Tuesday, February 28, 2023

உபதேசம் : 612

 ﷽ உபதேசம் : 612

28-02-2027 செவ்வாய்க்கிழமை

"உங்களுக்கு நன்மை செய்பவர்களுக்கு நீங்கள் பதிலுதவி செய்யுங்கள்! அவ்வாறு செய்ய உங்களுக்கு வசதி இல்லாவிட்டால் அவருக்கு பதிலுதவி செய்து விட்டதாக நீங்கள் நினைக்கின்ற அளவிற்கு அவா்களுக்காக துஆ செய்யுங்கள்!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அமர் (ரலி) நஸயீ - 2520

குர்ஆன் வசனம் 362

 ﷽ குர்ஆன் வசனம் 362

28-02-2023 செவ்வாய்க்கிழமை

اَوَلَا يَذۡكُرُ الۡاِنۡسَانُ اَنَّا خَلَقۡنٰهُ مِنۡ قَبۡلُ وَلَمۡ يَكُ شَيۡـًٔـا

"முன்னர் எந்தப் பொருளாகவும் இல்லாதிருந்த நிலையில் அவனைப் படைத்தோம்" என்பதை மனிதன் சிந்திக்க வேண்டாமா?

[அல்குர்ஆன் 19:67]

Chapter - 15 Surah Al-Hijr

Chapter - 15

Surah Al-Hijr


بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

In the name of Allah the most beneficent, most merciful
----------------------------------------------------------

أعوذ بالله من الشيطان الرجيم
I seek refuge in Allah from the outcast Shaitan
‏‏‏‏‏‏‏ ‏‏‏‏‏‏‏
قَالَ فَمَا خَطْبُكُمْ أَيُّهَا الْمُرْسَلُونَ.قَالُوا إِنَّا أُرْسِلْنَا إِلَىٰ قَوْمٍ مُجْرِمِينَ .إِلَّا آلَ لُوطٍ إِنَّا لَمُنَجُّوهُمْ أَجْمَعِينَ . إِلَّا امْرَأَتَهُ قَدَّرْنَا ۙ إِنَّهَا لَمِنَ الْغَابِرِينَ.

[Ibrahim (Abraham) again] said: \What then is the business on which you have come, O Messengers?\". They (the angels) said: \We have been sent to a people who are Mujrimun (criminals, disbelievers, polytheists, sinners). (All) except the family of Lout (Lot). Them all we are surely going to save (from destruction). \Except his wife, of whom We have decreed that she shall be of those who remain behind (i.e. she will be destroyed\" Al-Hijr 15:57,58,59,60

அல்லாஹு அக்பர் என்பதன் சிறப்பு. ( 8 )

 அல்லாஹு அக்பர் என்பதன் சிறப்பு. ( 8 )


அல்லாஹு அக்பருல்லாஹு
அக்பர். அல்லாஹு அக்பருல்லாஹு அக்பர். அஷ்ஹது
அ(ன்)ல்லாயிலாஹ இல்லல்லாஹ். அஷ்ஹது அ(ன்)ல்லாயிலாஹ இல்லல்லாஹ். அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ். அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ். ஹய்ய அலஸ் ஸலாஹ். ஹய்ய அலஸ் ஸலாஹ். ஹய்ய அலல் ஃபலாஹ். ஹய்ய அலல் ஃபலாஹ். அல்லாஹு அக்பருல்லாஹு அக்பர்.
லாயிலாஹ இல்லல்லாஹ்.

பொருள் : அல்லாஹ் மிகப் பெரியவன். அல்லாஹ் மிகப் பெரியவன். அல்லாஹ் மிகப் பெரியவன். அல்லாஹ் மிகப் பெரியவன். வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வை தவிர எவருமில்லை என்று உறுதியாக நம்புகிறேன்.
வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வை தவிர எவருமில்லை என்று உறுதியாக நம்புகிறேன்.
முஹம்மது (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்று உறுதியாக நம்புகிறேன். முஹம்மது (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்று உறுதியாக நம்புகிறேன். தொழுகையின் பக்கம் வாருங்கள். தொழுகையின் பக்கம் வாருங்கள். வெற்றியின் பக்கம் வாருங்கள். வெற்றியின் பக்கம் வாருங்கள். அல்லாஹ் மிகப் பெரியவன். அல்லாஹ் மிகப் பெரியவன். வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் ஒருவனைத் தவிர எவருமில்லை.

சிறப்பு : பாங்கின் அழைப்பிற்கு பதில் கூறுபவர் சொர்க்கத்தில் நுழைவார்.

ஆதாரம் : அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தொழுகை அறிவிப்பாளர் அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர் என்று சொன்னால் நீங்களும் அல்லாஹு அக்பர்,அல்லாஹு அக்பர் என்று சொல்லுங்கள். பின்பு அவர், அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹ் என்று சொன்னால் நீங்களும் அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹ் என்று சொல்லுங்கள். பின்பு அவர், அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ் என்று சொன்னால் நீங்களும் அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ் என்று சொல்லுங்கள். பின்பு அவர் ஹய்ய அலஸ் ஸலாஹ் என்று சொன்னால் நீங்கள் லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ்(அல்லாஹ்வின் உதவியில்லாமல் (பாவங்களிலிருந்து) விலகிச்செல்லவோ (நல்லறங்கள் புரிய) ஆற்றல் பெறவோ மனிதனால் முடியாது) என்று சொல்லுங்கள். பின்பு அவர் ஹய்ய அலல் ஃபலாஹ் என்று சொன்னால் நீங்கள், லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ் என்று சொல்லுங்கள். பின்பு அவர் அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர்என்று சொன்னால் நீங்களும் அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர் என்று சொல்லுங்கள். பின்பு அவர் லா இலாஹ இல்லல்லாஹ் என்று சொன்னால் நீங்களும் லா இலாஹ இல்லல்லாஹ் என்று மனப்பூர்வமாகச் சொல்லுங்கள். உங்களில் இவ்வாறு கூறுபவர் சொர்க்கத்தில் நுழைந்துவிட்டார்.
இதை உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
ஸஹீஹ் முஸ்லிம் : 629.

சொர்க்கச் சோலைகள். ( 7 )

 சொர்க்கச் சோலைகள். ( 7 )

சொகுசுக் கட்டில்களில் இருப்பார்கள்.

وَنَزَعْنَا مَا فِي صُدُورِهِم مِّنْ غِلٍّ إِخْوَانًا عَلَىٰ سُرُرٍ مُّتَقَابِلِينَ

அவர்களின் உள்ளங்களில் இருந்த குரோதங்களை நீக்குவோம். கட்டில்களில் நேருக்கு நேர் நோக்கி சகோதரர்களாக இருப்பார்கள்.
திருக்குர்ஆன் 15:47

هُمْ وَأَزْوَاجُهُمْ فِي ظِلَالٍ عَلَى الْأَرَائِكِ مُتَّكِئُونَ

அவர்களும், அவர்களது துணைகளும் கட்டிலில் சாய்ந்து நிழல்களில் இருப்பார்கள்.
திருக்குர்ஆன் 36:56

عَلَىٰ سُرُرٍ مُّتَقَابِلِينَ

கட்டில்களில் ஒருவரையொருவர் எதிர் நோக்குவார்கள்.
திருக்குர்ஆன் 37:44

مُتَّكِئِينَ عَلَىٰ رَفْرَفٍ خُضْرٍ وَعَبْقَرِيٍّ حِسَانٍ

பச்சை நிறத்து இரத்தினக் கம்பளத்தின் மீதும், அழகிய சாய்மானத்தின் மீதும் சாய்ந்து கொண்டிருப்பார்கள்.
திருக்குர்ஆன் 55:76

مُّتَّكِئِينَ فِيهَا عَلَى الْأَرَائِكِ ۖ لَا يَرَوْنَ فِيهَا شَمْسًا وَلَا زَمْهَرِيرًا

அதில் அவர்கள் உயர்ந்த இருக்கைகள் மீது சாய்ந்திருப்பார்கள். அங்கே சூரியனையும், கடும் குளிர்ச்சியையும் காண மாட்டார்கள்.
திருக்குர்ஆன் 76:13

عَلَى الْأَرَائِكِ يَنظُرُونَ

உயர்ந்த இருக்கைகள் மீது (சாய்ந்து) பார்த்துக் கொண்டிருப்பார்கள்.
திருக்குர்ஆன் 83:23

عَلَى الْأَرَائِكِ يَنظُرُونَ

உயர்ந்த கட்டில்கள் மீது (சாய்ந்து) பார்த்துக் கொண்டிருப்பார்கள்.
திருக்குர்ஆன் 83:35

Monday, February 27, 2023

சொர்க்கத்தில் உணவு. ( 4 )

 சொர்க்கத்தில் உணவு. ( 4 )

கனிகள் கைக்கெட்டும் உயரத்தில் தொங்கும்.

قُطُوفُهَا دَانِيَةٌ

அதன் கனிகள் தாழ்ந்திருக்கும்.
திருக்குர்ஆன் 69:23

وَدَانِيَةً عَلَيْهِمْ ظِلَالُهَا وَذُلِّلَتْ قُطُوفُهَا تَذْلِيلًا

அதன் நிழல்கள் அவர்களுக்கு நெருக்கமாக இருக்கும். அதன் கனிகள் மிகத் தாழ்வாகத் தொங்கும்.
திருக்குர்ஆன் 76:14

அனைத்து வகைக் கனிகளும் உண்டு.

وَلَهُمْ فِيهَا مِن كُلِّ الثَّمَرَاتِ وَمَغْفِرَةٌ مِّن رَّبِّهِمْ ۖ كَمَنْ هُوَ خَالِدٌ فِي النَّارِ وَسُقُوا مَاءً حَمِيمًا فَقَطَّعَ أَمْعَاءَهُمْ

அங்கே அவர்களுக்கு எல்லா வகையான கனிகளும் தமது இறைவனிடமிருந்து மன்னிப்பும் உண்டு. (இவர்கள்) நரகத்தில் நிரந்தரமாகத் தங்கி குடல்களைத் துண்டாக்கி விடும் கொதிக்கும் நீர் புகட்டப்பட்டவனைப் போன்றவர்களா?
திருக்குர்ஆன் 47:15

விரும்பிய கனிகளைப் பெறலாம்.

وَفَاكِهَةٍ مِّمَّا يَتَخَيَّرُونَ وَلَحْمِ طَيْرٍ مِّمَّا يَشْتَهُونَ

அவர்கள் விரும்புகிற கனிகளுடனும், அவர்கள் ஆசைப்படும் பறவைகளின் மாமிசத்துடனும் (அச்சிறுவர்கள் சுற்றி வருவார்கள்.)
திருக்குர்ஆன் 56:20,21

நாற்றமில்லாத ஆற்று நீர், பாலாறு, தேனாறு, மதுவாறு அனைத்தும் உண்டு.

مَّثَلُ الْجَنَّةِ الَّتِي وُعِدَ الْمُتَّقُونَ ۖ فِيهَا أَنْهَارٌ مِّن مَّاءٍ غَيْرِ آسِنٍ وَأَنْهَارٌ مِّن لَّبَنٍ لَّمْ يَتَغَيَّرْ طَعْمُهُ وَأَنْهَارٌ مِّنْ خَمْرٍ لَّذَّةٍ لِّلشَّارِبِينَ وَأَنْهَارٌ مِّنْ عَسَلٍ مُّصَفًّى

(இறைவனை) அஞ்சுவோருக்கு வாக்களிக்கப்பட்ட சொர்க்கத்தின் தன்மை, அதில் மாற்றமடையாத தண்ணீரைக் கொண்ட ஆறுகளும், சுவை கெட்டுப் போகாத பாலாறுகளும், அருந்துபவருக்கு இன்பம் தரும் மது ஆறுகளும், தூய்மையான தேன் ஆறுகளும் இருக்கும்.
திருக்குர்ஆன் 47:15

Chapter - 15 Surah Al-Hijr

‏‏‏‏Chapter - 15

Surah Al-Hijr


بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

In the name of Allah the most beneficent, most merciful
----------------------------------------------------------

أعوذ بالله من الشيطان الرجيم
I seek refuge in Allah from the outcast Shaitan
‏‏‏‏‏‏‏ ‏‏‏‏‏‏‏
قَالَ وَمَنْ يَقْنَطُ مِنْ رَحْمَةِ رَبِّهِ إِلَّا الضَّالُّونَ

[Ibrahim (Abraham)] said: \And who despairs of the Mercy of his Lord except those who are astray?\" (Al-Hijr 15:56)"

குர்ஆன் வசனம் 361

 ﷽ குர்ஆன் வசனம் 361

27-02-2023 திங்கட்கிழமை

தமது இறைவனின் சந்திப்பை எதிர்பார்ப்பவர் நல்லறத்தைச் செய்யட்டும்!

[அல்குர்ஆன் 18:110]

உபதேசம் : 611

 ﷽ உபதேசம் : 611

27-02-2023 திங்கட்கிழமை

"எனக்காக நட்பு கொண்டவர்கள் எங்கே? என்னுடைய நிழலைத்தவிற வேறு நிழலே இல்லாத இந்நாளில் நான் அவர்களுக்கு என்னுடைய நிழலில் இடமளிப்பேன் என மறுமை நாளில் அல்லாஹ் கூறுவான்!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி) முஸ்லிம் - 5015

அல்லாஹு அக்பர் என்பதன் சிறப்பு. ( 7 )

 அல்லாஹு அக்பர் என்பதன் சிறப்பு. ( 7 )


اَللهُ أَكْبَرُ

அல்லாஹு அக்பர்.

பொருள் : அல்லாஹ் மிகப் பெரியவன்.

சட்டம் : தாமதமாக வந்தாலும் தொழுகையில் நுழைவதற்கு "அல்லாஹு அக்பர்" என்று கூறிய பின்னரே சேர வேண்டும்.

ஆதாரம் : தொழுகையின் திறவுகோல் சுத்தமாகும். அதன் துவக்கம் தக்பீர் (அல்லாஹு அக்பர்) ஆகும். அதன் முடிவு தஸ்லீம் (அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்) ஆகும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அலீ (ரலி)
நூல்கள்: திர்மிதீ 3, அபூதாவூத் 56, இப்னுமாஜா 271, அஹ்மத் 957

சொர்க்கச் சோலைகள். ( 6 )

 சொர்க்கச் சோலைகள். ( 6 )

அவர்களின் முன்னேயும் வலப்புறமும் ஒளி வீசும்.

يَوْمَ تَرَى الْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ يَسْعَىٰ نُورُهُم بَيْنَ أَيْدِيهِمْ وَبِأَيْمَانِهِم بُشْرَاكُمُ الْيَوْمَ جَنَّاتٌ تَجْرِي مِن تَحْتِهَا الْأَنْهَارُ خَالِدِينَ فِيهَا ۚ ذَٰلِكَ هُوَ الْفَوْزُ الْعَظِيمُ

நம்பிக்கை கொண்ட ஆண்கள், மற்றும் பெண்களின் ஒளி அவர்களுக்கு முன்னேயும் வலப்புறமும் விரைவதை நீர் காணும் நாள்! இன்று சொர்க்கச் சோலைகளே உங்களுக்குரிய நற்செய்தி. அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் நிரந்தரமாக இருப்பீர்கள். இதுவே மகத்தான வெற்றி.
திருக்குர்ஆன் 57:12

يَوْمَ يَقُولُ الْمُنَافِقُونَ وَالْمُنَافِقَاتُ لِلَّذِينَ آمَنُوا انظُرُونَا نَقْتَبِسْ مِن نُّورِكُمْ قِيلَ ارْجِعُوا وَرَاءَكُمْ فَالْتَمِسُوا نُورًا فَضُرِبَ بَيْنَهُم بِسُورٍ لَّهُ بَابٌ بَاطِنُهُ فِيهِ الرَّحْمَةُ وَظَاهِرُهُ مِن قِبَلِهِ الْعَذَابُ

"எங்களைக் கவனியுங்கள்! உங்கள் ஒளியில் நாங்களும் கொஞ்சம் எடுத்துக் கொள்கிறோம்'' என்று நம்பிக்கை கொண்டோரிடம் நயவஞ்சகர்களான ஆண்களும், பெண்களும் அந்நாளில் கூறுவார்கள். "உங்கள் பின்புறமாகத் திரும்பிச் சென்று ஒளியைத் தேடுங்கள்!'' எனக் கூறப்படும். அவர்களுக்கிடையே ஒரு தடுப்புச் சுவர் அமைக்கப்படும். அதற்கு வாசலும் இருக்கும். அதன் உட்புறத்தில் அருள் இருக்கும். அதன் வெளிப்புறத்தில் இருந்து வேதனை இருக்கும்.
திருக்குர்ஆன் 57:13

وَالَّذِينَ آمَنُوا بِاللَّهِ وَرُسُلِهِ أُولَٰئِكَ هُمُ الصِّدِّيقُونَ ۖ وَالشُّهَدَاءُ عِندَ رَبِّهِمْ لَهُمْ أَجْرُهُمْ وَنُورُهُمْ ۖ وَالَّذِينَ كَفَرُوا وَكَذَّبُوا بِآيَاتِنَا أُولَٰئِكَ أَصْحَابُ الْجَحِيمِ

அல்லாஹ்வையும், அவனது தூதர்களையும் நம்புவோரே தம் இறைவனிடம் உண்மைப்படுத்தியோரும், சாட்சி கூறுவோரும் ஆவர். அவர்களுக்கு அவர்களின் கூலியும், ஒளியும் உண்டு. (நம்மை) மறுத்து நமது வசனங்களைப் பொய்யெனக் கருதியோரே நரகவாசிகள்.
திருக்குர்ஆன் 57:19

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا تُوبُوا إِلَى اللَّهِ تَوْبَةً نَّصُوحًا عَسَىٰ رَبُّكُمْ أَن يُكَفِّرَ عَنكُمْ سَيِّئَاتِكُمْ وَيُدْخِلَكُمْ جَنَّاتٍ تَجْرِي مِن تَحْتِهَا الْأَنْهَارُ يَوْمَ لَا يُخْزِي اللَّهُ النَّبِيَّ وَالَّذِينَ آمَنُوا مَعَهُ ۖ نُورُهُمْ يَسْعَىٰ بَيْنَ أَيْدِيهِمْ وَبِأَيْمَانِهِمْ يَقُولُونَ رَبَّنَا أَتْمِمْ لَنَا نُورَنَا وَاغْفِرْ لَنَا ۖ إِنَّكَ عَلَىٰ كُلِّ شَيْءٍ قَدِيرٌ

நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்விடம் கலப்பற்ற முறையில் பாவமன்னிப்புத் தேடுங்கள்! உங்கள் இறைவன் உங்கள் தீமைகளை அழித்திடக்கூடும். உங்களை சொர்க்கச் சோலைகளில் நுழையச் செய்வான். அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். இந்த நபியையும் (முஹம்மதையும்) அவருடன் உள்ள நம்பிக்கை கொண்டோரையும் அல்லாஹ் இழிவுபடுத்தாத நாளில் அவர்களது ஒளி அவர்கள் முன்னேயும், வலப்புறமும் விரைந்து செல்லும். "எங்கள் இறைவா! எங்கள் ஒளியை எங்களுக்கு முழுமையாக்குவாயாக! எங்களை மன்னிப்பாயாக! நீ ஒவ்வொரு பொருளின் மீதும் ஆற்றலுடையவன்'' என்று கூறுவர்.
திருக்குர்ஆன் 66:8

அங்கே தனி ராஜ்ஜியம்.

وَإِذَا رَأَيْتَ ثَمَّ رَأَيْتَ نَعِيمًا وَمُلْكًا كَبِيرًا

நீர் காணும் போது அங்கே சொகுசான இன்பத்தையும், பெரிய ஆட்சியையும் காண்பீர்!
திருக்குர்ஆன் 76:20

உபதேசம் : 610

 ﷽ உபதேசம் : 610

26-02-2023 ஞாயிற்றுக்கிழமை

"மக்களைச் சந்திக்காமலும் அவர்களிடமிருந்து ஏறபடும் தீங்குகளைச் சகித்துக் கொள்ள முடியாமலும் இருக்கின்ற ஒரு முஸ்லிமை விட, மக்களோடு வாழ்ந்து அவர்களிடமிருந்து வரும் தீங்குகளைச் சகித்துக் கொள்ளும் முஸ்லிம் சிறந்தவன்!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி) திர்மிதீ - 2431

குர்ஆன் வசனம் 360

 ﷽ குர்ஆன் வசனம் 360

26-02-2023 ஞாயிற்றுக்கிழமை

وَلَقَدۡ صَرَّفۡنَا فِىۡ هٰذَا الۡقُرۡاٰنِ لِلنَّاسِ مِنۡ كُلِّ مَثَلٍ‌ ؕ وَكَانَ الۡاِنۡسَانُ اَكۡثَرَ شَىۡءٍ جَدَلًا‏

மனிதர்களுக்காக இக்குர்ஆனில் ஒவ்வொரு முன்மாதிரியையும் தெளிவுபடுத்தியுள்ளோம். மனிதன் அதிகம் தர்க்கம் செய்பவனாகவுள்ளான்.

