Sunday, October 31, 2021

உபதேசம் : 127

💓👉நபி (ﷺ ) அவர்களிடம், "மக்களில் மிகவும் கண்ணியத்திற்குரியவர் யார்?" என்று கேட்கப்பட்டது. அதற்கு அவா்கள் "மனிதர்களிலேயே (அல்லாஹ்வுக்கு) அதிகமாக அஞ்சுபவர் தான்!" என்று  பதிலளித்தாா்கள்.👈💓

👍அறிவிப்பவர் : அபூ ஹுரைரா(ரலி) புகாரி : 3353👍

💓👉The Prophet () asked them, "Who is the most honorable of people?" That was asked. They said, "The most fearful of men!" They replied.👈💓

👍Announcer: Abu Hurairah (Rally) Complainant: 3353👍

இறை வசனம் : 637

👉இக்குர்ஆனை விளங்குவதற்கு எளிதாக்கியுள்ளோம். படிப்பினை பெறுவோர் உண்டா?👈

💓திருக்குர்ஆன் : 54:17💓

👉We have made the Quran easy to understand. Are there recipients of the lesson?👈

💓Quran: 54:17💓

தினமும் ஒரு கேள்விகள் - 10

கேள்வி - 10. *"சத்தியம் வந்தது, அசத்தியம் அழிந்தது, நிச்சயமாக அசத்தியம் அழிந்தே தீரும்" என்ற கருத்துடைய அத்தியாயம் மற்றும் குர்ஆன்  வசனம் என்ன ?

A- சூரா பகரா (2) , வசனம் 250

B- சூரா காஃபிரூன் (109) , வசனம் 6

C- சூரா யாஸீன் (36) , வசனம் 10

D- சூரா பனீ இஸ்ராஈல் (17) , வசனம் 81

பதில் - D- சூரா பனீ இஸ்ராஈல் (17) , வசனம் 81


وَقُلْ جَآءَ الْحَـقُّ وَزَهَقَ الْبَاطِلُ‌ؕ اِنَّ الْبَاطِلَ كَانَ زَهُوْقًا‏

17:81 (நபியே!) இன்னும், “சத்தியம் வந்தது; அசத்தியம் அழிந்தது. நிச்சயமாக அசத்தியமானது அழிந்து போவதேயாகும்” என்று கூறுவீராக.

And say, “Truth has come and falsehood has vanished. Falsehood is surely bound to vanish.”

Saturday, October 30, 2021

உபதேசம் : 126

💓ஒரு ஊரில் பிளேக் நோய்  இருப்பதாக நீங்கள் கேள்விப்பட்டால் அவ்வூரை நோக்கிச் செல்லாதீர்கள் ! நீங்கள் வாழும் ஊரில் பிளேக் நோய் ஏற்பட்டால்  ஊரை விட்டு ஓட்டம் பிடிக்காதீர்கள் !" என்று நபி (ﷺ)  அவர்கள்  கூறினார்கள். 💓

👉அறிவிப்பவர் : ஸஅத் (ரலி) புகாரி : 3473👈

💓If you've heard of a plague in a town, do not go there! If there is a plague in the city where you live, do not flee from the city! "Said the Prophet (ﷺ).💓

👉Announcer: Saad (Rally) Complainant: 3473👈

இறை வசனம் : 636

💓அவனே மரணிக்கச் செய்கிறான். உயிர்ப்பிக்கவும் செய்கிறான்.💓

👉திருக்குர்ஆன் : 53:44👈

💓He makes himself die. Does revive.💓

👉Quran: 53:44👈

உபதேசம் : 125

💓"ஒருவர் தன் சகோதரனுக்கு அவனுடைய மானத்திலோ வேறு  விஷயத்திலோ  அநீதி இழைத்திருந்தால்  அதற்காக விரைந்து  மன்னிப்பு கேட்கட்டும். தீனாரோ திர்ஹமோ (பொற்காசுகளோ வெள்ளிக் காசுகளோ) பயன் தராத நிலை (மறுமை நாள்) வருவதற்கு முன்பு மன்னிப்பு பெறட்டும். ஏனெனில் மறுமை நாளில் அவரிடம் நற்செயல் ஏதும் இருக்குமாயின் அவனுடைய அநீதியின் அளவுக்கு அவரிடமிருந்து எடுத்துக் கொள்ளப்படும். அநீதியிழைத்தவரிடம் நற்செயல்கள் எதுவும் இல்லையென்றால்  அநீதிக்குள்ளானவரின் தீய செயல்கள்  எடுக்கப்பட்டு அநீதியிழைத்தவரின் மீது சுமத்தப்பட்டு விடும்." என்று நபி (ﷺ)  அவர்கள் கூறினார்கள்".💓

👉அறிவிப்பவர் : அபூ ஹுரைரா(ரலி) புகாரி : 2449👈

💓"If a man has wronged his brother in his honor or in any other matter, let him hasten and apologize for it. Let the dinaro dirham (gold coins or silver coins) be forgiven before it becomes useless (the Day of Judgment). Because if he has any good deeds on the Day of Resurrection he will be taken away from him to the extent of his injustice. If the wrongdoer does not have any good deeds, then the evil deeds of the wrongdoer will be taken away and the wrongdoer will be punished".💓

Announcer: Abu Hurairah (Rally) Complainant: 2449

இறை வசனம் : 635

👉இறை வசனம் : 635👈

💓அவனே சிரிக்க வைக்கிறான். அழவும் வைக்கிறான்.💓

💓திருக்குர்ஆன் : 53:43💓

💓He makes himself laugh. Makes you cry.💓

💓Quran: 53:43💓

Thursday, October 28, 2021

தினமும் ஒரு கேள்விகள் - 9

கேள்வி - 9. சூரத்துல் மாஊன் 'அத்தியாயம் 107 ல்' "தொழுகையாளிகளுக்கு கேடு" என்று எதற்காக அல்லாஹ் சொல்கிறான் ?

A- தொழுகையை அதன் ஆரம்ப நேரத்தில் தொழாமல் விட்டுவிடுகிறார்கள் 

B- தொழுகையில் மறதியாளர்களாகவும் பிறருக்கு காண்பிப்பதற்காக தொழுகிறார்கள் 

C- தொழுகையில் உலகத்துடைய சிந்தனையை கொண்டு வருகிறார்கள் 

D- மேற்குறிப்பிடப்பட்டுள்ள அனைத்தும் சரி 

பதில்- B- தொழுகையில் மறதியாளர்களாகவும் பிறருக்கு காண்பிப்பதற்காக தொழுகிறார்கள்

தொழுகையில் மறதியாளர்களாகவும் பிறருக்கு காண்பிப்பதற்காக தொழுகிறார்கள்

People are heedless in their prayer and Make it show off to others

أَرَءَيْتَ الَّذِىْ يُكَذِّبُ بِالدِّيْنِؕ‏

107:1. (நபியே!) நியாயத் தீர்ப்பைப் பொய்ப்பிக்கின்றானே அவனை நீர் பார்த்தீரா?

Have you seen the one who denies the Recompense?

 فَذٰلِكَ الَّذِىْ يَدُعُّ الْيَتِيْمَۙ‏

107:2. பின்னர் அவன்தான் அநாதைகளை விரட்டுகிறான்.

For that is the one who drives away the orphan

 وَ لَا يَحُضُّ عَلٰى طَعَامِ الْمِسْكِيْنِؕ‏

107:3. மேலும், ஏழைக்கு உணவளிப்பதின் பேரிலும் அவன் தூண்டுவதில்லை.

And does not encourage the feeding of the poor.

 فَوَيْلٌ لِّلْمُصَلِّيْنَۙ‏

107:4. இன்னும், (கவனமற்ற) தொழுகையாளிகளுக்குக் கேடுதான்.

So woe to those who pray

 الَّذِيْنَ هُمْ عَنْ صَلَاتِهِمْ سَاهُوْنَۙ‏

107:5. அவர்கள் எத்தகையோர் என்றால் தம் தொழுகையில் பராமுகமாக(வும், அசிரத்தையாக)வும் இருப்போர்.

[But] who are heedless of their prayer 

 الَّذِيْنَ هُمْ يُرَآءُوْنَۙ‏

107:6. அவர்கள் பிறருக்குக் காண்பிக்(கவே தான் தொழு)கிறார்கள்.

Those who make show [of their deeds]

 وَيَمْنَعُوْنَ الْمَاعُوْنَ

107:7. மேலும், அற்பமான (புழங்கும்) பொருள்களைக் (கொடுப்பதை விட்டும்) தடுக்கிறார்கள்.

And withhold [simple] assistance

தினமும் ஒரு கேள்விகள் - 8

கேள்வி - 8. மக்காவில் இருந்து மதீனாவிற்கு முதன் முதலில் நபியவர்கள் தோழர்களோடு ஹிஜ்ரத் செய்து வரும் போது, மக்கள் யாரை தவறுதலாக இவர் தான் அல்லாஹ்வின் தூதர் என்று நினைத்தனர் ?

A- அபூ பக்ர் (ரழி)

B- பிலால் (ரழி)

C- ஸைத் இப்னு ஹாரில் (ரழி)

D- உமர் (ரழி)

பதில்A- அபூ பக்ர் (ரழி)

நபியவர்களின் ஹிஜ்ரத்

சுராகா பின் (மாலிக் பின்) ஜுஅஷும் (ரலி) அவர்கள் கூறியதாவது:

குறைஷிக் குலத்தின் தூதுவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை யும் அபூபக்ர் (ரலி) அவர்களையும் கொலை செய்பவருக்கு, அல்லது (உயிருடன்) கைதுசெய்து வருபவருக்கு இருவரில் ஒவ்வொருவருக்கும் (நூறு ஒட்டகம் என்று) பரிசை நிர்ணயம் செய்(து அறிவித்)தவர்களாக எங்களிடம் வந்த னர். அப்போது நான் எங்களது பனூ முத்லிஜ் சமுதாயத்தின் அவைகளில் ஒன்றில் அமர்ந்திருந்தேன்.

அப்போது அவர்களில் ஒருவர் எழுந்து வந்து, அமர்ந்துகொண்டிருந்த எங்களிடையே நின்றுகொண்டு, “சுராகாவே! சற்றுமுன் நான் கடலோரத்தில் சில உருவங்களைப் பார்த்தேன். அவர்கள் முஹம்மதும் அவருடைய தோழர்களும் தான் என்று நான் கருதுகிறேன்” என்று கூறினார்.

அவர்கள் முஹம்மதும் தோழர்களும் தான் என்று நான் அறிந்துகொண்டேன். (இருப்பினும் அவரைத் திசை திருப்புவதற் காக) “அவர்கள் முஹம்மதும் தோழர்களும் அல்லர். மாறாக, இன்னார் இன்னாரைத்தான் நீ பார்த்திருப்பாய். அவர்கள் எங்கள் கண்ணெதிரேதான் (தங்களின் காணாமற்போன ஒட்டகங்களைத் தேடிப்)போனார்கள்” என்று நான் அவரிடம் கூறினேன். பிறகு அந்த அவையிலேயே சிறிது நேரம் இருந்தேன்.

