்வாய்க்கிழமை
"யார் தன்னுடைய தோழர்களிடத்தில் சிறந்தவராக இருக்கிறாரோ அவரே அல்லாஹ்விடத்தில் சிறந்தவராவார்!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) திர்மிதீ - 1867
உபதேசம் : 806
﷽ உபதேசம் : 806
11-09-2023 திங்கட்கிழமை
இறைநம்பிக்கை கொண்டதாக உறுதிப் பிரமாணம் வாங்கும்பொழுது நபி (ஸல்) அவா்களின் கரம் அல்லாஹ்வின் மீது ஆணையாகஎந்தப் பெண்ணின் கரத்தையும் தொட்டதில்லை! பெண்களிடம் வாய்மொழியாகவே தவிர ஈமான் கொண்டதாக உறுதிப்பிரமாணம் வாங்கியதில்லை!
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) புகாரி - 4891
குர்ஆன் வசனம் 556
﷽ குர்ஆன் வசனம் 556
11-09-2023 திங்கட்கிழமை
وَمِنۡ اٰيٰتِهِ الۡجَوَارِ فِى الۡبَحۡرِ كَالۡاَعۡلَامِؕ
மலைகளைப் போன்று கடலில் செல்லும் கப்பல்களும் அவனது சான்றுகளில் உள்ளவை.
[அல்குர்ஆன் 42:32]
Sunday, September 10, 2023
உபதேசம் : 805
﷽ உபதேசம் : 805
10-09-2023 ஞாயிற்றுக்கிழமை
"ஒரு முஸ்லிம் அழகிய முறையில் உளூ செய்து, அகத்தையும் முகத்தையும் ஒருமுகப்படுத்தி (பணிந்து, உள்ளச்சத்துடன்) தொழுதால் அவருக்குச் சொர்க்கம் உறுதியாகாமல் இருப்பதில்லை!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : உக்பா பின் ஆமிர் (ரலி) முஸ்லிம் - 397
உபதேசம் : 806
தினமும் ஓர் உபதேசம் : 806
இறைநம்பிக்கை கொண்டதாக உறுதிப் பிரமாணம் வாங்கும்பொழுது நபி (ஸல்) அவா்களின் கரம் அல்லாஹ்வின் மீது ஆணையாகஎந்தப் பெண்ணின் கரத்தையும் தொட்டதில்லை! பெண்களிடம் வாய்மொழியாகவே தவிர ஈமான் கொண்டதாக உறுதிப்பிரமாணம் வாங்கியதில்லை!
🎤அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
📚நூல் : புகாரி - 4891
Saturday, September 9, 2023
உபதேசம் : 804
﷽ உபதேசம் : 804
09-09-2023 சனிக்கிழமை
"அந்நியப்பெண்கள் இருக்குமிடத்திற்குச் செல்ல வேண்டாம்!" என நபி (ஸல்) அவா்கள் எச்சரித்தபொழுது அன்சாரிகளில் ஒருவர், கணவருடைய (சகோதரன் போன்ற) உறவினர்கள் செல்வது குறித்து விளக்கம் கேட்டாா். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘அத்தகையோா் மரணத்திற்கு நிகரானவர்கள்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : உக்பா பின் ஆமிர் (ரலி) புகாரி-5232
குர்ஆன் வசனம் 554
﷽ குர்ஆன் வசனம் 554
09-09-2023 சனிக்கிழமை
اَللّٰهُ لَطِيۡفٌۢ بِعِبَادِهٖ يَرۡزُقُ مَنۡ يَّشَآءُۚ
அல்லாஹ் தனது அடியார்களிடம் மென்மையாக நடப்பவன்.