[அல்குர்ஆன் 18:54]

சொர்க்கத்தில் உணவு. ( 3 )

 சொர்க்கத்தில் உணவு. ( 3 )

அதிகமான அளவு சாப்பிடுவார்கள்.

مُتَّكِئِينَ فِيهَا يَدْعُونَ فِيهَا بِفَاكِهَةٍ كَثِيرَةٍ وَشَرَابٍ

அதில் சாய்ந்து கொண்டு அதிகமான கனிகளையும், பானத்தையும் கேட்பார்கள்.
திருக்குர்ஆன் 38:51

لَكُمْ فِيهَا فَاكِهَةٌ كَثِيرَةٌ مِّنْهَا تَأْكُلُونَ

அதில் உங்களுக்கு ஏராளமான கனிகள் உள்ளன. அதிலிருந்து சாப்பிடுவீர்கள்.
திருக்குர்ஆன் 43:73

தங்கம், வெள்ளிப் பாத்திரங்களில் உண்பார்கள்.

يُطَافُ عَلَيْهِم بِصِحَافٍ مِّن ذَهَبٍ وَأَكْوَابٍ ۖ وَفِيهَا مَا تَشْتَهِيهِ الْأَنفُسُ وَتَلَذُّ الْأَعْيُنُ ۖ وَأَنتُمْ فِيهَا خَالِدُونَ

தங்கத் தட்டுகளும், கிண்ணங்களும் அவர்களிடம் கொண்டு வரப்படும். அதில் உள்ளங்கள் விரும்புபவையும், கண்கள் இன்புறுபவையும் இருக்கும். அதில் நீங்கள் நிரந்தரமாக இருப்பீர்கள்.
திருக்குர்ஆன் 43:71

وَيُطَافُ عَلَيْهِم بِآنِيَةٍ مِّن فِضَّةٍ وَأَكْوَابٍ كَانَتْ قَوَارِيرَا

வெள்ளிப் பாத்திரங்களும், பளிங்கு போன்ற கிண்ணங்களும் அவர்களைச் சுற்றிக் கொண்டு வரப்படும்.
திருக்குர்ஆன் 76:15

இரு வேளை உணவு.

لَّا يَسْمَعُونَ فِيهَا لَغْوًا إِلَّا سَلَامًا ۖ وَلَهُمْ رِزْقُهُمْ فِيهَا بُكْرَةً وَعَشِيًّا

அங்கே ஸலாம் என்பதைத் தவிர எந்த வீணானதையும் அவர்கள் செவியுற மாட்டார்கள். அங்கே காலையிலும், மாலையிலும் அவர்களுக்குரிய உணவுகள் உள்ளன.
திருக்குர்ஆன் 19:62

கற்பூர பானம்.

إِنَّ الْأَبْرَارَ يَشْرَبُونَ مِن كَأْسٍ كَانَ مِزَاجُهَا كَافُورًا

நல்லோர், குவளையிலிருந்து அருந்துவார்கள். அதில் கற்பூரம் கலந்திருக்கும்.
திருக்குர்ஆன் 76:5

இஞ்சி பானம்.

وَيُسْقَوْنَ فِيهَا كَأْسًا كَانَ مِزَاجُهَا زَنجَبِيلًا

அங்கே குவளையிலிருந்து புகட்டப்படுவார்கள். அதில் இஞ்சி கலந்திருக்கும்.
திருக்குர்ஆன் 76:17

Chapter - 15 Surah Al-Hijr

Chapter - 15

Surah Al-Hijr


بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

In the name of Allah the most beneficent, most merciful
----------------------------------------------------------

أعوذ بالله من الشيطان الرجيم
I seek refuge in Allah from the outcast Shaitan
‏‏‏‏‏‏‏ ‏‏‏‏‏‏‏
قَالُوا بَشَّرْنَاكَ بِالْحَقِّ فَلَا تَكُنْ مِنَ الْقَانِطِينَ

They (the angels) said: \We give you glad tidings in truth. So be not of the despairing ones.\" (Al-Hijr 15:55)"

அல்லாஹு அக்பர் என்பதன் சிறப்பு. ( 6 )

 அல்லாஹு அக்பர் என்பதன் சிறப்பு. ( 6 )


سبحان الله الحمدلله الله أكبر
لا إِلَهَ إِلاَّ اللَّهُ، وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ، وَهْوَ عَلَى كُلِّ شَىْءٍ قَدِيرٌ.

சுப்ஹானல்லாஹ், 33 முறை அல்ஹம்துலில்லாஹ், 33 முறை
அல்லாஹு அக்பர். 33 முறை
லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீ(க்)க லஹு லஹுல் முல்(க்)கு வலஹுல் ஹம்து வஹுவ அலா குல்லி ஷையின் கதீர். (1 முறை)

பொருள் : அல்லாஹ் தூயவன். அல்லாஹ்வுக்கே எல்லாப்புகழும். அல்லாஹ் மிகப் பெரியவன். வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர எவருமில்லை. அவன் தனித்தவன். அவனுக்கு இணையில்லை. ஆட்சியதிகாரம் அவனுக்குரியதே! புகழும் அவனுக்குரியதே! அவன் அனைத்துப் பொருட்கள் மீதும் ஆற்றலுடையவன்.

சிறப்பு : பாவங்கள் யாவும் மன்னிக்கப்படுகின்றன. கடலின் நுரையளவு இருந்தாலும் சரியே!

ஆதாரம் : அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யார் ஒவ்வொரு தொழுகைக்குப் பின்பும் முப்பத்து மூன்று முறை சுப்ஹானல்லாஹ் என்றும், முப்பத்து மூன்று முறை அல்ஹம்து லில்லாஹ் என்றும், முப்பத்து மூன்று முறை அல்லாஹு அக்பர் என்றும் ஆக மொத்தம் தொன்னூற்று ஒன்பது முறை கூறி, இறுதியில் நூறாவது முறையாக "லா இலாஹ இல்லல்லாஹு, வஹ்தஹு, லா ஷரீக்க லஹு, லஹுல் முல்க்கு, வ லஹுல் ஹம்து. வஹுவ அலா குல்லி ஷையின் கதீர்" (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை. அவன் தனித்தவன். அவனுக்கு இணையானவன் எவனுமில்லை. ஆட்சியதிகாரம் அவனுக்கே உரியது. எல்லாப் புகழும் அவனுக்கே உரியது. அவன் அனைத்தின் மீதும் ஆற்றலுள்ளவன்) என்று நிறைவு செய்கிறாரோ அவருடைய (சிறு) பாவங்கள் யாவும் மன்னிக்கப்படுகின்றன. அவை கடலின் நுரையளவு இருந்தாலும் சரியே!
அறிவிப்பவர்:அபூஹுரைரா(ரலி)
ஸஹீஹ் முஸ்லிம் : 1048

சொர்க்கச் சோலைகள். ( 5 )

 சொர்க்கச் சோலைகள். ( 5 )

நீரூற்றுக்களும் உள்ளன.

إِنَّ الْمُتَّقِينَ فِي جَنَّاتٍ وَعُيُونٍ

(இறைவனை) அஞ்சுவோர் சொர்க்கச் சோலைகளிலும், நீரூற்றுகளிலும் இருப்பார்கள்.
திருக்குர்ஆன் 15:45

إِنَّ الْمُتَّقِينَ فِي مَقَامٍ أَمِينٍ فِي جَنَّاتٍ وَعُيُونٍ

(இறைவனை) அஞ்சியோர் பாதுகாப்பான இடத்திலும், சொர்க்கச் சோலைகளிலும், நீர் ஊற்றுகளிலும் இருப்பார்கள்.
திருக்குர்ஆன் 44:51,52

فِيهِمَا عَيْنَانِ تَجْرِيَانِ

அவ்விரண்டிலும் இரண்டு ஊற்றுகள் பீறிட்டு ஓடும்.
திருக்குர்ஆன் 55:50

فِيهِمَا عَيْنَانِ نَضَّاخَتَانِ

அவ்விரண்டிலும் பொங்கி வழியும் இரண்டு ஊற்றுகள் உள்ளன.
திருக்குர்ஆன் 55:66

عَيْنًا يَشْرَبُ بِهَا عِبَادُ اللَّهِ يُفَجِّرُونَهَا تَفْجِيرًا

ஓர் ஊற்று! அதில் அல்லாஹ்வின் அடியார்கள் பருகுவார்கள். அவர்கள் (தாம்) இருக்குமிடத்திலிருந்தே அதைப் பெற்றுக் கொள்வார்கள்.
திருக்குர்ஆன் 76:6

عَيْنًا فِيهَا تُسَمَّىٰ سَلْسَبِيلًا

அங்குள்ள ஸல்ஸபீல் எனப்படும் நீரூற்றிலிருந்து புகட்டப்படுவார்கள்.
திருக்குர்ஆன் 76:18

إِنَّ الْمُتَّقِينَ فِي ظِلَالٍ وَعُيُونٍ

(இறைவனை) அஞ்சியோர் நிழல்களிலும், நீரூற்றுகளிலும் இருப்பார்கள்.
திருக்குர்ஆன் 77:41

عَيْنًا يَشْرَبُ بِهَا الْمُقَرَّبُونَ

அது நெருக்கமானோர் அருந்துகிற நீரூற்று!
திருக்குர்ஆன் 83:28

فِيهَا عَيْنٌ جَارِيَةٌ

அங்கே ஓடும் ஊற்றுகள் உண்டு.
திருக்குர்ஆன் 88:12

Saturday, February 25, 2023

உபதேசம் 609

 ﷽ உபதேசம் 609

25-02-2023 சனிக்கிழமை

قَالَتْ كَانَ النَّبِيُّ (ﷺ) يَقُولُ فِي رُكُوعِهِ وَسُجُودِهِ "" سُبْحَانَكَ اللَّهُمَّ رَبَّنَا وَبِحَمْدِكَ، اللَّهُمَّ اغْفِرْ لِي "".

'நபி(ஸல்) அவர்கள் தங்களின் ருகூவிலும் ஸஜ்தாவிலும்

சுப்ஹானக்கல்லாஹும்ம ரப்பனா வபிஹம்திக்க, அல்லாஹும்ம ஃக்ஃபிர்லீ

'இறைவா! நீ தூயவன்; உன்னைப் புகழ்கிறேன்; என்னை மன்னித்து விடு!' என்று கூறக்கூடியவர்களாக இருந்தார்கள்'

அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி) புகாரி : 794

குர்ஆன் வசனம் 359

 ﷽ குர்ஆன் வசனம் 359

25-02-2023 சனிக்கிழமை

هُنَالِكَ الۡوَلَايَةُ لِلّٰهِ الۡحَـقِّ‌ ؕ هُوَ خَيۡرٌ ثَوَابًا وَّخَيۡرٌ عُقۡبًا

அங்கே உதவுதல் உண்மையான அல்லாஹ்வுக்கே உள்ளது. அவனே சிறந்த கூலி கொடுப்பவன்; சிறந்த முடிவு எடுப்பவன்.

[அல்குர்ஆன் 18:44]

அல்லாஹு அக்பர் என்பதன் சிறப்பு. ( 5 )

 அல்லாஹு அக்பர் என்பதன் சிறப்பு. ( 5 )


اَللهُ أَكْبَرُ

அல்லாஹு அக்பர்.

பொருள் : அல்லாஹ் மிகப் பெரியவன்.

சட்டம் : இரண்டு ஸஜ்தாக்களின் போதும், இரண்டு ஸஜ்தாக்களை முடித்து எழும்போதும், அல்லாஹு அக்பர் கூறுதல்.

ஆதாரம் : நபி(ஸல்) அவர்கள் 'ஸமிஅல்லாஹுலிமன் ஹமிதா' எனக் கூறியபின் 'அல்லாஹும்ம ரப்பனா வ லகல்ஹம்து' என்றும் கூறுவார்கள். மேலும் ருகூவு செய்யும் போதும் ருகூவிலிருந்து உயரும் போதும் தக்பீர் கூறுவார்கள். இரண்டு ஸஜ்தாக்களை முடித்து எழும்போதும் 'அல்லாஹு அக்பர்' எனக் கூறுவார்கள்' என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி : 795.

சொர்க்கச் சோலைகள். ( 4 )

சொர்க்கச் சோலைகள். ( 4 )
அழகான குடியிருப்புகளும் உண்டு.

الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ طُوبَىٰ لَهُمْ وَحُسْنُ مَآبٍ

நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்தோருக்கு நல்வாழ்வும், அழகிய தங்குமிடமும் உண்டு.
திருக்குர்ஆன் 13:29

أُولَٰئِكَ يُجْزَوْنَ الْغُرْفَةَ بِمَا صَبَرُوا وَيُلَقَّوْنَ فِيهَا تَحِيَّةً وَسَلَامًا

அவர்கள் சகித்துக் கொண்ட காரணத்தால் அவர்களுக்கு மாளிகை வழங்கப்படும். ஸலாமுடன் வாழ்த்துக் கூறி அவர்கள் வரவேற்கப்படுவார்கள்.
திருக்குர்ஆன் 25:75

وَالَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ لَنُبَوِّئَنَّهُم مِّنَ الْجَنَّةِ غُرَفًا تَجْرِي مِن تَحْتِهَا الْأَنْهَارُ خَالِدِينَ فِيهَا ۚ نِعْمَ أَجْرُ الْعَامِلِينَ

நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்வோரை சொர்க்கத்தில் உள்ள மாளிகையில் குடியமர்த்துவோம். அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் நிரந்தரமாக இருப்பார்கள். உழைத்தோரின் கூலி அழகானது.
திருக்குர்ஆன் 29:58

لَٰكِنِ الَّذِينَ اتَّقَوْا رَبَّهُمْ لَهُمْ غُرَفٌ مِّن فَوْقِهَا غُرَفٌ مَّبْنِيَّةٌ تَجْرِي مِن تَحْتِهَا الْأَنْهَارُ ۖ وَعْدَ اللَّهِ ۖ لَا يُخْلِفُ اللَّهُ الْمِيعَادَ

மாறாக, தமது இறைவனை அஞ்சியோருக்கு மாளிகைகளுக்கு மேல் எழுப்பப்பட்ட மாளிகைகள் உள்ளன. அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். இது அல்லாஹ்வின் வாக்குறுதி. அல்லாஹ் வாக்குறுதியை மீற மாட்டான்.
திருக்குர்ஆன் 39:20

يَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَيُدْخِلْكُمْ جَنَّاتٍ تَجْرِي مِن تَحْتِهَا الْأَنْهَارُ وَمَسَاكِنَ طَيِّبَةً فِي جَنَّاتِ عَدْنٍ ۚ ذَٰلِكَ الْفَوْزُ الْعَظِيمُ

உங்களுக்காக உங்கள் பாவங்களை அவன் மன்னிப்பான். உங்களை சொர்க்கச் சோலைகளில் நுழையச் செய்வான். அதன் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். நிலையான சொர்க்கச் சோலைகளில் தூய குடியிருப்புகளும் உள்ளன. இதுவே மகத்தான வெற்றி.

திருக்குர்ஆன் 61:12 

Friday, February 24, 2023

சொர்க்கத்தில் உணவு. ( 2 )

 சொர்க்கத்தில் உணவு. ( 2 )

மாமிச உணவும் உண்டு.

وَأَمْدَدْنَاهُم بِفَاكِهَةٍ وَلَحْمٍ مِّمَّا يَشْتَهُونَ

அவர்களுக்குக் கனியையும், அவர்கள் விரும்பும் இறைச்சியையும் அளிப்போம்.
திருக்குர்ஆன் 52:22

وَفَاكِهَةٍ مِّمَّا يَتَخَيَّرُونَ وَلَحْمِ طَيْرٍ مِّمَّا يَشْتَهُونَ

அவர்கள் விரும்புகிற கனிகளுடனும், அவர்கள் ஆசைப்படும் பறவைகளின் மாமிசத்துடனும் (அச்சிறுவர்கள் சுற்றி வருவார்கள்.)
திருக்குர்ஆன் 56:20,21

பட்டினியில்லாத வகையில் உணவு.

مَّثَلُ الْجَنَّةِ الَّتِي وُعِدَ الْمُتَّقُونَ ۖ تَجْرِي مِن تَحْتِهَا الْأَنْهَارُ ۖ أُكُلُهَا دَائِمٌ وَظِلُّهَا ۚ تِلْكَ عُقْبَى الَّذِينَ اتَّقَوا ۖ وَّعُقْبَى الْكَافِرِينَ النَّارُ

(இறைவனை) அஞ்சுவோருக்கு வாக்களிக்கப்பட்ட சொர்க்கத்தின் தன்மை, அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதன் உணவும், நிழலும் நிரந்தரமானதாக இருக்கும். இதுவே (இறைவனை) அஞ்சுவோர்க்கான முடிவாகும். (ஏகஇறைவனை) மறுப்போரின் முடிவு நரகமே.
திருக்குர்ஆன் 13:35

பசி இல்லை.

إِنَّ لَكَ أَلَّا تَجُوعَ فِيهَا وَلَا تَعْرَىٰ

இங்கே நீர் பசியோடு இருக்க மாட்டீர்! நிர்வாணமாக மாட்டீர்!
திருக்குர்ஆன் 20:118

தாகம் இல்லை.

وَأَنَّكَ لَا تَظْمَأُ فِيهَا وَلَا تَضْحَىٰ

இங்கே நீர் தாகத்துடனும் இருக்க மாட்டீர்! உம்மீது வெயிலும் படாது! (என்று கூறினோம்).
திருக்குர்ஆன் 20:119

குர்ஆன் வசனம் 358

 ﷽ குர்ஆன் வசனம் 358

24-02-2023 வெள்ளிக்கிழமை

اِنَّ الَّذِيۡنَ اٰمَنُوۡا وَعَمِلُوا الصّٰلِحٰتِ اِنَّا لَا نُضِيۡعُ اَجۡرَ مَنۡ اَحۡسَنَ عَمَلًا‌

யார் நம்பிக்கை கொண்டு, நல்லறங்கள் செய்கிறார்களோ (அவ்வாறு) அழகிய செயல் செய்பவரின் கூலியை நாம் வீணாக்க மாட்டோம்.

[அல்குர்ஆன் 18:30]

உபதேசம் : 608

 ﷽ உபதேசம் : 608

24-02-2023 வெள்ளிக்கிழமை

ஒவ்வொரு தொழுகைகளுக்குப் பிறகும் (தன்னைத்) துதிக்கும்படி நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் கட்டளையிட்டான்!

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி) புகாரி - 4852

Chapter - 15 Surah Al Hijr

‏‏‏‏Chapter - 15

Surah Al-Hijr


بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

In the name of Allah the most beneficent, most merciful
----------------------------------------------------------

أعوذ بالله من الشيطان الرجيم
I seek refuge in Allah from the outcast Shaitan
‏‏‏‏‏‏‏ ‏‏‏‏‏‏
قَالُوا لَا تَوْجَلْ إِنَّا نُبَشِّرُكَ بِغُلَامٍ عَلِيمٍ

They (the angels) said: \Do not be afraid! We give you glad tidings of a boy (son) possessing much knowledge and wisdom.\" (Al-Hijr 15:53)"

அல்லாஹு அக்பர் என்பதன் சிறப்பு. ( 4 )

அல்லாஹு அக்பர் என்பதன் சிறப்பு. ( 4 )

அல்லாஹு அக்பர் கபீரா, வல்ஹம்து லில்லாஹி கஸீரா, வ சுப்ஹானல்லாஹி புக்ரத்தவ் வ அஸீலா.

