கேள்வி- 6. ஹதீஸ் கலையில் _ "முத்தஃபகுன் அலைஹி"_ என்ற அரபு பதத்தால் அறியப்படும் ஹதீஸ் கிரந்தங்கள் எவை ?
A- திர்மிதி மற்றும் அபூ தாவூத்
B- திர்மிதி மற்றும் அபூ தாவூத்
C- ரியாழுஸ் ஸாலிஹீன்
D- புகாரி மற்றும் முஸ்லீம்
பதில்- D- புகாரி மற்றும் முஸ்லீம்
ஹதீஸ்கலை வல்லுனர்களில் ஒருவரான இமாம் இப்னு ஸலாஹ்(ரஹ்) அவர்கள் ஸஹீஹான ஹதீஸ்களை ஏழு வகையாகப் பிரித்துள்ளார்கள்.
முதலாம் வகை - புகாரீ, முஸ்லிம் ஆகிய இரண்டிலும் இடம் பெற்ற ஹதீஸ்.
இரண்டாம் வகை - புகாரீயில் மட்டும் இடம் பெற்ற ஹதீஸ்.
மூன்றாம் வகை - முஸ்லிமில் மட்டும் இடம் பெற்ற ஹதீஸ்.
நான்காம் வகை - புகாரீ, முஸ்லிம் இரண்டிலும் இடம் பெறாவிட்டாலும் அவர்கள் இருவரும் கடைபிடிக்கும் நிபந்தனைகளுக்கு உட்பட்ட ஹதீஸ்.
ஐந்தாம் வகை - புகாரீயில் இடம் பெறாவிட்டாலும் புகாரீயின் நிபந்தனைக்கு உட்பட்ட ஹதீஸ்.
ஆறாம் வகை - முஸ்லிமில் இடம் பெறாவிட்டாலும் முஸ்லிமின் நிபந்தனைக்கு உட்பட்ட ஹதீஸ்.
ஏழாம் வகை - புகாரீ, முஸ்லிமில் இடம் பெறாத, இரண்டின் நிபந்தனைகளுக்கும் உட்படாத, பிற ஹதீஸ் கிரந்தங்களில் இடம் பெற்றுள்ள ஸஹீஹான ஹதீஸ்.
முத்தஃபக்குன் அலைஹி
ஒரே ஹதீஸ் புகாரீயிலும் முஸ்லிமிலும் இடம் பெற்றிருந்தால் அது ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் ஏழு வகைகளில் முதல் தரத்தை அடைகிறது. இவ்வகை ஹதீஸ்களை முத்தஃபக்குன் அலைஹி என ஹதீஸ்கலையில் குறிப்பிடுவர். இது ஆதாரப் பூர்வமான ஹதீஸ் என்பதில் இமாம் புகாரீ அவர்களும் இமாம் முஸ்லிம் அவர்களும் ஒன்றுபட்டுள்ளனர் என்பது அதன் பொருள்.
முத்தஃபக்குன் அலைஹி என்ற ஆதாரப் பூர்வமான நபிமொழிகளில் முதல்தர வகையை உள்ளடக்கிய நபிமொழிக் களஞ்சியம்தான் அல்லுஃலுவு வல்மர்ஜான். அல்லாஹ்வின் அருள்மறை அல்குர்ஆனுக்கு அடுத்த உயர்ந்த தரத்தில் போற்றப்படும் ஹதீஸ் நூல்கள் ஸஹீஹுல் புகாரீ மற்றும் ஸஹீஹ் முஸ்லிம் ஆகும்.
No comments:
Post a Comment