ஆதம் (அலை). ( 1 )
ஆதம் (அலை) மண்ணால் படைக்கப்பட்டார்.
إِنَّ مَثَلَ عِيسَىٰ عِندَ اللَّهِ كَمَثَلِ آدَمَ ۖ خَلَقَهُ مِن تُرَابٍ ثُمَّ قَالَ لَهُ كُن فَيَكُونُ
அல்லாஹ்விடம் ஈஸாவுக்கு உதாரணம் ஆதம் ஆவார். அவரை மண்ணால் படைத்து "ஆகு' என்று அவரிடம் கூறினான். உடனே அவர் ஆகி விட்டார்.
திருக்குர்ஆன் 3:59
وَلَقَدْ خَلَقْنَا الْإِنسَانَ مِن صَلْصَالٍ مِّنْ حَمَإٍ مَّسْنُونٍ
கருப்புக் களிமண்ணில் இருந்து மணல் கலந்த களிமண்ணில் இருந்து மனிதனைப் படைத்தோம்.
திருக்குர்ஆன் 15:26
وَلَقَدْ خَلَقْنَا الْإِنسَانَ مِن سُلَالَةٍ مِّن طِينٍ
களிமண்ணின் சத்திலிருந்து மனிதனைப் படைத்தோம்.
திருக்குர்ஆன் 23:12
الَّذِي أَحْسَنَ كُلَّ شَيْءٍ خَلَقَهُ ۖ وَبَدَأَ خَلْقَ الْإِنسَانِ مِن طِينٍ
அவன் ஒவ்வொரு பொருளின் படைப்பையும் அழகுபடுத்தினான். மனிதனின் படைப்பைக் களிமண்ணிலிருந்து துவக்கினான்.
திருக்குர்ஆன் 32:7
فَاسْتَفْتِهِمْ أَهُمْ أَشَدُّ خَلْقًا أَم مَّنْ خَلَقْنَا ۚ إِنَّا خَلَقْنَاهُم مِّن طِينٍ لَّازِبٍ
இவர்கள் வலிமையான படைப்பா? அல்லது நாம் படைத்த(மற்ற)வைகளா? என்பதை இவர்களிடம் கேட்பீராக! இவர்களைப் பிசுபிசுப்பான களிமண்ணால் நாம் படைத்தோம்.
திருக்குர்ஆன் 37:11
إِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي خَالِقٌ بَشَرًا مِّن طِينٍ
"களிமண்ணால் மனிதனைப் படைக்கப் போகிறேன். என்று உமது இறைவன் வானவர்களிடம் கூறிய போது,
திருக்குர்ஆன் 38:71
خَلَقَ الْإِنسَانَ مِن صَلْصَالٍ كَالْفَخَّارِ
மண்பாண்டம் போல் சுட்ட களிமண்ணால் மனிதனைப் படைத்தான்.
திருக்குர்ஆன் 55:14
Saturday, September 16, 2023
ஆதம் (அலை). ( 1 )
Subscribe to:
Post Comments (Atom)
-
Chapter - 14 Surah Ibrahim بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ In the name of Allah the most beneficent, most mer...
-
Chapter - 14 Surah Ibrahim بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ In the name of Allah the most beneficent, most merciful يُثَبِّت...
-
Chapter - 14 Surah Ibrahim بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ In the name of Allah the most beneficent, most merciful قُ...
No comments:
Post a Comment