பொருள் : அல்லாஹ் மிகப் பெரியவன் என்று பெருமைப்படுத்துகிறேன். எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே உரியது என்று அதிகமாகப் போற்றுகிறேன். அல்லாஹ் பரிசுத்தமானவன் என்று காலையிலும் மாலையிலும் அவனைத் துதிக்கிறேன்.

சிறப்பு : இதற்காக வானத்தின் வாசல்கள் திறக்கப்படுகின்றன.

ஆதாரம் : இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் தொழுதுகொண்டிருந்தோம். அப்போது மக்களில் ஒருவர் "அல்லாஹு அக்பர் கபீரா, வல்ஹம்து லில்லாஹி கஸீரா, வ சுப்ஹானல்லாஹி புக்ரத்தவ் வ அஸீலா" (அல்லாஹ் மிகப் பெரியவன் என்று பெருமைப்படுத்துகிறேன். எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே உரியது என்று அதிகமாகப் போற்றுகிறேன். அல்லாஹ் பரிசுத்தமானவன் என்று காலையிலும் மாலையிலும் அவனைத் துதிக்கிறேன்) என்று கூறினார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "இன்ன இன்ன வார்த்தைகளை மொழிந்தவர் யார்?" என்று கேட்டார்கள். அப்போது மக்களில் ஒருவர், "நான்தான் அல்லாஹ்வின் தூதரே!" என்று கூறினார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நான் இதைக் கேட்டு வியப்புற்றேன். இதற்காக வானத்தின் வாசல்கள் திறக்கப்பட்டன" என்று கூறினார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறக் கேட்டதிலிருந்து நான் அதைக் கூறாமல் இருந்ததில்லை.

ஸஹீஹ் முஸ்லிம் : 1052 

சொர்க்கச் சோலைகள். ( 3 )

 சொர்க்கச் சோலைகள். ( 3 )

சொர்க்கச் சோலைகளின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும்.

لَٰكِنِ الَّذِينَ اتَّقَوْا رَبَّهُمْ لَهُمْ جَنَّاتٌ تَجْرِي مِن تَحْتِهَا الْأَنْهَارُ خَالِدِينَ فِيهَا نُزُلًا مِّنْ عِندِ اللَّهِ ۗ وَمَا عِندَ اللَّهِ خَيْرٌ لِّلْأَبْرَارِ

எனினும் தமது இறைவனை அஞ்சியோருக்கு சொர்க்கச் சோலைகள் உள்ளன. அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் நிரந்தரமாக இருப்பார்கள். (இது) அல்லாஹ்வின் விருந்து. அல்லாஹ்விடம் இருப்பவை நல்லோருக்குச் சிறந்தது.
திருக்குர்ஆன் 3:198

تِلْكَ حُدُودُ اللَّهِ ۚ وَمَن يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ يُدْخِلْهُ جَنَّاتٍ تَجْرِي مِن تَحْتِهَا الْأَنْهَارُ خَالِدِينَ فِيهَا ۚ وَذَٰلِكَ الْفَوْزُ الْعَظِيمُ

இவை அல்லாஹ்வின் வரம்புகள். அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுவோரை சொர்க்கச் சோலைகளில் அவன் நுழையச் செய்வான். அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் நிரந்தரமாக இருப்பார்கள். இதுவே மகத்தான வெற்றி.
திருக்குர்ஆன் 4:13

فَأَثَابَهُمُ اللَّهُ بِمَا قَالُوا جَنَّاتٍ تَجْرِي مِن تَحْتِهَا الْأَنْهَارُ خَالِدِينَ فِيهَا ۚ وَذَٰلِكَ جَزَاءُ الْمُحْسِنِينَ

அவர்கள் (இவ்வாறு) கூறியதால் அவர்களுக்கு சொர்க்கச் சோலைகளை அல்லாஹ் பரிசாக வழங்கினான். அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் நிரந்தரமாக இருப்பார்கள். இதுவே நன்மை செய்வோருக்குரிய கூலி.
திருக்குர்ஆன் 5:85

أَعَدَّ اللَّهُ لَهُمْ جَنَّاتٍ تَجْرِي مِن تَحْتِهَا الْأَنْهَارُ خَالِدِينَ فِيهَا ۚ ذَٰلِكَ الْفَوْزُ الْعَظِيمُ

அவர்களுக்காகச் சொர்க்கச் சோலைகளை அல்லாஹ் தயாரித்துள்ளான். அதன் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் நிரந்தரமாக இருப்பார்கள். இதுவே மகத்தான வெற்றி.
திருக்குர்ஆன் 9:89


إِنَّ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ يَهْدِيهِمْ رَبُّهُم بِإِيمَانِهِمْ ۖ تَجْرِي مِن تَحْتِهِمُ الْأَنْهَارُ فِي جَنَّاتِ النَّعِيمِ

நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்தவர்கள் நம்பிக்கை கொண்டதன் காரணமாக அவர்களின் இறைவன் இன்பம் நிறைந்த சொர்க்கச் சோலைகளில் அவர்களைச் சேர்ப்பான். அவர்களுக்குக் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும்.
திருக்குர்ஆன் 10:9

جَنَّاتُ عَدْنٍ تَجْرِي مِن تَحْتِهَا الْأَنْهَارُ خَالِدِينَ فِيهَا ۚ وَذَٰلِكَ جَزَاءُ مَن تَزَكَّىٰ

நிலையான சொர்க்கச் சோலைகள் உள்ளன. அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் நிரந்தரமாக இருப்பார்கள். இதுவே பரிசுத்தமாக வாழ்ந்தோரின் கூலி.
திருக்குர்ஆன் 20:76

إِنَّ اللَّهَ يُدْخِلُ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ جَنَّاتٍ تَجْرِي مِن تَحْتِهَا الْأَنْهَارُ يُحَلَّوْنَ فِيهَا مِنْ أَسَاوِرَ مِن ذَهَبٍ وَلُؤْلُؤًا ۖ وَلِبَاسُهُمْ فِيهَا حَرِيرٌ

நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்தோரை அல்லாஹ் சொர்க்கச் சோலைகளில் நுழையச் செய்வான். அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். தங்கக் காப்புகளும், முத்தும் அவர்களுக்கு அணிவிக்கப்படும். அங்கே அவர்களின் ஆடை பட்டாகும்.
திருக்குர்ஆன் 22:23

நூல் - முஸ்லிம் : 3190

 . ...🌹...

...ஏக இறைவனின் பெயரால்...

இன்றைய (22.02.2023)நபி மொழி.

தினமும் ஓர் உபதேசம் : 2115

"(தேவைக்கு மேல்) எஞ்சியுள்ள தண்ணீரை, விற்கலாகாது" என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)

நூல் - முஸ்லிம் : 3190

🌹📖🌹

Thursday, February 23, 2023

குர்ஆன் வசனம் 357

 ﷽ குர்ஆன் வசனம் 357

23-02-2023 வியாழக்கிழமை

அநீதி இழைத்தோருக்கு நரகத்தை நாம் தயாரித்துள்ளோம். அதன் சுவர்கள் அவர்களைச் சுற்றி வளைத்துக் கொள்ளும். அவர்கள் தண்ணீர் கேட்டால் முகத்தைப் பொசுக்கும் உருக்கிய செம்பு போன்ற கொதிநீர் வழங்கப்படும்.

[அல்குர்ஆன் 18:29]

உபதேசம் : 607

 ﷽ உபதேசம் : 607

23-02-2023 வியாழக்கிழமை

"நீங்கள் குர்ஆனை ஓதுங்கள் !
நிச்சயமாக அது மறுமை நாளில் தன்னைச் சார்ந்தவருக்குப் பரிந்துரையாக வரும்!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஉமாமா (ரலி) முஸ்லிம் - 804

சொர்க்கத்தில் உணவு. ( 1 )

 சொர்க்கத்தில் உணவு. ( 1 )

ஏற்கனவே சாப்பிட்ட கனிகள் வடிவத்திலேயே கனிகள் உணவாக அளிக்கப்படும்.

وَبَشِّرِ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ أَنَّ لَهُمْ جَنَّاتٍ تَجْرِي مِن تَحْتِهَا الْأَنْهَارُ ۖ كُلَّمَا رُزِقُوا مِنْهَا مِن ثَمَرَةٍ رِّزْقًا ۙ قَالُوا هَٰذَا الَّذِي رُزِقْنَا مِن قَبْلُ ۖ وَأُتُوا بِهِ مُتَشَابِهًا ۖ وَلَهُمْ فِيهَا أَزْوَاجٌ مُّطَهَّرَةٌ ۖ وَهُمْ فِيهَا خَالِدُونَ

"நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்தோருக்கு சொர்க்கச் சோலைகள் உள்ளன' என்று நற்செய்தி கூறுவீராக! அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் ஏதாவது கனி அவர்களுக்கு உணவாக வழங்கப்படும் போதெல்லாம் "இதற்கு முன் இது தானே நமக்கு வழங்கப்பட்டது' எனக் கூறுவார்கள். இதே தோற்றமுடையது தான் (முன்னரும்) கொடுக்கப்பட்டிருந்தது. அங்கே அவர்களுக்குத் தூய்மையான துணைகளும்8 உள்ளனர். அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள்.
திருக்குர்ஆன் 2:25

لَهُمْ فِيهَا فَاكِهَةٌ وَلَهُم مَّا يَدَّعُونَ

அங்கே அவர்களுக்குக் கனிகள் உள்ளன. அவர்கள் கேட்டவை அவர்களுக்குக் கிடைக்கும்.
திருக்குர்ஆன் 36:57

فِي جَنَّاتِ النَّعِيمِ

இனிமையான சொர்க்கச் சோலைகளில் அவர்களுக்கு அறியப்பட்ட உணவும், கனிகளும் உண்டு. அவர்கள் மரியாதையுடன் நடத்தப்படுவார்கள்.
திருக்குர்ஆன் 37:43

وَأَمْدَدْنَاهُم بِفَاكِهَةٍ وَلَحْمٍ مِّمَّا يَشْتَهُونَ

அவர்களுக்குக் கனியையும், அவர்கள் விரும்பும் இறைச்சியையும் அளிப்போம்.
திருக்குர்ஆன் 52:22

فِيهِمَا فَاكِهَةٌ وَنَخْلٌ وَرُمَّانٌ

அவ்விரண்டிலும் கனியும், பேரீச்சையும், மாதுளையும் உள்ளன.
திருக்குர்ஆன் 55:68

Chapter - 15 Surah Al-Hijr

‏‏‏‏Chapter - 15

Surah Al-Hijr


بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

In the name of Allah the most beneficent, most merciful
----------------------------------------------------------

أعوذ بالله من الشيطان الرجيم
I seek refuge in Allah from the outcast Shaitan
‏‏‏‏‏‏‏ ‏‏‏‏‏‏‏‏
وَنَبِّئْهُمْ عَنْ ضَيْفِ إِبْرَاهِيمَ

And tell them about the guests (the angels) of Ibrahim (Abraham) (Al-Hijr 15:51)

إِذْ دَخَلُوا عَلَيْهِ فَقَالُوا سَلَامًا قَالَ إِنَّا مِنْكُمْ وَجِلُونَ

When they entered unto him, and said: Salaman (peace)! [Ibrahim (Abraham)] said: \Indeed! We are afraid of you.\" (Al-Hijr 15:52)"

சொர்க்கச் சோலைகள். ( 2 )

 சொர்க்கச் சோலைகள். ( 2 )

வீண் பேச்சுக்கள் இல்லை.

لَّا يَسْمَعُونَ فِيهَا لَغْوًا إِلَّا سَلَامًا ۖ وَلَهُمْ رِزْقُهُمْ فِيهَا بُكْرَةً وَعَشِيًّا

அங்கே ஸலாம் என்பதைத் தவிர எந்த வீணானதையும் அவர்கள் செவியுற மாட்டார்கள். அங்கே காலையிலும், மாலையிலும் அவர்களுக்குரிய உணவுகள் உள்ளன.
திருக்குர்ஆன் 19:62

لَا يَسْمَعُونَ فِيهَا لَغْوًا وَلَا تَأْثِيمًا

அங்கே வீணானதையோ, பாவமான சொல்லையோ செவியுற மாட்டார்கள்.
திருக்குர்ஆன் 56:25

لَّا يَسْمَعُونَ فِيهَا لَغْوًا وَلَا كِذَّابًا

அங்கே வீணானதையோ, பொய்யையோ செவியுற மாட்டார்கள்.
திருக்குர்ஆன் 78:35

لَّا تَسْمَعُ فِيهَا لَاغِيَةً

அங்கே அவை வீணானதைச் செவியுறாது.
திருக்குர்ஆன் 88:11

கடும் குளிரும் இராது.

مُّتَّكِئِينَ فِيهَا عَلَى الْأَرَائِكِ ۖ لَا يَرَوْنَ فِيهَا شَمْسًا وَلَا زَمْهَرِيرًا

அதில் அவர்கள் உயர்ந்த இருக்கைகள் மீது சாய்ந்திருப்பார்கள். அங்கே சூரியனையும், கடும் குளிர்ச்சியையும் காண மாட்டார்கள்.
திருக்குர்ஆன் 76:13

அல்லாஹு அக்பர் என்பதன் சிறப்பு. ( 3 )

 அல்லாஹு அக்பர் என்பதன் சிறப்பு. ( 3 )


اَللهُ أَكْبَرُ

அல்லாஹு அக்பர்.

பொருள் : அல்லாஹ் மிகப் பெரியவன்.

சட்டம் : ருகூவு செய்யும் போதும், ருகூவிலிருந்து உயரும் போதும், தக்பீர் கூறவேண்டும்.

ஆதாரம் : நபி(ஸல்) அவர்கள் 'ஸமிஅல்லாஹுலிமன் ஹமிதா' எனக் கூறியபின் 'அல்லாஹும்ம ரப்பனா வ லகல்ஹம்து' என்றும் கூறுவார்கள். மேலும் ருகூவு செய்யும் போதும் ருகூவிலிருந்து உயரும் போதும் தக்பீர் கூறுவார்கள். இரண்டு ஸஜ்தாக்களை முடித்து எழும்போதும் 'அல்லாஹு அக்பர்' எனக் கூறுவார்கள்' என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி : 795.

Wednesday, February 22, 2023

சொர்க்கச் சோலைகள். ( 27 )

 சொர்க்கச் சோலைகள். ( 27 )

வெளியேற்றப்பட மாட்டார்கள்.

وَأَمَّا الَّذِينَ ابْيَضَّتْ وُجُوهُهُمْ فَفِي رَحْمَةِ اللَّهِ هُمْ فِيهَا خَالِدُونَ

வெண்மையான முகமுடையோர் அல்லாஹ்வின் அருளில் இருப்பார்கள். அதில் நிரந்தரமாக இருப்பார்கள்.
திருக்குர்ஆன் 3:107

تِلْكَ حُدُودُ اللَّهِ ۚ وَمَن يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ يُدْخِلْهُ جَنَّاتٍ تَجْرِي مِن تَحْتِهَا الْأَنْهَارُ خَالِدِينَ فِيهَا ۚ وَذَٰلِكَ الْفَوْزُ الْعَظِيمُ

இவை அல்லாஹ்வின் வரம்புகள். அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுவோரை சொர்க்கச் சோலைகளில் அவன் நுழையச் செய்வான். அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் நிரந்தரமாக இருப்பார்கள். இதுவே மகத்தான வெற்றி.
திருக்குர்ஆன் 4:13

لِّلَّذِينَ أَحْسَنُوا الْحُسْنَىٰ وَزِيَادَةٌ ۖ وَلَا يَرْهَقُ وُجُوهَهُمْ قَتَرٌ وَلَا ذِلَّةٌ ۚ أُولَٰئِكَ أَصْحَابُ الْجَنَّةِ ۖ هُمْ فِيهَا خَالِدُونَ

நன்மை செய்தோருக்கு நன்மையும், (அதை விட) அதிகமாகவும் உண்டு. அவர்களின் முகங்களில் இருளோ, இழிவோ ஏற்படாது. அவர்களே சொர்க்கவாசிகள். அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள்.
திருக்குர்ஆன் 10:26

وَأَمَّا الَّذِينَ سُعِدُوا فَفِي الْجَنَّةِ خَالِدِينَ فِيهَا مَا دَامَتِ السَّمَاوَاتُ وَالْأَرْضُ إِلَّا مَا شَاءَ رَبُّكَ ۖ عَطَاءً غَيْرَ مَجْذُوذٍ

நல்லோர் சொர்க்கத்தில் இருப்பார்கள். வானங்களும் பூமியும் நிலையாக இருக்கும் காலமெல்லாம் அவர்கள் அதில் நிரந்தரமாக இருப்பார்கள். உமது இறைவன் நாடியதைத் தவிர. (அது) குறைவில்லாத அருட்கொடை.
திருக்குர்ஆன் 11:108

لَا يَمَسُّهُمْ فِيهَا نَصَبٌ وَمَا هُم مِّنْهَا بِمُخْرَجِينَ

அதில் அவர்களுக்கு எந்தச் சிரமமும் ஏற்படாது. அதிலிருந்து அவர்கள் வெளியேற்றப்படவும் மாட்டார்கள்.
திருக்குர்ஆன் 15:48

أُولَٰئِكَ الَّذِينَ نَتَقَبَّلُ عَنْهُمْ أَحْسَنَ مَا عَمِلُوا وَنَتَجَاوَزُ عَن سَيِّئَاتِهِمْ فِي أَصْحَابِ الْجَنَّةِ ۖ وَعْدَ الصِّدْقِ الَّذِي كَانُوا يُوعَدُونَ

அவர்கள் செய்த நல்லறத்தை அவர்களிடமிருந்து நாம் ஏற்றுக் கொள்வோம். அவர்களின் தீமைகளை மன்னிப்போம். அவர்கள் சொர்க்கவாசிகளில் இருப்பார்கள். (இது) அவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட உண்மையான வாக்குறுதி.
திருக்குர்ஆன் 46:16

ادْخُلُوهَا بِسَلَامٍ ۖ ذَٰلِكَ يَوْمُ الْخُلُودِ

"நிம்மதியுடன் இதில் நுழையுங்கள்! இதுவே நிரந்தரமான நாள்!'' என்று கூறப்படும்.
திருக்குர்ஆன் 50:34

Chapter - 15 Surah Al-Hijr

Chapter - 15

Surah Al-Hijr

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
In the name of Allah the most beneficent, most merciful
----------------------------------------------------------
أعوذ بالله من الشيطان الرجيم
I seek refuge in Allah from the outcast Shaitan‏‏‏‏‏‏‏ ‏
نَبِّئْ عِبَادِي أَنِّي أَنَا الْغَفُورُ الرَّحِيمُ
Declare (O Muhammad SAW) unto My slaves, that truly, I am the Oft-Forgiving, the Most-Merciful. (Al-Hijr 15:49)
وَأَنَّ عَذَابِي هُوَ الْعَذَابُ الْأَلِيمُ
And that My Torment is indeed the most painful torment. (Al-Hijr 15:50)

உபதேசம் : 606

 ﷽ உபதேசம் : 606

22-02-2023 புதன்கிழமை

"அல்கஹ்ஃப்" எனும் (18ஆவது) அத்தியாயத்தின் முதல் பத்து வசனங்களை மனனம் செய்தவர் (பெருங்குழப்பவாதியான) தஜ்ஜாலிடமிருந்து பாதுகாக்கப்படுவார்!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபுத்தர்தா (ரலி) முஸ்லிம் - 1475

குர்ஆன் வசனம் 356

 ﷽ குர்ஆன் வசனம் 356

22-02-2023 புதன்கிழமை

وَقُلِ الۡحَـقُّ مِنۡ رَّبِّكُمۡ‌ فَمَنۡ شَآءَ فَلۡيُؤۡمِنۡ وَّمَنۡ شَآءَ فَلۡيَكۡفُرۡ

"இவ்வுண்மை உங்கள் இறைவனிடமிருந்து உள்ளது" என்று (முஹம்மதே) கூறுவீராக! விரும்பியவர் நம்பட்டும்! விரும்பியவர் மறுக்கட்டும்.

[அல்குர்ஆன் 18:29]

அல்லாஹு அக்பர் என்பதன் சிறப்பு. ( 2 )

 அல்லாஹு அக்பர் என்பதன் சிறப்பு. ( 2 )


سبحان لله. الحمدلله. الله أكبر.

