Wednesday, September 6, 2023

ஜின்கள் இருக்கிறார்கள் என நம்புதல். ( 10 )

ஜின்கள் இருக்கிறார்கள் என நம்புதல். ( 10 )
கெட்ட ஜின்கள் நரகத்தை அடைவார்கள்.

قَالَ ادْخُلُوا فِي أُمَمٍ قَدْ خَلَتْ مِن قَبْلِكُم مِّنَ الْجِنِّ وَالْإِنسِ فِي النَّارِ

"உங்களுக்கு முன் சென்று விட்ட சமுதாயங்களான ஜின்களுடனும் மனிதர்களுடனும் நீங்களும் நரகத்தில் நுழையுங்கள்!'' என்று (அவன்) கூறுவான்.
திருக்குர்ஆன் 7:38

وَلَقَدْ ذَرَأْنَا لِجَهَنَّمَ كَثِيرًا مِّنَ الْجِنِّ وَالْإِنسِ

ஜின்களிலும், மனிதர்களிலும் நரகத்திற்காகவே பலரைப் படைத்துள்ளோம்.
திருக்குர்ஆன் 7:179

وَتَمَّتْ كَلِمَةُ رَبِّكَ لَأَمْلَأَنَّ جَهَنَّمَ مِنَ الْجِنَّةِ وَالنَّاسِ أَجْمَعِينَ

"மனிதர்கள் மற்றும் ஜின்கள் அனைவராலும் நரகத்தை நிரப்புவேன்'' என்ற உமது இறைவனின் வாக்கு முழுமையாகி விட்டது.
திருக்குர்ஆன் 11:119

وَقَالَ الَّذِينَ كَفَرُوا رَبَّنَا أَرِنَا اللَّذَيْنِ أَضَلَّانَا مِنَ الْجِنِّ وَالْإِنسِ نَجْعَلْهُمَا تَحْتَ أَقْدَامِنَا لِيَكُونَا مِنَ الْأَسْفَلِينَ

எங்கள் இறைவா! ஜின்களிலும், மனிதர்களிலும் எங்களை வழிகெடுத்தோரை எங்களுக்குக் காட்டு! அவர்கள் இழிந்தோராகிட அவர்களை எங்களின் பாதங்களின் கீழே ஆக்குகிறோம் என்று (ஏகஇறைவனை) மறுத்தோர் கூறுவார்கள்.
திருக்குர்ஆன் 41:29

أُولَٰئِكَ الَّذِينَ حَقَّ عَلَيْهِمُ الْقَوْلُ فِي أُمَمٍ قَدْ خَلَتْ مِن قَبْلِهِم مِّنَ الْجِنِّ وَالْإِنسِ ۖ إِنَّهُمْ كَانُوا خَاسِرِينَ

அவர்களுக்கு முன் சென்ற ஜின்களுடனும், மனிதர்களுடனும் சேர்த்து இவர்களுக்கு எதிராகவும் இறைவனின் கட்டளை உறுதியாகி விட்டது. இவர்கள் நட்டமடைந்தனர்.
திருக்குர்ஆன் 46:18

No comments:

Post a Comment