[அல்குர்ஆன் 42:19]
உபதேசம் : 803
﷽ உபதேசம் : 803
08-09-2023 வெள்ளிக்கிழமை
ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து தனக்கு அறிவுரை கூறும்படி கேட்டுக் கொண்டதற்கு, நபி (ஸல்) அவர்கள் "இறையச்சத்தை பற்றிப் பிடித்துக்கொள்!" என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி) திர்மிதீ - 3367
குர்ஆன் வசனம் 553
﷽ குர்ஆன் வசனம் 553
08-09-2023 வெள்ளிக்கிழமை
مَنۡ عَمِلَ صَالِحًـا فَلِنَفۡسِهٖ وَمَنۡ اَسَآءَ فَعَلَيۡهَا ؕ وَمَا رَبُّكَ بِظَلَّامٍ لِّلۡعَبِيۡدِ
யார் நல்லறம் செய்கிறாரோ அது அவருக்குரியது. யார் தீமை செய்கிறாரோ அது அவருக்கே எதிரானது. உமது இறைவன் அடியாருக்கு அநீதி இழைப்பவனல்லன்.
[அல்குர்ஆன் 41:46]
நூல் : நஸாயீ
அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் வ அலா ஆலி முஹம்மதின் கமா ஸல்லய்த அலா இப்றாஹீம வ அலா ஆலி இப்றாஹீம இன்னக ஹமீதும் மஜீத்.
அல்லாஹும்ம பாரிக் அலா முஹம்மதின் வ அலா ஆலி முஹம்மதின் கமா பாரக்த அலா இப்றாஹீம வ அலா ஆலி இப்றாஹீம இன்னக ஹமீதும் மஜீத்.
(பொருள்: இறைவா! இப்ராஹீம் (அலை) அவர்களுடைய குடும்பத்தாருக்கு நீ கருணை புரிந்ததைப் போன்று முஹம்மத் (ஸல்) அவர்களுக்கும், அவர்களுடைய குடும்பத்தாருக்கும் நீ கருணை புரிவாயாக. நிச்சயமாக நீ புகழுக்குரியவனும் பெருமைக்குரியவனுமாவாய். இறைவா! இப்ராஹீம் (அலை) அவர்களுடைய குடும்பத்தாருக்கு நீ சுபிட்சம் வழங்கியதைப் போன்று முஹம்மத் (ஸல்) அவர்களுக்கும், அவர்களுடைய குடும்பத்தாருக்கும் நீ சுபிட்சம் வழங்குவாயாக. நிச்சயமாக நீ புகழுக்குரியவனும் பெருமைக்குரியவனுமாவாய்).
அறிவிப்பவர் : கஅப் பின் உஜ்ரா (ரலி), நூல் : புகாரி 4797
💐பலன்கள்
யார் என் மீது ஒரு முறை ஸலவாத் சொல்கிறாரோ அவர் மீது அல்லாஹ் பத்து முறை அருள் புரிகிறான். அவருடைய பத்து தவறுகளை அழிக்கின்றான். பத்து உயர்வுகள் அவருக்கு அளிக்கப்படுகின்றன என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அனஸ் (ரலி)
நூல் : நஸாயீ
Thursday, September 7, 2023
குர்ஆன் வசனம் 552
﷽ குர்ஆன் வசனம் 552
07-09-2023 வியாழக்கிழமை
وَاِمَّا يَنۡزَغَنَّكَ مِنَ الشَّيۡطٰنِ نَزۡغٌ فَاسۡتَعِذۡ بِاللّٰهِؕ
ஷைத்தானிடமிருந்து உமக்கு ஏதும் தீண்டுதல் ஏற்பட்டால் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுவீராக!
[அல்குர்ஆன் 41:36]
உபதேசம் : 802
﷽ உபதேசம் : 802
07-09-2023 வியாழக்கிழமை
"உங்களில் ஒருவர் (விருந்துக்கு) அழைக்கப்பட்டால் அந்த அழைப்பை ஏற்றுக் கொள்ளட்டும்! அவா் நோன்பு நோற்றிருந்தால் (அழைத்தவருக்காகப்) துஆ செய்யட்டும்!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் :அபூ ஹுரைரா (ரலி) முஸ்லிம் - 2815
மரண நேரத்தில் தொழுகாதவனின் கதி.......!
بسم الله الرحمن الرحيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد
மரண நேரத்தில் தொழுகாதவனின் கதி.......!