அதற்குப் பிறகு எழுந்து (எனது இல்லத்திற்குள்) நுழைந்து என் அடிமைப் பெண்ணிடம் எனது குதிரையை வெளியே கொண்டுவரும்படி உத்தரவிட்டேன். - அப்போது குதிரை ஒரு மலைக்குன்றுக்கு அப்பால் இருந்தது.- எனக்காக அதை அவள் (அங்கே) கட்டிவைத்திருந்தாள். பின்பு, நான் என்னுடைய ஈட்டியை எடுத்துக்கொண்டு வீட்டின் பின்புற வாசல் வழியாக வெளியேறினேன். (ஈட்டியை நான் தாழ்த்திப் பிடித்திருந்ததால்) அதன் கீழ் முனையால் (என்னையும் அறியாம லேயே) தரையில் கோடு கிழித்தேன். மேலும், அதன்மேல் நுனியை தாழ்த்திக் கொண்டு என் குதிரையிடம் வந்து அதன் மீது ஏறிக்கொண்டேன். அதன் முன்னங் கால் இரண்டையும் ஒரே நேரத்தில் உயர்த்தி ஒரே நேரத்தில் பூமியில் வைக்குமாறு செய்து மிக வேகமாகப் புறப்பட்டு அவர்களை நெருங்கினேன். அப்போது எனது குதிரை காலிடறி அதிலிருந்து நான் விழுந்துவிட்டேன். 

உடனே நான் எழுந்து எனது கையை அம்புக்கூட்டை நோக்கி நீட்டி, அதிலி ருந்து (சகுனச் சொற்கள் எழுதப்பட்ட) அம்புகளை எடுத்தேன். அவற்றின் மூலம் என்னால் அவர்களுக்குப் பாதிப்பை உருவாக்க முடியுமா; அல்லது முடியாதா என்று குறிபார்த்தேன். நான் விரும்பாத (வகையில், என்னால் அவர்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்த முடியாது என்ப)தே வந்தது. என் அம்புகளுக்கு மாறு செய்துவிட்டு எனது குதிரையில் ஏறினேன். அது பாய்ந்த வண்ணம் சென்றது.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (திருக்குர்ஆன்) ஓதியதை நான் கேட்டேன். அவர்கள் திரும்பிப் பார்க்கவில்லை. அபூபக்ர் அவர்கள் அடிக் கடி திரும்பிப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். (அப்போது) எனது குதிரையின் முன்கால்கள் இரண்டும் முட்டுக் கால்கள்வரையிலும் பூமியில் புதைந்துகொண்டன. நான் குதிரையிலிருந்து கீழே விழுந்துவிட்டேன்.

பிறகு (அதை எழச்செய்வதற்காக) அதை நான் அரற்றினேன். அது எழுந்(திருக்க முயற்சித்)தது. (ஆனால்,) அதன் கால்களை அதனால் வெளியே எடுக்க முடியவில்லை. அது நேராக எழுந்து நின்றபோது இரு முன்னங்கால்களின் அடிச் சுவட்டிலிருந்து புகை போல வானத்தில் பரவலாகப் புழுதி கிளம்பிற்று. உடனே நான் (எனது) அம்புகளைக் கொண்டு (சகுனக்) குறிபார்த்தேன். நான் விரும்பாததே வந்தது. உடனே நான் எனக்கு (உயிர்) பாதுகாப்பு நல்கும்படி அவர்களை அழைத்தேன். உடனே அவர்கள் நின்றுவிட்டனர். நான் எனது குதிரையிலேறி அவர்களிடம் வந்து சேர்ந்தேன். அவர்களைவிட்டு (எனது குதிரை) தடுக்கப்பட்ட அந்த நிகழ்ச்சியை நான் கண்டபோது எனது மனதிற்குள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் (மார்க்க) விஷயம் மேலோங்கும் என்று தோன்றியது.

நான் அல்லாஹ்வின் தூதரிடம், “உங்களுடைய (குறைஷி) சமுதாயத்தார் உங்களுக்காகப் பரிசை நிர்ணயித்துள்ள னர்” என்று கூறிவிட்டு அந்த (குறைஷி) மக்கள் முஸ்லிம்களைப் பற்றி என்ன எண்ணுகிறார்கள் என்ற தகவல்களை அவர்களிடம் எடுத்துச் சொன்னேன். மேலும், எனது பயண உணவுப் பொருள் களை எடுத்துக்காட்டினேன். அவர்கள் என்னிடமிருந்து ஒன்றையும் (எடுத்து) எனக்கு குறைவு செய்யவுமில்லை; (என்னிடமிருந்த எதையும்) அவர்கள் இருவரும் என்னிடம் கேட்கவுமில்லை. 

ஆயினும், நபி (ஸல்) அவர்கள் (என்னிடம்), “எங்களைப் பற்றி(ய செய்தியை) மறைத்துவிடு” என்று கூறினார்கள். உடனே, நான் நபி (ஸல்) அவர்களிடம் எனக்கு ஒரு பாதுகாப்புப் பத்திரம் எழுதித் தரும்படி வேண்டினேன். அப்போது, நபி (ஸல்) அவர்கள் ஆமிர் பின் ஃபுஹைராவுக்கு உத்தரவிட அவர் பாடமிடப்பட்ட தோல் துண்டில் (பாதுகாப்புப் பத்திரத்தின் வாசகத்தை) எழுதினார். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (சகாக்களுடன் மதீனா நோக்கிச்) சென்றார்கள்.157

உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

ஷாம் நாட்டிலிருந்து (வியாபாரத்தை முடித்துக்கொண்டு) திரும்பிக்கொண்டிருந்த முஸ்லிம்களின் வணிகக் குழுவிலிருந்த ஸுபைர் பின் அல்அவ்வாம் (ரலி) அவர்களை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சந்தித்தார்கள். அப்போது ஸுபைர் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கும், அபூபக்ர் (ரலி) அவர்களுக்கும் வெண்ணிற ஆடைகளைப் போர்த்தினார்கள். மதீனா விலிருந்த முஸ்லிம்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்காவிலிருந்து புறப்பட்டுவிட்டதைக் கேள்விப்பட்டு, ஒவ்வொரு நாள் காலையிலும் (மதீனா வின் புறநகர்ப் பகுதியிலிருந்த கருங்கற்கள் நிறைந்த) “அல்ஹர்ரா' எனுமிடத்திற்கு வந்து நண்பகலின் வெப்பம் அவர்களைத் திருப்பியனுப்பும்வரையில் நபி (ஸல்) அவர்களை எதிர்பார்த்துக்கொண்டிருந் தனர்.

அப்படி ஒருநாள் நீண்ட நேரம் நபி (ஸல்) அவர்களை எதிர்பார்த்துவிட்டு (ஊருக்குள்) அவர்கள் திரும்பித் தத்தமது வீட்டுக்குள் ஒதுங்கியபோது யூதர்களில் ஒருவர் அவர்களது கோட்டைகளில் ஒன்றின் மீது எதையோ பார்ப்பதற்காக ஏறியிருந்தார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அவர்களின் தோழர்களும் வெண்ணிற ஆடையில், கானல் நீர் விலக வருவதைப் பார்த்தார்.

அந்த யூதரால் (தம்மைக்) கட்டுப்படுத்த இயலாமல் உரத்த குரலில், “அரபுக் குழாமே! இதோ நீங்கள் எதிர்பார்த்துக் காத்திருந்த உங்களுடைய நாயகர்” என்று கூவினார். உடனே, முஸ்லிம்கள் (நபி (ஸல்) அவர்களைப் பாதுகாப்புடன் வரவேற்பதற்காக). ஆயுதங்களை நோக்கிக் கிளர்ந்தெழுந்தனர்.

அந்த (கருங்கற்கள் நிறைந்த) அல்ஹர்ராவின் பரப்பில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைச் சந்தித்தார்கள். அவர்களுடன் நபி (ஸல்) அவர்கள் வலப் பக்கமாகத் திரும்பி (“குபா'வில் உள்ள) பனூஅம்ர் பின் அவ்ஃப் குலத்தாரி(ன் குடியிருப்புப் பகுதியி)ல் தங்கினார்கள். இது ரபீஉல் அவ்வல் மாதம் திங்கள்கிழமை நடந்தது. அப்போது மக்களை நோக்கி அபூபக்ர் (ரலி) அவர்கள் எழுந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மௌனமாக அமர்ந்திருந்தார்கள். அப்போது அங்கு வந்திருந்த -நபி (ஸல்) அவர்களைப் பார்த்திராத- அன்சாரிகளில் சிலர் (அபூபக்ர் (ரலி) அவர்களை அல்லாஹ்வின் தூதர் என்று எண்ணிக் கொண்டு) அபூபக்ர் (ரலி) அவர்களுக்கு முகமன் கூறிக்கொண்டிருந்தனர்.

இறுதியில், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்மீது வெயில் பட்டபோது உடனே அபூபக்ர் (ரலி) அவர்கள் சென்று தமது துண்டால் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்மீது நிழலிட்டார்கள். அப்போதுதான் மக்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை அறிந்து கொண்டனர். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பனூ அம்ர் பின் அவ்ஃப் குலத்தாரிடையே (குபாவில்) பத்துக்கும் மேற்பட்ட நாட்கள் தங்கியிருந்து “இறையச் சத்தின்மீது அடித்தளமிடப்பட்ட (மஸ்ஜித் குபா) பள்ளிவாசலை' நிறுவினார்கள். (தாம் தங்கியிருந்த நாட்களில்) அந்தப் பள்ளி வாசலில்தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுதார்கள்.

பிறகு தமது வாகனத்தில் ஏறிப் பயணமானார்கள். அவர்களுடன் மக்களும் நடந்து சென்றனர். முடிவாக (அவர்களது) ஒட்டகம் மதீனாவில் (தற்போது) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது பள்ளிவாசல் (அமைந்துள்ள இடம்) அருகே மண்டியிட்டு படுத்துக்கொண்டது. அந்த நாளில் முஸ்லிம்களில் சிலர் அங்குதான் தொழுதுகொண்டிருந்தனர். அது சஅத் பின் ஸுராரா (ரலி) அவர்களின் பொறுப்பிலிருந்த சஹ்ல், சுஹைல் என்ற இரு அநாதைச் சிறுவர்களுக்குச் சொந்தமான பேரீச்சம் பழம் (உலரவைக்கப்படும்) களமாக இருந்தது.

அந்த இடத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் வாகனம் மண்டியிட்டுப் படுத்தபோது அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள், “இன்ஷா அல்லாஹ் இதுதான் (நமது) தங்குமிடம்” என்று கூறினார்கள். பிறகு அந்த இரு சிறுவர்களையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அழைத்து அந்தக் களத்தை பள்ளிவாசல் அமைப்பதற்காக விலைக்குக் கேட்டார்கள். அவர்கள் இருவரும், “இல்லை; அதை உங்களுக்கு அன்பளிப்பாகத் தருகிறோம் அல்லாஹ் வின் தூதரே!” என்று கூறினர். அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் சிறுவர்களிட மிருந்து அதை அன்பளிப்பாகப் பெற மறுத்து இறுதியில் அதை அவர்களிட மிருந்து விலைக்கே வாங்கினார்கள்.

