Saturday, February 18, 2023

சொர்க்கச் சோலைகள். ( 23 )

 சொர்க்கச் சோலைகள். ( 23 )

பணி செய்யும் வேலையாள் சிறுவர்கள்.

وَيَطُوفُ عَلَيْهِمْ غِلْمَانٌ لَّهُمْ كَأَنَّهُمْ لُؤْلُؤٌ مَّكْنُونٌ

அவர்களுக்குரிய ஊழியர்கள் அவர்களைச் சுற்றி வருவார்கள். அவர்கள் மூடி வைக்கப்பட்ட முத்துக்களைப் போல் இருப்பார்கள்.
திருக்குர்ஆன் 52:24

يَطُوفُ عَلَيْهِمْ وِلْدَانٌ مُّخَلَّدُونَ بِأَكْوَابٍ وَأَبَارِيقَ وَكَأْسٍ مِّن مَّعِينٍ

இளமை மாறாத சிறுவர்கள் மது ஊற்றிலிருந்து நிரப்பப்பட்ட குவளையுடனும், கிண்ணங்களுடனும், கெண்டிகளுடனும் அவர்களைச் சுற்றி வருவார்கள்.
திருக்குர்ஆன் 56:17,18

وَيَطُوفُ عَلَيْهِمْ وِلْدَانٌ مُّخَلَّدُونَ إِذَا رَأَيْتَهُمْ حَسِبْتَهُمْ لُؤْلُؤًا مَّنثُورًا

இளமை மாறாச் சிறுவர்கள் அவர்களைச் சுற்றி வருவார்கள். அவர்களை நீர் பார்த்தால் உதிர்க்கப்பட்ட முத்துக்களாகக் கருதுவீர்!
திருக்குர்ஆன் 76:19

வானவர்கள் வாழ்த்துக் கூறி அழைத்துச் செல்வார்கள்.

وَسِيقَ الَّذِينَ اتَّقَوْا رَبَّهُمْ إِلَى الْجَنَّةِ زُمَرًا ۖ حَتَّىٰ إِذَا جَاءُوهَا وَفُتِحَتْ أَبْوَابُهَا وَقَالَ لَهُمْ خَزَنَتُهَا سَلَامٌ عَلَيْكُمْ طِبْتُمْ فَادْخُلُوهَا خَالِدِينَ

தமது இறைவனை அஞ்சியோர் சொர்க்கத்திற்கு கூட்டம் கூட்டமாக ஓட்டிச் செல்லப்படுவார்கள். முடிவில் அதன் வாசல்கள் திறக்கப்பட்டு அவர்கள் அங்கே வந்ததும் "உங்கள் மீது ஸலாம் உண்டாகட்டும். நீங்கள் மகிழ்ச்சியடைவீர்கள்! நிரந்தரமாக இருக்கும் நிலையில் இதில் நுழையுங்கள்!'' என அதன் காவலர்கள் அவர்களிடம் கூறுவார்கள்.
திருக்குர்ஆன் 39:73

பகல் தூக்கம் உண்டு.

أَصْحَابُ الْجَنَّةِ يَوْمَئِذٍ خَيْرٌ مُّسْتَقَرًّا وَأَحْسَنُ مَقِيلًا

அந்நாளில் சொர்க்கவாசிகள் அழகிய தங்குமிடத்திலும், சிறந்த ஓய்விடத்திலும் இருப்பார்கள்.
திருக்குர்ஆன் 25:24

No comments:

Post a Comment