உலகில் நல்ல ஆரோக்கியத்தோடு திடகாத்திரமாக நடமாடிக் கொண்டு வாழ்ந்த மனிதன் தன்னை படைத்த இறைவனை நினைத்து பார்க்க தவறி விடுகிறான். இறைவனுக்கு செய்ய வேண்டிய கடமைகளை செய்ய வேண்டியதில்லை என கருதுகிறான். இவையெல்லாம் அவனுடைய உடம்பில் உயிரோட்டம் உள்ளவரை தான் அவனுடைய உடல் தளர்ந்து பலவீனமடைந்து மரணப் படுக்கையில் கிடக்கின்ற போது தான் அவனுக்கு இறைவனை பற்றி சிந்தனை வருகிறது. தனக்கு எந்த பயனும் தராத நேரத்தில் தான் இறைவனை நினைத்துப் பார்க்கிறான். ஆரோக்கியமாக வாழ்ந்த காலத்தை பாழாக்கி விட்டோமே என்று கைசேதப்படுகிறான். இதுதான் இன்றைய பெரும்பாலான மனிதர்களின் நிலையாக உள்ளது இப்படிப்பட்டவர்கள் மரணப்படுக்கையில் சிக்கித் தவிக்கின்ற நிலையை திருக்குர்ஆன் நமக்கு படம் பிடித்து காட்டுகிறது. எப்படியெல்லாம் அவர்கள் சித்தரவதை செய்யப்படுவார்கள் என்பதை இறைவன் குர்ஆனிலே கூறுகின்றான்.
மரண வேளையில் அவன் உயிர் தொண்டைக் குழியை அடைந்து விட்டால் மந்திரிப்பவன் யார்? எனக் கேட்கப்படுகிறது. ஆனால் அவனும் நிச்சயமாக இதுதான் தன் பிரிவு நேரம் என்பதை உறுதி கொள்கிறான். அந்த நேரம் அவனுடைய கெண்டைக்கால் மற்ற கெண்டை காலுடன் பின்னி உரசும் அந்த நாளில் உம் இறைவன் பக்கம் இழுத்துச் செல்லப்படுவான்.
(அல்குர்ஆன் 75:26,30)
ஏன் இப்படிப்பட்ட பரிதாபமான நிலை அவனுக்கு ஏன் ஏற்படுகிறது என்பதையும் இறைவன் குர்ஆனிலே சொல்லிக் காட்டுகிறான்.
அல்லாஹ்வுடைய வேதத்தையும் தூதரையும் அவன் மார்க்கத்தையும் உண்மைப்படுத்த
வில்லை தொழவும் இல்லை எனவே அவன் பொய்ப்படுத்தியவனாக முகம் திருப்பிக் கொண்டான்.
(அல்குர்ஆன் 75:31,32)
அல்லாஹ்வை நினைத்துப் பார்க்காத எத்தனையோ பேர் மரணப்படுக்கையில் அவதிப்படுகின்ற காட்சி அதிர்ச்சியூட்டக்கூடிய வகையில் இருப்பதை நம்மால் உணர முடிகிறது. அந்த நேரத்தில் அவனுக்கு "லாயிலாஹ இல்லல்லாஹ்" என்ற கலிமாவை சொல்லிக் கொடுத்தால் அவனுடைய நாவு எழும்பாது இழிந்த நிலையில் கேவளப்பட்டவனாக அவனுடைய உயிர் பிரியும்.
தொழுகாதவன் தனக்கு மரணம் தொண்டையை அடையும் போது அல்லாஹ்விடம் கெஞ்சுவான் கொஞ்சம் அவகாசம் கொடுங்கள். அப்படி கொடுத்தால் நல்ல காரியங்களை செய்து விட்டு வருவதாகவும் கூறுவான். அதைப் பற்றி அல்லாஹ் கூறும்போது
( அவர்களில் ஒருவனுக்கு மரணம் வரும்போது அவன் என் இறைவனே என்னை திரும்ப உலகத்திற்கு அனுப்புவாயாக..! நான் விட்டு வந்த நற்காரியங்களை எல்லாம் செய்ய வேண்டும் என்று கூறுவான். அவன் கூறுவதும் வெறும் வார்த்தையே அல்லாமல் வேறு இல்லை அவர்கள் மறுமையில் எழுப்பப்படும் நாள் வரையில் அவர்கள் முன்னே ஒரு திரை இருக்கிறது.