பிறகு அதில் ஒரு பள்ளிவாசலைக் கட்டினார்கள். அதைக் கட்டும்போது அவர்களுடன் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் செங்கல் சுமக்கலானார்கள். (அப்போது,) “இந்தச் சுமை கைபரின் சுமையல்ல. இது எங்களது இறைவனிடம் (சேமித்துவைக்கப்படும்) நீடித்த நன்மையும் (கைபரின் சுமையை விடப்) பரிசுத்தமானதுமாகும்” என்று (“ரஜ்ஸ்' எனும் ஈரசைச் சீரில் அமைந்த பாடலைப் பாடியபடி) கூறிக்கொண்டிருந்தார்கள்.

மேலும், “இறைவா (உண்மையான) பலன் மறுமையின் பலனே. ஆகவே (மறுமைப் பலனுக்காக பாடுபடும்) அன்சாரிகளுக்கும் முஹாஜிர்களுக்கும் கருணை காட்டுவாயாக” என்று கூறினார்கள்.

அப்போது முஸ்லிம்களில் ஒருவரின் கவிதையை நபியவர்கள் பாடிக்காட்டி னார்கள். அவரது பெயர் என்னிடம் கூறப்படவில்லை (என்று அறிவிப்பாளர்களில் ஒருவரான இப்னு ஷிஹாப் (ரஹ்) அவர்கள் கூறிவிட்டு தொடர்ந்து) இப்னு ஷிஹாப் (ரஹ்) அவர்கள் சொன்னார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இந்தப் பாடல் (வரி)களைத் தவிர ஒரு முழுமையான கவிதையின் பாடலைப் பாடியதாக எனக்கு ஹதீஸ்களில் (செய்தி) எட்டவில்லை.

ஆதாரம்:

புகாரி-3906

இறை வசனம் : 634

👍'மனிதனுக்கு அவன் முயற்சித்ததைத் தவிர வேறு இல்லை'👍

👉திருக்குர்ஆன் : 53:39👈

👍'The man had nothing but what he had tried'👍

👉Quran: 53:39👈

உபதேசம் : 124

👉''இறை நம்பிக்கையுடைய ஆணும், இறை நம்பிக்கையுடைய பெண்ணும் தமது விஷயத்திலும், தமது பிள்ளைகள் விஷயத்திலும், தமது செல்வங்களிலும் தொடர்ந்து துன்பங்களுக்கு உட்படுத்தப்படுவார்கள். அல்லாஹ்வை சந்திக்கும் நாளில் அவர்கள் மீது எந்தக் குற்றமும் மீதமிருக்காது" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.👈

💓அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) திர்மிதி : 2323💓

👉"The man who believes in God and the woman who believes in God will continue to suffer in their case, in the case of their children and in their wealth. 
There will be no sin left on them on the day they meet Allah."👈

💓Announcer: Abu Hurairah (Rally) Tirmidhi: 2323💓

Wednesday, October 27, 2021

நூல் 📚 : புகாரி 5️⃣0️⃣0️⃣6️⃣

நான் (பள்ளிவாசலில்) தொழுது கொண்டிருந்தபோது என்னை நபி(ஸல்) அவர்கள் அழைத்தார்கள்.

(தொழுகையில் இருந்தமையால்) நான் அவர்களுக்கு உடனடியாக பதிலளிக்கவில்லை.

(தொழுது முடித்த பிறகு) 'இறைத்தூதர் அவர்களே! நான் தொழுது கொண்டிருந்தேன். (எனவேதான் உடனடியாக தங்களுக்கு நான் பதிலளிக்கவில்லை)' என்று சொன்னேன். 

நபி(ஸல்) அவர்கள், 'அல்லாஹ், '(இறைநம்பிக்கையாளர்களே!) அல்லாஹ்வும் (அவனுடைய) தூதரும் உங்களை அழைக்கும்போது அவர்களுக்கு பதிலளியுங்கள்' என்று (திருக்குர்ஆன் 0️⃣8️⃣:2️⃣4️⃣ வது வசனத்தில்) சொல்லவில்லையா?' என்று கேட்டார்கள். பிறகு, 'நீங்கள் பள்ளி வாசலிலிருந்து வெளியேறுவதற்கு முன்பாக குர்ஆனிலேயே மகத்துவமிக்க ஓர் அத்தியாயத்தை உங்களுக்கு நான் கற்றுத் தரவேண்டாமா?' என்று வினவியபடி என்னுடைய கையைப் பிடித்தார்கள். 

நாங்கள் (பள்ளிவாசலிலிருந்து) வெளியேற முனைந்தபோது நான், (அவர்கள் வாக்களித்ததை நினைவூட்டி) 'இறைத்தூதர் அவர்களே! தாங்கள் குர்ஆனிலேயே மகத்துவம் பொருந்தியதோர் அத்தியாயத்தை நான் உங்களுக்குக் கற்றுத்தர வேண்டாமா என்று கேட்டீர்களே!' என்று வினவினேன். நபி(ஸல்) அவர்கள் '(அது) அல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன் (என்று தொடங்கும் 'அல்ஃபாத்திஹா' அத்தியாயமே) ஆகும். அது திரும்பத் திரும்ப ஓதப்படும் ஏழு வசனங்களும் எனக்கு வழங்கப் பெற்றுள்ள மேன்மை மிகு குர்ஆனுமாகும்' என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் 🗣️: அபூ ஸயீத் இப்னு முஅல்லா ( ரலி)

நூல் 📚 : புகாரி 5️⃣0️⃣0️⃣6️⃣


The Prophet (peace and blessings of Allaah be upon him) called me while I was praying (in the mosque).

(Because I was in prayer) I did not respond to them immediately.

(After completing the prayer) 'O Messenger of Allah! I was praying. (That is why I did not respond to them immediately) '.

Did not the Prophet (peace and blessings of Allaah be upon him) say, 'When Allaah and His Messenger (peace and blessings of Allaah be upon him) call you, answer them' (Qur'aan 0️⃣8️⃣: 2️⃣4️⃣)? Asked. Then he said, 'Should I not teach you a great chapter in the Quran before you leave the school gate?' They held my hand as I asked.

As we were about to leave (the mosque) I said, (Remembering what they had promised) 'O Messenger of Allah! You asked me if I could teach you a great chapter in the Quran! ' I asked. The Prophet (peace and blessings of Allaah be upon him) said: The seven verses that are recited over and over again are the supreme Quran that has been bestowed upon me. '

Announcer: Abu Saeed Ibn Mu'alla (Rally)

Thread 📚: Reporter 5️⃣0️⃣0️⃣6️⃣


❤️குர்ஆன் வசனம்

💓தர்மங்களை நீங்கள் வெளிப்படையாகச் செய்தால் அது நல்லதே. அதை(ப் பிறருக்கு) மறைத்து ஏழைகளுக்கு வழங்கினால் அது உங்களுக்கு மிகச் சிறந்தது. உங்கள் தீமைகளுக்கு (அல்லாஹ் இதைப்) பரிகாரமாக ஆக்குகிறான். நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன்.💓

திருக்குர்ஆன்  2:271

💓It is good if you do the virtues openly. It is better for you to hide it (for others) and give it to the poor. Allah will make amends for your evils. GOD is fully Cognizant of everything you do.💓

Quran 2: 271

உபதேசம் : 123

"ஒருவருக்கு அல்லாஹ் மறுமையில் நன்மையை நாடினால்  அவருக்குரிய தண்டணையை இவ்வுலகில் முன்கூட்டியே அளித்துவிடுவான். ஒருவருக்கு அல்லாஹ் மறுமையில் தீமையை நாடினால் அவரின் பாவங்களை நிலுவையில் வைத்து விசாரிக்கப்படும் நாளில் கணக்கு தீர்ப்பான்" என்று நபி (ﷺ)  அவா்கள் கூறினாா்கள்.

அறிவிப்பவர் : அனஸ் (ரலி)  திா்மிதி : 2319

If Allah wills good for a person in the Hereafter, He will give him his punishment in advance in this world. If Allah seeks evil in a person in the Hereafter, his sins will be reckoned with on the Day of Judgment. "

Announcer: Anas (Rally) Timothy: 2319


இறை வசனம் : 633

"ஒருவர் மற்றவருடைய சுமையைச் சுமக்கமாட்டார்!"

திருக்குர்ஆன் : 53:39

One does not carry the burden of the other! "

Quran: 53:39

Tuesday, October 26, 2021

ஸஹீஹ் புகாரி📚: 7️⃣3️⃣8️⃣7️⃣,7️⃣3️⃣8️⃣8️⃣

 அபூ பக்ர் அஸ்ஸித்தீக்(ரலி) அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம், இறைத்தூதர் அவர்களே! தொழுகையில் இறுதி அமர்வில் நான் ஓத வேண்டிய ஒரு பிரார்த்தனையை எனக்குக் கற்றுத் தாருங்கள்' என்று கேட்டார்கள்.

நபி(ஸல்) அவர்கள், இறைவா! எனக்கு நானே அதிகமாக அநீதியிழைத்துக் கொண்டேன். உன்னைத் தவிர பாவங்களை எவரும் மன்னிக்கமாட்டார். எனவே, எனக்கு உன் தரப்பிலிருந்து பாவ மன்னிப்பை வழங்குவாயாக. நீயே அதிகம் மன்னிப்பவனாகவும் கருணைபுரிபவனாகவும் இருக்கிறாய்! என்று கூறுங்கள் என்றார்கள்.

அறிவிப்பவர்🗣️:அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி)

ஸஹீஹ் புகாரி📚: 7️⃣3️⃣8️⃣7️⃣,7️⃣3️⃣8️⃣8️⃣

Abu Bakr al-Assidiq (Rali) said to the Prophet (PBUH), O Messenger of Allah! Teach me a prayer that I should recite in the final session of prayer. '

The Prophet (pbuh) said, Lord! I have done myself more injustice. No one forgives sins except you. So, grant me forgiveness of sins on your part. You yourself are more forgiving and merciful! Say that.