சுப்ஹானல்லாஹ், 33 முறை அல்ஹம்துலில்லாஹ், 33 முறை
அல்லாஹு அக்பர். 33 முறை

பொருள் : அல்லாஹ் தூயவன், அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும்,
அல்லாஹ் மிகப் பெரியவன்.

சிறப்பு : ஜகாத், உம்ரா மற்றும் ஹஜ்ஜை ஈடுகட்டும் நன்மை.

ஆதாரம் : அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். ஏழை மக்கள் சிலர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து 'பொருளாதாரச் செல்வம் பெற்றவர்கள் உயர்வான பதவிகளையும் நிலையான பாக்கியத்தையும் பெற்றுக் கொள்கிறார்கள். நாங்கள் தொழுவது போன்றே அவர்களும் தொழுகிறார்கள். மேலும் நாங்கள் நோன்பு வைப்பது போன்றே அவர்களும் நோன்பு நோற்கின்றனர். ஆயினும் அவர்களுக்குப் பொருளாதாரச் சிறப்பு இருப்பதனால் தங்கள் பொருளாதாரத்தின் மூலம் ஹஜ் செய்கின்றனர்;உம்ராச் செய்கின்றனர். அறப்போரிடுகின்றனர்; தர்மமும் செய்கின்றனர். (ஏழைகளாகிய நாங்கள் இவற்றைச் செய்ய முடிவதில்லை)' என்று முறையிட்டனர். அதற்கு நபி(ஸல்) அவர்கள் 'நான் உங்களுக்கு ஒரு காரியத்தைக் கற்றுத் தருகிறேன். அதை நீங்கள் செய்து வந்தால் உங்களை முந்திவிட்டவர்களை நீங்களும் பிடித்து விடுவீர்கள். உங்களுக்குப் பிந்தி வருபவர்கள் உங்களைப் பிடிக்க இயலாது. நீங்கள் எந்த மக்களுடன் வாழ்கிறீர்களோ அவர்களும் அந்தக் காரியத்தைச் செய்தால் தவிர அவர்களில் நீங்கள் மிகச் சிறந்தவராவீர்கள். (அந்த காரியமாவது) ஒவ்வொரு தொழுகைக்குப் பின்பும் 33முறை இறைவனைத் துதியுங்கள்; 33 முறை இறைவனைப் புகழுங்கள்; 33 முறை இறைவனைப் பெருமைப படுத்துங்கள்' என்று கூறினார்கள். நாங்கள் இது விஷயத்தில் பலவாறாகக் கூறிக் கொண்டோம். சிலர் ஸுப்ஹானல்லாஹ் 33 முறையும், அல்ஹம்துலில்லாஹ் 33 முறையும் அல்லாஹு அக்பர் 33 முறையும் கூறலானோம். நான் நபி(ஸல்) அவர்களிடம் சென்று இது பற்றிக் கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள் 'ஸுப்ஹானல்லாஹி வல் ஹம்து லில்லாஹி வல்லாஹு அக்பர்' என்று 33 முறை கூறுங்கள். இதனால் ஒவ்வொரு வார்த்தையையும் 33 முறை கூறினார்கள் என அமையும்'. என்று விளக்கம் தந்தார்கள்.
ஸஹீஹ் புகாரி : 843.

சொர்க்கச் சோலைகள். ( 1 )

 சொர்க்கச் சோலைகள். ( 1 )

நினைத்தவை யாவும் கிடைக்கும்.

جَنَّاتُ عَدْنٍ يَدْخُلُونَهَا تَجْرِي مِن تَحْتِهَا الْأَنْهَارُ ۖ لَهُمْ فِيهَا مَا يَشَاءُونَ ۚ كَذَٰلِكَ يَجْزِي اللَّهُ الْمُتَّقِينَ

நிலையான சொர்க்கச் சோலைகளில் அவர்கள் நுழைவார்கள். அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அவர்கள் விரும்பியவை அங்கே அவர்களுக்கு உண்டு. இவ்வாறே (தன்னை) அஞ்சுவோருக்கு அல்லாஹ் கூலி வழங்குவான்.
திருக்குர்ஆன் 16:31

لَّهُمْ فِيهَا مَا يَشَاءُونَ خَالِدِينَ ۚ كَانَ عَلَىٰ رَبِّكَ وَعْدًا مَّسْئُولًا

அவர்கள் நினைத்தவை அவர்களுக்கு அங்கே உண்டு. நிரந்தரமாக இருப்பார்கள். இது உமது இறைவனால் நிறைவேற்றப்படும் வாக்குறுதியாக ஆகி விட்டது.
திருக்குர்ஆன் 25:16

لَهُمْ فِيهَا فَاكِهَةٌ وَلَهُم مَّا يَدَّعُونَ

அங்கே அவர்களுக்குக் கனிகள் உள்ளன. அவர்கள் கேட்டவை அவர்களுக்குக் கிடைக்கும்.
திருக்குர்ஆன் 36:57

نَحْنُ أَوْلِيَاؤُكُمْ فِي الْحَيَاةِ الدُّنْيَا وَفِي الْآخِرَةِ ۖ وَلَكُمْ فِيهَا مَا تَشْتَهِي أَنفُسُكُمْ وَلَكُمْ فِيهَا مَا تَدَّعُونَ
نُزُلًا مِّنْ غَفُورٍ رَّحِيمٍ

இவ்வுலக வாழ்க்கையிலும், மறுமையிலும் நாங்கள் உங்கள் உதவியாளர்கள். நிகரற்ற அன்புடைய மன்னிப்பவனின் விருந்தாக நீங்கள் ஆசைப்படுபவை அங்கே உங்களுக்குக் கிடைக்கும். நீங்கள் கேட்பதும் அங்கே உங்களுக்கு உண்டு என்றும் கூறுவர்.
திருக்குர்ஆன் 41:31,32

تَرَى الظَّالِمِينَ مُشْفِقِينَ مِمَّا كَسَبُوا وَهُوَ وَاقِعٌ بِهِمْ ۗ وَالَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ فِي رَوْضَاتِ الْجَنَّاتِ ۖ لَهُم مَّا يَشَاءُونَ عِندَ رَبِّهِمْ ۚ ذَٰلِكَ هُوَ الْفَضْلُ الْكَبِيرُ

அநீதி இழைத்தோர் தாங்கள் செய்தது பற்றி அஞ்சியோராக இருப்பதை நீர் காண்பீர்! அது அவர்களை வீழ்த்திவிடும். நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்தோர் சொர்க்கச் சோலைகளில் இருப்பார்கள். அவர்கள் நாடியவை அவர்களது இறைவனிடம் அவர்களுக்காக உண்டு. இதுவே பேரருள்.
திருக்குர்ஆன் 42:22

يُطَافُ عَلَيْهِم بِصِحَافٍ مِّن ذَهَبٍ وَأَكْوَابٍ ۖ وَفِيهَا مَا تَشْتَهِيهِ الْأَنفُسُ وَتَلَذُّ الْأَعْيُنُ ۖ وَأَنتُمْ فِيهَا خَالِدُونَ

தங்கத் தட்டுகளும், கிண்ணங்களும் அவர்களிடம் கொண்டு வரப்படும். அதில் உள்ளங்கள் விரும்புபவையும், கண்கள் இன்புறுபவையும் இருக்கும். அதில் நீங்கள் நிரந்தரமாக இருப்பீர்கள்.
திருக்குர்ஆன் 43:71

لَهُم مَّا يَشَاءُونَ فِيهَا وَلَدَيْنَا مَزِيدٌ

அதில் அவர்கள் விரும்புவது அவர்களுக்கு உண்டு. அதிகமானதும் நம்மிடம் உண்டு.
திருக்குர்ஆன் 50:35

அல் குர்ஆன் - 33 : 2

 (நபியே!) உமது இறைவனிடமிருந்து உமக்கு அறிவிக்கப்படுவதையே பின்பற்றுவீராக! நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் நன்கறிந்தவனாக இருக்கிறான்.

அல் குர்ஆன் -   33 : 2

Tuesday, February 21, 2023

குர்ஆன் வசனம் 355

 ﷽ குர்ஆன் வசனம் 355

21-02-2023 செவ்வாய்க்கிழமை

நம்மை நினைப்பதை விட்டும் எவனது சிந்தனையை நாம் மறக்கடிக்கச் செய்து விட்டோமோ, அவனுக்குக் கட்டுப்படாதீர் !

[அல்குர்ஆன் 18:28]

உபதேசம் : 605

 ﷽ உபதேசம் : 605

21-02-2023 செவ்வாய்க்கிழமை

" குர்ஆனை சிரமத்துடன் தொடர்ந்து (தி்க்கிதிக்கி) ஓதி வருகிறவருக்கு இரண்டு மடங்கு நன்மைகள் உண்டு!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) புகாரி - 4937

சொர்க்கச் சோலைகள். ( 26 )

 சொர்க்கச் சோலைகள். ( 26 )

நல்லோர்களில் பல படித்தரங்கள் உள்ளன.

هُمْ دَرَجَاتٌ عِندَ اللَّهِ ۗ وَاللَّهُ بَصِيرٌ بِمَا يَعْمَلُونَ

அவர்களுக்கோ அல்லாஹ்விடம் பல தகுதிகள் உள்ளன. அவர்கள் செய்பவற்றை அல்லாஹ் பார்ப்பவன்.
திருக்குர்ஆன் 3:163

وَفَضَّلَ اللَّهُ الْمُجَاهِدِينَ عَلَى الْقَاعِدِينَ أَجْرًا عَظِيمًا دَرَجَاتٍ مِّنْهُ وَمَغْفِرَةً وَرَحْمَةً ۚ وَكَانَ اللَّهُ غَفُورًا رَّحِيمًا

போருக்குச் செல்லாதோரை விட போரிடுவோரை மகத்தான கூலியாலும், பல தகுதிகளாலும், தனது மன்னிப்பாலும், அருளாலும் அல்லாஹ் சிறப்பித்திருக்கிறான். அல்லாஹ் மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான்.
திருக்குர்ஆன் 4:95,96

لَا يَسْتَوِي مِنكُم مَّنْ أَنفَقَ مِن قَبْلِ الْفَتْحِ وَقَاتَلَ ۚ أُولَٰئِكَ أَعْظَمُ دَرَجَةً مِّنَ الَّذِينَ أَنفَقُوا مِن بَعْدُ وَقَاتَلُوا ۚ وَكُلًّا وَعَدَ اللَّهُ الْحُسْنَىٰ ۚ وَاللَّهُ بِمَا تَعْمَلُونَ خَبِيرٌ

உங்களில் (மக்கா) வெற்றிக்கு முன் (நல்வழியில்) செலவு செய்து போரிட்டவருக்கு (உங்களில் யாரும்) சமமாக மாட்டார்கள். (வெற்றிக்குப்) பின்னர் செலவிட்டு போரிட்டவர்களை விட அவர்கள் மகத்தான பதவியுடையவர்கள். அனைவருக்கும் அல்லாஹ் அழகியதையே வாக்களித்துள்ளான். நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன்.
திருக்குர்ஆன் 57:10

மிகச் சிறந்தவர்களின் தோழமையும் உண்டு.

وَمَن يُطِعِ اللَّهَ وَالرَّسُولَ فَأُولَٰئِكَ مَعَ الَّذِينَ أَنْعَمَ اللَّهُ عَلَيْهِم مِّنَ النَّبِيِّينَ وَالصِّدِّيقِينَ وَالشُّهَدَاءِ وَالصَّالِحِينَ ۚ وَحَسُنَ أُولَٰئِكَ رَفِيقًا

அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் (முஹம்மதுக்கும்) கட்டுப்பட்டு நடப்போர், அல்லாஹ்வின் அருள் பெற்ற நபிமார்களுடனும், உண்மையாளர்களுடனும், உயிர்த் தியாகிகளுடனும் நல்லோருடனும் இருப்பார்கள். அவர்களே மிகச் சிறந்த நண்பர்கள்.
திருக்குர்ஆன் 4:69

சொர்க்கத்திற்குக் கதவுகள் இருக்கும்.

هَٰذَا ذِكْرٌ ۚ وَإِنَّ لِلْمُتَّقِينَ لَحُسْنَ مَآبٍ جَنَّاتِ عَدْنٍ مُّفَتَّحَةً لَّهُمُ الْأَبْوَابُ

இது அறிவுரை! (இறைவனை) அஞ்சுவோருக்கு வாயில்கள் திறக்கப்பட்ட நிலையான சொர்க்கச் சோலைகளான சிறந்த தங்குமிடம் உள்ளது.
திருக்குர்ஆன் 38:49,50

Chapter - 15 Surah Al-Hijr

Chapter - 15

Surah Al-Hijr


بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

In the name of Allah the most beneficent, most merciful
----------------------------------------------------------

أعوذ بالله من الشيطان الرجيم
I seek refuge in Allah from the outcast Shaitan


نَبِّئْ عِبَادِي أَنِّي أَنَا الْغَفُورُ الرَّحِيمُ

Declare (O Muhammad SAW) unto My slaves, that truly, I am the Oft-Forgiving, the Most-Merciful. (Al-Hijr 15:49)

அல்லாஹு அக்பர் என்பதன் சிறப்பு. ( 1 )

 அல்லாஹு அக்பர் என்பதன் சிறப்பு. ( 1 )


اَللهُ أَكْبَرُ

அல்லாஹு அக்பர்.

பொருள் : அல்லாஹ் மிகப் பெரியவன்.

சட்டம் : தொழுகையை துவக்கும் போது தக்பீர் கூற வேண்டும்.

ஆதாரம் : அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.'நீர் தொழ நினைத்தால் (முதலில்) பரிபூரணமாக அங்கசுத்தி (உளூ) செய்வீராக! பிறகு கிப்லா (இறையில்லம் கஅபாவின் திசையை) முன்னோக்கி (நின்று) 'அல்லாஹு அக்பர்' என்று கூறும்! பிறகு குர்ஆனில் உமக்குத் தெரிந்ததை ஓதும்! பிறகு (குனிந்து) 'ருகூஉ' செய்வீராக! அதில் (சற்று நேரம்) நிலைகொள்வீராக! பின்னர் ருகூவிலிருந்து தலையை உயர்த்தி நேராக நிற்பீராக! பிறகு சிரவணக்கம் (சஜ்தா) செய்து, அதில் (சற்றுநேரம்) நிலைகொள்வீராக! பிறகு தலையை உயர்த்தி (சற்று நேரம்) நன்றாக அமர்வீராக! பின்னர் (மீண்டும்) சிரவணக்கம் செய்து, அதில் (சற்று நேரம்) நிலைகொள்வீராக! பிறகு எழுந்து நேராக நிற்பீராக! இவ்வாறே உம்முடைய தொழுகை முழுவதிலும் செய்துவருவீராக!' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
ஸஹீஹ் புகாரி : 6667.

பரிந்துரை. ( 4 )

 பரிந்துரை. ( 4 )

மறுமையில் மதிப்பீடு செய்தல்.

وَالْوَزْنُ يَوْمَئِذٍ الْحَقُّ ۚ فَمَن ثَقُلَتْ مَوَازِينُهُ فَأُولَٰئِكَ هُمُ الْمُفْلِحُونَ

அந்நாளில் மதிப்பீடு செய்தல் உண்மை. (நன்மையின்) எடைகள் கனமாக இருப்போரே வெற்றி பெற்றோர்.
திருக்குர்ஆன் 7:8

أُولَٰئِكَ الَّذِينَ كَفَرُوا بِآيَاتِ رَبِّهِمْ وَلِقَائِهِ فَحَبِطَتْ أَعْمَالُهُمْ فَلَا نُقِيمُ لَهُمْ يَوْمَ الْقِيَامَةِ وَزْنًا

அவர்களே தமது இறைவனின் சான்றுகளையும், அவனது சந்திப்பையும் மறுத்தவர்கள். அவர்களின் நல்லறங்கள் அழிந்து விட்டன. எனவே கியாமத் நாளில் அவர்(களின் செயல்)களுக்கு எந்த எடையையும் ஏற்படுத்த மாட்டோம்.
திருக்குர்ஆன் 18:105

وَنَضَعُ الْمَوَازِينَ الْقِسْطَ لِيَوْمِ الْقِيَامَةِ فَلَا تُظْلَمُ نَفْسٌ شَيْئًا ۖ وَإِن كَانَ مِثْقَالَ حَبَّةٍ مِّنْ خَرْدَلٍ أَتَيْنَا بِهَا ۗ وَكَفَىٰ بِنَا حَاسِبِينَ

கியாமத் நாளுக்காக நீதியான தராசுகளை நிறுவுவோம். எவருக்கும் சிறிதளவும் அநீதி இழைக்கப்படாது. ஒரு கடுகு விதை அளவே இருந்த போதும் அதையும் கொண்டு வருவோம். கணக்கெடுக்க நாமே போதும்.
திருக்குர்ஆன் 21:47

فَمَن ثَقُلَتْ مَوَازِينُهُ فَأُولَٰئِكَ هُمُ الْمُفْلِحُونَ

எவரது எடைகள் கனமாகி விட்டனவோ அவர்களே வெற்றி பெற்றோர்.
திருக்குர்ஆன் 23:102

وَمَنْ خَفَّتْ مَوَازِينُهُ فَأُولَٰئِكَ الَّذِينَ خَسِرُوا أَنفُسَهُمْ فِي جَهَنَّمَ خَالِدُونَ

எவரது எடைகள் இலேசாகி விட்டனவோ அவர்கள் தமக்குத் தாமே நட்டத்தை ஏற்படுத்தினர். நரகத்தில் நிரந்தரமாக இருப்பார்கள்.
திருக்குர்ஆன் 23:103

فَأَمَّا مَن ثَقُلَتْ مَوَازِينُهُ فَهُوَ فِي عِيشَةٍ رَّاضِيَةٍ

யாருடைய எடைகள் கனமாக இருக்கின்றனவோ அவர் திருப்தியான வாழ்க்கையில் இருப்பார்.
திருக்குர்ஆன் 101:6,7

وَأَمَّا مَنْ خَفَّتْ مَوَازِينُهُ فَأُمُّهُ هَاوِيَةٌ

யாருடைய எடைகள் இலேசாக உள்ளனவோ அவர் தங்குமிடம் ஹாவியாவாகும்.
திருக்குர்ஆன் 101:8,9

Monday, February 20, 2023

குர்ஆன் வசனம் 354

 ﷽ குர்ஆன் வசனம் 354

20-02-2023 திங்கட்கிழமை

தமது இறைவனின் திருமுகத்தை நாடி காலையிலும், மாலையிலும் தமது இறைவனைப் பிரார்த்திக்கும் மக்களுடன் உம்மைக் கட்டுப்படுத்திக் கொள்வீராக! இவ்வுலக வாழ்க்கையின் கவர்ச்சியை நாடி அவர்களை விட்டும் உமது கண்களைத் திருப்பி விடாதீர்!

[அல்குர்ஆன் 18:28]

உபதேசம் : 604

 ﷽ உபதேசம் : 604

20-02-2023 திங்கட்கிழமை

"என்னுடைய கப்ரை விழா கொண்டாடும் இடமாக ஆக்கிவிடாதீர்கள்! என் மீது ஸலவாத்து கூறுங்கள்! நிச்சயமாக நீங்கள் எங்கிருந்தாலும் உங்களுடைய ஸலவாத்து என்னை வந்தடைகிறது!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூ ஹூரைரா (ரலி) அபூதாவூத் - 1746

சொர்க்கச் சோலைகள். ( 25 )

 சொர்க்கச் சோலைகள். ( 25 )

அங்கே இறைவனைக் காண்பார்கள்.

