கேள்வி- 4. எந்த உணவை சாப்பிட்டால் அது தேகத்தை கொழுக்கவும் வைக்காது அவரின் பசியையும் தீர்த்து வைக்காது என்று அல்லாஹ் சூரத்துல் காஷியாவில் குறிப்பிடுகிறான் ?
A- ஸைதூன் மரத்தின் பழம்
B- முட்கள் உள்ள விஷச் செடி
C- ஸக்கூம் மரம்
பதில்- B- முட்கள் உள்ள விஷச் செடி
هَلْ اَتٰٮكَ حَدِيْثُ الْغَاشِيَةِؕ
88:1. சூழ்ந்து மூடிக்கொள்வதின் (கியாம நாளின்) செய்தி உமக்கு வந்ததா?
Has there come to you the description of the Overwhelming Event?
88:2 وُجُوْهٌ يَّوْمَٮِٕذٍ خَاشِعَةٌ ۙ
88:2. அந்நாளில் சில முகங்கள் இழிவுபட்டிருக்கும்.
Many faces that day will be humbled,
88:3 عَامِلَةٌ نَّاصِبَةٌ ۙ
88:3. அவை (தவறான காரியங்களை நல்லவை என கருதி) செயல்பட்டவையும் (அதிலேயே) உறுதியாக நின்றவையுமாகும்.
laboring, exhausted
88:4 تَصْلٰى نَارًا حَامِيَةً ۙ
88:4. கொழுந்து விட்டெறியும் நெருப்பில் அவை புகும்.
They will enter into the scorching fire
88:5 تُسْقٰى مِنْ عَيْنٍ اٰنِيَةٍؕ
88:5. கொதிக்கும் ஊற்றிலிருந்து, (அவர்களுக்கு) நீர் புகட்டப்படும்.
They will be made to drink water from a boiling spring
88:6 لَـيْسَ لَهُمْ طَعَامٌ اِلَّا مِنْ ضَرِيْعٍۙ
88:6. அதில் அவர்களுக்கு கருவேல விஷச் செடிகளைத் தவிர, வேறு உணவில்லை.
There will be no food for them except from a poisonous thorny plant
88:7 لَّا يُسْمِنُ وَلَا يُغْنِىْ مِنْ جُوْعٍؕ
88:7. அது அவர்களைக் கொழு(த்துச் செழி)க்கவும் வைக்காது; அன்றியும் பசியையும் தணிக்காது.
that will neither nourish, nor satisfy hunger
No comments:
Post a Comment