Announcer: Abdullah Ibn Amr (Rali)

Sahih Bukhari: 7️⃣3️⃣8️⃣7️⃣, 7️⃣3️⃣8️⃣8️⃣

உபதேசம் : 122

👍உங்களில் எவரும் தமக்கு நேர்ந்த எந்தத் துன்பத்தின் காரணத்தினாலும் மரணத்தை விரும்பிட வேண்டாம். அவ்வாறு அவர் ஏதேனும் செய்தேயாகவேண்டும் என்றிருந்தால் “இறைவா ! (நான்) உயிர் வாழ்வது எனக்கு நன்மையாக இருப்பின் என்னை உயிர் வாழச் செய்வாயாக ! நான் இறந்து போய்விடுவதே எனக்கு நன்மையாக இருப்பின் எனக்கு இறப்பைத் தருவாயாக !“ என்று கேட்கட்டும்" என்று நபி  (ﷺ)  அவர்கள் கூறினாா்கள்👍

👍அறிவிப்பவா்: அனஸ் இப்னு மாலிக் (ரலி) புகாாி : 5671👍

👍None of you should wish for death because of any suffering that has befallen you. If he had to do something like that, “Lord! If it is good for me to live, let me live! If it is better for me to die, then let me die! ”👍

👍Announcer: Anas ibn Malik (Rali) Bukhai: 5671👍

இறை வசனம் : 632

👍உங்களை நீங்களே பரிசுத்தமாகக் கருதிக் கொள்ளாதீர்கள்! (இறை) அச்சமுடையவர் யார் என்பதை அவனே நன்கறிவான்.👍

👉திருக்குர்ஆன் : 53:32👈

👍Do not consider yourself holy! He knows best who fears.👍

👉Quran: 53:32👈

தினமும் ஒரு கேள்விகள் - 7

கேள்வி- 7. "அல்ஹம்து லில்லாஹி கஸீரன் தய்யிபன் முபாரக்கன் ஃபீஹி, ஃகைர மக்ஃபிய்யின் வலா முவத்த இன் வலா முஸ்தஃக்னன் அன்ஹு ரப்பனா” மேற்குறிப்பிடப்பட்டுள்ள துஆ எந்த சந்தர்ப்பத்தில் ஓத வேண்டும் ?

A- கணவனை இழந்தவர்கள் ஓத வேண்டிய துஆ 

B- சாப்பாடு சாப்பிட்ட பின்பு ஓதும் துஆ 

C- மழை அதிகமாக பொழியும் போது ஓதும் துஆ 

D- மணமக்களை வாழ்த்த ஓதும் துஆ 


பதில்- B- சாப்பாடு சாப்பிட்ட பின்பு ஓதும் துஆ


حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ ثَوْرٍ، عَنْ خَالِدِ بْنِ مَعْدَانَ، عَنْ أَبِي أُمَامَةَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ إِذَا رَفَعَ مَائِدَتَهُ قَالَ "" الْحَمْدُ لِلَّهِ كَثِيرًا طَيِّبًا مُبَارَكًا فِيهِ، غَيْرَ مَكْفِيٍّ، وَلاَ مُوَدَّعٍ وَلاَ مُسْتَغْنًى عَنْهُ، رَبَّنَا "". 

பாடம்: 54 உணவு உண்டபின் சொல்ல வேண்டிய பிரார்த்தனை

 அபூ உமாமா (ரலி) அவர்கள் கூறியதாவது :

நபி (ஸல்) அவர்கள் (சாப்பிட்டு முடித்தபின்) தமது உணவு விரிப்பை எடுக்கும் போது, ‘‘அல்ஹம்து லில்லாஹி கஸீரன் தய்யிபன் முபாரக்கன் ஃபீஹி, ஃகைர மக்ஃபிய்யின் வலா முவத்தஇன் வலா முஸ்தஃக்னன் அன்ஹு ரப்பனா” என்று பிரார்த்திப்பார்கள். 

(பொருள்: அதிகமான, தூய்மையான, வளமிக்க எல்லாப் புகழும் (நன்றியும்) அல்லாஹ்வுக்கே உரியது. இறைவா! இப்புகழ் முற்றுப்பெறாதது; கைவிடப்படக் கூடாதது; தவிர்க்க முடியாதது ஆகும்.)

( புகாரி : 5458 )

குர்ஆன் வசனம்

 நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! மறுமைக்காக தாம் செய்த வினையை ஒவ்வொருவரும் கவனிக்கட்டும். அல்லாஹ்வை அஞ்சுங்கள்! நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் நன்கறிந்தவன்.

அல்லாஹ்வை மறந்தோரைப் போல் ஆகி விடாதீர்கள்! அவர்களையே அவர்களுக்கு அவன் மறக்கச் செய்து விட்டான். அவர்களே குற்றவாளிகள்.

திருக்குர்ஆன்  59:18-19

Believers! Fear Allah! Let everyone notice the reaction they have made to the Hereafter. Fear Allah! GOD is fully Cognizant of everything you do.

Do not forget Allah! He has made them forget themselves. They are the culprits.

Quran 59: 18-19

இறை வசனம் : 631

👍👍பெரும்பாவங்களையும் வெட்கக்கேடானவற்றையும் விட்டு யார் விலகிக் கொள்கிறாரோ அவர் மன்னிப்பு கேட்டால் உமது இறைவன் தாராளமாக மன்னிப்பவன்.

திருக்குர்ஆன் : 53:32

👍Your Lord is the Most Forgiving of those who turn away from great sins and shame.👍

Quran: 53:32

உபதேசம் : 121

💓மக்களிடம் உள்ள இரு குணங்கள் இறை மறுப்பாகும்"💓

👉1. பரம்பரையைக் குறை கூறுவது. 

👉2. இறந்தவருக்காக ஒப்பாரிவைப்பது.

என்று நபி (ﷺ)  அவர்கள் கூறினார்கள்👍

👉அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி)  முஸ்லிம் : 121👈

💓The two qualities that people have are atheism. "💓

👉1. Criticism of heredity.

👉2. Commemoration for the deceased.

👉The Prophet (peace and blessings of Allaah be upon him) said:👍

Announcer: Abu Hurairah (Rally) Muslim: 121👈

இறை வசனம் : 630

💓தீமை செய்தோரை அவர்கள் செய்து கொண்டிருந்ததன் காரணமாக (அவன்) தண்டிப்பான். நன்மை செய்து கொண்டிருப்போருக்கு (அவன்) அழகிய கூலியை  கொடுப்பான்.💓

👉திருக்குர்ஆன் : 53:31👈

💓He will punish the evildoers for what they used to do. He will reward those who do good.💓

👉Quran: 53:31👈

உபதேசம் : 120

பெருநாள் வந்துவிட்டால் நபி (ﷺ) அவர்கள் (தொழுகைக்கு போவதற்கும் வருவதற்கும்) பாதையை மாற்றிக் கொள்வார்கள்.

அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி)  புகாரி : 986

When the great day comes, the Prophet () will change the path (for going and coming to prayer).

Announcer: Jabir (Rally) Complainant: 986

நபி (ஸல் )அவர்கள் கூறினார்கள்

நபி (ஸல் )அவர்கள் கூறினார்கள்.

வாங்கும் போதும் விற்கும் போதும்.

விளை குரைக்கும்பொளுதும் பெருந்தன்மையாக*

நடந்து கொள்ளும் மனிதர்களுக்கு அல்லாஹ் அருல் புரிவானாக

என ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்

புகாரி ,2076

Sunday, October 24, 2021

தினமும் ஒரு கேள்விகள் - 6

கேள்வி- 6. ஹதீஸ் கலையில் _ "முத்தஃபகுன் அலைஹி"_ என்ற அரபு பதத்தால் அறியப்படும் ஹதீஸ் கிரந்தங்கள் எவை


A- திர்மிதி மற்றும் அபூ தாவூத்

B- திர்மிதி மற்றும் அபூ தாவூத்

C- ரியாழுஸ் ஸாலிஹீன்

D- புகாரி மற்றும் முஸ்லீம்


பதில்- D- புகாரி மற்றும் முஸ்லீம்


ஹதீஸ்கலை வல்லுனர்களில் ஒருவரான இமாம் இப்னு ஸலாஹ்(ரஹ்) அவர்கள் ஸஹீஹான ஹதீஸ்களை ஏழு வகையாகப் பிரித்துள்ளார்கள்.

முதலாம் வகை - புகாரீ, முஸ்லிம் ஆகிய இரண்டிலும் இடம் பெற்ற ஹதீஸ்.

இரண்டாம் வகை - புகாரீயில் மட்டும் இடம் பெற்ற ஹதீஸ்.

மூன்றாம் வகை - முஸ்லிமில் மட்டும் இடம் பெற்ற ஹதீஸ்.

நான்காம் வகை - புகாரீ, முஸ்லிம் இரண்டிலும் இடம் பெறாவிட்டாலும் அவர்கள் இருவரும் கடைபிடிக்கும் நிபந்தனைகளுக்கு உட்பட்ட ஹதீஸ்.

ஐந்தாம் வகை - புகாரீயில் இடம் பெறாவிட்டாலும் புகாரீயின் நிபந்தனைக்கு உட்பட்ட ஹதீஸ்.

ஆறாம் வகை - முஸ்லிமில் இடம் பெறாவிட்டாலும் முஸ்லிமின் நிபந்தனைக்கு உட்பட்ட ஹதீஸ்.

ஏழாம் வகை - புகாரீ, முஸ்லிமில் இடம் பெறாத, இரண்டின் நிபந்தனைகளுக்கும் உட்படாத, பிற ஹதீஸ் கிரந்தங்களில் இடம் பெற்றுள்ள ஸஹீஹான ஹதீஸ்.

முத்தஃபக்குன் அலைஹி

ஒரே ஹதீஸ் புகாரீயிலும் முஸ்லிமிலும் இடம் பெற்றிருந்தால் அது ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் ஏழு வகைகளில் முதல் தரத்தை அடைகிறது. இவ்வகை ஹதீஸ்களை முத்தஃபக்குன் அலைஹி என ஹதீஸ்கலையில் குறிப்பிடுவர். இது ஆதாரப் பூர்வமான ஹதீஸ் என்பதில் இமாம் புகாரீ அவர்களும் இமாம் முஸ்லிம் அவர்களும் ஒன்றுபட்டுள்ளனர் என்பது அதன் பொருள்.

முத்தஃபக்குன் அலைஹி என்ற ஆதாரப் பூர்வமான நபிமொழிகளில் முதல்தர வகையை உள்ளடக்கிய நபிமொழிக் களஞ்சியம்தான் அல்லுஃலுவு வல்மர்ஜான். அல்லாஹ்வின் அருள்மறை அல்குர்ஆனுக்கு அடுத்த உயர்ந்த தரத்தில் போற்றப்படும் ஹதீஸ் நூல்கள்  ஸஹீஹுல் புகாரீ மற்றும் ஸஹீஹ் முஸ்லிம் ஆகும்.

Saturday, October 23, 2021

இஸ்லாமிய சமுதாயமே பெண் பிள்ளைகள் விசயத்தில் கவனமாக இருங்கள்

இஸ்லாமிய சமுதாயமே பெண் பிள்ளைகள் விசயத்தில் கவனமாக இருங்கள்

அல்லாஹ் எல்லாரையும் பாதுகாக்கவேண்டும்

🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻

இணைகற்பிக்கும்_ஆண்கள் நம்பிக்கை கொள்ளும் வரை அவர்களுக்கு (உங்கள் பெண்களை) மணமுடித்துக் கொடுக்காதீர்கள் ! இணை கற்பிப்பவன் உங்களை எவ்வளவு தான் கவர்ந்தாலும் அவனை விட நம்பிக்கை கொண்ட அடிமை சிறந்தவன்.

அவர்கள் நரகத்திற்கு அழைக்கின்றனர். 

அல்லாஹ் தனது விருப்பப்படி சொர்க்கத்திற்கும் மன்னிப்பிற்கும் அழைக்கிறான். படிப்பினை பெறுவதற்காக (இறைவன்) தனது வசனங்களை மனிதர்களுக்குத் தெளிவுபடுத்துகிறான்.