الَّذِينَ يَظُنُّونَ أَنَّهُم مُّلَاقُو رَبِّهِمْ وَأَنَّهُمْ إِلَيْهِ رَاجِعُونَ

(பணிவுடையோர் யாரெனில்) தமது இறைவனைச் சந்திக்கவுள்ளோம் என்றும், அவனிடம் திரும்பிச் செல்லவிருக்கிறோம் என்றும் அவர்கள் நம்புவார்கள்.
திருக்குர்ஆன் 2:46

نِسَاؤُكُمْ حَرْثٌ لَّكُمْ فَأْتُوا حَرْثَكُمْ أَنَّىٰ شِئْتُمْ ۖ وَقَدِّمُوا لِأَنفُسِكُمْ ۚ وَاتَّقُوا اللَّهَ وَاعْلَمُوا أَنَّكُم مُّلَاقُوهُ ۗ وَبَشِّرِ الْمُؤْمِنِينَ

உங்கள் மனைவியர் உங்களின் விளைநிலங்கள். உங்கள் விளைநிலங்களுக்கு விரும்பியவாறு செல்லுங்கள்! உங்களுக்காக (நல்லறங்களை) முற்படுத்துங்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! "அவனைச் சந்திக்கவுள்ளீர்கள்' என்பதை அறிந்து கொள்ளுங்கள்! நம்பிக்கை கொண்டோருக்கு நற்செய்தி கூறுவீராக!
திருக்குர்ஆன் 2:223

قُلْ إِنَّمَا أَنَا بَشَرٌ مِّثْلُكُمْ يُوحَىٰ إِلَيَّ أَنَّمَا إِلَٰهُكُمْ إِلَٰهٌ وَاحِدٌ ۖ فَمَن كَانَ يَرْجُو لِقَاءَ رَبِّهِ فَلْيَعْمَلْ عَمَلًا صَالِحًا وَلَا يُشْرِكْ بِعِبَادَةِ رَبِّهِ أَحَدًا

"நான் உங்களைப் போன்ற மனிதன் தான். (எனினும்) உங்கள் கடவுள் ஒரே ஒரு கடவுளே என எனக்கு அறிவிக்கப்படுகிறது. தமது இறைவனின் சந்திப்பை எதிர்பார்ப்பவர் நல்லறத்தைச் செய்யட்டும்! தமது இறை வணக்கத்தில் எவரையும் இணைகற்பிக்காது இருக்கட்டும்'' என்று (முஹம்மதே!) கூறுவீராக!
திருக்குர்ஆன் 18:110

مَن كَانَ يَرْجُو لِقَاءَ اللَّهِ فَإِنَّ أَجَلَ اللَّهِ لَآتٍ ۚ وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ

யார் அல்லாஹ்வின் சந்திப்பை எதிர்பார்க்கிறாரோ அதற்கான அல்லாஹ்வின் காலக்கெடு வந்தே தீரும். அவன் செவியுறுபவன்; அறிந்தவன்.
திருக்குர்ஆன் 29:5

وَالَّذِينَ كَفَرُوا بِآيَاتِ اللَّهِ وَلِقَائِهِ أُولَٰئِكَ يَئِسُوا مِن رَّحْمَتِي وَأُولَٰئِكَ لَهُمْ عَذَابٌ أَلِيمٌ

அல்லாஹ்வின் வசனங்களையும், அவனது சந்திப்பையும் மறுப்போர் (அல்லாஹ்வாகிய) எனது அருளில் நம்பிக்கையிழந்து விட்டனர். அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு.
திருக்குர்ஆன் 29:23

وَقَالُوا أَإِذَا ضَلَلْنَا فِي الْأَرْضِ أَإِنَّا لَفِي خَلْقٍ جَدِيدٍ ۚ بَلْ هُم بِلِقَاءِ رَبِّهِمْ كَافِرُونَ

"பூமிக்குள் மறைந்த பின் புதுப்படைப்பை நாங்கள் பெறுவோமா?'' என்று அவர்கள் கேட்கின்றனர். உண்மையில் அவர்கள் தமது இறைவனின் சந்திப்பை மறுக்கின்றனர்.
திருக்குர்ஆன் 32:10

إِلَىٰ رَبِّهَا نَاظِرَةٌ

தமது இறைவனைப் பார்த்துக் கொண்டிருக்கும்.
திருக்குர்ஆன் 75:23

Chapter - 15 Surah Al-Hijr

‏‏‏‏Chapter - 15
Surah Al-Hijr

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

In the name of Allah the most beneficent, most merciful
----------------------------------------------------------

أعوذ بالله من الشيطان الرجيم
I seek refuge in Allah from the outcast Shaitan


لَا يَمَسُّهُمْ فِيهَا نَصَبٌ وَمَا هُمْ مِنْهَا بِمُخْرَجِينَ

\No sense of fatigue shall touch them, nor shall they (ever) be asked to leave it.\" (Al-Hijr 15:48)"

அல்ஹம்துலில்லாஹ் என்பதன் சிறப்பு. ( 11 )

அல்ஹம்துலில்லாஹ் என்பதன் சிறப்பு. ( 11 )

الحمدلله

அல்ஹம்துலில்லாஹ்.

பொருள் : அல்லாஹ்வுக்கே எல்லாப்புகழும்.

சட்டம் : இறைவனுக்குப் பிடித்த இரு பண்புகள்.

ஆதாரம் : நபியவர்கள் அஷஜ் (ரலி) அவர்களிடம், ‘‘அஷஜ்ஜே உன்னிடம் இரு பண்புகள் உள்ளன. அவற்றை அல்லாஹ் விரும்புகிறான். அவ்விரு பண்புகள் சகிப்புத்தன்மை மற்றும் வெட்கவுணர்வு ஆகும்’’ என்றார்கள்.
உடனே அஷஜ் (ரலி), ‘‘அல்லாஹ்வுக்குப் பிடித்தமான இருபண்புகளை எனக்கு வழங்கிய அல்லாஹ்வுக்கே புகழனைத்தும் உண்டாவதாக’’ என்றார்.
நூல்: அஹ்மத்-17828 (17160)

பரிந்துரை. ( 3 )

 பரிந்துரை. ( 3 )

அனுமதி பெற்று பரிந்துரை செய்யலாம் எனக் கூறும் வசனங்கள்.

إِنَّ رَبَّكُمُ اللَّهُ الَّذِي خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ فِي سِتَّةِ أَيَّامٍ ثُمَّ اسْتَوَىٰ عَلَى الْعَرْشِ ۖ يُدَبِّرُ الْأَمْرَ ۖ مَا مِن شَفِيعٍ إِلَّا مِن بَعْدِ إِذْنِهِ ۚ ذَٰلِكُمُ اللَّهُ رَبُّكُمْ فَاعْبُدُوهُ ۚ أَفَلَا تَذَكَّرُونَ

உங்கள் இறைவன் அல்லாஹ்வே. அவனே வானங்களையும் பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான். பின்னர் அர்ஷின் மீது அமர்ந்தான். காரியங்களை நிர்வகிக்கிறான். அவனது அனுமதியின்றி எந்தப் பரிந்துரைப்பவனும் இல்லை. அவனே அல்லாஹ். உங்கள் இறைவன். அவனை வணங்குங்கள்! படிப்பினை பெற மாட்டீர்களா?
திருக்குர்ஆன் 10:3

لَّا يَمْلِكُونَ الشَّفَاعَةَ إِلَّا مَنِ اتَّخَذَ عِندَ الرَّحْمَٰنِ عَهْدًا

அளவற்ற அருளாளனிடம் உறுதிமொழி பெற்றவர் தவிர பரிந்துரைக்க எவரும் அதிகாரம் பெற மாட்டார்கள்.
திருக்குர்ஆன் 19:87

يَوْمَئِذٍ لَّا تَنفَعُ الشَّفَاعَةُ إِلَّا مَنْ أَذِنَ لَهُ الرَّحْمَٰنُ وَرَضِيَ لَهُ قَوْلًا

அந்நாளில் அளவற்ற அருளாளன் யாருக்கு அனுமதியளித்து அவரது சொல்லையும் பொருந்திக் கொண்டானோ அவரைத் தவிர எவரது பரிந்துரையும் பயனளிக்காது.
திருக்குர்ஆன் 20:109

يَعْلَمُ مَا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ وَلَا يَشْفَعُونَ إِلَّا لِمَنِ ارْتَضَىٰ وَهُم مِّنْ خَشْيَتِهِ مُشْفِقُونَ

அவர்களுக்கு முன்னும், பின்னும் உள்ளதை அவன் அறிவான். அவன் பொருந்திக் கொண்டோருக்காகவே தவிர (மற்றவருக்கு) அவர்கள் பரிந்துரை செய்ய மாட்டார்கள். அவர்கள் அவனது அச்சத்தால் நடுங்குவார்கள்.
திருக்குர்ஆன் 21:28

وَكَم مِّن مَّلَكٍ فِي السَّمَاوَاتِ لَا تُغْنِي شَفَاعَتُهُمْ شَيْئًا إِلَّا مِن بَعْدِ أَن يَأْذَنَ اللَّهُ لِمَن يَشَاءُ وَيَرْضَىٰ

வானங்களில் எத்தனையோ வானவர்கள் உள்ளனர். தான் நாடியோருக்கு அல்லாஹ் அனுமதியளித்து பொருந்திக் கொண்டவருக்காக தவிர (மற்றவர்களுக்காக) அவர்களின் பரிந்துரை சிறிதும் பயன் தராது.
திருக்குர்ஆன் 53:26

குர்ஆன் வசனம் 353

 ﷽ குர்ஆன் வசனம் 353

19-02-2023 ஞாயிற்றுக்கிழமை
وَلَا تَقُوۡلَنَّ لِشَاىۡءٍ اِنِّىۡ فَاعِلٌ ذٰ لِكَ غَدًا

அல்லாஹ் நாடினால் (என்பதைச் சேர்த்தே) தவிர, நாளை நான் இதைச் செய்பவன் என்று எதைப் பற்றியும் கூறாதீர்!

[அல்குர்ஆன் 18:23]

உபதேசம் : 603

 ﷽ உபதேசம் : 603

19-02-2023 ஞாயிற்றுக்கிழமை

"நீ மனிதர்களின் அந்தரங்கத்தை பின் தொடர்ந்தால் அவர்களை கெடுப்பவனாவாய்! அல்லது கெடுக்க முயன்றவனைப் போன்றவனாவாய்!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : முஆவியா (ரலி) அபூதாவூத் - 4244

சொர்க்கச் சோலைகள். ( 24 )

 சொர்க்கச் சோலைகள். ( 24 )

துணைகளுடன் கட்டில்களில் சயனிப்பார்கள்.

هُمْ وَأَزْوَاجُهُمْ فِي ظِلَالٍ عَلَى الْأَرَائِكِ مُتَّكِئُونَ

அவர்களும், அவர்களது துணைகளும் கட்டிலில் சாய்ந்து நிழல்களில் இருப்பார்கள்.
திருக்குர்ஆன் 36:56

كُلُوا وَاشْرَبُوا هَنِيئًا بِمَا كُنتُمْ تَعْمَلُونَ مُتَّكِئِينَ عَلَىٰ سُرُرٍ مَّصْفُوفَةٍ ۖ وَزَوَّجْنَاهُم بِحُورٍ عِينٍ

நீங்கள் செய்து கொண்டிருந்ததன் காரணமாக வரிசையாகப் போடப்பட்ட கட்டில்களில் சாய்ந்து கொண்டு மகிழ்வுடன் உண்ணுங்கள்! பருகுங்கள்! (எனக் கூறப்படும்.) "ஹூருல் ஈன்'களை8 அவர்களுக்குத் துணைவியராக்குவோம்.
திருக்குர்ஆன் 52:19,20

عَلَى الْأَرَائِكِ يَنظُرُونَ

உயர்ந்த இருக்கைகள் மீது (சாய்ந்து) பார்த்துக் கொண்டிருப்பார்கள்.
திருக்குர்ஆன் 83:23

நல்ல பெற்றோரையும், சந்ததிகளையும் அடிக்கடி சந்திப்பார்கள்.

جَنَّاتُ عَدْنٍ يَدْخُلُونَهَا وَمَن صَلَحَ مِنْ آبَائِهِمْ وَأَزْوَاجِهِمْ وَذُرِّيَّاتِهِمْ ۖ وَالْمَلَائِكَةُ يَدْخُلُونَ عَلَيْهِم مِّن كُلِّ بَابٍ

அவர்களும், அவர்களின் பெற்றோர், மனைவியர் மற்றும் சந்ததிகளில் நல்லோரும் நிலையான சொர்க்கச் சோலைகளில் நுழைவார்கள். வானவர்கள் ஒவ்வொரு வாசல் வழியாகவும் அவர்களிடம் வருவார்கள்.
திருக்குர்ஆன் 13:23

நல்ல சந்ததிகள் பெற்றோருடன் சேர்க்கப்படுவார்கள்.

وَالَّذِينَ آمَنُوا وَاتَّبَعَتْهُمْ ذُرِّيَّتُهُم بِإِيمَانٍ أَلْحَقْنَا بِهِمْ ذُرِّيَّتَهُمْ وَمَا أَلَتْنَاهُم مِّنْ عَمَلِهِم مِّن شَيْءٍ ۚ كُلُّ امْرِئٍ بِمَا كَسَبَ رَهِينٌ

யார் நம்பிக்கை கொண்டு அவர்களின் சந்ததிகளும் நம்பிக்கை கொள்வதில் அவர்களைப் பின்பற்றினார்களோ அவர்களுடன் அவர்களின் சந்ததிகளைச் சேர்ப்போம். அவர்களின் செயல்களில் எதையும் குறைக்க மாட்டோம். ஒவ்வொரு மனிதனும், தான் செய்ததற்குப் பிணையாக்கப்பட்டவன்.
திருக்குர்ஆன் 52:21

Chapter - 15 Surah Al-Hijr

Chapter - 15

Surah Al-Hijr


بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

In the name of Allah the most beneficent, most merciful
----------------------------------------------------------

أعوذ بالله من الشيطان الرجيم
I seek refuge in Allah from the outcast Shaitan


وَنَزَعْنَا مَا فِي صُدُورِهِمْ مِنْ غِلٍّ إِخْوَانًا عَلَىٰ سُرُرٍ مُتَقَابِلِينَ

\And We shall remove from their breasts any sense of injury (that they may have), (So they will be like) brothers facing each other on thrones. (Al-Hijr 15:47)"

அல்ஹம்துலில்லாஹ் என்பதன் சிறப்பு. ( 10 )

 அல்ஹம்துலில்லாஹ் என்பதன் சிறப்பு. ( 10 )


الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَنْقَذَهُ مِنَ النَّارِ

அல்ஹம்துலில்லாஹில்லதி அன்கதகு மினன்னார்.

பொருள் : இவனை நரகத்திலிருந்து பாதுகாத்த அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்.

சட்டம் : ஒருவர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டால், நாம் இந்த துஆவை ஓத வேண்டும்.

ஆதாரம் : நபி (ஸல்)
அவர்களுக்குப் பணிவிடை செய்து கொண்டிருந்த ஒரு யூதச் சிறுவன் திடீரென நோயுற்றான். எனவே அவனை நோய் விசாரிக்க நபி (ஸல்) அவர்கள் அவனிடம் வந்தபோது, அவனது தலைமாட்டில் அமர்ந்துகொண்டு, “இஸ்லாத்தை ஏற்றுக்கொள்! உடனே அவன் தன்னருகில் இருந்த தந்தையைப் பார்த்தான். அப்போது அவர், “அபுல் காசிம் – நபி (ஸல்) அவர்களின் — கூற்றுக்குக் கட்டுப்படு!’’ என்றதும் அவன் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டான். உடனே நபி (ஸல்) அவர்கள், “இவனை நரகத்திலிருந்து பாதுகாத்த அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்’’ எனக் கூறியவாறு அங்கிருந்து வெளியேறினார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
ஸஹீஹ் புகாரி : 1356.

பரிந்துரை. ( 2 )

 பரிந்துரை. ( 2 )

மறுமையில் வக்கீல் இல்லை.

يَوْمَ يَأْتِ لَا تَكَلَّمُ نَفْسٌ إِلَّا بِإِذْنِهِ ۚ فَمِنْهُمْ شَقِيٌّ وَسَعِيدٌ

அது ஏற்படும் நாளில் எவரும் அவனது அனுமதியின்றி பேச முடியாது. அவர்களில் கெட்டவர்களும் உள்ளனர். நல்லவர்களும் உள்ளனர்.
திருக்குர்ஆன் 11:105

يَوْمَ تَأْتِي كُلُّ نَفْسٍ تُجَادِلُ عَن نَّفْسِهَا وَتُوَفَّىٰ كُلُّ نَفْسٍ مَّا عَمِلَتْ وَهُمْ لَا يُظْلَمُونَ

ஒவ்வொருவரும் தன்னைப் பற்றி வாதிட வரும் நாளில் ஒவ்வொருவருக்கும் அவர் செய்தது முழுமையாக வழங்கப்படும். அவர்கள் அநீதி இழைக்கப்பட மாட்டார்கள்.
திருக்குர்ஆன் 16:111

قَالَ اخْسَئُوا فِيهَا وَلَا تُكَلِّمُونِ

"இங்கேயே சிறுமையடையுங்கள்! என்னிடம் பேசாதீர்கள்!'' என்று அவன் கூறுவான்.
திருக்குர்ஆன் 23:108

الْيَوْمَ نَخْتِمُ عَلَىٰ أَفْوَاهِهِمْ وَتُكَلِّمُنَا أَيْدِيهِمْ وَتَشْهَدُ أَرْجُلُهُم بِمَا كَانُوا يَكْسِبُونَ

இன்று அவர்களின் வாய்களுக்கு முத்திரையிடுவோம். அவர்கள் செய்து கொண்டிருந்தது பற்றி அவர்களின் கைகள் நம்மிடம் பேசும்; கால்கள் சாட்சி கூறும்.
திருக்குர்ஆன் 36:65

يَوْمَ يَقُومُ الرُّوحُ وَالْمَلَائِكَةُ صَفًّا ۖ لَّا يَتَكَلَّمُونَ إِلَّا مَنْ أَذِنَ لَهُ الرَّحْمَٰنُ وَقَالَ صَوَابًا

ரூஹும், வானவர்களும் அணி வகுத்து நிற்கும் நாளில் அளவற்ற அருளாளன் அனுமதியளித்து, நேர்மையைக் கூறுபவரைத் தவிர யாரும் பேச மாட்டார்கள்.
திருக்குர்ஆன் 78:38

Saturday, February 18, 2023

சொர்க்கச் சோலைகள். ( 23 )

 சொர்க்கச் சோலைகள். ( 23 )

பணி செய்யும் வேலையாள் சிறுவர்கள்.

وَيَطُوفُ عَلَيْهِمْ غِلْمَانٌ لَّهُمْ كَأَنَّهُمْ لُؤْلُؤٌ مَّكْنُونٌ

அவர்களுக்குரிய ஊழியர்கள் அவர்களைச் சுற்றி வருவார்கள். அவர்கள் மூடி வைக்கப்பட்ட முத்துக்களைப் போல் இருப்பார்கள்.
திருக்குர்ஆன் 52:24

يَطُوفُ عَلَيْهِمْ وِلْدَانٌ مُّخَلَّدُونَ بِأَكْوَابٍ وَأَبَارِيقَ وَكَأْسٍ مِّن مَّعِينٍ

இளமை மாறாத சிறுவர்கள் மது ஊற்றிலிருந்து நிரப்பப்பட்ட குவளையுடனும், கிண்ணங்களுடனும், கெண்டிகளுடனும் அவர்களைச் சுற்றி வருவார்கள்.
திருக்குர்ஆன் 56:17,18

وَيَطُوفُ عَلَيْهِمْ وِلْدَانٌ مُّخَلَّدُونَ إِذَا رَأَيْتَهُمْ حَسِبْتَهُمْ لُؤْلُؤًا مَّنثُورًا

இளமை மாறாச் சிறுவர்கள் அவர்களைச் சுற்றி வருவார்கள். அவர்களை நீர் பார்த்தால் உதிர்க்கப்பட்ட முத்துக்களாகக் கருதுவீர்!
திருக்குர்ஆன் 76:19

வானவர்கள் வாழ்த்துக் கூறி அழைத்துச் செல்வார்கள்.

وَسِيقَ الَّذِينَ اتَّقَوْا رَبَّهُمْ إِلَى الْجَنَّةِ زُمَرًا ۖ حَتَّىٰ إِذَا جَاءُوهَا وَفُتِحَتْ أَبْوَابُهَا وَقَالَ لَهُمْ خَزَنَتُهَا سَلَامٌ عَلَيْكُمْ طِبْتُمْ فَادْخُلُوهَا خَالِدِينَ

தமது இறைவனை அஞ்சியோர் சொர்க்கத்திற்கு கூட்டம் கூட்டமாக ஓட்டிச் செல்லப்படுவார்கள். முடிவில் அதன் வாசல்கள் திறக்கப்பட்டு அவர்கள் அங்கே வந்ததும் "உங்கள் மீது ஸலாம் உண்டாகட்டும். நீங்கள் மகிழ்ச்சியடைவீர்கள்! நிரந்தரமாக இருக்கும் நிலையில் இதில் நுழையுங்கள்!'' என அதன் காவலர்கள் அவர்களிடம் கூறுவார்கள்.
திருக்குர்ஆன் 39:73

பகல் தூக்கம் உண்டு.

