கேள்வி- 7. "அல்ஹம்து லில்லாஹி கஸீரன் தய்யிபன் முபாரக்கன் ஃபீஹி, ஃகைர மக்ஃபிய்யின் வலா முவத்த இன் வலா முஸ்தஃக்னன் அன்ஹு ரப்பனா” மேற்குறிப்பிடப்பட்டுள்ள துஆ எந்த சந்தர்ப்பத்தில் ஓத வேண்டும் ?
A- கணவனை இழந்தவர்கள் ஓத வேண்டிய துஆ
B- சாப்பாடு சாப்பிட்ட பின்பு ஓதும் துஆ
C- மழை அதிகமாக பொழியும் போது ஓதும் துஆ
D- மணமக்களை வாழ்த்த ஓதும் துஆ
பதில்- B- சாப்பாடு சாப்பிட்ட பின்பு ஓதும் துஆ
حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ ثَوْرٍ، عَنْ خَالِدِ بْنِ مَعْدَانَ، عَنْ أَبِي أُمَامَةَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ إِذَا رَفَعَ مَائِدَتَهُ قَالَ "" الْحَمْدُ لِلَّهِ كَثِيرًا طَيِّبًا مُبَارَكًا فِيهِ، غَيْرَ مَكْفِيٍّ، وَلاَ مُوَدَّعٍ وَلاَ مُسْتَغْنًى عَنْهُ، رَبَّنَا "".
பாடம்: 54 உணவு உண்டபின் சொல்ல வேண்டிய பிரார்த்தனை
அபூ உமாமா (ரலி) அவர்கள் கூறியதாவது :
நபி (ஸல்) அவர்கள் (சாப்பிட்டு முடித்தபின்) தமது உணவு விரிப்பை எடுக்கும் போது, ‘‘அல்ஹம்து லில்லாஹி கஸீரன் தய்யிபன் முபாரக்கன் ஃபீஹி, ஃகைர மக்ஃபிய்யின் வலா முவத்தஇன் வலா முஸ்தஃக்னன் அன்ஹு ரப்பனா” என்று பிரார்த்திப்பார்கள்.
(பொருள்: அதிகமான, தூய்மையான, வளமிக்க எல்லாப் புகழும் (நன்றியும்) அல்லாஹ்வுக்கே உரியது. இறைவா! இப்புகழ் முற்றுப்பெறாதது; கைவிடப்படக் கூடாதது; தவிர்க்க முடியாதது ஆகும்.)
( புகாரி : 5458 )
No comments:
Post a Comment