திருக்குர்ஆன்  2:221

May Allah protect everyone

Do not marry men (your women) until they believe in cohabitation! No matter how much the co-teacher impresses you, the believing slave is better than him.

They call to hell.

Allah invites to Paradise and forgiveness according to His will. (The Lord) clarifies His verses for the people so that they may learn a lesson.

Quran 2: 221

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்

நம்முடைய இறைவன் ஒவ்வொரு நாளும் கீழ் வானத்திற்கு இறங்கி இரவில் மூன்றில் ஒரு பகுதி இருக்கும் போது என்னிடம்

யாரேனும்       பிரார்த்தித்தால் அதை நான் அங்கிகறிக்கிறேன்  

யாரேனும்  என்னிடம் கேட்டாள் அவர்களுக்கு கொடுக்கிறேன்

யாரேனும் என்னிடம் பாவமன்னிப்புக் கேட்டால் அவரை நான் மன்னிக்கிறேன் என்று கூறுவான்.

என அபூ ஹுரைரா (ரலி) அறிவித்தார்கள்.

புகாரி 1145

The Prophet (pbuh) told them

Our Lord comes down to heaven every day and tells me when there is a third of the night

I recognize it if anyone prays

If anyone asks me I give it to them

If anyone asks me for forgiveness he will say I forgive him.

Abu Hurairah (Rally) announced.

உபதேசம் : 119

அரஃபா (துல்ஹஜ் ஒன்பதாவது) நாளில் நோன்பு நோற்பது  முந்தைய ஓராண்டிற்கும் பிந்தைய ஓராண்டிற்கும் அது பாவப் பரிகாரமாக அமையும்" என்று நபி (ﷺ) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூ கத்தாதா (ரலி) முஸ்லிம் : 2152

Fasting on the day of 'Arafah (ninth of Tulhaj) is after the previous one year

It will be the expiation for sins for one year. "

Announcer: Abu Qatada (Rally) Muslim: 2152

இறை வசனம் : 629

தனது வழியை விட்டும் தவறியவன் யார் ? நேர்வழி பெற்றவன் யார் ? என்பதை உமது இறைவன் நன்கறிவான்.

திருக்குர்ஆன் : 53:30

Who has strayed from his path? Who is guided? Your Lord knows best.

Quran: 53:30

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்

 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ், 

"என்னைக் குறித்து என் அடியான் எப்படி நினைக்கிறானோ, 

அப்படியே நான் அவனிடம் நடந்துகொள்கிறேன். 

அவன் என்னை நினைவு கூரும்போது அவனுடன் நான் இருப்பேன்" என்று கூறினான்.

நூல் - முஸ்லிம் : 5294

உபதேசம் : 118

"யார் கழுத்தை நெரித்து தற்கொலை செய்து கொள்கிறாரோ நரகிலும் தன்னுடைய கழுத்தை நெரித்து கொண்டிருப்பார்.  யார் தம்மைத்தாமே (ஆயுதத்தால்) தாக்கி தற்கொலை செய்து கொள்கிறாரோ நரகிலும் தம்மை ஆயுதத்தால் தாக்கி கொண்டிருப்பார்.“ என்று நபி (ﷺ)  அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூ ஹுரைரா(ரலி)  புகாரி : 1365

Anyone who commits suicide by strangling his neck will be strangled in hell. Whoever commits suicide by attacking himself (with a weapon) will be attacking himself with a weapon in Hell. ”The Prophet (ﷺ) said.

Announcer: Abu Hurairah (Rally) Complainant: 1365

இறை வசனம் : 628

💓இவ்வுலக வாழ்க்கையைத் தவிர (வேறு எதையும்) நாடாமல் நமது அறிவுரையைப் புறக்கணிப்பவரை அலட்சியம் செய்வீராக!

திருக்குர்ஆன் : 53:29

💓Ignore anyone who ignores our advice without seeking (anything) other than worldly life!

Quran: 53:29


தினமும் ஒரு கேள்விகள் - 5

கேள்வி - 5. "சூரா பகரா" 'வசனம் 275 ல்' வட்டி சாப்பிடுவர்கள் மறுமையில் எந்த நிலையில் எழுப்பப்படுவார்கள் என அல்லாஹ் குறிப்பிடுகிறான் ? 


A- செவிடர்களாக 

B- குருடர்களாக 

C- பைத்தியம் பிடித்தவர்களாக 

D- முகத்தில் சதையற்றவர்களாக 


பதில்C- பைத்தியம் பிடித்தவர்களாக


اَلَّذِيْنَ يَاْكُلُوْنَ الرِّبٰوا لَا يَقُوْمُوْنَ اِلَّا كَمَا يَقُوْمُ الَّذِىْ يَتَخَبَّطُهُ الشَّيْطٰنُ مِنَ الْمَسِّ‌ؕ ذٰ لِكَ بِاَنَّهُمْ قَالُوْۤا اِنَّمَا الْبَيْعُ مِثْلُ الرِّبٰوا‌ ۘ‌ وَاَحَلَّ اللّٰهُ الْبَيْعَ وَحَرَّمَ الرِّبٰوا‌ ؕ فَمَنْ جَآءَهٗ مَوْعِظَةٌ مِّنْ رَّبِّهٖ فَانْتَهٰى فَلَهٗ مَا سَلَفَؕ وَاَمْرُهٗۤ اِلَى اللّٰهِ‌ؕ وَمَنْ عَادَ فَاُولٰٓٮِٕكَ اَصْحٰبُ النَّارِ‌ۚ هُمْ فِيْهَا خٰلِدُوْنَ‏

யார் வட்டி (வாங்கித்) தின்கிறார்களோ, அவர்கள் (மறுமையில்) ஷைத்தானால் தீண்டப்பட்ட ஒருவன் பைத்தியம் பிடித்தவனாக எழுவது போலல்லாமல் (வேறுவிதமாய் எழ மாட்டார்கள்: இதற்குக் காரணம் அவர்கள், “நிச்சயமாக வியாபாரம் வட்டியைப் போன்றதே” என்று கூறியதினாலேயாம்; அல்லாஹ் வியாபாரத்தை ஹலாலாக்கி, வட்டியை ஹராமாக்கியிருக்கிறான்; ஆயினும் யார் தன் இறைவனிடமிருந்து நற்போதனை வந்த பின் அதை விட்டும் விலகிவிடுகிறானோ, அவனுக்கு முன்னர் வாங்கியது உரித்தானது - என்றாலும் அவனுடைய விவகாரம் அல்லாஹ்விடம் இருக்கிறது; ஆனால் யார் (நற்போதனை பெற்ற பின்னர் இப்பாவத்தின் பால்) திரும்புகிறார்களோ அவர்கள் நரகவாசிகள் ஆவார்கள்; அவர்கள் அதில் என்றென்றும் தங்கிவிடுவார்கள்.

Those who devour usury 'interest' will not stand except as stand one whom the Evil one by his touch Hath driven to madness. That is because they say: "Trade is like usury," but Allah hath permitted trade and forbidden usury. Those who after receiving direction from their Lord, desist, shall be pardoned for the past; their case is for Allah (to judge); but those who repeat (The offence) are companions of the Fire: They will abide therein (for ever).

( சூரா பகரா : வசனம் 275 )

உபதேசம் : 117

 "யூதர்களும் கிறிஸ்தவர்களும் (தம் தாடிகளுக்கும் தலைமுடிக்கும்) சாயமிடுவதில்லை. எனவே நீங்கள் (அவற்றிற்கு கருப்பு அல்லாத சாயமிட்டு) அவர்களுக்கு மாறு செய்யுங்கள்" என்று நபி  (ﷺ)  அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூ ஹுரைரா(ரலி)  புகாரி : 3462

The Prophet (peace and blessings of Allaah be upon him) said, "Jews and Christians do not dye (their beards and hair).

Announcer: Abu Hurairah (Rally) Complainant: 3462

இறை வசனம் : 627

ஊகம் உண்மைக்கு எதிராக ஒரு பயனும் தராது.

திருக்குர்ஆன் 53:28

Speculation is useless against the truth.

Quran 53:28

Wednesday, October 20, 2021

தினமும் ஒரு கேள்விகள் - 4

கேள்வி- 4. எந்த உணவை சாப்பிட்டால் அது தேகத்தை கொழுக்கவும் வைக்காது அவரின் பசியையும் தீர்த்து வைக்காது என்று அல்லாஹ் சூரத்துல் காஷியாவில் குறிப்பிடுகிறான் ?


A- ஸைதூன் மரத்தின் பழம்

B- முட்கள் உள்ள விஷச் செடி 

C- ஸக்கூம் மரம்


பதில்- B- முட்கள் உள்ள விஷச் செடி 

هَلْ اَتٰٮكَ حَدِيْثُ الْغَاشِيَةِؕ‏

88:1. சூழ்ந்து மூடிக்கொள்வதின் (கியாம நாளின்) செய்தி உமக்கு வந்ததா?

Has there come to you the description of the Overwhelming Event?

88:2 وُجُوْهٌ يَّوْمَٮِٕذٍ خَاشِعَةٌ ۙ‏

88:2. அந்நாளில் சில முகங்கள் இழிவுபட்டிருக்கும்.

Many faces that day will be humbled,

88:3 عَامِلَةٌ نَّاصِبَةٌ ۙ‏

88:3. அவை (தவறான காரியங்களை நல்லவை என கருதி) செயல்பட்டவையும் (அதிலேயே) உறுதியாக நின்றவையுமாகும்.

laboring, exhausted

88:4 تَصْلٰى نَارًا حَامِيَةً ۙ‏

88:4. கொழுந்து விட்டெறியும் நெருப்பில் அவை புகும்.

They will enter into the scorching fire

88:5 تُسْقٰى مِنْ عَيْنٍ اٰنِيَةٍؕ‏

88:5. கொதிக்கும் ஊற்றிலிருந்து, (அவர்களுக்கு) நீர் புகட்டப்படும்.

They will be made to drink water from a boiling spring

88:6 لَـيْسَ لَهُمْ طَعَامٌ اِلَّا مِنْ ضَرِيْعٍۙ‏

88:6. அதில் அவர்களுக்கு கருவேல விஷச் செடிகளைத் தவிர, வேறு உணவில்லை.

There will be no food for them except from a poisonous thorny plant

88:7 لَّا يُسْمِنُ وَلَا يُغْنِىْ مِنْ جُوْعٍؕ‏

88:7. அது அவர்களைக் கொழு(த்துச் செழி)க்கவும் வைக்காது; அன்றியும் பசியையும் தணிக்காது.

that will neither nourish, nor satisfy hunger

உபதேசம் : 116


💓நரகமும் சொர்க்கமும் வாக்குவாதம் 
செய்துகொண்டன. 
நரகம் ”அக்கிரமக்காரர்களும் ஆணவம் கொண்டவர்களுமே எனக்குள் நுழைவார்கள்” என்று சொன்னது. 
சொர்க்கம் ”பலவீனர்களும் ஏழைகளுமே எனக்குள் நுழைவார்கள்” என்று சொன்னது'
என்று நபி (ﷺ)   அவர்கள் கூறினார்கள்.💓

👉அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி) முஸ்லிம் : 5469👈

Tuesday, October 19, 2021

மீலாது விழா கொண்டாடுவது இஸ்லாத்திற்கு விரோதமான செயல்

மீலாது விழா கொண்டாடுவது

இஸ்லாத்திற்கு விரோதமான செயல்:-சுன்னத் வல் ஜமாஅத் மதரஸா ஃபத்வா!