أَصْحَابُ الْجَنَّةِ يَوْمَئِذٍ خَيْرٌ مُّسْتَقَرًّا وَأَحْسَنُ مَقِيلًا

அந்நாளில் சொர்க்கவாசிகள் அழகிய தங்குமிடத்திலும், சிறந்த ஓய்விடத்திலும் இருப்பார்கள்.
திருக்குர்ஆன் 25:24

Chapter - 15 Surah Al-Hijr

Chapter - 15

Surah Al-Hijr

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

In the name of Allah the most beneficent, most merciful
----------------------------------------------------------
أعوذ بالله من الشيطان الرجيم
I seek refuge in Allah from the outcast Shaitan

ادْخُلُوهَا بِسَلَامٍ آمِنِينَ
\(It will be said to them): 'Enter therein (Paradise), in peace and security.' (Al-Hijr 15:46)"

உபதேசம் : 602

 ﷽ உபதேசம் : 602

18-02-2023 சனிக்கிழமை

கையில் ஒரு மஞ்சள் நிற வளையம் அணிந்திருந்த மனிதரைக் கண்ட நபி (ஸல்) அவா்கள், "அது என்ன?" என்று கேட்க, அவர் "(தொடையில் ஏற்படும் ஒருவித நோயை ) போக்க (அணிந்துள்ளேன்)" என்று கூறினார். அதற்கு நபி ஸல் அவர்கள், "இதை கழற்று! இது உனக்கு பலகீனத்தை தான் ஏற்படுத்தும். இது உன் மீது இருக்கும் நிலையில் நீ மரணித்தால் ஒரு போதும் வெற்றி பெற மாட்டாய்!" என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அஹ்மத் - 19149

குர்ஆன் வசனம் 352

 ﷽ குர்ஆன் வசனம் 352

18-02-2023 சனிக்கிழமை
فَمَنۡ اَظۡلَمُ مِمَّنِ افۡتَـرٰى عَلَى اللّٰهِ كَذِبًا

அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டியவனை விட மிகப் பெரும் அநீதி இழைத்தவன் யார்?

[அல்குர்ஆன் 18:15]

அல்ஹம்துலில்லாஹ் என்பதன் சிறப்பு. ( 9 )

 அல்ஹம்துலில்லாஹ் என்பதன் சிறப்பு. ( 9 )


سبحان الله الحمدلله الله أكبر
لا إِلَهَ إِلاَّ اللَّهُ، وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ، وَهْوَ عَلَى كُلِّ شَىْءٍ قَدِيرٌ.

சுப்ஹானல்லாஹ், 33 முறை அல்ஹம்துலில்லாஹ், 33 முறை
அல்லாஹு அக்பர். 33 முறை
லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீ(க்)க லஹு லஹுல் முல்(க்)கு வலஹுல் ஹம்து வஹுவ அலா குல்லி ஷையின் கதீர். (1 முறை)

பொருள் : அல்லாஹ் தூயவன். அல்லாஹ்வுக்கே எல்லாப்புகழும். அல்லாஹ் மிகப் பெரியவன். வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர எவருமில்லை. அவன் தனித்தவன். அவனுக்கு இணையில்லை. ஆட்சியதிகாரம் அவனுக்குரியதே! புகழும் அவனுக்குரியதே! அவன் அனைத்துப் பொருட்கள் மீதும் ஆற்றலுடையவன்.

சிறப்பு : பாவங்கள் யாவும் மன்னிக்கப்படுகின்றன. கடலின் நுரையளவு இருந்தாலும் சரியே!

ஆதாரம் : அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யார் ஒவ்வொரு தொழுகைக்குப் பின்பும் முப்பத்து மூன்று முறை சுப்ஹானல்லாஹ் என்றும், முப்பத்து மூன்று முறை அல்ஹம்து லில்லாஹ் என்றும், முப்பத்து மூன்று முறை அல்லாஹு அக்பர் என்றும் ஆக மொத்தம் தொன்னூற்று ஒன்பது முறை கூறி, இறுதியில் நூறாவது முறையாக "லா இலாஹ இல்லல்லாஹு, வஹ்தஹு, லா ஷரீக்க லஹு, லஹுல் முல்க்கு, வ லஹுல் ஹம்து. வஹுவ அலா குல்லி ஷையின் கதீர்" (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை. அவன் தனித்தவன். அவனுக்கு இணையானவன் எவனுமில்லை. ஆட்சியதிகாரம் அவனுக்கே உரியது. எல்லாப் புகழும் அவனுக்கே உரியது. அவன் அனைத்தின் மீதும் ஆற்றலுள்ளவன்) என்று நிறைவு செய்கிறாரோ அவருடைய (சிறு) பாவங்கள் யாவும் மன்னிக்கப்படுகின்றன. அவை கடலின் நுரையளவு இருந்தாலும் சரியே!
அறிவிப்பவர்:அபூஹுரைரா(ரலி)
ஸஹீஹ் முஸ்லிம் : 1048

பரிந்துரை. ( 1 )

 பரிந்துரை. ( 1 )

பரிந்துரையே இல்லை என்ற கருத்தைத் தரும் வசனங்கள்.

وَاتَّقُوا يَوْمًا لَّا تَجْزِي نَفْسٌ عَن نَّفْسٍ شَيْئًا وَلَا يُقْبَلُ مِنْهَا شَفَاعَةٌ وَلَا يُؤْخَذُ مِنْهَا عَدْلٌ وَلَا هُمْ يُنصَرُونَ

ஒருவர் இன்னொருவருக்கு எந்தப் பயனும் அளிக்க முடியாத நாளை அஞ்சுங்கள்! (அந்நாளில்) எவரிடமிருந்தும் எந்தப் பரிந்துரையும் ஏற்கப்படாது. எவரிடமிருந்தும் எந்த ஈடும் பெற்றுக் கொள்ளப்படாது. அவர்கள் உதவி செய்யப்படவும் மாட்டார்கள்.
திருக்குர்ஆன் 2:48

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا أَنفِقُوا مِمَّا رَزَقْنَاكُم مِّن قَبْلِ أَن يَأْتِيَ يَوْمٌ لَّا بَيْعٌ فِيهِ وَلَا خُلَّةٌ وَلَا شَفَاعَةٌ ۗ وَالْكَافِرُونَ هُمُ الظَّالِمُونَ

நம்பிக்கை கொண்டோரே! பேரமோ, நட்போ, பரிந்துரையோ இல்லாத நாள் வருவதற்கு முன் நாம் உங்களுக்கு வழங்கியவற்றிலிருந்து (நல்வழியில்) செலவிடுங்கள்! (ஏகஇறைவனை) மறுப்பவர்கள் அநீதி இழைத்தவர்கள்.
திருக்குர்ஆன் 2:254

وَأَنذِرْ بِهِ الَّذِينَ يَخَافُونَ أَن يُحْشَرُوا إِلَىٰ رَبِّهِمْ ۙ لَيْسَ لَهُم مِّن دُونِهِ وَلِيٌّ وَلَا شَفِيعٌ لَّعَلَّهُمْ يَتَّقُونَ

"தமது இறைவனிடம், தாம் ஒன்று சேர்க்கப்படுவதை அஞ்சுவோருக்கு அவனன்றி பொறுப்பாளனோ, பரிந்துரைப்பவனோ இல்லை'' என்று இதன் மூலம் எச்சரிப்பீராக! இதனால் அவர்கள் (இறைவனை) அஞ்சுவர்.
திருக்குர்ஆன் 6:51

وَلَمْ يَكُن لَّهُم مِّن شُرَكَائِهِمْ شُفَعَاءُ وَكَانُوا بِشُرَكَائِهِمْ كَافِرِينَ

அவர்களின் தெய்வங்களில் அவர்களுக்காகப் பரிந்து பேசுவோர் இருக்க மாட்டார்கள். அவர்கள் தம் தெய்வங்களையும் மறுப்பார்கள்.
திருக்குர்ஆன் 30:13

اللَّهُ الَّذِي خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَمَا بَيْنَهُمَا فِي سِتَّةِ أَيَّامٍ ثُمَّ اسْتَوَىٰ عَلَى الْعَرْشِ ۖ مَا لَكُم مِّن دُونِهِ مِن وَلِيٍّ وَلَا شَفِيعٍ ۚ أَفَلَا تَتَذَكَّرُونَ

வானங்களையும், பூமியையும், அவற்றுக்கு இடைப்பட்டவற்றையும் அல்லாஹ்வே ஆறு நாட்களில் படைத்தான். பின்னர் அர்ஷின் மீது அமர்ந்தான். உங்களுக்கு அவனன்றி பொறுப்பாளரோ, பரிந்துரைப்பவரோ இல்லை. நீங்கள் சிந்திக்க மாட்டீர்களா?
திருக்குர்ஆன் 32:4

قُل لِّلَّهِ الشَّفَاعَةُ جَمِيعًا ۖ لَّهُ مُلْكُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ ۖ ثُمَّ إِلَيْهِ تُرْجَعُونَ

"பரிந்துரைகள் அனைத்தும் அல்லாஹ்வுக்கே'' என்று கூறுவீராக! வானங்கள் மற்றும் பூமியின் அதிகாரம் அவனுக்கே உரியது! பின்னர் அவனிடமே நீங்கள் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்!
திருக்குர்ஆன் 39:44

وَأَنذِرْهُمْ يَوْمَ الْآزِفَةِ إِذِ الْقُلُوبُ لَدَى الْحَنَاجِرِ كَاظِمِينَ ۚ مَا لِلظَّالِمِينَ مِنْ حَمِيمٍ وَلَا شَفِيعٍ يُطَاعُ

சீக்கிரம் வரவிருக்கும் நாளைப் பற்றி அவர்களுக்கு எச்சரிப்பீராக! அப்போது இதயங்கள் தொண்டைக் குழிகளுக்கு வந்து அதை மென்று விழுங்குவோராக அவர்கள் இருப்பார்கள். அநீதி இழைத்தோருக்கு எந்த நண்பனும், அங்கீகரிக்கப்படும் பரிந்துரையாளனும் இல்லை.
திருக்குர்ஆன் 40:18

Friday, February 17, 2023

சொர்க்கச் சோலைகள். ( 22 )

 சொர்க்கச் சோலைகள். ( 22 )

அங்கே மரணம் இல்லை.

إِنَّهُ مَن يَأْتِ رَبَّهُ مُجْرِمًا فَإِنَّ لَهُ جَهَنَّمَ لَا يَمُوتُ فِيهَا وَلَا يَحْيَىٰ

தனது இறைவனிடம் குற்றவாளியாக வருபவனுக்கு நரகமே உள்ளது. அதில் அவன் சாகவும் மாட்டான். வாழவும் மாட்டான்.
திருக்குர்ஆன் 20:74

وَالَّذِينَ كَفَرُوا لَهُمْ نَارُ جَهَنَّمَ لَا يُقْضَىٰ عَلَيْهِمْ فَيَمُوتُوا وَلَا يُخَفَّفُ عَنْهُم مِّنْ عَذَابِهَا ۚ كَذَٰلِكَ نَجْزِي كُلَّ كَفُورٍ

(நம்மை) மறுத்தோருக்கு நரக நெருப்பு உள்ளது. அவர்கள் மரணிக்குமாறு முடிவு செய்யப்படாது. அதன் வேதனை அவர்களுக்கு இலேசாக்கப்படவும் மாட்டாது. (நம்மை) மறுக்கும் ஒவ்வொருவருக்கும் இவ்வாறே வேதனை அளிப்போம்.
திருக்குர்ஆன் 35:36

لَا يَذُوقُونَ فِيهَا الْمَوْتَ إِلَّا الْمَوْتَةَ الْأُولَىٰ ۖ وَوَقَاهُمْ عَذَابَ الْجَحِيمِ

முதலில் அடைந்த மரணத்தைத் தவிர அங்கே மரணத்தைச் சுவைக்க மாட்டார்கள். நரக வேதனையிலிருந்து அவர்களை அவன் காப்பான்.
திருக்குர்ஆன் 44:56

ثُمَّ لَا يَمُوتُ فِيهَا وَلَا يَحْيَىٰ

பின்னர் அதில் சாகவும் மாட்டான். வாழவும் மாட்டான்.
திருக்குர்ஆன் 87:13

நிர்வாணம் இல்லை.

إِنَّ لَكَ أَلَّا تَجُوعَ فِيهَا وَلَا تَعْرَىٰ

இங்கே நீர் பசியோடு இருக்க மாட்டீர்! நிர்வாணமாக மாட்டீர்!
திருக்குர்ஆன் 20:118

Chapter - 15 Surah Al-Hijr

Chapter - 15

Surah Al-Hijr

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

In the name of Allah the most beneficent, most merciful
----------------------------------------------------------

أعوذ بالله من الشيطان الرجيم
I seek refuge in Allah from the outcast Shaitan

إِنَّ الْمُتَّقِينَ فِي جَنَّاتٍ وَعُيُونٍ

\Truly! The Muttaqun (pious and righteous persons - see V.2:2) will be amidst Gardens and water-springs (Paradise). (Al-Hijr 15:45)"

உபதேசம் : 601

 ﷽ உபதேசம் : 601

17-02-2023 வெள்ளிக்கிழமை

" பிறருக்கு காட்டுவதற்காக தொழுதவர் இணை கற்பித்து விட்டார்!

பிறருக்கு காட்டுவதற்காக நோன்பு நோற்றவர் இணை கற்பித்து விட்டார்!

பிறருக்கு காட்டுவதற்காக தர்மம் செய்தவர் இணை கற்பித்து விட்டார்!"

என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவா்: அவஃப் பின் மாலிக் (ரலி) அஹ்மத் - 16517

குர்ஆன் வசனம் 351

 ﷽ குர்ஆன் வசனம் 351

17-02-2023 வெள்ளிக்கிழமை

قُلْ لَّوۡ اَنۡـتُمۡ تَمۡلِكُوۡنَ خَزَآٮِٕنَ رَحۡمَةِ رَبِّىۡۤ اِذًا لَّاَمۡسَكۡتُمۡ خَشۡيَةَ الۡاِنۡفَاقِ‌ ؕ وَكَانَ الۡاِنۡسَانُ قَتُوۡرًا

"என் இறைவனது அருளின் கருவூலங்களுக்கு நீங்கள் உரிமையாளர்களாக இருந்திருந்தால் செலவிட அஞ்சி உங்களிடமே வைத்துக் கொண்டிருப்பீர்கள்! மனிதன் கஞ்சனாகவே இருக்கிறான்" என்று கூறுவீராக!

[அல்குர்ஆன் 17:100]

இறைவனுக்கு எளிதானது. ( 11 )

 இறைவனுக்கு எளிதானது. ( 11 )

ஒருவர் சுமையை மற்றவர் சுமக்க மாட்டார்.

تِلْكَ أُمَّةٌ قَدْ خَلَتْ ۖ لَهَا مَا كَسَبَتْ وَلَكُم مَّا كَسَبْتُمْ ۖ وَلَا تُسْأَلُونَ عَمَّا كَانُوا يَعْمَلُونَ

அவர்கள் சென்று விட்ட சமுதாயம். அவர்கள் செய்தது அவர்களுக்கு. நீங்கள் செய்தது உங்களுக்கு. அவர்கள் செய்ததைப் பற்றி நீங்கள் விசாரிக்கப்பட மாட்டீர்கள்.
திருக்குர்ஆன் 2:141

فَلْيَضْحَكُوا قَلِيلًا وَلْيَبْكُوا كَثِيرًا جَزَاءً بِمَا كَانُوا يَكْسِبُونَ

அவர்கள் செய்து கொண்டிருந்ததன் காரணமாக அவர்கள் குறைவாகவே சிரிக்கட்டும்! அதிகமாக அழட்டும்!
திருக்குர்ஆன் 9:82

مَّنِ اهْتَدَىٰ فَإِنَّمَا يَهْتَدِي لِنَفْسِهِ ۖ وَمَن ضَلَّ فَإِنَّمَا يَضِلُّ عَلَيْهَا ۚ وَلَا تَزِرُ وَازِرَةٌ وِزْرَ أُخْرَىٰ ۗ وَمَا كُنَّا مُعَذِّبِينَ حَتَّىٰ نَبْعَثَ رَسُولًا

நேர்வழி பெற்றவர் தனக்காகவே நேர்வழி பெறுகிறார். வழி தவறுபவர் தனக்கெதிராகவே வழி தவறுகிறார். ஒருவன் இன்னொருவனின் சுமையைச் சுமக்க மாட்டான். ஒரு தூதரை அனுப்பாதவரை நாம் (எவரையும்) தண்டிப்பதில்லை.
திருக்குர்ஆன் 17:15

الْيَوْمَ تُجْزَىٰ كُلُّ نَفْسٍ بِمَا كَسَبَتْ ۚ لَا ظُلْمَ الْيَوْمَ ۚ إِنَّ اللَّهَ سَرِيعُ الْحِسَابِ

இன்று ஒவ்வொருவரும் செய்ததற்கு கூலி கொடுக்கப்படும். இன்று எந்த அநியாயமும் இல்லை. அல்லாஹ் விரைந்து கணக்கெடுப்பவன்.
திருக்குர்ஆன் 40:17

وَخَلَقَ اللَّهُ السَّمَاوَاتِ وَالْأَرْضَ بِالْحَقِّ وَلِتُجْزَىٰ كُلُّ نَفْسٍ بِمَا كَسَبَتْ وَهُمْ لَا يُظْلَمُونَ

வானங்களையும், பூமியையும் தக்க காரணத்துடனே அல்லாஹ் படைத்தான். ஒவ்வொருவரும், தாம் செய்ததற்குக் கூலி கொடுக்கப்படுவார்கள். அவர்கள் அநீதி இழைக்கப்பட மாட்டார்கள்.
திருக்குர்ஆன் 45:22

أَمْ لَمْ يُنَبَّأْ بِمَا فِي صُحُفِ مُوسَىٰ وَإِبْرَاهِيمَ الَّذِي وَفَّىٰ أَلَّا تَزِرُ وَازِرَةٌ وِزْرَ أُخْرَىٰ وَأَن لَّيْسَ لِلْإِنسَانِ إِلَّا مَا سَعَىٰ

மூஸா, முழுமையாக நிறைவேற்றிய இப்ராஹீம் ஆகியோரின் ஏடுகளில் "ஒருவர் மற்றவரின் சுமையைச் சுமக்கமாட்டார்; மனிதனுக்கு அவன் முயற்சித்தது தவிர வேறு இல்லை'' என்று இருப்பது அவனுக்கு அறிவிக்கப்படவில்லையா?
திருக்குர்ஆன் 53:36, 37, 38, 39

كُلُّ نَفْسٍ بِمَا كَسَبَتْ رَهِينَةٌ

ஒவ்வொருவனும், தான் செய்ததற்குப் பிணையாக்கப்பட்டுள்ளான்.
திருக்குர்ஆன் 74:38

Thursday, February 16, 2023

Chapter - 15 Surah Al-Hijr

Chapter - 15

Surah Al-Hijr


بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

In the name of Allah the most beneficent, most merciful
----------------------------------------------------------

أعوذ بالله من الشيطان الرجيم
I seek refuge in Allah from the outcast Shaitan


لَهَا سَبْعَةُ أَبْوَابٍ لِكُلِّ بَابٍ مِنْهُمْ جُزْءٌ مَقْسُومٌ

\It (Hell) has seven gates, for each of those gates is a (special) class (of sinners) assigned. (Al-Hijr 15:44)"

குர்ஆன் வசனம் 350

 ﷽ குர்ஆன் வசனம் 350

16-02-2023 வியாழக்கிழமை

فَاَبٰٓى اَكۡثَرُ النَّاسِ اِلَّا كُفُوۡرًا‏

மனிதர்களில் அதிகமானோர் (இறை) மறுப்பைத் தவிர வேறு எதையும் ஏற்பதில்லை.