(அல்குர்ஆன்: 23:99,100)
இன்னோரு வசனத்தில் இறைவன் கூறுகிறான்.
மாறு செய்து நடக்கும் அநியாயக்காரர்களின் நிலைமை எப்படி இருக்கும் என்பதை சொல்லும் போது அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான்.
அவர்களுடைய முகங்களிலும் அவர்களுடைய முதுகுகளிலும் அடித்து உயிரை கைப்பற்றும் மலக்குகள் அவர்களை மரணம் அடையச் செய்யும்போது அவர்கள் நிலைமை எப்படி இருக்கும். இந்த நிலை ஏன் தெரியுமா? நிச்சயமாக இவர்கள் அல்லாஹ்வுக்கு கோபமூட்டுவதையே பின்பற்றி அவனுடைய திருப்தியை வெறுத்ததால்தான் வந்தது. ஆகவே அவர்களுடைய செயல்களை அவன் பயன் இல்லாதவையாக ஆக்கி அழித்து விட்டான்.
(அல்குர்ஆன்:47:27,28)
மரணத்தின் போது இப்படிப்பட்ட அவல நிலை ஏற்படாமல் இருக்க வேண்டுமானால் ஒவ்வொரு நேரத் தொழுகையும் நேரம் தவறாமல் தொழுது வர வேண்டும்.
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
நூல்:முஸ்னத் ஷாஃபிஇய்:148/1
بسم الله الرحمن الرحيم
ஹஜ்ரத் அம்ரு (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், ஒரு முறை நபி (ஸல்) அவர்கள் தமது பிரசங்கத்தில், “கவனமாகக் கேட்டுக் கொள்ளுங்கள்’’, உலகம் தற்காலிகமான வியாபாரப் பொருளாகும். (அதற்கு எவ்வித விலையும், மதிப்பும் கிடையாது) ஏனேனில், அதில் நல்லோர், தீயோர் அனைவருக்கும் பங்குண்டு, அனைவரும் அதிலிருந்து உண்கின்றனர். நிச்சயமாக மறுமையானது, குறித்த நேரத்தில் வர இருக்கின்ற அந்தரங்கமான உண்மையாகும். அதில் சக்தி மிக்க அரசன் தீர்ப்பு வழங்குவான், கவனமாகக் கேட்டுக் கொள்ளுங்கள்! எல்லா நலவுகளும், அதன் அனைத்து வகைகளும் சொர்க்கத்தில் உள்ளன. சகலவித கெடுதிகளும், அதன் எல்லா வகைகளும் நரகத்தில் உள்ளன. நன்றாக அறிந்து கொள்ளுங்கள்! எதைச் செய்தாலும், அல்லாஹ்வை பயந்தவர்களாகச் செய்யுங்கள், நீங்கள் தத்தமது செயல்களுடன் அல்லாஹ் வின் சமூகத்தில் கொண்டுவரப்படுவீர்கள். அணுவளவு நன்மையைச் செய்தவரும் அதைக் கண்டு கொள்வார், அணுவளவு தீமை செய்தவரும் அதைக் கண்டு கொள்வார்’’ என்று கூறினார்கள்.
(நூல்:முஸ்னத் ஷாஃபிஇய்:148/1)
-
Chapter - 14 Surah Ibrahim بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ In the name of Allah the most beneficent, most mer...
-
Chapter - 14 Surah Ibrahim بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ In the name of Allah the most beneficent, most merciful يُثَبِّت...
-
Chapter - 14 Surah Ibrahim بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ In the name of Allah the most beneficent, most merciful قُ...