ஃபத்வா - தமிழாக்கம்

தாருல் உலூம் தேவ் பந்த் மதரஸா பத்வா குழு:

நாள் : 2- முஹர்ரம் - 1426 ஹிஜ்ரி

பத்வா கொடுத்தவர் : ஹசன் மஹ்மூத் 

கேள்வி :- ரபியுல் அவ்வல் மாதத்தில் குறிப்பாக பிறை 12 இல் மௌலூது ஓதுவது அந்நாட்களில் குறிப்பிட்ட கவிதை வரிகளை படிப்பது அனுமதிகபட்டதா? இல்லை அனுமதிக்கபடாததா? என்பதை தெளிவுபடுதவும்?


பதில் : - அல்லாஹ்விற்கே புகழ் அனைத்தும். அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களது மீது சலாம் உண்டாவதாக.

நபி(ஸல்) அவர்களை பற்றி நினைவு கூறுவது, வணக்கங்களாகிய தொழுகை,நோன்பு,ஹஜ்,ஜிஹாத் போன்ற காரியங்களாக இருந்தாலும் சரியே! நடவடிகைகளாக்கிய தூங்குவது,நடப்பது,எழுவது,அமர்வது ஆகியவைகளாகிய இருந்தாலும் சரியே!

நபி(ஸல்) அவர்களின் ஆடைகளை பற்றி குறிப்பதாக இருந்தாலும் சரியே! நபி(ஸல்) அவர்களின் பிறப்பு மற்றும் குழந்தை பருவத்தை குறிப்பிடுவதாக இருந்தாலும் சரியே! ஆக இதுபோன்ற அனைத்து காரியங்களிலும் அவர்களை நினைவு கூறுவதின் மூலம் அறிவுறையையும்,படிப்பினையையும் பெறுவது நமக்கு நன்மையையும்,பரக்கத்தையும் தருவது என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை .

இதுபோன்ற விசியங்களில் ஆதாரமற்ற தகவல்களையும்,செய்திகளையும் மற்றும் குறிப்பிட்ட வழிமுறைகளையும் தவிர்ப்பது அவசியமாகும். ஏனெனில் மீலாது விழா நடத்துவது இதற்க்கு எவ்விதமான ஆதாரமும் இல்லை. மேலும் இது கெட்ட பித்தத்(பித்தத் செய்யா) ஆகும். இந்த மீலாத் விழா மற்றும் மௌலூத் ஓதுவது குரான்,ஹதீஸில் இல்லாத ஒன்றாகும்.

மேலும் சஹாபாக்கள்,தாபீன்கள்,தபூதாபீன்கள் ஆகியவரிடமிருந்தும் எவ்வித ஆதாரமும் கிடைக்கா பெறவில்லை. 

ஹிஜ்ரி 600 ஆண்டு வரை இந்த உம்மத்தில் மீலாத் என்கிற ஒரு நிகழ்வே இல்லாத நிலையில் இருந்தது. இது 600 ஆண்டுகளுக்கு பிறகுதான் இது வந்தது/ இது ஆரம்பமாகும் போது இதை எதிர்பதற்காக அல்லாமா இப்னு அமீர் அல் ஹஜ் மக்கி(ரஹ்) அவர்கள் தன்னுடைய அல்-மத்கள் என்ற நூலில் விரிவான ஆதாரங்களை கொண்டு இந்த மீலாத்தை அவர்கள் மறுப்பு அளித்தார்கள். இன்று வரையிலும் சத்தியத்தில் உள்ள அறிஞர் பெரும்மக்கள் இந்த மீலாத்தை எதிர்த்து கொண்டே தான் வருகின்றனர்.

நபிமொழி

நபிமொழி

ஒரு நபித்தோழர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து என் தந்தை எங்கே இருக்கிறார் என்று கேட்டார். 
'நரகத்தில்' என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள். இதைக் கேட்டு அழுது கொண்டே அவர் திரும்பிச் சென்றார். 
அவரைத் திரும்பவும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அழைத்து 'என் தந்தையும் உன் தந்தையும் நரகத்தில் தான் உள்ளனர்' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

நூல்: முஸ்லிம் 302

தினமும் ஒரு கேள்விகள் - 3

கேள்வி- 3. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : யார்  ஸுன்னாவை (எனது                             வழிமுறையை) கைவிடுகின்றாரோ, அவர் ___________________?


                    A- சுயமரியாதையை போக்கிக் கொண்டவருக்கு சமம் 

                    B- ஒரு ஜனாஸாவுக்கு சமம் 

                    C- மறுமையில் எனது பரிந்துரையை இழந்து விடுவார் 

                    D- என்னைச் சார்ந்தவர் அல்லர்


பதில்-  D- என்னைச் சார்ந்தவர் அல்லர்


حَدَّثَنَا سَعِيدُ بْنُ أَبِي مَرْيَمَ، أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، أَخْبَرَنَا حُمَيْدُ بْنُ أَبِي حُمَيْدٍ الطَّوِيلُ، أَنَّهُ سَمِعَ أَنَسَ بْنَ مَالِكٍ ـ رضى الله عنه ـ يَقُولُ جَاءَ ثَلاَثَةُ رَهْطٍ إِلَى بُيُوتِ أَزْوَاجِ النَّبِيِّ صلى الله عليه وسلم يَسْأَلُونَ عَنْ عِبَادَةِ النَّبِيِّ صلى الله عليه وسلم فَلَمَّا أُخْبِرُوا كَأَنَّهُمْ تَقَالُّوهَا فَقَالُوا وَأَيْنَ نَحْنُ مِنَ النَّبِيِّ صلى الله عليه وسلم قَدْ غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ وَمَا تَأَخَّرَ. قَالَ أَحَدُهُمْ أَمَّا أَنَا فَإِنِّي أُصَلِّي اللَّيْلَ أَبَدًا. وَقَالَ آخَرُ أَنَا أَصُومُ الدَّهْرَ وَلاَ أُفْطِرُ. وَقَالَ آخَرُ أَنَا أَعْتَزِلُ النِّسَاءَ فَلاَ أَتَزَوَّجُ أَبَدًا. فَجَاءَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ "" أَنْتُمُ الَّذِينَ قُلْتُمْ كَذَا وَكَذَا أَمَا وَاللَّهِ إِنِّي لأَخْشَاكُمْ لِلَّهِ وَأَتْقَاكُمْ لَهُ، لَكِنِّي أَصُومُ وَأُفْطِرُ، وَأُصَلِّي وَأَرْقُدُ وَأَتَزَوَّجُ النِّسَاءَ، فَمَنْ رَغِبَ عَنْ سُنَّتِي فَلَيْسَ مِنِّي "".

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது :

நபி (ஸல்) அவர்களுடைய துணைவியரின் வீடுகளுக்கு மூன்று பேர் கொண்ட குழுவினர் வந்து நபி (ஸல்) அவர்களின் வணக்க வழிபாடுகள் குறித்து வினாத் தொடுத்தனர்.2 

அது பற்றி அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டபோது, அவர்கள் நபி (ஸல்) அவர்களின் வணக்க வழிபாடுகளைக் குறைத்து மதிப்பிட்டதுபோல் தெரிந்தது. பிறகு (அவர்களே அதற்குச் சமாதானமும் கூறிக்கொண்டு), ‘‘முன்பின் தவறுகள் மன்னிக்கப்பட்டுவிட்ட நபி (ஸல்) அவர்கள் எங்கே? நாம் எங்கே?” என்று சொல்லிக்கொண்டனர்.

அவர்களில் ஒருவர், ‘‘(இனிமேல்) நான் என்ன செய்யப் போகிறேன் என்றால், எப்போதும் இரவில் தொழுது கொண்டே இருக்கப்போகிறேன்” என்றார். இன்னொருவர், ‘‘நான் ஒருநாள்கூட விடாமல் காலமெல்லாம் நோன்பு நோற்கப் போகிறேன்” என்று கூறினார். மூன்றாம் நபர் ‘‘நான் பெண்களைவிட்டு ஒதுங்கி யிருக்கப் போகிறேன். ஒருபோதும் மணமுடித்துக்கொள்ளமாட்டேன்” என்று கூறினார். 

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (அந்தத் தோழர்களிடம்) வந்து, ‘‘இப்படி இப்படியெல்லாம் பேசிக்கொண்டது நீங்கள்தானே! அறிந்து கொள்ளுங்கள்: அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களைவிட அதிகமாக நான் அல்லாஹ்வை அஞ்சுபவன் ஆவேன். அல்லாஹ்வைப் பயந்து நடப்பவன் ஆவேன். ஆயினும், நான் நோன்பு நோற்கவும் செய்கிறேன், விட்டுவிடவும் செய்கிறேன்; தொழவும் செய்கிறேன், உறங்கவும் செய்கிறேன்; மேலும், நான் பெண்களை மணமுடித்தும் உள்ளேன். ஆகவே, என் வழிமுறையை யார் கைவிடுகின்றாரோ அவர் என்னைச் சார்ந்தவர் அல்லர்” என்று சொன்னார்கள்.

( புகாரி: 5063 )

Anas ( Rali ) reported that: “Three men came to the houses of the wives of the Prophet ( Sal )  and asked how his worship was. When they were informed, they considered their own worship to be insignificant and said: 'Where are we in comparison to the Prophet ( Sal ) when Allah has forgiven his past and future sins?' One of them said: 'As for me, I shall offer prayer all night long.' Another said: 'I shall observe fasting perpetually, never to break it.' Another said: 'I shall abstain from women and will never marry.' The Prophet ( Sal ) then came to them and said: “Are you the people who said such things? I swear By Allah that I fear Allah more than you do, and I am most obedient and dutiful among you to Him, but still, I observe fasting (sometimes) and break it (at others); I perform (optional) prayer (at night sometimes) and sleep at night (at others); I also marry. So whoever turns away from my Sunnah (i.e., my way) is not from me.”

 [Al-Bukhari]





அல்குர்ஆன் 29:63

அல்குர்ஆன் 29:63 

"வானத்திலிருந்து தண்ணீரை இறக்கி பூமி செத்த பின் அதன் மூலம் அதற்கு உயிரூட்டுபவன் யார்?" என்று அவர்களிடம் நீர் கேட்டால் 'அல்லாஹ்' என்றே கூறுவார்கள். "அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்" என்று கூறுவீராக! மாறாக அவர்களில் அதிகமானோர் விளங்கிக் கொள்வதில்லை.

நூல் : புகாரி 6️⃣5️⃣1️⃣4️⃣

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இறந்து போனவரை 3️⃣ பொருட்கள் பின் தொடர்ந்து செல்கின்றன. (அவற்றில்) 2️⃣ திரும்பி விடுகின்றன. 1️⃣ மட்டுமே அவருடன் தங்கி விடுகின்றது.