[அல்குர்ஆன் 17:89]

உபதேசம் : 600

 ﷽ உபதேசம் : 600

16-02-2023 வியாழக்கிழமை

"சிறிய இணைவைத்தலைப் பற்றியே நான் உங்களிடம் அதிகமாக பயப்படுகிறேன்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதற்கு, நபித்தோழர்கள் "அல்லாஹ்வின் தூதரே! சிறிய இணைவைத்தல் என்றால் என்ன?" என்று கேட்டார்கள்.அதற்கு நபி (ஸல்) அவர்கள் "முகஸ்துதி (பிறருக்குக் காட்டுவதற்காக செயல்படுதல்)" என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : மஹ்மூத் பின் லபித் (ரலி) அஹ்மத் - 22528

Wednesday, February 15, 2023

முன்னறிவிப்புகள்

🪴 முன்னறிவிப்புகள் 🪴

தொடர்-1

இஸ்லாம் மார்க்கம் முஹம்மது நபி (ஸல்) அவர்களால் உருவாக்கப்பட்ட மார்க்கம் என்று முஸ்லிமல்லாதவர்கள் சிலர் கருதுகிறார்கள்.

ஆனால், இஸ்லாம் மார்க்கம் அகில உலகையும் படைத்த இறைவனால் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் வழியாக மனிதகுலத்திற்கு வழங்கப்பட்ட வாழ்கை நெறியாகும்..

முஸ்லிம்கள் தக்க காரணங்களின் அடிப்படையில் தான் இஸ்லாம் இறைவனால் வழங்கப்பட்ட மார்க்கம் என்று நம்புகின்றனர்.

இந்த மார்க்கத்தை நிச்சயம் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் சுயமாகக் கற்பனை செய்து உருவாக்கியிருக்க முடியாது என்பதற்கு திருக்குர்ஆன் முதன்மையான சான்றாக உள்ளது.

எதிர்காலத்தில் நிகழவுள்ள பல செய்திகளைத் திருக்குர்ஆன் முன் கூட்டியே அறிவித்திருப்பதை நடுநிலையோடு சிந்திப்பவர்கள் இதை 1400 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஒரு மனிதர் கூறியிருக்கவே முடியாது என்ற முடிவுக்கு வருவார்கள்.

அது போல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எதிர்காலத்தில் நிகழவுள்ள பல நிகழ்ச்சிகளை முன்னரே அறிவித்துள்ளனர்.
அவர்கள் அறிவித்தவாறு அவை அப்படியே நிறைவேறி வருவதை சிந்திப்பவர்கள் – இதை இறைவன் புறத்திலிருந்து தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அறிவித்திருக்க வேண்டும் என்பதைச் சந்தேகமற அறிந்து கொள்வார்கள்.

திருக்குர்ஆன் ஓர் வாழும் அற்புதம்!

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவர்கள் கி.பி. 570-ல் பிறந்தார்கள்.

இந்தக் கால கட்டத்தில் உலக மக்கள் அறிவியலில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்தார்கள். உலகம் உருண்டை என்ற சாதாரண அறிவு கூட அன்றைய மக்களுக்கு இருக்கவில்லை.

இத்தகைய காலத்தில் வாழ்ந்தவர் எவ்வளவு பெரிய மேதையாக இருந்தாலும், அவரது காலத்து அறிவைக் கடந்து எதையும் கூறவே இயலாது. சுமார் நூறு வருடம் கடந்த பின் அவரது நூலை வாசித்தால் அதில் பல தவறுகள் இருப்பதை உலகம் கண்டு கொள்ளும்.

நூறு வருடங்களுக்குப் பின் என்ன நடக்கும்; என்னென்ன கண்டு பிடிக்கப்படும் என்ற விபரங்களை நூறு வருடங்களுக்கு முன் வாழ்ந்தவரால் ஊகம் செய்ய இயலாது என்பதே இதற்குக் காரணம்.

பல அறிஞர்கள் கூட்டாகச் சேர்ந்து உருவாக்கிய நூலாக இருந்தால் கூட நூறு வருடங்கள் கழித்துப் பார்க்கும் போது அதில் பல தவறுகள் இருப்பதைக் காண முடியும். அந்த நூலே காலத்திற்கு ஒவ்வாத நூலாகி விடும்.

ஆனால் எழுதவும், படிக்கவும் தெரியாத, மிகவும் பின்தங்கிய சமுதாயத்தில் வாழ்ந்த ஒருவர் எதை இறை வேதம் என்று அறிமுகம் செய்தாரோ அந்த வேதத்தில் எந்த ஒன்றையும் தவறானது என்று நிரூபிக்க முடியவில்லை.

இன்ஷாஅல்லாஹ்

தொடரும்.. 

சொர்க்கச் சோலைகள். ( 21 )

 சொர்க்கச் சோலைகள். ( 21 )

மாளிகைகளும் உண்டு.

تَبَارَكَ الَّذِي إِن شَاءَ جَعَلَ لَكَ خَيْرًا مِّن ذَٰلِكَ جَنَّاتٍ تَجْرِي مِن تَحْتِهَا الْأَنْهَارُ وَيَجْعَل لَّكَ قُصُورًا

அவன் பாக்கியமிக்கவன். அவன் விரும்பினால் இதை விடச் சிறந்த சோலைகளை உமக்காக ஏற்படுத்துவான். அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். உமக்காக மாளிகைகளையும் ஏற்படுத்துவான்.
திருக்குர்ஆன் 25:10

أُولَٰئِكَ يُجْزَوْنَ الْغُرْفَةَ بِمَا صَبَرُوا وَيُلَقَّوْنَ فِيهَا تَحِيَّةً وَسَلَامًا

அவர்கள் சகித்துக் கொண்ட காரணத்தால் அவர்களுக்கு மாளிகை வழங்கப்படும். ஸலாமுடன் வாழ்த்துக் கூறி அவர்கள் வரவேற்கப்படுவார்கள்.
திருக்குர்ஆன் 25:75

وَالَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ لَنُبَوِّئَنَّهُم مِّنَ الْجَنَّةِ غُرَفًا تَجْرِي مِن تَحْتِهَا الْأَنْهَارُ خَالِدِينَ فِيهَا ۚ نِعْمَ أَجْرُ الْعَامِلِينَ

நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்வோரை சொர்க்கத்தில் உள்ள மாளிகையில் குடியமர்த்துவோம். அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் நிரந்தரமாக இருப்பார்கள். உழைத்தோரின் கூலி அழகானது.
திருக்குர்ஆன் 29:58

وَمَا أَمْوَالُكُمْ وَلَا أَوْلَادُكُم بِالَّتِي تُقَرِّبُكُمْ عِندَنَا زُلْفَىٰ إِلَّا مَنْ آمَنَ وَعَمِلَ صَالِحًا فَأُولَٰئِكَ لَهُمْ جَزَاءُ الضِّعْفِ بِمَا عَمِلُوا وَهُمْ فِي الْغُرُفَاتِ آمِنُونَ

உங்களின் மக்கட்செல்வமும், பொருட்செல்வமும் நம்மிடத்தில் நெருக்கத்தை ஏற்படுத்துபவை அல்ல. நம்பிக்கை கொண்டு நல்லறம் செய்தவரைத் தவிர. அவர்களுக்கு அவர்கள் செய்தவற்றின் பன்மடங்கு கூலி இருக்கிறது. அவர்கள் உயர்ந்த மாளிகைகளில் கவலையற்றிருப்பார்கள்.
திருக்குர்ஆன் 34:37

لَٰكِنِ الَّذِينَ اتَّقَوْا رَبَّهُمْ لَهُمْ غُرَفٌ مِّن فَوْقِهَا غُرَفٌ مَّبْنِيَّةٌ تَجْرِي مِن تَحْتِهَا الْأَنْهَارُ ۖ وَعْدَ اللَّهِ ۖ لَا يُخْلِفُ اللَّهُ الْمِيعَادَ

மாறாக, தமது இறைவனை அஞ்சியோருக்கு மாளிகைகளுக்கு மேல் எழுப்பப்பட்ட மாளிகைகள் உள்ளன. அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். இது அல்லாஹ்வின் வாக்குறுதி. அல்லாஹ் வாக்குறுதியை மீற மாட்டான்.
திருக்குர்ஆன் 39:20

Chapter - 15 Surah Al-Hijr

Chapter - 15
Surah Al-Hijr

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

In the name of Allah the most beneficent, most merciful
----------------------------------------------------------

أعوذ بالله من الشيطان الرجيم
I seek refuge in Allah from the outcast Shaitan

وَإِنَّ جَهَنَّمَ لَمَوْعِدُهُمْ أَجْمَعِينَ

\And surely, Hell is the promised place for them all. (Al-Hijr 15:43)"

குர்ஆன் வசனம் 349

 ﷽ குர்ஆன் வசனம் 349

15-02-2023 புதன்கிழமை
فَرَبُّكُمۡ اَعۡلَمُ بِمَنۡ هُوَ اَهۡدٰى سَبِيۡلًا

யார் நேர்வழியில் செல்பவர் என்பதை உமது இறைவனே நன்கறிந்தவன்.

[அல்குர்ஆன் 17:84]

உபதேசம் : 599

 ﷽ உபதேசம் : 599

15-02-2023 புதன்கிழமை

"அல்லாஹ்வுக்கு வழிப்படும் வகையில் ஒருவர் நேர்ச்சை செய்தால் அவா் அதை நிறைவேற்றட்டும்! அல்லாஹ்வுக்கு மாறு செய்யும் வகையில் ஒருவர் நேர்ச்சை செய்தால் அவா் அதை நிறைவேற்ற வேண்டாம்!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) புகாரி - 6696

நூல் : முஸ்லிம் 5514

🔅🔅🔅🔅🔅🔅🔅

நபிமொழி

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்,

“(மறுமை நாளில்) கணக்கு வாங்கப்படும் எவரும் அழிந்தே போய்விடுவார்” என்று சொன்னார்கள்.

நான், “அல்லாஹ்வின் தூதரே! என்னை அல்லாஹ் தங்களுக்கு அர்ப்பணமாக்கட்டும்!

“யாருடைய ஏடு அவரது வலதுகரத்தில் வழங்கப்படுகிறதோ, அவர் மிக எளிய முறையில் விசாரணை செய்யப்படுவார்” என்றல்லவா அல்லாஹ் (84:8 வசனத்தில்) கூறுகின்றான்?” என்று கேட்டேன்.

நபி (ஸல்) அவர்கள், “இது (கேள்வி கணக்கு தொடர்பானது அன்று;

மாறாக, மனிதர்கள் புரிந்த நன்மை தீமைகளின் பட்டியலை) அவர்களுக்கு முன்னால் சமர்ப்பிக்கப்படுவதாகும்;

கேள்வி கணக்கின்போது எவன் துருவித் துருவி விசாரிக்கப்படுவானோ, அவன் அழிந்தான்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல் : முஸ்லிம் 5514

இறைவனுக்கு எளிதானது. ( 10 )

 இறைவனுக்கு எளிதானது. ( 10 )

செயல்களின் ஏடுகள்.

وَكُلَّ إِنسَانٍ أَلْزَمْنَاهُ طَائِرَهُ فِي عُنُقِهِ ۖ وَنُخْرِجُ لَهُ يَوْمَ الْقِيَامَةِ كِتَابًا يَلْقَاهُ مَنشُورًا

ஒவ்வொரு மனிதனுக்கும் அவனது கழுத்தில் அவனது குறிப்பேட்டை மாட்டியுள்ளோம். கியாமத் நாளில் அவனுக்காக ஒரு புத்தகத்தை வெளிப்படுத்துவோம். அதை விரிக்கப்பட்டதாக அவன் காண்பான்.
திருக்குர்ஆன் 17:13

وَوُضِعَ الْكِتَابُ فَتَرَى الْمُجْرِمِينَ مُشْفِقِينَ مِمَّا فِيهِ وَيَقُولُونَ يَا وَيْلَتَنَا مَالِ هَٰذَا الْكِتَابِ لَا يُغَادِرُ صَغِيرَةً وَلَا كَبِيرَةً إِلَّا أَحْصَاهَا ۚ وَوَجَدُوا مَا عَمِلُوا حَاضِرًا ۗ وَلَا يَظْلِمُ رَبُّكَ أَحَدًا

அந்தப் புத்தகம் வைக்கப்படும். அதில் உள்ளவற்றின் காரணமாக குற்றவாளிகள் அச்சமடைந்திருக்கக் காண்பீர்! "இந்த ஏட்டுக்கு என்ன வந்தது? சிறியதையோ, பெரியதையோ ஒன்று விடாமல் பதிவு செய்துள்ளதே!'' எனக் கூறுவார்கள். தாங்கள் செய்தவற்றைக் கண் முன்னே காண்பார்கள். உமது இறைவன் எவருக்கும் அநீதி இழைக்க மாட்டான்.
திருக்குர்ஆன் 18:49

وَلَا نُكَلِّفُ نَفْسًا إِلَّا وُسْعَهَا ۖ وَلَدَيْنَا كِتَابٌ يَنطِقُ بِالْحَقِّ ۚ وَهُمْ لَا يُظْلَمُونَ

எவரையும் அவரது சக்திக்கு மேல் சிரமப்படுத்த மாட்டோம். நம்மிடம் உண்மையைப் பேசும் ஏடு உள்ளது. அவர்கள் அநீதி இழைக்கப்பட மாட்டார்கள்.
திருக்குர்ஆன் 23:62

هَٰذَا كِتَابُنَا يَنطِقُ عَلَيْكُم بِالْحَقِّ ۚ إِنَّا كُنَّا نَسْتَنسِخُ مَا كُنتُمْ تَعْمَلُونَ

இதுவே நமது புத்தகம். உங்களுக்கு எதிராக இது உண்மையைப் பேசுகிறது. நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றை நாம் பதிவு செய்வோராக இருந்தோம் என்று கூறப்படும்.
திருக்குர்ஆன் 45:29

وَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِشِمَالِهِ فَيَقُولُ يَا لَيْتَنِي لَمْ أُوتَ كِتَابِيَهْ وَلَمْ أَدْرِ مَا حِسَابِيَهْ يَا لَيْتَهَا كَانَتِ الْقَاضِيَةَ مَا أَغْنَىٰ عَنِّي مَالِيَهْ ۜ هَلَكَ عَنِّي سُلْطَانِيَهْ

புத்தகம் தனது இடது கையில் கொடுக்கப்பட்டவன் "எனது புத்தகம் கொடுக்கப்படாமல் இருக்கக் கூடாதா? எனது விசாரணை என்னவாகும் என்பது தெரியவில்லையே! (இறப்புடன்) கதை முடிந்திருக்கக் கூடாதா? எனது செல்வம் என்னைக் காப்பாற்றவில்லையே! எனது அதிகாரம் என்னை விட்டும் அழிந்து விட்டதே'' எனக் கூறுவான்.
திருக்குர்ஆன் 69:25, 26, 27, 28, 29

فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَسَوْفَ يُحَاسَبُ حِسَابًا يَسِيرًا

யாருக்கு வலது கையில் பதிவுப் புத்தகம் கொடுக்கப்படுகிறதோ அவர் எளிதான முறையில் விசாரிக்கப்படுவார்.
திருக்குர்ஆன் 84:7,8

وَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ وَرَاءَ ظَهْرِهِ فَسَوْفَ يَدْعُو ثُبُورًا

முதுகுக்குப் பின்புறமாக எவனுக்கு அவனது பதிவுப் புத்தகம் கொடுக்கப்படுகிறதோ அவன் அழிவை அழைப்பான்.
திருக்குர்ஆன் 84:10,11

Tuesday, February 14, 2023

சொர்க்கச் சோலைகள். ( 20 )

 சொர்க்கச் சோலைகள். ( 20 )

இன்பத்தில் திளைப்பார்கள்.

إِنَّ أَصْحَابَ الْجَنَّةِ الْيَوْمَ فِي شُغُلٍ فَاكِهُونَ

அந்நாளில் சொர்க்கவாசிகள் (தமது) செயல்களில் திளைத்திருப்பார்கள்.
திருக்குர்ஆன் 36:55

يُطَافُ عَلَيْهِم بِصِحَافٍ مِّن ذَهَبٍ وَأَكْوَابٍ ۖ وَفِيهَا مَا تَشْتَهِيهِ الْأَنفُسُ وَتَلَذُّ الْأَعْيُنُ ۖ وَأَنتُمْ فِيهَا خَالِدُونَ

தங்கத் தட்டுகளும், கிண்ணங்களும் அவர்களிடம் கொண்டு வரப்படும். அதில் உள்ளங்கள் விரும்புபவையும், கண்கள் இன்புறுபவையும் இருக்கும். அதில் நீங்கள் நிரந்தரமாக இருப்பீர்கள்.
திருக்குர்ஆன் 43:71

எந்தக் கஷ்டமும் இருக்காது.

لَا يَمَسُّهُمْ فِيهَا نَصَبٌ وَمَا هُم مِّنْهَا بِمُخْرَجِينَ

அதில் அவர்களுக்கு எந்தச் சிரமமும் ஏற்படாது. அதிலிருந்து அவர்கள் வெளியேற்றப்படவும் மாட்டார்கள்.
திருக்குர்ஆன் 15:48

الَّذِي أَحَلَّنَا دَارَ الْمُقَامَةِ مِن فَضْلِهِ لَا يَمَسُّنَا فِيهَا نَصَبٌ وَلَا يَمَسُّنَا فِيهَا لُغُوبٌ

"அவன் தனது அருளால் எங்களை நிலையான உலகில் தங்க வைத்தான். இங்கே எங்களுக்குச் சிரமமும் ஏற்படாது. களைப்பும் ஏற்படாது'' (என்றும் கூறுவார்கள்.)
திருக்குர்ஆன் 35:35

எவராலும் எத்தகைய இழிவும் ஏற்படாது.

لِّلَّذِينَ أَحْسَنُوا الْحُسْنَىٰ وَزِيَادَةٌ ۖ وَلَا يَرْهَقُ وُجُوهَهُمْ قَتَرٌ وَلَا ذِلَّةٌ ۚ أُولَٰئِكَ أَصْحَابُ الْجَنَّةِ ۖ هُمْ فِيهَا خَالِدُونَ

நன்மை செய்தோருக்கு நன்மையும், (அதை விட) அதிகமாகவும் உண்டு. அவர்களின் முகங்களில் இருளோ, இழிவோ ஏற்படாது. அவர்களே சொர்க்கவாசிகள். அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள்.
திருக்குர்ஆன் 10:26

Chapter - 15 Surah Al-Hijr

Chapter - 15

Surah Al-Hijr


بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

In the name of Allah the most beneficent, most merciful
----------------------------------------------------------

أعوذ بالله من الشيطان الرجيم
I seek refuge in Allah from the outcast Shaitan


إِنَّ عِبَادِي لَيْسَ لَكَ عَلَيْهِمْ سُلْطَانٌ إِلَّا مَنِ اتَّبَعَكَ مِنَ الْغَاوِينَ

\Certainly, you shall have no authority over My slaves, except those who follow you of the Ghawin (Mushrikun and those who go astray, criminals, polytheists, and evil-doers, etc.). (Al-Hijr 15:42)"

குர்ஆன் வசனம் 348

 ﷽ குர்ஆன் வசனம் 348

14-02-2023 செவ்வாய்க்கிழமை

وَلَوۡلَاۤ اَنۡ ثَبَّتۡنٰكَ لَقَدۡ كِدْتَّ تَرۡكَنُ اِلَيۡهِمۡ شَيۡــًٔـا قَلِيۡلًا

(முஹம்மதே!) நாம் உம்மை நிலைப்படுத்தியிருக்கா விட்டால் அவர்களை நோக்கிச் சிறிதேனும் நீர் சாய்ந்திருப்பீர்!

