Thursday, September 7, 2023

மரண நேரத்தில் தொழுகாதவனின் கதி.......!

بسم الله الرحمن الرحيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد

மரண நேரத்தில் தொழுகாதவனின் கதி.......!


உலகில் நல்ல ஆரோக்கியத்தோடு திடகாத்திரமாக நடமாடிக் கொண்டு வாழ்ந்த மனிதன் தன்னை படைத்த இறைவனை நினைத்து பார்க்க தவறி விடுகிறான். இறைவனுக்கு செய்ய வேண்டிய கடமைகளை செய்ய வேண்டியதில்லை என கருதுகிறான். இவையெல்லாம் அவனுடைய உடம்பில் உயிரோட்டம் உள்ளவரை தான் அவனுடைய உடல் தளர்ந்து பலவீனமடைந்து மரணப் படுக்கையில் கிடக்கின்ற போது தான் அவனுக்கு இறைவனை பற்றி சிந்தனை வருகிறது. தனக்கு எந்த பயனும் தராத நேரத்தில் தான் இறைவனை நினைத்துப் பார்க்கிறான். ஆரோக்கியமாக வாழ்ந்த காலத்தை பாழாக்கி விட்டோமே என்று கைசேதப்படுகிறான். இதுதான் இன்றைய பெரும்பாலான மனிதர்களின் நிலையாக உள்ளது இப்படிப்பட்டவர்கள் மரணப்படுக்கையில் சிக்கித் தவிக்கின்ற நிலையை திருக்குர்ஆன் நமக்கு படம் பிடித்து காட்டுகிறது. எப்படியெல்லாம் அவர்கள் சித்தரவதை செய்யப்படுவார்கள் என்பதை இறைவன் குர்ஆனிலே கூறுகின்றான்.

மரண வேளையில் அவன் உயிர் தொண்டைக் குழியை அடைந்து விட்டால் மந்திரிப்பவன் யார்? எனக் கேட்கப்படுகிறது. ஆனால் அவனும் நிச்சயமாக இதுதான் தன் பிரிவு நேரம் என்பதை உறுதி கொள்கிறான். அந்த நேரம் அவனுடைய கெண்டைக்கால் மற்ற கெண்டை காலுடன் பின்னி உரசும் அந்த நாளில் உம் இறைவன் பக்கம் இழுத்துச் செல்லப்படுவான்.
(அல்குர்ஆன் 75:26,30)

ஏன் இப்படிப்பட்ட பரிதாபமான நிலை அவனுக்கு ஏன் ஏற்படுகிறது என்பதையும் இறைவன் குர்ஆனிலே சொல்லிக் காட்டுகிறான்.

அல்லாஹ்வுடைய வேதத்தையும் தூதரையும் அவன் மார்க்கத்தையும் உண்மைப்படுத்த
வில்லை தொழவும் இல்லை எனவே அவன் பொய்ப்படுத்தியவனாக முகம் திருப்பிக் கொண்டான்.

(அல்குர்ஆன் 75:31,32)

அல்லாஹ்வை நினைத்துப் பார்க்காத எத்தனையோ பேர் மரணப்படுக்கையில் அவதிப்படுகின்ற காட்சி அதிர்ச்சியூட்டக்கூடிய வகையில் இருப்பதை நம்மால் உணர முடிகிறது. அந்த நேரத்தில் அவனுக்கு "லாயிலாஹ இல்லல்லாஹ்" என்ற கலிமாவை சொல்லிக் கொடுத்தால் அவனுடைய நாவு எழும்பாது இழிந்த நிலையில் கேவளப்பட்டவனாக அவனுடைய உயிர் பிரியும்.

தொழுகாதவன் தனக்கு மரணம் தொண்டையை அடையும் போது அல்லாஹ்விடம் கெஞ்சுவான் கொஞ்சம் அவகாசம் கொடுங்கள். அப்படி கொடுத்தால் நல்ல காரியங்களை செய்து விட்டு வருவதாகவும் கூறுவான். அதைப் பற்றி அல்லாஹ் கூறும்போது
( அவர்களில் ஒருவனுக்கு மரணம் வரும்போது அவன் என் இறைவனே என்னை திரும்ப உலகத்திற்கு அனுப்புவாயாக..! நான் விட்டு வந்த நற்காரியங்களை எல்லாம் செய்ய வேண்டும் என்று கூறுவான். அவன் கூறுவதும் வெறும் வார்த்தையே அல்லாமல் வேறு இல்லை அவர்கள் மறுமையில் எழுப்பப்படும் நாள் வரையில் அவர்கள் முன்னே ஒரு திரை இருக்கிறது.

(அல்குர்ஆன்: 23:99,100)

இன்னோரு வசனத்தில் இறைவன் கூறுகிறான்.

மாறு செய்து நடக்கும் அநியாயக்காரர்களின் நிலைமை எப்படி இருக்கும் என்பதை சொல்லும் போது அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான்.

அவர்களுடைய முகங்களிலும் அவர்களுடைய முதுகுகளிலும் அடித்து உயிரை கைப்பற்றும் மலக்குகள் அவர்களை மரணம் அடையச் செய்யும்போது அவர்கள் நிலைமை எப்படி இருக்கும். இந்த நிலை ஏன் தெரியுமா? நிச்சயமாக இவர்கள் அல்லாஹ்வுக்கு கோபமூட்டுவதையே பின்பற்றி அவனுடைய திருப்தியை வெறுத்ததால்தான் வந்தது. ஆகவே அவர்களுடைய செயல்களை அவன் பயன் இல்லாதவையாக ஆக்கி அழித்து விட்டான்.
(அல்குர்ஆன்:47:27,28)

மரணத்தின் போது இப்படிப்பட்ட அவல நிலை ஏற்படாமல் இருக்க வேண்டுமானால் ஒவ்வொரு நேரத் தொழுகையும் நேரம் தவறாமல் தொழுது வர வேண்டும்.

✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️

No comments:

Post a Comment