அவரை அவருடைய குடும்பமும், செல்வமும், அவர் செய்த செயல்களும் பின் தொடர்ந்து செல்கின்றன. (அவற்றில்) அவருடைய குடும்பமும், செல்வமும் திரும்பி விடுகின்றன. அவருடைய செயல்கள் மட்டுமே அவருடன் தங்கிவிடும்.

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)

நூல் : புகாரி 6️⃣5️⃣1️⃣4️⃣

இறை வசனம் : 625



நீர் எழும் நேரத்தில் உமது 

இறைவனைப் புகழ்ந்து போற்றுவீராக!

திருக்குர்ஆன் : 52:48

உபதேசம் : 115

மூன்று பேரை விட்டு எழுதுகோல் உயர்த்தப்பட்டு விட்டது.

1. தூங்குபவர் விழிக்கும் வரை

2. சிறுவன் பெரியவரா  ஆகும் வரை

3. மனவளற்சி கன்றியவர் தெளிவாகும் வரை.

என்று நபி (ﷺ)  அவர்கள் கூறினார்கள்

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்கள்: நஸயீ 3378, 

அபூதாவூத் 3822, 

இப்னுமாஜா 2031

Monday, October 18, 2021

தினமும் ஒரு கேள்விகள் - 2

கேள்வி - 2 அன்பளிப்பு செய்த பொருளை திரும்ப பெறுபவன் 

                    எதற்கு சமம் என்று நபியவர்கள் கூறினார்கள் ?


                    A - சுயமரியாதையை போக்கிக் 
                          கொண்டவருக்கு சமம் 

                    B- ஒரு ஜனாஸாவுக்கு சமம்

                    C- வாந்தியெடுத்த பிறகு அதை 
                         மீண்டும் தின்கிற நாய்க்கு சமம் 

                    D- அடிமையை விடுவித்ததற்கு சமம்


பதில்-     C- வாந்தியெடுத்த பிறகு அதை 
                     மீண்டும் தின்கிற நாய்க்கு சமம்

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

தன் அன்பளிப்பைத் திரும்பப் பெறுபவன், வாந்தியெடுத்த பிறகு அதை மீண்டும் தின்கின்ற நாயைப் போன்றவன் ஆவான்.

இதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

( ஸஹீஹ் முஸ்லிம் : 2589 )

Ibn Abbas (Allah be pleased with them) reported: I heard Allah's Messenger (may peace be upon him) say: The similitude of one who gives a charity and then gets it back is like that of a dog which vomits and then eats its vomit.


தளம் பற்றி

👉தளம் பற்றி👈

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருநாமத்தால்..

அனைத்துப் புகழும் அகிலங்கள் அனைத்தையும் படைத்துப் இரட்ச்சித்து வருபவனான அல்லாஹ்வுக்கே உரித்தானது. அவனிடமே நாம் உதவி தேடுகிறோம்; அவனிடமே நாம் மன்னிப்பு கோருகிறோம்; அல்லாஹ் யாருக்கு நேர்வழி காட்டுகிறானோ அவரை யாராலும் வழி தவறச் செய்ய இயலாது; மேலும் யாரை அவன் வழி தவறச்செய்கிறானோ அவருக்கு நேர்வழி காட்டுபவர் யாருமில்லை.வணக்கத்திற்கு உரியவன் அல்லாஹ்வுத்தஆலாவைத் தவிர வேறு யாருமில்லை என்று நாங்கள் சாட்சி கூறுகிறோம்; மேலும் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்தஆலாவின் உண்மை அடியாரும் இறுதி தூதரும் ஆவார்கள் எனவும் சாட்சி கூறுகிறோம்.

அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் நபிகள் நாயம் (ஸல்) அவர்களின் மீதும், அவர்களின் குடும்பத்தார்கள், தோழர்கள் மீதும், நம் மீதும் மற்றும் கியாம நாள் வரை அல்லாஹ்வின் தூதரைப் பின்பற்றக் கூடிய முஸ்லிம்கள் அனைவரின் மீதும் உண்டாவதாக. ஆமீன்.

அன்பான சகோதர சகோதரிகளே, அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்.

இறைவனின் பேரருளால் நாங்கள் இந்த வலைதளத்தை துவக்கியிருப்பதன் நோக்கம் இறைவனின் திருப்பொருத்தத்தை நாடியே தவிர வேறில்லை. இறைவன் எங்களின் இந்த முயற்சியை அங்கீகரித்து மக்கள் இதன் மூலம் பயன்பெறும் வகையில் ஆக்கியருள பிரார்த்திக்கிறோம்.

இந்த வலைதளம்  எந்த ஒரு இயக்க சார்போ அல்லது எதிர்ப்போ இல்லாதது.  இறைவன் நமக்கு சூட்டிய பெயராகிய ‘முஸ்லிம்கள்’ என்ற அடிப்படையில் ‘நாம் அனைவரும் மார்க்க சகோதரர்கள்’ என்பதைக் குறிக்கோளாகக் கொண்டது.

இதில் உள்ள ஆக்கங்கள் அனைத்தும் குர்ஆன் மற்றும் ஆதாரப் பூர்வமான ஹதீஸ்களின் அடிப்படையில் அமைந்தது. இதில் தவறுகள் இருந்து யாரேனும் தகுந்த ஆதாரங்களுடன் சுட்டிக்காட்டினால் மிகுந்த நன்றியுடன் திருத்திக் கொள்வோம். மேலும் இந்த வலைதளத்திற்கான வளர்ச்சிக்கு உங்களின் ஆதரவும் ஆலோசனைகளும் வரவேற்கப்படுகின்றன.

இந்த வலைதளத்தில் இடம்பெறும் ஆக்கங்கள் அனைத்தும் மக்கள் பயன் பெறுவதற்காகத்தான். எனவே இதில் உள்ள ஆக்கங்கள் அனைத்தும் காப்புரிமை இல்லாதது. இதில் உள்ளவாறே எவ்வித மாற்றமும் இல்லாமல் தங்களுடைய தளங்களிலோ அல்லது வலைப்பூவிலோ வெளியிடலாம்.

இந்த வலைத்தளத்தின் முக்கிய குறிக்கோள், சமுதாயத்தில் மார்க்கத்தின் பெயரால் நடைபெறும் மார்க்கத்திற்கு முரணான ஷிர்க், பித்அத் போன்ற அநாச்சாரங்களைக் களைவதற்காகவும், மார்க்க அடிப்படை விசயங்களைத் தேவைப்படுவோருக்கு கற்றுக் கொடுப்பதற்காகவும் முஸ்லிம் அல்லாதவர்களுக்கு மார்க்கத்தை எடுத்துக் கூறுவதற்காகவும் தானே தவிர மார்க்கத்தில் பிரிவுகளை உண்டாக்குவதற்கல்ல! எனவே மார்க்கத்தின் பெயரால் பல பிரிவுகளாகச் சிதறுண்டு கிடக்கின்ற இயக்கங்கள், பிரிவுகள், ஜமாஅத்துகள் ஆகியவற்றின் ஒற்றுமையை கருத்தில் கொண்டு தொலை நோக்குப் பார்வையுடன் கூடிய, சமுதாய நலனில் அக்கரையுடைய சமுதாய ஒற்றுமையை வலியுறுத்தும் கட்டுரைகள், உரைகள்,  கவிதைகள் வரவேற்கப்படுகின்றது. இத்தகைய ஆக்கங்களுக்கு அதிக முன்னுரிமை அளிக்கப்படும்.

அல்லாஹ்வின் சத்திய மார்க்கத்தை அதன் தூய வடிவில் தமிழ் பேசும் மக்களிடையே எடுத்துச் கூற எனக்கும் உங்களுக்கும் அதிக ஆர்வத்தைத் தந்து அதன் மூலம் ஈருலகிலும் அதிக பலன்களை அல்லாஹ் நமக்கு அருள்வானாகவும். ஆமின்.

தங்களின் இஸ்லாமிய சகோதரன்.

ஸஹீஹ் புஹாரி : 6️⃣5️⃣8️⃣6️⃣.

   بسْــــــــمِ ﷲِالرَّحْمَنِ الرَّحِيـــــْــمِ

                        🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'

மறுமைநாளில் என் தோழர்களில் சிலர் என்னிடம் ('அல்கவ்ஸர்') தடாகத்திற்கு வருவார்கள். அப்போது அவர்கள் (அல்கவ்ஸர்) தடாகத்தைவிட்டு விரட்டப்படுவார்கள்.

உடனே நான் 'இறைவா! (இவர்கள்) என் தோழர்கள்' என்பேன். அதற்கு இறைவன் *'உங்களுக்குப் பின்னால் இவர்கள் (மார்க்கத்தில் புதிது புதிதாக) உருவாக்கியது குறித்து உங்களுக்குத் தெரியாது. இவர்கள் திரும்பிப் பார்க்காமல் வந்த வழியே (தங்கள் பழைய மதத்திற்குத்) திரும்பிச் சென்றார்கள்' என்று சொல்வான்.

இதை நபித்தோழர்கள் சிலரிடமிருந்து ஸயீத் இப்னு முசய்யப்(ரஹ்) அறிவித்தார்.

அறிவிப்பாளர் - ஷுஐப் இப்னு அபீ ஹம்ஸா(ரஹ்) அவர்களின் அறிவிப்பில், 'அவர்கள் (அல்கவ்ஸர் தடாகத்திலிருந்து) ஒதுக்கப்படுவார்கள்' என்றும்,

அறிவிப்பாளர் - உகைல் இப்னு காலித்(ரஹ்) அவர்களின் அறிவிப்பில் 'விரட்டப்படுவார்கள்' என்றும் இடம் பெற்றுள்ளது.


ஸஹீஹ் புஹாரி : 6️⃣5️⃣8️⃣6️⃣.

அத்தியாயம் : 8️⃣1️⃣.


உபதேசம் : 114




👍 " உங்களில் ஒருவர் விழித்து எழும் போது, அவர் தாம் உளூச் செய்யும் தண்ணீரில் தம் கையை நுழைப்பதற்கு முன்னர் தம் கைகளை கழுவிக் கொள்ளட்டும். ஏனென்றால், (தூக்கத்தில்) தம் கை எங்கே இருந்தது ? என்பதை உங்களில் எவரும் அறியமாட்டார்" என்று  நபி (ﷺ ) அவர்கள் கூறினார்கள்.👍

 👉அறிவிப்பவர் : அபூ ஹுரைரா(ரலி)  புகாரி : 162👈

👍When one of you wakes up, let him wash his hands before he puts his hand in the water he spits. Because where was his hand (in his sleep)? None of you will know that.👍

👉The Prophet (peace and blessings of Allaah be upon him) said:👈

இறை வசனம் : 624

 

💓யார் நம்பிக்கை கொண்டு அவர்களின் சந்ததிகளும் 

நம்பிக்கை கொள்வதில் அவர்களைப் பின்பற்றினார்களோ 

அவர்களுடன் அவர்களின் சந்ததிகளைச் சேர்ப்போம். 