[அல்குர்ஆன் 17:74]

உபதேசம் : 598

 ﷽ உபதேசம் : 598

14-02-2023 செவ்வாய்க்கிழமை

"யார் தாயத்தை தொங்க விடுகின்றாரோ அவருடைய காரியத்தை அல்லாஹ் முழுமையாக்க மாட்டான்!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : உக்பா பின் ஆமிர் (ரலி) அஹ்மத் - 16763

Monday, February 13, 2023

நூல் : புகாரி 5673

🌷🌷🌷🌷🌷🌷

நபிமொழி

எந்த மனிதரும் தனது நல்லறத்தால் சொர்க்கத்தில் நுழைய முடியாது என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.
'அல்லாஹ்வின் தூதரே! நீங்களுமா?' என்று நபித் தோழர்கள் கேட்டனர்.
அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்
'அல்லாஹ் தனது அருள் போர்வையை என் மீது போர்த்தினால் தவிர நானும் அப்படித் தான்' என்றார்கள்.
நூல் : புகாரி 5673

நூல் : திர்மிதீ 2497

🌳🌳🌳🌳🌳🌳🌳

நபிமொழி

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மறுமை நாளில் நெருப்பாலான கழுத்து வெளிவரும்.
அதற்குப் பார்வைத் திறனுள்ள இரண்டு கண்கள், கேட்டறியும் இரண்டு காதுகள், பேசுகின்ற நாவு ஒன்றுமிருக்கும்.

“நான் மூன்று நபர்களுக்கு பொறுப்பு சாட்டப்பட்டுள்ளேன்.
1. பிடிவாதக்கார அடக்குமுறையாளன்.
2. அல்லாஹ்வுடன் வேறு கடவுள்களைப் பிரார்த்திப்பவன்.
3. உருவப்படம் வரைபவன்”
என்று அது சொல்லும்.

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)
நூல் : திர்மிதீ 2497

சொர்க்கச் சோலைகள். ( 19 )

 சொர்க்கச் சோலைகள். ( 19 )

தூய்மையான துணைகள்.

وَعِندَهُمْ قَاصِرَاتُ الطَّرْفِ عِينٌ كَأَنَّهُنَّ بَيْضٌ مَّكْنُونٌ

அவர்களுடன் தாழ்ந்த பார்வையுடைய கண்ணழகிகள்8 மறைத்து வைக்கப்பட்ட முட்டைகளைப் போல் இருப்பார்கள்.
திருக்குர்ஆன் 37:48,49

وَعِندَهُمْ قَاصِرَاتُ الطَّرْفِ أَتْرَابٌ

ஒத்த வயதுடைய பார்வைகளைத் தாழ்த்திய கன்னியரும் அவர்களுக்கு உள்ளனர்.
திருக்குர்ஆன் 38:52

كَذَٰلِكَ وَزَوَّجْنَاهُم بِحُورٍ عِينٍ

இப்படித்தான்! அவர்களுக்கு ஹூருல் ஈன்களைத் துணைகளாக்குவோம்.
திருக்குர்ஆன் 44:54

فِيهِنَّ قَاصِرَاتُ الطَّرْفِ لَمْ يَطْمِثْهُنَّ إِنسٌ قَبْلَهُمْ وَلَا جَانٌّ

அவற்றில் பார்வைகளைத் தாழ்த்திய கன்னியர் இருப்பார்கள். இவர்களுக்கு முன்னர் அவர்களை எந்த மனிதனும், ஜின்னும் தீண்டியதில்லை.
திருக்குர்ஆன் 55:56

حُورٌ مَّقْصُورَاتٌ فِي الْخِيَامِ

கூடாரங்களில் தங்க வைக்கப்பட்ட ஹூர் எனும் கன்னியராவர்.
திருக்குர்ஆன் 55:72

وَحُورٌ عِينٌ كَأَمْثَالِ اللُّؤْلُؤِ الْمَكْنُونِ

ஹூருல் ஈன்களும் மறைத்து வைக்கப்பட்ட முத்துக்களைப் போல் இருப்பார்கள்.
திருக்குர்ஆன் 56:22,23

إِنَّا أَنشَأْنَاهُنَّ إِنشَاءً

அப்பெண்களை (ஹூருல் ஈன்களை) நாமே அழகுறப் படைத்தோம்.
திருக்குர்ஆன் 56:35

Chapter - 15 Surah Al-Hijr

Chapter - 15

Surah Al-Hijr


بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

In the name of Allah the most beneficent, most merciful
----------------------------------------------------------

أعوذ بالله من الشيطان الرجيم
I seek refuge in Allah from the outcast Shaitan


قَالَ هَٰذَا صِرَاطٌ عَلَيَّ مُسْتَقِيمٌ

(Allah) said: \This is the Way which will lead straight to Me.\" (Al-Hijr 15:41)"

குர்ஆன் வசனம் 347

 ﷽ குர்ஆன் வசனம் 347

13-02-2023 திங்கட்கிழமை

اِنَّ عَذَابَ رَبِّكَ كَانَ مَحۡذُوۡرًا

உமது இறைவனின் வேதனை அச்சப்பட வேண்டியதாகும்.

[அல்குர்ஆன் 17:57]

உபதேசம் : 597

 ﷽ உபதேசம் : 597

13-02-2023 திங்கட்கிழமை

"நற்செயல்களில் சிறந்தது பலவீனமானவருக்கும், உழைத்து சம்பாதிக்க முடியாதவருக்கும் உதவி செய்வதாகும்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூதர் (ரலி) புஹாரி - 2518

Chapter - 15 Surah Al-Hijr

Chapter - 15

Surah Al-Hijr


بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

In the name of Allah the most beneficent, most merciful
----------------------------------------------------------

أعوذ بالله من الشيطان الرجيم
I seek refuge in Allah from the outcast Shaitan


قَالَ رَبِّ بِمَا أَغْوَيْتَنِي لَأُزَيِّنَنَّ لَهُمْ فِي الْأَرْضِ وَلَأُغْوِيَنَّهُمْ أَجْمَعِينَ

[Iblis (Satan)] said: \O my Lord! Because you misled me, I shall indeed adorn the path of error for them (mankind) on the earth, and I shall mislead them all. (Al-Hijr 15:39)"

إِلَّا عِبَادَكَ مِنْهُمُ الْمُخْلَصِينَ

\Except Your chosen, (guided) slaves among them.\" (Al-Hijr 15:40)"

குர்ஆன் வசனம் 346

 ﷽ குர்ஆன் வசனம் 346

12-02-2023 ஞாயிற்றுக்கிழமை

رَبُّكُمۡ اَعۡلَمُ بِكُمۡ‌ ؕ اِنۡ يَّشَاۡ يَرۡحَمۡكُمۡ اَوۡ اِنۡ يَّشَاۡ يُعَذِّبۡكُمۡ

உங்கள் இறைவன் உங்களைப் பற்றி நன்கு அறிந்தவன். அவன் நாடினால் உங்களுக்கு அருள் புரிவான். நாடினால் தண்டிப்பான்.

[அல்குர்ஆன் 17:54]

உபதேசம் : 596

 ﷽ உபதேசம் : 596

12-02-2023 ஞாயிற்றுக்கிழமை

ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, 'இறைத்தூதர் அவர்களே! என் தாயாருக்கு ஒரு மாத நோன்பு கடமையாகியிருந்த நிலையில் மரணித்துவிட்டார்! அவர் சார்பாக அதை நான் நிறைவேற்றலாமா?' என்று கேட்டதற்கு நபி (ஸல்) அவர்கள், 'ஆம்! அல்லாஹ்வின் கடன் நிறைவேற்றப்படுவதற்கு அதிகத் தகுதியானதுது' என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி) புகாரி - 1953

Saturday, February 11, 2023

அல்ஹம்துலில்லாஹ் என்பதன் சிறப்பு. ( 8 )

 அல்ஹம்துலில்லாஹ் என்பதன் சிறப்பு. ( 8 )


الْحَمْدُ لِلَّهِ الَّذِي كَفَانَا وَأَرْوَانَا، غَيْرَ مَكْفِيٍّ، وَلاَ مَكْفُورٍ. لكل حَمْدُ رَبِّنَا، غَيْرَ مَكْفِيٍّ، وَلاَ مُوَدَّعٍ وَلاَ مُسْتَغْنًى، رَبَّنَا.

அல்ஹம்துலில்லாஹில்லதி கஅஃபானா வ அர்வானா ஃகைர மக்ஃபிய்யின் வலா மக்ஃபூரின்.
ல(க்)கல் ஹம்து ரப்பனா, ஃகைர மக்ஃபிய்யின் வலா முவத்தஇன் வலா முஸ்தஃக்னன் ரப்பனா.

பொருள் : எங்களுக்குப் போதுமான உணவு அளித்து, எங்களின் தாகம் தணித்த அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் (நன்றியும்) உரியது. இப்புகழ் முற்றுப் பெறாதது; மறுக்க முடியாதது ஆகும். உனக்கே எல்லாப் புகழும் (நன்றியும்) உரியது எங்கள் இறைவா! இப்புகழ் முற்றுப் பெறாதது; கைவிடப்படக் கூடாதது; தவிர்க்க இயலாதது ஆகும்.

சட்டம் : உணவு உண்ட பின், அல்லது தம் உணவு விரிப்பை எடுக்கும் போது கூற வேண்டிய துஆ.

ஆதாரம் : அபூ உமாமா(ரலி) கூறினார். நபி(ஸல்) அவர்கள் 'உணவு உண்ட பின்' அல்லது 'தம் உணவு விரிப்பை எடுக்கும் போத' 'அல்ஹம்துலில்லாஹில்லதி கஅஃபானா வ அர்வானா ஃகைர மக்ஃபிய்யின் வலா மக்ஃபூரின்' என்று கூறுவார்கள். (பொருள்: எங்களுக்குப் போதுமான உணவு அளித்து, எங்களின் தாகம் தணித்த அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் (நன்றியும்) உரியது. இப்புகழ் முற்றுப் பெறாதது; மறுக்க முடியாதது ஆகும்.) சில வேளைகளில், 'ல(க்)கல் ஹம்து ரப்பனா, ஃகைர மக்ஃபிய்யின் வலா முவத்தஇன் வலா முஸ்தஃக்னன் ரப்பனா' என்று கூறுவார்கள். (பொருள்: உனக்கே எல்லாப் புகழும் (நன்றியும்) உரியது எங்கள் இறைவா! இப்புகழ் முற்றுப் பெறாதது; கைவிடப்படக் கூடாதது; தவிர்க்க இயலாதது ஆகும்.)
ஸஹீஹ் புகாரி : 5459.

இறைவனுக்கு எளிதானது. ( 9 )

 இறைவனுக்கு எளிதானது. ( 9 )

நன்மைக்குப் பத்து, தீமைக்கு ஒன்று.

إِنَّ اللَّهَ لَا يَظْلِمُ مِثْقَالَ ذَرَّةٍ ۖ وَإِن تَكُ حَسَنَةً يُضَاعِفْهَا وَيُؤْتِ مِن لَّدُنْهُ أَجْرًا عَظِيمًا

அல்லாஹ் அணுவளவும் அநீதி இழைக்க மாட்டான். அது நன்மையாக இருந்தால் அதைப் பன்மடங்காகப் பெருக்குவான். தனது மகத்தான கூலியை வழங்குவான்.
திருக்குர்ஆன் 4:40

مَن جَاءَ بِالْحَسَنَةِ فَلَهُ عَشْرُ أَمْثَالِهَا ۖ وَمَن جَاءَ بِالسَّيِّئَةِ فَلَا يُجْزَىٰ إِلَّا مِثْلَهَا وَهُمْ لَا يُظْلَمُونَ

நன்மை செய்தவருக்கு அது போன்ற பத்து மடங்கு உண்டு. தீமை செய்தவர், தீமை அளவே தண்டிக்கப்படுவார். அவர்கள் அநீதி இழைக்கப்பட மாட்டார்கள்.
திருக்குர்ஆன் 6:160

وَالَّذِينَ كَذَّبُوا بِآيَاتِنَا وَلِقَاءِ الْآخِرَةِ حَبِطَتْ أَعْمَالُهُمْ ۚ هَلْ يُجْزَوْنَ إِلَّا مَا كَانُوا يَعْمَلُونَ

நமது வசனங்களையும், மறுமையின் சந்திப்பையும் பொய்யெனக் கருதியோரின் செயல்கள் அழிந்து விடும். அவர்கள் செய்ததைத் தவிர வேறு எதற்கும் கூலி கொடுக்கப்படுவார்களா?
திருக்குர்ஆன் 7:147

وَوُضِعَ الْكِتَابُ فَتَرَى الْمُجْرِمِينَ مُشْفِقِينَ مِمَّا فِيهِ وَيَقُولُونَ يَا وَيْلَتَنَا مَالِ هَٰذَا الْكِتَابِ لَا يُغَادِرُ صَغِيرَةً وَلَا كَبِيرَةً إِلَّا أَحْصَاهَا ۚ وَوَجَدُوا مَا عَمِلُوا حَاضِرًا ۗ وَلَا يَظْلِمُ رَبُّكَ أَحَدًا

அந்தப் புத்தகம் வைக்கப்படும். அதில் உள்ளவற்றின் காரணமாக குற்றவாளிகள் அச்சமடைந்திருக்கக் காண்பீர்! "இந்த ஏட்டுக்கு என்ன வந்தது? சிறியதையோ, பெரியதையோ ஒன்று விடாமல் பதிவு செய்துள்ளதே!'' எனக் கூறுவார்கள். தாங்கள் செய்தவற்றைக் கண் முன்னே காண்பார்கள். உமது இறைவன் எவருக்கும் அநீதி இழைக்க மாட்டான்.
திருக்குர்ஆன் 18:49

وَنَضَعُ الْمَوَازِينَ الْقِسْطَ لِيَوْمِ الْقِيَامَةِ فَلَا تُظْلَمُ نَفْسٌ شَيْئًا ۖ وَإِن كَانَ مِثْقَالَ حَبَّةٍ مِّنْ خَرْدَلٍ أَتَيْنَا بِهَا ۗ وَكَفَىٰ بِنَا حَاسِبِينَ

கியாமத் நாளுக்காக நீதியான தராசுகளை நிறுவுவோம். எவருக்கும் சிறிதளவும் அநீதி இழைக்கப்படாது. ஒரு கடுகு விதை அளவே இருந்த போதும் அதையும் கொண்டு வருவோம். கணக்கெடுக்க நாமே போதும்.
திருக்குர்ஆன் 21:47

குர்ஆன் வசனம் 345

 ﷽ குர்ஆன் வசனம் 345

11-02-2023 சனிக்கிழமை
اِنَّ الشَّيۡطٰنَ كَانَ لِلۡاِنۡسَانِ عَدُوًّا مُّبِيۡنًا

ஷைத்தான் மனிதனுக்குப் பகிரங்க எதிரியாவான்.

[அல்குர்ஆன் 17:53]

உபதேசம் : 595

 ﷽ உபதேசம் : 595

11-02-2023 சனிக்கிழமை

"உங்களில் ஒருவர் மூன்று முறை அனுமதி கேட்டும் அவருக்கு அனுமதி வழங்கப்படாவிட்டால் அவர் திரும்பி விடட்டும்!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூ ஸயீத் அல்குத்ரி (ரலி) புகாரி - 6245 

அல்ஹம்துலில்லாஹ் என்பதன் சிறப்பு. ( 7 )

 அல்ஹம்துலில்லாஹ் என்பதன் சிறப்பு. ( 7 )


سبحان الله. الحمد لله. لا إله إلا الله.
الله اكبر.

சுப்ஹானல்லாஹ், அல்ஹம்து லில்லாஹ், லாயிலாஹ இல்லல்லாஹ், அல்லாஹு அக்பர்.

பொருள் : அல்லாஹ் தூயவன், அல்லாஹ்வுக்கே எல்லாப்புகழும், வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் இல்லை,
அல்லாஹ் மிகப்பெரியவன்.

சிறப்பு : ஒவ்வொரு வார்த்தைக்கும் ஒரு தர்மம் செய்த நன்மை கிடைக்கும்.

ஆதாரம் : நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவர் ஒவ்வொரு காலையிலும் (தமது உடலிலுள்ள) ஒவ்வொரு மூட்டிற்காகவும் தர்மம் செய்வது கடமையாகும். இறைவனைத் துதிக்கும் ஒவ்வொரு துதிச் சொல்லும் (சுப்ஹானல்லாஹ்) தர்மமாகும். ஒவ்வொரு புகழ்மாலையும் (அல்ஹம்து லில்லாஹ்) தர்மமாகும். ஒவ்வொரு "ஓரிறை உறுதிமொழி"யும் (லா இலாஹ இல்லல்லாஹ்) தர்மமாகும்; அவனைப் பெருமைப்படுத்தும் ஒவ்வொரு சொல்லும் (அல்லாஹு அக்பர்) தர்மமே! நல்லதை ஏவுதலும் தர்மமே! தீமைகளைத் தடுத்தலும் தர்மமே! இவை அனைத்திற்கும் (ஈடாக) முற்பகல் நேரத்தில் (ளுஹா) இரண்டு ரக்அத்கள் தொழுவது போதுமானதாக அமையும்.
இதை அபூதர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
ஸஹீஹ் முஸ்லிம் : 1302.

இறைவனுக்கு எளிதானது. ( 8 )

இறைவனுக்கு எளிதானது. ( 8 )
தீயோர் குருடர்களாகவும், ஊமைகளாகவும், செவிடர்களாகவும் எழுப்பப்படுவார்கள்.

وَمَن كَانَ فِي هَٰذِهِ أَعْمَىٰ فَهُوَ فِي الْآخِرَةِ أَعْمَىٰ وَأَضَلُّ سَبِيلًا

இங்கே (கருத்துக்) குருடராக இருப்பவர் மறுமையிலும் குருடராகவும், வழிகெட்டவராகவும் இருப்பார்.
திருக்குர்ஆன் 17:72

وَمَن يَهْدِ اللَّهُ فَهُوَ الْمُهْتَدِ ۖ وَمَن يُضْلِلْ فَلَن تَجِدَ لَهُمْ أَوْلِيَاءَ مِن دُونِهِ ۖ وَنَحْشُرُهُمْ يَوْمَ الْقِيَامَةِ عَلَىٰ وُجُوهِهِمْ عُمْيًا وَبُكْمًا وَصُمًّا ۖ مَّأْوَاهُمْ جَهَنَّمُ ۖ كُلَّمَا خَبَتْ زِدْنَاهُمْ سَعِيرًا

அல்லாஹ் யாருக்கு நேர்வழி காட்டினானோ அவரே நேர்வழி பெற்றவர். அவன் யாரை வழிகேட்டில் விட்டு விடுகிறானோ அவருக்கு அவனன்றி வேறு பாதுகாவலர்களை நீர் காண மாட்டீர். அவர்களை முகம் கவிழச் செய்து குருடர்களாக, ஊமைகளாக, செவிடர்களாக கியாமத் நாளில் எழுப்புவோம். அவர்களின் தங்குமிடம் நரகம். அது தணியும் போதெல்லாம் தீயை அதிகமாக்குவோம்.
திருக்குர்ஆன் 17:97

وَمَنْ أَعْرَضَ عَن ذِكْرِي فَإِنَّ لَهُ مَعِيشَةً ضَنكًا وَنَحْشُرُهُ يَوْمَ الْقِيَامَةِ أَعْمَىٰ

எனது போதனையைப் புறக்கணிப்பவனுக்கு நெருக்கடியான வாழ்க்கை உண்டு. அவனை கியாமத் நாளில் குருடனாக எழுப்புவோம்.
திருக்குர்ஆன் 20:124

பிறரை வழிகெடுத்தால் அந்தச் சுமையையும் சுமக்க வேண்டும்.

لِيَحْمِلُوا أَوْزَارَهُمْ كَامِلَةً يَوْمَ الْقِيَامَةِ ۙ وَمِنْ أَوْزَارِ الَّذِينَ يُضِلُّونَهُم بِغَيْرِ عِلْمٍ ۗ أَلَا سَاءَ مَا يَزِرُونَ

கியாமத் நாளில் முழுமையாகத் தமது சுமைகளையும், அறிவின்றி யாரை இவர்கள் வழிகெடுத்தார்களோ அவர்களின் சுமைகளையும் சுமப்பதற்காக (இவ்வாறு கூறுகின்றனர்) கவனத்தில் கொள்க! அவர்கள் சுமப்பது மிகவும் கெட்டது.
திருக்குர்ஆன் 16:25

மண்ணறைகளிருந்து வேகமாக இறைவனை நோக்கி வெளியேறுவார்கள்.

وَنُفِخَ فِي الصُّورِ فَإِذَا هُم مِّنَ الْأَجْدَاثِ إِلَىٰ رَبِّهِمْ يَنسِلُونَ

ஸூர் ஊதப்படும். உடனே அவர்கள் சமாதிகளிலிருந்து தமது இறைவனை நோக்கி விரைவார்கள்.

திருக்குர்ஆன் 36:51