Thursday, February 9, 2023

சொர்க்கச் சோலைகள். ( 17 )

 சொர்க்கச் சோலைகள். ( 17 )

பட்டாடைகளும் உண்டு.

إِنَّ اللَّهَ يُدْخِلُ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ جَنَّاتٍ تَجْرِي مِن تَحْتِهَا الْأَنْهَارُ يُحَلَّوْنَ فِيهَا مِنْ أَسَاوِرَ مِن ذَهَبٍ وَلُؤْلُؤًا ۖ وَلِبَاسُهُمْ فِيهَا حَرِيرٌ

நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்தோரை அல்லாஹ் சொர்க்கச் சோலைகளில் நுழையச் செய்வான். அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். தங்கக் காப்புகளும், முத்தும் அவர்களுக்கு அணிவிக்கப்படும். அங்கே அவர்களின் ஆடை பட்டாகும்.
திருக்குர்ஆன் 22:23

جَنَّاتُ عَدْنٍ يَدْخُلُونَهَا يُحَلَّوْنَ فِيهَا مِنْ أَسَاوِرَ مِن ذَهَبٍ وَلُؤْلُؤًا ۖ وَلِبَاسُهُمْ فِيهَا حَرِيرٌ

நிலையான சொர்க்கச் சோலைகளில் அவர்கள் நுழைவார்கள். அங்கே தங்கக் காப்புகளும், முத்துக்களும் அணிவிக்கப்படுவார்கள். அங்கே அவர்களின் ஆடை பட்டாகும்.
திருக்குர்ஆன் 35:33

يَلْبَسُونَ مِن سُندُسٍ وَإِسْتَبْرَقٍ مُّتَقَابِلِينَ

ஸுன்துஸ், இஸ்தப்ரக் எனும் (இரு வகையான) பட்டாடை அணிந்து ஒருவரையொருவர் சந்திப்பார்கள்.
திருக்குர்ஆன் 44:53

مُتَّكِئِينَ عَلَىٰ فُرُشٍ بَطَائِنُهَا مِنْ إِسْتَبْرَقٍ ۚ وَجَنَى الْجَنَّتَيْنِ دَانٍ

அவர்கள் விரிப்புகளில் சாய்ந்திருப்பார்கள். அதன் உட்புறம் இஸ்தப்ரக் எனும் பட்டுவகையைச் சேர்ந்தது. அவ்விரு சொர்க்கச் சோலைகளின் கனிகள் தாழ்ந்திருக்கும்.
திருக்குர்ஆன் 55:54

وَجَزَاهُم بِمَا صَبَرُوا جَنَّةً وَحَرِيرًا

அவர்கள் பொறுத்துக் கொண்டதால் சொர்க்கத்தையும், பட்டாடையையும் பரிசாக அவர்களுக்கு வழங்கினான்.
திருக்குர்ஆன் 76:12

No comments:

Post a Comment