அவர்களின் செயல்களில் எதையும் குறைக்க மாட்டோம்.💓

👉திருக்குர்ஆன் : 52:21👈

Sahih Bukhari 5429

💓'இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'💓

👉பயணம் வேதனையின் ஒரு பகுதியாகும். உங்கள் தூக்கத்தையும் உணவையும் அது தடுத்துவிடுகிறது. எனவே, பயணி தாம் நாடிச் சென்ற நோக்கத்தை முடித்துக் கொண்டுவிட்டால், உடனே தம் வீட்டாரை நோக்கி விரைந்து வரட்டும்! 

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.👈

👉Narrated Abu Huraira: The Prophet said,   Traveling is a kind of torture, as it prevents one from sleeping and eating! So when one has finished his job, he should return quickly to his family. 

 نبی کریم صلی اللہ علیہ وسلم نے فرمایا کہ سفر عذاب کا ایک ٹکڑا ہے، جو انسان کو سونے اور کھانے سے روک دیتا ہے۔ پس جب کسی شخص کی سفری ضرورت حسب منشا پوری ہو جائے تو اسے جلد ہی گھر واپس آ جانا چاہیئے۔ 

Hadis Book📚
Sahih Bukhari 5429

Sunday, October 17, 2021

Names of Jussus - ஜுஸ்வுகளின் பெயர்கள்

 


👉ஒவ்வொரு பாகத்திற்கும், “ஸயகூல்”, “தில்கர்ருஸுலு” போன்ற அந்தந்தப் பாகத்தின் தலைப்பிலுள்ள சொற்களையே பெயராகக் கூறப்பெறுகின்றது.  எனினும், “அல்ஹம்து” (தோற்றுவாய்) என்னும் முதல் அத்தியாயம், திருக் குர்ஆனிலுள்ள 30 பாகங்களுக்குமே ஒரு முன்னுரையைப் போன்று அமைந்திருப்பதனால், முந்திய பாகத்திற்கு, “அல்ஹம்து ஜுஸ்வு” என்று பெயர் கூறாமல், இரண்டாம் அத்தியாயத்தின், முதல் வாக்கியமாகிய “அலிஃப் லாம் மீம்” என்பதையே பெயராகக் கூறப்பெறுகிறது.

 👉Each part is named after the words in the title of the respective part, such as "Sayakul" and "Tilkarrusulu". However, since the first chapter, "Alhamdulillah" (Origin), serves as a preface to all 30 parts of the Holy Quran, the first chapter of the second chapter is called "Alif Lam Meem" instead of the previous chapter.


Juswu - ஜுஸ்வுகள்


👉ஒவ்வொருவரும் திருக் குர்ஆனைக் குறைந்தது மாதத்திற்கு ஒரு தடவையேனும் ஓதி முடிப்பதற்கேற்றவாறு, திருக் குர்ஆனிலுள்ள வசனங்கள்யாவையும் ஏறத்தாழ சமமான முப்பது “ஜுஸ்வு” (பாகங்)களாகப் பிரிக்கப் பெற்றுள்ளது.

👉The verses in the Holy Quran are divided into about thirty equal "Juswu" (parts) so that everyone can finish reading the Holy Quran at least once a month.

The structure of the Quran - குர்ஆனின் அமைப்பு

 


👉திருக்குர்ஆன் 3 வசனங்கள் முதல் 286 வசனங்கள் வரையிலுமுள்ள, சிறிய, பெரிய 114 அத்தியாயங்களாக அமைக்கப்பட்டுள்ளது.

👉The Quran is divided into 114 chapters, small and large, ranging from 3 verses to 286 verses.

👉திருக்குர்ஆனில் உள்ள வசனங்களும், அத்தியாயங்களும் இப்பொழுதுள்ள வரிசைக்கிரமப்படி அருளப் பெறவில்லை.

👉The verses and chapters in the Holy Quran are not graced in the present order.

👉கால நிலைமைக்கும், மக்களின் தேவைக்கும் அவசியமான அளவு சிறிது, சிறிதாக அத்தியாயங்களாகவும், வசனங்களாகவும், 
அருளப் பெற்று வந்தன. இவ்வாறு அருளப் பெற்று வரும் காலத்தில்,
நபி பெருமானார்களுக்கு, இறைவன் கற்பித்ததற்கிணங்க, 
இன்னின்ன வசனங்கள், இன்னின்ன அத்தியாயங்களை சேர்ந்தவையெனவும், அதிலும் குறிப்பிட்ட வசனம், குறிப்பிட்ட அத்தியாயத்தில் எத்தனையாவது வசனம் எனவும் அறிவித்து வந்தார்கள். அந்த ஒழுங்கு முறைப்படி அமைக்கப் பெற்றது தான், இக்காலத்தில் நம்மிடத்தில் இருக்கும் திருக் குர்ஆன்.

👉The amount needed for the time situation and the need of the people is small, 
little by little chapters and verses,
Were blessed. Thus in the period of receiving grace,
To the nobles of the Prophet, as the Lord taught,
The verses of yesterday were declared to belong to the chapters of yesterday, 
and the particular verse in it, the number of verses in a particular chapter. 
That order is what is systematically established, the Holy Quran that we have today.

👉இந்த அமைப்பு முறைக்கு, “தௌகீஃபீ” (அறிவிப்புப்படி அமைக்கப் பெற்றது) என்றும், “தர்தீபே திலாவதி” (ஓதக்கூடிய வரிசை) என்றும், “தர்தீபே ரஸுலி” (ரஸுலுடைய வரிசை) என்றும் கூறப்பெறுகின்றது.

👉This system is referred to as "Tawqifi" (formed by notice), "Tardebe Dilawati" (playable sequence), and "Tardebe Rasuli" (sequence of Rasul).

👉தவிர, திருக்குர்ஆனின் வசனங்களும், அத்தியாங்களும் அருளப் பெற்ற முறைக்குத் “தர்தீபே நுஜுலி” (அருளப் பெற்ற வரிசை) என்று கூறப்பெறுகின்றது.

👉Besides, the verses and chapters of the Holy Quran are said to be the "Tardeeb Nujuli" (Blessed Order).

Blessed Day - அருளப்பெற்ற நாள்


👉நபிகள் பெருமானார் அவர்களுடைய நாற்பதாவது வயதிலே, 
ரமளான் மாதத்தின் பிந்திய இரவுகளில் ஓர் இரவன்று, 
மக்கமா நகருக்கு அருகிலுள்ள ஹிராக் குகையிலே தனித்திருந்து, இறைவனைச் சிந்தித்திருந்த நேரத்தில் தான் திருக் குர்ஆன் 
முதன் முதலாக அருளப் பெற்றது. 
அந்த இரவு தான் “லைலத்துல் கத்ர்” (கண்ணியமிக்க இரவு) 
என்று அறியப்படுகிறது.🙌

👉The Holy Quran was first bestowed on the Prophet (peace and blessings of Allaah be upon him) at the age of forty, one night on the last night of the month of Ramadaan, when he was alone in the cave of Hirak near the city of Makkah, contemplating Allaah. 

That night is known as "Lailatul Qadr" (Dignified Night)🙌

👉மாண்புமிக்க அந்த இரவிலே முதன் முதலாக அருளப் பெறத்துவங்கிய இந்த வான்மறை, அந்தந்தக் காலத்தின் நிலைமைக்கும் அவசியத்திற்கும் தக்கவாறு, 
பெருமானார் வாழ்ந்த பிந்திய 23-வருடங்களில் கொஞ்சங் கொஞ்சமாக அருளப்பெற்று பூர்த்தி பெற்றது.

👉This celestial body, which was first blessed on that glorious night, 
according to the conditions and necessity of the time,
In the last 23-years that the great man lived little by little grace was fulfilled.

👉இவ்வாறு அந்த 23-ஆண்டுகளில் இறைவனால் அறிவிக்கப்பட்டதே திருக் குர்ஆன்.

👉Thus the Holy Quran was revealed by God during those 23 years.

The Name of the Quran - குர்ஆன் என்னும் பெயர்

               👉அஸ்ஸலாமு அலைக்கும் ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு👈

                                                                


👉வானவர் ஜிப்ரில் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மூலம், நபியவர்களுக்கு வல்லவன் அருளிய இந்த நன்மறைக்கு எத்தனையோ பெயர்கள் இருந்த போதிலும், இந்த மாமறையிலே பல இடங்களிலும்  குறிப்பிடப்படும் “குர்ஆன்” என்ற பெயரே சிறப்பு பெயராக விளங்கி வருகிறது

👉Although there are many names for this goodness bestowed on the Prophets by the angel Jibril, the name "Quran" is the special name mentioned in many places in this verse.

👉“குர்ஆன்” என்ற அரபிச் சொல்லுக்கு “ஓதப்பட்டது”, “ஓதக்கூடியது”, ஓதவேண்டியது என்று பொருள்படும். அண்ணல் நபி அவர்களுக்கு ஜிப்ரில் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மூலமாக “ஓதப்பட்ட” இவ்வேதம், மனித சமுதாயம் தன் மேன்மையைக் கருதி “ஓதவேண்டியது” என்ற பொருளையே தன் பெயராகக் கொண்டிருப்பதும், இவ்வேதமே இவ்வுலகில் அதிகமான மக்களால் “ஓதப்படுவதும்” சிந்தித்து நயக்கத்தக்கதாக இருக்கிறது.

👉The Arabic word "Quran" means "recited", "readable", to be recited. It is tempting to think that this scripture, which was "recited" by the Holy Prophet to Jibreel, has in its name the meaning of "should be recited" by human society for its superiority, and that this scripture is "recited" by most people in this world.


தினமும் ஒரு கேள்விகள் - 1

கேள்வி 1 -  குர்ஆனை எளிதாக ஓதுவதற்கு ஜூஸ்ஊக்கல் (பாகங்கள்), 

ஹிஸ்புக்ள் (குழுக்கள்),ருகூவுகள் (கால் "1/4" பகுதிகள் ) 

என பிரிக்கப்பட்டுள்ளது, அல்-குர்ஆனில் 

மொத்தம் எத்தனை ஹிஸ்புகள் இருக்கிறது ?


A- 1 ஹிஸ்பு (Hizbus)

B- 30 ஹிஸ்புகள் (Hizbus)

C- 50 ஹிஸ்புகள் (Hizbus)

D- 60 ஹிஸ்புகள் (Hizbus)


பதில் - D- 60 ஹிஸ்புகள் (Hizbus)


உபதேசம் 113



"யாரேனும் நான் செய்து காண்பித்த உளூவைப் போன்று செய்து, 
பின்னர் தீய எண்ணங்களுக்கு இடம் தராமல் இரண்டு ரக்அத்துகள் தொழுகிறாரோ அவர் முன்னர் செய்த (சிறு) பாவங்களை அல்லாஹ் மன்னிக்கிறான்" என்று நபி (ﷺ) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் :  உஸ்மான் (ரலி) புகாரி : 164

இறை வசனம் : 623


இறை வசனம் : 623

(ஏகஇறைவனை) மறுப்போருக்கு 
அவர்கள் எச்சரிக்கப்பட்ட நாளில் கேடு உள்ளது.

திருக்குர்ஆன் : 51:60